என்னதான் நடக்குது A9 றோட்டில்?

நாளைக்கு நாளைக்கு எண்டு சொல்லி ஒரு மாதிரி பாதையையும் திறந்தாச்சு எண்டு பார்த்தா அங்க என்னதான் நடக்குதெண்டு ஒண்டுமே சரியா புரியவில்லையே? அதால பயணத்தை போக விரும்பும் ஒருவருக்கு அது சம்பந்தமாக ஒரு விடயமும் தெரியாது இருக்கிறது. எப்பிடி போகலாம்? யாரும் போகலாமா? என்ன செய்யவேணும்? இது தொடர்பான பல குழப்பங்கள் இவை. இன்னும் ஒன்றுக்கும் சரியாக விடை தெரிந்த பாடில்லை.


ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு கதை. இது தொடர்பாக குழப்பத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளான இருவர் பேசிக்கொண்டபோது கேட்ட நான் அதை இங்கு தருகின்றேன். உங்களுக்கு பிரயோசனமாயிருக்கலாம். எனது சுகத்திற்காக 1, 2 என்று அவர்களை குறிக்கின்றேன்.

1: அடேய் பாதை திறந்திட்டாங்களாமே?
2: ஓமடா இந்த வருச தொடக்கத்திலிருந்து துறக்க தொடங்கி கடைசியா ஒருமாதிரி உண்மையா திறந்தே விட்டிட்டாங்கள்!1: அவங்கள் விடுற பஸ்ஸிலதானே போகலாமாம் உண்மையா? சொகுசு பஸ் எல்லாம் ஓடப்போறதா கதை விட்டாங்களே? என்ன நடந்தது?
2: ஓமோம் நானும் கேள்விப்பட்டனான். 5 பஸ்தான் ஓடுது. இன்னும் சொகுசு பஸ் ஓடேல. இன்னும் கொஞ்ச நாளில வாத்து அமைச்சரின்ர தயவில ஓடப்போறதா கேள்வி. அதோட கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு எண்டு இன்னும் நேரடி சேவை இல்லை. கொழும்பில் இருந்து போறாக்கள் வவுனியா போய்தான் என்னவும் செய்யோணும். யாழ்ப்பாணத்தில இருந்து வெளிக்கிடுற பஸ் மதாவாச்சியோட நிக்குமாம். பிறகு மதாவாச்சியில இருந்து கொழும்பு போறதுக்கு வேற பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்படுதாம். அந்த வந்த பஸ்தான் வவுனியால இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆக்களை கூட்டி கொண்டு போகுமாம்.

1: எவ்வளவு காசு வேண்டுறாங்கள்?
2: வவுனியா – யாழ் 195/= யாழ் – கொழும்பு 425/= காசென்னவோ ரொம்ப சீப்தான்

1: சும்மா எல்லோரும் போகேலாதாம்? என்னவோ பழைய ரிக்கெட் தேவையாமே? அதைப்பற்றி தெரியுமாடா?
2: கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போக இந்த வருச யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த பிளேனோ கப்பல் ரிக்கெட் தேவையாம். அப்பிடி போனாலும் திரும்பி வர VISA, sorry Clearance எடுக்கோணுமெண்டு கதைக்கிறாங்கள். இதுக்கு வேற வழி இருக்கோ தெரியவில்லை.

1: ஓ அப்பிடிதான் கதை வருது. ஆனால் நேற்று போனாக்களுக்கு டோகின்(Token) கொடுக்கப்பட்டிருக்கிறது. அவங்களுக்கு Clearance தேவையில்லையாம். இதெல்லாம் வாய் வழி கதைதான் எது உண்மை எது பொய் என்று ஒண்ணுமே தெரியல. தலையே சுத்துது. பேசாம பாதையே திறக்காம இருந்திருக்கலாம் போல கிடக்கிது. EXPOவோடயே குப்பை கொட்டியிருக்கலாம்.
2: கொழும்பில இருந்து போகோணும் எண்டா எப்பவும் போலாமா? இல்லாட்டி முதலேயே book பண்ண வேணுமா?

