சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
டிஸ்கி: இந்த தொடர் பதிவுமூலமாக ஒவ்வாரு பாடல்களும் கேக்கும்போது ஏற்படும் நினைவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும். பாடல்கள் மூலமாக கடந்து வந்த பாதைகளை அசைபோடுதல் பதிவின் நோக்கமாக இருக்கிறது.
இடம்பெயர்ந்து சாவச்சேரிக்கு வந்து வெறும் ஒரு மாதமும் ஆகியிருக்காது. 1995பிற்பகுதி அது. ஒரு விடிகாலை நேரம், அண்மையில்தான் றேடியோவுடன் setup செய்யப்பட்ட டைனமோவை சைக்கிளை குப்பிற கிடக்கவிட்டு கையால் பெடலை சுழற்ற தொடங்குகிறார் பெரியப்பா. ஒரு பெரிய்யவீட்டில் நாங்கள் 3குடும்பம் தங்கியிருக்கிறோம். நானும் அண்ணாவும் படுத்திருந்த ஹோலுக்கு அண்மையில் நிலையெடுத்திருந்த றேடியோ, இலங்கை சர்வதேச வானொலியின் அறிவிப்புடன் எனது நித்திரையை குழப்புகிறது. எனக்கும் வேறு சிந்தனை இன்றி படுத்திருந்தபடியே சுழலும் பின்பக்கசில்லின் வால்ரியுப்கட்டை பற்றி அலைவுகாலத்தை கண்இமைப்பொழுதை கொண்டு கணக்கிட முயற்சிக்கிறேன். ஒரே சீராக சில்லு சுற்றுகிறதா இல்லையா என்பதை அறியதான் முயல்கிறேன். என்னை அறியாமலே எனது கவனம் சிதறுகிறது.
அந்த மெட்டின் அடி அந்த இனிமை எனது வழுக்கொண்ட கணிப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கிறது. என்னால் சில்லு சுற்றுவதை இப்போது உணரக்கூட முடியவில்லை. மார்கழி மாதம் நெருங்கிவிட்ட அந்த மழைக்குளிருக்கு மேலாக அந்த பாடல் மேலும் குளிர்ச்சியை அள்ளி கொட்டுகிறது. வானத்தில் பறப்பது போல ஒரு உணர்ச்சி. அப்போது சினிமா தொடர்பில் அறிவுமட்டம் பூச்சியம். யார் பாடினது இசையமைச்சது ஒண்டும் தெரியாது. ஒண்ணு மட்டும் விளங்கியது பாட்டு மக்சிமம் எண்டு.
இந்தப்பாட்டை ஒவ்வொருமுறை கேக்கும்போதும் இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த நினைவுகளும் அந்த காலைப்பொழுதும்தான் ஞாபகத்தில்!!! ஒவ்வொரு பாடல்களும் தருகின்ற நினைவுகள் ஏராளம்.
-------------------------------------------------------------------------------
அப்போதுதான் எமக்கு A/L ஆரம்பித்திருந்தது. 2003ன் தொடக்கம். பாடகர் கார்த்திக் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலப்பகுதி. சனி ஞாயிறு விடிய 7.30க்கு ScienceHallல Class தொடங்கிடும். விடிய செந்தில்ராஜ் Sirன்ர CombinedMaths. அந்தாள் Time எண்டா Time. என்ன இடி இடிச்சாலும் சரியா 7.30க்கு வகுப்பு தொடங்கிடும். (சுனாமி அடிச்ச அடுத்த நாளே அதேநேரத்துக்கு தொடங்கின punctualityஆளு). Startல வேறகொட்டிலுல நடந்தாலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு Sience Collegedன்ர தொங்கல் கொட்டிலிலயே விடிய Class permanentஆயிடுச்சு. அந்த கொட்டிலுன்ர அமைப்புதான் எனக்கு எமன்; யாரும் வகுப்புக்கு உள்ளுக்கு போகோணுமெண்டா முன்னாலதான் போகோணும். Class தொடங்கினால் பிந்தி வாற ஆக்கள வடிவா படிப்பிக்கிறவருக்கு தெரியும்.
7.30தொடங்கி பின்னேரம் 3.30மட்டும் பாடங்கள் இருக்கிறதால வடிவா சாப்பிட்டு போகணும்.
என்னதான் தலைகீழா நிண்டாலும் என்னால சரியான நேரத்துக்கு என்னால போகமுடியுறேல. அவ்வளவு ஆக்களுக்கு முன்னால ஒவ்வொருதரமும் பிந்திபோறது. சரியான அந்தரம். ஒவ்வொரு தரமும் போறணைக்குள் போற உணர்வுதான். என்னதான் பிந்திப்போட்டுதுன்னு தெரிஞ்சு குதிரை வேகத்தில் பெடலை மிதித்து வரும்போதும், ஸ்ரான்லி Road ஆரியகுளம் ஏறும் சந்தியில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் ShakthiFMலிருந்து ”அடிசுகமா சுகமா சுடிதாரே” என்ற பாட்டை கேட்கும்போது. எனது கால்கள் பெடல்களை நோக்கிய தள்ளுகையை பூரணமாக நிறுத்திவிடும். என்னதான் வகுப்புக்கு பிந்தினால் என்ன? அந்த கடையை கடக்கும் நேரத்தை குறைவாக்கினால் பாடல் என் காதில் ஒலிக்கும் நேரம் கூடுமில்லயா. என்ன மாயமோ மந்திரமோ பெரும்பாலும் 7.40/7.35 நேரப்பகுதியில் அந்த பாட்டு அந்த சந்தியில் ஒலிக்கும். நானும் அந்தநேரத்திலெல்லாம் AI Disableஆகின VBS2 Unit மாதிரிதான் தடுமாறுவேன். எனது கூட்டாளிகள் எல்லோரும் Backbenchers என்றபடியால் பிந்திபோனாலும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்.
இந்தப்பாட்டை எப்ப எங்க முதல்கேட்டன் என்று ஞாபகம் இல்லை. இப்போது கேக்கும்போதெல்லாம் ScienceHall, ஆரியகுளம்சந்தி, ALகாலப்பகுதிதான் ஞாபகத்தில். LoveTodayல் SPBன் குரலின் ”என்னஅழகு” பாடலை மெருகூட்டிய அதே இசையமைப்பாளர் சிவா.
திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
September 01 ஏகப்பட்டரோரினது எதிர்பார்ப்புகளுடன் ”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்கள் வெளிவந்திருந்தன. இந்தப்பாடல்கள் தொடர்பில் பலதரப்பட்ட Mixed comments வந்துகொண்டிருக்கின்றன. என்னை பொறுத்தவரை பாடல்கள் எல்லாம் நல்லா இருந்திச்சு ஆன அல்பம் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போல மக்சிமம் என்று சொல்கிறள அளவு இருக்கல. ஆனா சிலர் ”ராஜாவா இப்பிடி போட்டார்” என்று தாறுமாறாக கேவலப்படுத்துகிற அளவில் இல்லவே இல்லை. இவர்கள் அண்மையில் இளையராஜா போட்ட வேறு படபாடல்களை கேட்டார்களோ தெரியல. இளையாராஜாவின் அண்மைக்கால அல்பங்களுடன் ஒப்பிடும்போது இது சுப்பர் ரகம் எனலாம்.
அண்மையில் வந்த பட பாடல்களில் தாண்டவம் பாடல்கள்தான் எனக்கு இனிமையில் முன்னிலையில் இருப்பது போல தெரிகிறது. இயக்குனர் AL.விஜய்யும் இசையமைப்பாளர் GV.பிரகாஸ்ஸும் இணையும் 4 வது தடவை இது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய்ய வெற்றிகளை பெற்றிருந்தன. அதைப்போலவே எதிர்பார்ப்பை குலைக்காமல் தாண்டவம் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
![]() |
| GV PrakashKumar&Saindhavi |
![]() |
| Sathya Prakash |
![]() |
| Vandana Srinivasan |
ஆனால் இந்த அல்பத்தின் மூலம் முக்கியமாக பிரபலமாகப்போகிறவர் பாடகி வந்தனா ஸ்ரீநிவாசன். இதற்கு முன் ”பாலை” என்று இளையவர்கள் எல்லாம் அறிமுகமான படத்தில் ”யாதோ யாதோ ஏதொ நடந்தது” என்ற பாடலை பாடியிருந்தார் இவர். இந்த வந்தனா ஸ்ரீநிவாசன் பல Albumகள் தயாரிக்கும் இசையமைப்பாளர்களுக்கு Mashup பாடல்கள் + வழமையான பாடல்களை பாடிவருகின்றவர். Mashup என்பது ஏலவே இருக்கும் பாடல்களை இணைத்து உருவாக்கும் பாடல்களாம். இப்படியான பாடல்களை உருவாக்குவதில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வெளிநாட்டு இசையமைப்பாளர் Shankar Tuckerன் இசையிலும் இவர் ”துளி துளியாய்” என்ற பாடலை பாடியிருக்கிறார்.
