திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)

September 01 ஏகப்பட்டரோரினது எதிர்பார்ப்புகளுடன் ”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்கள் வெளிவந்திருந்தன. இந்தப்பாடல்கள் தொடர்பில் பலதரப்பட்ட Mixed comments வந்துகொண்டிருக்கின்றன. என்னை பொறுத்தவரை   பாடல்கள் எல்லாம் நல்லா இருந்திச்சு ஆன அல்பம் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போல மக்சிமம் என்று சொல்கிறள அளவு இருக்கல. ஆனா சிலர் ”ராஜாவா இப்பிடி போட்டார்” என்று தாறுமாறாக கேவலப்படுத்துகிற அளவில் இல்லவே இல்லை. இவர்கள் அண்மையில் இளையராஜா போட்ட வேறு படபாடல்களை கேட்டார்களோ தெரியல. இளையாராஜாவின் அண்மைக்கால அல்பங்களுடன் ஒப்பிடும்போது இது சுப்பர் ரகம் எனலாம்.


அண்மையில் வந்த பட பாடல்களில் தாண்டவம் பாடல்கள்தான் எனக்கு இனிமையில் முன்னிலையில் இருப்பது போல தெரிகிறது. இயக்குனர் AL.விஜய்யும் இசையமைப்பாளர் GV.பிரகாஸ்ஸும் இணையும் 4 வது தடவை இது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய்ய வெற்றிகளை பெற்றிருந்தன. அதைப்போலவே எதிர்பார்ப்பை குலைக்காமல் தாண்டவம் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
  
GV PrakashKumar&Saindhavi
இதுவரை காலம் வந்த GV.பிரகாஸ்குமாரின் அல்பங்களில் இதில்தான் இவர் கூடுதலான பாடல்களை பாடியுள்ளார். மொத்தமாக 3 பாடல்கள். முதலாவது ”அதிகாலை பூக்கள்” என்று தொடங்கும் Jingle வகையறா ஒரு நிமிட பாடல். அடுத்தது ”அனிச்சம் பூவழகி” என்ற பாடல் இதில் சின்னப்பொண்ணு வேல்முருகன் சைந்தவியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். கிராமப்புற பாடல்களுக்கு பிரபலமான சின்னப்பொண்ணு GV.Prakashன் இசையில் இணையும் முதல் தடவை இது. Typical சின்னப்பொண்ணுவின் பாடல்களிலிருக்கும் குரலுக்கும் இந்தபாடலில்  உள்ள குரலுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. வித்தியாசமான குரலை சின்னப்பொண்ணுவிடம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் GV.

Sathya Prakash
மூன்றாவது பாடல் ”உயிரின் உயிரே உனது” பாடல். இதில் சைந்தவியின் குரலே பெரும்பாலான நேரத்தில் பயன்பட்டாலும் ஸ்வரப்பிரயோகங்களில் VijayTV Super Singer புகழ் சத்தியப்பிரகாஸ் உடன் சேர்ந்து GV.Prakashம் பாடியிருந்தார். ”பநிஸரீ கஸரிரி மோனம் பநிஸரீ கரிஸாஸரி“ என்ற ஸ்வரப்பிரயோகத்தில் இருவரின் குரலும் சேர்ந்தொலிப்பதை அவதானித்து பாருங்கள். ஜதிப்பிரயோகங்களில் சத்திய பிராகாஸின் குரல்தான் தனித்து ஒலிக்கிறது. ”3” திரைப்படத்தின் Remix பாடல் ”போ நீ போ” பாடலுக்கு பின்பு சத்திய பிரகாஸிற்கு GV மூலமாக இன்னோர் வாயப்பு கிடைத்திருக்கிறது.

Vandana Srinivasan

ஆனால் இந்த அல்பத்தின் மூலம் முக்கியமாக பிரபலமாகப்போகிறவர் பாடகி வந்தனா ஸ்ரீநிவாசன். இதற்கு முன் ”பாலை” என்று இளையவர்கள் எல்லாம் அறிமுகமான படத்தில் ”யாதோ யாதோ ஏதொ நடந்தது” என்ற பாடலை பாடியிருந்தார் இவர்.  இந்த வந்தனா ஸ்ரீநிவாசன் பல Albumகள் தயாரிக்கும் இசையமைப்பாளர்களுக்கு Mashup பாடல்கள் + வழமையான பாடல்களை பாடிவருகின்றவர். Mashup என்பது ஏலவே இருக்கும் பாடல்களை இணைத்து உருவாக்கும் பாடல்களாம். இப்படியான பாடல்களை உருவாக்குவதில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வெளிநாட்டு இசையமைப்பாளர் Shankar Tuckerன் இசையிலும் இவர் ”துளி துளியாய்” என்ற பாடலை பாடியிருக்கிறார்.

தாண்டவம் பட வந்தனாவின் பாடல் கீழே....


தாண்டவம் படத்தில் வந்தனா ஸ்ரீநிவாசன் ”ஒரு பாதி கதவு நீயடி” என்ற பாடலை ஹரிசரனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் அந்தமாதிரி மெலடியாக இருக்கிறது. இவரின் குரல் கேட்பதற்கு பாடகி சின்மயியின் குரல் போலவே இருக்கிறது. பல வாய்ப்புக்கள் இவருக்கு இனி கிடைக்க போவது தெரிகிறது. (அலாப்ராஜுக்கு இவ்வாறு அவரின் ஆரம்ப பாடல்களின் போதே திரைதகவல் பெட்டகம்-III ல் சொல்லியிருந்தோம். இப்போது அவரின் வாய்ப்புக்கள் அனைவரும் அறிந்ததே.) இந்தப்பாடலில் ஹரிசரன் ”நீயென்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி” என்று இழுக்கும் அந்த இழுவைதான் பாட்டின் ஹைலைட். இப்போது இருக்கும் இளமையான பாடகர்களில் ஹரிசரனுக்குதான் எனது முதலிடம்.

Vandana Srinivasan's Rahman Mash Up - Hindi ( Prithvi Chandrasekhar feat)

 


 வந்தனா ஸ்ரீநிவாசனின் சில  பாடல்கள் + Mashups links

 Thuli Thuliyaai" - Shankar Tucker ft. http://www.youtube.com/watch?v=uTnla1nAfI8
Rahman Mashup - Tamil - Prithvi Chandrasekhar feat.  http://www.youtube.com/watch?v=DhNRNS3UPnU&feature=relmfu

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல்...

சில பாடல்கள் படக்காட்சியோடு பார்த்தால் பிடிக்கும் என்பது என் கருத்து... படம் வரட்டும்... பார்க்கலாம்... கேட்கலாம்... நன்றி...

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்