விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
தற்போது நடைமுறையில் உள்ள Cricket rules பல காலங்காலமாக மாற்றங்களுக்குட்பட்டு தற்கால trendற்களுக்கமைவாக polish பண்ணப்பட்டவைதான். அப்படியான ஒரு விதி ஏற்படக்காரணமாக இருந்த சம்பவம் பற்றிதான் இந்தபதிவு சொல்லப்போகிறது.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளில் உலககிண்ணத்துக்கு ஒப்பானதாக கிரிக்கெட் கனவான்களால் மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப்போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில்தான். இப்பிடி 1932-33 பருவகாலத்தில் போட்டி நடைபெற இருந்த காலத்தில் அவுஸ்திரேலியான அணி துடுப்பாட்டத்தில் Bradman தலமையில் கப்பலமானதாக இங்கிலாந்தின் காதில் குச்சிய விட்டு ஆட்டுமளவிற்கு தனிக்காட்டு ராஜாக்களாக இருந்தது. துடுப்பாட்டத்தில் இதில் போட்டி வேற அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்துக்கு வெடிக்கலக்கம் போட்டி ஆரம்பமாக கனகாலத்துக்கு முதலே ஏற்பட்டுவிட்டது.
கேவலமான தோல்விகள் ஏற்படாமல் தடுக்க இங்கிலாந்து தலைவர் Jardine புத்திசாலித்தனமான(?) ஒரு திட்டத்தை வகுத்தார். துடுப்பாட்டவீரரின் உடம்பை தாக்ககூடிய Short pitch bouncing பந்துகளை leg stump lineல் அடிக்கடி போடவும் கூடுதலான வீரர்களை leg sideல் catching positionsகளில் சுற்றி அடிக்கி விடவும் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படியான உடம்பை பதம்பார்க்கும் பந்துவீச்சுக்களையே bodyline or leg theory bowling என்று சொல்கிறார்கள்.திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் Harold Larwood மற்றும் Bill Voce தேர்ந்தெடுக்கபட்டு திட்டமும் இரகசியமாக சொல்லப்பட்டது.
இங்கிலாந்து அணித்தலைவர் எதிர்பார்த்தபடி ஆஸி துடுப்பாட்டவீரர்கள் short pitch deliveriesக்கு மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள் தாக்குதலுக்குள்ளானார்கள் legsideல் விக்கெட்டோடு இணைந்த கால்வட்டத்தில் நிறைந்திருந்த களத்தடுப்பாளர்களுக்கு பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் Bert Oldfieldன் மண்டையோடு Harold Larwoodஆல் பதம்பார்க்கப்பட்டு உடைக்கப்பட்டது. இதே போட்டியில் Australia captain Woodfullம் எகிறிவந்த Larwoodன் பந்தால் நெஞ்சில் பதம்பார்க்கப்பட்டார். Wisden சஞ்சிகையால் இவ்வளவு காலம் விளையாடினதிலேயே மிகவும் கேவலமான டெஸ்ட் போட்டி என்று வர்ணிக்கப்பட்டும் பல சச்சரவுகள் குழப்பங்களை ஏற்படுத்திய தொடராக மாறி கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு புள்ளி குத்தப்பட்ட போட்டியாக மாறிப்போனது. எனினும் வலுவான அணியான அவுஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றியீட்டியது.
சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.
சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.
சர்ச்சைக்குரிய இந்த போட்டி தொடரின் பின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. Leg side ல் (onside) துடுப்பாட்ட வீரர் நிக்கும் விக்கெட்டுக்கு பின்னான கால்வட்டத்தில் விக்கெட் காப்பாளரை விட கூடுதலாக இரண்டு களத்தடுப்பாளர்களே நிற்க முடியும் என்ற விதி இந்த Bodyline Test seriesக்கு பிறகே MCCயால் கொண்டு வரப்பட்டது.
இது சம்பந்தமான சுவராஸ்யமான தகவல்களை இணையத்தில் தேடி விருப்பமுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமான topic. யாரும் ஒரு producer தயாரா இருந்தா ஒரு Super படமாவே எடுக்க கூடிய Test series.
SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
டிஸ்கி: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கேடயம் சஞ்சிகையில் எழுதின பதிவு இங்கே.
இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்பே 2011-2012ல் அவுஸ்திரேலியாவில் Big Bash Leagueம், 2012ல் Bangladesh Premier Leagueம் 2012ல் Sri Lanka Premier Leagueம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முதல் SLPL, 2011ல் July19-August4 வரை நடாத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட பல நாடுகளின் கிரிக்கெட்சபைகள் SLPLக்கு தங்களது நாட்டு வீரர்களை அனுப்புவதற்கு சம்மதித்தும் இருந்தார்கள். ஆனால் இந்தியா திடீரென முடிவை மாற்றி தங்கள் வீரர்களை SLPLல் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே சம்மதித்து விட்டு இந்திய கிரிக்கெட் சபை கடைசி நேரத்தில் காலை வாரியது பெரும் ஏமாற்றத்தையும் கவலையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு இந்திய கிரிக்கெட்சபை முதலில் கூறிய காரணம், SLPL போட்டிகளை வர்த்தகப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்பட்டு சிங்கப்பூரை தளமாக கொண்டு இயங்கும் Somerert Entertainment Ventures (SEV) நிறுவனத்திற்கு 5 வருடங்களிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களினுாடாகவே SLPLல் விளையாடும் வீரர்களின் ஒப்பந்தமும் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த வீரர்களின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட்சபையால் வழங்காது போட்டியை நடாத்தும் நிறுவனத்தால் வழங்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட்சபை கூறியிருந்தனர். மேலும் IPL போட்டிகளில் வீரர்களின் ஒப்பந்தங்கள் BCCIயாலே வழங்கப்பட்டது என்றும் இவ்வாறு போட்டியை நடாத்தும் SEV நிறுவனம் இதை கையாள்வதால் வீரர்களின் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முறைகேடுகள் நடைபெறலாம் எனவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லையென்றும் இந்திய கிரிக்கெட் சபை முகத்திலடித்தது போல கூறிவிட்டது.
எனினும் SLC அவர்களை சமாதானப்படுத்தி இந்திய வீரர்களை உள்ளே எடுப்பதில் கடும்பிரயத்தனம் செய்திருந்தது. வீரர்களுக்கான ஒப்பந்தங்களில் குளறுபடி நடக்காது எனவும் SLC அதற்கு தாங்கள் பொறுப்பென்று உறுதிமொழி கொடுத்தும் கூட BCCI தங்கள் முடிவில் மாறாது இருந்தது. இந்திய கிரிக்கெட்சபை வீரர்களின் சம்பள விடயத்தில் பயந்தமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. இந்தியாவில் இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கு அப்போது SLC ஒரு TV Channelஇடமும் உரிமையை விற்றிருக்கவில்லை. இலாபம் கொழிக்கும் இந்திய சந்தையில் இவர்களால் SLPLஐ வியாபாரப்படுத்த முடியாவிட்டால் SLCயால் இந்த போட்டி தொடரால் இலாபத்தை பெற்று வீரர்களுக்கு வழங்க முடியாமல் போகுமென்று இந்தியா கிரிக்கெட்சபை பயந்தது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் இந்தியா வீரர்களை அனுப்பாமைக்கான இன்னொரு காரணமும இருந்ததது. SLPLஐ பின் நின்று நடத்துபவர் பழைய IPLன் பொறுப்பாளரும் பின்னர் BCCIயுடன் முரண்பட்டு குற்றம் சாட்டப்பட்டவருமான லலித் மோடிதான் என இந்தியா சந்தேகித்தது. லலித் மோடிக்கும் போட்டித்தொடரை நடாத்தும் Somerert Entertainment Ventures(SEV)க்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக BCCI குற்றம் சாட்டியது. அதற்கு SLCயும் SEVம் உடனேயே மறுப்புத்தெரிவித்திருந்தது. மேலும் SEV, லலித்மோடி பங்குதாரராகவோ இணைப்பாளராகவோ தற்போதோ கடந்த காலத்திலேயோ தங்கள் நிறுவனத்துடன் இருக்கவில்லை என்று கூறியிருந்தது. அதோடு SLCயுடன் தங்கள் நிறுவனம் சேர்ந்து நடாத்தும் எந்த போட்டிகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ லலித்மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனாலும் அதன்பின்பும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இருக்கவில்லை.
இப்படியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட SLC முதலாவது SLPLஐ 2011 Julyல் நடாத்தும் முடிவை கைவிட்டு 2012 Augustல் நடாத்துவதாக முடிவெடுத்தது. ஒளிபரப்பும் உரிமையை ESPN STAR Sports 2012 July அளவில் பெற்றுக்கொண்டது. Bangladesh, Bhutan, Cambodia, Hong Kong, Indonesia, Korea, Nepal, Macau, Malaysia, Maldives, Pakistan, Papua New Guinea, Philippines, Singapore, Sri Lanka மற்றும் Thailand போன்ற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய்ய விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனத்திடம் SLPLன் உரிமை சென்றது பணவிடயத்திலும் SLPLன் பிரபலப்படுத்தலிலும் ஆரோக்கியமான விடயம் என்றே சொல்லலாம். பல குத்தல்கள் குடையல்களுடன் தொடங்கப்பட்டாலும் ஒரு மாதிரி 2012ல் இலங்கை கிரிக்கெற் இந்த போட்டி தொடரை நடாத்தி முடித்துவிட்டது.
நடந்து முடிந்த முதலாவது SLPLல் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே நடைபெற்று முடிந்தது. தொடங்கும்போது பல தரப்பிலும் காணப்பட்ட குறைந்தமட்டத்திலான எதிர்பார்ப்பு இந்த முதலாவது SLPLஐ ஒருவாறு கரையேற்றிவிட்டது. வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்சபைக்கும் வருவாயை ஈட்டுக்கொடுத்தாலும் அணிகளின் உரிமையாளர்களுக்கு நட்டத்தையே விட்டுச்சென்றிருக்கிறது. போட்டியை நேரே சென்று பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த போட்டிக்கான எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கண்டியில் நடைபெற்ற போட்டிகளையும் கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் ஒன்ரிரண்டையும் தவிர மிகுதி அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு வெகு சொற்பமான அளவு ரசிகர்களே வந்திருந்தனர். பல போட்டிகளுக்கு இலவச ரிக்கெட்கள் வழங்கப்பட்டபோதும் ரசிகர்களை சராசரி அளவில் கூட மைதானத்திற்கு கொண்டுவர இந்தப்போட்டிகளால் முடியவில்லை. இலங்கையில் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தோர்கூட வெகு சொற்பமே.