தாண்டவம் பட வந்தனாவின் பாடல் கீழே....
தாண்டவம் படத்தில் வந்தனா ஸ்ரீநிவாசன் ”ஒரு பாதி கதவு நீயடி” என்ற பாடலை ஹரிசரனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் அந்தமாதிரி மெலடியாக இருக்கிறது. இவரின் குரல் கேட்பதற்கு பாடகி சின்மயியின் குரல் போலவே இருக்கிறது. பல வாய்ப்புக்கள் இவருக்கு இனி கிடைக்க போவது தெரிகிறது. (அலாப்ராஜுக்கு இவ்வாறு அவரின் ஆரம்ப பாடல்களின் போதே திரைதகவல் பெட்டகம்-III ல் சொல்லியிருந்தோம். இப்போது அவரின் வாய்ப்புக்கள் அனைவரும் அறிந்ததே.) இந்தப்பாடலில் ஹரிசரன் ”நீயென்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி” என்று இழுக்கும் அந்த இழுவைதான் பாட்டின் ஹைலைட். இப்போது இருக்கும் இளமையான பாடகர்களில் ஹரிசரனுக்குதான் எனது முதலிடம்.
Vandana Srinivasan's Rahman Mash Up - Hindi ( Prithvi Chandrasekhar feat)
வந்தனா ஸ்ரீநிவாசனின் சில பாடல்கள் + Mashups links
Thuli Thuliyaai" - Shankar Tucker ft. http://www.youtube.com/watch?v=uTnla1nAfI8
Rahman Mashup - Tamil - Prithvi Chandrasekhar feat. http://www.youtube.com/watch?v=DhNRNS3UPnU&feature=relmfu
HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
தொடக்க டிஸ்கி: ஹாரிஸ்ஜெயராஜ்க்கு முழுதாக ஆதரவு குரல் கொடுக்கவே இந்த பதிவு. மற்ற இசையமைப்பாளர்களை குறைசொல்லவோ கலாய்க்கவோ இல்லை.ஹாரிஸின் எதிர்ப்பாளரென்றால் வாசிக்க முதலே Close பண்ணிடுங்க.
பெரும்பாலும் 2006க்கு பிறகு வந்த ஹாரிஸின் அல்பங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாத்தரப்பிலும் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு வகைக்குள்ளேயே அடங்கி விடுகிறது. 1-->இவர் வேறு மொழி பாடல்களை லாவகமா ஆட்டய போட்டு தனது பாட்டுக்களை ஹிட் ஆக்குகிறார். 2--> தான் முதலே பயன்படுத்திய மெட்டுக்களை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார்.
இதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பாரிய்ய ஹாரிஸை கேலிப்படுத்தும் தாக்குதல்கள் பெரிய்ய ஹீரோக்களின் படங்களின் அல்பம் வெளியாகிறபோதே சுனாமிபோல பெரிய்ய அலையாக கிளம்பும். அண்மையில் வந்த அல்பங்களே இதுக்கு பெரிய்ய எடுத்துக்காட்டு. சூர்யாவின் 7ம் அறிவு, மாற்றான் விஜயின் நண்பன் போன்ற அல்பங்கள் கடும் ஏளனப்படுத்தல்களை எதிர்கொண்டது. ஆனால் ஜெயம்ரவியின் எங்கேயும் காதல், ஜீவாவின் கோ, உதயநிதியின் OKOK போன்ற அல்பங்கள் ஏலவே குறிப்பிட்ட பெரிய்ய மாஸ் ஹீரோக்களின் அல்பங்கள் எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் ஒப்பிடும்போது இல்லையென்று சொல்லும் அளவுக்கு அங்காங்கே சொற்பமான அடிகளையே வாங்கியிருந்தது.
இதுவரை வந்த அல்பங்களை கொண்டு 2012ன் Super Hit அல்பம் என்று நண்பனை சொல்லிவிடலாம். ஹாரிஸ் வழமையான பாணியிலிருந்து கொஞ்சம் மாறி புதுமைகளை புகுத்தியிருக்கிறார் என்று நடுநிலையாளர்களால் கூறப்பட்ட இந்த அல்பமும் வழமைபோல சகட்டு மேனிக்கு தாக்கப்பட்டது. நண்பனில் பழைய மாதிரியான ஹாரிசின் மெட்டுக்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சம்பந்தம் சம்பந்தமே இல்லாத பக்திபாடல் மெட்டுக்களுடன் beatகள் ஒத்துப்போகாத தருணங்களில் கூட ஹாரிஸ் எதிர்பாளர்கள் இது அதின்ர கொப்பி அப்பிடி இப்பிடி என்று கூச்சலிட்டிருந்தனர்.
அண்மையில் மாற்றான் பாடல்கள் கேட்டபோது பெரும்பாலான பாடல்கள் எனக்கும் வேறு பாடல்களை ஞாபகப்படுத்தியதுதான்.
1. கால் முளைத்த பூவே - ”சுந்தரி சிறிய ரெட்டைவால்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
இரண்டு பாடல்களும் அப்பிடியே ஒரே மெட்டு என்று சொல்லேலாது. ஆரம்பத்தில் Mouth Organனோடு தொடங்கும் chorus இசையும் (ரகுமானின் பாடலும் Mouth Organனுடனேயே ஆரம்பிக்கிறது) இடையிடையே வரும் பெண்களின் Chorous இசையும் இந்தப்பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியது.
2. நானி கோனி ராணி - தொடக்க இசை பச்சைக்கிளி முத்துச்சரம் ”கரு கரு விழிகளால்” பாடலை ஞாபகப்படுத்தியது. அதோடு பாடல் பூராவும் வரும்மெட்டு ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது. ஆதோடு அயனின் ”நெஞ்சே நெஞ்சே”க்கு அடித்த drums அடியும் இதிலே பின்னணியில் வந்தது.
3. இரட்டை கதிரே - எல்லோருக்கும் தெரிந்தது அயனின் டைட்டில் Song "வானம் யாவும் மேகம்”
மற்ற 2பாடல்களும் எங்கயோ கேட்டமாதிரி இருந்தாலும் என்ன பாடல்களை போல் அந்தப்பாடல்கள் இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியல. இதில் நிச்சயமாக இரட்டைக்கதிரே பாடல் KV.Anandன் வேண்டுகோளுக்காகவே அந்த அயன் Title Song மெட்டிவிருந்து உருவப்பட்டிருக்கும். வித்தியசமான அந்த மெட்டு அயனில் வந்தபோதே இது ஒரு முழுப்பாட்டாக வந்திருக்கலாம் என்று கவலைப்பட்டோரில் நானும் ஓராள்.
ஹாரிஸ் இப்பிடி பம்மாத்து காட்டி உல்டா விளையாட்டுக்கள் பண்ணும்போது எனக்கு Strike பண்ணுறதை ஹாரிஸ் ரசிகனாக இருந்தபோதும் நானும் பதிவுகள் மூலம் சொல்லிதான் வந்திருக்கிறேன். அது GV.பிரகாஸாக இருந்தால் என்ன யுவன்சங்கர்ராஜாகவிருந்தாலென்ன. ஆனால் இப்போது பொதுவாக எல்லா தரப்பிலும் இருந்து அடிவாங்குபவர் ஹாரிஸ் மட்டும்தான். இந்த விளையாட்டுக்களை ஹாரிஸ் மட்டுமல்ல எல்லாரும்தான் செய்கிறார்கள் ஆனால் ஹாரிஸ் கொஞ்சம் ஓவராக செய்கிறார்.
2010ன் சிறந்த படமான மைனா பட பாடல்களும் அப்போது பெரு வரவேற்பை பெற்றது. அதில் ”நீயும் நானும்” பாடல் ஆரம்ப்பிக்கும் மெட்டும் AR.Rahmanன் கருத்தம்மா பட உன்னிமேனன் சுஜாதா பாடிய ”போறாளே பொண்ணுதாயி”ல் ”வெள்ளாமை நீதான் வெள்ளாடு நாந்தான் வெட்கத்த விட்டுத் தள்ளம்மா”, "வெள்ளாம காட்ட விட்டுத் தர மாட்டா பண்பாட்ட கட்டிக்காக்கும்” வரிகள் அப்பிடியே மைனாவின் ”நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள” மெட்டுடன் ஒத்துப்போயிருந்தது.
