WorldCupCricket2011 Special - II

இந்த உலகக்கிண்ணத்தை ஒட்டி பெரும்பாலான பதிவுகள் அணிகள் பற்றிய வீரர்கள் பற்றிய அலசல்களையே தந்திருந்தன. எனவே நான் சற்று வித்தியாசமாக மற்றவர்கள் பெரிதாக கவனிக்காது விட்ட ஒருசில விடயங்களை பற்றி இங்கே குறிப்பிட முயலுகின்றேன்.

அதற்கு முன் உலககிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கை மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!

ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது போட்டியின் சுவாரஸ்யத்துடன் நேர்முக வர்ணனையாளர்களின் அலட்டல்களையும் விரும்பி கேட்பதுண்டு. அவ்வாறான பல நேர்முக வர்ணனையாளர்களில் சிலரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிலர் பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் சுவையாக அந்தந்த தருணங்களில் நினைவு கூறக்கூடியவர்கள். மற்றைய சிலர் நேர்த்தியான  அதிரடியான ஆக்ரோசமான விதத்தில் போட்டிகளை பற்றி வர்ணனை செய்வதில் பெயர் பெற்றவர்கள். பொதுவாக ஒரு சிறந்த வர்ணனையாளருக்கு இந்த இரண்டும் அளவாக இருந்தால் தான் அவர்களால் அத்துறையில் வெற்றியடைய முடியும். ஆனால் சிலர் அந்தந்த பாணிகளில் பிரபலமாக தமக்கென தனிமுத்திரையை பதித்திருப்பார்கள்.
Mike Haysman

அந்த வகையில் எனக்கு பிடித்த அவுஸ்திரேலியாவில் பிறந்து தென்னாபிரிக்காவில் குடியேறிய சிறந்த, நல்ல குரல்வளமுள்ள, நான் இங்கே குறிப்பிட்டதில் இரண்டாவது பாணியில் தனிமுத்திரை பெற்ற நேர்முகவர்ணனையாளர் மைக்கேஸ்மன்(Michael Haysman) இந்தபோட்டிகளில் வர்ணனையாளராக உள்வாங்கப்படாது இருந்தது எனக்கு பலத்த ஏமாற்றம். அவரின் வர்ணனையை மிகவும் எதிர்பார்த்தேன் இந்த முக்கியமான உலகக்கோப்பை போட்டிகளில். இவர் Ten Sportsற்காக நேர்முகவர்ணனையாளாராக இருப்பதாலோ ESPN Star தொலைக்காட்சியின் அனுசரணையில் உலகம் பூராவும் ஒளிபரப்பாகும் இப்போட்டியில் இல்லை போலிருக்கிறது!
----------------------------------------------------------------------------------
இந்த தடவை உலககிண்ண போட்டிகளில் Umpire Decision Review System (UDRS)ல் மிகவும் குறைவான Success rateஐ அதாவது 0% கொண்ட அணியாக அயர்லாந்து இருந்துவிட்டது. அவர்கள் எடுத்த 13Reviewல் (எண்ணிக்கையில் தவறு இருக்கலாம்) ஒரு முறை கூட அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வரவில்லை.
----------------------------------------------------------------------------------
Imran Tahir
இந்தமுறை உலகக்கிண்ணத்திலேயே தனது 31வயதில் ODI அறிமுகத்தை மேற்கொண்டார் பாகிஸ்தானில் பிறந்து பின்னர் தென்னாபிரிக்காவில் குடிபெயர்ந்த ஏலவே முதல்தர போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கிய இம்ரான் தாகீர் (Imran Tahir). தனது முதல் போட்டியிலிருந்தே ரண்மெசின் ஹாசிம் அம்லாவை போல் விக்கெட் மெசின் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்க உழைக்க தொடங்கிவிட்டார்! இவர் தனது முதல்தர போட்டிகளில் 500ற்கு மேற்பட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குடியுரிமை பற்றிய பிரச்சனையால் இவரால் அணிக்குள் நீண்ட காலமாக வரமுடியாமல் போனது.
----------------------------------------------------------------------------------

