அவன் இவன் - திரைப்பார்வை

இந்த படத்தை பற்றி பாக்க முதல் தற்போது உள்ள காலகட்டத்தில் (சனல் நான்கு வீடியோ காட்சிகள் வெளிவந்து பலரது மனங்கள் மீண்டும் புண்ணான நேரத்தில்) இந்த நாதாரி இந்த விமர்சனம் எழுதுறது அவசியமா? அதபற்றியும் எம்மக்கள் பட்ட துன்பங்கள் பற்றியும் சொல்லாம பொழுதுபோக்கில் திளைத்திருக்கிறானே என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு இங்கே அங்கே. கத்தவேண்டிய நேரத்தில் கத்தாம இப்ப கத்தி பிரயோசனம் இல்ல எண்டு நினைக்கிறன். எப்ப கத்தினாலும் முடிவு ஒண்டுதானே என்று நீங்கள் சொல்லுறதும் புரியுது
---------------------------------------------------------------------------------

வழமையாக சில இயக்குனர்களின் படங்கள் வெளிவர முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வரிசையில் பாலாவின் படங்கள் முன்னிலையில் நிற்கின்றன. வித்தியாசமான கதைக்களங்கள், மாறுபட்ட திரைக்கதைகள், விசித்திரமான பாத்திரப்படைப்புகள் போன்றன மற்றய இயக்குனர்களிடமிருந்து பாலாவை வேறுபடுத்தி காட்டும் அவரின் படங்களின் சிறப்பியல்புகள். 


இலங்கையில் வியாழன் இரவே VIP showற்காக வெளியிடப்பட்டிருக்க வேண்டிய அவன்-இவன் படம் வெள்ளி காலையில்கூட வெளியிடப்படாமல்  இரவு7.30 மணியளவிலேயே VIP showஆக தெகிவளை Concord திரையரங்கில் வெளியிடப்பட்டது. (சுங்க அதிகாரிகளிடமிருந்து றீல்ஸை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சுணக்கம்தான் இந்த தடங்கலுக்கு காரணமென திருகோணமலையிலிருந்து நண்பர் நிறாதன் தியெட்டர் உரிமையாளர் மூலமாக உறுதிப்படுத்தியிருந்தார்). அதன்பின்னர் முதலாவது Normal show இரவு10.30க்கு போடப்பட்டது. அந்தகாட்சியை பாக்கும்வாய்ப்பே எனக்கு கிடைத்தது. 

பலர் நேற்றைய காலை, மதிய, மாலை பொழுதுகளில்  படத்தை எதிர்பார்த்து தியெட்டர் சென்று ஏமாந்திருந்தமையால் இரவுப்பொழுதில் படம் வெளியிடப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை. அதோட VIP showவே 7.30கெண்டா அதுக்கு பிறகு படம்போடுவாங்களோ என்று பலருக்கு குழப்பமோ தெரியாது முதலாவது காட்சிக்கு வெறும் 30பேரளவிலேயே வந்திருந்தனர். முதலாவது காட்சியை இவ்வாறு இலகுவாக பாத்தது இதுதான் முதல்தடவை. மொக்கை படங்களுக்கே முதலாவது காட்சி நல்லூரில் ரதோற்சவம் போன்றுதான் இருப்பது இப்ப மட்டும் கேபியு போட்ட வீதி மாதிரி கிடந்தது.

