வேட்டைக்காரன் ஹிட் ஆகப்போவதற்கான வலிதான 5காரணங்கள்

வேட்டைக்காரன் படம் பற்றி பல கருத்துக்கணிப்புக்கள் ஏலவே வந்துவிட்டாலும் கூட இந்த படம் பற்றி எனது கணிப்பு யாதெனில் விஜயின் ஹட்ரிக் தோல்விக்கு பின் ஒரு வெற்றிப்படமாக இது இருக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள வேட்டைக்காரன் விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று. நான் விஜயின் ரசிகன் அல்ல. உண்மையில் விஜயை எனக்கு பிடிக்காது. இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.இதோ நான் கூறும் காரணங்கள் 5....

1.மற்றையை நடிகர்களின் படங்களை போலன்றி இந்த படத்தின் விமர்சனபதிவை போட்டு செம ஹிட்டுகளை எடுக்க பதிவர்களும், வேறு பத்திரிகைகாரர்களும், ஏன் விஜயை வைத்து காமடியை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்போரும், ஏனையோரும் முதல்நாள் காட்சியை அடிபட்டு பாக்கபோவது உறுதி. எனவே முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாகி நல்ல ஆரம்பத்தையும் போதிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்க போவது உறுதி. (பல பதிவர்கள் இப்போதே வேட்டைக்காரன் விமர்சனத்தை எழுதி Draftகளில் ஆயத்தமாக வைத்திருப்பதாக கேள்வி)
2.இப்படத்தின் பெயர் ஏலவே வந்த MGR படத்தின் பெயராகையால் விபரம் தெரியாத பெரிசுகள் பல, படத்தின் போஸ்டரையோ பெயரையோ வியம்பரங்களில் கேள்விப்பட்டு பழைய படத்தைதான் திரும்ப போடுறானுகள் எண்டு நினைத்து செல்ல சாத்தியங்கள் இருக்கின்றன.


3.ஏற்கனவே பாட்டுக்கள் விஜய் அன்ரனியின் அதிரடி இசையில் வெளிவந்து சந்து பொந்தெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இளசுகளுக்கு ஏற்ற செம Fast Beat ல் வந்திருப்பதால் படம் எப்பிடி சொதப்பலா இருந்தாலும் பறுவாயில்லை பாட்டை மட்டுமே தியட்டரில DTSஒலி நயத்துடன் கேட்டு ஆட்டம் போட்டா காணும் என்று இளசுகள் கூட்டம் கனக்க திரியுதுகள். (வேட்டைக்காரன் படம் எடுக்கும் தியட்டர்கள் இப்பவே ஆசனங்களை சரிசெய்ய காசை ரெடி பண்ணி வைச்சிருப்பது நல்லது பாடல் காட்சிகளுக்கு குத்தாட்டம் போட்டு பத்தையும் பலதையும் சேதப்படுத்த ஆயத்தமாக குஞ்சு குருமன்கள் தொடங்கி கிளடுகள் கட்டைகள் எல்லாம்.)4.படத்தில் நாயகியாக அருந்ததி புகழ் அனுஷ்கா. ஏற்கனவே இப்படத்திற்கான இவரின் சூடான ஸ்ரில்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஹிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு புதிய அழகுப்பதுமை அனுஷ்காவை
பார்க்கவென ஒரு கூட்டம் தியட்டரை நிறைக்க போவது உறுதி.


5.இயக்குனராக இப்படத்தில் அறிமுகமாகிறார் தரணியின் சிஷ்யன் பாபுசிவன். இது இவரின் முதல்படமென்பதால் படத்தை எப்படியாவது வெற்றியடையச்செய்து தனது தடத்தை திரைத்துறையில் ஸ்திரமாக பதியசெய்ய இயக்குனர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார். எனவே எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில் இப்படம் இருக்கும் என்பது பலரின் கருத்து.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு-2

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு-2


இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை(13-12-2009 )
நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
--- சென்ற சந்திப்புக்கு வராதவர்கள் மாத்திரம் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
  • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
--- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
  • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
--- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
--- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்


  • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
--- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
  • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
--- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
--- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
  • உங்களுக்குள் உரையாடுங்கள்
--- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்