Sanjay Manjrekar
எனக்கு பிடித்த இன்னுமொரு Commentator சஞ்சே மஞ்ஜேர்கர் (SanjayManjrekar), இந்த உலகக்கிண்ண நேரத்தில் நகைச்சுவையான அடிக்கடி பல தடவை அவர் சொல்லிக்கொண்ட ஒரு விடயம் ”சில கிரிக்கெட் வீரர்களுக்குதான் அவர்களின் பெயரும் செயலும் ஒத்துப்போகும் அந்த வகையில் ஒரு வீரர்தான் யுசுப் பதான். அவரின் பெயரை பாருங்கள். படான் படான் என்று சொல்லும்போதே ஒரு ஆக்ரோசம் தெரிகின்றதல்லவா? அதைபோலதான் அவர் பெயரும் அவரது அடியும். அவரது அடிகள் எல்லைக்கோட்டை கடந்து செல்லும்போதெல்லாம் படான் என்ற சொல்லின் தொனியுடன் ஒத்துப்போகின்றது". இதை காமடியாக மொக்கையாக நேர்முகவர்ணனையின் போது சொன்னார். நான் இரு தடைவைகள் இவ்வாறு இவர் சொல்லும்போது கேட்டேன். ரசித்து சிரித்தேன்.
----------------------------------------------------------------------------------

கடந்த பதிவில் LBWற்கான Out side the leg stump விதி பற்றி சொன்னேன். அந்த விதியையாவது ஒரு சிலர் அறிந்திருந்தாலும் நான் இப்போது சொல்லப்போகும் Out side the Off stump விதியை அறிந்துகொண்டு போட்டிகளை கண்டுகளிப்போர் மிகக்குறைவெனலாம். 
1.Ball Pitching out side the off stump and made impact out side the off stump line
பந்துவீச்சாளர் வீசிய பந்து Out side the off stumpல் pitch செய்து (அதாவது Off stumpற்கு வெளியே) துடுப்பாட்டவீரரின் கால்காப்பில் (pad) படுகின்ற போது விக்கெட்டை தகர்க்கின்ற வாய்ப்பு இருப்பினும் சிலவேளைகளில் அது ஆட்டமிழப்பாகாது. ஏனெனில் கால்காப்பில் படும்வேளையில் வேறுசில Checkingகள் செய்து அதற்கேற்பவே நடுவர் தீர்ப்பு வழங்குவார்.

அதாவது பந்தானது Padல் படுகின்ற தருணத்தில் (at the time of impact) பந்தானது எங்கு நிலை கொண்டிருக்கின்றது என பார்ப்பார்கள். பந்து Off stump lineற்கு உள்ளெனில் மறு பேச்சே கிடையாது அவர் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்படுவார். பந்து Off stumpற்கு வெளியில் எனில் இன்னும் ஒரு Checking பண்ணப்படும். அவர் அந்த பந்தை அடிக்க (Shot attempt) முயன்றுதான் அவ்வாறு பட்டது எனின் அது ஆட்டமிழப்பாகாது. இல்லை அவர் அதை அடிக்கவே முயலவில்லை எனின் அது ஆட்டமிழப்பு ஆகும்.

இங்கே மேலே காட்டப்பட்ட 1வது படத்தில் Out sideல் pitchசெய்து அவர் அடிக்கமுயலும்போது பந்து படும் வேளையில் off stumpற்கு வெளியே பந்து இருப்பதால் இது ஆட்டமிழப்பாகாது.
2.Ball Pitching out side the off stump and made impact within the off stump line & leg stump

இந்த இரண்டாவது படத்தில் Off stump lineல் போடப்படும் பந்து படும்போது off stump lineற்குள்ளேயே இருப்பதால் மறு பேச்சு கிடையாது நேராக ஆட்டமிழப்புதான்.
----------------------------------------------------------------------------------

இந்த உலககிண்ணத்தில்தான் போட்டி தொடங்க முன்பே கிண்ணத்தை வெல்ல கூடிய பலமான அணிகள் என்று கருதிய அணிகள் இரண்டும் இறுதிப்போட்டிக்கு நுழைந்திருக்கின்றன. நானும் தொடங்க முன் இதேகருத்தை ஆமோதித்த மாதிரி இருந்தாலும் பின் போட்டிகள் ஆரம்பமானவுடன் கூறிய எதிர்வுகூறல் அப்படியே 100%ம் பொய்த்துப்போனது. எனவே இறுதிபோட்டி பற்றி கூற எனக்கொரு தகுதியும் இல்லை. ஆனால் விறுவிறுப்பான இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருக்கின்றேன்.

3 comments:

Jana சொன்னது…

oHH...2MORROW RAMA RAAVANA WAR NO?
ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

ம.தி.சுதா சொன்னது…

விதிமுறைகளை அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Unknown சொன்னது…

விரிவான விளக்கத்துக்கு நன்றிகள்..பலருக்கு இது பற்றி இன்னமும் குழப்பம்!!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்