சுட்டுடாங்கய்யா சுட்டுடாங்க!

இப்ப எதை எதையெல்லாம் சுடுவதென்று ஒரு விவஸ்தயே இல்லாமல் போய்விட்டது. ஆளாளுக்கு எதெல்லாம் கொப்பி பண்ணலாமோ அதெல்லாம் கொப்பி பண்ணி Useபண்ணவேண்டியதில் Useபண்ணி பிழைத்துக்கொள்கிறார்கள். அப்பிடிதான் கழண்டது ஒண்டு சுடுறதுக்கு ஒண்டும் இல்லாம என்ர மூஞ்சிப்புத்தகத்தில நான் போட்ட STATUSஐ or அட்டு வரியை அப்பிடியே கவ்வி தனது தளத்தில(newjaffna.com) செய்திக்குறிப்புக்கு தலைப்பாவே வைச்சுட்டார்! அந்த செய்திக்குறிப்பை பாக்க இங்கே கிளிக்குங்கள்.

எனது மூஞ்சிபுத்தகத்தில போட்ட ஒறிஜினல் Status

அதை சுட்டு NEWJAFFNA தளத்தில போட்ட தலைப்பு

காப்பி பண்ணின ஆளுக்கு (என்னோட படிச்சவர்தான்) ஒரு ரசனையே இல்லையா? இப்பிடி ஒரு டுபாக்கூர் தலைப்பா வைச்சா யார்தானய்யா உன்ர Newsஐ வாசிப்பான்? மனுசர் அதை Facebookலயே like பண்ணவைக்க படுற பாட்டில, அதுல யோயி கைய வைச்சிட்டியே கண்ணா! சுடுறதுதான் சுடுறாய், நல்லா வேற மூளையுள்ளதுகள் போடுறதை சுடுறது.. ஆக்களா இல்லை. அதுதான் சொல்லுறது படிக்கேக்கயே EXAMல நம்ம மாதிரி வடிவா copyஅடிச்சு பழகோணுமெண்டு. பரவாயில்ல இனியாவது பிழைச்சுக்கோ!

அய்யோ சொல்லோணும் எண்டு மறந்துட்டன். IPL2011ல் சாம்பியானான எனது விருப்பதிற்குரிய, தமிழர்களுக்கான அணியான சென்னை சுப்பர் கிங்ஸிற்கு மனமார்ந்த வாழத்துக்கள்.
--------------------------------------------------------------------------------

கடந்த திரைதகவல் பெட்டகம்-IV (பாடகி பிரசாந்தினி சிறப்பு) பதிவில், அறிவிக்கப்பட்ட போட்டியிற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது விடைகளை கூறியிருந்தனர். சிலர் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே விடை கூறியிருந்தனர் வேறு சிலர் 3கேள்விக்குமே பதில்கூறியிருந்தனர். அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

அறிவிக்கப்பட்டபடி முதலாவது கேள்விக்கு சரியான பதிலை கூறியவருக்கே பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் அவர் இந்தியாவில் இருப்பதால் 2வது கேள்விக்கு சரியான விடைகூறிய இருவரில் ஒருவருக்கு பரிசு செல்கின்றது. ஒவ்வோர் கேள்விகளுக்கும் விடையை சரியான விடை கூறியோர் விபரம் கீழே.

1 - இந்தியாவிலிருந்து சு.கி.ஞானம்
ஆனால் இந்த கேள்விக்கு 2பாடகிகளின் சரியான படலை கூறி முயற்சித்தவர்கள். சாலினி சிவதாஸ், முகுந்தன் குமாரசாமி, விநாயகதேவன் சுகீசன்
2- சற்குணசிங்கம் தாசன், சத்தியமூர்த்தி நிறாதன்
3- முகுந்தன் குமாரசாமி, விநாயகதேவன் சுகீசன், கன்கோன்
எனவே முதலாவதிற்கு சரியாக கூறிய சு.கி.ஞானம் பரிசை பெற்றுக்கொள்ள முடியாமையினால் 2வதிற்கு சரியாக கூறிய  சற்குணசிங்கம் தாசன் வெற்றியாளராக தெரியப்படுகிறார்.
சரியான விடைகள்
1.அண்ட்றியா - இதுவரை இல்லாத (கோவா) வேறு பாடல்களும் உண்டு
   வசுந்தரா தாஸ் - தத்தைய் தத்தைய் (மன்மதன்) வேறு பாடல்களும் உண்டு
   மம்தா மோகன்தாஸ் - இடை வெளி (கோவா)
2.டானியல் கிறிஸ்டியன்
3.இயக்குனர் விஜய்

அடுத்த பதிவில் மீண்டும் பரிசுக்கான இலகுவான கேள்வி வரும்.

