IPL-2012ல் பிடித்த வீரர்கள்-V (Cameron White)

சில வீரர்கள் மேல் இருக்கும் மதிப்பு மரியாதை அவர்களின் சில attitudeகளால் அல்லது தொடர்ச்சியான சறுக்கும் பெறுபேறுகளால் சிலவேளைகளில் அவர்கள் மேல் ஒரு வெறுப்பாக மாறிவிடுவதுண்டு. Australia அணியில் சகலதுறை வீரராக அறிமுகமான Cameron White எனக்கு ரொம்ப பிடித்தவீரரில் ஒருவராக அந்தக்காலத்தில் இருந்திருந்தார். பின்னர் தொடர்ச்சியான இவரின் மோசமான பெறுபேறுகளால் இவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் இவர் மேல் வைத்திருந்த மதிப்பு மிகவும் வெறுப்பாக மாறியிருந்தது. உலககிண்ண போட்டிகளில் இவரின் மோசமான பெறுபேறுகளால் (உலககிண்ண போட்டிகளில் 22*ஏ இவரது கூடிய ஓட்டமாக இருந்தது) ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட White 2011 Januaryல் Michael Clarke T20இலிருந்து ஓய்வுபெற்றபின் பெற்ற T20 அணித்தலைவர் பொறுப்பை இந்தவருடம் 2012 Januaryவரை தக்கவைத்திருந்தார். உண்மையில் இவர் இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவர்கள் நாட்டிலேயே 2011 Octoberல் இரு T20 போட்டிகளுக்கு தலமை தாங்கி 28, 39 என்று low scoring போட்டிகளில் நல்ல ஓட்டப்பெறுதியை பெற்றிருந்தார். 

ஆயினும் இவர் தலமை தாங்கிய 6 T20 போட்டிகளில் 2வெற்றிகளை மட்டுமே Australia பெற்றிருந்தது. அதோடு Australia உள்ளுர் T20 போட்டியான Big Bashல் Melbourne Starsக்காக விளையாடிய இவர் 8 போட்டிகளில் வெறும் 55ஓட்டங்களையே பெற்றிருந்தார். அதோடு அண்மைய போட்டிகளிலும் Victoriaக்காகவும் ஒரு 50 ஓட்டங்களை கூட இவரால் எடுக்க முடியவில்லை. இப்படியான காரணங்களுக்காக இவர் T20 போட்டியில் தலமைப்பதவி பறிக்கப்பட்டது மட்டுமில்லாது அணியை விட்டே வெளியேயும் அனுப்பப்பட்டார்.


இப்படியாக IPLதொடங்கும்போதே போதிய self confident இல்லாமேலே போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டியதாக இருந்தது இவருக்கு. முதலாவது போட்டியில் சங்கக்கார இலங்கையில் இருந்தமையால் முதல் போட்டியில் தலைவராக சென்னையுடன் மோசமாக தோத்தனர். தனது பங்கிற்கு 23(16) இவர் எடுத்தார். 2வது போட்டியில் 30*(22) எடுத்தார். ஒரு பவர் ஹிட்டராக அறியப்பட்ட இவர்மேல் போதிய நம்பிக்கை இல்லாமல் அடுத்த 2போட்டிகளுக்கும் அணியை விட்டு கழற்றி விடப்பட்டார். பின்னர் எல்லாப்போட்டிகளும் விளையாடிய இவர் சங்கக்காரவின் மோசமான formகாரணமாக அவர் அணியை விட்டு தானாக ஒதுங்கிய போட்டிகளிலெல்லாம் தலைமைத்துவ பொறுப்பை கையிலெடுத்ததுடன் பெரும்பாலான போட்டிகளில் அபாரமான திறமையை கனக்க காலத்தின் பின்னர் வெளிப்படுத்த தொடங்கினார்.


நாலைஞ்சு பந்துகளை மெதுவாக விளைாடி கொஞ்சம் eye எடுத்தப்பிறகே அடித்து நொருக்கும் பவர் ஹிட்டர் வகையராவைச்சேர்ந்த இவர் அடிகள் வழமாக பிடிக்க தொடங்கினால் எதிரணி பந்துவீச்சாளருக்கு அலுப்பை கொடுக்க கூடியவர். இந்த IPL போட்டிகளில் ஒரு 45 ஓட்டங்களுடன் ஐந்து முறை 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளார் இவர். Points table கடைசி இடத்தை பிடித்திருக்கும் இந்த அணியில் 2போட்டிகளில் வெல்ல இவரது பங்கு மிக முக்கியமாக இருந்திருக்கிறது.