மொத்தமாக 7அணிகள் கலந்து கொண்டு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. இதில் வட மாகாணத்தை UTHURA RUDRASம் கிழக்கு மாகாணத்தை NAGENNAHIRA NAGASம் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. தமிழ் வீரர்களுக்கு இலங்கை அணயில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஆங்காங்கே கூறிவரும் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள் இந்த SLPL போட்டிகளில் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு உள்ளுர் தமிழ் வீரரையும் சேர்க்கவில்லை. இந்த போட்டிகளில் விளையாடிய பல வீரர்கள் ஒழுங்காக பிடிகளை கூட எடுக்காமல் சொதப்பியதோடு ஒப்பிடும்போது என்ன அடிப்படையில் ஒரு வடக்கு கிழக்கு வீரர் கூட இவர்களின் கண்களுக்கு படவில்லை. வடக்கு கிழக்கில் பல கிரிக்கெட் கழகங்கள் இப்படியான T20 போட்டிகளில் உள்ளுரில் விளையாடிவரும் நிலையில் பல திறமையான வீரர்கள் இருக்கின்ற நிலையில் இவர்களுக்கான வாய்ப்பு இப்படியான ஒரு முதல் தர கிரிக்கெற் போட்டிகளிலேயே வழங்கப்படாது விட்டது, இலங்கை அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் எதிர்காலத்தில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் கேள்விக்குரியதாக்கியுள்ளது.
எனினும் இந்த போட்டி தொடரினூடாக எதிர்கால இலங்கை அணிக்கு வரக்கூடிய பல திறமைகள் கண்டறியப்பட்டுள்ளமை இந்தப்போட்டித்தொடரின் வெற்றியும் வீரர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் ஆகும். முதற்கட்டமாகவே இந்த SLPLலிலிருந்து இரு வீரர்கள் உலககிண்ண T20 இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். துடுப்பாட்ட வீரர் டில்சான் முனவீரவும் பந்துவீச்சாளர் அகில தனன்சயவுமே அவர்கள்.
டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
டிஸ்கி: ஒரு சஞ்சிகைக்காக SLPL + இந்த திறமையான வீரர்களை சேர்த்து எழுதியிருந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இந்த வீரர்களின் பகுதியை வெட்டி இங்கே பதிகிறேன். SLPL தொடர்பான அந்த பதிவு பொட்டலத்தில் பிறகு பதிவேற்றப்படும்
Dilshan Munaweera
Dilshan Munaweera
23வயதே ஆகும் இந்த வீரர் நடந்து முடிந்த SLPL தொடரில் கூடிய மொத்த ஓட்டங்களை குவித்தவீரராக இருக்கிறார். மத்தியுஸை விட ஒரு ஓட்டம் கூட எடுத்து 212ஓட்டங்களை இந்த போட்டி தொடரில் பெற்றிருக்கிறார். வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இலங்கை 19, 21 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியிருக்கிறார். SLPL முழுவதும் திறமையாக விளையாடிய இவர் இறுதிப்போட்டியில் மத்தியுஸின் NAGENNAHIRA NAGASவுடன் ஆட்டமிழக்காமல் வெறும் 23 பந்துகளில் பெற்ற 44ஓட்டங்கள் வெற்றியை டக்வத் லூயிஸ் முறை மூலமாக இவரது Uva Next அணிக்கு வழங்கியிருந்தது.
ஹெல்மெற்றுடன் இவர் துடுப்பை அந்தரத்தில் வைத்து பிடித்தபடியே துடுப்பெடுத்தாடும் அழகும் இவரது முகவெட்டும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ராம்நரேஷ் சர்வேனை பார்ப்பது போல ஓர் உணர்வை தருகிறது. அதிரடி வீரராக இருந்த போதிலும் Stylish ஆக அடித்து பந்துகளை Gapகளினூடாக placeசெய்யும் திறமை இவரை எதிர்காலத்திற்கான இலங்கை அணியில் நிரந்தர இடத்தை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. 7போட்டிகளில் 212ஓட்டங்களை 35என்ற சராசரியுடனும் 144ஓட்டவிகிதத்தில் இவர் SLPLல் பெற்றிருந்தார். T20 போட்டிகளில் இலங்கை சார்பாக டில்ஷானுடன் களமிறங்குவதற்கு பொருத்தமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் மஹேல ஜெயவர்ததனவே பெரும்பாலும் அந்தப்பணியியை செய்து வந்திருந்தாலும் இந்த உலககிண்ண போட்டிகளில் டில்ஷான் முனவீர அந்தப்பணியை செவ்வனே செய்வார் என இலங்கை கிரிக்கெற் சபை எதிர்பாக்கின்றது. நான் எழுதும்வரை (Sep15) இலங்கை விளையாடிய மேற்கிந்தியதீவுகள் இந்திய அணிகளிற்கிடையான Warm-up போட்டியில் இவர் முறையே 24, 03 ஒட்டங்களை பெற்றிருந்தார்.
Akila Dananjaya
வெறும் 18வயதுடைய SLPLஐ தவிர வேற முதல்தரப்போட்டிகளிலேயே கலந்து கொள்ளாத இவர் தற்போது T20 உலககிண்ண இலங்கை அணியில். இவர் திடீரென வயம்ப அணிக்காக SLPLல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது பல சலசலப்புகள் எழுந்திருந்தன. இரண்டு கேள்விகள் பொதுவாக இவர் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒன்று, முதல்தரப்போட்டிகளிலேயே விளையாடாத இவர் எவ்வாறு இந்தப்பெரிய்ய போட்டிக்கான அணியில் வந்தார். இரண்டாவது திறமையானவர் எனின் ஏன் அப்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லவில்லை. இந்தக்குழப்பங்கள் ஆரம்ப்பத்தில் பலருக்கும் இருந்தாலும் பின்னர் அனைத்தும் தெளிவாக்கப்ட்டது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் Juneல் மேற்கொண்ட சுற்றுலாவில் இலங்கைக்கு மரண பயத்தை கொடுக்க கூடியவர் என பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் சயிட்அஜ்மால் இனங்காணப்பட்டிருந்தார். அஜ்மாலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அவர் மாதிரி பந்துவீசக்கூடியவர்களை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அழைத்து இலங்கை அணியின் பயிற்சிகளின் போது பந்துவீச சொல்லியிருந்தார்கள் அங்கே இவரது பற்துவீச்சு இலங்கை அணி தலைவர் மஹேலஜெயவர்த்தனவிற்கும் சங்கக்காரவிற்கும் எதிர்கொள்ள சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. பயிற்சிகளின்போது இவரது சிறப்பான பெறுபேற்றை பார்த்து இவர் மஹேலவினால் வயம்ப அணிக்கு அழைத்துவரப்பட்டார். இலங்கைக்காக 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவுஸ்திரேலியா செல்வதிலும் இங்கே தனது அணியில் SLPLல் விளையாடுவதில் மஹேல விரும்பியதனாலேயே அகில தனன்சய வயம்ப அணிக்காக விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.
பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் உள்ளே நுழைந்தார் என்று சிலரால் சந்தேகிக்கப்ட இவர் SLPLல் விளையாடிய போட்டிகளில் காட்டிய திறமையின் பின்னர் தன்னை சந்தேகித்தோரை வாயடைக்கச் செய்தார். பல விதமான பந்துவீச்சு வகைகளை வீசக்கூடியவரான இந்த வலது கை சுழல் பந்துவீச்சாளர் போட்டியின் நிலைகளை கருத்தில் கொண்டு தந்திரமாகவும் பந்துவீசக்கூடியவராக இருப்பது இவரின் மிகப்பலமாக கருதப்படுகிறது. SLPL தொடர் முழுவதும் சிறப்பாக பிரகாசித்த இவர் றுகுண றோயல்ஸ் அணியுடனா போட்டி தவர்த்து (இதில் 3ஓவர்களில் 37ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்) அனைத்து போட்டிகளில் சொற்ப ஓட்டங்களையே விட்டுக்கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தியுமிருந்தார். 6 போட்டிகளில் 9 விக்கெட்களை சரித்த இவர் வெறும் 6.36 என்ற ஓட்டவீதத்திலேயே ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
இலங்கையின் Mystery பந்துவீச்சாளரென முன்பு அறியப்பட்ட அஜந்த மெண்டிஸ் போலவே இவரையும் பலர் கருதுகின்றபோதிலும் மிகச்சிறிய வயதில் சர்வதேச போட்டியில் அதுவும் உலக T20 போட்டிகளில் இவரால் சாதிக்கமுடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறபோதிலும் சர்வதேச போட்டி அனுபவம் ஒன்று கூட இல்லாமல் முக்கிய போட்டியில் கழமிறங்குவது கொஞ்சம் கடினமான விடயம்தான். அத்தோடு இவர் இந்த முக்கிய போட்டியில் சொதப்புமிடத்து இவரது எதிர்காலத்துக்கு அது ஒரு பிழையான அடித்தளமாக கூட அமைந்துவிடலாம். மிகச்சிறிய வயதில் இவரை சர்வதேச போட்டிகளின் அனுபவம் வழங்காது இவரை பாழாக்கிவிடப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை மேற்கிந்தியதீவுகளிடையேயான முதலாவது Warm-up போட்டியில் 3ஓவர்களில் 17ஓட்டங்களை கொடுத்திருந்தார் இவர். இந்தியாவுடனான 2வது போட்டியில் இவர் விளையாடவில்லை. ஒரு காலப்பகுதியில் தனது மாயப்பந்து வீச்சுக்களால் பலரையும் வீழ்த்திய அஜந்த மெண்டிஸிற்க்கு பிற் காலத்தில் நடந்தது போல இவருக்கும் நடக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
IPL-2012ல் பிடித்த வீரர்கள்-V (Cameron White)
சில வீரர்கள் மேல் இருக்கும் மதிப்பு மரியாதை அவர்களின் சில attitudeகளால் அல்லது தொடர்ச்சியான சறுக்கும் பெறுபேறுகளால் சிலவேளைகளில் அவர்கள் மேல் ஒரு வெறுப்பாக மாறிவிடுவதுண்டு. Australia அணியில் சகலதுறை வீரராக அறிமுகமான Cameron White எனக்கு ரொம்ப பிடித்தவீரரில் ஒருவராக அந்தக்காலத்தில் இருந்திருந்தார். பின்னர் தொடர்ச்சியான இவரின் மோசமான பெறுபேறுகளால் இவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் இவர் மேல் வைத்திருந்த மதிப்பு மிகவும் வெறுப்பாக மாறியிருந்தது.
