செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி செய்யலாம் என்ற முடிவோட கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே பழைய வேலையை விலகி, யாழ்ப்பாணத்தில் போகும்வரை நிம்மதியா தங்கியிருந்தேன். இருக்கறதவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுறது கூடாதெண்டாலும் அண்ணா மற்றும் பல நண்பர்கள் சிங்கப்பூரில் இருக்கும் நம்பிக்கையுடன் அந்த Risk உள்ள முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இருக்கிற நேரமெல்லாம் StarCricket, TenCricket, DiscoveryChannel, VijayTV எண்டு TVயோடயும் நல்ல நித்திரையோடும் நாட்கள் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் போகவேண்டிய நாள் கிட்டகிட்ட டென்சனும் எகிறிக்கொண்டிருந்தது. அப்பதான் சைனீஸ் New Year வந்த நேரம். சிங்கப்பூரில இருந்த எங்கட கனக்க பசங்க இந்தோனிசியாவுக்கு Trip போக இருந்தாங்க. எங்கட அண்ணா (நிருத்திகன்) மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் மலேசியா-லங்காவிக்கு போக பிளான் பண்ணியிருந்தாங்க.
![]() |
| பிரசன்னா சுபோசன் மணி நிருத்தி சுற்றுலாபெண் கோபிலன் அரவிந்தன் பிரகாஷ் அமலன் |
லங்காவி போய்ச்சேர்ந்து முதல் நாள் உடனேயே கோல் பண்ணி அப்டேட் பண்ணினார். ஆனா இரண்டாவது நாள் இரவு அண்ணாட்ட இருந்து கோல் வரும் கோல் வரும் எதிர்பாத்தும் வரல. மலேசியா நம்பருக்கும் அடிச்சா ரெஸ்போன்ஸ் இல்ல. கனக்க நேரம் கழிச்சு ஒருமாதிரி போல் வந்துச்சு. ஹோட்டல் வந்துசேர நேரமாச்சு அதாலதான் போன் பண்ண முடியல என்று காரணம் நிருத்தியிடம் இருந்து வந்தது. கோல் வராம இருக்கேக்க தேவையில்லாத பயங்கள் வந்து போயிருந்தாலும் கோல் வந்தாப்பிறகு நிம்மதியா படுக்கப்போனம்.
அடுத்தநாள் கல்யாணவீட்டு நாள் இரண்டு உறவினர் வீட்டு கல்யாணம். முதலாவதுக்கு போய் சாப்பிட்டு அடுத்ததுக்கு போக அம்மா அப்பா பிளான் பண்ணியிருந்தாங்க. முதலாவதுக்கு போட்டு அரக்கபறக்க சரியான பதட்டத்தோடு வந்தாங்க. எல்லாம் வழமை போலல்லாமல் வேறமாதிரி இருந்தது. வந்ததும் வராததுமா Tripக்கு போன 2பேர கடலில காணேலயாம் எண்டு ஒரு கடும் பதட்டத்தோட சொன்னாங்க.
கல்யாணவிட்டில இருக்கேக்க அண்ணாட்ட இருந்து கோல் வந்திருக்கு. இந்த விசயத்த கேட்டோன ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு ”ஐயோ முருகா” எண்டு தன்னைஅறியாமல் கத்தியிருக்கிறார் அம்மா. அப்பாவுக்கு உடனே விசயத்த சொல்லேல. அப்பா இன்னும் குழம்பக்கூடியவர். வீட்ட வந்து முற்றத்தில ஏறக்கேதான் அப்பாக்கு விசயம் சொல்லப்படுகிறது. அப்பாவும் என்ன நடந்திச்சு? எங்க நடந்திச்சு? எண்டு என்ன செய்யிறதெண்டு தெரியாமா அம்மாட்ட கேக்கிறார். அம்மாவோ சரியான depressionனோட தேவையில்லாம அப்பாவோட சண்டை பிடிக்கிறார். போக வேண்டிய அடுத்த முக்கிய உறவுக்காரருக்குரிய கல்யாண வீடும் செல்லாக்காசாகிறது. ஒருத்தருக்கும் என்ன செய்யிறதெண்டு விளங்கேல.
![]() |
| கோபிலன் சுபோசன் JetSkiல் |
அண்ணா லேசில கஸ்டமான விசயங்கள அம்மா அப்பாக்கு சொல்லமாட்டார். ஆனா இப்ப சொல்லியிருக்கிறார் எண்டபடியா விசயம் சரியான பாரதூரம் எண்டு எனக்கு விளங்கினது. ஆனா matter பெரிசா இருக்காதெண்டமாதிரி நான் முகத்த pleasanta வைச்சிருக்க try பண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெண்டா அம்மா அப்பாவுக்கு இருக்ககூடிய ஒரே ஒரு ஆறுதளிக்ககூடிய நபராக நான் மட்டுமே அப்போது இருந்தேன்.
அப்பா கதிரையில இருக்கிறதும், hallல இருக்கிற சாமிப்படங்கள ஒவ்வொண்டா கும்பிடுறதும், அங்கயும் இங்கயும் நடக்கிறதுமா ஒரு விசர்பிடிச்ச மாதிரி நடந்துகொண்டிருந்தார். கடவுள் மேல் எல்லா பாரமும் பொறுக்கப்பட்டிருந்தது. அம்மா இடக்கிடை இவங்களுக்கு சும்மா ஒரு இடத்தில இருக்கதெரியாது சும்மா trip fun எண்டு சுத்தி விலங்கத்தில மாட்டத்தான் தெரியும்; நிருத்திக்கு கட்டுப்பாடு இல்ல எண்டு தங்களது இயலாமையை வேறொருவிதமா காட்டிக்கொண்டிருந்தாங்க. இது பெரிய்ய மாட்டர் இல்ல ஒரு பிரச்சினையும் இருக்காது எங்கிறமாதிரி காட்டி சமாளிப்பம் எண்டு நிருத்தி ஆக்களுக்கு சப்போர்ட் பண்ணி கதைக்க போய் நான் நல்லா வேண்டிக்கட்டிக்கொண்டேன்.
ஒரு கிழமைல நான் சிங்கப்பூருக்கு வெளிக்கிடணும் போக முதல் interviewக்கு prepare பண்ணி பாக்கவேண்டியதொன்றும் பாக்கிற மனநிலை அப்போது சுத்தமா இல்ல. எல்லாம் சுத்த சூனியமா இருந்தது. அந்தநேரம்வரை காணம போன இரண்டு பேரின்ர பெயரும் வடிவா கேக்க முடியல. அவங்க கோபிலன் சுபோசன் அண்ணா எண்டு கொஞ்சம் கழிச்சுதான் தெரிய வந்திச்சு. இதில கோபிலன் அண்ணா எங்கட பாடசாலை தமிழ்மன்றத்தின் தலைவர், இந்துமாமன்றத்தின் செயலாளாளரா இருந்த 6.2அடி வரையுள்ள உயரமான அக்ரீவான ஆள். சுபோசன் அண்ணா எனக்கு கம்பஸுக்கு வர கொஞ்சம் முதல்தான் தெரியும். கம்பஸில் எங்கட அண்ணன்ர batch. எங்கட ஒருவருட சீனியர். அடக்கமான கோபிலன் அண்ணாக்கு உயரத்தில எதிர்மாறான கட்டையான ஆள்.
Chinese New Year விடுமுறை திங்கள் செவ்வாய் இருந்ததால் லங்காவி நோக்கி அண்ணனின் (நிருத்தியின்) நண்பர்கள் எல்லாமாக ஒன்பதுபேரின் பயணம் வெள்ளிக்கிழமை இரவு (2013-02-08) சிங்கையிலிருந்து ஆரம்பாமாகியிருக்கிறது. சனி நண்பகல்1மணி அளவில் லங்காவி செல்வதற்கு ஜெட்டியை(லங்காவி ஒரு தீவு) அடைகின்றனர். லங்காவியை சனி சாயங்கால வேளை 6:30 அளவில் வந்தடைகின்றனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழைமை காலையிலிருந்து பல விளையாட்டு activityகளை முடித்துவிட்டு இறுதியாக ஞாயிறு மாலை மங்கும் நேரத்தில். ஏறத்தாழ 7:00PM அளவில் லங்காவி Tripன் அடுத்த உச்சகட்ட FUN ஆனா JetSki சவாரிக்கு ஆரம்பமாகிறார்கள். JetSki என்பது கடலில் போவதற்குரிய Scooter போன்ற ஒரு vehicle. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் என்னதான் பெரிய்ய அலை அடித்தாலும் இது இலகுவில் பிரளாது தாழாது.
வந்தவர்கள் இரண்டு இரண்டு சோடியாக பயணிக்கிறார்கள். முதலில் கோபிலன் சுபோசன் அண்ணாமார் சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். (உண்மையில் முதலில் கோபிலனும் நிருத்தியும் ஒன்றாகவே JetSkiல் செல்வதாக இருந்தது. ஆனாலும் பராசேலிங்(Para sailing) இலிருந்து நிருத்தி வருவது தாமதமாகியமையால். கோபிலனும் சுபோசனும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ) ஏறத்தாழ 20நிமிடப்பயணத்தின் பின் இவர்கள் பயணித்த JetSkiன் எஞ்ஜின் செயலிழக்கிறது. இதுவரை இருவரையும் அவ்வளவாக நெருங்காத சனி இவர்களை கட்டி அணைக்க ஆரம்பிக்கிறது. மீள எஞ்ஜினை தொடக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்காமல் போகிறது. அக்கணமே கடல் அந்த செயலிழந்த JetSkiஐ தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறது.
7மணி ஆகியிருந்தாலும் கடற்கரையில் இருக்கின்றபோது இருட்டாகின்றதை உணரமுடிவது கடினம். இருந்தபோதிலும் அப்படியே சூரியன் மறைகின்றபோது சடுதியாக கும்மிருட்டாகிவிடக்கூடிய, அபாயம் அப்போது இவர்களுக்கு எமனாக மாறுகிறது. இவர்கள் சுதாரிப்பதற்குள் கடும்வேகமாக இருளதொடங்குகிறது. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்பிக்க 2வழிகள்தான் அப்போது இருந்தது.
ஒன்று மெதுவாக நீந்தி Life Jacket உதவியுடன் கரையை அடைவது. இன்னொன்று எதாவது உதவிவரும்வரை காத்திருப்பது. இருவருக்கும் நீச்சல் தெரியாது. JetSkiயை விட்டு இறங்கி நீரில் நீந்த முயற்சித்து கரையை அடைய முடியாத சந்தர்ப்பத்தில் மீண்டும் JetSkiயை அடைவதோ கனக்கநேரம் கடலிலேலே அப்படியே இருப்பதோ முடியாத காரியம். எனவே இரண்டாவது வழி புத்திசாலித்தனமாக தெரிவதால் அதையே தேர்ந்தெடுக்கின்றனர்.
இவர்களுடன் இந்த கடல் விளையாட்டுக்கு வந்த மற்றவர்கள் கரையை அடைந்து இவர்களுக்காக காத்திருக்கும்போதுதான் இவர்கள் காணாமல் போனது தெரியவருகிறது. உடனே JetSki சொந்தக்காரர்களுடன் சேர்ந்து இவர்களை தேட ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இவர்கள் தேடியது கொஞ்சம் கரையை அண்டித்தான். ஆனால் காணமல் போன அந்த JetSki கரையை கடந்து கொஞ்சம் ஆழ்கடலுக்கு சென்றது மட்டுமில்லாமல் கடல் அலையும் தன்பாட்டிற்கு இன்னும் உள்ளே அவர்களை இழுத்துக்கொண்டிருந்தது.
காப்பாற்ற சென்றோர் சென்ற JetSkiகளின் அசமாத்தத்தை காணாமல் போன கோபி சுபோ தூரத்தே கண்டிருந்தாலும் அவர்களை கூப்பிடவோ சைகை காட்டவோ முடியாத நிலை. காப்பாற்ற சென்ற படகு ஒன்று இவர்களுக்கு கொஞ்சம் அண்மையில் சென்றும், இவர்களது கத்தல் கேட்கவில்லை. கும்மிருட்டு நிலமையை மேலும் மோசமாக்கி கொண்டிருந்தது. இரவு 10மணி அளவில் JetSkiன் சொந்தக்காரர்களால் பொலீசுக்கு தகவல் அறிவிக்கப்படுகிறது .
JetSkiers, மற்றைய படகுகளில் தொடர்ந்த தேடுதல் அன்று நள்ளிரவு ஏறத்தாழ 12மணியை எட்டியும் பயனளிக்கவில்லை. அந்த ஞாயிறு இரவை கழித்தால் எப்படியும் மறுநாள் காலை தங்களை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை காணமல்போன சுபோ கோபிக்கு இருந்தது. ஆயினும் லங்காவியை விட்டு கடலலை தங்களை தூரத்தே தள்ளிக்கொண்டு போவதை அவர்களால் அப்போது உணர முடிந்தது.
