திரைதகவல் பெட்டகம்-V (பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறப்பு)
முந்தைய பாகங்களுக்கு I II III IV
இந்த முறையும் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை சொல்லும் அதிஷ்டசாலி உள்ளூர் வாசகர் (இலங்கை) ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும்.
இங்கே பார்க்கபோகும் நபர் ஒரு பாடகர்(ஆண்). சிறந்த கர்நாடக சங்கீத பின்னணி கொண்ட இவர், AR.Rahmanஆல் திரைதுறைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் முன்னணி இசையமைப்பபாளர்களுக்காக இனிமையான பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கான வாய்ப்புகள் என்னவோ குதிரை கொம்பாகதான் இருந்து வருகிறது. 2005ல் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆண் பாடகருக்கான விருதைப்பெற்ற பெருமையுடைய பாடகர்தான் இவர். கண்டுபிடித்திருப்பீர்கள் இவர்தான் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இவர் திரை இசையில் பாடிய பாடல்கள் சொற்பமாகதான் இருந்தாலும் பெரும்பாலான இவரது பாடல்கள் பலராலும் ரசிக்கப்பட்ட நல்ல பாடல்கள்.
இந்த முறையும் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை சொல்லும் அதிஷ்டசாலி உள்ளூர் வாசகர் (இலங்கை) ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும்.
இங்கே பார்க்கபோகும் நபர் ஒரு பாடகர்(ஆண்). சிறந்த கர்நாடக சங்கீத பின்னணி கொண்ட இவர், AR.Rahmanஆல் திரைதுறைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் முன்னணி இசையமைப்பபாளர்களுக்காக இனிமையான பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கான வாய்ப்புகள் என்னவோ குதிரை கொம்பாகதான் இருந்து வருகிறது. 2005ல் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆண் பாடகருக்கான விருதைப்பெற்ற பெருமையுடைய பாடகர்தான் இவர். கண்டுபிடித்திருப்பீர்கள் இவர்தான் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இவர் திரை இசையில் பாடிய பாடல்கள் சொற்பமாகதான் இருந்தாலும் பெரும்பாலான இவரது பாடல்கள் பலராலும் ரசிக்கப்பட்ட நல்ல பாடல்கள்.
AR.Rahmanன் இசையில் பார்த்தாலே பரவசம் படத்திற்காக ”இதுதான் இதுதான் உச்சக்கட்டம்” என்ற பாடல்மூலமாக ஸ்ரீராம் பார்த்தசாரதியின் திரைஅறிமுகம் ஆரம்பித்தது. என்னதான் இசைப்புயலால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இவரின் முதல் பாடலால் இவர் பெரிதாக பேசப்படவில்லை. அதன்பின்னதாக வித்தியாசாகரின் இசையில் பூவெல்லாம் உன்வாசம் படத்தில் ”புதுமலர் தோட்டத்து காற்றை” என்ற பாடலே இவருக்கு நல்ல பிரபல்யத்தை மக்கள் மத்தியில் கொடுத்தது எனலாம். பின்னர் AR.Rahmanஇடத்தும் வித்தியாசகரிடத்தும் ஒருசில நல்ல பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. 2003ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல் காலத்தால் அழியாத ஒரு அற்புதமான மெலடி பாடல். இவர் இதுவரை பாடிய பாடல்களில் நம்பர்1 இடத்தை இந்த பாடலுக்குதான் என்னால் வழங்கமுடியும். இளையராஜா இவருக்கு மேலும் பல வாய்ப்புக்களை தனது சொதப்பல் படங்களில் வழங்கியமையால் இவரால் அவற்றின் மூலமாக பிரபல்யமடைய முடியவில்லை.