படப்பிடிப்பின்போது ஆர்யா விஷால் பாலா
வித்தியாசமா எடுக்கிறன் வித்தியாசமா எடுக்கிறன் எண்டு பல அருவருக்கதக்க கொடுர காட்சிகளையும், உருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் கவலை தோய்ந்த கதைகளையும், மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காக சமூகத்தில் உள்ள வித்தியாசமானவர்களையே பாலா தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது எனக்கு  அண்மைக்காலதத்தில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோடு கிட்டத்தட்ட பிதாமகன் பாணியிலான அவன் இவன் படத்தின் போஸ்டர்களும் இந்தமுறையும் இவர் தனது அதே பாணியைதான் தரப்போகிறார் என்று சொல்லாமல் சொல்லி இந்த படம் சூப்பரா இருக்கும் என்ற எனது நம்பிக்கையை ஆரம்பத்திலேயே தகர்த்திருந்தது. என்றாலும் பாலா என்ற மாயையால் எதுவும் நடக்காலம் என்ற ஒருசிறு நம்பிக்கையோடுதான் படம் பார்க்க சென்றேன்.  

ஆனால் பலரது எதிர்பார்ப்புக்களை பாலா இந்த படம் மூலம் சிதைத்து விட்டார் போலதான் எனக்கு படுகிறது. வழமையான பாலாவின் படங்களில் இருக்கும் முக்கியமான நல்ல கதைக்கருவை இதில் காணவே முடியிவில்லை. இதுதான் இந்த படத்தின் மிக முக்கிய பலவீனம். ஏதொ தன் பாட்டில அது போற போக்கில சும்மா போகுது. என்ன சொல்ல வருவதற்கு (ஒரு சின்னகரு) இப்பிடி கஸ்டப்பட்டார் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.  இல்லை பாலா சொல்ல வந்ததை யதார்த்தமாக சொல்லியிருக்கார் சும்மா குறை சொல்லுறது சுலபம் என்று யாரும் சொல்வார்களாயின், அப்படியென்றால் அதற்கெதுக்கு பாலா? இப்ப புதுசா வாற இயக்குனர்களே இலகுவாக சொல்லிவிடுவார்களே என்ற கேள்வியே எழுகிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தை சரியில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பரவாயில்லை ரகம்தான். முதல்பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம்பாதி கொஞ்சம் வேகத்தோடு கலகலப்பாக செல்கிறது. சொல்ல வந்ததை சொல்ல இப்பிடி மினக்கெட்டு படம் எடுக்க தேவையில்லை என்பது ஒரு புறம் இருக்க கடைசியில் வந்த பல காட்சிகள் தேவையற்று வேண்டுமென்றே கதையை சொல்லி முடிக்க உருவாக்கப்பட்டது போல உணர்வை தருகின்றது.
ஜனனி ஐயர்
 வழமை போல இந்த படத்திலும் நடிகர்கள் தங்கள் வித்தியாசமான நடிப்பு திறனை பட்டை தீட்ட களம் அமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. விசால் முதல் முறையாக தனது நடிப்பு திறனை காட்ட சந்தர்ப்பம் கிடைத்த படமாக இதைக்கொள்ளலாம். வாக்கு கண்ணுடையவராகவும் வாய் ஒரு மாதிரி இழுத்தவர் போலவும் வந்து தன்னாலும் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். ஆர்யாவிற்கு அவ்வளவு கடினமில்லாத பாத்திரம்தான் என்றாலும் கலகலப்பாக படம் செல்வதற்கு இவரது பங்கும் மிக முக்கியமானது. பிறவுண் கலரான ஒட்ட முடி வெட்டப்பட்டவராக வருகிறார். (ஒரு கேள்வி ஏன் பாலாவின்ர படத்தில மட்டும் இப்பிடி வித்தியசமான பாத்திரங்கள் ஏன் சும்மா சாதராண ஆள் மாதிரி இருந்தா அது செல்லாதா? ஏன் வித்தியாமா காட்டோணும் எங்கிறதுக்காண்டி கழுத்து இழுத்த மாதிரி கண் இழுத்த மாதிரி பிறவுண் தலைமயிர் etc etc ஏன் ஏன்?) 