மற்ற ஆறு பேரும் வாழ்க்கையை சுத்தசூனியமாக வெறுமையாக உணர்ந்தனர். ஹொட்டலுக்கு சாப்பாட்டை வாங்கிச்சென்று ஒருவரும் ஒருவருடனும் ஒரு வார்த்தை பேசாமல் கடமைக்கு சாப்பிடுகின்றனர். நிருத்தியும் கோபிலனும் ஒரே அறையிலே அந்த ஹொட்டலில் தங்கியிருந்தனர். கோபிலன் உபயோகித்த பச்சை தூவாய் அப்படியே கட்டிலில் விரித்தபடி கிடந்தது. அதை பார்த்தபோது கோபிலனே அங்க இருப்பது போல ஒரு பிரமையை நிருத்திக்கு ஏற்படுத்தி கிலேசப்படுத்தியது. குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறைசென்று கழித்தார் அந்த இரவை.
அடுத்த நாள் விடிய 8மணியளவில் நிருத்தி அரவிந்தன் அண்ணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு செல்கிறார்கள். அப்போது பொலிஸ் ஒரு JetSki கண்டெடுத்ததாகவும் அதில் Body ஒன்றும் பிடிபடவில்லை என்றும் சொன்னார்கள். தேடச் சென்றவர்களுக்கு இப்படியான தகவல் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதியில் அது காணாமல் போனோர் சென்ற JetSki இல்லை என்பது தெரியவந்தமை அவர்கள் எப்படியும் உயிரோடுதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது.
பொலிசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டமையால் Navy, Marin Force, Emergency Force ஆகியோர் தேடுதலுக்கு தயாராகி தேடுதலில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் முழுமனதோடு தேடினார்களா? என்பது கேள்விக்குறியே. கடலில் சென்று கொஞ்சம் தேடிவிட்டு மீன்பிடிக்க தொடங்கிவிடுவார்கள் என்ற நல்ல அபிப்பிராயம் அவர்களுக்கு அப்போது இருந்தது. எனினும் பொலீசில் இருந்த தமிழர் ஒருவர் செய்யக்கூடிய சில உதவிகளை செய்ததாக நிருத்தி கூறுகிறார்.
இதே நேரத்தில் சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மலேசியாவுக்கான இலங்கை தூதரகங்களிற்கு தகவல் அறிவிக்கப்பட்டு அவர்கள் மூலமான எதாவது உதவி கிடைக்குமா என்று இவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் விடுமுறை காலம் என்பதால் அவர்களின் மூலம் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு விடயம் அறிவித்தமையால் எதாவது செய்திகளில் வந்து இலங்கையில இருக்கிற அப்பா அம்மாக்கு தெரிய வந்தால் அதை அவர்களால் தாங்க இயலாது என்பதால் கடைசியாக நிருத்தி யாழ்ப்பாணத்திலுள்ள எங்களுக்கு தகவல் தர முடிவெடுக்கிறார். மதியம் போல் Tripற்கு வந்த மற்றவர்களும் இணைந்து காணாமல் போனவர்களின் பெற்றோருக்கு அறிவிப்பதன் அவசியத்தை வெளிப்படுத்த அவர்களின் உறவினர்களுக்கு தகவலளிக்கப்படுகிறது.
இதன்பின் மாறிமாறி இவர்களின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள். ”நீங்கள் அவர்களுடன் சண்டையிட்டீர்களா? ஏன் கடலுக்கு சென்று வீழ்நதார்கள்” என்று விளக்கமில்லாமல் சகட்டு மேனிக்கு கேட்கவும் செய்திருந்தார்கள். என்ன செய்வது எல்லாத்தையும் சகித்து அவர்கள் இயன்றளவு சமாதானமாக பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.
நேரம் போகப்போக அவர்கள் இன்னும் பிடிபடாமை அவர்கள் சென்ற JetSkiயை கூட கண்டுபிடிக்க முடியாமை அவர்கள் எங்கயோ தப்பி இருக்ககூடும் என்ற நம்பிக்கையை கூட்டியிருந்தது. இந்த நம்பிக்கைக்கு மகுடம் சூட்டுவதுபோல் இறுதிக்கட்ட மிகவும் பலமான ஆயுதம் தேடுதலுக்கு எடுக்கப்படுகிறது. Helicopter எடுத்து கொஞ்சநேரம் தேடுதலில் ஈடுபட்டால் அவர்கள் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு துளிர்க்கிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் High commissioner ஊடாக அதை செய்யலாம் என்றால் அவர்கள் விடுமுறையில் இருந்தமையால் அது கைகூடவில்லை.
நண்பர்களுக்காக இவர்கள் தேடி அலைவதை பார்த்த சுற்றுலாப்பயணி ஒருவர் அவர்கள் எப்படியும் இந்தோனேசியாவை அடைந்திருப்பார்கள். கவலைப்பட தேவையில்லை என்று ஆறுதல் கூறியிருந்தார். திங்கள் அன்று சப்பாடு ஒன்றுமே இல்லாமல், இவர்கள் விசர் பிடித்தவர்கள் போல் தேடுகின்றனர்.
Tourist செல்லும் உலங்குவானூர்தியை ஒரு அரைமணி நேரத்துக்கு வாடகைக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றிபெறுகின்றனர். நிருத்தியும் பிரகாஷ் அண்ணாவும் ஓட்டுனரோடு சென்று அவர்களை தேடுகின்றனர். தேடும்போது Helicopter கதவை துறந்தாலே வடிவாக கீழே பார்க்கலாம் கதவை துறக்கட்டா? என்ற ஓட்டுனரின் கேள்வியுடன் கதவு துறக்கப்படுகிறது. கதவை துறந்தால் இரண்டு பக்கமும் ஒன்றுமே இல்லை. அப்படியே வெளி.
ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு சரியாக இணைக்கப்பட்ட பட்டிகள்(belt) இல்லை. இருப்பது மிகவும் லூசாகவே இருக்கிறது. நடுக்கடலில் சென்று அங்கும் இங்கும் திருப்பும்போது அப்படியே நடுக்கடலில் தேடச்சென்றவர்களே விழக்கூடிய அபாயம். உயிர்காப்பு (life jacket) அங்கிகளே பொருத்தப்படவில்லை. அங்கே இருக்கும் கம்பிகளையே இறுகப்பற்றி தேடுகிறார்கள். நடுக்கடலில் உயரத்திலிருந்து குத்தன பார்த்தபடி ஒழுங்கான பட்டிகள் இல்லாமல் தேடுவதென்பது மிகவும் கடினமான காரியம். ஆயினும் தங்கள் நண்பர்களுக்காக உயிரை பணயம் வைத்து தேடல் தொடர்கிறது. பெரிய்ய எதிர்பார்ப்போடு மேற்கொண்ட இந்தத்தேடுதலும் இறுதியில் தோல்வியில் முடிகிறது.
இதேநேரம் காணமல் போனவர்கள் மலாக்கா கலவாய் ஊடாக அந்தமான் கடலுக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தனர். நடுவெயிலில் நடுக்கடலில் எந்தவொரு உதவிக்கான சமிக்ஞையும் இன்றி இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஒரு நாள் கடக்கப்போகிறது சப்பாடோ பச்சைதண்ணியே எதுவுமில்லை. இருவரும் ஒரே நேரத்தில் அயர்ந்தால் பிரச்சனை ஒருவர்மாறி ஒருவர்மாறி நித்திரை கொள்கிறார்கள். அதுவரை கிட்டத்தட்ட 15கப்பல்கள் தூரத்தே இவர்களை கடந்துபோகின்றது. இருக்கும் ஒரேஒரு ஆயுதம் இவர்களின் LifeJacket கடும் வெயில் இரவு நேரங்களில் கடும் குளிர்காற்று இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்க இருப்பது அது ஒன்று மட்டுமே.
இருந்த அனைத்துக்கதவுகளும் அடைக்கபட்டுவிட்டது. அந்தநாளுக்கான தேடுதல்களும் நிறுத்தப்டுகிறது. காணமல்போய் சரியாக ஒரு நாள் கழிந்துவிட்டது ஒரு முழுநாள் இரவும் அடுத்தநாள் பகலும். நடுக்கடலில் இருவர்மட்டும் அந்த சிறிய scooterல் சாப்பாடு தண்ணி இன்றி ஒருநாள் முழுவதும் இருப்பதென்பது எவ்வளவு கொடுமையான காரியம். நினைத்துப்பார்த்தலோ அடி வயித்தில் எதோ செய்யும்.
இந்த கடும் வெப்பபத்தில் வெந்தது பற்றி கோபிலன் அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
” மதிய நேரங்களில் சூரியனுடைய வெப்பம் மிக கொடூரமானது. சூரிய ஒளி கதிர்கள் நம்மை நேரடியாகவும் கடலில் ரிபிலக்சன் (reflection ) ஆகியும் தாக்கியது. இந்த குறிப்பிட்ட நேரங்களில் எமது கைமுடி எரிந்து மணப்பதை உணர்ந்தோம்! ”
இரண்டாவது இரவு திங்கள் ஆரம்பமாகிறது. இயற்கையும் தன் பங்கிற்க்கு இன்னோர் திருவிளையாடலை மின்னல் வடிவில் அரங்கேற்கிறது. பளிச் பளிச்சென்று வெட்டிச்சென்று இருளை பகலாக்கா முயன்று கொண்டிருக்கிறது மின்னல். மின்னல் தங்களை தாக்கிவிடுமோ என்று சரியாக பயந்தாலும் ஒரு மாதிரி கடவுளின் கருணையால் கொஞ்சநேரத்தில் நின்றுவிட்டது. நன்றாக நடு சமுத்திரத்தை நோக்கி அலையோட்டம் அவர்களை தள்ளிவிட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்கொருக்கா விட்டுவிட்டு நல்ல பலமான அலை அவர்களை தாக்கியபடியே இருந்தது. இந்தப்போராட்டம் கடலுக்கும் அவர்களுக்குமான உயிருக்கான போராட்டம். கடலோ தனது எல்லா அஸ்திரங்களையும் கொண்டு தான் வல்லவன் என்று நிருபிப்பதிலயே முனைப்பாக இருந்தது. இவர்களோ defensive game modeல். ஒவ்வாரு கணமும் எதாவது கரைவராதா மீட்பு உதவிவராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது நாள் செவ்வாய் காலையும் வந்துவிட்டது. உண்மையில் திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் இன்று மீண்டும் சிங்கப்பூருக்கு வெளிக்கிட்டுருக்க வேண்டும். ஆனால் நிருத்தி அரவிந்தன் பிரகாஷ் அண்ணா லங்காவியிலேயே தங்கி இவர்களை தேடும் பணியிலிருக்க மற்றவர்கள் வேறுசில கடமைகளுக்காக சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டுவிட்டனர்.
மத்தியானத்துக்கு சற்று தள்ளி மழை முகில்கள் சேர்ந்து மழை வருவதற்கான வாய்ப்புக்களை எதிர்வு கூறியபடி இருந்தது. வரப்போகின்ற மழையிலிருந்து மழைநீர் சேகரித்து தங்கள் தாக்குப்பிடிக்கும் சக்தியை அதிகரிக்க பிளாஸ்ரிக் பாக் எதாவது கடலில் ஆப்பிடுகின்றதா எனப்பாக்கின்றனர் கடலில் தத்தளிக்கும் கோபி சுபோ. ஒரு பை அவர்களது ஜெட்ஸ்கியை நோக்கி மிதந்து செல்வதை அவதானிக்க முடிந்தது. எட்டி லாவகமாக அதை தங்களின் வசப்படுத்துகிறார்கள்.
எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது அதன் நடுவில் ஓட்டை. சுபோசன் அண்ணா அதில் Made In Indonesia இருப்பதை வாசித்து சொல்கிறார். அதற்கு கோபிலன் நாங்கள் இந்தோனேசியாவை அடைந்திட்டம் போல? என அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சொல்லியிருக்கார். கனக்க நேரத்திக்கு பிறகு இருவரும் நன்றாக சிரிக்கிறார்கள். ஆனாலும் நிலமை அபாயக்கட்டத்தில் மேலும் உள்நோக்கி செல்கிறது.
அந்த சிறிய JetSkiஇலிருக்கும்போது அவர்களுக்கு ஒரு 20m தூரத்தில் சுறாக்கள் தங்கள் துடுப்புகளுடன் உலாவித்திரிவதை அவதானிக்க முடிந்தது. என்னப்பிரச்சினைகளுக்கெல்லாம் பயப்படுவோமோ எல்லாம் சேர்ந்து ஒருமிக்க மரணபயத்தை காட்டுகின்ற சூழ்நிலை. இரண்டுநாள் முழுதாக ஆகப்போகிற தருணம். கொடும்வெயில் வாட்டிஎடுத்து இவர்களது தோலெல்லாம் கருகிவிட்டது. மரணமும் எமனும் கிட்ட நிண்டு எகத்தாளம் போடுவதை இவர்களால் உணரமுடியாமல் இல்லை. வேறு வழியில்லாமல் இறுதியாக, தாங்க முடியமால் கடல்தண்ணியை குடிக்கிறார்கள். இதுவரை ஒரு துளி தண்ணியோ சாப்போடோ இல்லை. நட்ட நடு சமுத்திர வெயிலில்.