இந்த வருடம் உலககிண்ண T20 போட்டிகள் இலங்கையில் நடக்குவுள்ள நிலையில் Australia தேசிய அணியில் அனைத்துவிதமான போட்டிகளிலும் கழற்றிவிடப்பட்ட இவர். இந்திய மைதானத்தில் இப்போட்டிகளில் காட்டும் சிறந்த பெறுபேறுகாரணமாக மீண்டும் T20 அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கும் பலரில் நானும் ஒருவராக இப்போது இருக்கிறேன். June12 தொடங்கவுள்ள இங்கிலாந்து உள்ளுர் T20 போட்டியான Friends Lifeல் Northamptonshire அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள இவர் அதிலும் திறமையை காட்டும் பட்சத்தில் தேசிய அணியில் இடம் உறுதியாக கிடைக்குமென நம்பலாம். 


Decan Chargers சார்பாக Dawanக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டத்தை பெற்றவராக வைட் இருக்கிறார். அதோடு இந்த வருட போட்டிகளில் Gayleக்கு அடுத்தபடியாக 20Sixesஉடன் கூடுதலான Sixஅடித்தோர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-IV (Chris Gayle)

சிலபேரை கிறிக்கெற்றில பிடிக்குமா பிடிக்காதோ என்று தெரியாம இருக்கும் அப்பிடி ஒரு வகையறாதான் இந்த கிறிஸ்கெயில். ஒரு foot movement Styleஆன பற்றிங் என்றில்லாமல் பற்றை அந்தரத்தில் பிடித்தபடி இவர் முழங்கும் முழக்கங்கள் இவரின்மேல் பிடிப்பும் அதே போல் ஒரு ஈவிரங்கமின்றி சாத்துறாரே என்று ஒருவித வெறுப்பும் எழ காரணமாக இருக்கிறார் Jamaicaவின் பயங்கர மனிதர். 


இலங்கையில் ஒரு கொஞ்சக்காலமா கிறீஸ் மனிதர்கள் என்று பயங்கர பீதி கிழப்பப்பட்டதல்லவா. அந்த கிறீஸ் மனிதன் எப்பிடியிருப்பான் எண்டதுக்கு உதாரணமா இவரின்ர உருவத்த சொல்லலாம். கறுத்த உயரமான ஆக்ரோசமான உடல்வாகு நட்டுவக்காலிகள் தலையை சுத்தி இருக்கிறமாதிரி தலையிழுப்பு. 

வழமைமாதிரி இவரப்பற்றி நீட்டி முழங்கி எழுத தேவையில்லை மேல போட்ட படமே எல்லாத்தையும் சொல்கிறது. இவர் பற்றோட Groundக்க நிக்கிற வரை bowling teamக்கு தொடர்ச்சியா வயித்த கலக்கியபடிதான். IVவது பாகத்தில இன்னொரு வீரரை பற்றிதான் எழுத வெளிக்கிட்டனான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் Chris Gayle டெல்லியில 13sixersஓட 62bowlல 128அடிச்சு ஒரு பட்டாசு கடையில நெருப்பு போட்ட உணர்வை தந்திருந்தார். அதுக்கு பிறகுதான் இவர முதல்ல போட யோசனை வந்திச்சு! 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-III (AB De Villiers)

AB De Villiers

இப்போது மிகவும் வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளை பார்ப்போருக்கு இந்த தலைசிறந்த வீரர் அறிமுகமான காலத்திலிருந்து இவரின் அபரிமிதமான வளர்ச்சிகள் ஒன்றும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் இவர் இதுவரை செய்த சாதனைகளை தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் இந்த 2012 IPL போட்டிகளில் இவரது துடுப்பாட்டத்தை பார்த்து புகழாதவர்கள் இருக்கமாட்டார்கள்.


உண்மையில் எந்தப்பெரிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் Short Format போட்டிகளில் பெரும்பாலும் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடும்போதுதான் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்படுகிறார்கள் பாராட்டப்படுகிறார்கள். ஆஹா ஓஹோ எண்டு தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்கள். பெரிதளவு இப்படியான Limited Overs போட்டிகளில்தான் ரசிகர்கள் கூடுதலாக லயித்துப்போயிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அடிப்படை காரணம். அப்பிடி அனைத்துவிதமான போட்டிகளிலும் சாதித்து காட்டிக்கொண்டிருப்பவர்தான் இந்த ஏபி.டி.வில்லியர்ஸ்.


உலககிண்ண போட்டிகளின் பின்னர் Graeme Smith ODI போட்டிகளின் தலமைப்பொறுப்புகளிலிருந்து விலகிய பின்னரும் John Botha T20 அணித்த லமையிலிருந்து தூக்கப்பட்டபின்னரும் AB.De.Villersக்கு தலமைத்துவ வாய்ப்பு 2011 June அளவில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் T20 போட்டிகளில் கையில் ஏற்பட்ட காரணத்தால் விளையாடமுடியாத காரணத்தால் தனது முதலாவது முழுநேர தலைமைத்துவாய்ப்புக்கு இலங்கை தொடர்வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. தலமைப்பொறுப்பில் இதுவரை இவர் விளையாடிய இலங்கை, நியுஸிலாந்துக்கெதிராக 2ஒருநாள் போட்டிதொடர் நியுஸிலாந்துக்கெதிராக T20 போட்டிதொடர் என்று அனைத்தையும் வென்றுள்ளார். 

அதற்கு மேலதிகமாக இந்தாண்டிலே வெறும் 8ஒருநாள் போட்டிகளில் 475ஓட்டங்களை 158.33என்ற ஓட்டசராசரியுடனும் 116என்று Strikerateலயும் பெற்றிருக்கிறார். இதைப்போலவே டெஸ்ட்டிலும் 4 போட்டிகளில் 378ஓட்டங்களை 75என்ற சராசரியில் பெற்றிருக்கிறார். இவரது இந்த ஆண்டின் இந்த கடும் போம்தான் IPLலிலும் தொடர்கிறது என்று இலகுவில் சொல்லிவிடலாம்.


Royal Challengers Bangalore பெரும்பாலான வெற்றிகளுக்கு கெயில்தான் காரணமாக இருந்துவிட்டிருந்தாலும் சில வெல்லவே முடியாது என கருதப்பட்ட போட்டிகளை கடைசி நேரத்தில் வந்து RCBபக்கம் மாற்றிய பெருமை De Villiersக்கு உண்டு. பெங்களுர் அணியில் இருப்போரின் திறமையை வைத்து பார்க்கும்போது இவ்அணி இலகுவில் playoffsக்கு சென்றிருக்கவேண்டும் என எதிர்பார்த்தாலும் அணித்தலைவராக முதல் 9போட்டிகள் வரை இருந்த Daniel Vettoriன் மோசமான தலமைத்துவமும் வெறும் ஓட்டங்களை மட்டும் கட்டுப்படுத்திய விக்கெட்டுக்களை பெரிதாக எடுக்காதா பந்துவீச்சு பெறுபேறுகளும்தான் இவர்களின் சறுக்கல்களுக்கு காரணமாக அமைந்திருந்தது.

விற்றோரி விளையாடிய 9போட்டிகளில் சிறந்த பெறுபேறாக 4Oversல் 20/1தான் இருக்கிறது. பெரிதாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளராக இருந்தாலும் RCBன் Strike bowler Zaheer Khanன் Bad formமும் இந்த அணிக்கு விக்கெட்களை கொய்யக்கூடிய பந்துவீச்சாளரின் அவசியத்தை உணர்த்தியிருந்தது. எனது Facebookன் Status ஊடாகவும் இந்த மனக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அடித்தட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கே முரளிதரனின் வருகையின் தேவை உணரப்பட்ட நிலையில் May02 போட்டிக்கு பின் கடைசி 3போட்டிகளிலும் விற்றோரி அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு முரளிதரன் உள்ளே கொணரப்பட்டார். விற்றோரியைவிட உண்மையில் முரளி ஒரு genuine wicket taking bowler, சில நேரங்களில் கூடுதலாக ஓட்டங்களை கொடுத்தாலும் விக்ககெட்டுக்கள்தான் இவரது தீனி. எனவே அணியில் இவரின் வருகையால் அணி கடைசி 3போட்டிகளிலும் அபார வெற்றியீட்டியது.


இந்த வருட IPLல் கூடுதலான strike rate பெற்றொரில் 173என்ற பாரிய ஓட்டவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார் AB De Villiers. இந்தவருட போட்டிகளிலும் கெயில் ஓட்டங்களை மழைபோல பொழிந்துகொண்டிருந்தாலும். கெயிலில் காண முடியாத ஒரு style perfection class batting AB De Villiersல் பாக்கமுடியும். கெயில் ஒரு Power Hitter ஆனால் இவர் intelligent புத்திசாலித்தனமான துடுப்பாட்டவீரர். Royal Challengers Bangaloreன் விக்கெட்காப்பாளரும் இவர்தான்.


இந்தவருட IPLன் 5வது டெல்லிக்கெதிரான போட்டியில் 64*(42) ஓட்டத்தை பெற்று ManOftheMatch(MOM) விருதையும் பெற்று வெற்றிபெற காரணமாக இருந்தார். பின்னர் Puneக்கெதிரான 21வது போட்டியில் வெற்றிபெறவே முடியாது என்ற நிலையிலிருந்து 33*(14) அடித்து அதிலும் RCB வெற்றிபெற முக்கிய காரணமாயிருந்தார். ராஜஸ்தானுக்கெதிரான 30வது போட்டியில் இறுதி நேரத்தில் வந்து கோரத்தாண்டவம் ஆடி 59*(23) எடுத்து MOMவிருதுடன் போட்டியை வெல்ல காரணமானார். 50வது டெக்கனுடனான போட்டியில் Dale Steynக்கு சாத்து சாத்தெண்டு சாத்தி வெல்ல கஸ்டமென கருதப்பட்ட போட்டியை 47*(17) ஓட்டமெடுத்து MOMஉடன் வென்றுகொடுத்தார் இந்த AB De Villiers.