குட்டை + கல் :'(

 அமைதியாக இருந்த குட்டைகளை நோக்கி வீணாக பலர் கற்களை  எறிகின்றனர். இது கடந்த வாரத்தில் பலரும் பதிவுலகத்தில் முணுமுணுத்த வார்த்தையாக இருக்கும்.

ஒரு சில கற்கள் குட்டையை வேணுமென்றே கலக்கி குழப்பும் நோக்கத்துடன் எறியப்பட்டிருக்கலாம். ஒரு சில கற்களோ நடு வீதியில் இடைஞ்சலாக  இருந்தமையால் வீதியை சீராக்கும் நோக்கில் குட்டையை நோக்கி சிலரால் எறியப்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டிற்குமான வித்தியாசத்தை உண்மையாக எறிந்தவனின் மனசாட்சியே அறியும். பார்வையாளராக இருப்பவர்களுக்கு அதன் நோக்கம் சரியாக விளங்கியிருக்காது. உண்மையாக வீதியின் சீர்த்தன்மையை வேண்டி குட்டையை நோக்கி கல் எறிந்தவன் கூட பிழையாக நோக்கப்பட்டிருக்கலாம்.  நான் எப்போதும் இரண்டாமவதராகவே  இருக்க விரும்புகிறேன். 


எல்லோரும் எல்லோரையும் ஊக்குவிக்கவேண்டுமென்றே, விரும்பியிருந்த எனது கருத்து எனது சொல்லாடல் பிழையாலோ, சொன்ன இடத்தின் தவறாலோ பின் உருவ அமைப்புக்கள் தெளிவாக்கப்பட்டு(?) குதர்க்கமாக விளக்கம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை ஒரு போதும் பிரபலத்திற்காக ஒருவரையும் நான் குறை கூறியதில்லை. கூறப்போவதுமில்லை. அதற்காக சிலர் சிலரிலுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக பலவற்றை பலவிதமாக பயன்படுத்துவதை நான் வரவேற்கவில்லை. அவர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும் என்றே கருதுகிறேன்

ஆனால் என்னை மதித்து எனது தளத்திற்கு பின்னூட்டம் இடும் நண்பர்களின் தளத்திற்கு சென்று அவர்களின் பதிவு தொடர்பான எனது ஆதரவானதோ எதிரானதோ கருத்தை கூறுவேன். அதற்கு ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை. அதற்காக அந்த பதிவுகளின் கருத்துதான் எனது கருத்து என்று யாராவது வியாக்கியானம் கற்பித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.


இறுதியாக பதிவுலகத்தில் இருக்கும் எல்லோரும் (Positive / Negative கருத்துடையோர்) எனக்கு நண்பர்களே. நல்ல பதிவுகளை ஊக்குவிப்பேன்.  ஒன்றாக சேர்ந்து பயணிப்போம். இங்கே நடக்கும் (?) ஒரு அரசியலும் எனக்கு சத்தியமாக விளங்குவதில்லை!!!

பி.கு: எனது முதல் பதிவில் குறிப்பிட்டது போல வெற்றியாளர் விபரம் இந்த பதிவில் தர முடியவில்லை. நாளைய பதிவில் விபரங்கள் அறிவிக்கப்படும்!
நன்றி.

