திரைதகவல் பெட்டகம்-VI (பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் சிறப்பு)

எனது கடந்த ஸ்ரீராம் பார்த்தசராதி பற்றிய பதிவில் பிழையான குழப்பான தகவலொன்றை தந்திருந்தேன். பாடகர் பாலக்காடு ஸ்ரீராமை பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் என்பது போல  சொல்லியிருந்தேன். நேரடியாக அவ்வாறு சொல்லாவிடினும் இவர் பாடிய பாடல்கள் மூலமாக நான் சொன்ன தரவுகள் உங்களுக்கு பிழையான விளக்கத்தை பெற்று தந்திருக்க கூடும். பின் அந்த பிழை லோசன் அண்ணாவினால் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டது. எனவே இந்த பதிவானது தமிழ் திரைஇசையில் உள்ள ஸ்ரீராம் என்ற பெயர் உள்ள இன்னோர் பாடகரான பாலக்காடு  ஸ்ரீராம் பற்றிய தெளிவான தரவுகளை தரமுயல்கிறது. 

இந்தபதிவு ஆரம்பிக்கும்போது தமிழ் திரைஇசையில் உள்ள ஸ்ரீராம் என்று பெயர் உள்ள அனைவரையும் ஒரு பதிவில் கொணர்ந்து அவர்கள் பற்றிய தனித்துவங்களை தந்து குழப்பங்களை முழுவதுமாக தீர்த்துவிட எண்ணியிருந்தேன். எனினும் பாலக்காடு ஸ்ரீராம்பற்றி எழுதவே நீண்ட நேரம் பிடித்துவிட்டமையினால் இதை ஒரு தனிப்பதிவாகவே ஆக்கிவிட்டேன். அடுத்த பதிவில் அனைவரையும் ஒன்றாக பார்ப்போம். 

பாலக்காடு ஸ்ரீராம்

பாலக்காடு  ஸ்ரீராம்
ஸ்ரீராம் கேரளாவில் பாலக்காடு எனும் மாவட்டத்தில் பிறந்த மலையாளி ஆவார். ஸ்ரீராம் என்று பல பெயர்கள் திரைதுறையில் இருந்தமையாலோ என்னவோ இவர் பின் பாலக்காடு ஸ்ரீராம் என்றும் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கர்நாடக சங்கீதம் கற்ற இவர் பல இசைக்ருவிகளை வாசிக்க கூடியவர். மிருதங்கம், புல்லாங்குழல், கீபோர்ட் போன்ற இசைக்கருவிகளை திறமையாக வாசிக்கும் திறமை இவரிடம் இருந்தமையால் ஒரு இசைக்கலைஞராக திரைதுறைக்கு அறிமுகமானார். பல இசையமைப்பாளர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞராக தனது பயணத்தை திரைதுறையில் ஆரம்பித்தார் என அறியப்படுகிறது.

புல்லாங்குழலுடன்
எனக்கு தெரிந்தவரை இசைப்புயல் AR.Rahmanஆலேயே பாலக்காடு ஸ்ரீராம் தமிழ் திரையிசைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். உண்மையில் இவர் அறிமுகமான பாடல் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற ”திருப்பாச்சி அரிவாள தூக்கிகாண்டு” பாடலாகும். ஆனால் அதற்கு முன்பே வேறுசில பாடல்கள் வெளியாகி உங்களுக்கு இவரின் முதல்பாடல் எது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன்பின் உயிரே படத்தில் இடம்பெற்ற ”தக தையதைய தையா” பாடலை சுக்வீந்தர்சிங்குடன் சேர்ந்து பாடினார். ஆனாலும் இந்த பாடலை பாலக்காடு ஸ்ரீராம் பாடினாரோ? என்று கேட்டால் பலர் இல்லை என்றே சொல்வார்கள். அத்தோடு பாடல் கசெட்டுகள் வெளியாகிய காலப்பகுதியிலும் இவரது பெயர் தவறுதலாக கசெட்டுகளில் இடம்பெறவில்லையாம்.


