ExpoAirன் யாழ்-கொழும்பு விமான சேவையும் கடுப்பாகியுள்ள மக்களும்
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இருந்த ஒரே தரைவழிப்பாதையான A9 பாதை மூடப்பட்ட பின்னர் மக்களிடையே கடல்மார்க்க ஆகாய மார்க்க பயணங்கள் தவிர்க்க முடியாமல் போனது. கடல் வழிப்பயணத்தில் முழுமையாக 2 நாட்கள் வீணடிக்கப்படுவதாலும் (திருமலை சென்றே கப்பல் எடுக்கவேண்டும் என்பதால்) மிகவும் கடினமான பிரயாணம் என்பதாலும் பலரும் (இளைஞர்கள் உட்பட) விமான பயணத்தையே நாடுகின்றனர். எது எவ்வாறாயினும் ஒரு வழி கப்பல் பயணத்திற்கு சேவையை நடாத்தும் Green Ocean நிறுவனம் அறவிடும் தொகை 3250/=.
இதே போல் விமானசேவையை இரண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.
1.ExpoAir
2.AeroLanka
AeroLanka விமானசேவையை பொறுத்தவரை 2 கிழமைகள் விமானசேவையை வழங்கினார்கள் எனின் 2 மாதத்திற்கு நன்றாக ஓய்வெடுத்துகொள்வார்கள். என்ன பிரச்சனையோ தெரியாது? அந்த அளவு ஒழுங்கான விமானசேவை. தற்போது அந்த விமானசேவை ஒழுங்காக நடைபெறுகிறதோ அல்லது முழுவதுமாக நடைபெறுவது இல்லையோ என்பது எனக்கு தெரியாது. அதனால் பெரும்பாலானோர் ExpoAir விமான சேவையையே தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே யாழ் கொழும்பு விமான சேவையில் இவர்கள்தான் தனிக்காட்டு ராஜாக்கள். இதனாலேயே என்னவோ இவர்கள் காட்டும் கூத்துக்கள் ஏராளம்.
இதுதான் யாழ் கொழும்பு பயணிகள் விமானவேவையில் ஈடுபடும் ExpoAir விமானம்
ஒரு வழிப்பயணத்திற்கு இவர்கள் அறவிடும் தொகை 10500/=. தொகையை பார்த்து Planne என்னவோ International Rangeற்கு இருக்கும் என நினைச்சா பெரிய ஏமாற்றம். AC வசதிகூட இல்லாத ஒரு தட்டிவான் மாதிரிதான் இருக்கும். இவற்றை எல்லாம் விடுவோம். உண்மையாக இருக்கும் பிரச்சனைகளை பார்ப்போம்.
ஒருக்கா ரிக்கெட்டை எடுக்கோணும் எண்டா உடனே போய் நினைச்ச நாளுக்கு பெறமுடியாது. (எங்களுக்கு தேவையான நாள் அவர்களிடம் காலியாக இருந்தாலும் கூட). எப்படியும் குறைந்தது 2 கிழமைக்கு முதலேபோய் book செய்து அவர்கள் கூறும் நாள் சென்று பணம் கொடுத்து ரிக்கெட் எடுக்க வேண்டும். எப்படியும் ஒருவர் முதல் கேட்கும் நாள் அவர்களிடம் காலியாக இருந்தாலும் எல்லாம் book ஆகிவிட்டது என்றே சொல்வார்கள். ஏனென்றால் இந்த ரிக்கெட்களை பதுக்கி வைத்தால் அவசரமாக ரிக்கெட் தேவைப்படுவோருக்கு double மடங்கு விலையில் Blackல விற்கலாமல்லவா. என்ன தந்திரம். இதற்கு அங்கு பணிபுரிவோர் பு}ரண உடந்தை. எதாவது அவசரம் என்று அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு கொடுத்தாலும் எடுக்க மாட்டார்கள்.
இதாவது பறுவாயில்லை. அவர்களது அலுவலகத்தில் பணிபுரிவோர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அனைவரும் சொக்க தங்கங்கள். வாடிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கூறமாட்டார்கள். (ஊமைகளைதான் வேலைக்கு எடுக்கிறார்களோ தெரியவில்லை). எப்பவாவது பதில் சொன்னால்கூட முகத்தை பார்த்து சொல்லமாட்டார்கள். கணணியில் ஏதையோ நோண்டியபடி வேண்டா வெறுப்பாக ஏதாவது உளறுவார்கள். பெரிய அமைச்சர்கள் என்ற நினைப்போ தெரியவில்லை!
