என்னதான் நடக்குது A9 றோட்டில்?
நாளைக்கு நாளைக்கு எண்டு சொல்லி ஒரு மாதிரி பாதையையும் திறந்தாச்சு எண்டு பார்த்தா அங்க என்னதான் நடக்குதெண்டு ஒண்டுமே சரியா புரியவில்லையே? அதால பயணத்தை போக விரும்பும் ஒருவருக்கு அது சம்பந்தமாக ஒரு விடயமும் தெரியாது இருக்கிறது. எப்பிடி போகலாம்? யாரும் போகலாமா? என்ன செய்யவேணும்? இது தொடர்பான பல குழப்பங்கள் இவை. இன்னும் ஒன்றுக்கும் சரியாக விடை தெரிந்த பாடில்லை.
ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு கதை. இது தொடர்பாக குழப்பத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளான இருவர் பேசிக்கொண்டபோது கேட்ட நான் அதை இங்கு தருகின்றேன். உங்களுக்கு பிரயோசனமாயிருக்கலாம். எனது சுகத்திற்காக 1, 2 என்று அவர்களை குறிக்கின்றேன்.
1: அடேய் பாதை திறந்திட்டாங்களாமே?
2: ஓமடா இந்த வருச தொடக்கத்திலிருந்து துறக்க தொடங்கி கடைசியா ஒருமாதிரி உண்மையா திறந்தே விட்டிட்டாங்கள்!
2: ஓமடா இந்த வருச தொடக்கத்திலிருந்து துறக்க தொடங்கி கடைசியா ஒருமாதிரி உண்மையா திறந்தே விட்டிட்டாங்கள்!
1: அவங்கள் விடுற பஸ்ஸிலதானே போகலாமாம் உண்மையா? சொகுசு பஸ் எல்லாம் ஓடப்போறதா கதை விட்டாங்களே? என்ன நடந்தது?
2: ஓமோம் நானும் கேள்விப்பட்டனான். 5 பஸ்தான் ஓடுது. இன்னும் சொகுசு பஸ் ஓடேல. இன்னும் கொஞ்ச நாளில வாத்து அமைச்சரின்ர தயவில ஓடப்போறதா கேள்வி. அதோட கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு எண்டு இன்னும் நேரடி சேவை இல்லை. கொழும்பில் இருந்து போறாக்கள் வவுனியா போய்தான் என்னவும் செய்யோணும். யாழ்ப்பாணத்தில இருந்து வெளிக்கிடுற பஸ் மதாவாச்சியோட நிக்குமாம். பிறகு மதாவாச்சியில இருந்து கொழும்பு போறதுக்கு வேற பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்படுதாம். அந்த வந்த பஸ்தான் வவுனியால இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆக்களை கூட்டி கொண்டு போகுமாம்.

1: எவ்வளவு காசு வேண்டுறாங்கள்?
2: வவுனியா – யாழ் 195/= யாழ் – கொழும்பு 425/= காசென்னவோ ரொம்ப சீப்தான்
1: சும்மா எல்லோரும் போகேலாதாம்? என்னவோ பழைய ரிக்கெட் தேவையாமே? அதைப்பற்றி தெரியுமாடா?
2: கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போக இந்த வருச யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த பிளேனோ கப்பல் ரிக்கெட் தேவையாம். அப்பிடி போனாலும் திரும்பி வர VISA, sorry Clearance எடுக்கோணுமெண்டு கதைக்கிறாங்கள். இதுக்கு வேற வழி இருக்கோ தெரியவில்லை.

1: ஓ அப்பிடிதான் கதை வருது. ஆனால் நேற்று போனாக்களுக்கு டோகின்(Token) கொடுக்கப்பட்டிருக்கிறது. அவங்களுக்கு Clearance தேவையில்லையாம். இதெல்லாம் வாய் வழி கதைதான் எது உண்மை எது பொய் என்று ஒண்ணுமே தெரியல. தலையே சுத்துது. பேசாம பாதையே திறக்காம இருந்திருக்கலாம் போல கிடக்கிது. EXPOவோடயே குப்பை கொட்டியிருக்கலாம்.
2: கொழும்பில இருந்து போகோணும் எண்டா எப்பவும் போலாமா? இல்லாட்டி முதலேயே book பண்ண வேணுமா?
2: கொழும்பில இருந்து போகோணும் எண்டா எப்பவும் போலாமா? இல்லாட்டி முதலேயே book பண்ண வேணுமா?
1: நான் அறிஞ்சவரை வவுனியா போய், உன்னட்ட தேவையான document எல்லாம் இருந்து பஸ்ஸில் ஆக்கள் கூட(crowd) இல்லாட்டி பிரச்சனை இல்லை. அண்டைக்கே போகலாம் இல்லாட்டி book பண்ணி அடுத்த நாள்தான் போகோணும். அதுக்கும் உரிய போற ஆள்தான் தேவை.
2: அப்ப பாதையால போறதெண்டாலும் சும்மா லேசுப்பட்ட விசயம் இல்லை எண்டு சொல்லு!! பாப்பம் பாத்து விசாரிச்சு போவம். இல்லாட்டி இங்கேயே இருந்து படிச்சு முன்னேறுவம்.
2: அப்ப பாதையால போறதெண்டாலும் சும்மா லேசுப்பட்ட விசயம் இல்லை எண்டு சொல்லு!! பாப்பம் பாத்து விசாரிச்சு போவம். இல்லாட்டி இங்கேயே இருந்து படிச்சு முன்னேறுவம்.
இதுதான் அந்த சம்பாஷணையின் தேவையான பகுதி. இவர்கள் தங்களுக்குள் கதைத்து கொண்டது மிக அண்மையில் அறிந்த தகவல்களை கொண்டாகும் பெரும்பாலும் அனைத்து தகவல்களும் சரியானது. சில சிறிய திருத்தங்கள் இருக்க கூடும். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் மாறகூடும். ஆனால் காலத்தின் தேவை கருதி உடனேயே பதிவிடுகிறேன்.
சும்மா செய்திகளை மட்டும் பார்த்திட்டு போறாக்களுக்கு A9 திறந்த பின் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்த மாதிரியே ஒரு தோற்றப்பாடு தோன்றலாம். (தமிழர்களுக்கு கூடி). இதில பயனையட முயலுபவர்களுக்குதான் எல்லா சிக்கலும், பிரச்சனையும் தெரியும்.
ஒரே நாட்டிலிருக்கிற சொந்த வீட்டுக்கு போக அதே நாட்டிலிருக்கிற தமிழ்மக்கள் படும்பாடு இது. பயங்கரவாதம்தான் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதே! இனியாவது ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பீர்களா? எங்கே வடக்கின் வசந்தம்?
வசந்தம் வெறுமனே சாமான் கொண்டு A9ல் செல்லும் லொறிகளின் பதாகைகளில் மட்டுமா?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
2 comments:
ஆமாம் கார்த்தி உண்மையிலேயே இது வேதனையான விடயம் ஒரு நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு யாழ்ப்பாணத்துக்கு போறதென்டால் உள்ள பயணப் பிரச்சனை என்றால் சொல்லிமாளாது இதை விட இலகுவாக வெளிநாடு போய் வந்து விடலாம் போல் இருக்கும்.
என்ன செய்வது யாழினி தமிழர்களாக பிறந்து விட்டோமே??? அனுபவித்துதான் ஆக வேண்டும்.
கருத்துரையிடுக