திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)

"பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்ட பாடகர்தான் மாணிக்கவிநாயகம். Soupபாடல்களுக்கு காலங்காலமாக கிடைத்துவரும் வரவேற்புக்கு இந்தபாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ”உன்னைநினைத்து” படத்திற்காக பலரின் அபிமான இசையமைப்பாளராக அந்த காலத்தில் இருந்த சிற்பியின் இசையில் இந்தப்பாடல் வெளிவந்திருந்தது. இந்தப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்தஇசையமைப்பாளர் விருதுகூட சிற்பிக்கு கிடைத்திருந்தது. 

மற்ற பாடகர்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்தக்கூடிய கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான மாணிக்கவிநாயகம் திரைத்துறைக்கு வருவதற்கு முதலேயே பல பக்திப்பாடல் அல்பங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வந்துள்ளார். பெரும்பாலும் நெற்றிபூராக விபூதிப்பட்டையுடன் காணப்படும் இவருக்கு திரைத்துறையில் முதலாவது வாய்ப்பு கிடைத்தது இசையமைப்பாளர் வித்தியாசகர் மூலமாகதான். தில் படத்தில் ”கண்ணுக்குள்ள ஒருத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்தியாசகராலயே வழங்கப்பட்டது. 

பாடகராக மட்டுமிருந்த இவர் தனுஷின் ”திருடா திருடி” படம்மூலமாக தன்னால் நடிக்கவும் முடியுமென்று காட்டியிருந்தார். தனது முதல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் typical அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் யுத்தம்செய் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

Manicka Vinayakam in Yedam Sei Movie
இவரது பேட்டியொன்றை கேட்கும் வாய்ப்பொன்று அண்மையில் கிடைத்தது. அதில் இவர் பல திரையுலக ரகசியங்களை கசியவிட்டிருந்தார். அதில் எவ்வாறு ஒருவரின் உண்மையான திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகின்றது என வெளிப்படையாக கூறியிருந்தார். AR.Rahmanன் உதவியாளராக இருந்து பின் தனியான இசையமைப்பாளராக மாறிய பிரவீன்மணிக்கு நட்பின் அடிப்படையில் பல இசையமைப்பு உதவிகளை புரிந்ததாக கூறியிருந்தார். கனடாவில் வசித்து வரும் பிரவீன்மணி இந்தியா வந்து இசையமைத்துவிட்டு செல்வதால் தனது உதவியும் அவருக்கு தேவைப்பட்டதாக சொன்னார். 

Composer PravinMani
மேலதிகதகவல்: AR.ரகுமானின் பெயரில் வந்த சில பாடல்கள் அந்தக்காலத்தில் உதவியாளராக இருந்த பிரவீன்மணியாலும் மெட்டமைக்கப்பட்டன என சந்தேகங்கள் இப்போதும் இருந்து வருகின்றது. முக்கியமாக பரசுராம் பாடல்கள் அந்தவகையறாவை சார்ந்தது எனசொல்லப்பட்டது. உதயா படத்தில் பாடல் இசை ரகுமான் எனினும் பின்னணி இசைக்கு பிரவீன்மணி சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அந்தப்பேட்டியில் மாணிக்கவிநாயகத்தால் சொல்லப்படாதவை.

பிரவீன்மணி இசையமைத்த Little John படத்தில் ”பூவுக்கு பிறந்ததாலே”, ஒற்றன் படத்தில் ”சின்னவீடா வரட்டுமா” போன்ற பாடல்களுக்கான மெட்டுக்கள் தன்னால் (மாணிக்கவிநாயகத்தால்) போடப்பட்டதாகவும் அதில் முதலாமதுக்கான அங்கீகாரம் பாடல் கசட்டில் பெயர் போடப்பட்டதன் மூலம் கிடைத்ததாகவும் மற்றதுக்கு கிடைக்கவில்லையும் என்று கூறியிருந்தார். எனினும் நட்பின் காரணமாகவே அந்த உதவி செய்ததாகவும் இதற்காக யாரையும் தான்குறைபட்டதில்லையெனவும் கூறியிருந்தார்.


மேலும் இப்படியாக உதவியாளர்களால் போடப்படும் மெட்டுக்களும் பெரிய்ய இசையமைப்பாளர்களின் பெயர்களில் இறுதியில் வெளிவருவதாகவும் உண்மையில் யார் உண்மையான மெட்டுக்கு சொந்தக்காரர் என்பது அறியமுடிவதில்லையென்றும் இது தமிழ்சினிமாவின் துர்ப்பாக்கியம் என்றுகூட சொன்னார் மாணிக்கவிநாயகம்.   

3 comments:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

Unknown சொன்னது…

சினிமால கூட எல்லாம் சாதாரணமப்பா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தெரியாத பல தகவல்களை சொன்னதற்கு நன்றி. இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்