1: நான் அறிஞ்சவரை வவுனியா போய், உன்னட்ட தேவையான document எல்லாம் இருந்து பஸ்ஸில் ஆக்கள் கூட(crowd) இல்லாட்டி பிரச்சனை இல்லை. அண்டைக்கே போகலாம் இல்லாட்டி book பண்ணி அடுத்த நாள்தான் போகோணும். அதுக்கும் உரிய போற ஆள்தான் தேவை.
2: அப்ப பாதையால போறதெண்டாலும் சும்மா லேசுப்பட்ட விசயம் இல்லை எண்டு சொல்லு!! பாப்பம் பாத்து விசாரிச்சு போவம். இல்லாட்டி இங்கேயே இருந்து படிச்சு முன்னேறுவம்.

இதுதான் அந்த சம்பாஷணையின் தேவையான பகுதி. இவர்கள் தங்களுக்குள் கதைத்து கொண்டது மிக அண்மையில் அறிந்த தகவல்களை கொண்டாகும் பெரும்பாலும் அனைத்து தகவல்களும் சரியானது. சில சிறிய திருத்தங்கள் இருக்க கூடும். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் மாறகூடும். ஆனால் காலத்தின் தேவை கருதி உடனேயே பதிவிடுகிறேன்.

சும்மா செய்திகளை மட்டும் பார்த்திட்டு போறாக்களுக்கு A9 திறந்த பின் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்த மாதிரியே ஒரு தோற்றப்பாடு தோன்றலாம். (தமிழர்களுக்கு கூடி). இதில பயனையட முயலுபவர்களுக்குதான் எல்லா சிக்கலும், பிரச்சனையும் தெரியும்.


ஒரே நாட்டிலிருக்கிற சொந்த வீட்டுக்கு போக அதே நாட்டிலிருக்கிற தமிழ்மக்கள் படும்பாடு இது. பயங்கரவாதம்தான் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதே! இனியாவது ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பீர்களா? எங்கே வடக்கின் வசந்தம்?

வசந்தம் வெறுமனே சாமான் கொண்டு A9ல் செல்லும் லொறிகளின் பதாகைகளில் மட்டுமா?

கசப்பான அந்த நாள்-IVமுடிவு

இதன் முதல் பாகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 1  2  3.

ஒருவாறு எமகண்டத்திலிருந்து தப்பியாச்சு. வேறுமாவட்ட மாணவர்கள் அவர்களது சொந்த இடங்களிற்கு செல்ல யாழ் மாணவர்கள் மட்டும் தங்களிற்கு தெரிந்த உறவினர்களின் கொழும்பு வீடுகளில் தங்கினார்கள். உடுத்த உடுப்போடு வேறு எதையும் எடுக்கமுடியாது போனமையால் அத்தியாவசிய பொருட்களை மீண்டும் வாங்கவேண்டி இருந்தது.

காலவரையறையின்றி கம்பஸ் பூட்டப்படும் என்ற வதந்தியின் மத்தியிலும், இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருந்தும் கூட திங்கட்கிழமை வழமைபோல் கம்பஸ் திறக்கப்பட்டது (சம்பவம் நடந்தது வெள்ளியில்). முதல்நாளில் ஒருசில தமிழர்களை தவிர ஒருவரும் பயத்தால் அந்த பக்கம் செல்லவில்லை. நிலமைகளை அவதானித்த பின்னரே செல்வது உசிதம் என்பதால் பலர் வீடுகளில் பதுங்கி இருந்தனர்.


சொந்தவீடுகளில் இருப்போருக்கு வேறு பிரச்சனைகள் இருந்திருக்கவில்லை. ஆனால் எங்களைபோல தூரத்து சொந்தங்களின் வீடுகளில் தங்கியிருந்தோர் பலர் அதை comfortable ஆக உணரவில்லை. எவ்வளவு விரைவாக எங்களது பழைய roomகளுக்கு செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக செல்லசந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தோம்.

செவ்வாயன்று சில தமிழர்கள்(பெரும்பாலும் கொழும்பை சேர்ந்தோர்) சென்று அங்கே பதட்டமான சூழ்நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், கொஞ்ச மாணவர்களை சேர்த்து கொண்டு புதனன்று நாங்களும் அங்கே சென்றோம். முதலிலேயே கதைத்து கொண்டபடி சத்தம் சந்தடி எதுவுமின்றி கம்பஸிற்குள் நுழைந்தோம். சுற்றாடலிலும், உள்ளேயும் பதாகைகளும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