இளங்காற்று வீசுதே பாடல்
எனினும் மக்கள் மத்தியில் அமோக அகோர வரவேற்பை பெற்றதென்னவோ கஜினி திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் முதலாவதாக பாடிய ”சுற்றும் விழி சுடரே” பாடல்தான். இந்தப்பாடலுக்காகதான் இவருக்கு 2005ற்கான தமிழ்நாடு அரசின் சிறந்தபாடகர் விருது கிடைத்தது. இந்த பாடலால் ஹாரிஸ் ஜெயராஜின் புகழ் ஒருபடி மேலே உயர்ந்திருந்தாலும் கூட தனது அடுத்து வந்த படங்களுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதியை ஹாரிஸ் உபயோகப்படுத்தவில்லை. ஸ்ரீராம் என்ற இன்னோர் பாடகரையே அதிகம் ஹாரிஸ் உபயோகித்திருந்தார். உண்மையில் இவரின் முழுப்பெயர் பாலக்காடு ஸ்ரீராம் ஆகும். (பாவம் ஸ்ரீராம் பார்த்தசாரதிதான் ஸ்ரீராம் என்று ஹாரிஸ் காண்பியூஸ் ஆகிட்டாரோ தெரியல. சும்மா ஒரு கதைக்கு சொன்னேனுங்க). இதைவிடுத்து ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் ஸ்ரீராம் என்று வேறு ஒரு பாடகரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.(மிகச் சொற்ப ஓரிரு பாடல்களையே திரையில் பாடியுள்ளார்).
எனது பதிவில் முதலில் பாலக்காடு ஸ்ரீராமை ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் என்ற வகையில் நானும் காண்பியூஸ் ஆகி பிழையாக சொல்லியிருந்தேன். அதை திருத்திய லோசன் அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்!
ஆனால் ஏறத்தாழ 5வருடங்களின் பின் அண்மையில் வந்த ”கோ” படத்தில் ”வெண்பனியே” பாடலுக்காக கஜினியில் செய்ததை போலவே பாம்பே ஜெயசிறியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதியை கூட்டிவந்தார். இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. என்னதான் நல்ல பாடல்களை பாடினாலும் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் குறைவு.தான் என்பது இசைரசிகர்களுக்கு கண்கூடு. பார்ப்போம் எதிர்வரும் காலங்களில் இவருக்கு வாய்ப்பு எவ்வாறு இருக்கப்போகின்றதென.
எனது பதிவில் முதலில் பாலக்காடு ஸ்ரீராமை ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் என்ற வகையில் நானும் காண்பியூஸ் ஆகி பிழையாக சொல்லியிருந்தேன். அதை திருத்திய லோசன் அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்!
ஸ்ரீலேகாவும் அவரது கணவர் ஸ்ரீராமும் |
--------------------------------------------------------------------------------
மம்தாமோகன்தாஸ், அண்ட்றியா, வசுந்தராதாஸ் |
அடுத்தது இசையமைப்பாளர் G.V.PrakashKumarரின் வருங்கால மனைவியான பாடகி சைந்தவிக்கு தனது இசையமைப்பில் ”மதராசபட்டிணம்” படத்தில் "ஆருயிரே” பாடலை முதலாவதாக வழங்கியிருந்தார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியமை குறிப்பிடத்தக்கது!
--------------------------------------------------------------------------------
பரிசுக்கான கேள்வி
இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?
விடையை ஒருகிழமைக்குள் கீழ்வரும் முகவரிக்கு மின்அஞ்சலாகவோ அல்லது உங்கள் மின்அஞ்சல் முகவரியுடன் பின்னனூட்டமாகவோ இடலாம். உங்களது பின்னூட்ட விடைகளை ஒரு கிழமைவரை வலைத்தளத்தில் காணமுடியாது. வெற்றியாளர் தெரிவுசெய்யப்பட்டபின் அவை approve செய்யப்படும்.
விடையை ஒருகிழமைக்குள் கீழ்வரும் முகவரிக்கு மின்அஞ்சலாகவோ அல்லது உங்கள் மின்அஞ்சல் முகவரியுடன் பின்னனூட்டமாகவோ இடலாம். உங்களது பின்னூட்ட விடைகளை ஒரு கிழமைவரை வலைத்தளத்தில் காணமுடியாது. வெற்றியாளர் தெரிவுசெய்யப்பட்டபின் அவை approve செய்யப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி: carthi_uom@yahoo.com
டிஸ்கி: கடந்த தடவை, பதிவுகளே வாசிக்காதது கூட ஒடிவந்து கேள்விய பாத்து searchபண்ணி விடையபோட்டு பரிசுகள வாங்கிட்டுது. அதை தவிர்க்கவே காம்பிறிகென்சன் பாணியில் கேள்வி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
25 comments:
விடை - ”இளங்காற்று வீசுதே” ;-)
ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும்.//
அடப் பாவி, திறை சேரியில் நிறையத் தான் வைப்பிருக்குப் போல;-))
இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?//
மாப்பிளை,
சின்ன வயசில் அதுவும் ஆங்கிலப் பாடத்தில் பந்தியைப் படித்து எழுதியது போன்று ஒரு வினா....