வேட்டையில் யுவன்சங்காராஜாவின் ”தைய தக்கா” பாடல் ஆரம்பிக்கும்போது (0.30s-0.37s) இடையில்(3.55s-4.02s), இறுதியில்(5.10s-5.17s)இடைவெளிகளிலும் வரும் ஒரு இசைசெருகல் அப்பிடியே விஜய்அன்ரனியின் வெடி பட "இச்சு இச்சு கொடு” பாடலின் (0.07s-0.20s) இசைசெருகலுடன் அப்பிடியே ஒத்துப்போகிறது. வெடி பாடல்கள் முதலிலும் வேட்டைபாடல்கள் பின்னரும் வந்தது.
அண்மையில் ”எங்கேயும் எப்போதும்” புகழ் இசையமைப்பாளர் சத்யாவின் 4வது திரைஅல்பம் ”பொன் மாலைப்பொழுது” வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற ”அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்” பாடல் அப்பிடியே ஹாரிஸ் ஜெயராஜின் ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது.
இப்பிடி அப்பிடி இப்பிடின்னு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
திருப்ப திருப்ப ஒரே கதையுடன் வரும் மசாலாபடங்களை ரசிக்கிறோம். வேறு மொழி பட, Novel களின் inspirationனுடன் வரும் படங்களை கூட ரசிக்கிறோம் மெச்சுகிறோம். ஏன் ஹாரிஸின் ஆட்டைகளை குறைகூறினாலும் சொந்த நல்ல மெட்டுக்களை பாராட்டலாம்தானே?
முடிவு டிஸ்கி: ஹாரிஸையும் இவ்வளவு ரசிக்கிறனே. இவனுக்கு இசையறிவே இல்லையா? என்று யாரும் கேட்டால் எனக்கு அது இல்லாமலே இருந்து விடட்டும்!!

திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
"பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்ட பாடகர்தான் மாணிக்கவிநாயகம். Soupபாடல்களுக்கு காலங்காலமாக கிடைத்துவரும் வரவேற்புக்கு இந்தபாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ”உன்னைநினைத்து” படத்திற்காக பலரின் அபிமான இசையமைப்பாளராக அந்த காலத்தில் இருந்த சிற்பியின் இசையில் இந்தப்பாடல் வெளிவந்திருந்தது. இந்தப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்தஇசையமைப்பாளர் விருதுகூட சிற்பிக்கு கிடைத்திருந்தது.
மற்ற பாடகர்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்தக்கூடிய கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான மாணிக்கவிநாயகம் திரைத்துறைக்கு வருவதற்கு முதலேயே பல பக்திப்பாடல் அல்பங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வந்துள்ளார். பெரும்பாலும் நெற்றிபூராக விபூதிப்பட்டையுடன் காணப்படும் இவருக்கு திரைத்துறையில் முதலாவது வாய்ப்பு கிடைத்தது இசையமைப்பாளர் வித்தியாசகர் மூலமாகதான். தில் படத்தில் ”கண்ணுக்குள்ள ஒருத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்தியாசகராலயே வழங்கப்பட்டது.
பாடகராக மட்டுமிருந்த இவர் தனுஷின் ”திருடா திருடி” படம்மூலமாக தன்னால் நடிக்கவும் முடியுமென்று காட்டியிருந்தார். தனது முதல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் typical அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் யுத்தம்செய் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
![]() |
| Manicka Vinayakam in Yedam Sei Movie |
![]() |
| Composer PravinMani |
பிரவீன்மணி இசையமைத்த Little John படத்தில் ”பூவுக்கு பிறந்ததாலே”, ஒற்றன் படத்தில் ”சின்னவீடா வரட்டுமா” போன்ற பாடல்களுக்கான மெட்டுக்கள் தன்னால் (மாணிக்கவிநாயகத்தால்) போடப்பட்டதாகவும் அதில் முதலாமதுக்கான அங்கீகாரம் பாடல் கசட்டில் பெயர் போடப்பட்டதன் மூலம் கிடைத்ததாகவும் மற்றதுக்கு கிடைக்கவில்லையும் என்று கூறியிருந்தார். எனினும் நட்பின் காரணமாகவே அந்த உதவி செய்ததாகவும் இதற்காக யாரையும் தான்குறைபட்டதில்லையெனவும் கூறியிருந்தார்.
மேலும் இப்படியாக உதவியாளர்களால் போடப்படும் மெட்டுக்களும் பெரிய்ய இசையமைப்பாளர்களின் பெயர்களில் இறுதியில் வெளிவருவதாகவும் உண்மையில் யார் உண்மையான மெட்டுக்கு சொந்தக்காரர் என்பது அறியமுடிவதில்லையென்றும் இது தமிழ்சினிமாவின் துர்ப்பாக்கியம் என்றுகூட சொன்னார் மாணிக்கவிநாயகம்.

தலைநகர் கொழும்பின் திரையரங்குகள்- I (Premier Concord Cinema)
இந்த தொடர்பதிவை 2வருசத்துக்கு முதலே எழுதோணும் எழுதோணும் என்று யோசிச்சு எழுத பஞ்சியில கனக்க காலமா எழுதாமேயே விட்டுட்டன். ஒரு மாதிரி கடைசியா எழுதிடோணும் எண்டு தொடங்கிறன். இந்த தொடர் பதிவுகளில் நான் தலைநகர் கொழும்பில் படம் பார்த்து ரசித்த தியெட்டர்களை பற்றிய ஒரு அலசலை தர இருக்கிறேன். நிறைகள் குறைகள் அங்கே கடைப்பிடிக்ப்படும் நடைமுறைகள் போன்றவை இயலுமானவரை இந்தபதிவில் தரப்பட உள்ளது.
இதன் முதல் பாகத்தில் கொழும்பு தெஹிவள கொன்கோர்ட் திரையரங்கு பற்றி பார்க்கவுள்ளோம். பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவள போன்ற இடங்களிலிருக்கும் அதிகமாக தமிழ் பேசுவோர், கூடுதலாக விரும்பிச்செல்லும் திரையரங்கு இதுவாகத்தானிருக்கிறது. வெகு இலகுவாக சென்றடையக்கூடிய இடத்தில் கொழும்பின் முக்கியமான நகரப்பகுதியில் இத்திரையரங்கம் இருக்கின்றமை இதன் கூடிய நன்மை. காலி வீதியில் வெள்ளவத்தயிலிருந்து தெஹிவள நோக்கி செல்லும்போது தெஹிவள நாற்சந்திக்கு முதல் பஸ்தரிப்பிற்கு மிக அண்மையிலிருக்கிறது இந்த திரையரங்கம்.
முக்கியமான பலபடங்களை எடுத்து வெளியிடும் EAP Films & Theatres நிறுவனத்திற்கு சொந்தமான பல திரையரங்குகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. மொத்தமாக 409 பேர் அமர்ந்து பார்க்ககூடிய இந்த திரையரங்கில் 294 - ODC 104 - Balcony 6 - Box(6x2=12) ஆசனங்கள் உள்ளது. குளிருட்டப்பட்ட (A/C)வசதியுள்ள பெரும்பாலும் தமிழ்ப்படங்களே திரையிடப்படும் இந்த தியட்டரில் எப்பாவது அத்திபூத்தாப்போல ஹிந்திப்படமும் திரையிடப்பட்டிருக்கிறது. 2008ஆண்டளவிலென்று நினைக்கிறேன், கிட்டத்தட்ட 3மாதங்களாக இந்த தியட்டரில் தமிழ்ப்படங்கள் திரையிடாது ஹிந்தி படங்களை மட்டும் வெளியிட்டு ஈ ஓட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சக்காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை திரையிடத்தொடங்கியிருந்தார்கள். என்ன பிரச்சைனயால் அந்த நிலை வந்திருந்தது என்று தெரியவில்லை.
தற்போது தலைநகரில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் பலவழிகளிலும் அளவான காசுக்கு நல்ல வசதியான தியட்டர் என்று என்று சொல்லக்கூடியது இந்த Concord திரையரங்குதான். Reasonable பணத்துக்கு படம் பார்க்கலாம், நல்ல குளுகுளு என்று குளிரூட்டபட்ட வசதி, சிறந்த dts ஒலியமைப்பு, Adjustable cushion ஆசனங்கள் என்று பலவகைகளிலும் தேவையான வசதிகளை கொண்ட இந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் விரும்பி செல்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
ODC - 235/= Balcony - 310/= Box(2)-420*2=840 போன்ற கட்டணத்தில் Concord திரையரங்கில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. மற்ற தியட்டர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் வழங்கப்படும் வசதிகளுக்கு இது நல்ல reasonableஆனா கட்டண அறவீடுதான். கொழும்பில் A/C + dts வசதியுடன் குறைவான கட்டணம் அறவிடும் தியட்டராக Concordதான் இருக்கிறது. பெரும்பாலும் எந்த பெரிய்ய நடிகர்களின் படமென்றாலும் முதல்நாளிலும் ஒரே மாதிரியான கட்டணங்கள்தான் அறவிடப்படும். (இதுவரை விஜய் அஜீத் சூர்யா போன்றோரின் படங்களுக்கு கூட அவ்வாறே நடந்திருக்கிறது. நான் பார்த்தவரை ரஜினியின் சிவாஜிக்கு மாத்திரமே சற்று கூடுதலாக அறவிட்டிருந்தார்கள்.)