பாலக்காடு ஸ்ரீராம் + சுக்வீந்தர்சிங் பாடிய ”தக தையா" பாடல்

இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம்; இந்த பாடல் இடம்பெற்ற படம் ”தில்சே” என்ற பெயரில் ஹிந்தியிலேயே ஒறிஜினலாக எடுக்கப்பட்டு பின் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் இந்தப்பாடலை சுக்வீந்தர்சிங் பாடியிருந்தார். தமிழில் இந்த பாடல் பாலக்காடு ஸ்ரீராம் + சுக்வீந்தர்சிங் குரலில் வெளிவந்திருந்தது. ஹிந்தியில் சுக்வீந்தர்சிங்கே பாடியிருந்தமையால், தமிழில் ஸ்ரீராமும் உடன் பாடினார் என்பது பேசப்படாமலே போயிருந்தது. அதோடு இந்தபாடலில் 2Vesrsionகள் வேறு. மற்றைய பதிப்பில் ஹரிகரன் மற்றும்  ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தனர். எனவே குழப்பம் மேல் குழப்பம் இருந்தமைக்கு வாய்ப்புக்கள் நிறைய உண்டு.
மனைவியுடன் ஸ்ரீராம்
ஸ்ரீராமின் குரலானது மற்றைய பாடகர்களை போலன்றி வித்தியாசமாக இருக்கின்றமையால் இலகுவாக இவரை மற்ற பாடகர்களிலிருந்து வேறுபிரித்தறியலாம். சற்றே இறுக்கமான குரலமைப்பு கொண்டிருப்பதால் இவருக்கு கிடைக்கும் வாயப்புக்கள் பெரும்பாலும் அதிரடிப்பாடலுக்கான (Fast Beat) வாய்ப்புக்களே. கிடைக்கும் பல வாய்ப்புக்களை அற்புதமாக பயன்படுத்தி அந்தபாடல்களை நல்ல ஹிற் ஆக்கி, டப்பாங்கூத்து, அதிரடி பாடல்களில் தனக்கென தனிமுத்திரையை பதித்துள்ளார் இவர்.

மேலும் இசைப்புயலின் இசையிலே இவர்  படையப்பா படத்தில் ”வெற்றிக்கொடிகட்டு”, என்சுவாசக்காற்றே படத்தில் ”காதல் நயாகரா” போன்ற பாடல்களை பாடியுள்ளார். நான் ஏலவே சொன்னது போல இவர் உயிரே மற்றும் தாஜ்மகால் படத்திலே பாடல் பாடியிருந்தாலும் இவர் திரையுலகில் பேசப்பட்ட பாடல் என்னவோ படையப்பா படத்தில் இடம்பெற்ற ”வெற்றிக் கொடிகட்டு” பாடல்தான். சுப்பர் ஸ்ராருக்கான அதிரடிப்பாடல் என்ற கூடுதல் பலத்துடன் இந்தபாடல் அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னரே இவருக்கு வாயப்புக்கள் கூடுதலாக கிடைக்கப்பெற்றது.
சங்கீதகச்சேரி ஒன்றில் ஸ்ரீராம் (இடமிருந்து 5வதாக பச்சை ஜிப்பாவுடன்)
சங்கீத ஞானமுள்ள சில பாடகர்கள் நன்றாக சங்கதி போட்டு பாடுவதில்  மற்றும் ஆலாபனை செய்வதில் கைதேர்ந்தவர்கள். பாலக்காடு ஸ்ரீராம் இவர்களிலிருந்து மாறுபட்டு திறமையாக ஜதிகளை பாடக்கூடிய திறமை உள்ளவராக பார்க்கப்படுகிறார்.  இந்த திறமை காரணமாகவே இவர் பார்த்தாலே பரவசம் படத்தில் "Love Check" என்று தொடங்கும் பாடல், படையப்பாவில் ”மின்சார கண்ணா”, "STAR" படத்தில் ”தோம் கருவில் இருந்தோம்”, சங்கமம் படத்தில் ”மார்கழி திங்களல்லவா” போன்ற பாடல்களில் தனது தனிதிறமையான ஜதிகள் சொற்கட்டுகள் போடும் திறமையை வெளிப்படுத்தி அந்த பாடல்களை மெருகேற்றியுள்ளார். 

இவரது ஜதிகள் சொற்கட்டுகள் போடும் திறமையை (நட்டுவாங்கம்  செய்யும் திறமையையும்) உலகம் பூராகவும் பறைசாற்றியது Slumdog Millionaireல் இவரும் மதுமிதாவும் சேர்ந்து பாடிய Background Scoreற்குரிய இசைவடிவாமாகும். (மேலே முதல் பந்தியில் குறிப்பிட்ட சில பாடல்களில் இவர் பிரதான பாடகராக இல்லாது சிறப்பாக ஜதிகளை பாட பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது)

<p><a href="http://musicmazaa.com/hindi/audiosongs/movie/Slumdog+Millionaire.html?e">Listen to Slumdog Millionaire Audio Songs at MusicMazaa.com</a></p>
Slumdog Millionaireல் ஸ்ரீராம் பாடிய Liquid Dance

இவருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாகவும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றிருந்தது. ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் சாமி திரைப்படத்திற்காக ”திருநெல்வேலி அல்வாடா”, கோயில் திரைப்படத்திற்காக ”அரலிவிதையில் முளைத்த”, தொட்டிஜெயா படத்தில் ”யாரிசிங்காரி” போன்ற பாடல்கள் முக்கியமானவை. 

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் மன்மதன் படத்தில் ”பூமியென்னா வீரம் காட்டு” கண்ணாம்பூச்சிஏனடா படத்தில் ”கண்ணாம்பூச்சி ஆட்டம்” சண்டைக்கோழி படத்தில் ”முண்டாசு சூரியனே” போன்ற பாடல்கள் இவர் பாடியன.

G.V.பிரகாஸ்குமார் இசையில் வெயில் படத்தில் ”ஊராந்தோட்டத்தில ஒருத்தன் போட்ட” காளை படத்தில் ”வீரமுள்ள” பாடல்களும் தேவிசிறிபிரசாத் இசையில் மாயாவி படத்தில் ”தமிழ் நாட்டில் எல்லோருக்கும்” பாடல்களும் பாலக்காடு ஸ்ரீராம் பாடிய பாடல்களில் முக்கியமானவையாகும்.
---------------------------------------------------------------------------

கடந்த பதிவில் கேட்கப்பட்ட வினாவிற்கான வெற்றியாளர் அடுத்த பதிவில் அறிவிக்கப்படுவார். விடை: இளங்காற்று வீசுதே பாடலாகும்.

15 comments:

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

nice article :)

Unknown சொன்னது…

அப்பிடியே பிரபல போப் இசை பாடகர் மைந்தன் சிவா பத்தியும் ஒரு பதிவு போடுங்க..பிச்சிகிட்டு போகும்!!

Unknown சொன்னது…

ஓஹோ மார்கழித்திங்கள் இவரா???

ம.தி.சுதா சொன்னது…

உண்மையில் இதில் பல எனக்கு புதிய தகவலே மிக்க நன்றிப்பா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

கார்த்தி சொன்னது…

நன்றிகள் யோ வொய்ஸ் (யோகா)!

ஓம் கட்டாயம் அவர பற்றி போடுவம். முதல்ல அவரப்பற்றி ஸ்ரடி பண்ணுவம்!
மைந்தன்சிவா மார்கழி திங்கள் பாடலை பிரதானமாக பாடியது ஜானகியும் உன்னிகிருஸ்ணனும்தான். அதில் வரும் ”ததிதரிகிடதீம்தீம் ததாததா தாதகிடதா ” போன்ற நடன ஜதி சொற்கட்டை பாடியவர் மட்டுமே இவர்!

கார்த்தி சொன்னது…

நன்றிகள் மதி.சுதாஅண்ணா!

anuthinan சொன்னது…

பலவற்றை அறிய தந்தமைக்கு நன்றிகள் நண்பா!!!!

Mohamed Faaique சொன்னது…

///அப்பிடியே பிரபல போப் இசை பாடகர் மைந்தன் சிவா பத்தியும் ஒரு பதிவு போடுங்க..பிச்சிகிட்டு போகும்!//

காமடி பதிவா????

குணசேகரன்... சொன்னது…

ஒவ்வொருத்தரப்பத்தியும் நீங்கள் விளக்கும் விதம் அருமை...

பெயரில்லா சொன்னது…

மிகவும் விரிவாகவே அவரை பற்றி தந்துள்ளீர்கள் குழப்பங்கள் தீர்ந்தது பாஸ் ...

sinmajan சொன்னது…

பல தகவல்கள் எனக்குப் புதியது கார்த்தி..
தொடருங்கள்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

கார்த்தி சொன்னது…

Anuthinan S, Mohamed Faaique, குணசேகரன், கந்தசாமி, sinmajan, Softy, உலக சினிமா ரசிகன் அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

maruthamooran சொன்னது…

கார்த்தி…….!

திரை பாடல்கள்- பாடகர்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதி வருகின்றமைக்கு வாழ்த்துக்கள். தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய பல தகவல்களை தங்களின் தளத்துக்கு வருவதன் மூலம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது.

அண்மையில் என்னுடைய நண்பரொருவருடன் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று பேச்சு வந்தபோது, அவருக்கு உங்களின் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன். பல விடயங்களை தேடி பதிவேற்றுகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.

vidivelli சொன்னது…

vaachiththaen arinthukondaen..
nalla pathivu...
vaalththukkal..


namma pakkamum kaaththirukku unkalukkaaka....

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்