இது எப்பிடி இருக்கு????

அய்யோ!!! ஒரு மாதிரி திருப்பியும் சந்திக்கிறது ரொம்ப சந்தோசம். சரியா 2 மாசமாச்சு. கடுமையான வேலைப்பளு எண்டு சொல்லேலாது. ஒழுங்கான Time Management இல்லாதபடியால் தொடர்ச்சியா எழுதேலாம போச்சு. 2மாசத்தில உருப்படியா ஒண்டும் செய்யேல. ‌மாதம் போன‌தே தெரியேல


சரி விசயத்திற்க்கு வருவோம். இந்தப்பதிவை என்ர சாதனை(?) ஒன்றை சுயதம்பட்டம் அடிக்க பாவிக்கபோறன். அதுக்கு முதலில நான் ஒன்றை தெளிவா சொல்லுறன். இதை தொடர்ந்து கீழே வாசிச்சுப்போட்டு எனக்கு சொட்ட(shot) போட முயலவேண்டாம். அப்பிடி ஒரு டுபாக்கூர் பதிவாக இது இருக்கும். ஏதோ ஒண்டு எழுதோணும் என்டதால எழுதுறன்.

எனது பெயர் வலைத்தளமொன்றில் 4வது இடம் கிடைத்ததுதான் அந்த சாதனையான விடயம். உண்மையாக 3வது இடம்தான் ஆனால் பெயரில்லாதவர்களின் (Anonymous) பட்டியல் எல்லாம் ஒன்றாக கணிக்கப்பட்டமையால் 4வது இடம். இலங்கையில் பிரபல பதிவர்களில் ஒருவராயிருக்கும் ஹிசாம் அண்ணாவின் வலைத்தளத்தில் இலங்கையின் நம்பர்1 பதிவர் லோசன் அண்ணாவையும் முந்திக்கொண்டு எனக்கு ஒரு இடம்.
எப்பிடி உண்மையில நான் கெட்டிக்காரன்தானே???

அது சரி என்னத்துக்கு எண்டு தெரியுமே? அவரது வலைதளத்தில் கூடுதலாக பின்னூட்டமிட்டவர்களின் ரேட்டிங்கில்தான் எனக்கு அந்த இடம்...
இது எப்பிடி இருக்கு????


பாக்க விரும்பினா கீழே இருக்கிற link‌ஐ கிளிக் செய்து வலது கைப்பக்கம் நடுவே Scroll செய்து பாருங்க.
http://nhisham.blogspot.com/

என்னாலேயே தாங்கமுடியேல... உங்களால......சொல்லதேவையில்லை எனக்கு விளங்குது...
இப்பிடி ஒரு மொக்கை பதிவை வாழ்க்கையில நீங்க பாத்திருப்பீங்க என்று நான் நினைக்கேல....

ஏலும் என்றால் இன்னுமொரு நல்ல பதிவில் சந்திப்போம்...

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்