அவன் இவன் - திரைப்பார்வை

இந்த படத்தை பற்றி பாக்க முதல் தற்போது உள்ள காலகட்டத்தில் (சனல் நான்கு வீடியோ காட்சிகள் வெளிவந்து பலரது மனங்கள் மீண்டும் புண்ணான நேரத்தில்) இந்த நாதாரி இந்த விமர்சனம் எழுதுறது அவசியமா? அதபற்றியும் எம்மக்கள் பட்ட துன்பங்கள் பற்றியும் சொல்லாம பொழுதுபோக்கில் திளைத்திருக்கிறானே என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு இங்கே அங்கே. கத்தவேண்டிய நேரத்தில் கத்தாம இப்ப கத்தி பிரயோசனம் இல்ல எண்டு நினைக்கிறன். எப்ப கத்தினாலும் முடிவு ஒண்டுதானே என்று நீங்கள் சொல்லுறதும் புரியுது
---------------------------------------------------------------------------------

வழமையாக சில இயக்குனர்களின் படங்கள் வெளிவர முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வரிசையில் பாலாவின் படங்கள் முன்னிலையில் நிற்கின்றன. வித்தியாசமான கதைக்களங்கள், மாறுபட்ட திரைக்கதைகள், விசித்திரமான பாத்திரப்படைப்புகள் போன்றன மற்றய இயக்குனர்களிடமிருந்து பாலாவை வேறுபடுத்தி காட்டும் அவரின் படங்களின் சிறப்பியல்புகள். 


இலங்கையில் வியாழன் இரவே VIP showற்காக வெளியிடப்பட்டிருக்க வேண்டிய அவன்-இவன் படம் வெள்ளி காலையில்கூட வெளியிடப்படாமல்  இரவு7.30 மணியளவிலேயே VIP showஆக தெகிவளை Concord திரையரங்கில் வெளியிடப்பட்டது. (சுங்க அதிகாரிகளிடமிருந்து றீல்ஸை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சுணக்கம்தான் இந்த தடங்கலுக்கு காரணமென திருகோணமலையிலிருந்து நண்பர் நிறாதன் தியெட்டர் உரிமையாளர் மூலமாக உறுதிப்படுத்தியிருந்தார்). அதன்பின்னர் முதலாவது Normal show இரவு10.30க்கு போடப்பட்டது. அந்தகாட்சியை பாக்கும்வாய்ப்பே எனக்கு கிடைத்தது. 

பலர் நேற்றைய காலை, மதிய, மாலை பொழுதுகளில்  படத்தை எதிர்பார்த்து தியெட்டர் சென்று ஏமாந்திருந்தமையால் இரவுப்பொழுதில் படம் வெளியிடப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை. அதோட VIP showவே 7.30கெண்டா அதுக்கு பிறகு படம்போடுவாங்களோ என்று பலருக்கு குழப்பமோ தெரியாது முதலாவது காட்சிக்கு வெறும் 30பேரளவிலேயே வந்திருந்தனர். முதலாவது காட்சியை இவ்வாறு இலகுவாக பாத்தது இதுதான் முதல்தடவை. மொக்கை படங்களுக்கே முதலாவது காட்சி நல்லூரில் ரதோற்சவம் போன்றுதான் இருப்பது இப்ப மட்டும் கேபியு போட்ட வீதி மாதிரி கிடந்தது.

படப்பிடிப்பின்போது ஆர்யா விஷால் பாலா
வித்தியாசமா எடுக்கிறன் வித்தியாசமா எடுக்கிறன் எண்டு பல அருவருக்கதக்க கொடுர காட்சிகளையும், உருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் கவலை தோய்ந்த கதைகளையும், மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காக சமூகத்தில் உள்ள வித்தியாசமானவர்களையே பாலா தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது எனக்கு  அண்மைக்காலதத்தில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோடு கிட்டத்தட்ட பிதாமகன் பாணியிலான அவன் இவன் படத்தின் போஸ்டர்களும் இந்தமுறையும் இவர் தனது அதே பாணியைதான் தரப்போகிறார் என்று சொல்லாமல் சொல்லி இந்த படம் சூப்பரா இருக்கும் என்ற எனது நம்பிக்கையை ஆரம்பத்திலேயே தகர்த்திருந்தது. என்றாலும் பாலா என்ற மாயையால் எதுவும் நடக்காலம் என்ற ஒருசிறு நம்பிக்கையோடுதான் படம் பார்க்க சென்றேன்.  

