BLOGற்கு வந்தது எப்படி?

அண்மையில் எனது ஒரு மாதகால விடுமுறையை யாழ்ப்பாணத்தில் சொந்தமண்ணில் நல்ல ஜாலியாக கழித்துக்கொண்டிருந்தபோது ஊஞ்சல் வலைத்தளத்தை வைத்துள்ள நண்பர் சுபானு அவர்களால் பதிவெழுத வந்ததை பற்றி எழுத அழைக்கப்பட்டேன்.
எனினும் யாழிலிருந்து எழுதுவதற்கு போதிய வசதி இல்லாமையால் நீண்ட நாளின் பின் அந்த அழைப்பை ஏற்று இன்றுதான் பதிவெழுதுகிறேன். இதை ஒரு சுயதம்பட்ட பதிவாக பதிகின்றேன். யாரும் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.



எனது பாடசாலைக்காலத்தில் நான் பார்த்த ”முதல்வன்”, ”ஆயுத எழுத்து” போன்ற அரசியல் படங்களாலும், ”இந்தியன்”போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களாலும், ”அன்பே சிவம்” போன்ற யதார்த்த படங்களாலும் என்னிடம் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாகவோ என்னவோ என்னால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக செய்யவேண்டுமென்ற உணர்வு இருந்தது.



இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ”அன்பே சிவம்” படத்தை பார்த்த பின்புதான் எனது வாழ்க்கையின் போக்கே மாறினது. அதுவரை காலமும் குப்பையாக ஒழுங்கற்று கிடந்த என் மனது ஒரு நிலைக்கு, கட்டுக்கோப்புக்கு வந்தது அதன்பின்னரே. அதன்பின்னே பல தொடர் வீழ்ச்சிகளிலிருந்து வெற்றிகரமாக எழுந்து நிமிர்ந்து வந்தேன்.


அரசியல் படங்கள் எதுவாக இருந்தாலும் நானும், அப்பாவும் விரும்பி பார்ப்போம். அப்பா நல்ல அரசியல் அறிவுடையவர். பழைய கால அரசியலை பற்றி போதியளவு சொல்லியிருக்கிறார். எனக்கு அந்த வயதில், பெரியாளா வந்தவுடன் நல்ல ஒரு கட்சியில் சேர்ந்து என்னால் இயன்றதை மக்களுக்கு செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஆசை இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பெருமளவு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்றம் சென்ற காலம் அது. நல்லதுக்கும், நல்லவர்களுக்கும் காலம் உண்டு என இருந்த காலகட்டம் அது. ஆனாலும் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பல வேண்டத்தகாத சம்பவங்கள் எனது உள்மன ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனினும் பல வெளிவராத, மக்களின் பிரச்சனைகளையும், உண்மைகளையும், எனது உணர்வுகளையும் வெளிக்கொண்டுவர ஆசையிருந்தும் அதற்குரிய தருணமோ இடமோ கிடைக்கவில்லை. இப்படியான காலத்தில்தான் படாதபாடுபட்டு ஒரு மாதிரி நானும் Campusக்கு தெரிவாகினேன். இணையப்பாவனை இந்தகாலத்தில்தான் அறிமுகமானது. பின் 3ம் வருடத்தில் Training காலத்தில் சும்மா வெட்டியாகத்தான் பெரும்பாலான நேரங்களில் இருந்தமையால் பல பக்கங்களை இணையத்தளத்தில் புரட்டலானேன். இத்தருணங்களில் பலரது Blogகளை பார்த்தபோதுதான் வீணே சும்மா இருப்பதிலும் எனது உணர்வுகளை கொட்டவும், எம்மக்களின் பிரச்சனைகளை, தேவையான தகவல்களை பரிமாறவும் Blog சரியான இடமாக இருக்குமென முடிவெடுத்து நானும் ஏதோ என்பாட்டிற்கு எழுதவந்தேன்.

சில தெரியவேண்டிய மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டுமென்ற ஆவலிலும், வராத செய்திகளை சொல்வதற்காகவும் EXPOAIR, EXPOAIR Traveling Tips, A9ல் நடப்பதென்ன?, A9ல் பயணிப்பதற்கான நடைமுறைகள், புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள் போன்ற பதிவுகளை எழுதினேன்.

இனி எனது பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு. இறுக்கமான, கடினமான ஆண்டாக இருக்கபோவதால் இனிபோதியளவு நேரம் இணையத்துடனோ, Blogஉடனோ செலவளிக்க முடியாது. எனவே எப்போதாவது இருந்துவிட்டுதான் எழுதுவேன். அப்பிடி எழுதினாலும் அதுவும் டூபாக்கூர் பதிவுகளாகவே வரும்.