கிரகித்தல் பயிற்சி வடிவில் தந்திருக்கிறீங்க.
விடையினை அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.
இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?//
2003ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல் காலத்தால் அழியாத ஒரு அற்புதமான மெலடி பாடல். இவர் இதுவரை பாடிய பாடல்களில் நம்பர்1 இடத்தை இந்த பாடலுக்குதான் என்னால் வழங்கமுடியும்//
பரிசிற்குரிய பதில் இங்கே இருக்கிறது சகோ.
பிதாமகனில் வெளி வந்த ‘இளங்காற்று வீசுதே’ பாடலுக்குத் தச்ன் நம்பர்1 இடத்தினை வழங்க முடியும்.
நன்றி மாப்ளே.
”இளங்காற்று வீசுதே”
பிதாமகன... ”இளங்காற்று வீசுதே” பாடல்
பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல்
அன்று கர்நாடக சங்கீதத்தில் நான் நோட் பண்ணிக்கிறேன் என்று சொன்னது இப்போ புரியுது உங்கள் அண்மைய புதிய திருப்பமான பதிவுகளைப்பார்த்து.
இசைபற்றி இசைக்குறிப்புக்கள் பற்றி, பாடல்களின் , பாடகர்களின் நுட்பங்கள் பற்றி எம்மில் எவருமே எழுதுவதில்லையே என்ற பெரிய ஏக்கம் எனக்கு இருந்துவந்தது.
இதற்காக ஒரு இசை விரிவுரையாளராக இருக்கும் நண்பரை பதிவுகளை எழுத எவ்வளவோ சிரமப்பட்டு அழைத்தேன் அவர் வருவதாக இல்லை, ஆனால் அந்த ஏக்கங்கள் மெல்ல மெல்ல இப்போ தீர்வதை உணர்கின்றேன் உங்கள் மூலம், அப்படியே இடைக்கிடையே கர்நாடக சங்கீதப்பக்கமும் வந்தீர்கள் என்றால்..உங்களை உற்சாகத்தில் தூக்கி எறிந்து கொண்டாடுவேன்.
நேற்று தனிமையிலபோச்சு யாரும் துணையில்லே.. யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் தடையில்லே..
ஒலகத்தில் ஏதும் தனிச்சு இல்லையே...
சரி.. நான் கேட்கும் ரின்டோனை தந்துடனும் சரியா?
உங்கடை அப்புறோச் எனக்குப் புடிச்சிருக்கு
ஸ்ரீராம் (மற்றைய) பாடிய பாடல்களை தர முடியுமா?
அய்யோ நிரூபன் நான் கொடுத்தா எனக்கு யாராவது கூடதருவினம் எண்ட நம்பிக்கைதான். நாளையே நிரந்தரம் இல்லாத வாழ்க்கைதான் எனக்கும்! :(
டிஸ்கியில சொன்னத றிப்பீட் பண்ணுறன். கடந்த தடவை, பதிவுகளே வாசிக்காதது கூட ஒடிவந்து கேள்விய பாத்து searchபண்ணி விடையபோட்டு பரிசுகள வாங்கிட்டுது. அதை தவிர்க்கவே காம்பிறிகென்சன் பாணியில் கேள்வி!
Jana அண்ணே ஊக்கத்திற்கு நன்றிகள். நான் சின்னவயதிலிருந்து பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் அறிவதில் காட்டிய ஆர்வம்தான் இப்பதிவுகள் போட காரணம். வடஇலங்கை சங்கீதசபை 3ம்தரம்வரைதான் படித்துள்ளேன். எனவே கர்நாடக சங்கீதம் பற்றி எழுதுவதற்கேற்ற போதிய அறிவு இல்லை. :(
நன்றிகள் வடலியூரான்.
யோகா அண்ணேவணக்கம் கீழே அந்த ஸ்ரீராம் பாடிய சிலபாடல்களை தந்திருக்கின்றேன்!
இசைப்புயலின் இசையிலே பாடியவற்றில் வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு
ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் திருநெல்வேலிஅல்வாடா, அரலிவிதையில் விதைத்த, யாரிசிங்காரி போன்ற பாடல்கள் முக்கியமானவை!