ஆனால் பலரது எதிர்பார்ப்புக்களை பாலா இந்த படம் மூலம் சிதைத்து விட்டார் போலதான் எனக்கு படுகிறது. வழமையான பாலாவின் படங்களில் இருக்கும் முக்கியமான நல்ல கதைக்கருவை இதில் காணவே முடியிவில்லை. இதுதான் இந்த படத்தின் மிக முக்கிய பலவீனம். ஏதொ தன் பாட்டில அது போற போக்கில சும்மா போகுது. என்ன சொல்ல வருவதற்கு (ஒரு சின்னகரு) இப்பிடி கஸ்டப்பட்டார் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.  இல்லை பாலா சொல்ல வந்ததை யதார்த்தமாக சொல்லியிருக்கார் சும்மா குறை சொல்லுறது சுலபம் என்று யாரும் சொல்வார்களாயின், அப்படியென்றால் அதற்கெதுக்கு பாலா? இப்ப புதுசா வாற இயக்குனர்களே இலகுவாக சொல்லிவிடுவார்களே என்ற கேள்வியே எழுகிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தை சரியில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பரவாயில்லை ரகம்தான். முதல்பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம்பாதி கொஞ்சம் வேகத்தோடு கலகலப்பாக செல்கிறது. சொல்ல வந்ததை சொல்ல இப்பிடி மினக்கெட்டு படம் எடுக்க தேவையில்லை என்பது ஒரு புறம் இருக்க கடைசியில் வந்த பல காட்சிகள் தேவையற்று வேண்டுமென்றே கதையை சொல்லி முடிக்க உருவாக்கப்பட்டது போல உணர்வை தருகின்றது.
ஜனனி ஐயர்
 வழமை போல இந்த படத்திலும் நடிகர்கள் தங்கள் வித்தியாசமான நடிப்பு திறனை பட்டை தீட்ட களம் அமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. விசால் முதல் முறையாக தனது நடிப்பு திறனை காட்ட சந்தர்ப்பம் கிடைத்த படமாக இதைக்கொள்ளலாம். வாக்கு கண்ணுடையவராகவும் வாய் ஒரு மாதிரி இழுத்தவர் போலவும் வந்து தன்னாலும் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். ஆர்யாவிற்கு அவ்வளவு கடினமில்லாத பாத்திரம்தான் என்றாலும் கலகலப்பாக படம் செல்வதற்கு இவரது பங்கும் மிக முக்கியமானது. பிறவுண் கலரான ஒட்ட முடி வெட்டப்பட்டவராக வருகிறார். (ஒரு கேள்வி ஏன் பாலாவின்ர படத்தில மட்டும் இப்பிடி வித்தியசமான பாத்திரங்கள் ஏன் சும்மா சாதராண ஆள் மாதிரி இருந்தா அது செல்லாதா? ஏன் வித்தியாமா காட்டோணும் எங்கிறதுக்காண்டி கழுத்து இழுத்த மாதிரி கண் இழுத்த மாதிரி பிறவுண் தலைமயிர் etc etc ஏன் ஏன்?) 

மது சாலினி
ஆர்யா விஷாலுக்கு அடுத்ததாக முக்கிய பாத்திரமாக ஜமீன்தாராக வருகிறார் GM.குமார். பலபடங்களில் இவர் தோன்றியிருந்தாலும் இந்தப்படத்தில் இவரது பாத்திரம் பேசப்படும்படியாக இருக்கிறது. அம்மணமாக இவர் காட்சியில் காட்டப்பட்டது தேவையற்ற ஒன்று. அதன் அவசியதன்மை அந்த இடத்தில் இல்லவே இல்லை. சும்மா வித்தியாசமா செய்யோணும் எண்டு பாலா செய்தார் போலவே தெரிகிறது. பாத்திரத்திற்கான கனதியில் ஹிரோயின்கள் இருவரும் இல்லாதிருப்பதால் அவர்களின் நடிப்பு திறன் இந்த படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் சற்று கூடுதலான நேரம் வரும் ஜனனி ஐயரின் நடிப்போ பெரிசாக எடுபடவில்லை. செயற்கைதனம் கூடுதலாக தெரிகிறது. மற்றைய நடிகை மதுசாலினுக்கோ திரையில் தோன்றும் நேரம் மிக குறைவு. ஆனால் ஜனனிஐயரை விட நடிப்பிலும் அழகிலும் இருபடி மேல்தான்.

