புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள்.
ச&#
13
பதிவெழுத வந்த கதையை நண்பர் சுபானு எழுத கேட்டிருந்தாலும் கூட, அதைவிட முக்கியமான விடயம் இது என்பதால் அதைவிடுத்து இதை முதலில் தருகிறேன்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்படவில்லை என்று உறுதிகூறியமை யாவரும் அறிந்ததே.
தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்படவில்லை என்று உறுதிகூறியமை யாவரும் அறிந்ததே.
அந்த செய்தியை யாரும் பாக்க தவறியிருந்தால் உதயன் பத்திரிகையிலிருந்து அதன் Screen shot உங்களுக்காக கீழே இதோ!
ஆனால் A9 பாதையினூடு பயணித்த அனைவருக்கும் தெரியும் அவர் யாரை ஏமாற்ற முயல்கிறார் என்று. பரந்தன், கிளிநொச்சி, முரசுமோட்டை இடங்களில் முளைவிடுகின்றன இவை.
இதில் பரந்தனில் புதிதாக இப்போதுதான் விகாரைக்கான நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் நிலைவேறு. ஆலமரங்கள் சிலைகள் சுற்றுமதில்கள் போன்றன எல்லாம் கட்டப்பட்டு தூபி மட்டும் கட்டபடாமல் இருக்கிறது. விரைவில் அதுவும் வளரும் என்பதில் ஐயமில்லை. முரசுமோட்டை பகுதியில் ஆலமரத்திற்கு கீழே ஓர் புத்தர்சிலை காணப்படுகிறது.
நான் புத்தரின் போதனைகளுக்கோ பௌத்தமதத்திற்கோ எதிரானவன் அல்ல. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் என்னத்தை இலக்கு வைத்து நகர்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் புரிவீர்கள். இன்னும் மக்களை குடியேற்ற முடியாதாம் ஆனால் அதற்குள் மக்களுக்கு தேவையான(??????????) இதெல்லாம் என்ன?

இதை நான் சொல்ல கேட்ட நண்பன் ஒருவன் ”கொஞ்ச காலத்தால வரலாறு பாடப்புத்தகத்தில விஜயன் வந்து கட்டின விகாரைகள் என்றுதான் இவையெல்லாம் வரும்” என்றான் ஏக்கத்துடன் . அதுதான் கசப்பான உண்மையும் கூட.
""புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி""
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
15 comments:
கார்த்தி என்னப்பு அவசரம், மகா வம்சத்தைத் திருத்தி எழுதப் போறாங்களாம். இது நீர் கேள்விப் படேல்லையோ? இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும்போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள்தான் வடக்கு கிழக்குத் தமிழர்கள் எண்டு மகா வம்சம் சொன்னாலும் ஆச்சரியப் படுவதுக்கில்லை
தம்பி திருப்பி வாற ஐடியா இல்லையோ? ஒரு இனத்தை யுத்தத்தில் வென்றால் அந்த பிரதேசம் வென்ற இனத்துக்கு சொந்தமானது... இது பழைய யுத்த விதி.. தோற்றவன் கதி இதுதான்.. கிறிஸ்துவ தேவாலயங்கள் இப்படித்தான் யாழில் எழும்பின... இப்போது புத்த விகாரைகள்..பேசாமல் வாறவழில புத்தர கும்பிட்டுட்டு ஒரு தோவரர்தை பாடிட்டு வாரும்.. புத்தரும் தோடு போட்டிருக்கிறதால தோடுடைய செவியன் அவருக்கும் பொருந்தும்..
ஆமாம் பால்குடி நீங்கள் சொல்வது சரி. இனி அதுதான் நடக்கபோகுது. எங்களது(தமிழர்களது) வரலாறும், கலாச்சாரமும் கொஞ்ச காலத்தில், வெகு விரைவில் குழி தோண்டி புதைக்கப்படபோகுறது.
ஏன் புல்லட் நான் மீண்டும் கொழும்பு வந்தாகிவிட்டது. வரும் வழிகளில் கண்டகாட்சிகள் மனதை நொருக்குவதாக கிடந்தது. சிலவற்றை கமராவால் கிளிக் செய்ய முயன்றேன் (விகாரைகள் உட்பட) ஆனால் சில வேளைகளில் பிரச்சனைகள் எழ கூடும் என்பதால் இறுதி நேரத்தில் யோசனையை மாற்றி விட்டேன்.