இவரது scoopஅடிகளும் இலகுவாக gapகளில் place பண்ணும் அழகும் அலாதியாக தூக்கி 6ஓட்டத்துக்கு அனுப்பும் நேர்த்தியும் அண்மைக்காலத்தில் வேறு ஒரு துடுப்பாட்ட வீரரிடமும் காணமுடியாத திறமை. நீங்கள் எந்த அணி ரசிகனாக இருந்தாலும் இவரது துடுப்பாட்ட ரசிகனாகத்தான் இருப்பீர்கள். இந்த IPLல் இவரது Batting order பலநேரங்களில் சர்ச்சைக்குரியதாக பட்டாலும் அது தனக்கு ஏற்றதுபோல மாற்றி அமைப்பதுதான் இவரது பலம். பலமுக்கிய தருணங்களில் Sourav Thiwary முன்னே சென்று ஆட்டத்தை இன்னும் இறுக்கமாக்குவதால் ஏன் AB.De எப்போதும் முன்னே செல்லக்கூடாது என்ற கேள்வி இன்னமும் எழுப்பப்பட்டவாறே உள்ளது. 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-II (Sunil Narine)

Sunil Narine

இப்பிடியொரு Mystery bowler இருக்கிறார், வரும் காலத்தில் இவர் மற்ற அணிகளுக்கு தலையிடியாக இருக்ப்போகிறார் என்று தெரியவந்தது 2011Champions League T20 போட்டிகளின் போதுதான். மேற்கிந்திய தீவுகளின் Trinidad and Tobago அணிக்காக விளையாடிய இவர் அந்த போட்டிகளிவ் மிகவும் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுக்களை அதிகளவில் கொய்திருந்தார். தேங்காய்க்கு பொச்சு இருக்கிறதுபோல இவர் தனது தலைமயிரை முன்னுக்கிருந்து பின்னுக்கு முடியும்வரை கூராக நடுவாக வெட்டியிருப்பது இவரின் தனிப்பாணி. விரைவில் இந்த ஸ்டயிலும் பிரபலமாகும் இருந்து பாருங்கள்.Off spinner ஆன இவர் முதலில் இந்தியாவிற்கெதிராக அம்மண்ணிலேயே 3வது ஒருநாள் போட்டிக்காக மேற்கிந்தியதீவுகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டார் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்த மேற்கிந்தியதீவுகள் 10ஓவர்களில் 34ற்கு 2விக்கெட்டுகள் எடுத்திருந்த இவரது பெறுபேற்றுடன் அந்த போட்டியில் வெற்றியடைந்தது. அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த நாட்டில் ODI series சமப்படுத்த இவரது பந்துவீச்சு முக்கியமாக இருந்தது. 5போட்டிகளில் 11இலக்குகளை சரித்திருந்தார் இவர். இந்த அவுஸ்திரேலியா போட்டிக்கு முதலே IPL ஏலத்தில் 700,000$க்கு எடுக்கப்பட்டிருந்தார் சுனில் நரய்ன்.


Kolkata Knight Ridersற்காக விளையாடிவரும் இவர் டெல்லிக்கெதிரான முதல் போட்டியிலும் பெங்களுர் றோயல் சலேஞ்சர்சிற்கெதிராக மூன்றாவது போட்டியிலும் விளையாடவில்லை. டெக்கனுக்கு எதிரான ஒரு போட்டி மழையால் தொடங்கவேயில்லை. So இன்றுவரை மொத்தமாக சுனில் நரைய்ன் விளையாடிய 9 போட்டிகளில் 15விக்கெட்களை 5.30 என்ற நல்ல economy rateல் சாய்த்துள்ளார் இவர். இந்த வருட IPLல் சிறந்த econmy பந்தவீச்சாளர்களில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தவருட போட்டிகளில் கொல்கத்தா சிறப்பாக செயற்படுவது துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீரினதும் பந்துவீச்சில் சுனில் நரய்னின்னதும் சிறப்பு பெறுபேறுகளும்தான் காரணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. அணிக்காக ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரங்களில் வந்து சிற்பாக பந்துவீசுவதில்தான் மலிங்கவுக்கு அடுத்ததாக சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் இவர். எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும் பெரிய்ய ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றியைக்கொண்டாடும் சுனில் நரய்னில் எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் ஈர்ப்பு வந்திருக்குமெனபதில் எந்தவொரு ஐயமுமில்லை.