குண்டுபையன் ஆர்யா GM.குமார் விஷால்
அம்மாவாக வரும் அம்பிகா வீரமான ரவுடி அம்மாவாக வந்து கலக்கியிருக்கிறார். குரலையும் முக வெட்டையும் பார்க்கும்போது அப்பாவாக வருவது Vijay TV Super Singer Voice Expert அனந் வைத்தியநாதன்போல தெரிகிறது. சும்மா கதையோடு ஒட்டாது பயணிப்பது போல வந்து போகிறார். (வேறு நல்ல குணச்சித்திர நடிகர்கள் இல்லையா? ஏன் சும்மா வேறு துறைஆக்களை புதுசா இங்க கொண்டுவந்து வீணாக்கிறீங்க பாலா?). இந்த படத்திலே மிகமுக்கியமான கண்டுபிடிப்பு நண்பனாக வரும் குண்டு பையன்தான். சிறந்த முறையில் காமடியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு இனி வாய்ப்புக்கள்  குவியும். 

மது சாலினி
யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்து மெகா கிட் என்றில்லாது விடினும் ஏலவே பிரபல்யம் அடைந்திருந்தது. ”ராசாத்தி போல” பாடல் பலரால் விரும்பிய பாடலாக இருந்திருந்தது. ஆனால் அல்பத்தில் வந்ததை விட சில இடங்களில் மாற்றங்களுடன் திரையில் பாடல் புதுசாக வந்திருந்தது. அத்துடன் அந்த நல்ல பாடலை இரு துண்டுகளாக்கி வழங்கி அந்த பாடலை continuous ஆக கேட்பதில் உள்ள சுகத்தை கெடுத்துவிட்டார் பாலா. மேலும் அல்பத்தில் உள்ள Junior Super Singer பாடிய பாடல் உட்பட இரு பாடல்கள் படத்தில் பயன்படுத்த படவே இல்லை.

மொத்தத்தில் ஒழுங்கான திரைக்கதை இல்லாமல் படம் கன்னா பின்னாவெண்டு சும்மா போனாலும் வழமையான பாலாவின் படங்களை போல பாத்திர படைப்பின்சிறப்பு,  திறமையான இயக்கம் போன்றவற்றிற்காக "சும்மா பரவாயில்லை பாக்கலாம்" என்ற ரகத்தை அவன்-இவன் படத்திற்கு கொடுக்கலாம்.

திரைதகவல் பெட்டகம்-VI (பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் சிறப்பு)

எனது கடந்த ஸ்ரீராம் பார்த்தசராதி பற்றிய பதிவில் பிழையான குழப்பான தகவலொன்றை தந்திருந்தேன். பாடகர் பாலக்காடு ஸ்ரீராமை பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் என்பது போல  சொல்லியிருந்தேன். நேரடியாக அவ்வாறு சொல்லாவிடினும் இவர் பாடிய பாடல்கள் மூலமாக நான் சொன்ன தரவுகள் உங்களுக்கு பிழையான விளக்கத்தை பெற்று தந்திருக்க கூடும். பின் அந்த பிழை லோசன் அண்ணாவினால் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டது. எனவே இந்த பதிவானது தமிழ் திரைஇசையில் உள்ள ஸ்ரீராம் என்ற பெயர் உள்ள இன்னோர் பாடகரான பாலக்காடு  ஸ்ரீராம் பற்றிய தெளிவான தரவுகளை தரமுயல்கிறது. 

இந்தபதிவு ஆரம்பிக்கும்போது தமிழ் திரைஇசையில் உள்ள ஸ்ரீராம் என்று பெயர் உள்ள அனைவரையும் ஒரு பதிவில் கொணர்ந்து அவர்கள் பற்றிய தனித்துவங்களை தந்து குழப்பங்களை முழுவதுமாக தீர்த்துவிட எண்ணியிருந்தேன். எனினும் பாலக்காடு ஸ்ரீராம்பற்றி எழுதவே நீண்ட நேரம் பிடித்துவிட்டமையினால் இதை ஒரு தனிப்பதிவாகவே ஆக்கிவிட்டேன். அடுத்த பதிவில் அனைவரையும் ஒன்றாக பார்ப்போம். 