மது சாலினி
ஆர்யா விஷாலுக்கு அடுத்ததாக முக்கிய பாத்திரமாக ஜமீன்தாராக வருகிறார் GM.குமார். பலபடங்களில் இவர் தோன்றியிருந்தாலும் இந்தப்படத்தில் இவரது பாத்திரம் பேசப்படும்படியாக இருக்கிறது. அம்மணமாக இவர் காட்சியில் காட்டப்பட்டது தேவையற்ற ஒன்று. அதன் அவசியதன்மை அந்த இடத்தில் இல்லவே இல்லை. சும்மா வித்தியாசமா செய்யோணும் எண்டு பாலா செய்தார் போலவே தெரிகிறது. பாத்திரத்திற்கான கனதியில் ஹிரோயின்கள் இருவரும் இல்லாதிருப்பதால் அவர்களின் நடிப்பு திறன் இந்த படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் சற்று கூடுதலான நேரம் வரும் ஜனனி ஐயரின் நடிப்போ பெரிசாக எடுபடவில்லை. செயற்கைதனம் கூடுதலாக தெரிகிறது. மற்றைய நடிகை மதுசாலினுக்கோ திரையில் தோன்றும் நேரம் மிக குறைவு. ஆனால் ஜனனிஐயரை விட நடிப்பிலும் அழகிலும் இருபடி மேல்தான்.

குண்டுபையன் ஆர்யா GM.குமார் விஷால்
அம்மாவாக வரும் அம்பிகா வீரமான ரவுடி அம்மாவாக வந்து கலக்கியிருக்கிறார். குரலையும் முக வெட்டையும் பார்க்கும்போது அப்பாவாக வருவது Vijay TV Super Singer Voice Expert அனந் வைத்தியநாதன்போல தெரிகிறது. சும்மா கதையோடு ஒட்டாது பயணிப்பது போல வந்து போகிறார். (வேறு நல்ல குணச்சித்திர நடிகர்கள் இல்லையா? ஏன் சும்மா வேறு துறைஆக்களை புதுசா இங்க கொண்டுவந்து வீணாக்கிறீங்க பாலா?). இந்த படத்திலே மிகமுக்கியமான கண்டுபிடிப்பு நண்பனாக வரும் குண்டு பையன்தான். சிறந்த முறையில் காமடியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு இனி வாய்ப்புக்கள்  குவியும். 

மது சாலினி
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்து மெகா கிட் என்றில்லாது விடினும் ஏலவே பிரபல்யம் அடைந்திருந்தது. ”ராசாத்தி போல” பாடல் பலரால் விரும்பிய பாடலாக இருந்திருந்தது. ஆனால் அல்பத்தில் வந்ததை விட சில இடங்களில் மாற்றங்களுடன் திரையில் பாடல் புதுசாக வந்திருந்தது. அத்துடன் அந்த நல்ல பாடலை இரு துண்டுகளாக்கி வழங்கி அந்த பாடலை continuous ஆக கேட்பதில் உள்ள சுகத்தை கெடுத்துவிட்டார் பாலா. மேலும் அல்பத்தில் உள்ள Junior Super Singer பாடிய பாடல் உட்பட இரு பாடல்கள் படத்தில் பயன்படுத்த படவே இல்லை.

மொத்தத்தில் ஒழுங்கான திரைக்கதை இல்லாமல் படம் கன்னா பின்னாவெண்டு சும்மா போனாலும் வழமையான பாலாவின் படங்களை போல பாத்திர படைப்பின்சிறப்பு,  திறமையான இயக்கம் போன்றவற்றிற்காக "சும்மா பரவாயில்லை பாக்கலாம்" என்ற ரகத்தை அவன்-இவன் படத்திற்கு கொடுக்கலாம்.