ரிக்கெட் எடுக்க செல்லும்முன் செல்வோர் தங்களது சகிப்புதன்மையை சோதித்து விட்டே செல்லவேண்டும். இல்லாட்டி அவங்களோடு Gameஐ கேட்டுவிட்டு வரவேண்டியதுதான். எனக்கு தெரிந்தவரையிலே பலர் அவர்களுடன் முறுகி ரிக்கெட் எடுக்காது வந்த சந்தர்பங்கள் உண்டு. Booking செய்த ரிக்கெட்டயும் எடுக்க அவர்கள் சொல்லும் நேரத்துக்கு சரியாக போக வேண்டும். கொஞ்சம் பிந்தி போனலும் ரிக்கெட் காலிதான்.ஒருவாறு ரிக்கெட் எடுத்து பிரயாணம் செய்ய போனாலும் அங்கு பணிபுரிவோர் மக்களை நடத்துவது நாய்களை நடத்துவது போலதான். எங்களை போல் தடிமாடு இளைஞர்களை என்ன சொன்னாலும் பிரச்சனை இல்லை. வயதுக்கு வந்த முதியவர்களையும் மரியாதை இல்லாது வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள்.
இவ்வளவு காசுதான் வாங்குகிறார்களே பயணிப்போர் கொண்டுவரும் பிரயாண பொதிகளையும் பொருட்களையும் ஒழுங்காக அதே விமானத்தில் கொண்டுவந்து சேர்ப்பார்களோ என்றால் அது ஐயம்தான். ஒருவாறு கஷ்டப்பட்டு வந்துசெர்ந்து எங்களது பொதிகளை தேடினால் அவற்றை காணகிடைக்காது. கேட்டால் Load கூடிவிட்டது நாளைய Planeல் வரும் என்பார்கள். அந்த பொதிகளை பெற ஒவ்வொரு நாளும் அவர்களது அலுவலகத்திற்கு வரும்வரை (அடுத்த நாளும் வரும் என்று உறுதி இல்லை) அலைந்து திரியவேண்டும். உடனடியாக தேவையான பொருட்கள் எனின் அவர்கள் பாடு அதேகதிதான். கொண்டுவரும் பொதிகளைகூடி அவரவர்களிடம் ஒழுங்காக சேர்க்க மாட்டார்கள். குப்பைகளோடு குப்பைகள் போல் சேர்த்து கொட்டுவார்கள். ஒவ்வொருவரும் தங்களுடையதை தேடிப்பெற வேண்டியதுதான். யாராவது மாறி வேறையாருடையதை கொண்டு போனாலும் கேள்வி இல்லை.
இவ்வாறு பல பிரச்சனைகளை ExpoAir விமானசேவையை பயன்படுத்துவோர் அனுபவிக்கின்றனர். பலமுறை நானும் இவர்களது சேவையை பயன்படுத்தியவன் எனறவகையில் நான் எனது மனதில் கேட்கும் கேள்விகள் இவைதான்.
- காசில்லாமல் இலவசமாகவோ சேவையை நடத்துகின்றனர். எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் நடக்கலாம்தானே?
- காசுதான் இவ்வளவு வேண்டுகிறார்களே ஒழுங்காகவும் பொறுப்பாகவும் சேவையை நடத்தினால் என்ன?
- எங்கேயாவது கொஞ்சம் பிழை என்றால் பொங்கி எழும் மக்கள் கூட்டம் இவர்கள் விடயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்?
யாராவது அவர்களுக்கு பாடம்புகட்ட ஆக்கள் சேர்த்தா சொல்லுங்கோ. நானும் முகமூடி போட்டுக்கொண்டு பின்னால வாறன்.
மனதில் சொல்லிகொள்வதெல்லாம் இதுதான்: இன்னும் கொஞ்ச நாளில் உலகநாயகன் பாதையை திறந்து விடுவாராம். அதன்பிறகு உங்கள்பாடு சிங்குசாதான்!!!!!!
பி.கு: நான் இங்கே சொன்ன பெரும்பாலான விடயங்கள் கொழும்பில் உள்ள ExpoAir அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு 100%மும் யாழில் வேலைசெய்வோருக்கு 90%மும் பொருந்தும்.
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
36 comments:
Call charges comparison between Sri Lanka’s Mobile service providers
The comprehensive comparison of Sri Lanka’s Mobile service providers Dialog GSM, Mobitel GSM and New born AirTel GSM.
இதற்க்கு நான் கருதுரையிடாவிட்டால் யாரிடுவது?
அதிகம் பாதிக்கப்பட்ட நபர் நான்.
wedding இக்கு போனேன் போகும் போது
wedding இல் கொடுப்பதர்க்கு sweets வாங்கிபோனேன்.
என்னுடன் என் வரும்கால் அண்ணியும் வந்தார்.