நீண்ட நேரம் கழித்து ஒரு மீன்பிடிப்படகு கண்ணிற்கு புலப்படுகிறது. இதைவிட்டால் கதை கந்தல். தங்களது Life Jacketஐ உயர்த்தி பிடித்து சைகை காட்டி அவர்களது புலத்திற்குள் தங்களை கொண்டுவர முயல்கின்றனர். பழைய குருடி கதவை துறடி போல இருந்த முதல் கத்தல் பின்னர் முயற்சி பலனளிக்கின்றது. அந்தப்படகு அவர்களை நோக்கி வருகின்றது. வெளிவீதி வலம் வரும் நல்லூர்க்கந்தனின் அழகை அருளை அந்தப்படகில் வரும் மீட்பர்களில் காண்கின்றனர். நாள்தோறும் பத்தோடு பதின்னொன்றாக காணமல் போவோரின் எண்ணிக்கையில் சேர இருந்தவர்களின் விதி மாற்றியமைக்கப்படுகிறது பலரின் வேண்டுதல்களால்.
அவர்களை கண்டவுடன் கத்தி அழுகிறார்கள். இரண்டு நாட்கள் சாவின் விளிம்பில் இருந்து தப்பிய அந்த உணர்ச்சியை ஒப்பிக்க ஒரு உவமையும் இல்லை. அவர்கள் காப்பாற்றி ஏற்றும்போதுதான் தாங்கள் தாய்லாந்தை நோக்கி வந்ததை உணர்கின்றார்கள். படகுக்கப்டன் கரையோரக்காவல்துறைக்கு தகவலளித்து பிடிபட்டவர்களை கூட்டிவர அனுமதிபெற்றார். கயிற்றுஏணி உதவியுடன் அவர்கள் உள்ளே ஏறுகின்றனர். JetSkiம் உள்ளே எடுக்கப்படுகிறது. 46மணி நேரப்போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.
குளிர்தண்ணீர், சாப்பாடு, watermelon போன்றன படகிலிருப்பவர்களால் வழங்கப்படுகிறது. முதன்முதலில் அமிர்தம் உண்ட உணர்வு இவர்களுக்கு. லங்காவியிலிருந்து ஏறத்தாழ 90km தூரம் கடல்அலை இவர்கள் தன்பாட்டிற்க்கு இழுத்துச் சென்றிருக்கிறது. அந்ததாய்லாந்து மீனவர்கள் இரண்டு நாட்களாக கடல் மோசமான நடத்தையை காட்டியதாக கூறினார்கள். தாய்லாந்து குடிவரவு குடியகல்வு அலுவலர்கள் மிகவும் அன்பாக இவர்களை மீண்டும் லங்காவி செல்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
லங்காவி சென்றதும் அரவிந்தன் நிருத்திகள் பிரகாஷ் போன்றோரின் பூரிப்பிற்கு அளவே இல்லை. பெரிய்ய எதிர்பார்ப்போடு வந்த சுற்றுலா இவர்களது சுற்றுலா இவ்வாறு சோகமாக மாறுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் பலரது வேண்டுதல்களால் கடவுள் ஒரு கவலையான முடிவை தருவதை தவிர்த்து பலருக்கும் பல படிப்பினைகளை கொடுத்திருந்தார்.
Note: இந்த திகில் சம்பவம் பற்றி விபரணப்படம்(Documentary film) நண்பர் குருபரன் அண்ணாவால் தயாரித்து வெளியிடப்பட இருக்கிறது. அந்த Teaserன் தொடுப்பு இங்கே.
நன்றி கடவுளே..
தகவல் உதவி: கோபிலன், நிருத்திகன்
| அமலன் பிரகாஷ் மணி சுபோசன் நிருத்தி கோபிலன் அரவிந்தன் பிரசன்னா |
வந்தவர்கள் இரண்டு இரண்டு சோடியாக பயணிக்கிறார்கள். முதலில் கோபிலன் சுபோசன் அண்ணாமார் சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். (உண்மையில் முதலில் கோபிலனும் நிருத்தியும் ஒன்றாகவே JetSkiல் செல்வதாக இருந்தது. ஆனாலும் பராசேலிங்(Para sailing) இலிருந்து நிருத்தி வருவது தாமதமாகியமையால். கோபிலனும் சுபோசனும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ) ஏறத்தாழ 20நிமிடப்பயணத்தின் பின் இவர்கள் பயணித்த JetSkiன் எஞ்ஜின் செயலிழக்கிறது. இதுவரை இருவரையும் அவ்வளவாக நெருங்காத சனி இவர்களை கட்டி அணைக்க ஆரம்பிக்கிறது. மீள எஞ்ஜினை தொடக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்காமல் போகிறது. அக்கணமே கடல் அந்த செயலிழந்த JetSkiஐ தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறது.
7மணி ஆகியிருந்தாலும் கடற்கரையில் இருக்கின்றபோது இருட்டாகின்றதை உணரமுடிவது கடினம். இருந்தபோதிலும் அப்படியே சூரியன் மறைகின்றபோது சடுதியாக கும்மிருட்டாகிவிடக்கூடிய, அபாயம் அப்போது இவர்களுக்கு எமனாக மாறுகிறது. இவர்கள் சுதாரிப்பதற்குள் கடும்வேகமாக இருளதொடங்குகிறது. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்பிக்க 2வழிகள்தான் அப்போது இருந்தது.
| கோபிலன் சுபோசன் JetSkiல் புறப்பட தயாராக |
இவர்களுடன் இந்த கடல் விளையாட்டுக்கு வந்த மற்றவர்கள் கரையை அடைந்து இவர்களுக்காக காத்திருக்கும்போதுதான் இவர்கள் காணாமல் போனது தெரியவருகிறது. உடனே JetSki சொந்தக்காரர்களுடன் சேர்ந்து இவர்களை தேட ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இவர்கள் தேடியது கொஞ்சம் கரையை அண்டித்தான். ஆனால் காணமல் போன அந்த JetSki கரையை கடந்து கொஞ்சம் ஆழ்கடலுக்கு சென்றது மட்டுமில்லாமல் கடல் அலையும் தன்பாட்டிற்கு இன்னும் உள்ளே அவர்களை இழுத்துக்கொண்டிருந்தது.
காப்பாற்ற சென்றோர் சென்ற JetSkiகளின் அசமாத்தத்தை காணாமல் போன கோபி சுபோ தூரத்தே கண்டிருந்தாலும் அவர்களை கூப்பிடவோ சைகை காட்டவோ முடியாத நிலை. காப்பாற்ற சென்ற படகு ஒன்று இவர்களுக்கு கொஞ்சம் அண்மையில் சென்றும், இவர்களது கத்தல் கேட்கவில்லை. கும்மிருட்டு நிலமையை மேலும் மோசமாக்கி கொண்டிருந்தது. இரவு 10மணி அளவில் JetSkiன் சொந்தக்காரர்களால் பொலீசுக்கு தகவல் அறிவிக்கப்படுகிறது .
JetSkiers, மற்றைய படகுகளில் தொடர்ந்த தேடுதல் அன்று நள்ளிரவு ஏறத்தாழ 12மணியை எட்டியும் பயனளிக்கவில்லை. அந்த ஞாயிறு இரவை கழித்தால் எப்படியும் மறுநாள் காலை தங்களை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை காணமல்போன சுபோ கோபிக்கு இருந்தது. ஆயினும் லங்காவியை விட்டு கடலலை தங்களை தூரத்தே தள்ளிக்கொண்டு போவதை அவர்களால் அப்போது உணர முடிந்தது.
மற்ற ஆறு பேரும் வாழ்க்கையை சுத்தசூனியமாக வெறுமையாக உணர்ந்தனர். ஹொட்டலுக்கு சாப்பாட்டை வாங்கிச்சென்று ஒருவரும் ஒருவருடனும் ஒரு வார்த்தை பேசாமல் கடமைக்கு சாப்பிடுகின்றனர். நிருத்தியும் கோபிலனும் ஒரே அறையிலே அந்த ஹொட்டலில் தங்கியிருந்தனர். கோபிலன் உபயோகித்த பச்சை தூவாய் அப்படியே கட்டிலில் விரித்தபடி கிடந்தது. அதை பார்த்தபோது கோபிலனே அங்க இருப்பது போல ஒரு பிரமையை நிருத்திக்கு ஏற்படுத்தி கிலேசப்படுத்தியது. குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறைசென்று கழித்தார் அந்த இரவை.
அடுத்த நாள் விடிய 8மணியளவில் நிருத்தி அரவிந்தன் அண்ணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு செல்கிறார்கள். அப்போது பொலிஸ் ஒரு JetSki கண்டெடுத்ததாகவும் அதில் Body ஒன்றும் பிடிபடவில்லை என்றும் சொன்னார்கள். தேடச் சென்றவர்களுக்கு இப்படியான தகவல் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதியில் அது காணாமல் போனோர் சென்ற JetSki இல்லை என்பது தெரியவந்தமை அவர்கள் எப்படியும் உயிரோடுதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது.
| நிருத்தி கோபிலன் காணமல் போக முத நாள் பகல் |
இதே நேரத்தில் சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மலேசியாவுக்கான இலங்கை தூதரகங்களிற்கு தகவல் அறிவிக்கப்பட்டு அவர்கள் மூலமான எதாவது உதவி கிடைக்குமா என்று இவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் விடுமுறை காலம் என்பதால் அவர்களின் மூலம் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு விடயம் அறிவித்தமையால் எதாவது செய்திகளில் வந்து இலங்கையில இருக்கிற அப்பா அம்மாக்கு தெரிய வந்தால் அதை அவர்களால் தாங்க இயலாது என்பதால் கடைசியாக நிருத்தி யாழ்ப்பாணத்திலுள்ள எங்களுக்கு தகவல் தர முடிவெடுக்கிறார். மதியம் போல் Tripற்கு வந்த மற்றவர்களும் இணைந்து காணாமல் போனவர்களின் பெற்றோருக்கு அறிவிப்பதன் அவசியத்தை வெளிப்படுத்த அவர்களின் உறவினர்களுக்கு தகவலளிக்கப்படுகிறது.
இதன்பின் மாறிமாறி இவர்களின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள். ”நீங்கள் அவர்களுடன் சண்டையிட்டீர்களா? ஏன் கடலுக்கு சென்று வீழ்நதார்கள்” என்று விளக்கமில்லாமல் சகட்டு மேனிக்கு கேட்கவும் செய்திருந்தார்கள். என்ன செய்வது எல்லாத்தையும் சகித்து அவர்கள் இயன்றளவு சமாதானமாக பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.
நேரம் போகப்போக அவர்கள் இன்னும் பிடிபடாமை அவர்கள் சென்ற JetSkiயை கூட கண்டுபிடிக்க முடியாமை அவர்கள் எங்கயோ தப்பி இருக்ககூடும் என்ற நம்பிக்கையை கூட்டியிருந்தது. இந்த நம்பிக்கைக்கு மகுடம் சூட்டுவதுபோல் இறுதிக்கட்ட மிகவும் பலமான ஆயுதம் தேடுதலுக்கு எடுக்கப்படுகிறது. Helicopter எடுத்து கொஞ்சநேரம் தேடுதலில் ஈடுபட்டால் அவர்கள் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு துளிர்க்கிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் High commissioner ஊடாக அதை செய்யலாம் என்றால் அவர்கள் விடுமுறையில் இருந்தமையால் அது கைகூடவில்லை.
நண்பர்களுக்காக இவர்கள் தேடி அலைவதை பார்த்த சுற்றுலாப்பயணி ஒருவர் அவர்கள் எப்படியும் இந்தோனேசியாவை அடைந்திருப்பார்கள். கவலைப்பட தேவையில்லை என்று ஆறுதல் கூறியிருந்தார். திங்கள் அன்று சப்பாடு ஒன்றுமே இல்லாமல், இவர்கள் விசர் பிடித்தவர்கள் போல் தேடுகின்றனர்.
Tourist செல்லும் உலங்குவானூர்தியை ஒரு அரைமணி நேரத்துக்கு வாடகைக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றிபெறுகின்றனர். நிருத்தியும் பிரகாஷ் அண்ணாவும் ஓட்டுனரோடு சென்று அவர்களை தேடுகின்றனர். தேடும்போது Helicopter கதவை துறந்தாலே வடிவாக கீழே பார்க்கலாம் கதவை துறக்கட்டா? என்ற ஓட்டுனரின் கேள்வியுடன் கதவு துறக்கப்படுகிறது. கதவை துறந்தால் இரண்டு பக்கமும் ஒன்றுமே இல்லை. அப்படியே வெளி.
ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு சரியாக இணைக்கப்பட்ட பட்டிகள்(belt) இல்லை. இருப்பது மிகவும் லூசாகவே இருக்கிறது. நடுக்கடலில் சென்று அங்கும் இங்கும் திருப்பும்போது அப்படியே நடுக்கடலில் தேடச்சென்றவர்களே விழக்கூடிய அபாயம். உயிர்காப்பு (life jacket) அங்கிகளே பொருத்தப்படவில்லை. அங்கே இருக்கும் கம்பிகளையே இறுகப்பற்றி தேடுகிறார்கள். நடுக்கடலில் உயரத்திலிருந்து குத்தன பார்த்தபடி ஒழுங்கான பட்டிகள் இல்லாமல் தேடுவதென்பது மிகவும் கடினமான காரியம். ஆயினும் தங்கள் நண்பர்களுக்காக உயிரை பணயம் வைத்து தேடல் தொடர்கிறது. பெரிய்ய எதிர்பார்ப்போடு மேற்கொண்ட இந்தத்தேடுதலும் இறுதியில் தோல்வியில் முடிகிறது.