இப்பதிவு இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்திலுள்ள மின்னஞ்சலை அப்படியே காப்பி செய்து பதியப்பட்டது

Expose 2009 – தொழில்நுட்ப கண்காட்சி

இலங்கையில் முதல் நிலையில் உள்ளதோடு மட்டுமன்றி, ஆசியாவிலும், ஏன் உலகவரிசையிலும் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகமாக பலராலும் அறியப்பட்ட பெருமையை கொண்ட பல்கலைக்கழகம்தான் மொறட்டுவைப்பல்கலைக்கழகம். கொழும்பு மாநகரத்திலிருந்து சற்று தள்ளி இயற்கையான, அமைதியான சூழலில் அமைந்திருந்து பற்பல மாணவர்களின் அறிவுதேடலுக்கு போதியளவு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது இப்பிரசித்தமான கலாசாலை.

 Department of Electronics & Telecommunication Engineering building

இம் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியல் துறை (Electronics & Telecommunication Engineering) ஒவ்வொரு ஆண்டும் மிகப்பிரமாண்டமாகவும், பெருமையோடும், சிறப்போடும் நடாத்தும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சிதான் எக்ஸ்போஸ்(Expose). சரியாக 40ஆண்டு காலமாக வெற்றிநடை போடும் Electronics & Telecommunication Engineering வருடம்தோறும் புதுமைபடைக்கும் திறமைகொண்ட 100பொறியியலாளர்களை உருவாக்கி, தற்போதைய காலகட்டத்தில் முதல் இடத்தை தனதாக்கியுள்ள பொறியியல் துறை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ற்கான உத்தியோகபூர்வ இலட்சிணை

இந்த வருடமும் வழமைபோல இக் கண்காட்சி "beyond imagination"  என்ற தொனிப்பொருளில் மிகவும் சிறப்பாக டிசெம்பர் 10ம் திகதி முதல் 13ம் திகதிவரை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியல் கட்டிடதொகுதியில் நடாத்தப்படவுள்ளது. அனுமதி அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளமையால் பெருந்தொகையான மக்கள் இதன் மூலம் பயனடையப்போவது வெளிப்படை. இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொடர்பான தற்போதைய நிலை, தொழில்நுட்பங்கள் பற்றிய இலகுவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது.

கண்காட்சி நடைபெறும் நாட்கள் காலை, மாலை என இரு காலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் கீழே தரப்படுகிறது.

10 December காலை கண்காட்சி தொடக்க வைபவம்
                        மாலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors

11 December காலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors
                        மாலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors

12 December காலை Techfest iNexus சர்வதேச ரோபோ போட்டி
                        மாலை E-merge

13 December காலை ரோபோ காட்சிப்படுத்தல்
                         மாலை பரிசளிப்பு வைபவமும் நிறைவு நிகழ்வும்.


இக்கண்காட்சியில் உள்வாரி, வெளிவாரி மற்றும் வேறுபல்கலைக்கழக, உயர் கல்வி நிறுவன மாணவர்களின் இலத்திரனியல், தொலைத்தொடர்பாடல், Bio medical Engineering, Robotics and Image processing பிரிவுகளுடன் தொடர்புடைய பல projects கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Techfest – iNexus சர்வதேசரீதியிலான ரோபோ போட்டி இரண்டாவது முறையாக இக்கண்காட்சியில் 12ம் திகதி நடாத்தப்படவுள்ளது. Techfest – iNexus ரோபோ போட்டியில் பங்குபற்ற விருப்பமான இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் இக்கண்காட்சியில் போட்டியிடவுள்ளனர். இதில் வெற்றிபெறும் அணிகள் ஜனவரி 22-24ம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள Techfest ரோபோ போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.

இந்தமுறை பொதுமக்களுக்காக ரோபோ காட்சிப்படுத்தல் மற்றும் தொழில்பட்டறை (workshop) ஒழுங்குபடுத்தப்பட்டள்ளது. இதன் நோக்கம் யாதெனின் வளர்ந்து வரும் துறைகளான robotics and automation தொடர்பாக தேவையான அறிவை சாதாரண மக்களுக்கு வழங்குதலாகும். நடைமுறையிலுள்ள சில பிரச்சனைகளுக்கு பொறியியல் தீர்வை வழங்கும் அறிவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிகமாக பல ரோபோக்களின் செயல்பாடுகளும் அதில் விபரிக்கப்படவுள்ளது.