எமது Roomதொகுதியை சேர்ந்த 5பேரளவில் ஒன்று சேர்ந்து கன்ரீனில் சந்தித்து பேசி, எமது roomகளுக்கு சென்று நிலமையை பார்த்து வர முடிவு செய்தோம். நான் முன்னே சொன்னபடி எங்கள் அறைகள் கம்பஸிலிருந்து கிட்டத்தட்ட 300மீட்டர் தூரம். போக வேண்டுமெனில் முன்னே உள்ள ஓட்டோக்காரர்களையும் (குடுக்காரர்கள்) தாண்டியே செல்ல வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தமிழர்கள்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. எனவே வீணே கூட்டமாக சென்று யாரிடமும் அடி வாங்காது முதலில் ஒருவரை அனுப்பி பரிசோதித்து அவருக்கு எதுவும் நடக்கவில்லை எனின் மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லலாம் என தீர்மானித்தோம்.


இவங்களபோலதான் நாங்களும் நல்ல colors ஆன பெடியள்

அதற்கு பொருத்தமான பருத்த, உயரமான தோற்றமுடைய (இராவண வம்சத்தின் எச்சமோ என பலரால் சந்தேகிக்கபடுபவரும் பண்ணாகத்தின் மைந்தனுமாகிய) ஒருவரை தேர்ந்தெடுத்தோம். இருப்பவர்களில் சிங்களம் பேச கூடியவரும், அடிவாங்க கூடிய தேகவளமுடையவருமாதலால் அவரின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரும் பதுங்கி பதுங்கி சென்று ஒருவாறு சேரவேண்டிய இடத்தை அடைந்து எமக்கு callசெய்து பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்தார்.


இவரை போலதான் அவர் இருப்பார்

நாங்களும் இருவர் இருவாராக வேகமாக நடந்து ஒருமாதிரி போய் சேர்ந்தோம். எங்களது வீட்டு உரிமையாளர்(சிங்களவர்) நல்லவர். அவர், இப்போது பிரச்சனை பெரிதாக இல்லை என்றும் நீங்கள் இன்றே தங்கலாம் என்றும் நம்பிக்கை கூறினார். வேறு வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு தமிழர்களை தங்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நான் அன்று அங்கே தங்க விரும்பாது தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் உறவினரின் வீட்டுக்கு சென்றேன்.

எனினும் 2மாணவர்கள் அங்கே தங்கியிருந்து பரீட்சித்து பார்ப்பதென்று முடிவெடுத்து அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். அவர்கள் பிரச்சனையின்றி உயிரோடிருந்தால் அடுத்த நாள் நானும் தங்கலாம் என யோசித்து இருந்தேன். அன்றிரவே போன் பண்ணி அவர்களின் குசலம் விசாரித்தேன். அப்போது அவர்களின் குரலின் தொனியை கொண்டு அவர்கள் எப்படி பயந்து போய் இருந்தார்கள் என உணர முடிந்தது. பெரிதாக கதைக்காது, light போடாது இருப்பதாக கூறினார்கள். வீணாக வெட்டி கதைகதைத்து அவர்களை சிக்கலில் மாட்டாது உடனேயே நான் அழைப்பை துண்டித்தேன்.

அடுத்தநாள் நண்பர்களின் இருப்பை உறுதிப்படுத்தி கொண்டு நானும் அங்கேயே தங்க வீட்டில் அனுமதி பெற்றேன். இதிலே குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் கம்பஸ் சுற்றாடலில் இருந்த பெருமளவான தமிழர்களில் எல்லோருமே அந்தகாலத்தில் மீளகுடியமர பயப்பட்டார்கள் அல்லது தடுக்கப்பட்டார்கள். முதலாவதாக தனியே துணிச்சலாக சென்ற பெருமையை அந்த அறையில் தங்கியிருந்த நாமே பெற்றுக்கொண்டோம்.

“மாலை என் வேதனை கூட்டுதடி” என்ற சேது பட பாடல் என் காதில் situation songஆக ஒலித்தபடி இருந்தது. இரவும் நெருங்கியபடி இருந்தது. காடையர்கள் யாரும் இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வந்தால் அப்பீல் இல்லை. தப்பிக்கவும் ஒரு வழியுமில்லை.