அங்கு போய் பார்த்தால், sweets parcel, எனது பயணப்பொதி வரவில்லை. கேட்டால்!
பதில்??????
நல்ல காலம்
1.நான் wedding இற்க்கு 5 நாள் முன்னாடி சென்றது!
2.அண்ணியின் பயணப்பொதி miss ஆகாதது!
கடைசியில் weddingமுதல் நாள்தான் sweets கிடைத்தது.
இன்னொன்று
என் அம்மம்மா சுகவீனத்தால் அவதிப்பட்டு இருந்தார்.
அம்மா பார்க்கவேண்டும் போக ticket கேட்டால், ticket 2 weeks இற்க்கு இல்லை!!
கடைசியில் ஒருமாதிரி எமக்கு தெரிந்த பெரியவர் ஒருவரின் உதவியுடன் ticket எடுத்தோம்.
அம்மாவை wellawaate இல் வழியனுப்ப சென்று நின்றிருந்தேன்.
ஒரு call,
அண்ணா வெளி நாட்டிலிருந்து!
“அம்மம்மா நேற்று இரவே போயிற்றாவாம், அம்மாவுக்கு சொல்லாதே”!!!!
கடிசியில் இறுதி கிரியையிலேயே பங்குபற்ற முடிந்தது!
அன்பர்களே வீணா expo air உடன் மோதி உங்கள் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திற்க்கு போகமுடியாமல் ஆகிவிடாதீர்கள்!!!
ஆனால் இருக்கடி ஒரு நாளைக்கு உங்கள் எல்லோருக்கும்!!!!!!!!!!!!!!
எக்ஸ்போ மேனேஜர் மிகவும் சுறுசுறுப்பான கிழட்டு லூசன் .....மேனேஜர் வேலை எண்டால் என்ன ???????????
secrurity gurd சாடிக்கு என்ற மூடி .............
ஒருத்தி இருகிறாள் அவ்வாளுக்கு உல்லக அல்லகே எண்டு நீனபு வேற .............
ஒருநாள் இருக்கு எல்லோருக்கும்
ஹிந்து லேடீஸ் காலேஜ் (2004 A/L) படிச்ச பொன்னு வொர்க் பனுது அதுக்கு லண்டன்னிலை படிச்சாதெண்டு நினைப்பு
50 வயது கிழவி வொர்க் பண்ணுது , அதுக்கு மிஸ் KENYA நினைப்பு
அங்க வேலை செய்யிற எல்லாருக்கும் Collector உத்தியோகம் எண்ட நினைப்பு.பாதை திறக்கட்டும்;கொஞ்சநாள் ஈ ஓட்டுவினம்;பிறகு எல்லாருக்கும் Ticket குடுத்து வீட்டை அனுப்பிவிடுவான் Expo காரன்.
அங்க ஒரு 30-35 வயது மதிக்கத்தக்க பொம்பிள எருமை ஒண்டு வேலை செய்யிது.மூஞ்சில makeupஅப்பிக்கொண்டு லிப்ப்டிக்க ஒவரா போட்டுக்கொண்டு இருக்கும் பிசாசு மாதிரி.அதுக்கு வாய்க்கொழுப்பு கூட.அதுக்கு மூஞ்சில சாணியால அடிக்கோணும்
@ LANKA INFO
You are very warmly welcome to my Blog.
Thanks for your information about Mobile Service Providers.
Pls continue reading!!!!
@ சுதந்திரி
தொடர்ச்சியாக வருவதுக்கும் கருத்துக்களை இடுவதுக்கும் நன்றி நண்பரே...
உமது வலைத்தளத்தையும் சீக்கிரம் புதுப்பொலிவுடன புது ஆக்கங்களுடனும் எதிர்பார்க்கின்றோம்.
//கடைசியில் weddingமுதல் நாள்தான் sweets கிடைத்தது.
அதாவது கிடைச்சதே அதையிட்டு சந்தோசப்படோணும்.
கனக்க பேருக்கு எல்லாம் திரும்பி கிடைப்பதில்லை!!!
// என்னுடன் என் வரும்கால் அண்ணியும் வந்தார்.
அதுசரி அண்ணியை பற்றி எங்களுக்கு ஒண்டும் சொல்லவில்லையே. ஏன்????
@ சுதந்திரி
// அண்ணா வெளி நாட்டிலிருந்து!
“அம்மம்மா நேற்று இரவே போயிற்றாவாம், அம்மாவுக்கு சொல்லாதே”!!!!
கடிசியில் இறுதி கிரியையிலேயே பங்குபற்ற முடிந்தது!
நெஞ்சை உருக்கும் நிகழ்வு!!!!