திரைதகவல் பெட்டகம்-IV (பாடகி பிரசாந்தினி சிறப்பு)

இந்த பதிவை தொடங்கமுன் ஒரு மகிழ்ச்சியான அறிவித்தல். தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக இந்தபதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை சொல்லும் அதிஷ்டசாலி உள்ளூர் வாசகர் (இலங்கை) ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும். எதிர்வரும் காலங்களில் வித்தியாசமான பரிசுகளுடன் சந்திப்போம். வெற்றியாளர் அடுத்த பதிவில் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான் விடைகள் இருக்கும் பட்சத்தில் வெற்றியாளர் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படுவார்.
--------------------------------------------------------------------
அண்மைக்காலங்களில் வெளிவரும் படங்களில் இடம்பெறும் நல்ல பாடல்களை புதிய பாடகர்கள் பாடிவருகின்றமை தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியமான விடயம்தான். முன்னைய காலத்தை போல ஒரு சிலர் மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக இல்லாது பல புதுமுகங்கள் இந்தகாலத்தில் பாடகர்களாக அறிமுகமாகி சிறப்பாக பாடிவருவது வரவேற்க்கதக்கது. அப்படியான ஒரு பாடகியை பற்றிதான் நான் இப்போது குறிப்பிடபோகிறேன். மலேசியா வாசுதேவனின் மகளும், பாடகர் + நடிகர் + இசையமைப்பாளர் யுகேந்திரனின் இளைய சகோதரியுமாகிய இவரை பாடகியாக 2001ல் அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜையே சாரும். இவர்தான் அந்த பாடகி பிரசாந்தினி.

பிரசாந்தினி
12B படத்தில் இடம்பெற்ற ”ஒரு புன்னகை பூவே” என தொடங்கும் நல்ல ஒரு பாடலின் மூலம் இவர் அறிமுகமாகியிருந்தாலும், அந்த பாடலில் ஆண் குரலே முக்கியத்துவம் பெற்றிருந்ததால் இவரால் தனக்கான ஒரு தனிமுத்திரையை அந்த பாடல் மூலமாக பெற முடியவில்லை. அதன் பின் யுவன்சங்கர்ராஜா, வித்தியாசாகர், யுகேந்திரன் போன்ற இசையமைப்பாளர்கள் இவருக்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தனர். தனது முதல் பாடலுக்கு பிறகு பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தபோதிலும் அவை ஒன்றும் இவரை நல்ல பாடகி என்ற அந்தஸ்தை ரசிகர்கள் மத்தியில் சேர்க்கவில்லை. எனினும் 2006ல் ”வெயில்” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜீ.வி.பிரகாஸ்குமார், அந்த படத்தில் மிகவும் சிறிய பாடலான ”இறைவனே உணர்கிற தருணம்” என்றபாடலில் பிரசாந்தினிக்கு வாய்ப்பை வழங்கியிருந்தார்.

யுகேந்திரன் & மலேசியா வாசுதேவன்
பிரசாந்தினியின் அறிமுகத்திலிருந்த 8வருடத்தின்பின்னர் அதாவது 2009ல் வாரணம் ஆயிரத்தில் தனது இசையில் பாட ஹாரிஸ் ஜெயராஜ் இவரை மீள அழைத்திருந்தார். ”முன் தினம் பார்த்தேனே” என்று ஆரம்பிக்கும் அந்த சூப்பர் ஹிட் பாடல் இவரை சிறந்த பாடகியாக இனங்காட்டியிருந்தது.
GV.PrakashKumar
எது எப்பிடியிருப்பினும் இந்தபாடல் அடைந்த பிரபல்யத்தோடு ஒப்பிடும்போது இந்த பாடலை சிறப்பாக பாடியவரில் ஒருவரான பிரசாந்தினியால் அந்தளவுக்கு பிரபல்யமாக முடியவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு நல்ல வாயப்புகளும் கிடைக்கவில்லை. மீண்டும் ஜீ.வி.பிரகாஸ் 2008ல் சேவல்படத்தில் ”நம்ம ஊரு நல்லா இருக்கு” என்ற பலபாடகர்கள் பாடிய பாடலில் இவருக்கும் வாயப்பளித்திருந்தார். பின்னர் தீனா, பரத்வாஜ், சபேஸ்முரளி போன்றோரின் இசையில் பிரபலமேயில்லாத பாடல்கள் ஓரிரெண்டை பாடியிருந்தார்.
பிரசாந்தினி
என்னைபொறுத்தவரை இவரது நல்ல காலம் இந்தவருடத்திலிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது என சொல்ல முடியும். அண்மையில் ஆடுகளம் படத்தில் மீண்டும் ஜீ.வி.பிரகாஸின் இசையில் நல்ல ஹிட்பாடல் ”ஐயையோ நெஞ்சு அலையுதடி” இல் பாட வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. அத்துடன் அதே காலத்தில் வெளியான ஹாரிஸ் ஜெயராஜின் மெகாஹிட் அல்பமான ”எங்கேயும் காதல்”இல் ”லோலிட்டா” பாடலில் இவரது குரலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு சில மாதங்களின் பின் வெளியான ”கோ” பாடல்களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ”என்னமோ ஏதொ” பாடலில் முக்கிய ஹம்மிங் இவரது குரலுக்குரியது.எங்கேயும் காதலில் இடம்பெற்ற ”லோலீட்டா” பாடல்