உலககிண்ண போட்டிகளில் இவரின் மோசமான பெறுபேறுகளால் (உலககிண்ண போட்டிகளில் 22*ஏ இவரது கூடிய ஓட்டமாக இருந்தது) ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட White 2011 Januaryல் Michael Clarke T20இலிருந்து ஓய்வுபெற்றபின் பெற்ற T20 அணித்தலைவர் பொறுப்பை இந்தவருடம் 2012 Januaryவரை தக்கவைத்திருந்தார். உண்மையில் இவர் இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவர்கள் நாட்டிலேயே 2011 Octoberல் இரு T20 போட்டிகளுக்கு தலமை தாங்கி 28, 39 என்று low scoring போட்டிகளில் நல்ல ஓட்டப்பெறுதியை பெற்றிருந்தார்.
ஆயினும் இவர் தலமை தாங்கிய 6 T20 போட்டிகளில் 2வெற்றிகளை மட்டுமே Australia பெற்றிருந்தது. அதோடு Australia உள்ளுர் T20 போட்டியான Big Bashல் Melbourne Starsக்காக விளையாடிய இவர் 8 போட்டிகளில் வெறும் 55ஓட்டங்களையே பெற்றிருந்தார். அதோடு அண்மைய போட்டிகளிலும் Victoriaக்காகவும் ஒரு 50 ஓட்டங்களை கூட இவரால் எடுக்க முடியவில்லை. இப்படியான காரணங்களுக்காக இவர் T20 போட்டியில் தலமைப்பதவி பறிக்கப்பட்டது மட்டுமில்லாது அணியை விட்டே வெளியேயும் அனுப்பப்பட்டார்.
இப்படியாக IPLதொடங்கும்போதே போதிய self confident இல்லாமேலே போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டியதாக இருந்தது இவருக்கு. முதலாவது போட்டியில் சங்கக்கார இலங்கையில் இருந்தமையால் முதல் போட்டியில் தலைவராக சென்னையுடன் மோசமாக தோத்தனர். தனது பங்கிற்கு 23(16) இவர் எடுத்தார். 2வது போட்டியில் 30*(22) எடுத்தார். ஒரு பவர் ஹிட்டராக அறியப்பட்ட இவர்மேல் போதிய நம்பிக்கை இல்லாமல் அடுத்த 2போட்டிகளுக்கும் அணியை விட்டு கழற்றி விடப்பட்டார். பின்னர் எல்லாப்போட்டிகளும் விளையாடிய இவர் சங்கக்காரவின் மோசமான formகாரணமாக அவர் அணியை விட்டு தானாக ஒதுங்கிய போட்டிகளிலெல்லாம் தலைமைத்துவ பொறுப்பை கையிலெடுத்ததுடன் பெரும்பாலான போட்டிகளில் அபாரமான திறமையை கனக்க காலத்தின் பின்னர் வெளிப்படுத்த தொடங்கினார்.
நாலைஞ்சு பந்துகளை மெதுவாக விளைாடி கொஞ்சம் eye எடுத்தப்பிறகே அடித்து நொருக்கும் பவர் ஹிட்டர் வகையராவைச்சேர்ந்த இவர் அடிகள் வழமாக பிடிக்க தொடங்கினால் எதிரணி பந்துவீச்சாளருக்கு அலுப்பை கொடுக்க கூடியவர். இந்த IPL போட்டிகளில் ஒரு 45 ஓட்டங்களுடன் ஐந்து முறை 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளார் இவர். Points table கடைசி இடத்தை பிடித்திருக்கும் இந்த அணியில் 2போட்டிகளில் வெல்ல இவரது பங்கு மிக முக்கியமாக இருந்திருக்கிறது.
இந்த வருடம் உலககிண்ண T20 போட்டிகள் இலங்கையில் நடக்குவுள்ள நிலையில் Australia தேசிய அணியில் அனைத்துவிதமான போட்டிகளிலும் கழற்றிவிடப்பட்ட இவர். இந்திய மைதானத்தில் இப்போட்டிகளில் காட்டும் சிறந்த பெறுபேறுகாரணமாக மீண்டும் T20 அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கும் பலரில் நானும் ஒருவராக இப்போது இருக்கிறேன். June12 தொடங்கவுள்ள இங்கிலாந்து உள்ளுர் T20 போட்டியான Friends Lifeல் Northamptonshire அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள இவர் அதிலும் திறமையை காட்டும் பட்சத்தில் தேசிய அணியில் இடம் உறுதியாக கிடைக்குமென நம்பலாம்.
Decan Chargers சார்பாக Dawanக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டத்தை பெற்றவராக வைட் இருக்கிறார். அதோடு இந்த வருட போட்டிகளில் Gayleக்கு அடுத்தபடியாக 20Sixesஉடன் கூடுதலான Sixஅடித்தோர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.
IPL-2012ல் பிடித்த வீரர்கள்-IV (Chris Gayle)
சிலபேரை கிறிக்கெற்றில பிடிக்குமா பிடிக்காதோ என்று தெரியாம இருக்கும் அப்பிடி ஒரு வகையறாதான் இந்த கிறிஸ்கெயில். ஒரு foot movement Styleஆன பற்றிங் என்றில்லாமல் பற்றை அந்தரத்தில் பிடித்தபடி இவர் முழங்கும் முழக்கங்கள் இவரின்மேல் பிடிப்பும் அதே போல் ஒரு ஈவிரங்கமின்றி சாத்துறாரே என்று ஒருவித வெறுப்பும் எழ காரணமாக இருக்கிறார் Jamaicaவின் பயங்கர மனிதர்.
இலங்கையில் ஒரு கொஞ்சக்காலமா கிறீஸ் மனிதர்கள் என்று பயங்கர பீதி கிழப்பப்பட்டதல்லவா. அந்த கிறீஸ் மனிதன் எப்பிடியிருப்பான் எண்டதுக்கு உதாரணமா இவரின்ர உருவத்த சொல்லலாம். கறுத்த உயரமான ஆக்ரோசமான உடல்வாகு நட்டுவக்காலிகள் தலையை சுத்தி இருக்கிறமாதிரி தலையிழுப்பு.
வழமைமாதிரி இவரப்பற்றி நீட்டி முழங்கி எழுத தேவையில்லை மேல போட்ட படமே எல்லாத்தையும் சொல்கிறது. இவர் பற்றோட Groundக்க நிக்கிற வரை bowling teamக்கு தொடர்ச்சியா வயித்த கலக்கியபடிதான். IVவது பாகத்தில இன்னொரு வீரரை பற்றிதான் எழுத வெளிக்கிட்டனான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் Chris Gayle டெல்லியில 13sixersஓட 62bowlல 128அடிச்சு ஒரு பட்டாசு கடையில நெருப்பு போட்ட உணர்வை தந்திருந்தார். அதுக்கு பிறகுதான் இவர முதல்ல போட யோசனை வந்திச்சு!
IPL-2012ல் பிடித்த வீரர்கள்-III (AB De Villiers)
AB De Villiers
இப்போது மிகவும் வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளை பார்ப்போருக்கு இந்த தலைசிறந்த வீரர் அறிமுகமான காலத்திலிருந்து இவரின் அபரிமிதமான வளர்ச்சிகள் ஒன்றும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் இவர் இதுவரை செய்த சாதனைகளை தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் இந்த 2012 IPL போட்டிகளில் இவரது துடுப்பாட்டத்தை பார்த்து புகழாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
உண்மையில் எந்தப்பெரிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் Short Format போட்டிகளில் பெரும்பாலும் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடும்போதுதான் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்படுகிறார்கள் பாராட்டப்படுகிறார்கள். ஆஹா ஓஹோ எண்டு தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்கள். பெரிதளவு இப்படியான Limited Overs போட்டிகளில்தான் ரசிகர்கள் கூடுதலாக லயித்துப்போயிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அடிப்படை காரணம். அப்பிடி அனைத்துவிதமான போட்டிகளிலும் சாதித்து காட்டிக்கொண்டிருப்பவர்தான் இந்த ஏபி.டி.வில்லியர்ஸ்.
உண்மையில் எந்தப்பெரிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் Short Format போட்டிகளில் பெரும்பாலும் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடும்போதுதான் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்படுகிறார்கள் பாராட்டப்படுகிறார்கள். ஆஹா ஓஹோ எண்டு தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்கள். பெரிதளவு இப்படியான Limited Overs போட்டிகளில்தான் ரசிகர்கள் கூடுதலாக லயித்துப்போயிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அடிப்படை காரணம். அப்பிடி அனைத்துவிதமான போட்டிகளிலும் சாதித்து காட்டிக்கொண்டிருப்பவர்தான் இந்த ஏபி.டி.வில்லியர்ஸ்.
உலககிண்ண போட்டிகளின் பின்னர் Graeme Smith ODI போட்டிகளின் தலமைப்பொறுப்புகளிலிருந்து விலகிய பின்னரும் John Botha T20 அணித்த லமையிலிருந்து தூக்கப்பட்டபின்னரும் AB.De.Villersக்கு தலமைத்துவ வாய்ப்பு 2011 June அளவில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் T20 போட்டிகளில் கையில் ஏற்பட்ட காரணத்தால் விளையாடமுடியாத காரணத்தால் தனது முதலாவது முழுநேர தலைமைத்துவாய்ப்புக்கு இலங்கை தொடர்வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. தலமைப்பொறுப்பில் இதுவரை இவர் விளையாடிய இலங்கை, நியுஸிலாந்துக்கெதிராக 2ஒருநாள் போட்டிதொடர் நியுஸிலாந்துக்கெதிராக T20 போட்டிதொடர் என்று அனைத்தையும் வென்றுள்ளார்.
அதற்கு மேலதிகமாக இந்தாண்டிலே வெறும் 8ஒருநாள் போட்டிகளில் 475ஓட்டங்களை 158.33என்ற ஓட்டசராசரியுடனும் 116என்று Strikerateலயும் பெற்றிருக்கிறார். இதைப்போலவே டெஸ்ட்டிலும் 4 போட்டிகளில் 378ஓட்டங்களை 75என்ற சராசரியில் பெற்றிருக்கிறார். இவரது இந்த ஆண்டின் இந்த கடும் போம்தான் IPLலிலும் தொடர்கிறது என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
Royal Challengers Bangalore பெரும்பாலான வெற்றிகளுக்கு கெயில்தான் காரணமாக இருந்துவிட்டிருந்தாலும் சில வெல்லவே முடியாது என கருதப்பட்ட போட்டிகளை கடைசி நேரத்தில் வந்து RCBபக்கம் மாற்றிய பெருமை De Villiersக்கு உண்டு. பெங்களுர் அணியில் இருப்போரின் திறமையை வைத்து பார்க்கும்போது இவ்அணி இலகுவில் playoffsக்கு சென்றிருக்கவேண்டும் என எதிர்பார்த்தாலும் அணித்தலைவராக முதல் 9போட்டிகள் வரை இருந்த Daniel Vettoriன் மோசமான தலமைத்துவமும் வெறும் ஓட்டங்களை மட்டும் கட்டுப்படுத்திய விக்கெட்டுக்களை பெரிதாக எடுக்காதா பந்துவீச்சு பெறுபேறுகளும்தான் இவர்களின் சறுக்கல்களுக்கு காரணமாக அமைந்திருந்தது.