உணர்வுகளிற்கு கூடி முக்கியத்துவம் கொடுக்க தெரியாத எருமைகள் அவர்கள்.
இதெல்லாம் அவர்களுக்கு உறைக்காது. பட்டுப்பார்த்தால் தான் தெரியும் வலி.
//ஆனால் இருக்கடி ஒரு நாளைக்கு உங்கள் எல்லோருக்கும்!!!!!!!!!!!!!!
அதுதானே பாதையை எங்கட Universal Hero திறந்திடுவாராமே அதுக்கு பிறகு அண்ணாமார் கப்சிப் என்று கிடக்க வேண்டியதுதான்!!!!!
@ பெயரில்லா
//எக்ஸ்போ மேனேஜர் கிழட்டு லூசன்
secrurity gurd சாடிக்கு என்ற மூடி
ஒருத்தி இருகிறாள் அவ்வாளுக்கு உல்லக அல்லகே எண்டு நீனபு வேற
தயவுசெய்து பெயரை போடவும்.
அங்க இருக்கிறது எல்லாம் ஒருமாதிரி கழண்டதுகள்தான்.
நீங்கள் கூறிய உவமானங்கள் மிகவும் சரி. தமிழிலே டைப் செய்யும்போது எழுத்துப்பிழை வருவதை கவனிக்கவும்.
@TICKET எடுத்து நொந்து நூடில்ஸ் ஆனவன்
// ஹிந்து லேடீஸ் காலேஜ் (2004 A/L) படிச்ச பொன்னு வொர்க் பனுது
பாருங்கோ எங்கட ஆக்கள் இதிலே எல்லாம் நல்ல விபரமான ஆக்கள்.
வேலை செய்யிற பிள்ளையின்ர Detailஐ கூட தேடிப்பிடிச்சு சொல்லுறாங்க....
@ உலக அழகன்
// 50 வயது கிழவி வொர்க் பண்ணுது , அதுக்கு மிஸ் KENYA நினைப்பு
சபாஷ் சரியான வர்ணனை!!!
@ kala
//அங்க வேலை செய்யிற எல்லாருக்கும் Collector உத்தியோகம் எண்ட நினைப்பு.பாதை திறக்கட்டும்;கொஞ்சநாள் ஈ ஓட்டுவினம்;பிறகு எல்லாருக்கும் Ticket குடுத்து வீட்டை அனுப்பிவிடுவான் Expo காரன்.
நல்ல வடிவாக சொல்லியிருக்காரு கலா.
இதுதான் நடக்க போற உண்மை!
@ ruban
//மூஞ்சில makeupஅப்பிக்கொண்டு லிப்ப்டிக்க ஒவரா போட்டுக்கொண்டு இருக்கும் பிசாசு மாதிரி.அதுக்கு வாய்க்கொழுப்பு கூட.அதுக்கு மூஞ்சில சாணியால அடிக்கோணும்
என்னண்டு ரூபன் உங்களால மட்டும் இப்படி முடியுது.
என்னுடைய Feelingsதான் உங்களுக்கும்.
எனக்கும் அந்த சனியனை கண்டா இப்பிடி ஏதாவது செய்ய வேண்டுமென்றுதான் தோணுது!
// இன்னும் கொஞ்ச நாளில் உலகநாயகன் பாதையை திறந்து விடுவாராம். அதன்பிறகு உங்கள்பாடு சிங்குசாதான்.
உலகநாயகருக்கு ExpoAirஇன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி போவதகாவும் கேள்வி.. பார்ப்போம்.. !
எங்களின் பணத்தில் ஏப்பம் விடும்கூட்டம் அது.. தமிழர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் பயணப்படத் தயாராக இருப்பர்கள் என அவர்களுக்கு நன்கு தெரியும்.
//எங்கேயாவது கொஞ்சம் பிழை என்றால் பொங்கி எழும் மக்கள் கூட்டம் இவர்கள் விடயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்..
பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் இங்கே பிரச்சனை...
//@ கார்த்தி
அதுசரி அண்ணியை பற்றி எங்களுக்கு ஒண்டும் சொல்லவில்லையே. ...
இருக்கின்ற பிரச்சனைகளை மறந்து மற்றவங்கங்கட விடையத்தில மூக்க நுளைக்கின்றது தான் தமிழரின் குணம்... நீங்களும் அதுக்கு விதிவிலக்கில்லைப் போலக்கிடக்குது...
கார்த்திகன், உங்களுடைய பதிவில் எக்ஸ்போ வை சாடியிருந்தீர்கள். ஆனால் சில கசப்பான் உண்மைகளும்
இருக்கத்தான் செய்கின்றன.