எனினும் நீங்கள் 235/= ODC Ticketக்காக 250/= கொடுக்கும் பட்சத்தில் மீதி 15/= தருவார்கள் என இங்கே எதிர்பார்க்கேலாது அனேகமாக தரவும் மாட்டார்கள். எனவே சரியாக 235/=கொடுத்தால் உங்களுக்குதான் நன்மை. சிலபேர் மடைத்ததனமாக முதல் நாள் ரிக்கெட் விலை கூடவாக இருக்கும் என்று கூடுதலான விலைகளை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். கூடக்கொடுத்துவிட்டு சரியான மக்கள் கூட்டத்தில் மீதிக்காசை தருவார்கள் என எதிர்பார்ப்பது கல்லில நார் உரிப்பதைப்போல கடினமானது.

இந்த தியட்டரில் மக்கள் ஒழுங்காக வரிசையில் செல்வதற்குரிய கம்பிவேலிகள் அமைப்பு நிண்டதூரத்துக்கு இல்லை. ஒரு 5பேர் நிற்பதற்குரிய அளவுதான் ODCற்கு செல்பவர்களுக்கு ஒரு பக்கமும் Balconyக்கு மற்ற பக்கமும் இருக்கிறது. எனவே வேளைக்கு செல்பவர்கள் அதிகளவான சனக்கூட்டமான நாட்களில் கூட படத்தை பார்க்க முடியும் என்றில்லை. முண்டியடித்துக்கொண்டு ஆக்களை தள்ளிக்கொண்டு உள்ள செல்ல பலம் இருந்தால் எப்பிடியான சனக்கூட்டத்திலும் இந்த தியட்டரில் படம் பார்த்து விடலாம். இல்லாவிட்டாலும் படம் வெளியாகி ஒரு கிழமை கழித்துதான் இலகுவாக பார்க்கலாம்.
இருப்பினும் புடங்குப்பாடு குறைந்தவழியில் படம்பார்க்கவும் ஒரு கள்ளவழி இருக்கிறது. பொதுவாக Balconyக்கு செல்லும்பக்கத்தில் நிற்கும் கூட்டம் ODCபக்கம் நிற்கும் கூட்டத்தை விட வெகு குறைவாகதான் இருக்கும். So Balcony பக்கமாக நின்று எப்பிடியாவது உள்ளே சென்றுவிட்டால் balcony counter மற்ற பக்கம் என்றாலும் இலகுவாக அங்கு சென்று ODC ticketஐயே எடுத்து குறைந்த பணத்திலேயே படத்தை ரசிக்க முடியும். இதுவரை இந்த techniqueஐ பாவிச்சுதான் இலகுவாக படம் பார்ந்திருக்கிறேன். இதையே எல்லாரும் தொடங்கினாங்க எண்டா என்பாடு திண்டாட்டமதான்.
பொதுவாக 10.30AM, 3.00PM, 7.00PM போன்ற 3நேரக்காட்சிகள்தான் திரையிடப்படுகின்றன. எனினும் புது படம் வெளியிடப்படுகின்ற தருணங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் தொடக்க நாட்களில் (முதல் கிழமைவரையிலான நாட்களில்) 4நேரக்காட்சிகளாக 10.30AM, 1.30PM, 4.30PM, 7.30PM நேரங்களில் திரையிடப்படுகின்றன. எனவே உங்களுக்கு காட்சிநேரங்கள் தெரியாத பட்சம் phone பண்ணி கேட்டு சரியான நேரம் செல்வது நல்லது. எனக்கு தெரிந்தவர்கள்கூட காட்சி நேரம் தெரியாது வந்து தங்களது நேரத்தை வீணாக வீணாக்குவதுண்டு. இப்பொழுது Online booking வசதியும் இதற்கு வழங்கப்படுகிறது. இதில் பார்த்த முதல் திரைப்படம் வரலாறு. நான் இதுவரை கூடுதலாக படம் பார்த்த தியட்டர் இதுதான்.
Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord Telephone : 0117 549630,
அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.
![]() |
| Counter |
![]() |
| Projector's room |
Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord Telephone : 0117 549630,
அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி (OKOK Double OK) - திரைப்பார்வை
ஒரு கல் ஒரு கண்ணாடி சிறு பட்ஜெட் நட்சத்திர ஹீரோ இல்லாத படங்களுக்கும் எதிர்பார்ப்பு பிச்சுக்கிட்டு எகிறும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படியான படங்களுக்கு இயக்குனரின் மேலுள்ள நம்பிக்கைதான் முக்கிய காரணமாக பெரும்பாலும் இருந்துவிடுவதுண்டு. இந்தப்படத்தில் இயக்குனர் ராஜேஷிடம் உள்ள நம்பிக்கைக்கு மேலதிகமாக காமெடியன் சந்தானத்தின் மேலுள்ள நம்பிக்கைதான் உச்சபட்சமாக இருந்ததென்பது வெளிப்படை.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு பின்னர் ராஜா-I திரையரங்கு யாழ்ப்பாணத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்தேன். ராஜா-IIல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு புதுவருடத்தில் 2வது பெரிய்ய பல்ப்பு. எதிர்பார்த்ததைவிட ராஜா-Iஇல் sound system நல்லாகவே இருந்தது. ராஜா-IIல் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு இன்னோர் படம்வாயப்பு தவறிப்போனது.
சிவா மனசில சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற காமெடிகலட்டா வெற்றிகளை கொடுத்த ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தனது ஹாட்றிக் வெற்றியை கொடுத்து விட்டார். என்னை பொறுத்தவரை தனது முதல் 2படத்தையும் விட இதில் சூப்பராக காமெடிகளை அள்ளி கொட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் பெரிய்ய மைனஸ் பாயிண்டாக இருக்கலாம் எனக்கருதப்பட்டவர் படத்தின் அறிமுக ஹீரோ உதயநிதி ஸ்டாலின். ஆனால் படத்தின் ஆரம்ப ஒரு பாடல்காட்சியில் (ஆட வேண்டிய) மட்டுமே கொஞ்சம் தடுமாறியிருந்தாலும்/ முதிர்ச்சியில்லாமலிருந்தாலும் பின்னர் பாடல் மற்றும் காமெடிக்காட்சிகளில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கலைஞரின் குடும்பத்திலிருந்து அருள்நிதியை தொடாந்து இன்னொர் யாதார்த்தமான ஹீரோ வந்துவிட்டார்.
ஒரு யாதார்த்த / sentiment/ கதையம்சமுள்ள சினிமாவிலோ ஒரு இயக்குனர் தனது தனி முத்திரையையோ அல்லது பலரால் பராட்டப்படக்கூடிய படத்தை தருவது மிகப்பெரிய்ய கஸ்டமான விடயமாக இருக்காது. ஆனால் இப்பிடிதான இருக்கும் என்று தெரிந்த கதையில் படத்தை சுவாரஸ்யமாக ஆரம்பம் முதல் இறுதிவரை தியட்டர் பூராகவும் கலகலப்பாக வைத்திருப்பதென்பது மிகவும் கஸ்டமான விசயமும் அதிலேதான் ஒரு இயக்குனரின் தனிதிறமையும் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்ட 3படங்களை வெற்றிகரமாக ரசிகர்கள் ரசிக்கும் படியாக கொடுத்த ராஜேஷக்கு பெரிய்ய சபாஷ்.
படத்தின் காமெடிக்கு சந்தானத்தின் வேலையே ஆகா ஓகோ. ஒவ்வொரு படத்திலும் என்னமா முன்னேறுகிறார் இவர். இவரும் உதயநிதியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளோ அய்யோ அய்யோ. எப்பவுமே இவர் வரும் காட்சிகளில் சிரிப்புகள் கைதட்டல்களும்தான். இவரின் டைமிங் காமெடிகளும் கலர்கலரான கண்ணுக்கு குத்தும் நிறங்களில் போட்டுவரும் dressகளும் சொல்லிவேலையே இல்லை. அத்துடன் உதயநிதிக்கு அம்மாவாக வரும் சரண்யா. வழமையையும் விட மேலாக பின்னிபிடலெடுத்துவிட்டார். அம்மா வேடமென்றால் கூப்பிடுங்கள் சரண்யாவை என்பது இப்போது தமிழ் சினிமாவில் மாற்றமுடியாதது என்றாலும் மற்றபடங்களையும் விட மேலதிகமாக தனது முகபாவங்களினூடாக காமெடிகளில் ரசிக்கவைக்கிறார் சரண்யா. சந்தானம் உதயநிதிக்கு அடுத்ததாக சரண்யாதான் நடிகர்களில் அடுத்த பெரிய்ய பிளஸ்.