பாலக்காடு ஸ்ரீராம்

பாலக்காடு  ஸ்ரீராம்
ஸ்ரீராம் கேரளாவில் பாலக்காடு எனும் மாவட்டத்தில் பிறந்த மலையாளி ஆவார். ஸ்ரீராம் என்று பல பெயர்கள் திரைதுறையில் இருந்தமையாலோ என்னவோ இவர் பின் பாலக்காடு ஸ்ரீராம் என்றும் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கர்நாடக சங்கீதம் கற்ற இவர் பல இசைக்ருவிகளை வாசிக்க கூடியவர். மிருதங்கம், புல்லாங்குழல், கீபோர்ட் போன்ற இசைக்கருவிகளை திறமையாக வாசிக்கும் திறமை இவரிடம் இருந்தமையால் ஒரு இசைக்கலைஞராக திரைதுறைக்கு அறிமுகமானார். பல இசையமைப்பாளர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞராக தனது பயணத்தை திரைதுறையில் ஆரம்பித்தார் என அறியப்படுகிறது.

புல்லாங்குழலுடன்
எனக்கு தெரிந்தவரை இசைப்புயல் AR.Rahmanஆலேயே பாலக்காடு ஸ்ரீராம் தமிழ் திரையிசைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். உண்மையில் இவர் அறிமுகமான பாடல் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற ”திருப்பாச்சி அரிவாள தூக்கிகாண்டு” பாடலாகும். ஆனால் அதற்கு முன்பே வேறுசில பாடல்கள் வெளியாகி உங்களுக்கு இவரின் முதல்பாடல் எது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன்பின் உயிரே படத்தில் இடம்பெற்ற ”தக தையதைய தையா” பாடலை சுக்வீந்தர்சிங்குடன் சேர்ந்து பாடினார். ஆனாலும் இந்த பாடலை பாலக்காடு ஸ்ரீராம் பாடினாரோ? என்று கேட்டால் பலர் இல்லை என்றே சொல்வார்கள். அத்தோடு பாடல் கசெட்டுகள் வெளியாகிய காலப்பகுதியிலும் இவரது பெயர் தவறுதலாக கசெட்டுகளில் இடம்பெறவில்லையாம்.


பாலக்காடு ஸ்ரீராம் + சுக்வீந்தர்சிங் பாடிய ”தக தையா" பாடல்

இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம்; இந்த பாடல் இடம்பெற்ற படம் ”தில்சே” என்ற பெயரில் ஹிந்தியிலேயே ஒறிஜினலாக எடுக்கப்பட்டு பின் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் இந்தப்பாடலை சுக்வீந்தர்சிங் பாடியிருந்தார். தமிழில் இந்த பாடல் பாலக்காடு ஸ்ரீராம் + சுக்வீந்தர்சிங் குரலில் வெளிவந்திருந்தது. ஹிந்தியில் சுக்வீந்தர்சிங்கே பாடியிருந்தமையால், தமிழில் ஸ்ரீராமும் உடன் பாடினார் என்பது பேசப்படாமலே போயிருந்தது. அதோடு இந்தபாடலில் 2Vesrsionகள் வேறு. மற்றைய பதிப்பில் ஹரிகரன் மற்றும்  ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தனர். எனவே குழப்பம் மேல் குழப்பம் இருந்தமைக்கு வாய்ப்புக்கள் நிறைய உண்டு.
மனைவியுடன் ஸ்ரீராம்
ஸ்ரீராமின் குரலானது மற்றைய பாடகர்களை போலன்றி வித்தியாசமாக இருக்கின்றமையால் இலகுவாக இவரை மற்ற பாடகர்களிலிருந்து வேறுபிரித்தறியலாம். சற்றே இறுக்கமான குரலமைப்பு கொண்டிருப்பதால் இவருக்கு கிடைக்கும் வாயப்புக்கள் பெரும்பாலும் அதிரடிப்பாடலுக்கான (Fast Beat) வாய்ப்புக்களே. கிடைக்கும் பல வாய்ப்புக்களை அற்புதமாக பயன்படுத்தி அந்தபாடல்களை நல்ல ஹிற் ஆக்கி, டப்பாங்கூத்து, அதிரடி பாடல்களில் தனக்கென தனிமுத்திரையை பதித்துள்ளார் இவர்.