இவரது இந்த அடக்கத்தை Facebookல் கீழ்வரும் status மூலம் குறிப்பிட்டிருந்தேன்.

எவ்வளவு சூப்பரா Bowl பண்ணினாலும் தான் Teamலயே விளையாடத Substitute என்கிற மாதிரி அடக்கமா இருக்கிற Sunil Narineனுக்கு தொப்பி கழற்றி (Hats off) வாழ்த்துக்கள்!

இலங்கையின் இன்னொரு Mystery பந்துவீச்சாளர் என ஆரம்பத்தில் அறியப்பட்ட அஜந்த மெண்டிசின் பந்துவிச்சுக்கள் காலம் செல்ல செல்ல ஆசிய அணிகளால் இலகுவாக கணிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டு அவரது இடமே அணியில் நிரந்தரமில்லாது போனது போல இந்த இளம் பந்துவீச்சாளருக்கும் எதிர்காலத்தில் நிகழாவிடில் மகிழ்ச்சியே. 


இவரது கட்டுக்கோப்பான சிக்கனமான பந்துவீச்சு திறமையால் கொல்கத்தா அணித்தலைவர் கௌதம் கம்பீர் இவரை களத்தடுப்பு கட்டுப்பாடு உள்ள (Fielding restriction) உள்ள முதல்6 ஓவர்களில் ஒரு அல்லது இரு ஓவர்களையும், பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் பயப்படும் இறுதி ஓவர்களிலும் பந்துவீச பயன்படுத்துகிறார். இவரும் அணித்தலைவரின் விருப்பத்தை முழுவதுமாக பூர்த்தி செய்கிறார். இறுதிஓவர்களில் ஓரிரு 4, 6 ஓட்டங்கள் போனாலும் விக்கெட்களை உடனடியாக விழுத்தி அவர்களை கட்டுக்கு கொண்டுவருவதில் சுனில் நரைன் கெட்டிக்காரர். 

சடுதியாக திரும்பக்கூடிய பந்துகளை வீசுவதிலும் சுழல் பந்துவீச்செனினும் 90km/h - 95km/h வரையான வேகமான மாற்றங்களுடனான பந்துகளை வீசுவதிலும் இவர் சிறப்பானவர். இவர் பெரும்பாலும் தனது பந்துவீச்சை ஆக்ரோசமாக எதிர்கொள்வோருக்கு வேகமாக பந்துவீசுவதிலும் வெட்டக்கூடிய spinning பந்துகளை வீசதான் விரும்புகிறார். தனது முதலாவது IPL போட்டிகளில் பங்கேற்கும் இவர் IPLன் இந்த வருடத்திற்கான Rising Star விருதைப்பெறக்கூடிய முக்கிய போட்டியாளர். 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-I (Steven Smith)

இந்த தொடர் பதிவு இந்தவருடம் 2012ல் IPL சிறப்பாக செயற்பட்டுவரும் என்னை கவர்ந்த வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்களின் teamற்கான சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது. முதலாவது பாகத்தில் Pune Warriors Indiaன் வீரர் Steven Smithஐ பற்றி பார்ப்போம்.

Steven Smith

இவரை பெரும்பாலோனோருக்கு 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த T20 உலகக்கிண்ணபோட்டிகளிலே பெரிதாக தெரியவந்திருக்கும். All rounder ஆக அறிமுகமான இவர் அந்த போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்திருந்தார். கிட்த்தட்ட Shane Warneஐ போன்ற பந்துவீச்சுப்பாணியை கொண்ட இவர் பற்றிங் பண்ணும் பாணியும் கொஞ்சம் வித்தியாசமானது.  பற்றை நிலத்தில் ஊன்றாமல் அந்தரத்தில் வைத்து காற்றடிப்பது போல மேலும் கீழும் அசைத்தபடி துடுப்பெடுத்தாடும் unorthodexபாணியிலான துடப்பாட்டம். நன்றாக களத்தடுப்பினால் இவர் அணியை நன்றாக Active ஆக வைக்ககூடியவர். T20ல் அறிமுகமாகி ODI போட்டிகளிலும் Australia அணிக்காக ஆடத்தொடங்கிய இவர் குறைந்த காலத்திலேயே Test போட்டிகளிலும் விளையாட தொடங்கினார். மிகவும் இளவயதிலேயே இவரை கூடுதலான எதிர்பார்ப்போடு எடுத்து இவரது careerஐ வீணாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் இருந்து வருகிறது. பலரால் விரும்பப்பட்ட விரராக இருந்தாலும் All rounder என்ற பெயரில் fielding மட்டுமே உருப்படியாக செய்து கொண்டு batting, bowling இரண்டிலும் போதிய consistentஇல்லாது சறுக்கியபடி இருந்தமையால், ஏன் இவர் Australian teamல இன்னும் இருக்கிறார் என்ற சந்தேகம் என்னைப்போல் பலரக்கும் ஏற்பட்டது. முக்கியமாக இங்கிலாந்து எதிரான 2010-2011 Ashes Seriesல் வாய்ப்புக்கிடைத்த மூன்று போட்டிகளிலும் சறுக்கி Ashes கிண்ணம் இங்கிலாந்து பக்கம் போக ஒரு காரணமாக இவரும் இருந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியான இவரின் சறுக்கல்களால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து அணியில் தூக்கப்பட்ட இவர் பின்னர் T20, ODIல இருந்து தென்னாபிரிக்கா சுற்றுலாவின் பின் நீக்கப்பட்டார். 