கடந்த வருட கண்காட்சியின்போது

E-mergeல் வேறுபல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களின் இலத்திரனியல் தொலைத்தொடர்பாடல் தொடர்பான projectகள் போட்டியிடவுள்ளது. இதன் மூலம் அறிவை வளர்ப்பது மட்டுமன்றி மற்றைய பல்கலைக்கழக திறமையான இளம் மாணவர்களுடன் பரஸ்பரம் அறிவை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

E-Juniors எனும் இப்பிரிவில் பாடசாலை மாணவர்களிற்கிடையான போட்டியும், தொழில் பட்டறையும்(workshop) இடம்பெறவுள்ளது. பாடசாலை மாணவர்கள் தங்களது சிறப்பான புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்கு இதன் மூலம் வழி பிறக்கிறது. நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக முதல்முறையாக யாழ் மாவட்ட மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. உயர்தர மாணவர்களுக்கான பௌதிகவியலிலுள்ள இலத்திரனியல் தொடர்பான ஆய்வுகூட பரிசோதனை அனுபவத்தை இத்தொழில் பயிற்சிபட்டறை வழங்கவுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு வெளியேயுள்ள போதிய வசதிகளற்ற ஆய்வுகூடத்தை கொண்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் இதன்மூலம் பயனடையவுள்ளார்கள்.

மொத்தமாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இலங்கையின் சிறந்தவொரு தொழில்நுட்ப கண்காட்சியை இலவசமாக கண்டுகளிக்க தவறவேண்டாம். இல்லாவிடில் இன்னும் ஒருவருடம் காத்திருக்க நேரிடும். எனவே சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
http://www.expose2009.net/

பி.கு: இந்த ஆக்கம் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்காக எழுதப்பட்டது. ஞாயிறு தினக்குரலில் சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

”பொட்டலம்”ஆக மாறும் விடிவெள்ளி!!

வணக்கம் நண்பர்களே! காலை விடிந்ததும் அன்றும் வழமைபோல் வேறு தொழிலில்லாது வெள்ளி(?) பார்த்துக்கொண்டிருந்தபோது, சமயம் பார்த்து அந்த Gapல எனது புலொக்கின் பெயரை புல்லுருவிகள் யாரோ கடாசிவிட்டார்கள். படுபாதகர்கள்!!! தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதுவும் விரும்பி சேர்ந்தல்லவா ஓடிவிட்டதாம்.
என்ன செய்யிறது அதுக்காக ஊரை கூட்டி ஒப்பாரியா வைக்கமுடியும். ஒண்டு போனால் என்ன? இன்னொண்டு ஆப்பிடாமலா போயிடும். அதுக்கிடேலேயே இன்னொன்றை பிடிச்சிட்டமில்ல. அவனவன் என்னத்த என்னத்தயெல்லாம் மாத்துறான். நாங்க இதயாவது மாத்த வேண்டாமா? ஒன்றையே கனக்கநாள் வைச்சிருந்தா அலுப்புத்தானே அடிக்கும்.
So இத்தால் யாவருக்கும் சொல்லிக்கொள்வது என்னெண்டால் இதுவரை காலமும் விடிவெள்ளி என்ற பெயரில் உங்களுக்கு விடிவை தராது உதித்த வெள்ளி இன்று முதல் அலேக்காக கட்டப்பட்டு ”பொட்ம்” ஆக உங்கள் கைகளில்.. (இது நிச்சயமாக அந்த பொட்டலம் இல்லை.) வழமைபோல் இதிலேயும் நல்லதுகள், கெட்டதுகள், குப்பைகள், சப்பைகள், கஞ்சல்கள், கெஞ்சல்கள், மிச்சங்கள், சொச்சங்கள், பொரியல்கள், பிரட்டல்கள் எல்லாம் சேர்ந்து உங்களுக்காக பொட்டலம் கட்டப்படும். சில புதுமைகள் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

மீண்டும் சந்திப்போம்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்