பதிவர் கார்த்தியின் Ideaகளை ”ஒஸ்தி”க்காக யுகபாரதி சுட்டாரா?

அதிரடி மசாலா இயக்குனர் தரணியின் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த மாதம் 18ம் திகதி வெளிவரவுள்ள படம்தான் ஒஸ்தி. படத்தின் பாடல்கள் ஏறத்தாழ 2கிழமைக்கு முதலே வெளிவந்திருந்தது. அதிரடியாக தமனின் இசையில் வந்திருந்த பாடல்களுக்கு இளவட்டங்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்திருக்கின்றது. 

சிம்பு மல்லிகாசெராவத்
இந்த பாடல்களில் ”நெடுவாலி அடியே நெடுவாலி” என்று தொடங்கும் ராகுல் நம்பியார் மற்றும் மகதி பாடும் பாடல் யுகபாரதியால் எழுதப்பட்டிருந்தது. அதில் வரி ஒன்று ”கண்” "GUN" என்று rhymingஆகாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த வரிகள் கீழே

அட டுமீலுதான் அட டுமீலுதான்
மாமன் Gunல சுட்டா டுமீலுதான்!!
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்!!
யுகபாரதி
 ஆனால் இதே மாதிரி rhymingகான வரியை பதிவர் ”கார்த்தி” (அங்கென்ன பார்வை? அதாங்க நான்) 2011 காதலர் தின பதிவில் (2011-02-14) உபயோகித்திருந்தார். அதைப்பார்த்து impress ஆகிதான் கவிஞர் யுகபாரதி தனது பாடலில் இதே மாதிரி வரிகளை சிறப்பாக உபயோகித்திருக்கிறார். 2000ல் வெளிவந்த Memento பார்த்து AR.முருகதாஸ் அதைவிட சிறப்பாக திரைக்கதை அமைத்து ”கஜினி” தந்தது மாதிரி. கார்த்தியின் வரிகள் கீழே உங்களுக்காக.

உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ? 
இப்ப சொல்லுங்க சார். கார்த்தியிட்ட சொல்லாம யுகபாரதி Ideaவை ஆட்டைய போட்டது தப்பா இல்லையா? தப்புதானே? உங்கட ஆதரவ பொறுத்து நஷ்டஈடு வழக்கு போடுற பிளான்ல இருக்கிறேன். 
 
டிஸ்கி: இது ஒரு செமமொக்கை பதிவு மாமு! யாரும் சீறியஸா எடுத்து சொறிஞ்சா நான் பொறுப்பில்ல. ஏன் டிஸ்கிய பதிவின்ர தொடக்கத்துலதான் போடணுமா? நாங்க கடைசியா போடுவமுல்ல.

4 comments:

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
மொக்க போடுறீங்கன்னு பார்த்தா?
காதலர் தினப் பதிவினைத் தேடி எடுத்து மரண மொக்கை அல்லவா போடுறீங்க.

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Unknown சொன்னது…

//இது ஒரு செமமொக்கை பதிவு மாமு! யாரும் சீறியஸா எடுத்து சொறிஞ்சா நான் பொறுப்பில்ல//
ஓ! இப்பிடித்தான் டிஸ்கி போடணுமா? சொறியிறவங்கள விடுங்க பாஸ்! மொக்கைன்னு சத்தியம் பண்ணி சொன்னாலும் புரியுதில்ல! :-)

Unknown சொன்னது…

இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!

பெயரில்லா சொன்னது…

பச்சப் புள்ள பாவமடா சாமி!
எனது தளத்தில் நான் சோம்பலாக எழுதிய பதிவு இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்