இதேநேரம் காணமல் போனவர்கள் மலாக்கா கலவாய் ஊடாக அந்தமான் கடலுக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தனர். நடுவெயிலில் நடுக்கடலில் எந்தவொரு உதவிக்கான சமிக்ஞையும் இன்றி இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஒரு நாள் கடக்கப்போகிறது சப்பாடோ பச்சைதண்ணியே எதுவுமில்லை. இருவரும் ஒரே நேரத்தில் அயர்ந்தால் பிரச்சனை ஒருவர்மாறி ஒருவர்மாறி நித்திரை கொள்கிறார்கள். அதுவரை கிட்டத்தட்ட 15கப்பல்கள் தூரத்தே இவர்களை கடந்துபோகின்றது. இருக்கும் ஒரேஒரு ஆயுதம் இவர்களின் LifeJacket கடும் வெயில் இரவு நேரங்களில் கடும் குளிர்காற்று இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்க இருப்பது அது ஒன்று மட்டுமே.
இருந்த அனைத்துக்கதவுகளும் அடைக்கபட்டுவிட்டது. அந்தநாளுக்கான தேடுதல்களும் நிறுத்தப்டுகிறது. காணமல்போய் சரியாக ஒரு நாள் கழிந்துவிட்டது ஒரு முழுநாள் இரவும் அடுத்தநாள் பகலும். நடுக்கடலில் இருவர்மட்டும் அந்த சிறிய scooterல் சாப்பாடு தண்ணி இன்றி ஒருநாள் முழுவதும் இருப்பதென்பது எவ்வளவு கொடுமையான காரியம். நினைத்துப்பார்த்தலோ அடி வயித்தில் எதோ செய்யும்.
இந்த கடும் வெப்பபத்தில் வெந்தது பற்றி கோபிலன் அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
” மதிய நேரங்களில் சூரியனுடைய வெப்பம் மிக கொடூரமானது. சூரிய ஒளி கதிர்கள் நம்மை நேரடியாகவும் கடலில் ரிபிலக்சன் (reflection ) ஆகியும் தாக்கியது. இந்த குறிப்பிட்ட நேரங்களில் எமது கைமுடி எரிந்து மணப்பதை உணர்ந்தோம்! ”
இரண்டாவது இரவு திங்கள் ஆரம்பமாகிறது. இயற்கையும் தன் பங்கிற்க்கு இன்னோர் திருவிளையாடலை மின்னல் வடிவில் அரங்கேற்கிறது. பளிச் பளிச்சென்று வெட்டிச்சென்று இருளை பகலாக்கா முயன்று கொண்டிருக்கிறது மின்னல். மின்னல் தங்களை தாக்கிவிடுமோ என்று சரியாக பயந்தாலும் ஒரு மாதிரி கடவுளின் கருணையால் கொஞ்சநேரத்தில் நின்றுவிட்டது. நன்றாக நடு சமுத்திரத்தை நோக்கி அலையோட்டம் அவர்களை தள்ளிவிட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்கொருக்கா விட்டுவிட்டு நல்ல பலமான அலை அவர்களை தாக்கியபடியே இருந்தது. இந்தப்போராட்டம் கடலுக்கும் அவர்களுக்குமான உயிருக்கான போராட்டம். கடலோ தனது எல்லா அஸ்திரங்களையும் கொண்டு தான் வல்லவன் என்று நிருபிப்பதிலயே முனைப்பாக இருந்தது. இவர்களோ defensive game modeல். ஒவ்வாரு கணமும் எதாவது கரைவராதா மீட்பு உதவிவராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது நாள் செவ்வாய் காலையும் வந்துவிட்டது. உண்மையில் திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் இன்று மீண்டும் சிங்கப்பூருக்கு வெளிக்கிட்டுருக்க வேண்டும். ஆனால் நிருத்தி அரவிந்தன் பிரகாஷ் அண்ணா லங்காவியிலேயே தங்கி இவர்களை தேடும் பணியிலிருக்க மற்றவர்கள் வேறுசில கடமைகளுக்காக சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டுவிட்டனர்.
மத்தியானத்துக்கு சற்று தள்ளி மழை முகில்கள் சேர்ந்து மழை வருவதற்கான வாய்ப்புக்களை எதிர்வு கூறியபடி இருந்தது. வரப்போகின்ற மழையிலிருந்து மழைநீர் சேகரித்து தங்கள் தாக்குப்பிடிக்கும் சக்தியை அதிகரிக்க பிளாஸ்ரிக் பாக் எதாவது கடலில் ஆப்பிடுகின்றதா எனப்பாக்கின்றனர் கடலில் தத்தளிக்கும் கோபி சுபோ. ஒரு பை அவர்களது ஜெட்ஸ்கியை நோக்கி மிதந்து செல்வதை அவதானிக்க முடிந்தது. எட்டி லாவகமாக அதை தங்களின் வசப்படுத்துகிறார்கள்.
எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது அதன் நடுவில் ஓட்டை. சுபோசன் அண்ணா அதில் Made In Indonesia இருப்பதை வாசித்து சொல்கிறார். அதற்கு கோபிலன் நாங்கள் இந்தோனேசியாவை அடைந்திட்டம் போல? என அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சொல்லியிருக்கார். கனக்க நேரத்திக்கு பிறகு இருவரும் நன்றாக சிரிக்கிறார்கள். ஆனாலும் நிலமை அபாயக்கட்டத்தில் மேலும் உள்நோக்கி செல்கிறது.
அந்த சிறிய JetSkiஇலிருக்கும்போது அவர்களுக்கு ஒரு 20m தூரத்தில் சுறாக்கள் தங்கள் துடுப்புகளுடன் உலாவித்திரிவதை அவதானிக்க முடிந்தது. என்னப்பிரச்சினைகளுக்கெல்லாம் பயப்படுவோமோ எல்லாம் சேர்ந்து ஒருமிக்க மரணபயத்தை காட்டுகின்ற சூழ்நிலை. இரண்டுநாள் முழுதாக ஆகப்போகிற தருணம். கொடும்வெயில் வாட்டிஎடுத்து இவர்களது தோலெல்லாம் கருகிவிட்டது. மரணமும் எமனும் கிட்ட நிண்டு எகத்தாளம் போடுவதை இவர்களால் உணரமுடியாமல் இல்லை. வேறு வழியில்லாமல் இறுதியாக, தாங்க முடியமால் கடல்தண்ணியை குடிக்கிறார்கள். இதுவரை ஒரு துளி தண்ணியோ சாப்போடோ இல்லை. நட்ட நடு சமுத்திர வெயிலில்.
நீண்ட நேரம் கழித்து ஒரு மீன்பிடிப்படகு கண்ணிற்கு புலப்படுகிறது. இதைவிட்டால் கதை கந்தல். தங்களது Life Jacketஐ உயர்த்தி பிடித்து சைகை காட்டி அவர்களது புலத்திற்குள் தங்களை கொண்டுவர முயல்கின்றனர். பழைய குருடி கதவை துறடி போல இருந்த முதல் கத்தல் பின்னர் முயற்சி பலனளிக்கின்றது. அந்தப்படகு அவர்களை நோக்கி வருகின்றது. வெளிவீதி வலம் வரும் நல்லூர்க்கந்தனின் அழகை அருளை அந்தப்படகில் வரும் மீட்பர்களில் காண்கின்றனர். நாள்தோறும் பத்தோடு பதின்னொன்றாக காணமல் போவோரின் எண்ணிக்கையில் சேர இருந்தவர்களின் விதி மாற்றியமைக்கப்படுகிறது பலரின் வேண்டுதல்களால்.
அவர்களை கண்டவுடன் கத்தி அழுகிறார்கள். இரண்டு நாட்கள் சாவின் விளிம்பில் இருந்து தப்பிய அந்த உணர்ச்சியை ஒப்பிக்க ஒரு உவமையும் இல்லை. அவர்கள் காப்பாற்றி ஏற்றும்போதுதான் தாங்கள் தாய்லாந்தை நோக்கி வந்ததை உணர்கின்றார்கள். படகுக்கப்டன் கரையோரக்காவல்துறைக்கு தகவலளித்து பிடிபட்டவர்களை கூட்டிவர அனுமதிபெற்றார். கயிற்றுஏணி உதவியுடன் அவர்கள் உள்ளே ஏறுகின்றனர். JetSkiம் உள்ளே எடுக்கப்படுகிறது. 46மணி நேரப்போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.
| கோபிலன் சுபோசன் Lankgawkiல் மீண்டுவந்தபின் |
லங்காவி சென்றதும் அரவிந்தன் நிருத்திகள் பிரகாஷ் போன்றோரின் பூரிப்பிற்கு அளவே இல்லை. பெரிய்ய எதிர்பார்ப்போடு வந்த சுற்றுலா இவர்களது சுற்றுலா இவ்வாறு சோகமாக மாறுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் பலரது வேண்டுதல்களால் கடவுள் ஒரு கவலையான முடிவை தருவதை தவிர்த்து பலருக்கும் பல படிப்பினைகளை கொடுத்திருந்தார்.
| பிரகாஷ் அரவிந்தன் நிருத்தி சுபோசன் கோபிலன் |
நன்றி கடவுளே..
தகவல் உதவி: கோபிலன், நிருத்திகன்
Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
தற்போது நடைமுறையில் உள்ள Cricket rules பல காலங்காலமாக மாற்றங்களுக்குட்பட்டு தற்கால trendற்களுக்கமைவாக polish பண்ணப்பட்டவைதான். அப்படியான ஒரு விதி ஏற்படக்காரணமாக இருந்த சம்பவம் பற்றிதான் இந்தபதிவு சொல்லப்போகிறது.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளில் உலககிண்ணத்துக்கு ஒப்பானதாக கிரிக்கெட் கனவான்களால் மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப்போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில்தான். இப்பிடி 1932-33 பருவகாலத்தில் போட்டி நடைபெற இருந்த காலத்தில் அவுஸ்திரேலியான அணி துடுப்பாட்டத்தில் Bradman தலமையில் கப்பலமானதாக இங்கிலாந்தின் காதில் குச்சிய விட்டு ஆட்டுமளவிற்கு தனிக்காட்டு ராஜாக்களாக இருந்தது. துடுப்பாட்டத்தில் இதில் போட்டி வேற அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்துக்கு வெடிக்கலக்கம் போட்டி ஆரம்பமாக கனகாலத்துக்கு முதலே ஏற்பட்டுவிட்டது.
கேவலமான தோல்விகள் ஏற்படாமல் தடுக்க இங்கிலாந்து தலைவர் Jardine புத்திசாலித்தனமான(?) ஒரு திட்டத்தை வகுத்தார். துடுப்பாட்டவீரரின் உடம்பை தாக்ககூடிய Short pitch bouncing பந்துகளை leg stump lineல் அடிக்கடி போடவும் கூடுதலான வீரர்களை leg sideல் catching positionsகளில் சுற்றி அடிக்கி விடவும் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படியான உடம்பை பதம்பார்க்கும் பந்துவீச்சுக்களையே bodyline or leg theory bowling என்று சொல்கிறார்கள்.திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் Harold Larwood மற்றும் Bill Voce தேர்ந்தெடுக்கபட்டு திட்டமும் இரகசியமாக சொல்லப்பட்டது.
இங்கிலாந்து அணித்தலைவர் எதிர்பார்த்தபடி ஆஸி துடுப்பாட்டவீரர்கள் short pitch deliveriesக்கு மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள் தாக்குதலுக்குள்ளானார்கள் legsideல் விக்கெட்டோடு இணைந்த கால்வட்டத்தில் நிறைந்திருந்த களத்தடுப்பாளர்களுக்கு பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் Bert Oldfieldன் மண்டையோடு Harold Larwoodஆல் பதம்பார்க்கப்பட்டு உடைக்கப்பட்டது. இதே போட்டியில் Australia captain Woodfullம் எகிறிவந்த Larwoodன் பந்தால் நெஞ்சில் பதம்பார்க்கப்பட்டார். Wisden சஞ்சிகையால் இவ்வளவு காலம் விளையாடினதிலேயே மிகவும் கேவலமான டெஸ்ட் போட்டி என்று வர்ணிக்கப்பட்டும் பல சச்சரவுகள் குழப்பங்களை ஏற்படுத்திய தொடராக மாறி கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு புள்ளி குத்தப்பட்ட போட்டியாக மாறிப்போனது. எனினும் வலுவான அணியான அவுஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றியீட்டியது.
சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.
சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.
சர்ச்சைக்குரிய இந்த போட்டி தொடரின் பின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. Leg side ல் (onside) துடுப்பாட்ட வீரர் நிக்கும் விக்கெட்டுக்கு பின்னான கால்வட்டத்தில் விக்கெட் காப்பாளரை விட கூடுதலாக இரண்டு களத்தடுப்பாளர்களே நிற்க முடியும் என்ற விதி இந்த Bodyline Test seriesக்கு பிறகே MCCயால் கொண்டு வரப்பட்டது.
