ஒரு கல் ஒரு கண்ணாடி (OKOK Double OK) - திரைப்பார்வை

ஒரு கல் ஒரு கண்ணாடி சிறு பட்ஜெட் நட்சத்திர ஹீரோ இல்லாத படங்களுக்கும் எதிர்பார்ப்பு பிச்சுக்கிட்டு எகிறும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படியான படங்களுக்கு இயக்குனரின் மேலுள்ள நம்பிக்கைதான் முக்கிய காரணமாக பெரும்பாலும் இருந்துவிடுவதுண்டு. இந்தப்படத்தில் இயக்குனர் ராஜேஷிடம் உள்ள நம்பிக்கைக்கு மேலதிகமாக காமெடியன் சந்தானத்தின் மேலுள்ள நம்பிக்கைதான் உச்சபட்சமாக இருந்ததென்பது வெளிப்படை.


சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு பின்னர் ராஜா-I திரையரங்கு யாழ்ப்பாணத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்தேன். ராஜா-IIல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு புதுவருடத்தில் 2வது பெரிய்ய பல்ப்பு. எதிர்பார்த்ததைவிட ராஜா-Iஇல் sound system நல்லாகவே இருந்தது. ராஜா-IIல் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு இன்னோர் படம்வாயப்பு தவறிப்போனது.

சிவா மனசில சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற காமெடிகலட்டா வெற்றிகளை கொடுத்த ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தனது ஹாட்றிக் வெற்றியை கொடுத்து விட்டார். என்னை பொறுத்தவரை தனது முதல் 2படத்தையும் விட இதில் சூப்பராக காமெடிகளை அள்ளி கொட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் பெரிய்ய மைனஸ் பாயிண்டாக இருக்கலாம் எனக்கருதப்பட்டவர் படத்தின் அறிமுக ஹீரோ உதயநிதி ஸ்டாலின். ஆனால் படத்தின் ஆரம்ப ஒரு பாடல்காட்சியில் (ஆட வேண்டிய) மட்டுமே கொஞ்சம் தடுமாறியிருந்தாலும்/ முதிர்ச்சியில்லாமலிருந்தாலும் பின்னர் பாடல் மற்றும் காமெடிக்காட்சிகளில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கலைஞரின் குடும்பத்திலிருந்து அருள்நிதியை தொடாந்து இன்னொர் யாதார்த்தமான ஹீரோ வந்துவிட்டார்.


ஒரு யாதார்த்த / sentiment/ கதையம்சமுள்ள சினிமாவிலோ ஒரு இயக்குனர் தனது தனி முத்திரையையோ அல்லது பலரால் பராட்டப்படக்கூடிய படத்தை தருவது மிகப்பெரிய்ய கஸ்டமான விடயமாக இருக்காது. ஆனால் இப்பிடிதான இருக்கும் என்று தெரிந்த கதையில் படத்தை சுவாரஸ்யமாக ஆரம்பம் முதல் இறுதிவரை தியட்டர் பூராகவும் கலகலப்பாக வைத்திருப்பதென்பது மிகவும் கஸ்டமான விசயமும் அதிலேதான் ஒரு இயக்குனரின் தனிதிறமையும் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்ட 3படங்களை வெற்றிகரமாக ரசிகர்கள் ரசிக்கும் படியாக கொடுத்த ராஜேஷக்கு பெரிய்ய சபாஷ். 


படத்தின் காமெடிக்கு சந்தானத்தின் வேலையே ஆகா ஓகோ. ஒவ்வொரு படத்திலும் என்னமா முன்னேறுகிறார் இவர். இவரும் உதயநிதியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளோ அய்யோ அய்யோ. எப்பவுமே இவர் வரும் காட்சிகளில் சிரிப்புகள் கைதட்டல்களும்தான். இவரின் டைமிங் காமெடிகளும் கலர்கலரான கண்ணுக்கு குத்தும் நிறங்களில் போட்டுவரும் dressகளும் சொல்லிவேலையே இல்லை. அத்துடன் உதயநிதிக்கு அம்மாவாக வரும் சரண்யா. வழமையையும் விட மேலாக பின்னிபிடலெடுத்துவிட்டார். அம்மா வேடமென்றால் கூப்பிடுங்கள் சரண்யாவை என்பது இப்போது தமிழ் சினிமாவில் மாற்றமுடியாதது என்றாலும் மற்றபடங்களையும் விட மேலதிகமாக தனது முகபாவங்களினூடாக காமெடிகளில் ரசிக்கவைக்கிறார் சரண்யா. சந்தானம் உதயநிதிக்கு அடுத்ததாக சரண்யாதான் நடிகர்களில் அடுத்த பெரிய்ய பிளஸ்.

படத்தின் ஹீரோயின் ஹன்சிகா முந்தைய படங்களைவிட இன்னும் குண்டாக தெரிகிறார். சின்னத்தம்பியில வந்த குஸ்பு என்று வேறு படத்தில் கூட சொல்கிறார். So ஹன்சிகா ரசிகர்களின் எதிர்ப்பை பெறமால் அப்பிடியே செல்கிறேன். படத்தில் ஆர்யா சினேகா அண்ட்ரியா guest actorsஆக வருகின்றனர். படஎழுத்தோட்டத்தில் யுவன்சங்கர்ராஜாவிற்கும் நன்றி என்று போட்டமைக்கு சிவா மனசில் சக்தி படத்தில் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடலை எழுதியவர் யுவன் என்பதால்தானோ தெரியவில்லை. யாரும் உறுதியாக தெரிந்தால் உறுதிப்படுத்தவும். 


தனது முதல் இரு படங்களுக்கும் யுவனின் இசையை பெற்ற ராஜேஷ் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றிருந்தார். உதயநிதி ஸ்டாலின் விருப்பத்தால் இந்த மாற்றம் வந்திருக்குமோ தெரியவில்லை. வழமைபோல பழையதை உல்டா பண்ணி பாடல்கள் வந்திருந்தாலும் அனேக ரசிகர்களின் ஆதரவை இப்பாடல்கள் பெற்றிருந்தன. என்றாலும் நண்பன் பாடல்கள் கொடுத்த பெரிய்ய தாக்கத்தை இந்தப்பாடல்கள் தவறவிட்டிருந்தமை உண்மை. ஆல்பத்தின் சூப்பர் ஹிட் பாடலான ”வேணாம் மச்சான் வேணாம் பாடல் சத்யம் படபாடல் ”பால் பப்பாளி” பாடலின் அதே மெட்டுமதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களை அழகாக காட்சிப்படுத்தியுமிருந்தார் இயக்குனர். பின்னணி இசையில் ஹாரிஸின் பங்கு இந்தப்படத்தில் முக்கியமில்லையென்றாலும் பின்னணி இசை சொல்லும்படியாக இருக்கவில்லை.

ஒரு நல்லவொரு காமெடிபடம்பார்த்து கவலைகளை மறந்து சிரிக்கவேண்டுமா உடனே ஓடுங்கள் ஒரு கல் ஒரு கண்ணாடி திரையிடும் திரையரங்குகளை நோக்கி. 
மொத்தத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி = OKOK Double OK 

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்