படத்தின் ஹீரோயின் ஹன்சிகா முந்தைய படங்களைவிட இன்னும் குண்டாக தெரிகிறார். சின்னத்தம்பியில வந்த குஸ்பு என்று வேறு படத்தில் கூட சொல்கிறார். So ஹன்சிகா ரசிகர்களின் எதிர்ப்பை பெறமால் அப்பிடியே செல்கிறேன். படத்தில் ஆர்யா சினேகா அண்ட்ரியா guest actorsஆக வருகின்றனர். படஎழுத்தோட்டத்தில் யுவன்சங்கர்ராஜாவிற்கும் நன்றி என்று போட்டமைக்கு சிவா மனசில் சக்தி படத்தில் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடலை எழுதியவர் யுவன் என்பதால்தானோ தெரியவில்லை. யாரும் உறுதியாக தெரிந்தால் உறுதிப்படுத்தவும்.
தனது முதல் இரு படங்களுக்கும் யுவனின் இசையை பெற்ற ராஜேஷ் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றிருந்தார். உதயநிதி ஸ்டாலின் விருப்பத்தால் இந்த மாற்றம் வந்திருக்குமோ தெரியவில்லை. வழமைபோல பழையதை உல்டா பண்ணி பாடல்கள் வந்திருந்தாலும் அனேக ரசிகர்களின் ஆதரவை இப்பாடல்கள் பெற்றிருந்தன. என்றாலும் நண்பன் பாடல்கள் கொடுத்த பெரிய்ய தாக்கத்தை இந்தப்பாடல்கள் தவறவிட்டிருந்தமை உண்மை. ஆல்பத்தின் சூப்பர் ஹிட் பாடலான ”வேணாம் மச்சான் வேணாம் பாடல் சத்யம் படபாடல் ”பால் பப்பாளி” பாடலின் அதே மெட்டுமதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களை அழகாக காட்சிப்படுத்தியுமிருந்தார் இயக்குனர். பின்னணி இசையில் ஹாரிஸின் பங்கு இந்தப்படத்தில் முக்கியமில்லையென்றாலும் பின்னணி இசை சொல்லும்படியாக இருக்கவில்லை.
ஒரு நல்லவொரு காமெடிபடம்பார்த்து கவலைகளை மறந்து சிரிக்கவேண்டுமா உடனே ஓடுங்கள் ஒரு கல் ஒரு கண்ணாடி திரையிடும் திரையரங்குகளை நோக்கி.
மொத்தத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி = OKOK Double OK
3 (முன்னோக்கி) - திரைப்பார்வை
விஜயின் அப்பா SA.சந்திரசேகர் செய்த புண்ணியத்தால கனக்க காலத்துக்கு பிறகு ஒரு பெரிய்ய ஹீரோவின்ர படம் பாக்கிற வாய்ப்பு கிடைத்தது ”3” படம் மூலம். அவரின்ர புண்ணியத்திலதான் படம்பாத்து விமர்சனம் எழுதுற வெட்டிவேலை இல்லாமல் இருந்தது சந்தோசமாவும்தான் இருந்திச்சு.
தனுஷின் மனைவி படம் இயக்குகிறார் என்றதாலோ தனுஷ் நடிக்கிறார் என்றதாலயோ கிடைக்காத எதிர்பார்ப்பை உலகமே எதிர்பார்க்காத பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்ததென்னவோ இந்த ”வை திஸ் கொலவெறி” என்ற பாட்டுதான். இப்பிடி ஒரு படம் வருகின்றதென்பதே அந்த பாட்டடைக்கேட்ட பிறகுதான் பலருக்கு தெரிந்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஒரு படத்துக்கு செய்ய வேண்டிய புறமோசன் வேலைகளையெல்லாம் தனியாளாக நிண்டு ஏலவே செய்து முடித்திருந்தது Why This Kollaveri பாடல். படம் என்ன கேவலமாக இருந்தாலும் படத்தின் ஓப்பினிங் இந்த பாடலால் பிச்சுக்கொண்டு போகுமெண்டு பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது.
ஆனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பிடி எகிறியமை ஒரு பக்கம் அட்வாண்டேச்சா இருந்தாலும் அதாவது போட்ட முதலுக்கு மோசமில்லாமல் இருக்கிறத ஓப்பினிங் பார்த்து கொண்டாலும் மற்றபக்கம் அறிமுக இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷிற்கு நிச்சயம் பெருத்த தலையிடிதான். கொஞ்சம் சொதப்பினாலும் குப்பையில் எறிந்து விடும் நிலையில்தான் கொலவெறி ரசிகர்கள் இருந்தார்கள். உண்மையில் Trailer பாக்கமுதல் நான்கூட இந்தப்படம் சும்மா புஸ்வாணமா போயிடும் எண்டுதான் நினைத்திருந்தேன். 2வது trailer பாத்த பிறகுதான் பறுவாயில்லாமல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை வந்திச்சு.
ஆனால் எதிர்பாத்ததுக்கு மேலதிகமாக நல்லவொரு படத்தை பாத்த திருப்தியை வழங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். Trailerலிலேயே செல்வராகவனின் படங்களின் பாதிப்பு இதில் பிரதிபலிக்கும் என ஊகித்திருந்தாலும் ஏன் படத்தில் கூட அது சில இடங்களில் தெரிந்திருந்தாலும் கூட அறிமுக இயக்குனர் என்ற ஒரு தோற்றப்பாடு இந்தப்படத்தில் தெரியவில்லை. இந்த படத்துக்கு Censor board எப்பிடி U சான்றிதழ் கொடுத்தாங்கள்? எப்பிடி யோசிச்சாலும் தெரியல. U/A சான்றிதழ் கொடுத்திருக்கவேண்டும்.
தனுஷ் இதில் சொல்லி வேலையில்லை. வரவர இவரின் நடிப்பு தேர்ச்சி கூடிக்கூடிக்கொண்டே போகுது. கிட்டத்தட்ட மயக்கம் என்னவில் வெளிப்படுத்திய திறமையை போன்ற ஒரு களமென்பதால் தனுஷ் புகுந்து விளையாடியிருக்கிறார். தனது 2011ல் கிடைத்த தேசிய விருதுக்கு தான் பொருத்தமானவன்தான் என்பதை நிருப்பித்துகொண்டே வருகிறார் இவர். அடுத்து சிவகார்த்திகேயனும் இதில் முக்கிய நண்பன் பாத்திரமாக வந்து தான் வசனம் பேசும் நேரமெல்லாம் தியேட்டர் ரசிகர்களின் கைதட்டல்களை வாங்குகிறார். இதிலும் இவருக்கான வாய்ப்பு நுனிப்புல் மேய்ந்த பாணியில்தான் வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் இயக்குனர் எழிலின் மனம் கொத்தி பறவையிலாவது இவரின் முழுத்திறமையும் வெளிக்கொணரப்படுகிறதா என.
அடுத்த முக்கியமானவர் ”மயக்கம் என்ன”விலும் அப்பாவி நண்பனா வந்த சுந்தர். பாவப்பட்ட நண்பர் வேடங்கள் இவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. எதிர்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் இவரை பல படங்களில் இவரை பார்க்கலாம். எனக்கு இந்த படத்தின் முதலாவதும் கடைசியுமான (-)Negative aspect ஸ்ருதிஹாசன்தான் இரட்டை பின்னல் போட்ட பாடசாலைக்காட்சிகளில் ஆம்பிளைக்கு பெண் வேஷமிட்டது போல தெரிகிறார். அதோடு அதே 7ம் அறிவில் பாத்த சப்பென்ற நடிப்பு(?). பிடிக்கவில்லை எனக்கு நல்லா முன்னேறணும் கண்ணு.