19 comments:

Unknown சொன்னது…

எல்லாருக்கும் ஒரே மாதிரி த்தான்....
படம் பிடிக்கவில்லை ஹிஹி

Unknown சொன்னது…

// (ஒரு கேள்வி ஏன் பாலாவின்ர படத்தில மட்டும் இப்பிடி வித்தியசமான பாத்திரங்கள் ஏன் சும்மா சாதராண ஆள் மாதிரி இருந்தா அது செல்லாதா? ஏன் வித்தியாமா காட்டோணும் எங்கிறதுக்காண்டி கழுத்து இழுத்த மாதிரி கண் இழுத்த மாதிரி பிறவுண் தலைமயிர் etc etc ஏன் ஏன்?) ///
அவ்வ்வ்வ் ம்ம்ம் உண்மை தான்!!

Mathuran சொன்னது…

அருமையான் விமர்சனம்

Mathuran சொன்னது…

//வித்தியாசமா எடுக்கிறன் வித்தியாசமா எடுக்கிறன் எண்டு பல அருவருக்கதக்க கொடுர காட்சிகளையும், உருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் கவலை தோய்ந்த கதைகளையும், மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காக சமூகத்தில் உள்ள வித்தியாசமானவர்களையே பாலா தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது எனக்கு அண்மைக்காலதத்தில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.///

ஆமாம் உண்மைதான்.. பாலா தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற வித்தியாசமான, தலைக்கு எண்ணை வைக்காத மக்களை காட்டி காட்டி சலிப்பை ஏற்படுத்திவிட்டார். கதை வேறாக இருந்தாலும் ஒரே மாதிரியான காட்சி அமைப்புக்களும், ஒரே மாதிரியான மக்களும் திரும்ப திரும்ப வந்து ஒரே மாதிரியான உணர்வை தோற்றுவிக்கிறது..

பாலா இனிமேலாவது கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்தால் நல்லது, ஏனெனில் ஒரு நல்ல இயக்குனர் ஒரே வட்டத்துக்குள் பயணிப்பது நல்லதல்ல

PremaVenus சொன்னது…

Balavidam itharkku melum ini ethirpaarppathu namathu thappu......

maruthamooran சொன்னது…

அப்ப இப்போதைக்கு அவன்- இவன் இல்லை.

பெயரில்லா சொன்னது…

//வித்தியாசமா எடுக்கிறன் வித்தியாசமா எடுக்கிறன் எண்டு பல அருவருக்கதக்க கொடுர காட்சிகளையும், உருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் கவலை தோய்ந்த கதைகளையும், மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காக சமூகத்தில் உள்ள வித்தியாசமானவர்களையே பாலா தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது//

மன்னிக்கவும் சகோ!! எனக்கு தெரிந்து வித்தியாசமாக எதையும் பாலா காட்டவில்லை...! மற்றைய இயக்குனர்கள் காட்டாத பக்கங்களை அவர் காட்டினார்....! வித்தியாசம் என்ற சொல் பயன்பாட்டில் நிறைய வேறுபாடு இருக்கிறது! பாலா கொடூரமான காட்சிகளை படத்தில் வைக்கவில்லை... எங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நாங்கள் கண்ட ஆனால்,திரையுலகம் பதிய தவறிய சில இடங்களை பதிவு செய்தார். ஒரு வேலை நீங்கள் அப்படியானவற்றை பார்க்கமால் இருந்ததால், பிடிக்காமல் இருக்கலாம் என்பதற்காக பாலா வித்தியாசமாக எடுப்பவர் என்று சொல்ல வேண்டாம்.

//இல்லை பாலா சொல்ல வந்ததை யதார்த்தமாக சொல்லியிருக்கார் சும்மா குறை சொல்லுறது சுலபம் என்று யாரும் சொல்வார்களாயின், அப்படியென்றால் அதற்கெதுக்கு பாலா? இப்ப புதுசா வாற இயக்குனர்களே இலகுவாக சொல்லிவிடுவார்களே என்ற கேள்வியே எழுகிறது//

புது இயக்குனர்களால் நிச்சயமாக ஆர்யாவை வைத்தோ,விஷாலை வைத்தோ இப்படி ஒரு கதையை படமாக்க முடியும் என்று சொல்ல வாரிங்களோ??? இல்லை, எந்த பாடல்களும் இல்லாமல், எந்த வழமையான கிராமத்து மசாலாவும் இல்லாமல் இந்த படத்தை கொடுக்க முட்யும் என்று நம்பிக்கை உங்களுக்கு இருக்குதா? அல்லது வேறு ஏதும் காரணமோ???

