கவுட்டுப்போட்டா... நிமித்திப்போடு!!!
புதுமையாக, புத்திசாலித்தனமாக, அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக நடைமுறைசாத்தியமாக சிந்திக்க சிலரால்தான் முடிகிறது. அதனால்தான் அவர்களின் பெயர்கள் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது.
அப்படியான ஒரு வராலாற்றுச்சாதனை, உலகத்திலே யாரும் செய்திராத புதுமை அண்மையில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் புதுமை யாதெனில் இச்சாதனைக்கு சொந்தக்காரர்கள் மாணவர்களோ , லெக்சரர்களோ இல்லை! உங்களைப்போல என்னைப்போல சாதரணமானவர்களே.
கிழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று!
அண்மையில் இலங்கையை உலுக்கிய பலத்த மழைக்கு இலக்காகி பல்கலைக்கழக வளாகத்திலிருந்த மிகவும் பழைய பெரிய மரம் 14ம் திகதியளவில் பாறி வீழ்ந்த்து. இது ஏறத்தாழ 10பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்ககூடிய குறுக்கு வெட்டுமுக அடியை கொண்ட பெரிய மரம். விழுந்த இந்த மரத்தால் எந்தவித சேதமும் எவருக்கும் ஏற்படவில்லை. எனினும் பல்கலைக்கழக வளாக்தில் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை பலரும் விந்தையுடன் பார்த்து தங்களது கமராக்களால் படம்பிடித்து கொண்டனர்.
கிழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று!
கவுண்டதும் நிமிர்ந்ததும்
முன்னரும்
பின்னரும்
வெட்டிஅகற்றிய மரக்கிளைகள்
அவ்வாறு படமாக்கப்பட்ட மொறட்டுவயின் கொரில்லா
சில வானரக்கூட்டங்கள் வீழந்துகிடந்த மரத்தில் ஏறி நின்று போஸ் கொடுத்து பேஸ்புக்கில் படங்களை போட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில் நண்பர் ஒருவர் வீழ்ந்த மரத்தை என்ன செய்யலாம் என்று கேட்க இன்னோர் புத்திசாலி சிவில் என்ஜினியரிங் படிக்கும் நண்பர் சொன்னார் ”அப்படியே நிமிர்த்தி திருப்பி வளர்க்கலாம்”. பலரும் கிண்டலடிச்ச அந்த கதை இப்ப உண்மையாகிவிட்டது இப்போது.
மரத்தை வெட்டிஅகற்றும் பணியும் ஆரம்பமாகியது. மேல்பாகங்களை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு கீழே உள்ள பெரிய தண்டுப்பாகத்தை அப்படியே மீண்டும் நிமிர்த்தி வைத்துவிட்டார்கள். திரும்பி வளர்வதற்காக(????????).

இந்த பதிவுக்கு ஐடியா தந்த முகுந்தனுக்கும் படங்கள் தந்துதவிய நந்தனுக்கும் நன்றிகள்.!!
திரை தகவல் பெட்டகம்-I
இந்திய திரைப்படங்களிலுள்ள எனக்கு தெரிந்த சில விசயங்களை பகிர இந்த தொடர்பதிவு ஆரம்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் திரைஇசை பற்றிய தகவல்கள் இதில் தொடர்ச்சியாக வரும்!
ஞானப்பழம் திரைப்படத்திலுள்ள ”யாருமில்லாத தீவொன்று வேண்டும்” என்ற இந்த பாடலுக்கு யார் இசையமைப்பு என்று கேட்டால் இது நிச்சயம் A.R.RAHMAN னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென கூறுவோர்தான் ஏராளம். காரணம் இந்தபாடலிலுள்ள Melodyன் இனிமைதன்மை அந்தகால இசைப்புயலின் பாடலின் சாயலில் இனிமையாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இந்த பாடலின் இசையமைப்பாளர் ஒரு சகலகலாவல்லவர். நடிப்பு கதை திரைக்கதை இயக்கம் தயாரிப்பு என்று TR ஐ போலவே பல துறைகளில் கொடிகட்டிபறந்தவர். இவரது படங்கள் பலராலும் ரசிக்கப்படுபவை. ஒரு நக்கல் நையாண்டி நகைச்சுவையுடன் நல்ல கருத்தையும் கொண்டு அமைபவை. ஒரு திருட்டுமுழியுடன் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு 80களில் கலக்கியவர். இவரது மகனும் நாயகனாக சக்கரைக்கட்டி படத்தில் அறிமுகமாகியுள்ளார். பாரிஜாதம் படத்தில் மகளும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீங்கள் இலகுவாக பிடித்திருப்பீர்கள் அவர் வேறுயாருமல்ல K.பாக்கியராஜ்.
இப்பாடலின் இசைக்கு சொந்தக்காரர் K.பாக்கியராஜ் என்று எனக்கு வானொலி மூலமே அறிய கிடைத்தது. பலருக்கு அது தெரிந்திராமலிருக்கலாம். அதுதான் பகிர்ந்து கொண்டேன். இந்த வீடியோ பாடலை தேடும்போது கானபிரபா அண்ணா இவர் பற்றி ஏலவே பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே எழுதி Draftல் வைத்திருந்தமையால் இதை பதிவுடுகிறேன். COPY பண்ணிவிட்டேன் என்று யாரும் கூறக்கூடாது அல்லவா! அவரின் பதிவை படிக்க இங்கே அமத்துங்கள் ==>

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்