சவுண்ட் எபெக்ட்டிற்காக Why this kollaveriன் வெற்றியின்பின் ரசுல் பூக்குட்டியும் இந்த படத்தில் சேர்த்து பணியாற்றியிருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும் பல பாடல்கள் 3நிமிட பாடல்களாக இருந்ததால் அதன் சுவையை அனைவராலும் பூரணமாக சுவைக்க முடியாமல் போயிருந்தமை கவலையான விடயமே. எல்லா பாடல்களையும் குறைந்தளவு 4 1/2 நிமிடங்களாவது எடுத்திருக்கலாம். முதல் படத்திலேயே இவ்வளலு Maturity காட்டிய அனிருத் பாராட்டப்பட வேண்டியவர். Why This Kollaveri பாட்டை 2கோடி செலவில் எடுத்தோம் என்று படக்குழு பீத்தியிருந்தாலும் காட்சியை பாக்க போனால் வெறும் 50ஆயிரத்திலேயே முடித்திருப்பார்கள் போலதான் தெரிகிறது. எதிர்பாத்த உச்ச அளவுக்கு இந்த பாடலை படமாக்கவில்லை என்பது எனது கருத்து.
மொத்தத்தில் ”3” மூணு முன்னுக்கே போயி தியட்டரில பாக்ககூடிய படம் Love + Thriller Movie.
பிரபலமாகாத நல்ல படங்கள்-I - சனிக்கிழமை சாயங்காலம் 5மணி
ஒவ்வொரு வருடமும் பெரிதாக ஆர்ப்பாட்டமில்லாமல், விளம்பரமில்லாம் வரும் படங்களில் நாலைந்து தரமான நல்ல படங்களாக இருப்பது வழமை. அப்படியான படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படாமலே போய்விடுவது துரதிர்ஷ்டமே. அப்படியான பெரிதாக அறியப்படாத படங்களை பற்றி எனது பார்வையை சிறிதாக தருவதே இந்த தொடர் பதிவின் நோக்கமாகும். இதில் நான் பகிரப்போகும் படங்கள் கனக்க காலத்திற்கு முதல் வந்த படங்களாக இருக்கலாம். எனினும் நிறைய பேருக்கு போய் அந்த படங்களைப்பற்றிய தகவல்கள் போய் சேரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த தொடர் பதிவை ஆரம்ப்பிக்கிறேன்.
பெரிதாக புறொமசன்கள் + ரசிகர்கள் மத்தியில் பெரிய்ய எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்கள் இப்போதெல்லாம் பெரும்பாலும் சொதப்பிவிடும் நிலையில் அறிமுகமேயில்லாத அறிமுக நடிக, நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் வரும் ஒரு சில படங்கள் எங்களை ஆகா ஓகோ போடச்சொல்லிவிடும். மனதில் லபக்கென்று பதிந்துவிடும். இப்படியான படங்களுக்கு முதலில் தியட்டரில் ஆட்களே இருக்காது. பின்னர் பார்த்தவர்களின் வாய் வழி தகவல்கள் மூலம் கவரப்பட்டு சனம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி சில நேரங்களில் அப்படம் நல்ல ஹிட் படமாக கூட மாறிவிடும். அப்படியான படங்களுக்கு உதாரணமாக மௌனகுரு, பசங்க, நாடோடிகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். ஆனால் பரிதாபமான விடயம் என்னவென்றால் இப்படியான சில படங்களளைப்பற்றிய கருத்துக்கள் மக்களுக்கு போய் சேரமுதல்லே தியட்டரிலிருந்து தூக்கப்பட்டு விடும். ஆரண்யகாண்டம், டூ, ஈரம் போன்ற படங்கள் இவற்றில் இரண்டாவது வகை.
இந்த தொடர் பதிவில் பெரும்பாலும் 2ம் வகைப்படங்கள் பற்றியே பேசப்படும். இப்படி 2010ன் இறுதியில்வந்த படம்தான் இந்த ”சனிக்கிழமை சாயங்காலம் 5மணி”. இப்பிடியொரு படம் வந்ததென்று எனக்கு படம் பாக்கும்வரை தெரியவே தெரியாது. ஒரு நண்பன் ”நல்ல படம் இரவில பாக்க இன்னும் நல்லா இருக்கும்” எண்டு சொல்லி தந்தான். ஒரு 5 நிமிடம் கழிந்தபோதே விளங்கியது படம் மக்ஸிமமா போகப்போகுதெண்டு. கடந்த கிழமைகள் கடுமையான உடல் அலுப்பிலிருந்தபோதும் இரவு 10மணிக்கு தொடங்கிய படத்தை நிறுத்த மனமின்றி முழுவதும் பார்த்துவிட்டுதான் அன்று நித்திரைக்கு சென்றேன்.
படம் ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாகதான் ஆரம்ப்பித்தது ஒரு செட்டில எடுத்த பாடலுடன் ஆரம்பித்தது படம். வழமையா படம் எப்பிடி எடுக்கப்பட்டது என்ற காட்சிகள் படம் முடிந்தாப்பிறகே போடுறது வழமை . இதில் இந்த முதல் பாடலுக்கிடையில் இடக்கிடை போட்டார்கள். அதோடு தங்களின் முதல் படைப்பான மதுரை TO தேனீ - வழி ஆண்டிப்பட்டி படத்தின் வெற்றிக்கு நன்றிகள் போட்டார்கள். (அந்தப்படம் வெற்றியோ வெற்றியில்லையோ எனக்கு தெரியாதுங்க). அந்த படத்தின் இயக்குனர் ரதிபாலா இதில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நாயக நாயகி சரத், மாலதியும் அறிமுக இயக்குனர் ரவிபாரதியும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர் இந்தப்படத்தை.
கிராமத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரில்லிங்கோ திரில்லிங். City life கதையில்தான் இப்படியான thrill கதைகள் தரமுடியும் என்ற நம்பிக்கையை தகர்த்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் சுவாரஸ்யம் குறையாமா படத்தை smoothஆக கொண்டு செல்லும் இயக்குனரை தூக்கி கொண்டாடலாம். படத்தில் என்ன நடக்கின்றது ஊகிக்கவே முடியாது. படம் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கதிரை நுனியிலிருந்து பாக்ககூடிய ஒரு படம். படத்தின் இறுதி 10நிமிடங்களிலேயே முடிச்சுக்களை அவிழ்க்கின்றார் இயக்குனர். நான் இதுவரை பார்த்த திரில் படங்களில் இதற்கும் முக்கிய ஒர இடம் கிடைத்து விட்டது.
படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள்தான். (சரத்தின் அம்மா தவிர்த்து) ஆனால் பொறுப்பறிந்து பின்னியிருக்கிறார்கள். அனைவரும் இயல்பாக நடித்திருப்பது படம் பார்க்கிறோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை இல்லாமல் செய்திருந்தது. முக்கியமாக ஆரம்பத்தில் வரும் அந்த பொலிஸ் நன்றாக சாதாரணமாக நடித்திருந்தார். வக்கீல் பொலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சரத்தை மீட்கும் காட்சி, பெண்ணின் வீட்டில் வந்து சண்டை பிடிக்கும் உறவினரின் காட்சி ஆகியன இந்தப்படத்தின் reality காட்சிகளின் முக்கியமானவை. இதில் எனக்கு சொதப்பியிருப்பது போல தோன்றுவது நாயகன் சரத்தான். இன்னும் perform பண்ணியிருந்திருக்கலாம்.
இப்பிடியொரு தரமான படத்தை எப்பிடி இவ்வளவுகாலம் மிஸ் பண்ணினேன்? இதுதான் இப்பொழுது என்னில் எழும் கேள்வி. பாக்காதஆக்கள் கட்டாயம் பாருங்க சார். திரில் பட ரசிகரா உங்களுக்கும் நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். அப்பிடி பிடிக்கேலனா சொல்லுங்க. நான் புளொக் எழுதுறதே விட்டுடுறன். :பி
மொத்தத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி = மணிப்படம்
முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரைப்பார்வை
முப்பொழுதும் உன் கற்பனைகள் - இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு இருந்த முக்கிய 3 காரணங்கள் 1.அமலாபால் 2.ஜீவி.பிரகாஸ்குமார் 3.விண்ணைத்தாண்டி வருவாயா, கோ படங்களை தயாரித்த கம்பனியின் படம். கணேஷ் விநாயக் என்ற இயக்குனரின் (இறுதியில் எல்ரெட் குமாரால் இயக்கி முடிக்கப்பட்டது ???) முதல்படம் என்பதால் அவருடைய பெயர் செல்லாக்காசகவே promotionகளில் இருந்தது. அது வழமைபோல எல்லா புதுமுகங்களுக்கும் இருப்பது தவிர்க்கமுடியாதது. Why this Kolaveri போன்ற ஒரு சில exceptional casesதான் புதுமுகங்களிலும் பலத்த எதிர்பார்பை நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
படத்தில் நாயகன் அதர்வாவுக்கு பொருந்திய stylishஆன modern கதாபாத்திரம். தனது முதல் படமான பானாகாத்தாடியிலேயே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் அவரது உடல்வாகுக்கு அந்த படத்தில் சேரிப்புற இளைஞனாக வந்திருந்தமை எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரது தமிழ் பேசும் பாணி கொஞ்சம் artificial போல ஒரு உணர்வை தருகிறது. அதர்வாவின் குரல் சாதாரணமானவர்களிலிருந்து வித்தியாசமானதுதான் ஆனால் பானா காத்தாடியில் அப்படி உணர்வு பெரிதாக ஏற்படவில்லை இதில் அது தெரிந்தது. வரும்படங்களில் இதைக்கவனத்தில் கொண்டால் நல்லா இருக்கும்.