மேலும் இசைப்புயலின் இசையிலே இவர்  படையப்பா படத்தில் ”வெற்றிக்கொடிகட்டு”, என்சுவாசக்காற்றே படத்தில் ”காதல் நயாகரா” போன்ற பாடல்களை பாடியுள்ளார். நான் ஏலவே சொன்னது போல இவர் உயிரே மற்றும் தாஜ்மகால் படத்திலே பாடல் பாடியிருந்தாலும் இவர் திரையுலகில் பேசப்பட்ட பாடல் என்னவோ படையப்பா படத்தில் இடம்பெற்ற ”வெற்றிக் கொடிகட்டு” பாடல்தான். சுப்பர் ஸ்ராருக்கான அதிரடிப்பாடல் என்ற கூடுதல் பலத்துடன் இந்தபாடல் அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னரே இவருக்கு வாயப்புக்கள் கூடுதலாக கிடைக்கப்பெற்றது.
சங்கீதகச்சேரி ஒன்றில் ஸ்ரீராம் (இடமிருந்து 5வதாக பச்சை ஜிப்பாவுடன்)
சங்கீத ஞானமுள்ள சில பாடகர்கள் நன்றாக சங்கதி போட்டு பாடுவதில்  மற்றும் ஆலாபனை செய்வதில் கைதேர்ந்தவர்கள். பாலக்காடு ஸ்ரீராம் இவர்களிலிருந்து மாறுபட்டு திறமையாக ஜதிகளை பாடக்கூடிய திறமை உள்ளவராக பார்க்கப்படுகிறார்.  இந்த திறமை காரணமாகவே இவர் பார்த்தாலே பரவசம் படத்தில் "Love Check" என்று தொடங்கும் பாடல், படையப்பாவில் ”மின்சார கண்ணா”, "STAR" படத்தில் ”தோம் கருவில் இருந்தோம்”, சங்கமம் படத்தில் ”மார்கழி திங்களல்லவா” போன்ற பாடல்களில் தனது தனிதிறமையான ஜதிகள் சொற்கட்டுகள் போடும் திறமையை வெளிப்படுத்தி அந்த பாடல்களை மெருகேற்றியுள்ளார். 

இவரது ஜதிகள் சொற்கட்டுகள் போடும் திறமையை (நட்டுவாங்கம்  செய்யும் திறமையையும்) உலகம் பூராகவும் பறைசாற்றியது Slumdog Millionaireல் இவரும் மதுமிதாவும் சேர்ந்து பாடிய Background Scoreற்குரிய இசைவடிவாமாகும். (மேலே முதல் பந்தியில் குறிப்பிட்ட சில பாடல்களில் இவர் பிரதான பாடகராக இல்லாது சிறப்பாக ஜதிகளை பாட பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது)

<p><a href="http://musicmazaa.com/hindi/audiosongs/movie/Slumdog+Millionaire.html?e">Listen to Slumdog Millionaire Audio Songs at MusicMazaa.com</a></p>
Slumdog Millionaireல் ஸ்ரீராம் பாடிய Liquid Dance

இவருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாகவும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றிருந்தது. ஹாரிஸின் இசையில் பாடியவற்றில் சாமி திரைப்படத்திற்காக ”திருநெல்வேலி அல்வாடா”, கோயில் திரைப்படத்திற்காக ”அரலிவிதையில் முளைத்த”, தொட்டிஜெயா படத்தில் ”யாரிசிங்காரி” போன்ற பாடல்கள் முக்கியமானவை. 

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் மன்மதன் படத்தில் ”பூமியென்னா வீரம் காட்டு” கண்ணாம்பூச்சிஏனடா படத்தில் ”கண்ணாம்பூச்சி ஆட்டம்” சண்டைக்கோழி படத்தில் ”முண்டாசு சூரியனே” போன்ற பாடல்கள் இவர் பாடியன.

G.V.பிரகாஸ்குமார் இசையில் வெயில் படத்தில் ”ஊராந்தோட்டத்தில ஒருத்தன் போட்ட” காளை படத்தில் ”வீரமுள்ள” பாடல்களும் தேவிசிறிபிரசாத் இசையில் மாயாவி படத்தில் ”தமிழ் நாட்டில் எல்லோருக்கும்” பாடல்களும் பாலக்காடு ஸ்ரீராம் பாடிய பாடல்களில் முக்கியமானவையாகும்.
---------------------------------------------------------------------------

கடந்த பதிவில் கேட்கப்பட்ட வினாவிற்கான வெற்றியாளர் அடுத்த பதிவில் அறிவிக்கப்படுவார். விடை: இளங்காற்று வீசுதே பாடலாகும்.

