IPL-2012ல் பிடித்த வீரர்கள்-III (AB De Villiers)

AB De Villiers

இப்போது மிகவும் வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளை பார்ப்போருக்கு இந்த தலைசிறந்த வீரர் அறிமுகமான காலத்திலிருந்து இவரின் அபரிமிதமான வளர்ச்சிகள் ஒன்றும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் இவர் இதுவரை செய்த சாதனைகளை தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் இந்த 2012 IPL போட்டிகளில் இவரது துடுப்பாட்டத்தை பார்த்து புகழாதவர்கள் இருக்கமாட்டார்கள்.


உண்மையில் எந்தப்பெரிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் Short Format போட்டிகளில் பெரும்பாலும் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடும்போதுதான் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்படுகிறார்கள் பாராட்டப்படுகிறார்கள். ஆஹா ஓஹோ எண்டு தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்கள். பெரிதளவு இப்படியான Limited Overs போட்டிகளில்தான் ரசிகர்கள் கூடுதலாக லயித்துப்போயிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அடிப்படை காரணம். அப்பிடி அனைத்துவிதமான போட்டிகளிலும் சாதித்து காட்டிக்கொண்டிருப்பவர்தான் இந்த ஏபி.டி.வில்லியர்ஸ்.


உலககிண்ண போட்டிகளின் பின்னர் Graeme Smith ODI போட்டிகளின் தலமைப்பொறுப்புகளிலிருந்து விலகிய பின்னரும் John Botha T20 அணித்த லமையிலிருந்து தூக்கப்பட்டபின்னரும் AB.De.Villersக்கு தலமைத்துவ வாய்ப்பு 2011 June அளவில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் T20 போட்டிகளில் கையில் ஏற்பட்ட காரணத்தால் விளையாடமுடியாத காரணத்தால் தனது முதலாவது முழுநேர தலைமைத்துவாய்ப்புக்கு இலங்கை தொடர்வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. தலமைப்பொறுப்பில் இதுவரை இவர் விளையாடிய இலங்கை, நியுஸிலாந்துக்கெதிராக 2ஒருநாள் போட்டிதொடர் நியுஸிலாந்துக்கெதிராக T20 போட்டிதொடர் என்று அனைத்தையும் வென்றுள்ளார். 

அதற்கு மேலதிகமாக இந்தாண்டிலே வெறும் 8ஒருநாள் போட்டிகளில் 475ஓட்டங்களை 158.33என்ற ஓட்டசராசரியுடனும் 116என்று Strikerateலயும் பெற்றிருக்கிறார். இதைப்போலவே டெஸ்ட்டிலும் 4 போட்டிகளில் 378ஓட்டங்களை 75என்ற சராசரியில் பெற்றிருக்கிறார். இவரது இந்த ஆண்டின் இந்த கடும் போம்தான் IPLலிலும் தொடர்கிறது என்று இலகுவில் சொல்லிவிடலாம்.


Royal Challengers Bangalore பெரும்பாலான வெற்றிகளுக்கு கெயில்தான் காரணமாக இருந்துவிட்டிருந்தாலும் சில வெல்லவே முடியாது என கருதப்பட்ட போட்டிகளை கடைசி நேரத்தில் வந்து RCBபக்கம் மாற்றிய பெருமை De Villiersக்கு உண்டு. பெங்களுர் அணியில் இருப்போரின் திறமையை வைத்து பார்க்கும்போது இவ்அணி இலகுவில் playoffsக்கு சென்றிருக்கவேண்டும் என எதிர்பார்த்தாலும் அணித்தலைவராக முதல் 9போட்டிகள் வரை இருந்த Daniel Vettoriன் மோசமான தலமைத்துவமும் வெறும் ஓட்டங்களை மட்டும் கட்டுப்படுத்திய விக்கெட்டுக்களை பெரிதாக எடுக்காதா பந்துவீச்சு பெறுபேறுகளும்தான் இவர்களின் சறுக்கல்களுக்கு காரணமாக அமைந்திருந்தது.