சரி சரி...நானும் அந்த “வெற்றி கொடிகட்டு” பாடகரையும் இந்த ஸ்ரீராமையும் கொஞ்சம் குழப்பி கொண்டிருக்கிறேன்
நல்ல பதிவு கார்த்தி..
நாமளும் இந்த ஸ்ரீராம்களில் கன்பியூஸ் ஆகீட்டம்.
ஒரு சின்ன ஆலோசனை கார்த்தி..
இந்த எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால் கேள்விகளைத் தவிர்க்கலாமே
அருமையான பதிவு.
//இசைப்புயலின் இசையிலே பாடியவற்றில் வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு
ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் திருநெல்வேலிஅல்வாடா, அரலிவிதையில் விதைத்த, யாரிசிங்காரி போன்ற பாடல்கள் முக்கியமானவை!//
நானும் வினவ இருந்ததைத்தான் யோகா கேட்டுள்ளார். தகவலுக்கு நன்றி
ஹிஹி நல்லா அப்புரோச்சு பண்றாங்க..
ஆக்சுவலி நான் சங்கீதம் தான்...ஆனா இப்பிடி டீட்டெயிலா...
அருமை பாஸ்! விரிவான அலசல்கள்!
பிதாமகன் 'இளங்காற்று' என்று சொல்லியிருக்கீங்களே!
நல்லதொரு பதிவு அண்ணா வாழ்த்துக்கள் :)
ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் ஸ்ரீராம் என்ற இன்னோர் பாடகரைஅதிகம் ஹாரிஸ் உபயோகித்திருந்தார். பாவம் ஸ்ரீராம் பார்த்தசாரதிதான் ஸ்ரீராம் என்று ஹாரிஸ் காண்பியூஸ் ஆகிட்டாரோ தெரியல. சும்மா ஒரு கதைக்கு சொன்னேனுங்க).//
அட.. அப்புடியும் இருக்குமோ?
சுவையான தகவல்கள் கார்த்தி.. சில தகவல்கள் புதியவையே..
ஆனால் ஒரு தவறு இருப்பதை உணர்கிறேன்.. ஸ்ரீலேகாவின் கணவர் திரைப்பாடல்கள் பாடியதில்லை என நம்புகிறேன். அவருடன் முன்பொரு தடவை பேசியதில் இருந்து,,.
நீங்கள் சொல்லும் மற்ற ஸ்ரீராம்.. பாலக்காடு ஸ்ரீராம்.. சாமியில் திருநெல்வேலி அல்வாடா பாடியவர்.
அவரே தான் வெற்றிக் கொடி கட்டு முதல் நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றப் பாடல்களும் பாடியவர்
http://img.youtube.com/vi/QZ-yzJ-jwzg/0.jpg
“மின்சாரக் கண்ணா”வும் ஸ்ரீராம் பார்த்த சாரதி பாடிய மற்றொரு முக்கிய பாடல் என நினைக்கிறேன்
அய்யோ லோசன் அண்ணா! நீங்கள் சொன்னது மிகவும் சரி! நான் மிகப்பெரிய பிழை விட்டுட்டன்! எனது மனத்தில அப்பிடியே இந்த ஸ்ரீலேகாவின் கணவர் ஸ்ரீராம்தான் அந்த மற்ற பாடகர் என்று நினைத்துவிட்டேன். உறுதியாக நம்பியும் இருந்துவிட்டேன்! நீங்கள் சொன்னபடி அந்த மற்ற ஸ்ரீராம் பாலக்காடு ஸ்ரீராம்! ஸ்ரீலேகாவின் கணவர் ஸ்ரீராம் அல்ல! விரைவில் பதிவில் மாற்றம் செய்து மற்றயவர்களுக்கு எனது மிகப்பெரிய பிழையை உணர்த்துகிறேன்! ஆனால் சிறிலேகாவின் கணவர் ஸ்ரீராமும் ஒரு பாடகர்தான் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார்!
இல்லை Seenu அந்த ஸ்ரீராம் வேற அவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி அல்ல! அவர் லோசன் அண்ணா குறிப்பிட்ட பாலக்காடு ஸ்ரீராம்!!
கருத்துரையிடுக