2011ன் இறுதியளவில் Australia உள்ளுர் போட்டியான BIG BASHல் சூப்பர் என்று சொல்லாவிடினும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியிருந்த Steven Smithஐ Pune Warriorsல் தெரிவு செய்தமை என்னை பொறுத்தவரை ஆச்சரியமாகத்தான் இருந்தது. தேசிய அணியிலேயே இடம் கிடைக்காத ஒருவரை மினக்கெட்டு overseas வீரராக தெரிவது ஏன் என்று சரியாக புலப்படவில்லை. உண்மையில் ஸ்டீபன் ஸ்மித் திறமையானவர் என்றாலும் தொடர்ச்சியான சறுக்கல்கள்தான் பலருக்கும் அவரின் மேலான நம்பிக்கை தளர்ந்துபோக காரணமாயிருந்தது. 

ஆனால் IPLல் தான் விளையாடிய மும்பைக்கெதிரான முதல் போட்டியிலேயே 39ஓட்டங்கள் (low scoring game) எடுத்து Man of the Match ஆகி அணியில் தனது தெரிவுக்கான தேவையை உறுதிப்படுத்தினார். என்னைப்போல அவரை ஜோக்கர் போல பார்த்த பலருக்கும் மூஞ்சையில் கரியப்பூசினார். இவரது சிறிய கண்ணும் கொஞ்சம் கொழுகொழுப்பான உடலமைப்பும் முள்ளுமுள்ளுப்போன்ற தலையும் ஒரு ஜோக்கர் போன்ற ஒரு தோற்றத்தையே பாக்கிறவர்களுக்கு ஏற்படுத்தினாலும் இப்போது இவரின் ரசிகனாக மாறியவர்களில் நானும் ஒருவானாகிறேன். 


IPLல் பெரும்பாலும் 4வது இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து கடைசி நேரங்களில் அணிக்கு தேவையான ஓட்டங்களை அதிரடியாக குவித்து வந்தார். Kings XI Punjabற்கெதிராக 25(12), CSKஎதிராக 44*(22) Delhi எதிராக 34*(13) Decanஎதிராக 26(13), 47*(27) என்று புகுந்து அதிரடி அராஜகம் செய்திருந்தார். இவரது தொடர்ச்சியான கடும் போம் காரணமாக 4வது இலக்க துடுப்பாட்டத்திலிருந்து 2வதாக கடைசி 3போட்டிகளில் உயர்த்தப்பட்டார். அதில் முதல் போட்டியில் 47 எடுத்தாலும் கடைசி இரண்டிலும் 2, 14என்று சறுக்கியிருந்தார். 

இவரது பங்கு துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது களத்தடுப்பு, அணியை துவண்டு விடாமல் inspireபண்ணுவதிலும் முக்கியமாக இருக்கிறது. இவர் பந்துவீசக்கூடியவராக இருந்தும் அணித்தலைவர் கங்கூலி இவருக்கு இதுவரை பந்துவீச வாயப்பு வழங்காதது பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது. நல்ல போமில் இருக்கும் இவர் வாய்ப்பு வழங்கப்பட்டால் bowlingலயும் கலக்குவார் என்பது என்னைப்போல இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாயிருக்கிறது.


சனிக்கிழமை கொல்கத்தாவுடனான போட்டியில் இவரது களத்தடுப்பு இவர் என்ன சூப்பர்Mana என்று commentators மற்றும் பார்வையாளர்கள் கேட்குமளவிற்கு இருந்தது. 6 ஓட்மென்று கருதப்பட்ட பந்தை அலேக்காக வானில் பாய்ந்து தனது கைகளுக்குள் அகப்படுத்தி கொண்டாலும், தான் எல்லைக்கோட்டை கடந்து செல்லக்கூடிய வாய்ப்பிருந்தமையால் அதை அப்படியே உள்ளே எறிந்து அந்த 6ஓட்டத்தை 2ஓட்டமாக்கயிருந்தார். அந்தப்போட்டியை பார்த்தவர்களுக்கு அது என்னதொரு brilliant  attempt எண்டு தெரிந்திருக்கும். கையை தேய்த்து தேய்த்து வாயால் கையை ஊதி ஊதி களத்தடுப்பில் ஈடுபடும் இவரது பாங்கு அற்புதமாயிருக்கும். 

இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை IPLலிலும் மீண்டும் Australia அணியில் விரைவிலும் பார்ப்போம். இந்த வருட IPLல் என்னைக்கவர்ந்தோரில் இவர் முக்கியமான இடத்திலுள்ளார். 

Steven Smith's அந்த அற்புதமான fieldingஐ பார்க்க..
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew

தலைநகர் கொழும்பின் திரையரங்குகள்- I (Premier Concord Cinema)

இந்த தொடர்பதிவை 2வருசத்துக்கு முதலே எழுதோணும் எழுதோணும் என்று யோசிச்சு எழுத பஞ்சியில கனக்க காலமா எழுதாமேயே விட்டுட்டன். ஒரு மாதிரி கடைசியா எழுதிடோணும் எண்டு தொடங்கிறன். இந்த தொடர் பதிவுகளில் நான் தலைநகர் கொழும்பில் படம் பார்த்து ரசித்த தியெட்டர்களை பற்றிய ஒரு அலசலை தர இருக்கிறேன். நிறைகள் குறைகள் அங்கே கடைப்பிடிக்ப்படும் நடைமுறைகள் போன்றவை இயலுமானவரை இந்தபதிவில் தரப்பட உள்ளது.இதன் முதல் பாகத்தில் கொழும்பு தெஹிவள கொன்கோர்ட் திரையரங்கு பற்றி பார்க்கவுள்ளோம். பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவள போன்ற இடங்களிலிருக்கும் அதிகமாக தமிழ் பேசுவோர், கூடுதலாக விரும்பிச்செல்லும் திரையரங்கு இதுவாகத்தானிருக்கிறது. வெகு இலகுவாக சென்றடையக்கூடிய இடத்தில் கொழும்பின் முக்கியமான நகரப்பகுதியில் இத்திரையரங்கம் இருக்கின்றமை இதன் கூடிய நன்மை. காலி வீதியில் வெள்ளவத்தயிலிருந்து தெஹிவள நோக்கி செல்லும்போது தெஹிவள நாற்சந்திக்கு முதல் பஸ்தரிப்பிற்கு மிக அண்மையிலிருக்கிறது இந்த திரையரங்கம். 

முக்கியமான பலபடங்களை எடுத்து வெளியிடும் EAP Films & Theatres நிறுவனத்திற்கு சொந்தமான பல திரையரங்குகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. மொத்தமாக 409 பேர் அமர்ந்து பார்க்ககூடிய இந்த திரையரங்கில் 294 - ODC 104 - Balcony 6 - Box(6x2=12) ஆசனங்கள் உள்ளது. குளிருட்டப்பட்ட (A/C)வசதியுள்ள பெரும்பாலும் தமிழ்ப்படங்களே திரையிடப்படும் இந்த தியட்டரில் எப்பாவது அத்திபூத்தாப்போல ஹிந்திப்படமும் திரையிடப்பட்டிருக்கிறது. 2008ஆண்டளவிலென்று நினைக்கிறேன், கிட்டத்தட்ட 3மாதங்களாக இந்த தியட்டரில் தமிழ்ப்படங்கள் திரையிடாது ஹிந்தி படங்களை மட்டும் வெளியிட்டு ஈ ஓட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சக்காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை திரையிடத்தொடங்கியிருந்தார்கள். என்ன பிரச்சைனயால் அந்த நிலை வந்திருந்தது என்று தெரியவில்லை.


தற்போது தலைநகரில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் பலவழிகளிலும் அளவான காசுக்கு நல்ல வசதியான தியட்டர் என்று என்று சொல்லக்கூடியது இந்த Concord திரையரங்குதான். Reasonable பணத்துக்கு படம் பார்க்கலாம், நல்ல குளுகுளு என்று குளிரூட்டபட்ட வசதி, சிறந்த dts ஒலியமைப்பு, Adjustable cushion ஆசனங்கள் என்று பலவகைகளிலும் தேவையான வசதிகளை கொண்ட இந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் விரும்பி செல்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.


