யாழிலிருந்து ஒரு பதிவு
ஒரு மாத விடுமுறையை கழிக்க சொந்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கிருந்து ஒரு பதிவாவது கட்டாயம் எழுதிவிடவேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டு இன்று அந்த வாய்ப்பை பெற்று எழுதுகிறேன்.
அண்மையில் என்னை பொறுத்தவரை இரண்டு வியக்கத்தக்க விடயங்கள் நடந்தது.
ஒன்று இறுதி ஆஸஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை மண்கவ்வ செய்து இங்கிலாந்து கோப்பையை 2005ன் பின் மீண்டும் தூக்கியது. பலமான அணி என்று தற்போதைய அவுஸ்திரேலியா அணியை கூற முடியாவிட்டாலும் செத்தபாம்பைதான் இங்கிலாந்தினர் போட்டு அடித்தனர் என்று கூறுவதற்கில்லை. அவுஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு எதிராக இருக்கும் என் போன்றோருக்கு ரொம்ப மகிழ்சியான தருணம் அது.
அடுத்தது ஆகஸ்டு 21 பெரும் எதிர்பார்புடன் வெளிவந்த கந்தசாமியை பார்க்கும் வாய்ப்பு 23அன்று எனக்கு கிடைத்தது. இதில்லை வியப்பு. இந்த படத்தை பற்றி நல்லதோ கெட்டதோ விமர்சிக்க நான் வரவில்லை. நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள். விசயம் என்னென்டால் இந்த படத்திற்கு U சான்றிதழ் சென்சார் போர்ட்டினால் வழங்கப்பட்டிருந்தது. நானும் என்னவோ எல்லாரும் பாக்ககூடிய படம் எண்டு நினைத்தால்............. பிறகுதான் விளங்கியது படம் ஒரு பலான படவகையை சார்ந்ததெண்டு. நல்லகாலம் குடும்பத்துடன் படம் பாக்கபோகவில்லை. நண்பனுடன் போனதால் தப்பினேன் இல்லாட்டி இதைகாட்டவா கூட்டி வந்தாய் என்று வாங்கிகட்டியிருப்பேன். A சான்றிதழ் வழங்க வேண்டிய படம் என்னவென்றுதான் U கொடுத்தார்களோ?
எனக்கு தெரிந்தவரை ஆபாசகாட்சிகள் நிறைந்த படத்திற்கும், கொடுமையான வன்முறைகாட்சிகள் உள்ள படத்திற்கும் Aசான்றிதழ் வழங்கப்படும். "நான் கடவுள்" படம் இதில் 2ம் வகையை சார்ந்தது. கந்தசாமி 1ம் வகைக்குள் அடங்க வேண்டியது.
----------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த பதிவில் A9 பாதையில் பயணிக்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பிபோயுள்ளார்கள் என்று கூறியிருந்தேன். கொழும்பு-யாழ்ப்பாணம் A9 பாதையினூடு வந்தவன் என்ற வகையில் தற்போதுள்ள நடைமுறைகளை கீழே தெரியாதவர்களுக்காக தருகிறேன்.
கொழும்பு-யாழ் பயணம் பற்றி பார்ப்போம்.
- இதுவரை கொழும்பு-யாழ் நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைவரும் வவுனியாவிற்கு ரயிலிலேயோ பஸ்ஸிலேயோ வந்தே, பின் யாழ் செல்லவேண்டும். அதற்கு பழைய கப்பலோ, விமான ரிக்கெட்டோ உங்களிடம் இருக்கவேண்டும். எந்த ஆண்டு ரிக்கெட்டும் செல்லுபடியாகும். உங்கள் பெயரும் NIC Noம் அதில் இருக்கிறதா என்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள்.
அப்படி ஒரு ரிக்கெட்டும் இல்லை என்றாலும் இருக்கிறது ஒரு கள்ளவழி. யாரிடமாவது பழைய விமான ரிக்கெட்டை வாங்கி உள்ளே அவர்களின் பெயர் இருக்கும் ரசீதை முழுவதுமாக கிழித்துவிடுங்கள். இப்போது வெறும் வெளிகவர் மட்டும் உங்களிடம் இருக்கும். இப்போது ரிக்கெட்டின் முன் கவரில் உங்கள் பெயரையும் NIC Noம் எழுதிவிட்டு காட்டுங்கள். கேட்டால் மட்டும் return ரிக்கெட் என்று சொல்லுங்கள். ஏனென்றால் உண்மையாகவே உங்களது ரிக்கெட் returnஆக இருந்திருந்தால் உங்களது பெயருக்குரிய உறுதி ஒன்றும் இருக்காது. இருவழிபயணத்தின் போது முழுவதுமாக கிழித்து விட்டிருப்பார்கள். எனவே நீங்கள் அந்த முறையை இங்கு உங்களிற்கு சாதமாக பயன்படுத்தலாம்.
