டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய


டிஸ்கி: ஒரு சஞ்சிகைக்காக SLPL + இந்த திறமையான வீரர்களை சேர்த்து எழுதியிருந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இந்த வீரர்களின் பகுதியை வெட்டி இங்கே பதிகிறேன். SLPL தொடர்பான அந்த பதிவு பொட்டலத்தில் பிறகு பதிவேற்றப்படும்

Dilshan Munaweera

23வயதே ஆகும் இந்த வீரர் நடந்து முடிந்த SLPL தொடரில் கூடிய மொத்த ஓட்டங்களை குவித்தவீரராக இருக்கிறார். மத்தியுஸை விட ஒரு ஓட்டம் கூட எடுத்து 212ஓட்டங்களை இந்த போட்டி தொடரில் பெற்றிருக்கிறார். வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இலங்கை 19, 21 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியிருக்கிறார். SLPL முழுவதும் திறமையாக விளையாடிய இவர் இறுதிப்போட்டியில் மத்தியுஸின்  NAGENNAHIRA NAGASவுடன் ஆட்டமிழக்காமல் வெறும் 23 பந்துகளில் பெற்ற 44ஓட்டங்கள் வெற்றியை டக்வத் லூயிஸ் முறை மூலமாக இவரது Uva Next அணிக்கு வழங்கியிருந்தது.


ஹெல்மெற்றுடன் இவர் துடுப்பை அந்தரத்தில் வைத்து பிடித்தபடியே துடுப்பெடுத்தாடும் அழகும் இவரது முகவெட்டும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ராம்நரேஷ் சர்வேனை பார்ப்பது போல ஓர் உணர்வை தருகிறது. அதிரடி வீரராக இருந்த போதிலும் Stylish ஆக அடித்து பந்துகளை Gapகளினூடாக placeசெய்யும் திறமை இவரை எதிர்காலத்திற்கான இலங்கை அணியில் நிரந்தர இடத்தை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. 7போட்டிகளில் 212ஓட்டங்களை 35என்ற சராசரியுடனும் 144ஓட்டவிகிதத்தில் இவர் SLPLல் பெற்றிருந்தார். T20 போட்டிகளில் இலங்கை சார்பாக டில்ஷானுடன் களமிறங்குவதற்கு பொருத்தமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் மஹேல ஜெயவர்ததனவே பெரும்பாலும் அந்தப்பணியியை செய்து வந்திருந்தாலும் இந்த உலககிண்ண போட்டிகளில் டில்ஷான் முனவீர அந்தப்பணியை செவ்வனே செய்வார் என இலங்கை கிரிக்கெற் சபை எதிர்பாக்கின்றது. நான் எழுதும்வரை (Sep15) இலங்கை விளையாடிய மேற்கிந்தியதீவுகள் இந்திய அணிகளிற்கிடையான Warm-up போட்டியில் இவர் முறையே 24, 03 ஒட்டங்களை பெற்றிருந்தார். 


Akila Dananjaya

வெறும் 18வயதுடைய SLPLஐ தவிர வேற முதல்தரப்போட்டிகளிலேயே கலந்து கொள்ளாத இவர் தற்போது T20 உலககிண்ண இலங்கை அணியில். இவர் திடீரென வயம்ப அணிக்காக SLPLல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது பல சலசலப்புகள் எழுந்திருந்தன. இரண்டு கேள்விகள் பொதுவாக இவர் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒன்று, முதல்தரப்போட்டிகளிலேயே விளையாடாத இவர் எவ்வாறு இந்தப்பெரிய்ய போட்டிக்கான அணியில் வந்தார். இரண்டாவது திறமையானவர் எனின் ஏன் அப்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லவில்லை. இந்தக்குழப்பங்கள் ஆரம்ப்பத்தில் பலருக்கும் இருந்தாலும் பின்னர் அனைத்தும் தெளிவாக்கப்ட்டது.