விற்றோரி விளையாடிய 9போட்டிகளில் சிறந்த பெறுபேறாக 4Oversல் 20/1தான் இருக்கிறது. பெரிதாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளராக இருந்தாலும் RCBன் Strike bowler Zaheer Khanன் Bad formமும் இந்த அணிக்கு விக்கெட்களை கொய்யக்கூடிய பந்துவீச்சாளரின் அவசியத்தை உணர்த்தியிருந்தது. எனது Facebookன் Status ஊடாகவும் இந்த மனக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அடித்தட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கே முரளிதரனின் வருகையின் தேவை உணரப்பட்ட நிலையில் May02 போட்டிக்கு பின் கடைசி 3போட்டிகளிலும் விற்றோரி அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு முரளிதரன் உள்ளே கொணரப்பட்டார். விற்றோரியைவிட உண்மையில் முரளி ஒரு genuine wicket taking bowler, சில நேரங்களில் கூடுதலாக ஓட்டங்களை கொடுத்தாலும் விக்ககெட்டுக்கள்தான் இவரது தீனி. எனவே அணியில் இவரின் வருகையால் அணி கடைசி 3போட்டிகளிலும் அபார வெற்றியீட்டியது.
இந்த வருட IPLல் கூடுதலான strike rate பெற்றொரில் 173என்ற பாரிய ஓட்டவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார் AB De Villiers. இந்தவருட போட்டிகளிலும் கெயில் ஓட்டங்களை மழைபோல பொழிந்துகொண்டிருந்தாலும். கெயிலில் காண முடியாத ஒரு style perfection class batting AB De Villiersல் பாக்கமுடியும். கெயில் ஒரு Power Hitter ஆனால் இவர் intelligent புத்திசாலித்தனமான துடுப்பாட்டவீரர். Royal Challengers Bangaloreன் விக்கெட்காப்பாளரும் இவர்தான்.
இந்தவருட IPLன் 5வது டெல்லிக்கெதிரான போட்டியில் 64*(42) ஓட்டத்தை பெற்று ManOftheMatch(MOM) விருதையும் பெற்று வெற்றிபெற காரணமாக இருந்தார். பின்னர் Puneக்கெதிரான 21வது போட்டியில் வெற்றிபெறவே முடியாது என்ற நிலையிலிருந்து 33*(14) அடித்து அதிலும் RCB வெற்றிபெற முக்கிய காரணமாயிருந்தார். ராஜஸ்தானுக்கெதிரான 30வது போட்டியில் இறுதி நேரத்தில் வந்து கோரத்தாண்டவம் ஆடி 59*(23) எடுத்து MOMவிருதுடன் போட்டியை வெல்ல காரணமானார். 50வது டெக்கனுடனான போட்டியில் Dale Steynக்கு சாத்து சாத்தெண்டு சாத்தி வெல்ல கஸ்டமென கருதப்பட்ட போட்டியை 47*(17) ஓட்டமெடுத்து MOMஉடன் வென்றுகொடுத்தார் இந்த AB De Villiers.
இவரது scoopஅடிகளும் இலகுவாக gapகளில் place பண்ணும் அழகும் அலாதியாக தூக்கி 6ஓட்டத்துக்கு அனுப்பும் நேர்த்தியும் அண்மைக்காலத்தில் வேறு ஒரு துடுப்பாட்ட வீரரிடமும் காணமுடியாத திறமை. நீங்கள் எந்த அணி ரசிகனாக இருந்தாலும் இவரது துடுப்பாட்ட ரசிகனாகத்தான் இருப்பீர்கள். இந்த IPLல் இவரது Batting order பலநேரங்களில் சர்ச்சைக்குரியதாக பட்டாலும் அது தனக்கு ஏற்றதுபோல மாற்றி அமைப்பதுதான் இவரது பலம். பலமுக்கிய தருணங்களில் Sourav Thiwary முன்னே சென்று ஆட்டத்தை இன்னும் இறுக்கமாக்குவதால் ஏன் AB.De எப்போதும் முன்னே செல்லக்கூடாது என்ற கேள்வி இன்னமும் எழுப்பப்பட்டவாறே உள்ளது.
IPL-2012ல் பிடித்த வீரர்கள்-II (Sunil Narine)
Sunil Narine
இப்பிடியொரு Mystery bowler இருக்கிறார், வரும் காலத்தில் இவர் மற்ற அணிகளுக்கு தலையிடியாக இருக்ப்போகிறார் என்று தெரியவந்தது 2011Champions League T20 போட்டிகளின் போதுதான். மேற்கிந்திய தீவுகளின் Trinidad and Tobago அணிக்காக விளையாடிய இவர் அந்த போட்டிகளிவ் மிகவும் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுக்களை அதிகளவில் கொய்திருந்தார். தேங்காய்க்கு பொச்சு இருக்கிறதுபோல இவர் தனது தலைமயிரை முன்னுக்கிருந்து பின்னுக்கு முடியும்வரை கூராக நடுவாக வெட்டியிருப்பது இவரின் தனிப்பாணி. விரைவில் இந்த ஸ்டயிலும் பிரபலமாகும் இருந்து பாருங்கள்.
Off spinner ஆன இவர் முதலில் இந்தியாவிற்கெதிராக அம்மண்ணிலேயே 3வது ஒருநாள் போட்டிக்காக மேற்கிந்தியதீவுகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டார் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்த மேற்கிந்தியதீவுகள் 10ஓவர்களில் 34ற்கு 2விக்கெட்டுகள் எடுத்திருந்த இவரது பெறுபேற்றுடன் அந்த போட்டியில் வெற்றியடைந்தது. அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த நாட்டில் ODI series சமப்படுத்த இவரது பந்துவீச்சு முக்கியமாக இருந்தது. 5போட்டிகளில் 11இலக்குகளை சரித்திருந்தார் இவர். இந்த அவுஸ்திரேலியா போட்டிக்கு முதலே IPL ஏலத்தில் 700,000$க்கு எடுக்கப்பட்டிருந்தார் சுனில் நரய்ன்.
Kolkata Knight Ridersற்காக விளையாடிவரும் இவர் டெல்லிக்கெதிரான முதல் போட்டியிலும் பெங்களுர் றோயல் சலேஞ்சர்சிற்கெதிராக மூன்றாவது போட்டியிலும் விளையாடவில்லை. டெக்கனுக்கு எதிரான ஒரு போட்டி மழையால் தொடங்கவேயில்லை. So இன்றுவரை மொத்தமாக சுனில் நரைய்ன் விளையாடிய 9 போட்டிகளில் 15விக்கெட்களை 5.30 என்ற நல்ல economy rateல் சாய்த்துள்ளார் இவர். இந்த வருட IPLல் சிறந்த econmy பந்தவீச்சாளர்களில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்தவருட போட்டிகளில் கொல்கத்தா சிறப்பாக செயற்படுவது துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீரினதும் பந்துவீச்சில் சுனில் நரய்னின்னதும் சிறப்பு பெறுபேறுகளும்தான் காரணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. அணிக்காக ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரங்களில் வந்து சிற்பாக பந்துவீசுவதில்தான் மலிங்கவுக்கு அடுத்ததாக சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் இவர். எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும் பெரிய்ய ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றியைக்கொண்டாடும் சுனில் நரய்னில் எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் ஈர்ப்பு வந்திருக்குமெனபதில் எந்தவொரு ஐயமுமில்லை.
இவரது இந்த அடக்கத்தை Facebookல் கீழ்வரும் status மூலம் குறிப்பிட்டிருந்தேன்.
எவ்வளவு சூப்பரா Bowl பண்ணினாலும் தான் Teamலயே விளையாடத Substitute என்கிற மாதிரி அடக்கமா இருக்கிற Sunil Narineனுக்கு தொப்பி கழற்றி (Hats off) வாழ்த்துக்கள்!
இலங்கையின் இன்னொரு Mystery பந்துவீச்சாளர் என ஆரம்பத்தில் அறியப்பட்ட அஜந்த மெண்டிசின் பந்துவிச்சுக்கள் காலம் செல்ல செல்ல ஆசிய அணிகளால் இலகுவாக கணிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டு அவரது இடமே அணியில் நிரந்தரமில்லாது போனது போல இந்த இளம் பந்துவீச்சாளருக்கும் எதிர்காலத்தில் நிகழாவிடில் மகிழ்ச்சியே.
இவரது கட்டுக்கோப்பான சிக்கனமான பந்துவீச்சு திறமையால் கொல்கத்தா அணித்தலைவர் கௌதம் கம்பீர் இவரை களத்தடுப்பு கட்டுப்பாடு உள்ள (Fielding restriction) உள்ள முதல்6 ஓவர்களில் ஒரு அல்லது இரு ஓவர்களையும், பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் பயப்படும் இறுதி ஓவர்களிலும் பந்துவீச பயன்படுத்துகிறார். இவரும் அணித்தலைவரின் விருப்பத்தை முழுவதுமாக பூர்த்தி செய்கிறார். இறுதிஓவர்களில் ஓரிரு 4, 6 ஓட்டங்கள் போனாலும் விக்கெட்களை உடனடியாக விழுத்தி அவர்களை கட்டுக்கு கொண்டுவருவதில் சுனில் நரைன் கெட்டிக்காரர்.
சடுதியாக திரும்பக்கூடிய பந்துகளை வீசுவதிலும் சுழல் பந்துவீச்செனினும் 90km/h - 95km/h வரையான வேகமான மாற்றங்களுடனான பந்துகளை வீசுவதிலும் இவர் சிறப்பானவர். இவர் பெரும்பாலும் தனது பந்துவீச்சை ஆக்ரோசமாக எதிர்கொள்வோருக்கு வேகமாக பந்துவீசுவதிலும் வெட்டக்கூடிய spinning பந்துகளை வீசதான் விரும்புகிறார். தனது முதலாவது IPL போட்டிகளில் பங்கேற்கும் இவர் IPLன் இந்த வருடத்திற்கான Rising Star விருதைப்பெறக்கூடிய முக்கிய போட்டியாளர்.