1.உண்மையில் நீங்கள் கொடுக்கும் 10500 ரூபாவில் ஏறத்தாள 6000 ரூபா அரச வரியாகத்தான்
செல்கிறது.(டிக்கட்டை பார்க்கவும்).
2.வெளி நாட்டு விமான சேவைகளுக்கு வேறு ”அழுத்தங்கள்” இல்லை.இங்கு ”இரு” பக்கமும் அடி.
3.விமான சேவையின் நேர, நாள்த் தாமதங்கள் வேண்டுமென்றே மேலிடங்களால் ஏற்படுத்தப்படுகின்றன.(”திட்டமிட்டு” செயற்படுவதை தடுக்க.)
4.ரிக்கட் கவுண்டரில் இருப்போர் சாதாரண சம்பளம்(15000) எடுத்துக் கொண்டு 6,6 1/2 நாள் 9,10 மணித்தியாலம் வேலை செய்வோர்.(போடுகிற உடுப்புக்கே காணாது.)
5.லஞ்சம் வாங்குவோர் எங்கு தான் இல்லை?
6.இவ்வளவு கேள்வி இருந்தும் ஏன் இன்னும் பலபேர் விமான சேவையை வழங்க முன்வரவில்லை? ஏதோ வில்லங்கம் இருப்பதால் தானே?
7.ஆக கஷ்டப் பட்டு ரிஸ்க் எடுத்து செய்யிறவன் அதற்கேற்ற லாபத்தையும் எதிர்பார்ப்பான் தானே?(எக்ஸ்போ ஒரு அரச நிருவனம் அல்லவே?)
சிந்திக்க.............
@ சுபானு
//உலகநாயகருக்கு ExpoAirஇன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி போவதகாவும் கேள்வி
நானும் இதை முதலேயே கேள்விப்பட்டிருந்தேன். நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்கள்.நன்றி
தமிழர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் பயணப்படத் தயாராக இருப்பர்கள் என அவர்களுக்கு நன்கு தெரியும்.
மிகவும் சரி தமிழாக்களிட்ட நல்ல காசு புளங்குது எண்டு நல்ல எல்லோரும் தெரிஞ்சு வைச்சிருக்கினம்.பாதை திறந்த பிறகு இவயின்ர காசு அரை வாசியா குறையாட்டி பாருங்கோ. வேணுமெண்டு காசைகூட கறக்கினம்!!
@ சுபானு
//பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் இங்கே பிரச்சனை...
கட்டுறதுக்கும் ஆக்கள் இருக்காம் மணியைதான் காணேலயாம்.
//இருக்கின்ற பிரச்சனைகளை மறந்து மற்றவங்கங்கட விடையத்தில மூக்க நுளைக்கின்றது தான் தமிழரின் குணம்.. நீங்களும் அதுக்கு விதிவிலக்கில்லைப் போலக்கிடக்குது...
கப்பில ஊரில நடக்கிற விசயத்தையும் அறிய பாத்தன். விடுறீங்கள் இல்லை.
நானும் ஒரு மடத்தமிழன்தானே!!
@ மாற்றுக்கருத்து மாடசாமி.
முதலில் உங்கள் வருகைக்கு நன்றி.
உங்களை போல் மாற்றுக்கருத்துடையவர்களை எப்போதும் மதிக்கின்றேன். வெறுமென எல்லாத்துக்கும் ஆமாப்போட்டுக் கொண்டிருப்பதைவிட உங்களை போல் இருப்பவர்களை தான் நான் உற்று நோக்குகின்றேன்.
உங்கள் கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து கொள்வோம்.
1.உண்மையில் நீங்கள் கொடுக்கும் 10500 ரூபாவில் ஏறத்தாள 6000 ரூபா அரச வரியாகத்தான்
செல்கிறது.(டிக்கட்டை பார்க்கவும்).
நான் என்னிடம் தற்போது கைவசம் உள்ள இரு ரிக்கெட்டுகளை எடுத்து checkபண்ணினேன்.
அதன்படி தற்போது TAXஆக 4675/=தான் எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 6000/=இல்லை.
முன்பு 4125/=அறவிட்டிருந்தனர். தற்போது கூடிவிட்டது. எனினும் இத்தகவல்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்கு தெரியாது.
எனினும் பாதை ஒன்று திறந்தபின்பும் இவ்வளவு தொகையைதான் விமான கட்டணமாக எடுப்பார்கள் எனின் உண்மையாக அவர்களுக்கு செலவு இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். மாறி குறைப்பார்கள் எனின் இப்போது நியாயமில்லாதுதான் இவ்வளவு காசு எடுக்கிறார்கள் என்பது புலனாகும்.