//அம்மணமாக இவர் காட்சியில் காட்டப்பட்டது தேவையற்ற ஒன்று. அதன் அவசியதன்மை அந்த இடத்தில் இல்லவே இல்லை. சும்மா வித்தியாசமா செய்யோணும் எண்டு பாலா செய்தார் போலவே தெரிகிறது. //

நானும் படத்தை பார்த்த போது அப்படித்தான் உணர்ந்தேன்..!!! ஆனால், பின்பு அதன் அவசியத்தை புரிந்து கொண்டேன். ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்க பயன்படுத்திய அதே கதாபாத்திரத்தை வைத்தே கொடூரத்தின் மறுபக்கத்தையும் அவர் காட்ட முயற்சி செய்து இருக்கிறார்....!!!

நிச்சயமாக இந்த படம் பார்க்கலாம் ரகம்தான்!!! ஆனால், மறுமுறை கூட பார்க்கலாம். இப்படி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளுக்காகவும், சிலவற்றுக்காகவும்:

எப்பூடி.. சொன்னது…

நந்தலாலாக் கப்புறம் இன்னும் ஒரு படமும் தியேட்டர்ல பாக்கல, விமர்சனங்களை பார்த்தால் அவன் இவனும் இல்லை என்றாகிப்போச்சு போல இருக்கு, தெய்வ திருமகளாவது விமர்சனம் படிக்கிறதுக்கு முன்னாடி பாக்கணும் :-)

உங்க எழுத்துநடை நல்லாயிருக்கு, படம் ஓகேயில்லை என்கிறது வருத்தமா இருக்கு.

பெயரில்லா சொன்னது…

விசாலுக்காக ஒரு தடவை பார்க்கலாம் என்று நினைக்கிறான் ..

விமர்சனம் நல்லா இருக்கு பாஸ் ..

Jana சொன்னது…

உண்மைதான் நேற்று லீவும்போட்டு ஆர்வமாக போய் ஏமாந்தவர்களில் நானும் ஒருவனே!
இனி நாளைக்குத்தான் பார்ப்பதாக உத்தேசம் :)

Unknown சொன்னது…

ஓக்கே! அவலவுதான்னு நினைக்கிறேன்! தியேட்டரில் பார்க்கத் தேவையில்லைன்னு தோணுது..விமர்சனங்கள பார்க்கையில்!

கார்த்தி சொன்னது…

மைந்தன் சிவா படம் பாத்திட்டீங்களா? பாத்த மாதிரி கத போகுது!

மதுரன் சரியாக சொன்னீர்கள்! ஒரு இரண்டு மூணு படத்தில இப்பிடி செய்யலாம் அதுக்காண்டி திரும்ப திரும்ப அரைச்ச மாவையே அரைச்சா சலிப்புதான் வரும்! நல்ல இயக்குனர் பாலா வித்தியாசமா சிந்திக்கணும்!

நன்றி PremaVenus உங்கள் கருத்துக்கு! பாப்பம் இனியாவது வித்தியாசமா தருவார் என்று எதிர்பாப்பம்!

மருதமூரான் அப்பிடி படம் சொதப்பலெண்டு இல்ல. சும்மா பாக்கலாம்! பாலா எண்டு பெரிய எதிர்பாப்பாலதான் ஊத்திக்கிச்சு

கார்த்தி சொன்னது…

பெயரில்லா உங்கள் பெயரை கூறியிருக்கலாமே மினக்கெட்டு இவ்வளவு பெரிய கருத்தை தந்துவிட்டு பெருமையை வாங்காம சென்றுவிட்டிங்களே! மாற்று கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்!