IPL-2012ல் பிடித்த வீரர்கள்-I (Steven Smith)
இந்த தொடர் பதிவு இந்தவருடம் 2012ல் IPL சிறப்பாக செயற்பட்டுவரும் என்னை கவர்ந்த வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்களின் teamற்கான சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது. முதலாவது பாகத்தில் Pune Warriors Indiaன் வீரர் Steven Smithஐ பற்றி பார்ப்போம்.
Steven Smith
இவரை பெரும்பாலோனோருக்கு 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த T20 உலகக்கிண்ணபோட்டிகளிலே பெரிதாக தெரியவந்திருக்கும். All rounder ஆக அறிமுகமான இவர் அந்த போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்திருந்தார். கிட்த்தட்ட Shane Warneஐ போன்ற பந்துவீச்சுப்பாணியை கொண்ட இவர் பற்றிங் பண்ணும் பாணியும் கொஞ்சம் வித்தியாசமானது. பற்றை நிலத்தில் ஊன்றாமல் அந்தரத்தில் வைத்து காற்றடிப்பது போல மேலும் கீழும் அசைத்தபடி துடுப்பெடுத்தாடும் unorthodexபாணியிலான துடப்பாட்டம். நன்றாக களத்தடுப்பினால் இவர் அணியை நன்றாக Active ஆக வைக்ககூடியவர். T20ல் அறிமுகமாகி ODI போட்டிகளிலும் Australia அணிக்காக ஆடத்தொடங்கிய இவர் குறைந்த காலத்திலேயே Test போட்டிகளிலும் விளையாட தொடங்கினார். மிகவும் இளவயதிலேயே இவரை கூடுதலான எதிர்பார்ப்போடு எடுத்து இவரது careerஐ வீணாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் இருந்து வருகிறது.
பலரால் விரும்பப்பட்ட விரராக இருந்தாலும் All rounder என்ற பெயரில் fielding மட்டுமே உருப்படியாக செய்து கொண்டு batting, bowling இரண்டிலும் போதிய consistentஇல்லாது சறுக்கியபடி இருந்தமையால், ஏன் இவர் Australian teamல இன்னும் இருக்கிறார் என்ற சந்தேகம் என்னைப்போல் பலரக்கும் ஏற்பட்டது. முக்கியமாக இங்கிலாந்து எதிரான 2010-2011 Ashes Seriesல் வாய்ப்புக்கிடைத்த மூன்று போட்டிகளிலும் சறுக்கி Ashes கிண்ணம் இங்கிலாந்து பக்கம் போக ஒரு காரணமாக இவரும் இருந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியான இவரின் சறுக்கல்களால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து அணியில் தூக்கப்பட்ட இவர் பின்னர் T20, ODIல இருந்து தென்னாபிரிக்கா சுற்றுலாவின் பின் நீக்கப்பட்டார்.
2011ன் இறுதியளவில் Australia உள்ளுர் போட்டியான BIG BASHல் சூப்பர் என்று சொல்லாவிடினும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியிருந்த Steven Smithஐ Pune Warriorsல் தெரிவு செய்தமை என்னை பொறுத்தவரை ஆச்சரியமாகத்தான் இருந்தது. தேசிய அணியிலேயே இடம் கிடைக்காத ஒருவரை மினக்கெட்டு overseas வீரராக தெரிவது ஏன் என்று சரியாக புலப்படவில்லை. உண்மையில் ஸ்டீபன் ஸ்மித் திறமையானவர் என்றாலும் தொடர்ச்சியான சறுக்கல்கள்தான் பலருக்கும் அவரின் மேலான நம்பிக்கை தளர்ந்துபோக காரணமாயிருந்தது.
ஆனால் IPLல் தான் விளையாடிய மும்பைக்கெதிரான முதல் போட்டியிலேயே 39ஓட்டங்கள் (low scoring game) எடுத்து Man of the Match ஆகி அணியில் தனது தெரிவுக்கான தேவையை உறுதிப்படுத்தினார். என்னைப்போல அவரை ஜோக்கர் போல பார்த்த பலருக்கும் மூஞ்சையில் கரியப்பூசினார். இவரது சிறிய கண்ணும் கொஞ்சம் கொழுகொழுப்பான உடலமைப்பும் முள்ளுமுள்ளுப்போன்ற தலையும் ஒரு ஜோக்கர் போன்ற ஒரு தோற்றத்தையே பாக்கிறவர்களுக்கு ஏற்படுத்தினாலும் இப்போது இவரின் ரசிகனாக மாறியவர்களில் நானும் ஒருவானாகிறேன்.
IPLல் பெரும்பாலும் 4வது இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து கடைசி நேரங்களில் அணிக்கு தேவையான ஓட்டங்களை அதிரடியாக குவித்து வந்தார். Kings XI Punjabற்கெதிராக 25(12), CSKஎதிராக 44*(22) Delhi எதிராக 34*(13) Decanஎதிராக 26(13), 47*(27) என்று புகுந்து அதிரடி அராஜகம் செய்திருந்தார். இவரது தொடர்ச்சியான கடும் போம் காரணமாக 4வது இலக்க துடுப்பாட்டத்திலிருந்து 2வதாக கடைசி 3போட்டிகளில் உயர்த்தப்பட்டார். அதில் முதல் போட்டியில் 47 எடுத்தாலும் கடைசி இரண்டிலும் 2, 14என்று சறுக்கியிருந்தார்.
இவரது பங்கு துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது களத்தடுப்பு, அணியை துவண்டு விடாமல் inspireபண்ணுவதிலும் முக்கியமாக இருக்கிறது. இவர் பந்துவீசக்கூடியவராக இருந்தும் அணித்தலைவர் கங்கூலி இவருக்கு இதுவரை பந்துவீச வாயப்பு வழங்காதது பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது. நல்ல போமில் இருக்கும் இவர் வாய்ப்பு வழங்கப்பட்டால் bowlingலயும் கலக்குவார் என்பது என்னைப்போல இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாயிருக்கிறது.
சனிக்கிழமை கொல்கத்தாவுடனான போட்டியில் இவரது களத்தடுப்பு இவர் என்ன சூப்பர்Mana என்று commentators மற்றும் பார்வையாளர்கள் கேட்குமளவிற்கு இருந்தது. 6 ஓட்மென்று கருதப்பட்ட பந்தை அலேக்காக வானில் பாய்ந்து தனது கைகளுக்குள் அகப்படுத்தி கொண்டாலும், தான் எல்லைக்கோட்டை கடந்து செல்லக்கூடிய வாய்ப்பிருந்தமையால் அதை அப்படியே உள்ளே எறிந்து அந்த 6ஓட்டத்தை 2ஓட்டமாக்கயிருந்தார். அந்தப்போட்டியை பார்த்தவர்களுக்கு அது என்னதொரு brilliant attempt எண்டு தெரிந்திருக்கும். கையை தேய்த்து தேய்த்து வாயால் கையை ஊதி ஊதி களத்தடுப்பில் ஈடுபடும் இவரது பாங்கு அற்புதமாயிருக்கும்.
இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை IPLலிலும் மீண்டும் Australia அணியில் விரைவிலும் பார்ப்போம். இந்த வருட IPLல் என்னைக்கவர்ந்தோரில் இவர் முக்கியமான இடத்திலுள்ளார்.
Steven Smith's அந்த அற்புதமான fieldingஐ பார்க்க..
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew
தினகரன் பத்திரிகையால் சுடப்பட்ட எனது பதிவு!
போன வாரம் எனது தளத்தில் "உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்" எனும் தலைப்பில் பிரசுரித்த பதிவொன்று (பேட்டியொன்று) அப்படியே அச்சொட்டாக களவாடப்பட்டு, ஒரு அறிவறுத்தலும் எனக்கு தரப்படாது நேற்று 2011 Augus 11ல் ”தினகரன்” பத்திரிகையில் ஒரு பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. (அடுத்த பகுதி எப்போதோ தெரியவில்லை. தொடரும் என்று போடப்படிருந்தது). உண்மையில் அந்த பதிவை, தர்ஜினி என்னும் திறமை மிக்க தமிழ் வீராங்கனையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பதிந்திருந்தேன். உண்மையில் அதை மீள தினகரன் பத்திரிகையில் பிரசுரித்தமை நல்ல ஒரு விடயம்தான்.
தினகரன் பத்திரிகையில் மீள் பிரசுரமாக்கப்பட்ட எனது பதிவு! படத்தின் இடதுகை கீழ் மூலையில் ”View Full Image” பகுதியை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். புதிதாக தோன்றும் சிறிய Windowஐ வலது மேல் மூலையில் "X" கிளிக்கியோ இல்லது scroll செய்து எனது தளத்தை மெதுவாக press செய்தோ பழைய viewற்கு வாருங்கள்.

எனினும் அந்த பதிவை கஸ்டப்பட்டு இட்ட உரிமையாளரான எனக்கு ஒரு அறிவித்தல் கூட தராமல், நன்றி என்று கூட போடாமல் தாங்களே எடுத்தது போல் போடுவது ஊடகதர்மத்திற்கு உகந்ததோ என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் பல பதிவுகளை பதிவர்களாகிய நாங்கள் கஸ்டப்பட்டு போடும்போது, அவர்களிற்குரிய உரிய கௌரவம் தராது அப்படியே கொப்பி செய்து போடுவது எம்மை வருத்தத்திற்குள்ளாகும் செயல். நாங்கள் இதற்காக பொருளா பண்டமா கேட்கிறோம்? ஒரு மூலையிலாவது நன்றி என்றாவது எங்கள் பெயரையும் போடலாம்தானே! சரி அவ்வாறு கூட வேண்டாம் போட முதல் ஒரு வார்த்தையாவது e-mail மூலமாக சொல்லலாம்தானே! பத்திரிகை நண்பர்களே இனியாவது இதை கொஞ்சம் கவனியுங்கள்.
எனது அசல் ஆக்கம்
http://vidivu-carthi.blogspot.com/2011/08/netball.htmlதினகரன் பத்திரிகையால் சுடப்பட்டு வந்தது
பிற்சேர்க்கை: நேற்று இந்த தகவல் அறிந்ததும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களின் பிழையை தெரிவித்திருந்தேன். அதற்கு அவர்களின் பதில் வரவில்லை. ஆனால் இன்றைய பதிப்பில் (http://www.thinakaran.lk/jaffna/?id=06&tday=2011/08/16) மீதி பேட்டி வந்திருந்தது. அதில் நன்றி பொட்டலம் வலைப்பூ எனப்போடப்பட்டிருந்தது! இறுதியிலாவது அதன் மூலத்தை போட்டமை பராட்டுதற்குரியது. நன்றிகள்
உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்
நன்றி : இந்த பதிவு வருவதற்கு முதற்காரணியாக இருந்து நான் கேட்டவுடன் தர்ஜினி அக்காவுடன் தொடர்புகொண்டு, எனது கேள்விகளுக்கு பதில்களை பெற்று தட்டச்சி தந்த மதுரா அக்காவிற்கு எனது கோடான கோடி நன்றிகள். மதுரா அக்காவின் உதவியால் நான் நேரடியாக தொடர்பு கொண்டு மிகுதி கேள்விகளை கேட்ட போது சலிக்காமல் விளக்கமாக பதிலளித்தமைக்கும் வேண்டிய தகவல்களை தந்தமைக்கும் பதிவின் நாயகி தர்ஜினி அக்காவிற்கும் நன்றிகள்.