மேலும் இப்பதிவில் அவர்கள் எடுக்கும் காசைப்பற்றி நான் கூடுதலாக குறை கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.
@ மாற்றுக்கருத்து மாடசாமி.
2.வெளி நாட்டு விமான சேவைகளுக்கு வேறு ”அழுத்தங்கள்” இல்லை.இங்கு ”இரு” பக்கமும் அடி.
3.விமான சேவையின் நேர, நாள்த் தாமதங்கள் வேண்டுமென்றே மேலிடங்களால் ஏற்படுத்தப்படுகின்றன.(”திட்டமிட்டு” செயற்படுவதை தடுக்க.)
இது ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்துதான்
4.ரிக்கட் கவுண்டரில் இருப்போர் சாதாரண சம்பளம்(15000) எடுத்துக் கொண்டு 6,6 1/2 நாள் 9,10 மணித்தியாலம் வேலை செய்வோர்.(போடுகிற உடுப்புக்கே காணாது.)
இதெல்லாம் அவர்களின் பிரச்சனை. நாங்களா சொன்னோம் இந்த வேலையை பார்க்க சொல்லி. அவர்களுக்கு சம்பளம் காணாது எனின் வேறுவேலையை பாக்க வேண்டியதுதானே. (திறமை இருந்தால்). சம்பளம் எல்லாம் கேட்டுதானே வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். இவர்களது பிரச்சனையை அப்பாவி மக்களிடம் காட்டவேண்டிய தேவை இல்லை. யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை.
@ மாற்றுக்கருத்து மாடசாமி.
5.லஞ்சம் வாங்குவோர் எங்கு தான் இல்லை?
இது மிகவும் அபத்தமான கருத்து. எனக்கு தெரிந்தவரை அரசாங்க பதவிகளில் உள்ளோர்களே பெரும்பாலும் கூடுதலாக லஞசம் வாங்குகின்றனர். பெரும்பாலான தனியார் துறைகள் லஞ்சம் இல்லாது ஒழுங்காகத்தான் இயங்குகிறது. மேலிடத்தில் உள்ளவர்கள் கேள்விப்பட்டால வேலையால் தூக்கி விடுவார்கள் என்று பயந்தோ தெரியவில்லை.
6.இவ்வளவு கேள்வி இருந்தும் ஏன் இன்னும் பலபேர் விமான சேவையை வழங்க முன்வரவில்லை? ஏதோ வில்லங்கம் இருப்பதால் தானே?
கஷ்டமும் வில்லங்கமும் இருக்கலாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒரு சேவையை வழங்கமுன் வந்த பின் ஒழுங்காக செய்வதுதானே முறை. அதைவிடுத்து சாடடுக்கள் கூறுவது முறை இல்லை.
7.ஆக கஷ்டப் பட்டு ரிஸ்க் எடுத்து செய்யிறவன் அதற்கேற்ற லாபத்தையும் எதிர்பார்ப்பான் தானே?(எக்ஸ்போ ஒரு அரச நிருவனம் அல்லவே?)
லாபத்தை எடுக்கட்டுமே யார்வேண்டாமென்று சொன்னது. லாபம் எடுக்கேக்க அதை வழங்கும் வாடக்கையாளர்களை மறந்தால் எப்படி?
நீங்கள் வேறு தனியார் நிறுவனங்களை பார்த்தது இல்லையா?
அவர்கள் வெற்றிகரமாக இயங்குவதோடு வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பணிவாகவும் மரியாதையாகவும் நடக்கிறார்கள். அதனால் அவர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுகின்றனா.
உதாரணமாக தனியார் வங்கிகள், Dialogபோன்றவற்றை குறிப்பிடலாம்.
எது எவ்வாறு இருப்பினும் மீண்டு்ம் வந்ததுக்கும் கருத்து இட்டதுக்கும் மாற்றுக்கருத்து மாடசாமி அவர்களுக்கு நன்றி
நீங்கள் சொல்ல வந்ததில் உண்மை இல்லாமலும் இல்லை என்பது நான் கண்ட அனுபவம். ஆனால், பின்னூட்டல்களாக இடப்பட்ட சில கருத்துக்கள் கோபங்களின் உச்சத்தில் தெறிக்கப்பட்டதாக இருந்தாலும், நாகரிகமிக்கதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
@கார்த்தி,
//வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பணிவாகவும் மரியாதையாகவும் நடக்கிறார்கள். அதனால் அவர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுகின்றனா.
உதாரணமாக தனியார் வங்கிகள், Dialog போன்றவற்றை குறிப்பிடலாம்.