/* மன்னிக்கவும் சகோ!! எனக்கு தெரிந்து வித்தியாசமாக எதையும் பாலா காட்டவில்லை...! மற்றைய இயக்குனர்கள் காட்டாத பக்கங்களை அவர் காட்டினார்....! வித்தியாசம் என்ற சொல் பயன்பாட்டில் நிறைய வேறுபாடு இருக்கிறது! பாலா கொடூரமான காட்சிகளை படத்தில் வைக்கவில்லை... எங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நாங்கள் கண்ட ஆனால்,திரையுலகம் பதிய தவறிய சில இடங்களை பதிவு செய்தார். ஒரு வேலை நீங்கள் அப்படியானவற்றை பார்க்கமால் இருந்ததால், பிடிக்காமல் இருக்கலாம் என்பதற்காக பாலா வித்தியாசமாக எடுப்பவர் என்று சொல்ல வேண்டாம். */

நீங்கள் சொன்னது சரிதான். அவர் அப்பிடி நடக்காத ஒன்றையும் சொல்லலதான். அதுக்காக குறைவாக இடங்களில் உள்ள சம்பவங்களை ஒரே பாணியில் திரும்ப திரும்ப தரும்போதுதான் சலிப்பா இருக்கு.

/* புது இயக்குனர்களால் நிச்சயமாக ஆர்யாவை வைத்தோ,விஷாலை வைத்தோ இப்படி ஒரு கதையை படமாக்க முடியும் என்று சொல்ல வாரிங்களோ??? */
ஏன் மதராச பட்டினத்தில் புதிய இயக்குனர் விஜய் ஆர்யாவை வைத்து சிறப்பாக இயக்கவில்லையா? புதியவர்களால் முடியாதென்று சொல்வதை ஏற்க முடியாது. நீங்கள் சொல்வது போல் இந்தகதையை மற்றவர்கள் இப்பிடிகூட எடுக்கேலாம போகலாம். அதுக்காக புதியவர்களால் முடியாதென்பதில்லை. அவர்கள் இவரை விட வித்தியாசமான கதையுடன் வரலாம்தானே?

/* பின்பு அதன் அவசியத்தை புரிந்து கொண்டேன். */
அம்மணம் இல்லாமல் கொடுரத்தை காட்டமுடியாதா? அம்மணமே இல்லாமல் கொடுமையை இதைவிட வடிவாக காட்டலாம் காட்டியிருக்கலாம். சும்மா ஒரு வித்தியாசம் ஒண்டு இருக்கோணுமெங்கிறதுக்காண்டி புகுத்தப்பட்ட காட்சியாகதான் இதையும் உணர்கிறேன்!

/* வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளுக்காகவும், சிலவற்றுக்காகவும்: */
ஆம் இந்த படத்தில் நகைச்சுவைக்கென்று தனியாக ஓராள போடாம ஆர்யாவும் அந்த குண்டு பையனும் சேர்ந்து நல்லா கலகலப்பாக்கியிருக்கிறது முக்கியமாக குறிப்பிட வேண்டியது!

கார்த்தி சொன்னது…

எப்பூடி நான் விமர்சனம் என்ற பெயரில கதையை திருப்பி சொல்லலதானே? இது படம் பற்றிய எனது விமர்சனம். இது ஆளுக்காள் வேறுபடும்தானே. நீங்கள் படம்பாக்கோணும் எண்டு நினைச்சிருந்தா போய் பாருங்க! படம் அப்பிடி கேவலம் இல்லை! பிரச்சனை இல்லை பார்க்கலாம்.
ஏன் சரியான பிசி போல. நந்தலாலாவுக்கு பிறகு தியட்டருக்கு போகல? தெய்வதிருமகன் நான் எதிர்பார்த்திருக்கும் படம்!

