BLOGற்கு வந்தது எப்படி?

அண்மையில் எனது ஒரு மாதகால விடுமுறையை யாழ்ப்பாணத்தில் சொந்தமண்ணில் நல்ல ஜாலியாக கழித்துக்கொண்டிருந்தபோது ஊஞ்சல் வலைத்தளத்தை வைத்துள்ள நண்பர் சுபானு அவர்களால் பதிவெழுத வந்ததை பற்றி எழுத அழைக்கப்பட்டேன்.
எனினும் யாழிலிருந்து எழுதுவதற்கு போதிய வசதி இல்லாமையால் நீண்ட நாளின் பின் அந்த அழைப்பை ஏற்று இன்றுதான் பதிவெழுதுகிறேன். இதை ஒரு சுயதம்பட்ட பதிவாக பதிகின்றேன். யாரும் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.எனது பாடசாலைக்காலத்தில் நான் பார்த்த ”முதல்வன்”, ”ஆயுத எழுத்து” போன்ற அரசியல் படங்களாலும், ”இந்தியன்”போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களாலும், ”அன்பே சிவம்” போன்ற யதார்த்த படங்களாலும் என்னிடம் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாகவோ என்னவோ என்னால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக செய்யவேண்டுமென்ற உணர்வு இருந்தது.இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ”அன்பே சிவம்” படத்தை பார்த்த பின்புதான் எனது வாழ்க்கையின் போக்கே மாறினது. அதுவரை காலமும் குப்பையாக ஒழுங்கற்று கிடந்த என் மனது ஒரு நிலைக்கு, கட்டுக்கோப்புக்கு வந்தது அதன்பின்னரே. அதன்பின்னே பல தொடர் வீழ்ச்சிகளிலிருந்து வெற்றிகரமாக எழுந்து நிமிர்ந்து வந்தேன்.


அரசியல் படங்கள் எதுவாக இருந்தாலும் நானும், அப்பாவும் விரும்பி பார்ப்போம். அப்பா நல்ல அரசியல் அறிவுடையவர். பழைய கால அரசியலை பற்றி போதியளவு சொல்லியிருக்கிறார். எனக்கு அந்த வயதில், பெரியாளா வந்தவுடன் நல்ல ஒரு கட்சியில் சேர்ந்து என்னால் இயன்றதை மக்களுக்கு செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஆசை இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பெருமளவு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்றம் சென்ற காலம் அது. நல்லதுக்கும், நல்லவர்களுக்கும் காலம் உண்டு என இருந்த காலகட்டம் அது. ஆனாலும் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பல வேண்டத்தகாத சம்பவங்கள் எனது உள்மன ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனினும் பல வெளிவராத, மக்களின் பிரச்சனைகளையும், உண்மைகளையும், எனது உணர்வுகளையும் வெளிக்கொண்டுவர ஆசையிருந்தும் அதற்குரிய தருணமோ இடமோ கிடைக்கவில்லை. இப்படியான காலத்தில்தான் படாதபாடுபட்டு ஒரு மாதிரி நானும் Campusக்கு தெரிவாகினேன். இணையப்பாவனை இந்தகாலத்தில்தான் அறிமுகமானது. பின் 3ம் வருடத்தில் Training காலத்தில் சும்மா வெட்டியாகத்தான் பெரும்பாலான நேரங்களில் இருந்தமையால் பல பக்கங்களை இணையத்தளத்தில் புரட்டலானேன். இத்தருணங்களில் பலரது Blogகளை பார்த்தபோதுதான் வீணே சும்மா இருப்பதிலும் எனது உணர்வுகளை கொட்டவும், எம்மக்களின் பிரச்சனைகளை, தேவையான தகவல்களை பரிமாறவும் Blog சரியான இடமாக இருக்குமென முடிவெடுத்து நானும் ஏதோ என்பாட்டிற்கு எழுதவந்தேன்.