டிஸ்கி1: கீழே தரப்பட்ட பேட்டி தர்ஜினி அவர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையாக கொண்டே பதிவேற்றப்படுகிறது. பிழையான மேலதிக சேர்க்கைகள் இல்லை. இந்த பதிவிற்கு உதவி செய்த மதுரா அக்காவும் ஒரு சிறந்த வலைப்பந்து வீராங்கனை. தேசிய சாம்பியனாக வந்த, இலங்கை பல்கலைக்கழக தெரிவு அணியில் இடம்பெற்றிருந்த திறமைசாலி.
டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அபரிமிதமான திறமையுடைய சிறந்த வலைப்பந்தாட்ட (NetBall) வீராங்கனையான, அழுத்தமாக சொல்லப்போனால் தமிழ் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்களை பற்றி நாங்கள் அறிய வேண்டிய பல முக்கிய தகவல்களை, விடயங்களை சிறு கேள்வி பதில் பதிவின் மூலம் பொட்டலம் வலைத்தளம் தரமுயல்கிறது. இந்த பேட்டிக்கு செல்ல முன் அவர் தொடர்பான சில விபரங்களை பார்த்துவிடலாம்.
டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
----------------------------------------------------------------------------
திறமையுள்ள ஆனால் ஆர்ப்பாட்டமேயில்லாத இந்த வீராங்கனையை நீங்கள் வெள்ளவத்தையின் தெருக்கள் பலவற்றில் கண்டிருக்ககூடும். 2.06m உயரமான யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது கொழும்பில் வசிக்கும் இந்த வலைப்பந்து வீராங்கனை கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து 10ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற 13வது உலககிண்ண போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரிலும் உயரமானவராக விளங்கியதோடு மட்டுமல்லாது, பலம்பொருந்திய பெரிய அணிகளுக்கெல்லாம் பலத்த சவால் நிறைந்த Shooterஆக விளங்கினார். பல அணிகள் இவரின் shoot செய்யும் பலத்தை கட்டுப்படுத்த பல வித்தியாசமான முறைகளையெல்லாம் கையாள வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் அணி, றக்பி போட்டிகளில் கையாளப்படும் Lion Dance நுட்பத்தை (ஒரு வீரர் இன்னோர் வீரரை உயர்த்தி தூக்கி பிடிப்பத்தல்) ஒத்த ஒரு முறையை கையாண்டும் இறுதியில் தோல்வியை தழுவிருந்தது.
இவர் இந்த உலககிண்ண போட்டிகளில் இலங்கை விளையாடிய 6 போட்டிகளிலும் கலந்து கொண்டு, தான் முயற்சித்த(attempt) 297 pointsகளில் 7ஐ மட்டும் தவறவிட்டு 290pointsகளை (98%) பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த உலக கிண்ண போட்டிகளில் பங்குபெறுவதற்கான தகுதிகாண் போட்டியாக 2009ல் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டி இருந்தது. இதில் இலங்கை கிண்ணத்தை கைப்பற்ற இவரது பங்குதான் முதன்மையாக இருந்திருந்தது. அந்த போட்டிதொடரில் மொத்தமாக 380pointsகளை பெற்று இப்போட்டிகளில் அனைத்து அணிகளிலும் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொடுத்தவரில் முதல் இடத்தை பெற்றார். 2வது இடத்தை பெற்ற மலேசிய வீராங்கனை பெற்றது வெறும் 152புள்ளிகளே.
தமிழரான எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து கொண்டிருக்கும் சர்வதேச வலைப்பந்தாட்ட வீராங்கனையான உங்களை இணையத்தின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Q: உங்களது குடும்பம் ஊர் பற்றி சிறு அறிமுகத்தை தாருங்கள்?
நான் தர்சினி சிவலிங்கம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை என்பது எனது ஊர். அப்பாவின் தொழில் விவசாயம். அம்மா வீட்டுத்தலைவி. குடும்பத்தில் 6சகோதரர்கள் நாங்கள். 3 அண்ணாக்கள் ஒரு அக்கா ஒரு தம்பி.
Q: பாடசாலைக்கல்வியை எங்கே கற்றீர்கள்?
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில்.
Q: வலைப்பந்தாட்டம் மீதான உங்களின் ஆர்வம் எப்போது உருவானது?
பாடசாலை காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது.
தமிழரான எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து கொண்டிருக்கும் சர்வதேச வலைப்பந்தாட்ட வீராங்கனையான உங்களை இணையத்தின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Q: உங்களது குடும்பம் ஊர் பற்றி சிறு அறிமுகத்தை தாருங்கள்?
நான் தர்சினி சிவலிங்கம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை என்பது எனது ஊர். அப்பாவின் தொழில் விவசாயம். அம்மா வீட்டுத்தலைவி. குடும்பத்தில் 6சகோதரர்கள் நாங்கள். 3 அண்ணாக்கள் ஒரு அக்கா ஒரு தம்பி.
Q: பாடசாலைக்கல்வியை எங்கே கற்றீர்கள்?
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில்.
Q: வலைப்பந்தாட்டம் மீதான உங்களின் ஆர்வம் எப்போது உருவானது?
பாடசாலை காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது.
Q: நீங்கள் விளையாடிய காலத்தில் உங்கள் பாடசாலை அணி எந்தளவு தூரம்வரை சிறந்த வெற்றிகளை பெற்றிருந்தது?
எங்கள் அணி கோட்ட மட்டம் வரை சென்றிருந்தது. ஆனால் வெல்ல முடியவில்லை.
Q: பாடசாலை அணிக்கு தலைவியாக இருந்தீர்களா?
இல்லை. சாதாரண வீரராகவே விளையாடினேன். அப்போது கூடியளவு போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. அந்தக் காலம் பிரச்சனையான போர்ச்சூழல் நிறைந்த பாதைகள் பூட்டப்பட்ட காலப்பகுதியாக இருந்தமையால் எனது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன.
Q: பாடசாலைக்காலத்தில் ஒழுங்காக பயிற்சிகள் வழங்கப்படிருந்தனவா?
பெரிதாக இருக்கவில்லை.
Q: உங்களது பாடசாலைக்காலத்தில் யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இருந்ததா? அதில் பங்கு பற்றியிருந்தீர்களா?
30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கின்றது. ஆனால் அவர்களால் கூட என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.
Q: பாடசாலைக்காலத்தில் ஒழுங்காக பயிற்சிகள் வழங்கப்படிருந்தனவா?
பெரிதாக இருக்கவில்லை.
Q: உங்களது பாடசாலைக்காலத்தில் யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இருந்ததா? அதில் பங்கு பற்றியிருந்தீர்களா?
30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கின்றது. ஆனால் அவர்களால் கூட என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.
Q: பாடசாலைக்காலத்தில் நீங்கள் விளையாடும் போது எதிர்காலத்தில் இப்படி ஒரு பெரிய வீராங்கனையாக வருவீர்கள் என்று உங்கள் பெறுபேறுகளை கொண்டு எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லாவிடினும், என்னால் மற்றவர்களை விட இலகுவாக சில இலக்குகளை எட்ட முடிவதுண்டு உதாரணமாக உயரம் பாய்தல், ஆனாலும் தகுந்த பயிற்சி, பாதுகாப்பு இல்லாமல் துணிந்து விளையாட்டுகளில் நான் ஈடுபடவில்லை. காரணம் நான் அப்போது தான் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தேன், என் எலும்புகளுக்கு பலமான பாதுகாப்பு தேவைப்பட்டது.
Q: உங்களை இவ்வாறு உருவாக்கியதில் முதன்மையானவர்கள் யார் யார்?
பெற்றார், சகோதரர்களை தவிர உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் என்னை முதன்மைப்படுத்தி ஊக்குவித்ததுண்டு. தேசியஅணியில் இடம்பெற்ற காலத்தில், எனது வேலை தளத்தில் இருந்த பயிற்றுனர் விசேடமாக. மற்றும் அவ்வப்போது தேசிய அணியின் பயிற்றுனர்களாக இருந்த அனைவரையும் என்னால் நினைவு படுத்த முடியும். முக்கியமாக என்னை பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு அழைத்து சென்ற பத்திமா பிரான்சிஸ் என்பவாவும் முக்கியமானவா.
Q: நீங்கள் உங்கள் பட்டபடிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதாக அறிகிறேன். பல்கலைக்கழக வாழ்க்கை இந்த விளையாட்டு தொடர்பாக உங்களை பட்டை தீட்ட உதவியதா? எவ்வாறான வகையில் உங்களை வளர்த்துக்கொண்டீர்கள்?
நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றதுமே அங்கிருந்தவர்கள் நான் நிச்சயம் தேசிய அணிக்கு போவேன் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன் பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு விளையாட பாத்திமா பிரான்சிஸ் அவர்களால் சந்தர்ப்பமும் கிடைத்தது பல்கலைக்கழக வாழ்க்கையில்தான். இந்தக்காலப்பகுதியில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4வருடங்களாக விளையாடியிருந்தேன். அத்துடன் பல்கலைக்கழக அணிக்கு தலமைதாங்கியுள்ளேன். பல்கலைக்கழகங்களிற்கிடையிலான போட்டியில் முதலாவது முறையாக தமிழ் அணி (எமது அணி) இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் இலங்கை பல்கலைக்கழக அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன் அதில் 2005ல் Vice-Captainஆகவும் 2006ல் Captain ஆகவும் இருந்திருக்கின்றேன்.
பல்கலைக்கழகத்திலிருந்து இருந்து தேசிய அணிக்கு நான் தெரிவாகி 2005ல் ஆசிய கிண்ண போட்டியில் Best Shooter விருது பெற்றமைக்கு பல்கலைக்கழக உப வேந்தர் எனக்கு தங்க பதக்கம் அளித்து கௌரவப் படுத்தியமை, பரீட்சை காலங்களில் நண்பர்களில் உதவி முதலானவை முக்கியமாக நினைவு கூரப்படவேண்டியவை. தேசியஅணியில் விளையாடிக்கொண்டு எனது பட்டப்படிப்பை சீராக தொடர பல்கலைக்கழகம் போதிய உதவியும் வழங்கியிருந்தது.