ஆமாம் கந்தசாமி! விஷால் உண்மையா கலக்கியிருக்கிறார்.

Jana அண்ணா உங்கள் முகப்புத்தகம் வாயிலாக நீங்கள் halfday leave எடுத்து ஏமாந்ததாக அறிந்து கொண்டேன்! நாளை படம் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் போடுங்கள்!

ஆமாம் ஜீ தியட்டரில பாக்கவேண்டிய அவசியமில்லைதான். ஆன முதல் அப்பிடி ஆசைப்படிருந்தா எங்கட மாதிரி ஆக்களின்ர விமர்சனத்த பாத்து குளம்பாம தியட்டரில போய் பாருங்க. ரசனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்!

Cable சங்கர் சொன்னது…

நல்ல விமர்சனம்
கேபிள் சஙக்ர்

பெயரில்லா சொன்னது…

//ஏன் மதராச பட்டினத்தில் புதிய இயக்குனர் விஜய் ஆர்யாவை வைத்து சிறப்பாக இயக்கவில்லையா? புதியவர்களால் முடியாதென்று சொல்வதை ஏற்க முடியாது//

மன்னிக்கவும் அப்படி ஒரு நல்ல கதையை வைத்திருந்தாலும் அந்த புதுமுக இயக்குனர் விஜய் தன்னை சினிமாவில் அறிமுகபடுத்த அஜித் என்கிற நடிகனை பயன்படுத்தி கொண்டார். எனவே, மதராசபட்டினம் எடுக்கும் போது, விஜய் ஒரு புதுமுக இயக்குனர் இல்லை. வேறு, ஏதும் உதாரணங்கள் இருப்பின், எனது கருத்து பிழை என்பதை இங்கேயே ஏற்று கொள்ளுகிறேன்.

//நீங்கள் சொன்னது சரிதான். அவர் அப்பிடி நடக்காத ஒன்றையும் சொல்லலதான். அதுக்காக குறைவாக இடங்களில் உள்ள சம்பவங்களை ஒரே பாணியில் திரும்ப திரும்ப தரும்போதுதான் சலிப்பா இருக்கு. //

தமிழ் சினிமாவில் பாலா தந்த படங்கள் வெறும் ஜந்துதான் (அப்படித்தான் நினைக்கிறேன்) அதில் மட்டும்தான் இப்படியான் காட்சிகள் இருக்கும். இந்த ஜந்து படங்களை மட்டும் பார்த்தா? உங்களுக்கு சலிப்பு வந்து விட்டது!

//அம்மணம் இல்லாமல் கொடுரத்தை காட்டமுடியாதா? அம்மணமே இல்லாமல் கொடுமையை இதைவிட வடிவாக காட்டலாம் காட்டியிருக்கலாம். //

அம்மணம் எனும் கொடுரத்தை இலங்கையில் இருக்கும் நீங்கள் அறியாததா??? வார்த்தைகளால் சொல்வதை விட பாலா காட்சிகளால் சொல்ல நினைத்து இருக்கிறார்.

//பெயரில்லா உங்கள் பெயரை கூறியிருக்கலாமே மினக்கெட்டு இவ்வளவு பெரிய கருத்தை தந்துவிட்டு பெருமையை வாங்காம சென்றுவிட்டிங்களே! மாற்று கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்!//

வேண்டாம் சகோ. நான் பெருமைக்காக பதிவுகளை எழுதுவதும் இல்லை. வாசிப்பதும் இல்லை. கருத்துக்களை தருவதும் இல்லை. உங்கள் பதிவு என்னை கவர்ந்து இருக்கிறது. ஆனால், சில தவறுகளுடன் அதை மட்டுமே சுட்டி காட்டினேன்.

மாலதி சொன்னது…

அருமையான் விமர்சனம்

ARV Loshan சொன்னது…

படம் பார்த்த பின் வாசிக்கிறேன் :)

அம்பாளடியாள் சொன்னது…

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்