சில தெரியவேண்டிய மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டுமென்ற ஆவலிலும், வராத செய்திகளை சொல்வதற்காகவும் EXPOAIR, EXPOAIR Traveling Tips, A9ல் நடப்பதென்ன?, A9ல் பயணிப்பதற்கான நடைமுறைகள், புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள் போன்ற பதிவுகளை எழுதினேன்.

இனி எனது பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு. இறுக்கமான, கடினமான ஆண்டாக இருக்கபோவதால் இனிபோதியளவு நேரம் இணையத்துடனோ, Blogஉடனோ செலவளிக்க முடியாது. எனவே எப்போதாவது இருந்துவிட்டுதான் எழுதுவேன். அப்பிடி எழுதினாலும் அதுவும் டூபாக்கூர் பதிவுகளாகவே வரும்.

இறுதியாக என்ன முறையில் நான் எழுதுகிறேன் என்று சொல்லிமுடிக்கிறேன். பதிவுகளை இடும்போது நான் பாமினி(Bamini) Fontஐ தான் உபயோகிக்கிறேன். ”அம்மா”வை Amma என்று Phonetic முறையில் எழுதுவதிலும் பாமினி மிகவும் விரைவானது. பழகிவிட்டால் இலகுவானது. முன்பு நான் இருந்த வீட்டில் Net connection 24 மணி நேரமும் இருந்தமையால் Browserல் Tamil Key Extension ஐ Install செய்து நேரடியாக பதிவுகளை Blogல் எழுதிவந்தேன். இப்போது கம்பஸிலும் நண்பர்களின் Dongle மூலமாகவும்தான் பார்க்கின்றமையால் நானும் NHM Writerல் Bamini Unicodeஐ கொண்டு முதலே எழுதிவிட்டு, பின்பு அதை அப்படியே Blogற்கு கொப்பி செய்து பதிவிடுகிறேன்.

புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள்.

பதிவெழுத வந்த கதையை நண்பர் சுபானு எழுத கேட்டிருந்தாலும் கூட, அதைவிட முக்கியமான விடயம் இது என்பதால் அதைவிடுத்து இதை முதலில் தருகிறேன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்படவில்லை என்று உறுதிகூறியமை யாவரும் அறிந்ததே.

அந்த செய்தியை யாரும் பாக்க தவறியிருந்தால் உதயன் பத்திரிகையிலிருந்து அதன் Screen shot உங்களுக்காக கீழே இதோ!


நன்றி உதயன்

ஆனால் A9 பாதையினூடு பயணித்த அனைவருக்கும் தெரியும் அவர் யாரை ஏமாற்ற முயல்கிறார் என்று. பரந்தன், கிளிநொச்சி, முரசுமோட்டை இடங்களில் முளைவிடுகின்றன இவை.

இதில் பரந்தனில் புதிதாக இப்போதுதான் விகாரைக்கான நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் நிலைவேறு. ஆலமரங்கள் சிலைகள் சுற்றுமதில்கள் போன்றன எல்லாம் கட்டப்பட்டு தூபி மட்டும் கட்டபடாமல் இருக்கிறது. விரைவில் அதுவும் வளரும் என்பதில் ஐயமில்லை. முரசுமோட்டை பகுதியில் ஆலமரத்திற்கு கீழே ஓர் புத்தர்சிலை காணப்படுகிறது.

நான் புத்தரின் போதனைகளுக்கோ பௌத்தமதத்திற்கோ எதிரானவன் அல்ல. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் என்னத்தை இலக்கு வைத்து நகர்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் புரிவீர்கள். இன்னும் மக்களை குடியேற்ற முடியாதாம் ஆனால் அதற்குள் மக்களுக்கு தேவையான(??????????) இதெல்லாம் என்ன?இதை நான் சொல்ல கேட்ட நண்பன் ஒருவன் ”கொஞ்ச காலத்தால வரலாறு பாடப்புத்தகத்தில விஜயன் வந்து கட்டின விகாரைகள் என்றுதான் இவையெல்லாம் வரும்” என்றான் ஏக்கத்துடன் . அதுதான் கசப்பான உண்மையும் கூட.

""புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி""

யாழிலிருந்து ஒரு பதிவு

ஒரு மாத விடுமுறையை கழிக்க சொந்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கிருந்து ஒரு பதிவாவது கட்டாயம் எழுதிவிடவேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டு இன்று அந்த வாய்ப்பை பெற்று எழுதுகிறேன்.

அண்மையில் என்னை பொறுத்தவரை இரண்டு வியக்கத்தக்க விடயங்கள் நடந்தது.

ஒன்று இறுதி ஆஸஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை மண்கவ்வ செய்து இங்கிலாந்து கோப்பையை 2005ன் பின் மீண்டும் தூக்கியது. பலமான அணி என்று தற்போதைய அவுஸ்திரேலியா அணியை கூற முடியாவிட்டாலும் செத்தபாம்பைதான் இங்கிலாந்தினர் போட்டு அடித்தனர் என்று கூறுவதற்கில்லை. அவுஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு எதிராக இருக்கும் என் போன்றோருக்கு ரொம்ப மகிழ்சியான தருணம் அது.

அடுத்தது ஆகஸ்டு 21 பெரும் எதிர்பார்புடன் வெளிவந்த கந்தசாமியை பார்க்கும் வாய்ப்பு 23அன்று எனக்கு கிடைத்தது. இதில்லை வியப்பு. இந்த படத்தை பற்றி நல்லதோ கெட்டதோ விமர்சிக்க நான் வரவில்லை. நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள். விசயம் என்னென்டால் இந்த படத்திற்கு U சான்றிதழ் சென்சார் போர்ட்டினால் வழங்கப்பட்டிருந்தது. நானும் என்னவோ எல்லாரும் பாக்ககூடிய படம் எண்டு நினைத்தால்............. பிறகுதான் விளங்கியது படம் ஒரு பலான படவகையை சார்ந்ததெண்டு. நல்லகாலம் குடும்பத்துடன் படம் பாக்கபோகவில்லை. நண்பனுடன் போனதால் தப்பினேன் இல்லாட்டி இதைகாட்டவா கூட்டி வந்தாய் என்று வாங்கிகட்டியிருப்பேன். A சான்றிதழ் வழங்க வேண்டிய படம் என்னவென்றுதான் U கொடுத்தார்களோ?