அதர்வா இதுவரை நடித்த 2படங்களின் ஹீரோயின்களும் தமிழில் ஒரு கலக்கு கலக்குவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ள நடிகைகள். சமந்தா தெலுங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடியிலேயே அதர்வாவின் நடிப்பும் அவர் தன்னகத்தே கொண்டிருக்கும் attractiveஆன lookம் எனக்கு நல்லா பிடித்திருந்தது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு தேவைப்பட்ட இந்த இயல்புகளை சிறப்பாக அதர்வா வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ்சினிமாவில் இவருக்கும் அப்பா முரளியை போல நல்லவொரு இடம் கிடைக்கப்போகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

உண்மையாக இந்தப்படத்திற்கொரு பெரிய பலமென்றால் அது அமலா பால்தான். (பாலா போலா? என்ன இழவோ எழுத்தோட்டத்தில கூடி பால் எண்டுதான் போட்டாங்க சார்!) இந்தப்படம் பற்றிய பேச்சு இவா நடிக்கின்றா என்றதும்தான் பெரிதாக வர ஆரம்பித்திருந்தது. தற்காலத்தில் பல இளவட்டங்களின் கனவுக்கன்னியாக அமலா பால் ஆகிவிட்ட நிலையில் கைவசம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் + இளசுகளின் ஆதரவோடு இவர் காட்டில் இப்ப அடை மழைதான்.
கொஞ்சம் படங்களில் நடித்திருந்தாலும் அந்தக்கால அமலாவுக்கும் அப்போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோலதான் இப்போதைய அமலாவுக்கும். அமலா என்று பெயர் வைச்சிருந்தாலே இப்பிடிதானோ? (ஆனால் எனக்கு இன்னும் அப்பிடி என்னதான் மக்களுக்கு அமலாபாலில கிறுக்கு பிடிக்ககாரணம் என்று தெரியல. அமலா பால் முதலில் நடித்த விகடகவி, சிந்துசமவெளி படங்களை யாராவது பாத்திருந்தா இப்ப இப்பிடி இருப்பாங்களோ தெரியல). தெய்வதிருமகள், வேட்டை பிறகு அமலா நடித்த படம் வெளியாகியிருக்கிறது அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள். மற்றையது ”காதலில் சொதப்புவது எப்படி”
இயக்குனர் கணேஷ் விநாயக் தனது முதல் படத்தில் கஸ்டப்பட்டு நேர்த்தியா வேலை செய்திருப்பது தெரிகிறது. நல்லதொரு படத்தை தந்த திருப்தி இவருக்கும் நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி எங்களுக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் பெரும்பாலும் கிடைத்திருப்பது உறுதிதான். அதற்காக படம் பக்கா டாப் மார்க் படமென்று சொல்வதற்கில்லை. படத்தில் 6பாடல்கள்தான் என்றாலும் குனிந்தால் நிமிர்ந்தால் பாட்டு என்று அடிக்கடி அள்ளி இறைத்திருப்பதுபோல் ஒரு உணர்வை படத்தில் காணமுடிந்தது. ஜீவி.பிராகாஸ் தனது நண்பர்தான் என்பதால சரியான கவனமெடுத்து இசையமைத்ததாக கூறியுள்ள இயக்குனர் அதுக்காக பாடல்கள் பலவற்றை சும்மா தேவையில்லாமல் புகுத்தியுள்ளது அப்படியே கண்கூடாக தெரிகிறது.
படத்தின் சில conceptகள் ஏற்கனவே பல தமிழ்படங்களில் வந்திருந்தாலும் அதில் புதினத்தை தனது பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளமையால், முதலே இதமாதிரி படங்களை பார்த்தோம் என்ற உணர்வை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். இப்படியான Action+Thriller படங்களில் Logic மீறல்கள் பார்ப்பது தேவையற்றதோடு அப்படியான தவறுகள் தவிர்க்கமுடியாதது என்றமையால் அவற்றை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவதே ரொம்ப நல்லது. Action சண்டைக்காட்சிகளை நல்ல தரமாக எடுத்திருந்தமை ரசிக்ககூடியதாக இருந்தது.
அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.
படத்தில் பாட்டுகள் பல வீண்செருகல்கள்தான் இப்ப பாட்டுவரும் எண்டு சொன்னா நிச்சயம் கொஞ்ச நேரத்தில பாட்டு வந்திரும். ஜீவீ.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தாலும் தெய்வதிருமகள், மயக்கம்என்னவில் கொடுத்த classics இதில் miss ஆகினமாதிரிதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் குறை சொல்வதற்கே இல்லை. பெரிதும் எதிர்பார்த்த ”கண்கள் நீயே” பாட்டை நல்லா touchingகா எடுத்திருந்தமை இயக்குனரின் திறமைக்கு சான்று. இந்த பாடலில் வரும் அந்த சின்ன தம்பியும் அழகாக நடித்திருந்தமை இன்னும் சிறப்பு.பின்னணி இசையில் இன்னும் செய்திருக்கலாம்.
படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன. பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.
![]() |
| GV.PrakashKumar |
அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.
![]() |
| Jayaprakash |
படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன. பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.
ஒருசில குறைகள் பல பிளஸ் பாயிண்டுகள் என்று பார்ப்பவர்கள் நல்லவொரு படம்பார்த்தம் என்று சொல்லக்கூடிய படம்தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். அருமையான தமிழ் பெயரில் படத்தை பெயரிட்டமைக்கு உரியவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
நண்பன் (சூப்பர் பண்) - திரைப்பார்வை
டிஸ்கி: 3 Idiots படம் வந்தஉடன பாத்தபடியா Original DVDல் பாக்கல. அதன் கதை scenes ஞாபகம் இருந்தாலும், frame by frame என்ன நடக்குது எண்டு ஞாபகம் இல்லை. So இந்தப்பார்வை Hindi படத்தோட ஒப்பிட்டு எழுதப்படேல. (பக்கா clear கொப்பி பிறகு கிடைச்சிருந்தாலும் நண்பனின் சுவாரஸ்யம் குறைஞ்சிடும் எண்டதால பாக்கல)
சங்கரின் இயக்கம், ஹாரிஸின் இசை, விஜய்+ஜீவா+ஸ்ரீகாந் நடிப்பு, ஹிந்திப்பதிப்பான 3IDIOTSன் மீள்பதிப்பு. சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்ய இவற்றைவிட வேறென்ன தேவை? சங்கர் தனது பழைய படங்களையே கொஞ்சம் மாத்தி பல படங்களில் றீமேக் செஞ்சிருந்தாலும் வேறுமொழியில் வந்த வேறொருவரின் படத்தை றீமேக்குவது இதுவே முதல்முறை. (சங்கரின் பழைய ஜென்டில்மென், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற எல்லாம் ஒரே கதைக்கரு என்பதையே அப்பிடி சொன்னேன்). அதோடு இதுவரை காலத்திலேயும், விரைவில் சங்கரால் முடிக்கப்பட்ட படமும் இதுவாகதான் இருக்கும்.
அந்நியனுக்கு பிறகு சங்கருடன் 2வது தடவை சேரும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது முதல் அல்பமான ”7ம் அறிவில்” விட்ட குறையை இதில் முழுவதுமாக பூர்த்தி செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜை பிடிக்காத பலருக்கே நண்பன் பாடல்கள் நன்றாக கவர்ந்திருந்தது. “அஸ்க்கு லஸ்கா” பாடல் NO1 பாடலாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருந்தது. அதோடு மற்ற பாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று குறைந்ததில்லாமல் அற்புதமாக வந்திருந்தது. உண்மையில் 3இடியட்ஸ் படத்தில் வந்ததை(2?) விட இதில் கூடுதலான பாடல்கள் இருந்தாலும் படத்தில் எந்தவிததொய்வும் ஏற்படாத விதத்திலும் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரியும் பயன்பட்டிருந்தமை படத்தின் அடிஷனல் பிளஸ் பாயின்டுகளாக இருந்து. ஏற்கனவே ஹாரிஸ் சொன்னபடி ”என் friendஐ போல யாரு மச்சான்” பாட்டு title song காக வந்தது.