இப்பட்டியலில் டயலொக் நிறுவனத்தை இணைத்தது கேலிக்கிடமானது என்பதை டயலொக் பாவனையாளராக இருந்தவண்ணம் கூறுகின்றேன்.
டிசம்பர் முதலாம் திகதி அவர்களின் சேவையொன்று தொடர்பாக என்னால் செய்யப்பட்ட முறைப்பாடு இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.
எனது கருத்துக்கு மதிப்பளித்ததற்கு நன்றி..
மேலும்..
1.நான் தோராயமாகத் தான் வரியைக் குறிப்பிட்டேன். அதன் அளவு பெரிது என்பதே எனது கருத்து.இப்படி வரியை வெளி நாட்டு விமானங்களுக்கும் விதித்தால் அவை எவ்வாறு 12500/=(தோராயமாக) க்கு சென்னை கொழும்பு இருவழி வழங்க முடியும்? ஆக இது அரசின் வரி அமைப்பு கோளாருபோல் தெரிகிறது.
2.டயலொக்,எயார்டெல் போல இது ஒரு செல்வம் கொழிக்கும் இடமல்ல. ஒரு பழைய விமானத்தை வைத்து குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள்.தனியார் பஸ் சேவை போன்றவற்றுடன் ஒப்பிடவும்.
3.1995க்கு முன் கொக்கோ-கோலாப் போத்தலில் ஒயிலை விட்டுக் கடத்தியந்து யாழ்ப்பாணத்தில அறா விலைக்கு விற்றார்கள். ஒண்டும் செய்ய ஏலாது, அவங்கள் இல்லையெண்டால் அதுவும் இல்லை.அது போலவே இங்கும். அதே விலைக்கு தான் பாதை திறந்தாம் பிறகும் விப்பாங்களோ எண்டு கேக்கலாமா?
4.ஒரு வேலைக்கு வர முந்தி அதோட கஷ்டம் தெரியாது. சேந்தாம் பிறகு விட்டிட்டு எங்கு போறது? சாதாரண மக்களுக்கு வேலை எடுக்கிறது எவ்வளவு கடினம்? சனி, ஞாயிறு வரச் சொன்னாலும் போகத்தான் வேணும்.(கிழமையில 2,3 நாள் வேலை செய்ய சொன்னாலே சிலபேருக்கு அடிக்கோணும் போல ஆத்திரம் வரும்)
5.எல்லா வீதியும் மக்காவை நோக்கிச் செல்லும் எண்டு சொல்றதைப் போல, எல்லாப் பிரச்சினையும் “தமிழர் பிரச்சினை” யை நோக்கித்தான் செல்லும்.
ஆக இந்த மாதிரிப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழி இனப்பிரச்சினைத் தீர்வு தான். அதுக்கு கடவுள் தான் கண் திறக்க வேணும்....
மீண்டும் நன்றி நண்பா...
மாற்றுக்கருத்து மாடசாமி...
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
@ ஆதிரை
என்னுடைய வலைப்பதிவை தொடர்வொரில் நீங்களும் உள்ளது எனக்கு மிகவும் சந்தோசத்தை தருகிறது.
வந்தமைக்கும் கருத்துக்களை பதிந்தமைக்கும் நன்றி அண்ணா!
//பின்னூட்டல்களாக இடப்பட்ட சில கருத்துக்கள் கோபங்களின் உச்சத்தில் தெறிக்கப்பட்டதாக இருந்தாலும், நாகரிகமிக்கதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
பின்னூட்டல் இடுபவர்களால் சற்று கடுமையான வார்த்தை பிரயோகங்கள்தான் பாவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒனறுதான். கருத்திடுபவர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் எனது வலைதளத்தில் இல்லை. அதானால்தான் இப்படியானவை நிகழ்கிறது.
//இப்பட்டியலில் டயலொக் நிறுவனத்தை இணைத்தது கேலிக்கிடமானது என்பதை டயலொக் பாவனையாளராக இருந்தவண்ணம் கூறுகின்றேன்.
அவர்கள் தங்களது அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுடன் பழகும்விதத்தை அடிப்படையாக கொண்டே நான் அதை கூறிஇருந்தேன். Complainகளை அவர்கள் கையாளும் விதம் மோசமானதாக இருக்கலாம். நான் ஏற்றுக்கொள்கிறேன்.
@ மாற்றுக்கருத்து மாடசாமி.
தங்களுடைய உண்மையான பெயரை நான் அறிந்து கொள்ளலாமா?
உங்களது கேள்விகளுக்கு பதில் போட்டே நான் களைத்துப்போய்விட்டேன் நண்பரே.
எனினும் உங்களது கருத்துக்களுக்கு பதில் போடுதல்எனது கடமை.