வேளைக்கே (5மணிக்கே) இரவு சாப்பாட்டை எடுத்து வந்து 5.30மணிக்கெல்லாம் அறையில் பதுங்கி கொண்டோம். இரவு நெருங்க நெருங்க கால்களும் தன்பாட்டிற்கு மெட்டிசைக்க தொடங்கியது. சத்தம் போடுவதில்லை, lightகளை போடுவதில்லை என்ற முடிவுகளை நாங்கள் முன்பே எடுத்திருந்தோம். அறைகளில் இரகசியம் பேசியபடியும் நாய்கள் குரைக்கும்போது பேயடித்தது போல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடியும் இருந்து நேரத்தை ஓட்டினோம். Table lambஐ கொண்டு ஒருவாறு அவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம்.


எனது அறையும், நண்பர்கள் இருவரினது அறையும் இருந்தது முதலாவது தளத்தில். எனவே 1க்கு போவதென்றால் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும். ஏனெண்டா பாத்றூம் இருந்தது கீழே. முதலேயே பயந்து வேர்த்து விறுவிறுத்து போய் இருந்த எங்களுக்கு கீழே போவதென்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே முதலாவது தளத்தில் உள்ள பல்கணியை பயன்படுத்தி கீழே இறங்காது வேலையை முடித்துக்கொண்டோம்.

இவ்வாறு நிம்மதியின்றி கழிந்தன பல இரவுகள். இனியும் ஏதாவது வெடித்தால் பிரச்சனை ஆகிவிடுமென்பதாலும் தொடர்ச்சியாக பயந்து கொண்டு இருக்கேலாது என்பதாலும் கிட்டதட்ட 2கிழமையின் பின்னர் கஷ்டப்பட்டு வெள்ளவத்தையில் வீடு தேடி அங்கேயே குடியேறினோம். பின்னர் என்ன நாங்களும் வெள்ளவத்தையில் தமிழ்கலர்களை பார்த்து ஜொள்ளுவிட்டபடி தெருக்களில் அலைந்து திரிந்து படிப்பையும் கோட்டைவிட்டோம்.


இப்பிடிதான் பின்னால அலைஞ்சு திரிஞ்சம்

வீடுதேடின படலத்தையே இன்னொரு பதிவில சொல்லலாம் அந்தளவு கஷ்டப்பட்டோம். இதுக்குமேலேயும் இதை இழுத்துக்கொண்டு போகமுடியாது. எனவே முடிக்கிறேன். கஷ்டப்பட்டு பொறுமையா வாசிச்ச எல்லோருக்கும் ரொம்ப நன்றீங்கோ.

சுபம்

பாண்புட்டியும்(Barn Buddy) FaceBookம்

இண்டைக்கு விடிய நான் கத்தரிக்காயும் தக்காளியும் பயிரிட்டிருக்கன்டா Fertilizerம் கணக்கா போட்டிருக்கு பின்னேரம் போய் உடன யாரும் ஆட்டையை போட முதல் அறுவடை செய்திடணும். இன்னும் நாய் வாங்கேல அதுதான் பெரிய சிக்கல்” எனது நண்பனொருவன் தனது சக நண்பனொருவனுக்கு இவ்வாறு கூறிக்கொண்டிருந்தான். அதற்கு மற்ற நண்பன் கூறுகிறான் ”என்னட்ட நாய் இருக்கு அதால பெரிசா யாரும் களவெடுக்க மாட்டாங்க.நேற்று நான் Maximum எல்லாருட்டையும் களவெடுத்து கனக்க சம்பாதிச்சன்டா. இணடைக்கு புதிசா ஏதாவது பயிரிட்டா சரி.”

இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டிருந்தா எனக்கோ தலை சுற்றியது. என்னடாப்பா இவங்கள் கம்பஸிற்கு வந்தும் வீட்டுத்தோட்டம் செய்யுற நல்ல முயற்சியுள்ள பயபுள்ளகளோ என்று யோசிச்சேன். அந்தளவு நல்லபழக்கம் எங்களோட படிக்கிற எந்த நாதாரிகளுக்கும் இல்லை என்று வடிவா தெரியும் என்பதால் அவர்களிடம் கதைவிட்டு பார்த்தேன்.