ஹிந்தியில் மெகாஹிட்டான ஒரு படத்தை பிரபல இயக்குனர் மீள் பதிக்கும்போது ஏற்படும் ரசிகர்களின் பெரிய்ய எதிர்பார்ப்பு + பழைய ஒறிஜினலை மாதிரி ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற இயக்குனருக்கு ஏற்படும் டென்ஷன் இவ்விரண்டையும் சங்கர் தனது திறமையாலும் மற்ற பலரின் உழைப்பாலும் 100க்கு 100% திருப்திப்படுத்தியுள்ளார், வெற்றிபெற்றுள்ளார். அண்மையில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல படங்கள் ஊத்திக்கிட்ட நிலையில் மங்காத்தவுக்கு பிறகுவந்த படங்களில் அடுத்தபடியாக எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி ரசிகர்களுக்கு நல்லதொரு பொங்கல் விருந்தை படைத்துள்ளார் சங்கர்.
சங்கர் நண்பன் பட ஓடியோ வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல விஜய் தனது வழமையான பாணியில் இல்லாமல் நடிச்சிருக்கார். அதோட விஜய்ய பிடிக்கிறவங்களுக்கு கூட பிடிக்கும் விஜய பிடிக்காதவங்களுக்கும் இனி பிடிக்கும்எண்டு சொன்னதை விஜய் தனது சிறப்பான அளவான ஓவர்பில்டப்பில்லாத நடிப்பால் நிருபித்துக்காட்டியுள்ளார். அண்மையில் வந்த எந்தவொரு வழமையான விஜய் படத்திலும் காணப்படும் எந்தக்காட்சிகளும் இதில் இல்லை. சங்கர் எதிர்பார்த்ததை அப்பிடியே விஜயிடமிருந்து வாங்கியிருக்கிறார். மற்ற இரு ஹீரோக்களான ஜீவா, ஸ்ரீகாந்தைவிட விஜயின் நடிப்பு பளிச்சென தெரிகிறது.
ஜீவா வழமைபோல தனது அலட்டலில்லாத நடிப்பால் கலகலப்பான காட்சிகளிலும் உணர்ச்சிபூா்வமான காட்சிகளிலும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். Induction Motor எப்பிடி start பண்ணுது? என்று சத்தியராஜ் கேட்ட கேள்விக்கு வாயால் மோட்டர் எப்பிடி சத்தம்போடுதொ அப்பிடியே சத்தம் போட்டு காட்டிய காட்சி அற்புதமாக இருந்தது. எனக்கு இவர்களில் ஸ்ரீகாந்தின் நடிப்பில்தான் திருப்தி இல்லை. தனியா தோன்றும் காட்சிகளில் ஜொலித்திருந்தாலும் மூவரும் தோன்றும் காட்சிகளில் அவரது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியதை காணமுடியவில்லை.
படவெளியீட்டிற்கு முன்பே பலர் கூறியதுபோல நகைச்சுவை நடிகர் சத்தியனின் முழுத்திறமையும் இந்தபடத்தில்தான் வெளியாகியுள்ளது. அற்புதமான வாய்ப்புள்ள பாத்திரத்தில் ஆள் புகுந்துவிளையாடியுள்ளார். ஆங்கிலத்தில் காமெடியாக பேசும் பாணியிலென்ன, தனது body languageலென்ன தன்னால் முடிந்த உச்சக்கட்ட திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கார். பிழையாக தமிழில் மாற்றி எழுதப்பட்ட உரையை இவர் மேடையில் மனப்பாடம் செய்து பேசும் காட்சிதான் ஆனேகம்பேரின் கைதட்டல்களுக்கும் பாராட்டிற்கும் உரித்தானது.
நீண்டகாலத்துக்கு பிறகு வித்தியாசமான சத்தியாராஜை இந்தப்படம் ஊடாக பார்க்ககிடைத்தது. நக்கல் நையாண்டிகள் இல்லாத ஒரு serious ஆசாமியாக கலக்கியிருக்கிறார் இவர். நீண்டகாலமாக பலதரப்பட்ட வேடங்களில் சத்தியராஜ் சிறப்பாக நடித்துக்கொண்டு வந்திருந்தாலும் நிச்சயமாக இந்தப்படமும் அவரது சிறந்த மைல்கற்களில் ஒன்றாக அமையும்.
கேடியில் ஏற்கனவே தமிழில் இலியானா அறிமுகமாகியிருந்தாலும் அந்தபடத்தின் தோல்விக்கு பிறகு தமிழில் தலைகாட்டாது (தமிழ் வாய்ப்புக்கள் பலவந்தும்) தெலுங்கில் பிரபலமாகியிருந்தார். ஆனால் இந்தப்படத்திற்காக சங்கரால் மீண்டும் தமிழிற்கு அழைத்துவரப்ட்டிருக்கார். ஆனால் இலியானவுக்கு கொடுத்த பில்டப்புக்கு ஏற்ற மாதிரி பெரிசாக அழகுதேவதையாக இதில் தெரியவில்லை. சுமார்தான். ஆனால் அளவான நடிப்பு. இலியானவின் புகழ்பெற்ற இடுப்பை வைத்து பா.விஜய் எழுதிய பாடல் ”இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா” பாட்டுதான் இதில் இலியானவுக்குரிய தனிமகுடம்.
"Heartல பற்றறி சார்ஜுதான் All is well" பாடல் படமாக்கப்பட்ட விதம் காமெடியாக படமாக்கப்பட்டு கலகலப்பாக இருந்தது. பெரும் எதிர்பார்பிற்குரிய ”அஸ்க்கு லஸ்க்கு ஏமோ” பாட்டில் வித்தியாச வித்தியாசமான கால, இடங்களில் படமாக்கப்ட்டு ஒவ்வொரு வித்தியாமான சூழலிலும் அந்தக்காட்சி புதுசாக தொடங்கும்போது அப்பிடியே படப்பிடிக்குழுவும் உள்ளடங்கலாக வரக்கூடியவாறு ”Foreign Song shoot", "Modern getup" "ராஜா காலம்” என்று எழுதிப்பிடித்த take action board உடன் படமாக்கப்பட்டு கொஞ்சம் வித்தியாசமாக காட்சியமைப்பாக இருந்தது. Painting செய்த train, கண்ணாடியில் செய்த மாளிகை போன்றன இந்தப்பாடலில் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.
”இலியான” பாடல் கூடுதலாக கலர்புள்ளாக பிரேத்தியேகமாக அமைக்கபட்ட மாளிகைபோன்ற செட்டில் பல வெளிநாட்டு நடன மங்கைகளுடன் இலியானவின் சிறப்பு இடுப்பாட்டத்துடன் படமாக்கப்பட்டிருந்தது.
மூன்று மணிநேரத்துக்கு அதிகமாக நீளும் இந்தப்படம் எந்தவொரு நேரத்திலும் ஒரு தொய்வை காண்பிக்கவே இல்லை. கதையோடும் ஒட்டிச்செல்லும் நண்பர்கள் மூவரின் குறும்புத்தனங்கள், சத்யனின் காமெடி, சத்யராஜின் கடுமையான அதிகாரம், இலியானாவின் காதல் இவற்றிற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பாடல் வெளியீட்டில் இந்தப்படம் பிடித்திருந்தால் அந்தப்பெருமை 3 IDIOTSன் director ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று பணிவுடன் சொன்ன சங்கர் மீண்டும் ஒருமுறை நல்லதொரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டார் என்று உறுதியாக சொல்லிவிடலாம். பக்கா விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மசலா அம்சங்கள் எதுவுமே இதில் இல்லையென்றாலும் நல்ல படம்பார்க்க விரும்பும் சாதாரண ரசிகர்களின் துணையோடு நண்பன் வெற்றியை இலகுவாக தொடும்.
மொத்தத்தில் நண்பன் = பன்னீரில் குளித்த உணர்வு!

ராஜபாட்டை(போடா சொட்டை :P) - திரைப்பார்வை
வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும்.
பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள்.
சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.)
யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு.
![]() |
| Director Suseenthiran |
மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது.
பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்)
திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)
![]() |
| Composer Vidyasakar |
![]() |
| Composer Thaman |
------------------------------------------------------------------------------
இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
| Singer Solar Sai |
------------------------------------------------------------------------------
”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
![]() |
| Composer Sathya |
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
- இசை
- கவிதை
- சினிமா
- சுட்டவை
- செய்தி
- தொழில்நுட்பம்
- நக்கல்
- விளையாட்டு
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)