இறுதியாக என்ன முறையில் நான் எழுதுகிறேன் என்று சொல்லிமுடிக்கிறேன். பதிவுகளை இடும்போது நான் பாமினி(Bamini) Fontஐ தான் உபயோகிக்கிறேன். ”அம்மா”வை Amma என்று Phonetic முறையில் எழுதுவதிலும் பாமினி மிகவும் விரைவானது. பழகிவிட்டால் இலகுவானது. முன்பு நான் இருந்த வீட்டில் Net connection 24 மணி நேரமும் இருந்தமையால் Browserல் Tamil Key Extension ஐ Install செய்து நேரடியாக பதிவுகளை Blogல் எழுதிவந்தேன். இப்போது கம்பஸிலும் நண்பர்களின் Dongle மூலமாகவும்தான் பார்க்கின்றமையால் நானும் NHM Writerல் Bamini Unicodeஐ கொண்டு முதலே எழுதிவிட்டு, பின்பு அதை அப்படியே Blogற்கு கொப்பி செய்து பதிவிடுகிறேன்.

10 comments:

அபர்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி.........!

என்றும் அன்புடன்
அபர்ணா.....

கார்த்தி சொன்னது…

நன்றிகள்!!!!

சுபானு சொன்னது…

//எனினும் பல வெளிவராத, மக்களின் பிரச்சனைகளையும், உண்மைகளையும், எனது உணர்வுகளையும் வெளிக்கொண்டுவர ஆசையிருந்தும் அதற்குரிய தருணமோ இடமோ கிடைக்கவில்லை.//

சரி அரசியலில் எப்போ குதிக்கப்போறீங்க..

கார்த்தி சொன்னது…

அதற்கான எண்ணமோ தருணமோ தற்போது இல்லை.
எதிர்காலத்தில் ஒழுங்கான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அரசியல் பிரவேசம்...

வந்தியத்தேவன் சொன்னது…

இன்னொரு கமல் ரசிகர். உங்கடை கதை நல்லாயிருக்கு. நிறைய பொதுப் பிரச்சனைகள் எழுதியிருக்கின்றீர்கள், பாராட்டுகள்.

கார்த்தி சொன்னது…

அபர்ணா உங்களது மின்அஞ்சலுக்கு மிக்க நன்றி! சில பிழைகளை சுட்டிக்காட்டிருந்தீர்கள். ஆதரவுக்கு நன்றிகள்.

ஆம் வந்தி அண்ணா! நான் ஒரு கமல் ரசிகன்தான்...
கமல் ஒரு யதார்தவாதி! இவரது படங்களில் மிகப்பிடித்தது அன்பேசிவம்!
நாயகன் படத்தை பார்த்து மெய்சிலிர்த்ததுண்டு. பஞ்சதந்திரம் நகைச்சுவை படங்களில் எனக்கு பிடித்த முதல்படம்.

நன்றிகள். தொடர்ந்து பொது பிரச்சனைகளை எழுத முயல்கிறேன்

Colonel சொன்னது…

//எனக்கு அந்த வயதில், பெரியாளா வந்தவுடன் நல்ல ஒரு கட்சியில் சேர்ந்து என்னால் இயன்றதை மக்களுக்கு செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஆசை இருந்தது.//

I welcome your intention.

There are plenty of ways/fields to contribute to well being of community and humanity in whole.

Also,

We shouldn't wait to become a powerful person to do good things - Kamal in Anbe Sivam.

If you are one of the best economist / engineer / scientist / Doctor etc you will be able to contribute significantly to the community with your service motive powered by expertise.


Politics is a sewerage.

Sri Lankan Politics is specially a Faecal sewerage (Currently). And it will take at least another 2/3 decades to become a purified one.

Dr.Manmohan Singh and Dr.Abdhul kalam did much to the development of India than whoever the family politicians did in Indian / Tamil Nadu history.

There are thousands of unnamed Experts in India who are the back bones of Indian development though we are unaware of them.

Your interest to contribute to the well being of people is very good, but you should select the proper path achieve that target based on your expertise.

Once you do this at the later part of your life the political parties, people and Time will call for your service.

யாழினி சொன்னது…

நான் முதலில் அன்பே சிவம் பார்க்கும் போது என்னடா இது அலட்டல் கதை என்றிருந்தது. ஆனால் ஒரு முறை சக்தியில் ஒளி பரப்பிய போது பார்த்த வேளை அடடா என்னவொரு அற்புதமான கதை எனத் தோன்றியது. இன்று வரை நான் அன்பே சிவம் கதையை நினைத்து சிலாகித்திருக்கிறேன். ஆனால் அப் படம் உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதென்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கின்றது! வாழ்த்துக்கள் கார்த்தி!

கார்த்தி சொன்னது…

Thx Colonel for your very Big comment.
I read each an every line.

// Your interest to contribute to the well being of people is very good, but you should select the proper path achieve that target based on your expertise.

You indicated the correct point. Gradually I realized these things with my experiences. Whether you are in politics or not, we should help &serve the people first.

கார்த்தி சொன்னது…

நன்றி யாழினி. எனினும் இந்த தரமான படம் வியாபாரரீதியில் தோல்வியடைந்தது. காரணம் ஏனோ தெரியவில்லை.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்