பிறகுதான் புரிஞ்சது. அவர்கள் கதைச்சுக்கொண்டது, FaceBookல் உள்ள ஒரு Game Application ஆனா பாண்புட்டி விளையாட்டைபற்றி. (BarnBuddy என்பதுதான் அதன் உச்சரிப்பென்றாலும் எங்களால் பாண்புட்டி என்று செல்லமாக இந்த வியையாட்டு கூறப்படுகிறது)
Barn Buddy Logo

அந்த நேரத்தில் எனக்கு இதை பற்றி சற்றும் தெரியாதபோதும் எல்லோரும் இதைபற்றி பெரிசாக சொன்னதால் இதில என்னவோ நல்ல சுவாரஷ்யம் இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர்கள் சிலர் விளையாடும்போது பார்த்தேன். சும்மா சொல்லகூடாது சுப்பராகதான் இருந்தது.

இந்த விளையாட்டின் theme, தோட்டம் செய்து points பெறுவது. FaceBookல பல Game Applications(Vampire, WereWolves, MouseHunt, KickMania..etc) இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் திடீரெண்டு எல்லோர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்து வெற்றிநடை போடுகிறது இந்த பாண்புட்டி மன்னிக்கவும் பான்படி(BarnBuddy).

எனது நண்பர்களில் Firstல் உள்ளவரின் தோட்டம் கோழி நாயுடன்

இந்தவிளையாட்டில் reallity என்பது சிற்பம்சம். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட விதைநிலத்தில் கொத்தி விதைத்து நீர் ஊற்றி உரமிட்டு பயிரிடலாம். அதைவிட வேறு நண்பர்களின் தோட்டத்திற்கு சென்று அவர்கள் பயிரிட்டதையும் களவெடுத்து காசு உளைப்பது மட்டுமன்றி அவர்களின் தோட்டத்திற்கு களைகளையும் பூச்சிகளையும் பிடித்து விடலாம். சுருக்கமாக சொல்ல போனால் சொந்தமாக தோட்டம் செய்யும் உணர்வை பெறலாம்.

களைகள் மற்றும் பூச்சிகளுடன் ஒரு தோட்டம்

விளையாடுவோர் எடுத்துள்ள Coints அடிப்படையில் உரங்களையும் விதைகளையும் வாங்கிபயிரிடலாம். இதுலுள்ள இன்னுமொரு காமடி என்னெண்டால் தோட்டத்துக்கு சொந்தமா நாயை வாங்கினா மாத்திரமே களவு போவதை கட்டுப்படுத்தலாமாம். இதற்கு குறிப்பிட்ட Credits இருக்கணும் இல்லாவிடில் அவரது Barn Buddy requestஐ 10பேர் accept பண்ண வேண்டும். இந்த requestகளை acceptபண்ண வைப்பதற்காகவே சிலர் நண்பர்களுக்கு Milk packet சிற்றுண்டிகள் போன்றவற்றை வேண்டி கொடுக்கின்றனர். இதைவிட மேலே சென்று இதுக்காகவே mail create பண்ணி Facebook account open பண்ணி அதற்கு requst அனுப்பி நாய் வாங்குகிறார்கள் சிலர்.

இந்த விளையாட்டில் Credit Cardம் Acccept பண்ணபடுகிறது. நல்ல காசுள்ளவரா நீங்கள்? அப்படிஎன்றால் உங்களுக்கு பாண்புட்டியில் ஒரு கலக்கு கலக்க முடியும் உங்களுக்கு தேவையான coints இல்லாவிடின் cerdit card பயன்படுத்தி தேவையானதை வாங்கி கொள்ளலாம்.

இதை விளையாடுவோர் சொல்கிறார்கள்: இதை விளையாடுவதால் மனதில் திருப்தியும், முகத்தில் ஒருவித பொலிவும் ஏற்படுகிறதாம். ஏனென்றால் சொந்தமாக தோட்டம் வைத்து பயிரிட்டு பணம் சம்பாதிக்கும் உணர்வை தருகின்றதாம் இது. Facebookல் இதை ஒத்த விளையாட்டுக்களான FarmVille, Farmpals, FarmTown இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி நம்பர்1 நிலையில் இருப்பது பாண்புட்டிதான். மற்றையதைவிட இதில் GUI(Graphical User Interface) சுப்பராகும்.


நீங்கள் இதுவரை இன்னும் பாண்புட்டி விளையாடாதவரெனின் இன்றே தொடங்குங்கள் உங்கள் தோட்டத்தில் பயிரிட...

தோட்டம் செய்வோம் பணம் சம்பாதிப்போம் சொந்த காலில் நிற்போம்.!!!!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்