திரைதகவல் பெட்டகம்-V (பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி சிறப்பு)

முந்தைய பாகங்களுக்கு I   II   III   IV 
இந்த முறையும் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை சொல்லும் அதிஷ்டசாலி உள்ளூர் வாசகர் (இலங்கை) ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும்.


இங்கே பார்க்கபோகும் நபர் ஒரு பாடகர்(ஆண்). சிறந்த கர்நாடக சங்கீத பின்னணி கொண்ட இவர், AR.Rahmanஆல் திரைதுறைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் முன்னணி இசையமைப்பபாளர்களுக்காக  இனிமையான பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கான வாய்ப்புகள் என்னவோ குதிரை கொம்பாகதான் இருந்து வருகிறது. 2005ல் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆண் பாடகருக்கான விருதைப்பெற்ற பெருமையுடைய பாடகர்தான் இவர். கண்டுபிடித்திருப்பீர்கள் இவர்தான் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இவர் திரை இசையில் பாடிய பாடல்கள் சொற்பமாகதான் இருந்தாலும் பெரும்பாலான இவரது பாடல்கள் பலராலும் ரசிக்கப்பட்ட நல்ல பாடல்கள்.
ஸ்ரீராம் பார்த்தசாரதி
AR.Rahmanன் இசையில் பார்த்தாலே பரவசம் படத்திற்காக ”இதுதான் இதுதான் உச்சக்கட்டம்” என்ற பாடல்மூலமாக ஸ்ரீராம் பார்த்தசாரதியின் திரைஅறிமுகம் ஆரம்பித்தது. என்னதான் இசைப்புயலால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இவரின் முதல் பாடலால் இவர் பெரிதாக பேசப்படவில்லை. அதன்பின்னதாக வித்தியாசாகரின் இசையில் பூவெல்லாம் உன்வாசம் படத்தில் ”புதுமலர் தோட்டத்து காற்றை” என்ற பாடலே இவருக்கு நல்ல பிரபல்யத்தை மக்கள் மத்தியில் கொடுத்தது எனலாம். பின்னர் AR.Rahmanஇடத்தும் வித்தியாசகரிடத்தும் ஒருசில நல்ல பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. 2003ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பிதாமகனில் இவர் பாடிய ”இளங்காற்று வீசுதே” பாடல் காலத்தால் அழியாத ஒரு அற்புதமான மெலடி பாடல். இவர் இதுவரை பாடிய பாடல்களில் நம்பர்1 இடத்தை இந்த பாடலுக்குதான் என்னால் வழங்கமுடியும். இளையராஜா இவருக்கு மேலும் பல வாய்ப்புக்களை தனது சொதப்பல் படங்களில் வழங்கியமையால் இவரால் அவற்றின் மூலமாக பிரபல்யமடைய முடியவில்லை.

இளங்காற்று வீசுதே பாடல்

எனினும் மக்கள் மத்தியில் அமோக அகோர வரவேற்பை பெற்றதென்னவோ கஜினி திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் முதலாவதாக பாடிய ”சுற்றும் விழி சுடரே” பாடல்தான். இந்தப்பாடலுக்காகதான் இவருக்கு 2005ற்கான தமிழ்நாடு அரசின் சிறந்தபாடகர் விருது கிடைத்தது. இந்த பாடலால் ஹாரிஸ் ஜெயராஜின் புகழ் ஒருபடி மேலே உயர்ந்திருந்தாலும் கூட தனது அடுத்து வந்த படங்களுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதியை ஹாரிஸ் உபயோகப்படுத்தவில்லை. ஸ்ரீராம் என்ற இன்னோர் பாடகரையே அதிகம் ஹாரிஸ் உபயோகித்திருந்தார்.  உண்மையில் இவரின் முழுப்பெயர் பாலக்காடு ஸ்ரீராம் ஆகும். (பாவம் ஸ்ரீராம் பார்த்தசாரதிதான் ஸ்ரீராம் என்று ஹாரிஸ் காண்பியூஸ் ஆகிட்டாரோ தெரியல. சும்மா ஒரு கதைக்கு சொன்னேனுங்க). இதைவிடுத்து ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் ஸ்ரீராம் என்று வேறு ஒரு பாடகரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.(மிகச் சொற்ப ஓரிரு பாடல்களையே திரையில் பாடியுள்ளார்).