இது சம்பந்தமான சுவராஸ்யமான தகவல்களை இணையத்தில் தேடி விருப்பமுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமான topic. யாரும் ஒரு producer தயாரா இருந்தா ஒரு Super படமாவே எடுக்க கூடிய Test series.
திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
"பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்ட பாடகர்தான் மாணிக்கவிநாயகம். Soupபாடல்களுக்கு காலங்காலமாக கிடைத்துவரும் வரவேற்புக்கு இந்தபாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ”உன்னைநினைத்து” படத்திற்காக பலரின் அபிமான இசையமைப்பாளராக அந்த காலத்தில் இருந்த சிற்பியின் இசையில் இந்தப்பாடல் வெளிவந்திருந்தது. இந்தப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்தஇசையமைப்பாளர் விருதுகூட சிற்பிக்கு கிடைத்திருந்தது.
மற்ற பாடகர்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்தக்கூடிய கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான மாணிக்கவிநாயகம் திரைத்துறைக்கு வருவதற்கு முதலேயே பல பக்திப்பாடல் அல்பங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வந்துள்ளார். பெரும்பாலும் நெற்றிபூராக விபூதிப்பட்டையுடன் காணப்படும் இவருக்கு திரைத்துறையில் முதலாவது வாய்ப்பு கிடைத்தது இசையமைப்பாளர் வித்தியாசகர் மூலமாகதான். தில் படத்தில் ”கண்ணுக்குள்ள ஒருத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்தியாசகராலயே வழங்கப்பட்டது.
பாடகராக மட்டுமிருந்த இவர் தனுஷின் ”திருடா திருடி” படம்மூலமாக தன்னால் நடிக்கவும் முடியுமென்று காட்டியிருந்தார். தனது முதல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் typical அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் யுத்தம்செய் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
![]() |
| Manicka Vinayakam in Yedam Sei Movie |
![]() |
| Composer PravinMani |
பிரவீன்மணி இசையமைத்த Little John படத்தில் ”பூவுக்கு பிறந்ததாலே”, ஒற்றன் படத்தில் ”சின்னவீடா வரட்டுமா” போன்ற பாடல்களுக்கான மெட்டுக்கள் தன்னால் (மாணிக்கவிநாயகத்தால்) போடப்பட்டதாகவும் அதில் முதலாமதுக்கான அங்கீகாரம் பாடல் கசட்டில் பெயர் போடப்பட்டதன் மூலம் கிடைத்ததாகவும் மற்றதுக்கு கிடைக்கவில்லையும் என்று கூறியிருந்தார். எனினும் நட்பின் காரணமாகவே அந்த உதவி செய்ததாகவும் இதற்காக யாரையும் தான்குறைபட்டதில்லையெனவும் கூறியிருந்தார்.
மேலும் இப்படியாக உதவியாளர்களால் போடப்படும் மெட்டுக்களும் பெரிய்ய இசையமைப்பாளர்களின் பெயர்களில் இறுதியில் வெளிவருவதாகவும் உண்மையில் யார் உண்மையான மெட்டுக்கு சொந்தக்காரர் என்பது அறியமுடிவதில்லையென்றும் இது தமிழ்சினிமாவின் துர்ப்பாக்கியம் என்றுகூட சொன்னார் மாணிக்கவிநாயகம்.

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-I (Steven Smith)
இந்த தொடர் பதிவு இந்தவருடம் 2012ல் IPL சிறப்பாக செயற்பட்டுவரும் என்னை கவர்ந்த வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்களின் teamற்கான சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது. முதலாவது பாகத்தில் Pune Warriors Indiaன் வீரர் Steven Smithஐ பற்றி பார்ப்போம்.
Steven Smith
இவரை பெரும்பாலோனோருக்கு 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த T20 உலகக்கிண்ணபோட்டிகளிலே பெரிதாக தெரியவந்திருக்கும். All rounder ஆக அறிமுகமான இவர் அந்த போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்திருந்தார். கிட்த்தட்ட Shane Warneஐ போன்ற பந்துவீச்சுப்பாணியை கொண்ட இவர் பற்றிங் பண்ணும் பாணியும் கொஞ்சம் வித்தியாசமானது. பற்றை நிலத்தில் ஊன்றாமல் அந்தரத்தில் வைத்து காற்றடிப்பது போல மேலும் கீழும் அசைத்தபடி துடுப்பெடுத்தாடும் unorthodexபாணியிலான துடப்பாட்டம். நன்றாக களத்தடுப்பினால் இவர் அணியை நன்றாக Active ஆக வைக்ககூடியவர். T20ல் அறிமுகமாகி ODI போட்டிகளிலும் Australia அணிக்காக ஆடத்தொடங்கிய இவர் குறைந்த காலத்திலேயே Test போட்டிகளிலும் விளையாட தொடங்கினார். மிகவும் இளவயதிலேயே இவரை கூடுதலான எதிர்பார்ப்போடு எடுத்து இவரது careerஐ வீணாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் இருந்து வருகிறது.
பலரால் விரும்பப்பட்ட விரராக இருந்தாலும் All rounder என்ற பெயரில் fielding மட்டுமே உருப்படியாக செய்து கொண்டு batting, bowling இரண்டிலும் போதிய consistentஇல்லாது சறுக்கியபடி இருந்தமையால், ஏன் இவர் Australian teamல இன்னும் இருக்கிறார் என்ற சந்தேகம் என்னைப்போல் பலரக்கும் ஏற்பட்டது. முக்கியமாக இங்கிலாந்து எதிரான 2010-2011 Ashes Seriesல் வாய்ப்புக்கிடைத்த மூன்று போட்டிகளிலும் சறுக்கி Ashes கிண்ணம் இங்கிலாந்து பக்கம் போக ஒரு காரணமாக இவரும் இருந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியான இவரின் சறுக்கல்களால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து அணியில் தூக்கப்பட்ட இவர் பின்னர் T20, ODIல இருந்து தென்னாபிரிக்கா சுற்றுலாவின் பின் நீக்கப்பட்டார்.
2011ன் இறுதியளவில் Australia உள்ளுர் போட்டியான BIG BASHல் சூப்பர் என்று சொல்லாவிடினும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியிருந்த Steven Smithஐ Pune Warriorsல் தெரிவு செய்தமை என்னை பொறுத்தவரை ஆச்சரியமாகத்தான் இருந்தது. தேசிய அணியிலேயே இடம் கிடைக்காத ஒருவரை மினக்கெட்டு overseas வீரராக தெரிவது ஏன் என்று சரியாக புலப்படவில்லை. உண்மையில் ஸ்டீபன் ஸ்மித் திறமையானவர் என்றாலும் தொடர்ச்சியான சறுக்கல்கள்தான் பலருக்கும் அவரின் மேலான நம்பிக்கை தளர்ந்துபோக காரணமாயிருந்தது.
ஆனால் IPLல் தான் விளையாடிய மும்பைக்கெதிரான முதல் போட்டியிலேயே 39ஓட்டங்கள் (low scoring game) எடுத்து Man of the Match ஆகி அணியில் தனது தெரிவுக்கான தேவையை உறுதிப்படுத்தினார். என்னைப்போல அவரை ஜோக்கர் போல பார்த்த பலருக்கும் மூஞ்சையில் கரியப்பூசினார். இவரது சிறிய கண்ணும் கொஞ்சம் கொழுகொழுப்பான உடலமைப்பும் முள்ளுமுள்ளுப்போன்ற தலையும் ஒரு ஜோக்கர் போன்ற ஒரு தோற்றத்தையே பாக்கிறவர்களுக்கு ஏற்படுத்தினாலும் இப்போது இவரின் ரசிகனாக மாறியவர்களில் நானும் ஒருவானாகிறேன்.
IPLல் பெரும்பாலும் 4வது இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து கடைசி நேரங்களில் அணிக்கு தேவையான ஓட்டங்களை அதிரடியாக குவித்து வந்தார். Kings XI Punjabற்கெதிராக 25(12), CSKஎதிராக 44*(22) Delhi எதிராக 34*(13) Decanஎதிராக 26(13), 47*(27) என்று புகுந்து அதிரடி அராஜகம் செய்திருந்தார். இவரது தொடர்ச்சியான கடும் போம் காரணமாக 4வது இலக்க துடுப்பாட்டத்திலிருந்து 2வதாக கடைசி 3போட்டிகளில் உயர்த்தப்பட்டார். அதில் முதல் போட்டியில் 47 எடுத்தாலும் கடைசி இரண்டிலும் 2, 14என்று சறுக்கியிருந்தார்.
இவரது பங்கு துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது களத்தடுப்பு, அணியை துவண்டு விடாமல் inspireபண்ணுவதிலும் முக்கியமாக இருக்கிறது. இவர் பந்துவீசக்கூடியவராக இருந்தும் அணித்தலைவர் கங்கூலி இவருக்கு இதுவரை பந்துவீச வாயப்பு வழங்காதது பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது. நல்ல போமில் இருக்கும் இவர் வாய்ப்பு வழங்கப்பட்டால் bowlingலயும் கலக்குவார் என்பது என்னைப்போல இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாயிருக்கிறது.
சனிக்கிழமை கொல்கத்தாவுடனான போட்டியில் இவரது களத்தடுப்பு இவர் என்ன சூப்பர்Mana என்று commentators மற்றும் பார்வையாளர்கள் கேட்குமளவிற்கு இருந்தது. 6 ஓட்மென்று கருதப்பட்ட பந்தை அலேக்காக வானில் பாய்ந்து தனது கைகளுக்குள் அகப்படுத்தி கொண்டாலும், தான் எல்லைக்கோட்டை கடந்து செல்லக்கூடிய வாய்ப்பிருந்தமையால் அதை அப்படியே உள்ளே எறிந்து அந்த 6ஓட்டத்தை 2ஓட்டமாக்கயிருந்தார். அந்தப்போட்டியை பார்த்தவர்களுக்கு அது என்னதொரு brilliant attempt எண்டு தெரிந்திருக்கும். கையை தேய்த்து தேய்த்து வாயால் கையை ஊதி ஊதி களத்தடுப்பில் ஈடுபடும் இவரது பாங்கு அற்புதமாயிருக்கும்.
இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை IPLலிலும் மீண்டும் Australia அணியில் விரைவிலும் பார்ப்போம். இந்த வருட IPLல் என்னைக்கவர்ந்தோரில் இவர் முக்கியமான இடத்திலுள்ளார்.
Steven Smith's அந்த அற்புதமான fieldingஐ பார்க்க..
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew
தலைநகர் கொழும்பின் திரையரங்குகள்- I (Premier Concord Cinema)
இந்த தொடர்பதிவை 2வருசத்துக்கு முதலே எழுதோணும் எழுதோணும் என்று யோசிச்சு எழுத பஞ்சியில கனக்க காலமா எழுதாமேயே விட்டுட்டன். ஒரு மாதிரி கடைசியா எழுதிடோணும் எண்டு தொடங்கிறன். இந்த தொடர் பதிவுகளில் நான் தலைநகர் கொழும்பில் படம் பார்த்து ரசித்த தியெட்டர்களை பற்றிய ஒரு அலசலை தர இருக்கிறேன். நிறைகள் குறைகள் அங்கே கடைப்பிடிக்ப்படும் நடைமுறைகள் போன்றவை இயலுமானவரை இந்தபதிவில் தரப்பட உள்ளது.
இதன் முதல் பாகத்தில் கொழும்பு தெஹிவள கொன்கோர்ட் திரையரங்கு பற்றி பார்க்கவுள்ளோம். பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவள போன்ற இடங்களிலிருக்கும் அதிகமாக தமிழ் பேசுவோர், கூடுதலாக விரும்பிச்செல்லும் திரையரங்கு இதுவாகத்தானிருக்கிறது. வெகு இலகுவாக சென்றடையக்கூடிய இடத்தில் கொழும்பின் முக்கியமான நகரப்பகுதியில் இத்திரையரங்கம் இருக்கின்றமை இதன் கூடிய நன்மை. காலி வீதியில் வெள்ளவத்தயிலிருந்து தெஹிவள நோக்கி செல்லும்போது தெஹிவள நாற்சந்திக்கு முதல் பஸ்தரிப்பிற்கு மிக அண்மையிலிருக்கிறது இந்த திரையரங்கம்.
முக்கியமான பலபடங்களை எடுத்து வெளியிடும் EAP Films & Theatres நிறுவனத்திற்கு சொந்தமான பல திரையரங்குகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. மொத்தமாக 409 பேர் அமர்ந்து பார்க்ககூடிய இந்த திரையரங்கில் 294 - ODC 104 - Balcony 6 - Box(6x2=12) ஆசனங்கள் உள்ளது. குளிருட்டப்பட்ட (A/C)வசதியுள்ள பெரும்பாலும் தமிழ்ப்படங்களே திரையிடப்படும் இந்த தியட்டரில் எப்பாவது அத்திபூத்தாப்போல ஹிந்திப்படமும் திரையிடப்பட்டிருக்கிறது. 2008ஆண்டளவிலென்று நினைக்கிறேன், கிட்டத்தட்ட 3மாதங்களாக இந்த தியட்டரில் தமிழ்ப்படங்கள் திரையிடாது ஹிந்தி படங்களை மட்டும் வெளியிட்டு ஈ ஓட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சக்காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை திரையிடத்தொடங்கியிருந்தார்கள். என்ன பிரச்சைனயால் அந்த நிலை வந்திருந்தது என்று தெரியவில்லை.