- வவுனியாவிற்கு 5.30ற்கு வந்ததும் ரம்யா ஹவுஸ் எனும் இடத்திற்கு சென்று காவல் இருங்கள். பயணத்திற்கான Token இங்குதான் வழங்கப்படுகிறது. ஆனால் 8.30 மணிக்கே பெரும்பாலும் Token வழங்க ஆரம்பிக்கபடும் . ஆனால் வேளைக்கே வருவதன் மூலம் முதல் இலக்கங்களை பெறகூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் உங்களது பயணமும் பெரும்பாலும் உறுதிபடுத்தபடுகிறது.
- இந்த Token எடுத்ததும் அந்த இலக்கத்தின் ஒழுங்கில் உங்களை கூப்பிட்டு ரிக்கெட்டுகளை பார்த்து உங்களது பெயர்களை பதிந்து இன்னோர் Token தருவார்கள். இந்த Token பெற்றால் உங்களது பயணம் அன்று உறுதி.
- பின் அவர்கள் கூறும் நேரத்திற்கு மீண்டும் சென்று உங்களது Token காட்டி பயணிக்கலாம். கிட்டத்தட்ட 4.30 மணிக்கே பஸ்ஸில் ஏற்ற தொடங்குவார்கள். அனைவரும் ஏற்றப்பட்டபின் 6.30மணியளவில் பஸ்கள் அனைத்தும் ஒன்றாக புறப்படும். 3.30 மணி பயணத்தின் யாழ் நகரை அடைவீர்கள். வவுனியா-யாழ் பயணகாசு 135மட்டுமே.
இந்த பயணநேரங்கள் பலவேளை முந்திபிந்த கூடும்.
இந்த பயணத்தில் தரப்படும் பஸ் ரிக்கெட் மற்றும் Tokenன் Photocopy கொடுப்பதன் மூலம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள Jaffna Civil Affairsல் நீங்கள் ஒரு மாதத்திற்கான Clearance பெறலாம்.
யாழிலிருந்து கொழும்பு செல்ல இவ்வாறு அலைய வேண்டியதில்லை. நேரடி சொகுசு பஸ்ஸில் பதிவதன் மூலமோ, யாழ்-வவுனியா, யாழ்-மதவாச்சி CTB பஸ்ஸில் பதிந்து Tokenஐ முதலில் பெறுவதன் மூலம் நீங்கள் பயணிக்கலாம்.
தற்போது அதிகரித்துள்ள மூட்டை கடிக்கு மத்தியில் கப்பலில் போவதிலும், வீணே காசை விமானத்திற்கு கொட்டுவதிலும் இலகுவான வழி A9 பாதையிலான பயணம்.
தகவல்: பிரபல பதிவர் சுபாங்கன் அண்மையில் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி குணமாகிவருகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
10 comments:
அருமையான பதிவு நண்பரே..
i expect more feedback about "kanthasamy" , excellent !
நேரடி சொகுசு பஸ்ஸிஸிற்கு எங்கு பதிவது?
Shankar
Thx Pradeeban & Sri
@பெயரில்லா
In Hospital road,Next to Singala Mahavidiyalaya
Thx 4 all da details annah, looking 4ward 2 go 2 Jaffna in a few weeks. :) Tgc and have a good tym.
ரொம்ப நன்றி கார்த்தி, எப்பிடிடா ஊருக்குப் போறதெண்டு யோசிச்சுக் கொண்டிருந்தன்... நல்ல வழியொண்டு சொன்னீர்...
சுபாங்கன் இப்போது முழு நலமா?
யாழ்ப்பாணம் செல்வதற்கான வழிமுறைகளை தெரிவித்தமைக்கு நன்றி.
யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது?
Thanks Akshy...
Enjoy in Jaffna
நன்றி பால்குடி அனுபவம் மூலம்தான் பல பாடங்கள் கிடைக்கிறது அதை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்.
நன்றி கனககோபி...
சொந்த ஊர் எப்பவும் சுப்பர்தானே.. ஆனாலும் ஏதோ ஒன்றை இழந்த ஏக்கம் மக்களிடம்.
அதிரடி பதிவர் கொழும்பு வந்தவுடன் மீண்டும் பதிவுகள் மூலம் களைகட்டுவார்.
சுபாங்கன் கொழும்புக்கு வந்துவிட்டார். நீங்கள் எப்போது வருவீர்கள்.
சந்ரு நாங்களும் அதே நாள்தான் வந்தனாங்கள்.
கருத்துரையிடுக