பாகிஸ்தான் அணி இலங்கையில் Juneல் மேற்கொண்ட சுற்றுலாவில் இலங்கைக்கு மரண பயத்தை கொடுக்க கூடியவர் என பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் சயிட்அஜ்மால் இனங்காணப்பட்டிருந்தார். அஜ்மாலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அவர் மாதிரி பந்துவீசக்கூடியவர்களை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அழைத்து இலங்கை அணியின் பயிற்சிகளின் போது பந்துவீச சொல்லியிருந்தார்கள் அங்கே இவரது பற்துவீச்சு இலங்கை அணி தலைவர் மஹேலஜெயவர்த்தனவிற்கும் சங்கக்காரவிற்கும் எதிர்கொள்ள சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. பயிற்சிகளின்போது இவரது சிறப்பான பெறுபேற்றை பார்த்து இவர் மஹேலவினால் வயம்ப அணிக்கு அழைத்துவரப்பட்டார். இலங்கைக்காக 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவுஸ்திரேலியா செல்வதிலும் இங்கே தனது அணியில் SLPLல் விளையாடுவதில் மஹேல விரும்பியதனாலேயே அகில தனன்சய வயம்ப அணிக்காக விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.

பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் உள்ளே நுழைந்தார் என்று சிலரால் சந்தேகிக்கப்ட இவர் SLPLல் விளையாடிய போட்டிகளில் காட்டிய திறமையின் பின்னர் தன்னை சந்தேகித்தோரை வாயடைக்கச் செய்தார். பல விதமான பந்துவீச்சு வகைகளை வீசக்கூடியவரான இந்த வலது கை சுழல் பந்துவீச்சாளர் போட்டியின் நிலைகளை கருத்தில் கொண்டு தந்திரமாகவும் பந்துவீசக்கூடியவராக இருப்பது இவரின் மிகப்பலமாக கருதப்படுகிறது. SLPL தொடர் முழுவதும் சிறப்பாக பிரகாசித்த இவர் றுகுண றோயல்ஸ் அணியுடனா போட்டி தவர்த்து (இதில் 3ஓவர்களில் 37ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்) அனைத்து போட்டிகளில் சொற்ப ஓட்டங்களையே விட்டுக்கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தியுமிருந்தார். 6 போட்டிகளில் 9 விக்கெட்களை சரித்த இவர் வெறும் 6.36 என்ற ஓட்டவீதத்திலேயே ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

இலங்கையின் Mystery பந்துவீச்சாளரென முன்பு அறியப்பட்ட அஜந்த மெண்டிஸ் போலவே இவரையும் பலர் கருதுகின்றபோதிலும் மிகச்சிறிய வயதில் சர்வதேச போட்டியில் அதுவும் உலக T20 போட்டிகளில் இவரால் சாதிக்கமுடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறபோதிலும் சர்வதேச போட்டி அனுபவம் ஒன்று கூட இல்லாமல் முக்கிய போட்டியில் கழமிறங்குவது கொஞ்சம் கடினமான விடயம்தான். அத்தோடு இவர் இந்த முக்கிய போட்டியில் சொதப்புமிடத்து இவரது எதிர்காலத்துக்கு அது ஒரு பிழையான அடித்தளமாக கூட அமைந்துவிடலாம். மிகச்சிறிய வயதில் இவரை சர்வதேச போட்டிகளின் அனுபவம் வழங்காது இவரை பாழாக்கிவிடப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை மேற்கிந்தியதீவுகளிடையேயான முதலாவது Warm-up போட்டியில் 3ஓவர்களில் 17ஓட்டங்களை கொடுத்திருந்தார் இவர். இந்தியாவுடனான 2வது போட்டியில் இவர் விளையாடவில்லை. ஒரு காலப்பகுதியில் தனது மாயப்பந்து வீச்சுக்களால் பலரையும் வீழ்த்திய அஜந்த மெண்டிஸிற்க்கு பிற் காலத்தில் நடந்தது போல இவருக்கும் நடக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

1 comments:

பெயரில்லா சொன்னது…

Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is fantastic, as well as the content!
Welcome to my site [url=http://www.about-dogs.zoomshare.com/]www.about-dogs.zoomshare.com[/url].

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்