திரை தகவல் பெட்டகம்-II
ஜனவ
13
இதன் முதலாவது பாகத்திற்கு இங்கே கிளிக்குக.
திரை தகவல் பெட்டகம்-I
திரை தகவல் பெட்டகம்-I
அனைவருக்கும் பொட்டலத்தின் முற்கூட்டிய பொங்கல் வாழ்த்துக்கள்! இந்தபாகத்தில் முதல் பந்திதவிர்த்து கீழ்வரும் பந்திகளில் ஒருவரைபற்றிய விபரங்கள் சொல்லப்பட்டு அவரை ஊகிக்க உங்களை தூண்டியிருக்கிறேன். கண்டுபிடித்தவரை சரிபார்க்க பந்தியில் உள்ள பெயர் சொல்லவரும் இடைவெளிப்பகுதியை Mouse pointerஆல் select செய்யவும். அப்போது அந்த நபரின் பெயர் தெளிவாக தெரி்யும்.
![]() |
அன்வேஸா |
அண்மைக்காலத்தில் வெளிவந்த பாடல்களில் நான் வியந்து விரும்பிக்கேட்ட பாடல் மேலே பதிவேற்றப்பட்ட மந்திரப்புன்னகை படத்தில் இடம்பெற்ற ”மேகம் வந்து போகும்” பாடலாகும். (மந்திரப்புன்னகையா அப்பிடி ஒரு படமா? அதில பாட்டா? என்று திருப்பி கேட்கிறது விளங்குது. இதுகூட தெரியாம இசை ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னபயன் சார்! முதலில அந்த படப்பாட்டுக்கள கேட்டுட்டு வாங்க). அற்புதமான இனிமையான இசையில் அமைந்த காதல் பாட்டு. அந்தபாடலின் குரல்களுக்கு சொந்தக்காரர்களை கேட்டவுடனே மதுபாலக்கிருஸ்ணன், ஸ்ரேயா கௌசால்தான் என்று நினைத்துவிட்டு அப்பிடியே இருந்துவிட்டேன். ஆனா தற்செயலாக பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த பெண் குரலுக்கு சொந்தக்காரி பெயர் ”அன்வேஸா”. வயது வெறும் 17தான். STAR PLUS தொலைக்காட்சி நடாத்திய Amul STAR Voice of India போட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலாமான இவர் தமிழிற்கு வித்தியாசாகரால் மந்திரப்புன்னகைக்காக அழைக்கப்பட்டார். அப்படியே ஸ்ரேயா கௌசால் போன்ற குரல்வளம். அடித்துக்கூறுவேன் சிறப்பான எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------
![]() |
பென்னி டயால் |
-----------------------------------------------------------------------------------------------------
கீழேயுள்ள இந்த பாடல் அந்நியன் திரையில் வரும் சூப்பர்ஹிட் ”கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலாகும். இந்தபாடலை பாடகி வசுந்தராதாஸூடன் சேர்ந்து பாடுபவர் ஒரு இசையமைப்பாளர். அண்மையில் தமிழில் இயக்குனர் சரணின் ஒரு படத்திற்கும் ஆர்யா நடித்து வெளிவந்த இறுதிப்படத்திற்கும் கரிகரனுடன் ஒன்று சேர்ந்து இசையமைத்தார். அவர் யார் தெரியுமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ► செப்டம்பர் (2)
9 comments:
பொட்டலத்திற்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துகள் :)
அருமை..வாழ்த்துகள்....பிறந்த நாளுக்கும்............
வாழ்த்துக்கள் கார்த்தி..
பிறந்த நாளும் வருது போல...
பாஸ் தகவல்கள் அருமையா இருக்கு தொடருங்க!! வாழ்த்துகள்!! இன்னும் நிறைய எழுதிக்கிட்டே இருங்க வந்து வாழ்த்திகிட்டே இருப்போம். போதுமா வாழ்த்தினது!!
நல்லாயிருக்கு... பகுதி மூன்றையும் சீக்கிரம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
Subankan, ஜனகன், யோகா அண்ணா, எம் அப்துல் காதர், Janna அண்ணா எல்லோருக்கும் நன்றிகள்!
//சிறிசாந்தினதும் உறவினர் ஆவார். K.J.ஜேசுதாஸை ஒத்த குரலை கொண்டிருத்தல் இந்த பாடகரின் ஒரு சிறப்பான அம்சமாகும். கண்டுபிடித்துவிட்டீர்களா யார் அவரென்று? அவர்தான் பாடகர் மதுபாலகிருஷ்ணன். //
மது ஸ்ரீசாந்தின் அக்காவின் கணவர் என்று நினைக்கிறேன், உன்னிமேனன், விஜய் ஜேசுதாஸ் குரல்களும் ஜேசுதாசை ஒத்திருந்தாலும் மதுவின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஜேசுதாசின் பரம விசிறிகளுக்கு அவரை இமிடேட் செய்வதால் மதுவை பிடிக்காதுள்ளது. வித்யா சாகரின் இசையில் மதுபாலகிருஷ்ணன் பாடிய அத்தனை மேலடிகளும் அருமை. அதிலும் சதுரங்கம் திரைப்படத்திற்க்காக 'விழியும் விழியும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
நன்றிகள் எப்பூடி உங்கள் தகவல்களுக்கு!
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக