சுட்டுடாங்கய்யா சுட்டுடாங்க!

இப்ப எதை எதையெல்லாம் சுடுவதென்று ஒரு விவஸ்தயே இல்லாமல் போய்விட்டது. ஆளாளுக்கு எதெல்லாம் கொப்பி பண்ணலாமோ அதெல்லாம் கொப்பி பண்ணி Useபண்ணவேண்டியதில் Useபண்ணி பிழைத்துக்கொள்கிறார்கள். அப்பிடிதான் கழண்டது ஒண்டு சுடுறதுக்கு ஒண்டும் இல்லாம என்ர மூஞ்சிப்புத்தகத்தில நான் போட்ட STATUSஐ or அட்டு வரியை அப்பிடியே கவ்வி தனது தளத்தில(newjaffna.com) செய்திக்குறிப்புக்கு தலைப்பாவே வைச்சுட்டார்! அந்த செய்திக்குறிப்பை பாக்க இங்கே கிளிக்குங்கள்.

எனது மூஞ்சிபுத்தகத்தில போட்ட ஒறிஜினல் Status

அதை சுட்டு NEWJAFFNA தளத்தில போட்ட தலைப்பு

காப்பி பண்ணின ஆளுக்கு (என்னோட படிச்சவர்தான்) ஒரு ரசனையே இல்லையா? இப்பிடி ஒரு டுபாக்கூர் தலைப்பா வைச்சா யார்தானய்யா உன்ர Newsஐ வாசிப்பான்? மனுசர் அதை Facebookலயே like பண்ணவைக்க படுற பாட்டில, அதுல யோயி கைய வைச்சிட்டியே கண்ணா! சுடுறதுதான் சுடுறாய், நல்லா வேற மூளையுள்ளதுகள் போடுறதை சுடுறது.. ஆக்களா இல்லை. அதுதான் சொல்லுறது படிக்கேக்கயே EXAMல நம்ம மாதிரி வடிவா copyஅடிச்சு பழகோணுமெண்டு. பரவாயில்ல இனியாவது பிழைச்சுக்கோ!

அய்யோ சொல்லோணும் எண்டு மறந்துட்டன். IPL2011ல் சாம்பியானான எனது விருப்பதிற்குரிய, தமிழர்களுக்கான அணியான சென்னை சுப்பர் கிங்ஸிற்கு மனமார்ந்த வாழத்துக்கள்.
--------------------------------------------------------------------------------

கடந்த திரைதகவல் பெட்டகம்-IV (பாடகி பிரசாந்தினி சிறப்பு) பதிவில், அறிவிக்கப்பட்ட போட்டியிற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது விடைகளை கூறியிருந்தனர். சிலர் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே விடை கூறியிருந்தனர் வேறு சிலர் 3கேள்விக்குமே பதில்கூறியிருந்தனர். அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

அறிவிக்கப்பட்டபடி முதலாவது கேள்விக்கு சரியான பதிலை கூறியவருக்கே பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் அவர் இந்தியாவில் இருப்பதால் 2வது கேள்விக்கு சரியான விடைகூறிய இருவரில் ஒருவருக்கு பரிசு செல்கின்றது. ஒவ்வோர் கேள்விகளுக்கும் விடையை சரியான விடை கூறியோர் விபரம் கீழே.

1 - இந்தியாவிலிருந்து சு.கி.ஞானம்
ஆனால் இந்த கேள்விக்கு 2பாடகிகளின் சரியான படலை கூறி முயற்சித்தவர்கள். சாலினி சிவதாஸ், முகுந்தன் குமாரசாமி, விநாயகதேவன் சுகீசன்
2- சற்குணசிங்கம் தாசன், சத்தியமூர்த்தி நிறாதன்
3- முகுந்தன் குமாரசாமி, விநாயகதேவன் சுகீசன், கன்கோன்
எனவே முதலாவதிற்கு சரியாக கூறிய சு.கி.ஞானம் பரிசை பெற்றுக்கொள்ள முடியாமையினால் 2வதிற்கு சரியாக கூறிய  சற்குணசிங்கம் தாசன் வெற்றியாளராக தெரியப்படுகிறார்.
சரியான விடைகள்
1.அண்ட்றியா - இதுவரை இல்லாத (கோவா) வேறு பாடல்களும் உண்டு
   வசுந்தரா தாஸ் - தத்தைய் தத்தைய் (மன்மதன்) வேறு பாடல்களும் உண்டு
   மம்தா மோகன்தாஸ் - இடை வெளி (கோவா)
2.டானியல் கிறிஸ்டியன்
3.இயக்குனர் விஜய்

அடுத்த பதிவில் மீண்டும் பரிசுக்கான இலகுவான கேள்வி வரும்.

22 comments:

பெயரில்லா சொன்னது…

///அட்டு வரியை அப்பிடியே கவ்வி தனது தளத்தில(newjaffna.com) செய்திக்குறிப்புக்கு தலைப்பாவே வைச்சுட்டார்!//இவர்கள் என் பதிவு ஒன்றையே கேட்டு கேள்வி இல்லாமல் சுட்டு போட்டவர்கள்..

பெயரில்லா சொன்னது…

////2- சற்குணசிங்கம் தாசன்,/// அட நம்ம தாசன் அண்ணே, இவர் பண்ணாகம் தானே )

பெயரில்லா சொன்னது…

///3.இயக்குனர் விஜய்/// வட போச்சே... ஹிஹிஹி

கார்த்தி சொன்னது…

அய்யோ பாவமே கந்தசாமி! கேட்டுகேள்வி இல்லாம பதிவ சுட்டதுக்கு ஆளையே போட்டிருக்க வேண்டாமா? ஏன் இன்னும் விட்டு வைச்சிருக்கீங்க? ஹிஹிஹி

அவரேதான் பண்ணாகம் புகழ் தாசன். என்னெண்டோ நெட்டில search பண்ணி போட்டிட்டான் பாவி!!!

பெயரில்லா சொன்னது…

///அய்யோ பாவமே கந்தசாமி! கேட்டுகேள்வி இல்லாம பதிவ சுட்டதுக்கு ஆளையே போட்டிருக்க வேண்டாமா? ஏன் இன்னும் விட்டு வைச்சிருக்கீங்க? ஹிஹிஹி// கீழ என்ற பிளாக்கரின்ர பெயரையும் கொடுத்திருந்தார் (லிங்க் அல்ல) அது தான் விட்டுட்டன்...

கார்த்தி சொன்னது…

ஓ அப்படியா! அதுவரைக்கு நல்லம்தான்!!

ம.தி.சுதா சொன்னது…

பரிசு பெற்றவருக்கு என் வாழ்த்துக்களும் சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

இதே அளு தாம்பா... இவரு பெயர் பிரசாத் என நினைக்கிறேன்... என்னொட ஒரு ஆக்கத்தை திருடி பெரிய வீரனாட்டம் ஹிட் வாங்க போனவன் வந்தவனெல்லாம் என்னை திருடுனாக்கினாங்கள்..

நிரூபன் சொன்னது…

நண்பர்களுக்கிடையிலான காப்பி பேஸ்ட்டைப் பற்றிச் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிறீங்க, ரசித்தேன்.

பரிசு பெற்ற சகோ சற்குணசிங்கம் தாசனிற்கு வாழ்த்துக்கள் சகோ, உங்களின் இச் செயற்பாட்டிற்கு கூடவே நன்றிகளும், வாழ்த்துக்களும்!

Unknown சொன்னது…

யோவ் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல??

Unknown சொன்னது…

பரிசு பெற்றவருக்கு வாழ்த்துக்கள்...
எங்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாச்சும் தந்திருக்கலாம்...ம்ம் பரவால..

கார்த்தி சொன்னது…

ஓம் மதி.சுதா அண்ணே. அவர்தான் ஆள்இ என்னோட ஒன்றான படித்தவரும் கூட. அதான் கலிகாலம் எண்டுறது. என்னையும் திருடனாக்கிடுவாங்க எண்டுதான் நான் முந்திட்டன்!
நன்றிகள் நிரூபன்!
ஏன் மைந்தன் சிவா மட்டும்தான் மொக்கை போடலாமா எப்புடி நாங்களும் போட்டமுல்ல மெகா மொக்கை!!

கார்த்தி சொன்னது…

மைந்தன் சிவா ஒரு கேள்விக்கு கூட answer try பண்ணேல! பரிசாம் பரிசு... ஹிஹிஹி

ஆதிரை சொன்னது…

பல இணையத்தளங்கள் மூன்றே மூன்று விடயங்களை மட்டும் நம்பியே ஆரம்பிக்கப்படுகின்றன.

1. Ctrl key
2. C key
3. V key

Unknown சொன்னது…

//அடுத்த பதிவில் மீண்டும் பரிசுக்கான இலகுவான கேள்வி வரும்//
சரிங்க பாஸ்! முயற்சிக்கிறேன்! :-)

Yoga.s.FR சொன்னது…

இதனை விடவும் கொடுமை என்ன தெரியுமா?அண்மையில் தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகளை அறிவித்த போது தமிழ் மணத்தில் ஒரு விஷேட கலம் கருத்துரைப்பதற்கு(கொமெண்ட்)விட்டிருந்தார்கள்!அதில் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதுவது போன்ற ஒரு கடிதம் எழுதியிருந்தேன்!அதனையே மறு நாள் ஒரு பிரபல?!பதிவர்,ஒரு பதிவாக்கி தேத்தி விட்டார்!எங்கே போய் முட்ட?????

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பரிசு பெற்றவருக்கு வாழ்த்துக்கள்...

கார்த்தி சொன்னது…

ஆதிரை அண்ணா ஓம் அது உண்மைதான். இவங்கள் சுட்டுபோட்டது பெரிய பிழை எண்டோ, நான் எழுதினது பெரிசெண்டோ சொல்லலை. அவர்கள் போடுமுன் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம். பழக்கவழக்கங்கள் தெரியாத ஆக்கள்!!

நன்றி ஜீ பரிசெடுக்க வாழ்த்துக்கள்!

ஓ அப்படியா Yoga.s.FR!! என்ன செய்வது ஏமாற்றுக்காரர்களின் காலந்தான் இப்போது! அவர்களா திருந்தாட்டி கஸ்டம் எங்களால ஒண்டுமே செய்யேலா!

நன்றிகள் இராஜராஜேஸ்வரி !

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
natarajan சொன்னது…

அவர்களுக்கு கற்பனை வளம் குறைவு பாஸ்.. அப்பிடி தான் இருப்பாய்ங்க..கழுத போவுது விடுங்க..இணையத்தில் இதெல்லாம் சகஜமப்பா..
vaithee.co.cc

அன்புடன் மலிக்கா சொன்னது…

இதெல்லாம் பதிவுலகில் சாரணமப்பா.
காப்பியையும்.:{ பேஸ்டையும்:{தான் ரொம்ப விருப்புறாங்கபோல..

குணசேகரன்... சொன்னது…

i am the new person to your blog..just now i visited..nice posts all.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்