இது அரசின் வரி அமைப்பு கோளாருபோல் தெரிகிறது.
வரி உண்மையாக கூடுதலாக இருப்பின் தமிழ் மக்களை கூடுதலாக புண்படுத்த போடப்பட்டதாக இருக்கலாம்.
டயலொக்,எயார்டெல் போல இது ஒரு செல்வம் கொழிக்கும் இடமல்ல.
A9 பாதையை பூட்டியதிலிருந்து இவர்கள் மக்களிடம் சுரண்டிய காசு கொஞ்ச நஞசமல்ல இப்போது இவர்கள் செல்வம் கொழிக்கும் நிறுவனமாக மாறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
ஒண்டும் செய்ய ஏலாது, அவங்கள் இல்லையெண்டால் அதுவும் இல்லை.
சரியானதுதான் இவர்கள் இல்லாட்டி இதுவும் இல்லைதான்.
@ மாற்றுக்கருத்து மாடசாமி.
ஒரு வேலைக்கு வர முந்தி அதோட கஷ்டம் தெரியாது. சேந்தாம் பிறகு விட்டிட்டு எங்கு போறது?
வேலைக்கு சேர முதல் Agreement எல்லாம் போட்டுதானே சேருறது. அதில ஒழுங்கா எல்லாத்தையும் கேட்டு அறியாதது யாருடைய பிழை?
ஆக இந்த மாதிரிப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழி இனப்பிரச்சினைத் தீர்வு தான். அதுக்கு கடவுள் தான் கண் திறக்க வேணும்....
100க்கு 100% சரி. இனப்பிரச்சினைத் தீர்வு தான் ஒரே வழிஎல்லா பிரச்சனைக்கும்.
ஆனால் அது வாழ்க்கையில நடக்கும் மாதிரி தெரியல. கடவுள் இருக்கிற மாதிரியும் தெரியல.
எல்லாம் எங்கள் விதி
சிறப்பான பதிவு... அருமையான கருத்துகள்...
அரச வரி இங்கு ஏறத்தாழ 50 வீதம் என்று கேள்விப்படவயிறெரிகிறது... நல்லா சுரண்டுறாங்கள்... நடக்கட்டும் நடக்கட்டும்...
நானும் ஒருக்கா அங்க போய் டிக்கட் எடுக்க வந்த பெட்டையளிட்ட முந்த மடியாமல்திரும்பி வந்துட்டன்...
தொடங்கோ...
AC வசதிகூட இல்லாத ஒரு தட்டிவான் மாதிரிதான் இருக்கும்.///
என்ன கார்த்தி... தட்டி வானிக்கு ஏசி யில்லையா... ஆன காத்து நல்லாத்னே வரும்... ஏசி மாதிரி
நானும் தாங்க ஒரு தடவை!! பயனித்திருக்கன்.. ஆனாலும் பணிபெண்கள்... நல்லா இருந்தாங்களே!!
உலகநாயகன் இன்னும் பாதையை திறக்கலையா???
ஒருதடவை Jaffna கு கார்கோ வில் சில foreign சாமான் அனுபின்நேன் ...
அப்ப்போது பொருட்கள் பெறுபவர் சில பொருட்கள் கொண்ண்டு செல்ல முடிஜாது என்று கூறினார் நான் அதை அடுத்து வேறு இடத்தில வைத்து விட்டு .......உள்ளே சென்று பில் போட்டு விட்டு வந்து அதை பார்க்காமல் வீடு கொண்டு சென்று விட்டேன் ...அதி வீடில் கொண்டு பொய் பார்க்கும் பொது ............அதில் காணாமல் போனவை ஏராளம் ..........
*******எனக்கு நேரம் இல்லாமல் போனதல் நான் அவற்றி கேட்கவும் இல்லை ..............
*************** தயவுசெய்து நீகலவது கவனமாக இருக்கவும் ******************
பொருட்கள் bill போடும்போது கவனிக்கவும் .............
அங்கு நிக்கும் பிச்சை கார நாய்கள் திருடிவிடும்
பாதிக்கபட்டவன்
I know one person who is working for Expo air. His name is jeevatharshan and he is a jonian old boy too.Any one want to talk or enquire about the sevice charges, bribery please let me know. I will call him and talk all the nonsence they created for the passengers.
நான் ஒருநாளும் பயணம் செய்யவில்லை ஆனால் உறவினர்களுக்கு டிக்கெட் வாங்கப்போய் அங்கே வேலை செய்யும் அறிவு ஜீவிகளால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன். முதலில் அவர்களை மனிதர்களுடன் மனிதர்களாக் கதைக்கபழக்கவேண்டும், சிடுமூஞ்சிகள்.
கருத்துரையிடுக