ODC - 235/= Balcony - 310/= Box(2)-420*2=840 போன்ற கட்டணத்தில் Concord திரையரங்கில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. மற்ற தியட்டர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் வழங்கப்படும் வசதிகளுக்கு இது நல்ல reasonableஆனா கட்டண அறவீடுதான். கொழும்பில் A/C + dts வசதியுடன் குறைவான கட்டணம் அறவிடும் தியட்டராக Concordதான் இருக்கிறது. பெரும்பாலும் எந்த பெரிய்ய நடிகர்களின் படமென்றாலும் முதல்நாளிலும் ஒரே மாதிரியான கட்டணங்கள்தான் அறவிடப்படும். (இதுவரை விஜய் அஜீத் சூர்யா போன்றோரின் படங்களுக்கு கூட அவ்வாறே நடந்திருக்கிறது. நான் பார்த்தவரை ரஜினியின் சிவாஜிக்கு மாத்திரமே சற்று கூடுதலாக அறவிட்டிருந்தார்கள்.)


எனினும் நீங்கள் 235/= ODC Ticketக்காக 250/= கொடுக்கும் பட்சத்தில் மீதி 15/= தருவார்கள் என இங்கே எதிர்பார்க்கேலாது அனேகமாக தரவும் மாட்டார்கள். எனவே சரியாக 235/=கொடுத்தால் உங்களுக்குதான் நன்மை. சிலபேர் மடைத்ததனமாக முதல் நாள் ரிக்கெட் விலை கூடவாக இருக்கும் என்று கூடுதலான விலைகளை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். கூடக்கொடுத்துவிட்டு சரியான மக்கள் கூட்டத்தில் மீதிக்காசை தருவார்கள் என எதிர்பார்ப்பது கல்லில நார் உரிப்பதைப்போல கடினமானது.


இந்த தியட்டரில் மக்கள் ஒழுங்காக வரிசையில் செல்வதற்குரிய கம்பிவேலிகள் அமைப்பு நிண்டதூரத்துக்கு இல்லை. ஒரு 5பேர் நிற்பதற்குரிய அளவுதான் ODCற்கு செல்பவர்களுக்கு ஒரு பக்கமும் Balconyக்கு மற்ற பக்கமும் இருக்கிறது. எனவே வேளைக்கு செல்பவர்கள் அதிகளவான சனக்கூட்டமான நாட்களில் கூட படத்தை பார்க்க முடியும் என்றில்லை. முண்டியடித்துக்கொண்டு ஆக்களை தள்ளிக்கொண்டு உள்ள செல்ல பலம் இருந்தால் எப்பிடியான சனக்கூட்டத்திலும் இந்த தியட்டரில் படம் பார்த்து விடலாம். இல்லாவிட்டாலும் படம் வெளியாகி ஒரு கிழமை கழித்துதான் இலகுவாக பார்க்கலாம்.
Counter
இருப்பினும் புடங்குப்பாடு குறைந்தவழியில் படம்பார்க்கவும் ஒரு கள்ளவழி இருக்கிறது. பொதுவாக Balconyக்கு செல்லும்பக்கத்தில் நிற்கும் கூட்டம் ODCபக்கம் நிற்கும் கூட்டத்தை விட வெகு குறைவாகதான் இருக்கும். So Balcony பக்கமாக நின்று எப்பிடியாவது உள்ளே சென்றுவிட்டால் balcony counter மற்ற பக்கம் என்றாலும் இலகுவாக அங்கு சென்று ODC ticketஐயே எடுத்து குறைந்த பணத்திலேயே படத்தை ரசிக்க முடியும். இதுவரை இந்த techniqueஐ பாவிச்சுதான் இலகுவாக படம் பார்ந்திருக்கிறேன். இதையே எல்லாரும் தொடங்கினாங்க எண்டா என்பாடு திண்டாட்டமதான்.

Projector's room
பொதுவாக 10.30AM, 3.00PM, 7.00PM போன்ற 3நேரக்காட்சிகள்தான் திரையிடப்படுகின்றன. எனினும் புது படம் வெளியிடப்படுகின்ற தருணங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் தொடக்க நாட்களில் (முதல் கிழமைவரையிலான நாட்களில்) 4நேரக்காட்சிகளாக 10.30AM, 1.30PM, 4.30PM, 7.30PM நேரங்களில் திரையிடப்படுகின்றன. எனவே உங்களுக்கு காட்சிநேரங்கள் தெரியாத பட்சம் phone பண்ணி கேட்டு சரியான நேரம் செல்வது நல்லது. எனக்கு தெரிந்தவர்கள்கூட காட்சி நேரம் தெரியாது வந்து தங்களது நேரத்தை வீணாக வீணாக்குவதுண்டு. இப்பொழுது Online booking வசதியும் இதற்கு வழங்கப்படுகிறது. இதில் பார்த்த முதல் திரைப்படம் வரலாறு. நான் இதுவரை கூடுதலாக படம் பார்த்த தியட்டர் இதுதான்.

Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord  Telephone : 0117 549630,

அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்