எனக்கு தெரிந்தவரை ஆபாசகாட்சிகள் நிறைந்த படத்திற்கும், கொடுமையான வன்முறைகாட்சிகள் உள்ள படத்திற்கும் Aசான்றிதழ் வழங்கப்படும். "நான் கடவுள்" படம் இதில் 2ம் வகையை சார்ந்தது. கந்தசாமி 1ம் வகைக்குள் அடங்க வேண்டியது.
----------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவில் A9 பாதையில் பயணிக்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பிபோயுள்ளார்கள் என்று கூறியிருந்தேன். கொழும்பு-யாழ்ப்பாணம் A9 பாதையினூடு வந்தவன் என்ற வகையில் தற்போதுள்ள நடைமுறைகளை கீழே தெரியாதவர்களுக்காக தருகிறேன்.
கொழும்பு-யாழ் பயணம் பற்றி பார்ப்போம்.
  • இதுவரை கொழும்பு-யாழ் நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைவரும் வவுனியாவிற்கு ரயிலிலேயோ பஸ்ஸிலேயோ வந்தே, பின் யாழ் செல்லவேண்டும். அதற்கு பழைய கப்பலோ, விமான ரிக்கெட்டோ உங்களிடம் இருக்கவேண்டும். எந்த ஆண்டு ரிக்கெட்டும் செல்லுபடியாகும். உங்கள் பெயரும் NIC Noம் அதில் இருக்கிறதா என்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள்.
அப்படி ஒரு ரிக்கெட்டும் இல்லை என்றாலும் இருக்கிறது ஒரு கள்ளவழி. யாரிடமாவது பழைய விமான ரிக்கெட்டை வாங்கி உள்ளே அவர்களின் பெயர் இருக்கும் ரசீதை முழுவதுமாக கிழித்துவிடுங்கள். இப்போது வெறும் வெளிகவர் மட்டும் உங்களிடம் இருக்கும். இப்போது ரிக்கெட்டின் முன் கவரில் உங்கள் பெயரையும் NIC Noம் எழுதிவிட்டு காட்டுங்கள். கேட்டால் மட்டும் return ரிக்கெட் என்று சொல்லுங்கள். ஏனென்றால் உண்மையாகவே உங்களது ரிக்கெட் returnஆக இருந்திருந்தால் உங்களது பெயருக்குரிய உறுதி ஒன்றும் இருக்காது. இருவழிபயணத்தின் போது முழுவதுமாக கிழித்து விட்டிருப்பார்கள். எனவே நீங்கள் அந்த முறையை இங்கு உங்களிற்கு சாதமாக பயன்படுத்தலாம்.
  • வவுனியாவிற்கு 5.30ற்கு வந்ததும் ரம்யா ஹவுஸ் எனும் இடத்திற்கு சென்று காவல் இருங்கள். பயணத்திற்கான Token இங்குதான் வழங்கப்படுகிறது. ஆனால் 8.30 மணிக்கே பெரும்பாலும் Token வழங்க ஆரம்பிக்கபடும் . ஆனால் வேளைக்கே வருவதன் மூலம் முதல் இலக்கங்களை பெறகூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் உங்களது பயணமும் பெரும்பாலும் உறுதிபடுத்தபடுகிறது.

  • இந்த Token எடுத்ததும் அந்த இலக்கத்தின் ஒழுங்கில் உங்களை கூப்பிட்டு ரிக்கெட்டுகளை பார்த்து உங்களது பெயர்களை பதிந்து இன்னோர் Token தருவார்கள். இந்த Token பெற்றால் உங்களது பயணம் அன்று உறுதி.

  • பின் அவர்கள் கூறும் நேரத்திற்கு மீண்டும் சென்று உங்களது Token காட்டி பயணிக்கலாம். கிட்டத்தட்ட 4.30 மணிக்கே பஸ்ஸில் ஏற்ற தொடங்குவார்கள். அனைவரும் ஏற்றப்பட்டபின் 6.30மணியளவில் பஸ்கள் அனைத்தும் ஒன்றாக புறப்படும். 3.30 மணி பயணத்தின் யாழ் நகரை அடைவீர்கள். வவுனியா-யாழ் பயணகாசு 135மட்டுமே.
இந்த பயணநேரங்கள் பலவேளை முந்திபிந்த கூடும்.
இந்த பயணத்தில் தரப்படும் பஸ் ரிக்கெட் மற்றும் Tokenன் Photocopy கொடுப்பதன் மூலம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள Jaffna Civil Affairsல் நீங்கள் ஒரு மாதத்திற்கான Clearance பெறலாம்.
யாழிலிருந்து கொழும்பு செல்ல இவ்வாறு அலைய வேண்டியதில்லை. நேரடி சொகுசு பஸ்ஸில் பதிவதன் மூலமோ, யாழ்-வவுனியா, யாழ்-மதவாச்சி CTB பஸ்ஸில் பதிந்து Tokenஐ முதலில் பெறுவதன் மூலம் நீங்கள் பயணிக்கலாம்.

தற்போது அதிகரித்துள்ள மூட்டை கடிக்கு மத்தியில் கப்பலில் போவதிலும், வீணே காசை விமானத்திற்கு கொட்டுவதிலும் இலகுவான வழி A9 பாதையிலான பயணம்.

தகவல்: பிரபல பதிவர் சுபாங்கன் அண்மையில் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி குணமாகிவருகிறார்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்