தற்போது தலைநகரில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் பலவழிகளிலும் அளவான காசுக்கு நல்ல வசதியான தியட்டர் என்று என்று சொல்லக்கூடியது இந்த Concord திரையரங்குதான். Reasonable பணத்துக்கு படம் பார்க்கலாம், நல்ல குளுகுளு என்று குளிரூட்டபட்ட வசதி, சிறந்த dts ஒலியமைப்பு, Adjustable cushion ஆசனங்கள் என்று பலவகைகளிலும் தேவையான வசதிகளை கொண்ட இந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் விரும்பி செல்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
ODC - 235/= Balcony - 310/= Box(2)-420*2=840 போன்ற கட்டணத்தில் Concord திரையரங்கில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. மற்ற தியட்டர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் வழங்கப்படும் வசதிகளுக்கு இது நல்ல reasonableஆனா கட்டண அறவீடுதான். கொழும்பில் A/C + dts வசதியுடன் குறைவான கட்டணம் அறவிடும் தியட்டராக Concordதான் இருக்கிறது. பெரும்பாலும் எந்த பெரிய்ய நடிகர்களின் படமென்றாலும் முதல்நாளிலும் ஒரே மாதிரியான கட்டணங்கள்தான் அறவிடப்படும். (இதுவரை விஜய் அஜீத் சூர்யா போன்றோரின் படங்களுக்கு கூட அவ்வாறே நடந்திருக்கிறது. நான் பார்த்தவரை ரஜினியின் சிவாஜிக்கு மாத்திரமே சற்று கூடுதலாக அறவிட்டிருந்தார்கள்.)
எனினும் நீங்கள் 235/= ODC Ticketக்காக 250/= கொடுக்கும் பட்சத்தில் மீதி 15/= தருவார்கள் என இங்கே எதிர்பார்க்கேலாது அனேகமாக தரவும் மாட்டார்கள். எனவே சரியாக 235/=கொடுத்தால் உங்களுக்குதான் நன்மை. சிலபேர் மடைத்ததனமாக முதல் நாள் ரிக்கெட் விலை கூடவாக இருக்கும் என்று கூடுதலான விலைகளை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். கூடக்கொடுத்துவிட்டு சரியான மக்கள் கூட்டத்தில் மீதிக்காசை தருவார்கள் என எதிர்பார்ப்பது கல்லில நார் உரிப்பதைப்போல கடினமானது.

இந்த தியட்டரில் மக்கள் ஒழுங்காக வரிசையில் செல்வதற்குரிய கம்பிவேலிகள் அமைப்பு நிண்டதூரத்துக்கு இல்லை. ஒரு 5பேர் நிற்பதற்குரிய அளவுதான் ODCற்கு செல்பவர்களுக்கு ஒரு பக்கமும் Balconyக்கு மற்ற பக்கமும் இருக்கிறது. எனவே வேளைக்கு செல்பவர்கள் அதிகளவான சனக்கூட்டமான நாட்களில் கூட படத்தை பார்க்க முடியும் என்றில்லை. முண்டியடித்துக்கொண்டு ஆக்களை தள்ளிக்கொண்டு உள்ள செல்ல பலம் இருந்தால் எப்பிடியான சனக்கூட்டத்திலும் இந்த தியட்டரில் படம் பார்த்து விடலாம். இல்லாவிட்டாலும் படம் வெளியாகி ஒரு கிழமை கழித்துதான் இலகுவாக பார்க்கலாம்.
இருப்பினும் புடங்குப்பாடு குறைந்தவழியில் படம்பார்க்கவும் ஒரு கள்ளவழி இருக்கிறது. பொதுவாக Balconyக்கு செல்லும்பக்கத்தில் நிற்கும் கூட்டம் ODCபக்கம் நிற்கும் கூட்டத்தை விட வெகு குறைவாகதான் இருக்கும். So Balcony பக்கமாக நின்று எப்பிடியாவது உள்ளே சென்றுவிட்டால் balcony counter மற்ற பக்கம் என்றாலும் இலகுவாக அங்கு சென்று ODC ticketஐயே எடுத்து குறைந்த பணத்திலேயே படத்தை ரசிக்க முடியும். இதுவரை இந்த techniqueஐ பாவிச்சுதான் இலகுவாக படம் பார்ந்திருக்கிறேன். இதையே எல்லாரும் தொடங்கினாங்க எண்டா என்பாடு திண்டாட்டமதான்.
பொதுவாக 10.30AM, 3.00PM, 7.00PM போன்ற 3நேரக்காட்சிகள்தான் திரையிடப்படுகின்றன. எனினும் புது படம் வெளியிடப்படுகின்ற தருணங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் தொடக்க நாட்களில் (முதல் கிழமைவரையிலான நாட்களில்) 4நேரக்காட்சிகளாக 10.30AM, 1.30PM, 4.30PM, 7.30PM நேரங்களில் திரையிடப்படுகின்றன. எனவே உங்களுக்கு காட்சிநேரங்கள் தெரியாத பட்சம் phone பண்ணி கேட்டு சரியான நேரம் செல்வது நல்லது. எனக்கு தெரிந்தவர்கள்கூட காட்சி நேரம் தெரியாது வந்து தங்களது நேரத்தை வீணாக வீணாக்குவதுண்டு. இப்பொழுது Online booking வசதியும் இதற்கு வழங்கப்படுகிறது. இதில் பார்த்த முதல் திரைப்படம் வரலாறு. நான் இதுவரை கூடுதலாக படம் பார்த்த தியட்டர் இதுதான்.
Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord Telephone : 0117 549630,
அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.
![]() |
| Counter |
![]() |
| Projector's room |
Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord Telephone : 0117 549630,
அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.
திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)
![]() |
| Composer Vidyasakar |
![]() |
| Composer Thaman |
------------------------------------------------------------------------------
இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
| Singer Solar Sai |
------------------------------------------------------------------------------
”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
![]() |
| Composer Sathya |
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
பதிவர் கார்த்தியின் Ideaகளை ”ஒஸ்தி”க்காக யுகபாரதி சுட்டாரா?
அதிரடி மசாலா இயக்குனர் தரணியின் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த மாதம் 18ம் திகதி வெளிவரவுள்ள படம்தான் ஒஸ்தி. படத்தின் பாடல்கள் ஏறத்தாழ 2கிழமைக்கு முதலே வெளிவந்திருந்தது. அதிரடியாக தமனின் இசையில் வந்திருந்த பாடல்களுக்கு இளவட்டங்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்திருக்கின்றது.
![]() |
| சிம்பு மல்லிகாசெராவத் |
இந்த பாடல்களில் ”நெடுவாலி அடியே நெடுவாலி” என்று தொடங்கும் ராகுல் நம்பியார் மற்றும் மகதி பாடும் பாடல் யுகபாரதியால் எழுதப்பட்டிருந்தது. அதில் வரி ஒன்று ”கண்” "GUN" என்று rhymingஆகாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த வரிகள் கீழே
அட டுமீலுதான் அட டுமீலுதான்
மாமன் Gunல சுட்டா டுமீலுதான்!!
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்!!
மாமன் Gunல சுட்டா டுமீலுதான்!!
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்!!
![]() |
| யுகபாரதி |
ஆனால் இதே மாதிரி rhymingகான வரியை பதிவர் ”கார்த்தி” (அங்கென்ன பார்வை? அதாங்க நான்) 2011 காதலர் தின பதிவில் (2011-02-14) உபயோகித்திருந்தார். அதைப்பார்த்து impress ஆகிதான் கவிஞர் யுகபாரதி தனது பாடலில் இதே மாதிரி வரிகளை சிறப்பாக உபயோகித்திருக்கிறார். 2000ல் வெளிவந்த Memento பார்த்து AR.முருகதாஸ் அதைவிட சிறப்பாக திரைக்கதை அமைத்து ”கஜினி” தந்தது மாதிரி. கார்த்தியின் வரிகள் கீழே உங்களுக்காக.
உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ?
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ?
இப்ப சொல்லுங்க சார். கார்த்தியிட்ட சொல்லாம யுகபாரதி Ideaவை ஆட்டைய போட்டது தப்பா இல்லையா? தப்புதானே? உங்கட ஆதரவ பொறுத்து நஷ்டஈடு வழக்கு போடுற பிளான்ல இருக்கிறேன்.
டிஸ்கி: இது ஒரு செமமொக்கை பதிவு மாமு! யாரும் சீறியஸா எடுத்து சொறிஞ்சா நான் பொறுப்பில்ல. ஏன் டிஸ்கிய பதிவின்ர தொடக்கத்துலதான் போடணுமா? நாங்க கடைசியா போடுவமுல்ல.
தினகரன் பத்திரிகையால் சுடப்பட்ட எனது பதிவு!
போன வாரம் எனது தளத்தில் "உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்" எனும் தலைப்பில் பிரசுரித்த பதிவொன்று (பேட்டியொன்று) அப்படியே அச்சொட்டாக களவாடப்பட்டு, ஒரு அறிவறுத்தலும் எனக்கு தரப்படாது நேற்று 2011 Augus 11ல் ”தினகரன்” பத்திரிகையில் ஒரு பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. (அடுத்த பகுதி எப்போதோ தெரியவில்லை. தொடரும் என்று போடப்படிருந்தது). உண்மையில் அந்த பதிவை, தர்ஜினி என்னும் திறமை மிக்க தமிழ் வீராங்கனையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பதிந்திருந்தேன். உண்மையில் அதை மீள தினகரன் பத்திரிகையில் பிரசுரித்தமை நல்ல ஒரு விடயம்தான்.
தினகரன் பத்திரிகையில் மீள் பிரசுரமாக்கப்பட்ட எனது பதிவு! படத்தின் இடதுகை கீழ் மூலையில் ”View Full Image” பகுதியை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். புதிதாக தோன்றும் சிறிய Windowஐ வலது மேல் மூலையில் "X" கிளிக்கியோ இல்லது scroll செய்து எனது தளத்தை மெதுவாக press செய்தோ பழைய viewற்கு வாருங்கள்.

எனினும் அந்த பதிவை கஸ்டப்பட்டு இட்ட உரிமையாளரான எனக்கு ஒரு அறிவித்தல் கூட தராமல், நன்றி என்று கூட போடாமல் தாங்களே எடுத்தது போல் போடுவது ஊடகதர்மத்திற்கு உகந்ததோ என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் பல பதிவுகளை பதிவர்களாகிய நாங்கள் கஸ்டப்பட்டு போடும்போது, அவர்களிற்குரிய உரிய கௌரவம் தராது அப்படியே கொப்பி செய்து போடுவது எம்மை வருத்தத்திற்குள்ளாகும் செயல். நாங்கள் இதற்காக பொருளா பண்டமா கேட்கிறோம்? ஒரு மூலையிலாவது நன்றி என்றாவது எங்கள் பெயரையும் போடலாம்தானே! சரி அவ்வாறு கூட வேண்டாம் போட முதல் ஒரு வார்த்தையாவது e-mail மூலமாக சொல்லலாம்தானே! பத்திரிகை நண்பர்களே இனியாவது இதை கொஞ்சம் கவனியுங்கள்.
எனது அசல் ஆக்கம்
http://vidivu-carthi.blogspot.com/2011/08/netball.htmlதினகரன் பத்திரிகையால் சுடப்பட்டு வந்தது
பிற்சேர்க்கை: நேற்று இந்த தகவல் அறிந்ததும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களின் பிழையை தெரிவித்திருந்தேன். அதற்கு அவர்களின் பதில் வரவில்லை. ஆனால் இன்றைய பதிப்பில் (http://www.thinakaran.lk/jaffna/?id=06&tday=2011/08/16) மீதி பேட்டி வந்திருந்தது. அதில் நன்றி பொட்டலம் வலைப்பூ எனப்போடப்பட்டிருந்தது! இறுதியிலாவது அதன் மூலத்தை போட்டமை பராட்டுதற்குரியது. நன்றிகள்
பயனுள்ள கற்கைநெறி - Transport & Logistics Management
டிஸ்கி: இந்த கட்டுரை மாதாமாதம் வெளிவரவிருந்த ஒரு சஞ்சிகைக்காக ”மாதமொரு பயனுள்ள கற்கைநெறி” என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கற்கைநெறியாக இளம் மாணவர்களுக்கு அறிவுறுத்த சிலவற்றை தெளிவுபடுத்த எழுதப்பட்டதாகும். ஆயினும் இறுதிநேரத்தில் ஏற்பட்ட தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அந்த சஞ்சிகையும் இந்த கட்டுரையும் வெளிவராமல் போனது. என்றாலும் எனது இந்த கட்டுரைக்கான உழைப்பை வீணாக்காது எந்தவொரு மாற்றமும் செய்யாமல் இங்கே பதிகின்றேன். இதனால் ஒருவர் பயன்பெற்றாலும் நல்லதுதானே!