தேவாரம் பாட ஒரு தேவாரமாவது உருப்படியா தெரிஞ்சாதானே????
The West Moves to Asia in search of Jobs,
Sri Lankan Tamils Moves to west in search of freedom.
I'll be forced to say I'm from TamilNadu - India.
Cause CIA says SL Tamils are immigrants of Tamilnadu Chola Kingdoms of 14th Century.
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ce.html
Wikipedia says its a colony by King Rajaraja.
http://en.wikipedia.org/wiki/Medieval_Cholas
And Mr.President says He is a "Man of the Masses" - Master Minded
http://www.mahindarajapaksa.com/
கொடுமை..
ஆனால் இதெல்லாம் நாம் எதிர்பார்த்ததே..
பால்குடி, புல்லட் ஆகியோரின் கருத்துக்கள் சிரிப்பை தந்தாலும் சோகமான உண்மைகளே..
அண்ணே தென்னாலி ராமன்..
எனக்கு இங்கிலீசு கொஞ்சம் மட்டு..
நீங்கள் ஆரம்பத்தில் கூறியமை சரிதான்.
இருந்தாலும் நான் விளங்கிகொண்டபடி இலங்கைத்தமிழர்கள் ஒரு குடியேற்ற வாசியென்றா சொல்ல வாறீங்க.
நீங்கள் காட்டும் சான்றுகள் சரியோ பிழையோ எனக்கு தெரியவி்ல்லை. ஆனால் தமிழர்கள் இலங்கையின் மூத்தகுடிகள் என்பதற்கு எங்களிடமும் ஆதாரங்கள் இருக்கின்றது. அவ்வாறான சான்றுகள் இணையத்தில் இருக்கின்றதா என்று தெரியவில்லை ஆனால் பல புத்தகங்கள் வாயிலாக இதை நாம் நிரூபிக்கலாம்...
உங்களது இணைப்புகளுக்கு மிக்க நன்றி தோழரே!!!
LOSHAN அண்ணா உங்கள் கருத்துக்கு நன்றி
//ஆனால் இதெல்லாம் நாம் எதிர்பார்த்ததே..
எல்லோரும் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் தலைவரது கதையை நம்பிக்கொண்டிருக்கும் விசர் கூட்டங்கள் சிலருக்கு உண்மையை தெளிவுபடுத்தவே இந்த பதிவு
இன்று பரவலாக தமிழ் பிரதேசங்களிலே புத்த விகாரைகள் முழைத்து வருகின்றன். மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலைதான்.
//பால்குடி கூறியது...
கார்த்தி என்னப்பு அவசரம், மகா வம்சத்தைத் திருத்தி எழுதப் போறாங்களாம். இது நீர் கேள்விப் படேல்லையோ? இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும்போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள்தான் வடக்கு கிழக்குத் தமிழர்கள் எண்டு மகா வம்சம் சொன்னாலும் ஆச்சரியப் படுவதுக்கில்லை//
நடக்கலாம்.....
//புல்லட் கூறியது...
பேசாமல் வாறவழில புத்தர கும்பிட்டுட்டு ஒரு தோவரர்தை பாடிட்டு வாரும்.. புத்தரும் தோடு போட்டிருக்கிறதால தோடுடைய செவியன் அவருக்கும் பொருந்தும்..//
புத்தருக்கு தமிழ் தெரியுமோ தெரியவில்லை. அவரும் தமிழை வெறுப்பவராக இருந்தால்.
இவற்றுக்கெல்லாம் தமிழன் துணை போகின்றான் எனும்போது வேதனையைத் தருகின்றது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்ரு....
// இன்று பரவலாக தமிழ் பிரதேசங்களிலே புத்த விகாரைகள் முழைத்து வருகின்றன். மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலைதான்.
என்ன செய்வது நாங்கள்? வெட்டிப்பயல்களாக நாங்கள்.
புத்தரின் கொள்கையும் புத்தரையும் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அதை கடைப்பிடிக்க வேண்டியவர்களே அதை கைக்கொள்ளாமல் இருப்பதே கேவலமானது.
// இவற்றுக்கெல்லாம் தமிழன் துணை போகின்றான் எனும்போது வேதனையைத் தருகின்றது
சில மோட்டுத்தமிழ் கூட்டங்களுக்கு மேலே கதைப்பதெல்லாம் விளங்காது..
கந்தரோடை.......????????
கருத்துரையிடுக