![]() |
| National Champions - All Universities Team -2007கீழே இருப்பவர்களில் இடமிருந்து வலம் 2வது மதுரா அக்கா பின்வரியில் உயரமாக பதிவின் நாயகி |
Q: உங்களுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு எப்போது கிடைத்தது? எவ்வாறு கிடைத்தது?
2004ல். நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக விளையாடியபோதுதான் தேசிய அணிக்காக தெரிவுசெய்யப்பட்டேன். எனது பெறுபேற்றையும் உயரத்தையும் அடிப்படையாக வைத்தே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
Q: முதன் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய போது அனுபவம் எப்பிடி இருந்தது?
2005ல் ஆசிய கோப்பைக்காக விளையாடினேன், இறுதி போட்டியில் எங்களால் வெல்ல முடியாமை அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை நன்றாக தயார் படுத்த வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியது.
Q: 6ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் நீங்கள் விளையாடிய முக்கிய சர்வதேச போட்டிகள் பற்றி சொல்ல முடியுமா? உங்கள் அணி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் பற்றியும் கூறுங்கள்.
ஆசிய கோப்பை வெற்றியாளர்கள் 2009. அவ்வப்போது பிற நாடுகளால் ஒழுங்கு படுத்தப்படும் 5 தேசங்களுக்கிடையிலான, 4 தேசங்களுக்கிடையிலான, சுற்றுப்போட்டிகளும் பிற நாடுகளுடனான சுற்று பயணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
Q: இதுவரை எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்?
ஏறத்தாழ 35 வரையிலானவை சர்வதேச போட்டிகளில் அடங்கும்.
Q: தற்போது Co-Captain ஆக அணியில் இருப்பதாக தெரிகிறது. Co-Captain என்றால் இன்னொரு வீரருடன் இணைந்து தலைவராக பணியாற்றுவதுதானே?
ஆம்.
Q: July மாதம் சிங்கப்புரில் இடம் பெற்ற உலககிண்ண போட்டி உங்களின் முதல் உலககிண்ண போட்டியென நினைக்கிறேன் அப்பிடிதானே? அதன் அனுபவம் பற்றி கூறுங்களேன்.
ஆம். இலங்கை அணி உலக கோப்பைக்கு தகுதி பெற ஆசிய கோப்பையை வெல்வதோடு, உலக தர பட்டியலில் முன்னிடம் வகிக்க வேண்டும். இந்த உலக கோப்பையின் பின்னர் எங்கள் அணி பதின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் மிக சிறந்த அணிகளுடன் விளையாடி அதிக கோல் போடுவது எனக்கு மிக சவாலாக இருந்தாலும், நான் ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றினேன்.
Q: இந்த உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடிய உங்களுக்கு சிறப்பு பரிசு எதாவது கிடைத்ததா?
Best Shooter விருது கிடைத்தது.
Q: போட்டி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது யாருக்கு கிடைத்தது?
தென்னாபிரிக்க வீராங்கனை ஒரு வருக்கு கிடைத்தது.
Q: மற்றைய விளையாட்டுக்களின் தேசிய வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்புபோல் அபரிமிதமான திறமை இருந்தும் உங்களுக்கு கிடைப்பதில்லை என்று உணர்ந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ளுரில் ஆதரவு எப்பிடி இருக்கிறது? ஊடகங்கள் உங்கள் போன்ற திறமையுடைய தமிழ் வீரர்களை சரியாக ஊக்குவிக்கவில்லை என்று சிந்தித்ததுண்டா? எப்படியான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
தோற்கும் அணியில் இருந்து என்னால், அதிக கோல் சிதறாமல் போடா முடிகிறது எனில், எங்கள் அணி கட்டயாம் வெற்றி பெறும் பகுதியில் இருந்திருக்க வேண்டும். எங்கள் தயார் படுத்தலுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஊக்குவிப்பு எங்கள் மனதில் தான் உருவாகவேண்டும். நாம் நினைக்கிற இலக்கை ஒரு போதும் தாழ்த்தகூடாது. ஊடகங்கள் இன்னும் கூடுதலான ஊக்குவிப்பை தரலாம்.
Q: உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பவர்கள் யார்?
பலர்.
Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.
பலர்.
Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.
Q: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆதரவுக்கு நன்றி.
பிற்குறிப்பு: இப்படியான பல திறமையான தமிழ்பேசும் வீரர்கள் அனைவரையும் நாம் ஊக்குவித்தோமா? என்றால் விடை பெரும்பாலும் இல்லை என்றே வரும். அற்பனுக்கு பவிசு வந்து அர்த்தராத்திரியிலும் குடை பிடிக்கும் இந்தக்காலத்தில் இப்படியான உலகதரம் வாய்ந்தவர்கள் எம்மிடையே இருக்கும்போது நாம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கி மேலும் சிறப்பாக விளையாட இன்னும் வழி அமைக்கும்.
பல திறமையுள்ள இளையவர்களை ஊக்குவிக்கும் தமிழ் ஊடகங்களே இந்த வீராங்கனைக்கு கொடுக்கவேண்டிய கௌரவம் வழங்கப்படாது இருப்பின் உடனடியாக அதை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
WorldCupCricket2011 Special - II
இந்த உலகக்கிண்ணத்தை ஒட்டி பெரும்பாலான பதிவுகள் அணிகள் பற்றிய வீரர்கள் பற்றிய அலசல்களையே தந்திருந்தன. எனவே நான் சற்று வித்தியாசமாக மற்றவர்கள் பெரிதாக கவனிக்காது விட்ட ஒருசில விடயங்களை பற்றி இங்கே குறிப்பிட முயலுகின்றேன்.
அதற்கு முன் உலககிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கை மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!
அதற்கு முன் உலககிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கை மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!
ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது போட்டியின் சுவாரஸ்யத்துடன் நேர்முக வர்ணனையாளர்களின் அலட்டல்களையும் விரும்பி கேட்பதுண்டு. அவ்வாறான பல நேர்முக வர்ணனையாளர்களில் சிலரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிலர் பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் சுவையாக அந்தந்த தருணங்களில் நினைவு கூறக்கூடியவர்கள். மற்றைய சிலர் நேர்த்தியான அதிரடியான ஆக்ரோசமான விதத்தில் போட்டிகளை பற்றி வர்ணனை செய்வதில் பெயர் பெற்றவர்கள். பொதுவாக ஒரு சிறந்த வர்ணனையாளருக்கு இந்த இரண்டும் அளவாக இருந்தால் தான் அவர்களால் அத்துறையில் வெற்றியடைய முடியும். ஆனால் சிலர் அந்தந்த பாணிகளில் பிரபலமாக தமக்கென தனிமுத்திரையை பதித்திருப்பார்கள்.
![]() |
| Mike Haysman |
அந்த வகையில் எனக்கு பிடித்த அவுஸ்திரேலியாவில் பிறந்து தென்னாபிரிக்காவில் குடியேறிய சிறந்த, நல்ல குரல்வளமுள்ள, நான் இங்கே குறிப்பிட்டதில் இரண்டாவது பாணியில் தனிமுத்திரை பெற்ற நேர்முகவர்ணனையாளர் மைக்கேஸ்மன்(Michael Haysman) இந்தபோட்டிகளில் வர்ணனையாளராக உள்வாங்கப்படாது இருந்தது எனக்கு பலத்த ஏமாற்றம். அவரின் வர்ணனையை மிகவும் எதிர்பார்த்தேன் இந்த முக்கியமான உலகக்கோப்பை போட்டிகளில். இவர் Ten Sportsற்காக நேர்முகவர்ணனையாளாராக இருப்பதாலோ ESPN Star தொலைக்காட்சியின் அனுசரணையில் உலகம் பூராவும் ஒளிபரப்பாகும் இப்போட்டியில் இல்லை போலிருக்கிறது!
----------------------------------------------------------------------------------
இந்த தடவை உலககிண்ண போட்டிகளில் Umpire Decision Review System (UDRS)ல் மிகவும் குறைவான Success rateஐ அதாவது 0% கொண்ட அணியாக அயர்லாந்து இருந்துவிட்டது. அவர்கள் எடுத்த 13Reviewல் (எண்ணிக்கையில் தவறு இருக்கலாம்) ஒரு முறை கூட அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வரவில்லை.
----------------------------------------------------------------------------------
![]() |
| Imran Tahir |
இந்தமுறை உலகக்கிண்ணத்திலேயே தனது 31வயதில் ODI அறிமுகத்தை மேற்கொண்டார் பாகிஸ்தானில் பிறந்து பின்னர் தென்னாபிரிக்காவில் குடிபெயர்ந்த ஏலவே முதல்தர போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கிய இம்ரான் தாகீர் (Imran Tahir). தனது முதல் போட்டியிலிருந்தே ரண்மெசின் ஹாசிம் அம்லாவை போல் விக்கெட் மெசின் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்க உழைக்க தொடங்கிவிட்டார்! இவர் தனது முதல்தர போட்டிகளில் 500ற்கு மேற்பட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குடியுரிமை பற்றிய பிரச்சனையால் இவரால் அணிக்குள் நீண்ட காலமாக வரமுடியாமல் போனது.
----------------------------------------------------------------------------------
![]() |
| Sanjay Manjrekar |
எனக்கு பிடித்த இன்னுமொரு Commentator சஞ்சே மஞ்ஜேர்கர் (SanjayManjrekar), இந்த உலகக்கிண்ண நேரத்தில் நகைச்சுவையான அடிக்கடி பல தடவை அவர் சொல்லிக்கொண்ட ஒரு விடயம் ”சில கிரிக்கெட் வீரர்களுக்குதான் அவர்களின் பெயரும் செயலும் ஒத்துப்போகும் அந்த வகையில் ஒரு வீரர்தான் யுசுப் பதான். அவரின் பெயரை பாருங்கள். படான் படான் என்று சொல்லும்போதே ஒரு ஆக்ரோசம் தெரிகின்றதல்லவா? அதைபோலதான் அவர் பெயரும் அவரது அடியும். அவரது அடிகள் எல்லைக்கோட்டை கடந்து செல்லும்போதெல்லாம் படான் என்ற சொல்லின் தொனியுடன் ஒத்துப்போகின்றது". இதை காமடியாக மொக்கையாக நேர்முகவர்ணனையின் போது சொன்னார். நான் இரு தடைவைகள் இவ்வாறு இவர் சொல்லும்போது கேட்டேன். ரசித்து சிரித்தேன்.