அதைவிட மிக அண்மையில் ஜீ.வி.பிரகாஸின் இசையில் ”நர்த்தகி”யில் ”சின்னஞ்சிறு இதயத்திலே” என்ற பாடலை விஜய்பிரகாசுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்தபாடல் இன்னும் பிரபலமாகவில்லை. இந்தபாடல் இருக்கின்றது பலருக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியாது. மிகவும் இனிமையான மென்மையான மெலடி பாடல். முடிந்தால் கேட்டுப்பாருங்கள்.  கீழே அதன் ஒலி வடிவத்தை .ணைத்துள்ளேன். இப்படியான நல்ல பாடல்களுக்கான வாய்ப்புக்கள் இந்தவருடத்தில்தான் இவருக்கு தொடர்ந்து கிடைக்கின்றது.

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Narthagi.html?e">Listen to Narthagi Audio Songs at MusicMazaa.com</a></p>

இறுக்கமான குரல்வளமுள்ள மலேசியா வாசுதேவனோடும் கரடுமுரடான குரல் வளமுள்ள யுகேந்திரனோடும் ஒப்பிடும்போது அந்த குடும்பத்திலிருந்துதான் இவர் வந்தவர் என்று சொல்லவே முடியாது. அந்தளவு இனிமையான சிறந்த குரல்வளம் பிரசாந்தினிக்கு இருக்கிறது. இவர் மேலும் இனிமையான பல பாடல்களை பாடி தமிழ் இசை ரசிகர்களை பரவசப்படுத்துவார் என நம்புகிறேன்.  

பரிசுக்கான கேள்வி

1. இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகளை பாடகிகளாக பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு அவர் பயன்படுத்திய 3நடிகைளின் பெயரையும் அவர்கள் யுவனின் இசையில் பாடிய ஒவ்வொரு பாடலையும் சொல்லுங்கள் பார்ப்போம்.

முதல்கேள்விக்கான  விடை யாரும் சொல்லாவிடின்

2. இந்த ஆண்டிற்கான IPLபோட்டியில் 68வது போட்டிவரை கூடுதலான அகலப்பந்துகளை மொத்தமாக வீசியவர் பெயர் என்ன? (ஒரு போட்டியில் மட்டுமல்ல இந்தவருடம் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் மொத்தமாக பார்க்கவேண்டும்)

இரண்டாவது கேள்விக்கான  விடை யாரும் சொல்லாவிடின்

3. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஸ்குமாரின் இசையில், அவரின் வருங்கால மனைவி  பாடிய முதல் தமிழ்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் இயக்குனர் பெயர் என்ன?

விடைகளை ஒருகிழமைக்குள் கீழ்வரும் முகவரிக்கு மின்அஞ்சலாகவோ அல்லது உங்கள் மின்அஞ்சல் முகவரியுடன் பின்னனூட்டமாகவோ இடலாம். உங்களது பின்னூட்ட விடைகளை ஒரு கிழமைவரை வலைத்தளத்தில் காணமுடியாது. வெற்றியாளர் தெரிவுசெய்யப்பட்டபின் அவை approve செய்யப்படும். உங்களது வெற்றியை உறுதிசெய்ய 3வினாக்களுக்கான விடைகளையும் அனுப்புதல் சிறந்தது. ஆனால் முதல் கேள்விக்கான விடை சரியாக யாரேனும் சொன்னால் அடுத்த கேள்விகள் கருத்திலெடுக்கப்படாது!

அனுப்பவேண்டிய முகவரி: carthi_uom@yahoo.com

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்