நன்றி: இந்த கட்டுரைக்கு தேவையான விளக்கங்கள் உதவிகள் வழங்கிய இந்த கற்கை நெறி கற்று வெளியேறிய நண்பன் நோபேர்ட்டுக்கு நன்றிகள்.
-----------------------------------------------------------------------
அந்தக்காலத்திலிருந்தே தமிழர்கள் நாங்கள் சில வகுக்கப்பட்ட வரையறை விதிமுறைக்குள் இருந்து கொண்டு அதைவிடுத்து சற்று வெளியே வருவதை, முன்னோக்கி சிந்திப்பதை, செயல்படுவதை குறைத்து, தவிர்த்து வந்துள்ளோம். ஆனைத்து விடயங்களிலும் பெரியவர்கள் சொல்வதுதான் சரி என்று எடுத்து அதன்படி சொந்தமாக யோசிக்காமல் நடப்போமானால் ஏற்படும் விளைவுகள் எல்லா நேரங்களிலும் எமக்கு சாதகமாக இருக்காது!
அந்தக்காலத்திலும் ஏன் இந்தக்காலத்திலும் கூட உயர்தர மாணவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் பலர் உயர்தரத்தில் உள்ள துறைகளில் உயர்வான கற்கைநெறிகளை மட்டும் மேற்கோள் காட்டி 'அந்த துறைகளுக்குதான் நீங்கள் நல்லா படிச்சு போகவேண்டும். இல்லாட்டி கஸ்டம்' என்று தொடர்ச்சியாக கூறி வருவதை நீங்கள் கண்கூடாக கண்டிருப்பீர்கள். உதாரணமாக கணிததுறை எனின் பொறியியல்(Engineering) விஞ்ஞான துறை எனின் மருத்துவம்(Medicine) வர்த்தகதுறை எனின் முகாமைத்துவம்(Management) போன்றன மட்டும்தான் அந்தந்த துறைகளில் சிறந்தது என்பது போலவும் அதைதான் படிக்கவேண்டும் மாற்று கற்கைநெறிகள் இல்லை என்பது போலவும் ஒரு பிரமையை மாணவர்கள் மத்தியில் இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகள் விதைத்து விடுவதுண்டு. சிலவேளைகளில் ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவதன்மூலம், அனைவரையும் ஒழுங்காக படிக்க செய்து நல்ல துறைகளுக்கு அனுப்பிவிடலாம் என்ற நப்பாசையும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் அந்த காலகட்டத்தில் பக்குவப்படாத வயதில் இருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் சில பிழையான மன எண்ண ஓட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதாவது மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்த இயலாத மாணவன் ஒருவன் இவ்வாறான கருத்துக்களால் தன்னால் என்னதான் படித்தும் இப்படியான நல்ல துறைக்கு போக முடியாது எனவே பேசாம சும்மா சாட்டுக்கு படிச்சிட்டு இருந்திடலாம் என நினைத்து படிப்பில் ஒழுங்காக கரிசனை செலுத்த முடியாமல் போய்விடக்கூடிய சாத்திய கூறுகள் நிறையவே இருக்கின்றது
எனவே மாதா மாதம் வரவுள்ள இத்தொடர் கட்டுரையானது உயர்தரத்தில் உள்ள வேறுபல பிரயோசமான கற்கைநெறிகளையும், அதை கற்க தேவையான அடிப்படை தகுதிகளையும், படிப்பிக்கப்படும் பாடப்பரப்புக்களையும், அதன் எதிர்கால வேலைவாய்ப்புக்களை பற்றியும் சற்று மேலோட்டமாக அலச முற்படுகிறது.
அந்தவகையில் உயாதரத்தில் கணிதபிரிவில் பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்ககூடிய Transport & Logistics Management கற்கைநெறி பற்றி இந்த மாதம் பார்க்கலாம். உயர்தரத்தில் உள்ள மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது கணிததுறையானது பல்லைக்கழகத்திற்கு செல்லக்கூடிய பல கற்கைநெறிகளை கொண்டுள்ளது. இதிலும் முக்கியமாக வேலைவாய்ப்புக்களை இலகுவில் பெற்றுதரக்கூடிய கற்கைநெறிகளை கொண்டிருத்தல் கணிததுறையின் இன்னோர் சிறப்பம்சமாகும்.
Transport & Logistics Management
இந்தமாதம் பார்க்கும் இந்த கற்கை நெறியை போக்குவரத்தும் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் என்று தூய தமிழிலும் Transport & Logistics Management என்றும், சுருக்கமாக TLM என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். உயர்தரத்திலிருந்து இந்த கற்கை நெறிக்கு செல்ல அடிப்படையாக கணிததுறையில் உள்ள முக்கிய மூன்று பாடங்களிலேயும் (இணைந்த கணிதம் பௌதீகவியல் இரசாயனவியல்) குறைந்த பட்சம் சாதாரண சித்தி(S) அடைந்திருக்க வேண்டும். அதாவது சுருங்க கூறின் மூன்று பாடங்களிலும் சித்திபெற்ற ஒருவரால்தான் இந்ததுறைக்கு விண்ணப்பிக்க முடியும்..
பின்னர் அந்தந்த மாவட்டங்களுக்கான Z வெட்டுப்புள்ளியின் அடிப்படையிலேயே அவர்களின் தெரிவு உறுதிப்படுத்தபடும். 2006லேயே முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கற்கைநெறிக்காக வருடாவருடம் 50பேரளவில் நாடு பூராகவும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றனர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஒரு பிரிவாகவே இந்த கற்கைநெறி இருப்பதால் இந்த பாடநெறிக்கான வரவேற்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. நான்கு வருடங்கள் நீடிக்கும் இந்த கற்கைநெறியின் முடிவில் B.Sc.(TLM) Hons பட்டம் கிடக்கபெறும்.
இந்த Transport & Logistics Management பாடநெறியானது 2006ம் ஆண்டிலேயே மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது 2005ல் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு முதன்முதலில் இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எமது நாட்டில் உள்ள பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருட்கள் பண்டங்களின் விநியோகம் போன்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் முறைப்படி பயிற்றப்பட்ட துறைசார் வல்லுனர்களின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்தமையின் விளைவே இதற்கான தனியான ஒரு துறை ஆரம்பிக்க ஏதுவாயமைந்தது.
தற்போது இந்த பாடநெறியின் துறை தலைவராக (Head of the Department) மதிப்பிற்குரிய கலாநிதி T.சிவகுமார் இருப்பது தமிழர்களாகிய எமக்கும் பெருமை. இவர் எம்மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது தமிழ் மாணவர்கள் ஒழுங்கு செய்யும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்துபவர்.
![]() |
| Dr. T. Sivakumar B.Sc. Eng (Peradeniya), MEng (AIT)PhD (Japan), AMIE (SL) |
இந்த பாடநெறியை கல்வி பயில்வதன் மூலம் ஆரம்பத்தில் முகாமைத்துவம் சம்பந்தமான நிறைவேற்று அதிகாரிகளாக பல இடங்களில்; வேலைவாயப்பை பெறும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆத்தகைய இடங்களாக பயணவர்த்தகதுறைகள், விமானநிலையங்கள், துறைமுகங்கள், பொருட்கள் சரக்குகள் விநியோக கம்பனிகள், கப்பல்போக்குவரத்து கம்பனிகள், பொதுபோக்குவரத்து துறைகள், பொருட்கள் உற்பத்தசெய்யும் கம்பனிகள், ஆராய்ச்சி ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், திட்டமிடல் செயற்பாட்டு நிறுவனங்கள், உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்கள், களஞ்சியப்படுத்தல், பொருட்கள் விநியோக நிறுவனங்கள் போன்றன அமைகின்றது.
பின்னர் அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து இன்னும் உயர்ந்த பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது. நான் ஏலவே குறிப்பிட்டவாறு தொழில்துறையில் நிலவிய கேள்வியின் அடிப்படையிலேயே இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டமையாலும் மிகவும் அண்மையிலேயே தொடங்கப்பட்ட புதிய பாடதுறையாகவும் இது இருப்பதால், வேலைவாய்ப்பை தற்போது இலகுவாக பெறக்கூடிய துறையாக காணப்படுகிறது. மேலும் Transport & Logistics Managementற்கான மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தின் உத்தியோகபுர்வ தளத்தில், “இந்த போக்குவரத்து விநியோகம் தொடர்பான துறையில் அனைத்து மட்டங்களில் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரு மில்லியன் அளவில் மக்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்” என்று கூறுகின்றனர். இவற்றில் 2000 வரையிலான முறையாக பயிற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த கற்கைநெறியானது சற்றே பரந்து பட்ட பாடப்பரப்புக்களை உள்ளடக்குகிறது. போக்குவரத்து(Transport) பிரிவில் வீதிப்போக்குவரத்து விமானபோக்குவரத்து கடல்போக்குவரத்து போன்ற அனைத்து பொதுப்போக்குவரத்து முறைகளும் அலசப்படுகிறது. விநியோகமுகாமைத்துவ பிரிவில் (Logistics Management) சரக்குகள் போக்குவரத்து கப்பல் துறைமுக செயற்பாடுகள் போன்றன படிப்பிக்கப்படுகின்றன. முக்கியமாக Supply Chain Managementல் ஒரு பொருளை உற்பத்தி செய்வதிலிருந்து அது இறுதி பயன்பாட்டாளருக்கு செல்லும் வரை நடைபெறும் அனைத்து செயற்பாடுகளும் விரிவாக ஆராயப்படுகிறது.
ஆத்துடன் இந்த துறைக்கு அவசியமான சந்தைப்படுத்தல்(Marketing) நிதிக்கணக்கீடு(Financial Accounting) போன்றன பற்றியும் மேலோட்டமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இறுதி ஆண்டில் ஒருவர் Aviation, Shipping, Road போன்ற துறைகளில் குறிப்பிட்ட ஒரு துறையை தேர்ந்தெடுத்து சிறப்பு தேர்ச்சியடைய விரும்பினால் அந்ததுறை சார்ந்த பாடங்களை தமது தெரிவிப்பாடங்களாக எடுத்து மேலதிக அறிவை பெற்றுக்ககொள்ளகூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லாவிடில் எல்லாதுறைகளிலும் ஒருவர் பரந்த அறிவை பெறவிரும்பின் ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் கருத்தில்கொண்டு பாடங்களை தெரியாது பொதுவான பாடங்களை தெரிவுசெய்து பரந்துபட்ட அறிவை பெறமுடியும். ஆனைத்தும் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.
மேலும் இந்த போக்குவரத்தும் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் (Transport & Logistics Management) கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டு இந்தவருடத்தோடு 5வருடங்கள் பூர்த்தியாகிவிட்டமையால் மிகவிரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்திலேயே இத்துறைக்கு விஞ்ஞான முதுமானி M.Sc தொடங்கப்படுவதற்கான ஆயத்தங்களும் நடைபெறுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு
மொறட்டுவைபபல்கலைக்கழக Transport &Logistics Management ற்கான உத்தியோக இணையத்தளம்: http://www.tlm.mrt.ac.lk
இக்கற்கைநெறிகற்று வெளியேறிய பட்டதாரி: ர.நோபேர்ட் 0772385784

--------------------------------------------------------
நண்பர்களே எம்மவருக்கு உதவி தேவைப்படுகிறது! தயவு செய்து நண்பர் மதி.சுதாவின் தளத்திற்கு கீழுள்ள இணைப்பின் மூலம் சென்று பாருங்கள்
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)
உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்
நன்றி : இந்த பதிவு வருவதற்கு முதற்காரணியாக இருந்து நான் கேட்டவுடன் தர்ஜினி அக்காவுடன் தொடர்புகொண்டு, எனது கேள்விகளுக்கு பதில்களை பெற்று தட்டச்சி தந்த மதுரா அக்காவிற்கு எனது கோடான கோடி நன்றிகள். மதுரா அக்காவின் உதவியால் நான் நேரடியாக தொடர்பு கொண்டு மிகுதி கேள்விகளை கேட்ட போது சலிக்காமல் விளக்கமாக பதிலளித்தமைக்கும் வேண்டிய தகவல்களை தந்தமைக்கும் பதிவின் நாயகி தர்ஜினி அக்காவிற்கும் நன்றிகள்.
டிஸ்கி1: கீழே தரப்பட்ட பேட்டி தர்ஜினி அவர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையாக கொண்டே பதிவேற்றப்படுகிறது. பிழையான மேலதிக சேர்க்கைகள் இல்லை. இந்த பதிவிற்கு உதவி செய்த மதுரா அக்காவும் ஒரு சிறந்த வலைப்பந்து வீராங்கனை. தேசிய சாம்பியனாக வந்த, இலங்கை பல்கலைக்கழக தெரிவு அணியில் இடம்பெற்றிருந்த திறமைசாலி.
டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அபரிமிதமான திறமையுடைய சிறந்த வலைப்பந்தாட்ட (NetBall) வீராங்கனையான, அழுத்தமாக சொல்லப்போனால் தமிழ் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்களை பற்றி நாங்கள் அறிய வேண்டிய பல முக்கிய தகவல்களை, விடயங்களை சிறு கேள்வி பதில் பதிவின் மூலம் பொட்டலம் வலைத்தளம் தரமுயல்கிறது. இந்த பேட்டிக்கு செல்ல முன் அவர் தொடர்பான சில விபரங்களை பார்த்துவிடலாம்.
டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
----------------------------------------------------------------------------
திறமையுள்ள ஆனால் ஆர்ப்பாட்டமேயில்லாத இந்த வீராங்கனையை நீங்கள் வெள்ளவத்தையின் தெருக்கள் பலவற்றில் கண்டிருக்ககூடும். 2.06m உயரமான யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது கொழும்பில் வசிக்கும் இந்த வலைப்பந்து வீராங்கனை கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து 10ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற 13வது உலககிண்ண போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரிலும் உயரமானவராக விளங்கியதோடு மட்டுமல்லாது, பலம்பொருந்திய பெரிய அணிகளுக்கெல்லாம் பலத்த சவால் நிறைந்த Shooterஆக விளங்கினார். பல அணிகள் இவரின் shoot செய்யும் பலத்தை கட்டுப்படுத்த பல வித்தியாசமான முறைகளையெல்லாம் கையாள வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் அணி, றக்பி போட்டிகளில் கையாளப்படும் Lion Dance நுட்பத்தை (ஒரு வீரர் இன்னோர் வீரரை உயர்த்தி தூக்கி பிடிப்பத்தல்) ஒத்த ஒரு முறையை கையாண்டும் இறுதியில் தோல்வியை தழுவிருந்தது.
இவர் இந்த உலககிண்ண போட்டிகளில் இலங்கை விளையாடிய 6 போட்டிகளிலும் கலந்து கொண்டு, தான் முயற்சித்த(attempt) 297 pointsகளில் 7ஐ மட்டும் தவறவிட்டு 290pointsகளை (98%) பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த உலக கிண்ண போட்டிகளில் பங்குபெறுவதற்கான தகுதிகாண் போட்டியாக 2009ல் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டி இருந்தது. இதில் இலங்கை கிண்ணத்தை கைப்பற்ற இவரது பங்குதான் முதன்மையாக இருந்திருந்தது. அந்த போட்டிதொடரில் மொத்தமாக 380pointsகளை பெற்று இப்போட்டிகளில் அனைத்து அணிகளிலும் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொடுத்தவரில் முதல் இடத்தை பெற்றார். 2வது இடத்தை பெற்ற மலேசிய வீராங்கனை பெற்றது வெறும் 152புள்ளிகளே.
தமிழரான எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து கொண்டிருக்கும் சர்வதேச வலைப்பந்தாட்ட வீராங்கனையான உங்களை இணையத்தின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Q: உங்களது குடும்பம் ஊர் பற்றி சிறு அறிமுகத்தை தாருங்கள்?
நான் தர்சினி சிவலிங்கம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை என்பது எனது ஊர். அப்பாவின் தொழில் விவசாயம். அம்மா வீட்டுத்தலைவி. குடும்பத்தில் 6சகோதரர்கள் நாங்கள். 3 அண்ணாக்கள் ஒரு அக்கா ஒரு தம்பி.
Q: பாடசாலைக்கல்வியை எங்கே கற்றீர்கள்?
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில்.
Q: வலைப்பந்தாட்டம் மீதான உங்களின் ஆர்வம் எப்போது உருவானது?
பாடசாலை காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது.

Q: நீங்கள் விளையாடிய காலத்தில் உங்கள் பாடசாலை அணி எந்தளவு தூரம்வரை சிறந்த வெற்றிகளை பெற்றிருந்தது?
எங்கள் அணி கோட்ட மட்டம் வரை சென்றிருந்தது. ஆனால் வெல்ல முடியவில்லை.
Q: பாடசாலை அணிக்கு தலைவியாக இருந்தீர்களா?
இல்லை. சாதாரண வீரராகவே விளையாடினேன். அப்போது கூடியளவு போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. அந்தக் காலம் பிரச்சனையான போர்ச்சூழல் நிறைந்த பாதைகள் பூட்டப்பட்ட காலப்பகுதியாக இருந்தமையால் எனது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன.
Q: பாடசாலைக்காலத்தில் ஒழுங்காக பயிற்சிகள் வழங்கப்படிருந்தனவா?
பெரிதாக இருக்கவில்லை.
Q: உங்களது பாடசாலைக்காலத்தில் யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இருந்ததா? அதில் பங்கு பற்றியிருந்தீர்களா?
30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கின்றது. ஆனால் அவர்களால் கூட என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.

Q: பாடசாலைக்காலத்தில் நீங்கள் விளையாடும் போது எதிர்காலத்தில் இப்படி ஒரு பெரிய வீராங்கனையாக வருவீர்கள் என்று உங்கள் பெறுபேறுகளை கொண்டு எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லாவிடினும், என்னால் மற்றவர்களை விட இலகுவாக சில இலக்குகளை எட்ட முடிவதுண்டு உதாரணமாக உயரம் பாய்தல், ஆனாலும் தகுந்த பயிற்சி, பாதுகாப்பு இல்லாமல் துணிந்து விளையாட்டுகளில் நான் ஈடுபடவில்லை. காரணம் நான் அப்போது தான் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தேன், என் எலும்புகளுக்கு பலமான பாதுகாப்பு தேவைப்பட்டது.
Q: உங்களை இவ்வாறு உருவாக்கியதில் முதன்மையானவர்கள் யார் யார்?
பெற்றார், சகோதரர்களை தவிர உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் என்னை முதன்மைப்படுத்தி ஊக்குவித்ததுண்டு. தேசியஅணியில் இடம்பெற்ற காலத்தில், எனது வேலை தளத்தில் இருந்த பயிற்றுனர் விசேடமாக. மற்றும் அவ்வப்போது தேசிய அணியின் பயிற்றுனர்களாக இருந்த அனைவரையும் என்னால் நினைவு படுத்த முடியும். முக்கியமாக என்னை பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு அழைத்து சென்ற பத்திமா பிரான்சிஸ் என்பவாவும் முக்கியமானவா.
Q: நீங்கள் உங்கள் பட்டபடிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதாக அறிகிறேன். பல்கலைக்கழக வாழ்க்கை இந்த விளையாட்டு தொடர்பாக உங்களை பட்டை தீட்ட உதவியதா? எவ்வாறான வகையில் உங்களை வளர்த்துக்கொண்டீர்கள்?
நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றதுமே அங்கிருந்தவர்கள் நான் நிச்சயம் தேசிய அணிக்கு போவேன் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன் பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு விளையாட பாத்திமா பிரான்சிஸ் அவர்களால் சந்தர்ப்பமும் கிடைத்தது பல்கலைக்கழக வாழ்க்கையில்தான். இந்தக்காலப்பகுதியில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4வருடங்களாக விளையாடியிருந்தேன். அத்துடன் பல்கலைக்கழக அணிக்கு தலமைதாங்கியுள்ளேன். பல்கலைக்கழகங்களிற்கிடையிலான போட்டியில் முதலாவது முறையாக தமிழ் அணி (எமது அணி) இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் இலங்கை பல்கலைக்கழக அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன் அதில் 2005ல் Vice-Captainஆகவும் 2006ல் Captain ஆகவும் இருந்திருக்கின்றேன்.
பல்கலைக்கழகத்திலிருந்து இருந்து தேசிய அணிக்கு நான் தெரிவாகி 2005ல் ஆசிய கிண்ண போட்டியில் Best Shooter விருது பெற்றமைக்கு பல்கலைக்கழக உப வேந்தர் எனக்கு தங்க பதக்கம் அளித்து கௌரவப் படுத்தியமை, பரீட்சை காலங்களில் நண்பர்களில் உதவி முதலானவை முக்கியமாக நினைவு கூரப்படவேண்டியவை. தேசியஅணியில் விளையாடிக்கொண்டு எனது பட்டப்படிப்பை சீராக தொடர பல்கலைக்கழகம் போதிய உதவியும் வழங்கியிருந்தது.
![]() |
| National Champions - All Universities Team -2007கீழே இருப்பவர்களில் இடமிருந்து வலம் 2வது மதுரா அக்கா பின்வரியில் உயரமாக பதிவின் நாயகி |
Q: உங்களுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு எப்போது கிடைத்தது? எவ்வாறு கிடைத்தது?
2004ல். நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக விளையாடியபோதுதான் தேசிய அணிக்காக தெரிவுசெய்யப்பட்டேன். எனது பெறுபேற்றையும் உயரத்தையும் அடிப்படையாக வைத்தே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
Q: முதன் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய போது அனுபவம் எப்பிடி இருந்தது?
2005ல் ஆசிய கோப்பைக்காக விளையாடினேன், இறுதி போட்டியில் எங்களால் வெல்ல முடியாமை அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை நன்றாக தயார் படுத்த வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியது.
Q: 6ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் நீங்கள் விளையாடிய முக்கிய சர்வதேச போட்டிகள் பற்றி சொல்ல முடியுமா? உங்கள் அணி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் பற்றியும் கூறுங்கள்.
ஆசிய கோப்பை வெற்றியாளர்கள் 2009. அவ்வப்போது பிற நாடுகளால் ஒழுங்கு படுத்தப்படும் 5 தேசங்களுக்கிடையிலான, 4 தேசங்களுக்கிடையிலான, சுற்றுப்போட்டிகளும் பிற நாடுகளுடனான சுற்று பயணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
Q: இதுவரை எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்?
ஏறத்தாழ 35 வரையிலானவை சர்வதேச போட்டிகளில் அடங்கும்.
Q: தற்போது Co-Captain ஆக அணியில் இருப்பதாக தெரிகிறது. Co-Captain என்றால் இன்னொரு வீரருடன் இணைந்து தலைவராக பணியாற்றுவதுதானே?
ஆம்.
Q: July மாதம் சிங்கப்புரில் இடம் பெற்ற உலககிண்ண போட்டி உங்களின் முதல் உலககிண்ண போட்டியென நினைக்கிறேன் அப்பிடிதானே? அதன் அனுபவம் பற்றி கூறுங்களேன்.
ஆம். இலங்கை அணி உலக கோப்பைக்கு தகுதி பெற ஆசிய கோப்பையை வெல்வதோடு, உலக தர பட்டியலில் முன்னிடம் வகிக்க வேண்டும். இந்த உலக கோப்பையின் பின்னர் எங்கள் அணி பதின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் மிக சிறந்த அணிகளுடன் விளையாடி அதிக கோல் போடுவது எனக்கு மிக சவாலாக இருந்தாலும், நான் ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றினேன்.
Q: இந்த உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடிய உங்களுக்கு சிறப்பு பரிசு எதாவது கிடைத்ததா?
Best Shooter விருது கிடைத்தது.
Q: போட்டி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது யாருக்கு கிடைத்தது?
தென்னாபிரிக்க வீராங்கனை ஒரு வருக்கு கிடைத்தது.
Q: மற்றைய விளையாட்டுக்களின் தேசிய வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்புபோல் அபரிமிதமான திறமை இருந்தும் உங்களுக்கு கிடைப்பதில்லை என்று உணர்ந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ளுரில் ஆதரவு எப்பிடி இருக்கிறது? ஊடகங்கள் உங்கள் போன்ற திறமையுடைய தமிழ் வீரர்களை சரியாக ஊக்குவிக்கவில்லை என்று சிந்தித்ததுண்டா? எப்படியான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
தோற்கும் அணியில் இருந்து என்னால், அதிக கோல் சிதறாமல் போடா முடிகிறது எனில், எங்கள் அணி கட்டயாம் வெற்றி பெறும் பகுதியில் இருந்திருக்க வேண்டும். எங்கள் தயார் படுத்தலுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஊக்குவிப்பு எங்கள் மனதில் தான் உருவாகவேண்டும். நாம் நினைக்கிற இலக்கை ஒரு போதும் தாழ்த்தகூடாது. ஊடகங்கள் இன்னும் கூடுதலான ஊக்குவிப்பை தரலாம்.
Q: உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பவர்கள் யார்?
பலர்.
Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.
பலர்.
Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.
Q: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆதரவுக்கு நன்றி.
பிற்குறிப்பு: இப்படியான பல திறமையான தமிழ்பேசும் வீரர்கள் அனைவரையும் நாம் ஊக்குவித்தோமா? என்றால் விடை பெரும்பாலும் இல்லை என்றே வரும். அற்பனுக்கு பவிசு வந்து அர்த்தராத்திரியிலும் குடை பிடிக்கும் இந்தக்காலத்தில் இப்படியான உலகதரம் வாய்ந்தவர்கள் எம்மிடையே இருக்கும்போது நாம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கி மேலும் சிறப்பாக விளையாட இன்னும் வழி அமைக்கும்.
பல திறமையுள்ள இளையவர்களை ஊக்குவிக்கும் தமிழ் ஊடகங்களே இந்த வீராங்கனைக்கு கொடுக்கவேண்டிய கௌரவம் வழங்கப்படாது இருப்பின் உடனடியாக அதை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
- இசை
- கவிதை
- சினிமா
- சுட்டவை
- செய்தி
- தொழில்நுட்பம்
- நக்கல்
- விளையாட்டு
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)