----------------------------------------------------------------------------------
கடந்த பதிவில் LBWற்கான Out side the leg stump விதி பற்றி சொன்னேன். அந்த விதியையாவது ஒரு சிலர் அறிந்திருந்தாலும் நான் இப்போது சொல்லப்போகும் Out side the Off stump விதியை அறிந்துகொண்டு போட்டிகளை கண்டுகளிப்போர் மிகக்குறைவெனலாம்.
| 1.Ball Pitching out side the off stump and made impact out side the off stump line |
பந்துவீச்சாளர் வீசிய பந்து Out side the off stumpல் pitch செய்து (அதாவது Off stumpற்கு வெளியே) துடுப்பாட்டவீரரின் கால்காப்பில் (pad) படுகின்ற போது விக்கெட்டை தகர்க்கின்ற வாய்ப்பு இருப்பினும் சிலவேளைகளில் அது ஆட்டமிழப்பாகாது. ஏனெனில் கால்காப்பில் படும்வேளையில் வேறுசில Checkingகள் செய்து அதற்கேற்பவே நடுவர் தீர்ப்பு வழங்குவார்.
அதாவது பந்தானது Padல் படுகின்ற தருணத்தில் (at the time of impact) பந்தானது எங்கு நிலை கொண்டிருக்கின்றது என பார்ப்பார்கள். பந்து Off stump lineற்கு உள்ளெனில் மறு பேச்சே கிடையாது அவர் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்படுவார். பந்து Off stumpற்கு வெளியில் எனில் இன்னும் ஒரு Checking பண்ணப்படும். அவர் அந்த பந்தை அடிக்க (Shot attempt) முயன்றுதான் அவ்வாறு பட்டது எனின் அது ஆட்டமிழப்பாகாது. இல்லை அவர் அதை அடிக்கவே முயலவில்லை எனின் அது ஆட்டமிழப்பு ஆகும்.
இங்கே மேலே காட்டப்பட்ட 1வது படத்தில் Out sideல் pitchசெய்து அவர் அடிக்கமுயலும்போது பந்து படும் வேளையில் off stumpற்கு வெளியே பந்து இருப்பதால் இது ஆட்டமிழப்பாகாது.
அதாவது பந்தானது Padல் படுகின்ற தருணத்தில் (at the time of impact) பந்தானது எங்கு நிலை கொண்டிருக்கின்றது என பார்ப்பார்கள். பந்து Off stump lineற்கு உள்ளெனில் மறு பேச்சே கிடையாது அவர் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்படுவார். பந்து Off stumpற்கு வெளியில் எனில் இன்னும் ஒரு Checking பண்ணப்படும். அவர் அந்த பந்தை அடிக்க (Shot attempt) முயன்றுதான் அவ்வாறு பட்டது எனின் அது ஆட்டமிழப்பாகாது. இல்லை அவர் அதை அடிக்கவே முயலவில்லை எனின் அது ஆட்டமிழப்பு ஆகும்.
இங்கே மேலே காட்டப்பட்ட 1வது படத்தில் Out sideல் pitchசெய்து அவர் அடிக்கமுயலும்போது பந்து படும் வேளையில் off stumpற்கு வெளியே பந்து இருப்பதால் இது ஆட்டமிழப்பாகாது.
![]() | ||||||
| 2.Ball Pitching out side the off stump and made impact within the off stump line & leg stump |
----------------------------------------------------------------------------------
இந்த உலககிண்ணத்தில்தான் போட்டி தொடங்க முன்பே கிண்ணத்தை வெல்ல கூடிய பலமான அணிகள் என்று கருதிய அணிகள் இரண்டும் இறுதிப்போட்டிக்கு நுழைந்திருக்கின்றன. நானும் தொடங்க முன் இதேகருத்தை ஆமோதித்த மாதிரி இருந்தாலும் பின் போட்டிகள் ஆரம்பமானவுடன் கூறிய எதிர்வுகூறல் அப்படியே 100%ம் பொய்த்துப்போனது. எனவே இறுதிபோட்டி பற்றி கூற எனக்கொரு தகுதியும் இல்லை. ஆனால் விறுவிறுப்பான இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருக்கின்றேன்.
WorldCupCricket2011-Special
உலகக்கிண்ண கிரிக்கெட் நேரத்தில் Pepsi நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரே Conceptஇலான Advertisementகள், பிரபல கிரிக்கெட் வீரர்களின் தனித்துவமான ஆட்டநுணுக்கங்கள் or Actionகளை Imitate செய்து அமைக்கப்பட்டிருக்கிறது. இவை பலர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த Adல் எனக்கு ஞாபகமுள்ள வீரர்களும் அவர்களிற்குரிய Action பெயர்களும்
Dhoni - Helicopter Shot
Malinga - Slinging Bowling Action
Dilshan - Dillscoop
Kevin Peterson - Switch Hit
Virender Shewag - Uppercut shot
Harnbhajan Singh - Doosra
கீழே உள்ள Videoல் அனைத்து Adகளும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். உண்மையில் வித்தியாசமான சிந்தனைதான்.
இந்த Adல் எனக்கு ஞாபகமுள்ள வீரர்களும் அவர்களிற்குரிய Action பெயர்களும்
Dhoni - Helicopter Shot
Malinga - Slinging Bowling Action
Dilshan - Dillscoop
Kevin Peterson - Switch Hit
Virender Shewag - Uppercut shot
Harnbhajan Singh - Doosra
கீழே உள்ள Videoல் அனைத்து Adகளும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். உண்மையில் வித்தியாசமான சிந்தனைதான்.
இதில் HarnhajanSinghற்கு Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்தான் அறிமுகப்படுத்தியது போல் பலரையும் நினைக்க தூண்டியிருந்தது. ஆனால் தூஸ்ரா பாணியை உலக அரங்கில் அறிமுகப்படுத்தியவர் உண்மையில் பாக்கிஸ்தான் முன்னால்வீரர் "சக்லையின் முஸ்டாக்" ஆவார். அதேபோல் UpperCut shotம் சேவாக்கிற்கு முன்னரே பலவீரர்கள் அதே பாணியில் துடுப்பாடியுள்ளனர்.
----------------------------------------------------------------------------------
Again Afridi giving Advices to Razzaq
Pakistan அணி தலைவர் சாஹிட் அப்றிடி ஒவ்வொரு பந்துவீச்சின் பின்பும் பந்துவீச்சாளர்களுக்கு Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே சென்று அடிக்கடி கதைப்பதை, பாகிஸ்தான் அணியின் முன்னால் அணித்தலைவர் WasimAkram கடுமையாக சாடியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் அந்த பந்துவீச்சாளர்களுக்கு வீணான Pressureஐ கொடுத்து அவர்களை குழப்பக் கூடியதென்றும் அத்துடன் அப்றிடியும் 10 முழு ஓவர்களையும் வீசவேண்டி இருப்பதால் அது அவருக்கு மேலதிக சக்தி இழப்பை ஏற்படுத்தி அவரால் ஒழுங்காக பந்துவீச முடியாது போய்விடும் என்றும் நகைச்சுவைபாணி கலந்து கடுமையாக கூறியுள்ளார். மேலும் தனக்கு bowling போடும்போது இப்பிடி யாரும் Instructions கூறுவது பிடிக்காமல் இருந்ததாகவும் தனக்கு, தான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.
----------------------------------------------------------------------------------
SanjayManjrekar மற்றும் NassierHussain
நெதர்லாந்து இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடி நெதர்லாந்து அணியினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து 294எனும் நல்ல ஓட்டஎண்ணிக்கையை பெற்றது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து மட்டைவீசும் ஒரு சந்தர்ப்பத்தில் Commentators ஆக பழைய இந்திய வீரர் SanjayManjrekar மற்றும் பழைய இங்கிலாந்து வீரர் NassierHussain கடமையாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து மெதுமெதுவாக ஆரவாரமின்றி பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஓட்டங்களை சேர்த்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்து 2விக்கெட் இழப்பில் இருந்த அந்த நேரத்தில் SanjayManjerkar சொன்னார் Dutch அணியினர் இன்னும் Attacking fielding setசெய்து 2விக்கெட்டுக்களை quick periodல் எடுப்பார்களெனின் அவர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதென சொல்லிவிட்டார். பக்கத்தில் இருந்தவர் (NassierHussain) இங்கிலாந்துகாரர் ஆச்சே சும்மா இருப்பாரா? அவரும் கடுப்பாகி அது தென்னாபிரிக்கா இலங்கை போன்ற பந்துவீ்ச்சு, களத்தடுப்பு சிறப்பாக உள்ள அணிகளால்தான் மூடியும் இவர்களால் (நெதர்லாந்து) முடியாது என்று அவரின் மூகத்திலடித்து போல் கூறிவிட்டார். இது பெரிய சச்சரவாக இல்லாது அமைதியான கருத்தாடல் போல காணப்பட்டாலும் Commentator இருவரும் சற்று மூறுகல்நிலையில் இருந்தது போல் அது எனக்கு பட்டது.
----------------------------------------------------------------------------------
Ball pitching Outside the leg stump
கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் பலர் இன்னும் சில அடிப்படையான போட்டிவிதிமுறுகள் கூட தெரியாமல் பார்ப்பது மட்டுமல்லாது மத்தியஸ்தரின் தீர்ப்புகளை தேவையில்லாமல் கேலி செய்து, விதிமுறைகள் தெரிந்தவர்கள் போல காட்டமுயன்று தங்களை தாங்களே மற்றவர்கள் முன் கேவலமாக்கி கொள்கின்றனர். பந்து Out side the leg stumpல் pitchபண்ணி எவ்வாறாக வந்து கால்காப்பை (Pad) தாக்கினாலும் அது ஆட்டமிழப்பாகாது. ஆனால் எம்மில் பலரோ விக்கெட்டுக்கு நேரா பந்துபோனது அவுட் குடுக்கேல எண்டு கத்திக்கொண்டு இருப்பார்கள். இது கூட தெரியாமல் போட்டிகளை பார்ப்பது கேவலம். தெரியாதவர்கள் இப்பவாவது தெரிந்து கொள்ளுங்கள்.
இதை Animationல் பார்க்க இங்கே கிளிக்குங்கள்!
----------------------------------------------------------------------------------
அடுத்தது இந்தமுறை உலககிண்ணத்தை வெல்லப்போவது ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றில் ஒன்றுதான் இருந்து பாருங்கள். ஹிஹிஹி........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)














