எனது பதிவில் முதலில் பாலக்காடு ஸ்ரீராமை ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் கணவர் என்ற வகையில் நானும் காண்பியூஸ் ஆகி பிழையாக சொல்லியிருந்தேன். அதை திருத்திய லோசன் அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்!

ஸ்ரீலேகாவும் அவரது கணவர் ஸ்ரீராமும்
ஆனால் ஏறத்தாழ 5வருடங்களின் பின் அண்மையில் வந்த ”கோ” படத்தில் ”வெண்பனியே” பாடலுக்காக கஜினியில் செய்ததை போலவே பாம்பே ஜெயசிறியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதியை கூட்டிவந்தார். இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. என்னதான் நல்ல பாடல்களை பாடினாலும் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் குறைவு.தான் என்பது இசைரசிகர்களுக்கு கண்கூடு. பார்ப்போம் எதிர்வரும் காலங்களில் இவருக்கு வாய்ப்பு எவ்வாறு இருக்கப்போகின்றதென.
--------------------------------------------------------------------------------

திரைதகவல் பெட்டகம்-IV (பாடகி பிரசாந்தினி சிறப்பு) பதிவில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்குரிய விடைகளை ஏலவே சொல்லியிருந்தாலும் திரைஇசை சம்பந்தப்பட்ட முதலாம் இரண்டாம் கேள்விகளை விளக்கமாக இதில் பார்ப்போம்.

மம்தாமோகன்தாஸ், அண்ட்றியா, வசுந்தராதாஸ்
யுவன்சங்கர்ராஜா பலதரப்பட்ட  பாடக பாடகிகளுக்கு தனது பாடல்களில் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். அந்தவகையில் தற்போதைய தமிழ் இசையமைப்பாளர்களில் திரைப்படங்களில் நாயாகியாக நடித்தவர்களுக்கு பாடகி வாய்ப்பு வழங்கியதில் இவர்தான் முன்னணியில் இருக்கிறார்.  எனக்கு தெரிந்தவரை 3நாயகிகளுக்கு இவர் வாய்ப்பு வழங்கியுள்ளார். அண்ட்றியா, வசுந்தராதாஸ், மம்தாமோகன்தாஸ் இவர்களே அவர்கள். இதில் மூவருமே நடிகைகளென்று மட்டுமல்லாது திறமையாக பாடக்கூடியவர்கள். அதாவது இவர்களை Professional Actress என்ற Categoryக்குள் மட்டும் சேர்க்கமுடியாது. இவர்களில் யுவனால் கூடுதலான வாய்ப்பு அண்ட்றியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அடுத்தது இசையமைப்பாளர் G.V.PrakashKumarரின் வருங்கால மனைவியான பாடகி சைந்தவிக்கு தனது இசையமைப்பில் ”மதராசபட்டிணம்” படத்தில் "ஆருயிரே” பாடலை முதலாவதாக வழங்கியிருந்தார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியமை குறிப்பிடத்தக்கது!
 --------------------------------------------------------------------------------

பரிசுக்கான கேள்வி
இந்த பதிவில் மேலேகுறிப்பிட்ட பாடகர் பாடிய எந்த பாடலுக்கு NO1 இடத்தை வழங்கமுடியும் என சொல்லபட்டிருக்கிறது?

விடையை ஒருகிழமைக்குள் கீழ்வரும் முகவரிக்கு மின்அஞ்சலாகவோ அல்லது உங்கள் மின்அஞ்சல் முகவரியுடன் பின்னனூட்டமாகவோ இடலாம். உங்களது பின்னூட்ட விடைகளை ஒரு கிழமைவரை வலைத்தளத்தில் காணமுடியாது. வெற்றியாளர் தெரிவுசெய்யப்பட்டபின் அவை approve செய்யப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி: carthi_uom@yahoo.com

டிஸ்கி: கடந்த தடவை, பதிவுகளே வாசிக்காதது கூட ஒடிவந்து கேள்விய பாத்து searchபண்ணி விடையபோட்டு பரிசுகள வாங்கிட்டுது. அதை தவிர்க்கவே காம்பிறிகென்சன் பாணியில் கேள்வி! 

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்