விற்றோரி விளையாடிய 9போட்டிகளில் சிறந்த பெறுபேறாக 4Oversல் 20/1தான் இருக்கிறது. பெரிதாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளராக இருந்தாலும் RCBன் Strike bowler Zaheer Khanன் Bad formமும் இந்த அணிக்கு விக்கெட்களை கொய்யக்கூடிய பந்துவீச்சாளரின் அவசியத்தை உணர்த்தியிருந்தது. எனது Facebookன் Status ஊடாகவும் இந்த மனக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அடித்தட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கே முரளிதரனின் வருகையின் தேவை உணரப்பட்ட நிலையில் May02 போட்டிக்கு பின் கடைசி 3போட்டிகளிலும் விற்றோரி அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு முரளிதரன் உள்ளே கொணரப்பட்டார். விற்றோரியைவிட உண்மையில் முரளி ஒரு genuine wicket taking bowler, சில நேரங்களில் கூடுதலாக ஓட்டங்களை கொடுத்தாலும் விக்ககெட்டுக்கள்தான் இவரது தீனி. எனவே அணியில் இவரின் வருகையால் அணி கடைசி 3போட்டிகளிலும் அபார வெற்றியீட்டியது.


இந்த வருட IPLல் கூடுதலான strike rate பெற்றொரில் 173என்ற பாரிய ஓட்டவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார் AB De Villiers. இந்தவருட போட்டிகளிலும் கெயில் ஓட்டங்களை மழைபோல பொழிந்துகொண்டிருந்தாலும். கெயிலில் காண முடியாத ஒரு style perfection class batting AB De Villiersல் பாக்கமுடியும். கெயில் ஒரு Power Hitter ஆனால் இவர் intelligent புத்திசாலித்தனமான துடுப்பாட்டவீரர். Royal Challengers Bangaloreன் விக்கெட்காப்பாளரும் இவர்தான்.


இந்தவருட IPLன் 5வது டெல்லிக்கெதிரான போட்டியில் 64*(42) ஓட்டத்தை பெற்று ManOftheMatch(MOM) விருதையும் பெற்று வெற்றிபெற காரணமாக இருந்தார். பின்னர் Puneக்கெதிரான 21வது போட்டியில் வெற்றிபெறவே முடியாது என்ற நிலையிலிருந்து 33*(14) அடித்து அதிலும் RCB வெற்றிபெற முக்கிய காரணமாயிருந்தார். ராஜஸ்தானுக்கெதிரான 30வது போட்டியில் இறுதி நேரத்தில் வந்து கோரத்தாண்டவம் ஆடி 59*(23) எடுத்து MOMவிருதுடன் போட்டியை வெல்ல காரணமானார். 50வது டெக்கனுடனான போட்டியில் Dale Steynக்கு சாத்து சாத்தெண்டு சாத்தி வெல்ல கஸ்டமென கருதப்பட்ட போட்டியை 47*(17) ஓட்டமெடுத்து MOMஉடன் வென்றுகொடுத்தார் இந்த AB De Villiers.

இவரது scoopஅடிகளும் இலகுவாக gapகளில் place பண்ணும் அழகும் அலாதியாக தூக்கி 6ஓட்டத்துக்கு அனுப்பும் நேர்த்தியும் அண்மைக்காலத்தில் வேறு ஒரு துடுப்பாட்ட வீரரிடமும் காணமுடியாத திறமை. நீங்கள் எந்த அணி ரசிகனாக இருந்தாலும் இவரது துடுப்பாட்ட ரசிகனாகத்தான் இருப்பீர்கள். இந்த IPLல் இவரது Batting order பலநேரங்களில் சர்ச்சைக்குரியதாக பட்டாலும் அது தனக்கு ஏற்றதுபோல மாற்றி அமைப்பதுதான் இவரது பலம். பலமுக்கிய தருணங்களில் Sourav Thiwary முன்னே சென்று ஆட்டத்தை இன்னும் இறுக்கமாக்குவதால் ஏன் AB.De எப்போதும் முன்னே செல்லக்கூடாது என்ற கேள்வி இன்னமும் எழுப்பப்பட்டவாறே உள்ளது. 

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்