3 (முன்னோக்கி) - திரைப்பார்வை

விஜயின் அப்பா SA.சந்திரசேகர் செய்த புண்ணியத்தால கனக்க காலத்துக்கு பிறகு ஒரு பெரிய்ய ஹீரோவின்ர படம் பாக்கிற வாய்ப்பு கிடைத்தது ”3” படம் மூலம். அவரின்ர புண்ணியத்திலதான் படம்பாத்து விமர்சனம் எழுதுற வெட்டிவேலை இல்லாமல் இருந்தது சந்தோசமாவும்தான் இருந்திச்சு. 


தனுஷின் மனைவி படம் இயக்குகிறார் என்றதாலோ தனுஷ் நடிக்கிறார் என்றதாலயோ கிடைக்காத எதிர்பார்ப்பை உலகமே எதிர்பார்க்காத பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்ததென்னவோ இந்த ”வை திஸ் கொலவெறி” என்ற பாட்டுதான். இப்பிடி ஒரு படம் வருகின்றதென்பதே அந்த பாட்டடைக்கேட்ட பிறகுதான் பலருக்கு தெரிந்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஒரு படத்துக்கு செய்ய வேண்டிய புறமோசன் வேலைகளையெல்லாம் தனியாளாக நிண்டு ஏலவே செய்து முடித்திருந்தது Why This Kollaveri பாடல். படம் என்ன கேவலமாக இருந்தாலும் படத்தின் ஓப்பினிங் இந்த பாடலால் பிச்சுக்கொண்டு போகுமெண்டு பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. 

ஆனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பிடி எகிறியமை ஒரு பக்கம் அட்வாண்டேச்சா இருந்தாலும் அதாவது போட்ட முதலுக்கு மோசமில்லாமல் இருக்கிறத ஓப்பினிங் பார்த்து கொண்டாலும் மற்றபக்கம் அறிமுக இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷிற்கு நிச்சயம் பெருத்த தலையிடிதான். கொஞ்சம் சொதப்பினாலும் குப்பையில் எறிந்து விடும் நிலையில்தான் கொலவெறி ரசிகர்கள் இருந்தார்கள். உண்மையில் Trailer பாக்கமுதல் நான்கூட இந்தப்படம் சும்மா புஸ்வாணமா போயிடும் எண்டுதான் நினைத்திருந்தேன். 2வது trailer பாத்த பிறகுதான் பறுவாயில்லாமல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை வந்திச்சு. 

ஆனால் எதிர்பாத்ததுக்கு மேலதிகமாக நல்லவொரு படத்தை பாத்த திருப்தியை வழங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். Trailerலிலேயே செல்வராகவனின் படங்களின் பாதிப்பு இதில் பிரதிபலிக்கும் என ஊகித்திருந்தாலும் ஏன் படத்தில் கூட அது சில இடங்களில் தெரிந்திருந்தாலும் கூட அறிமுக இயக்குனர் என்ற ஒரு தோற்றப்பாடு இந்தப்படத்தில் தெரியவில்லை. இந்த படத்துக்கு Censor board எப்பிடி U சான்றிதழ் கொடுத்தாங்கள்? எப்பிடி யோசிச்சாலும் தெரியல. U/A சான்றிதழ் கொடுத்திருக்கவேண்டும்.


தனுஷ் இதில் சொல்லி வேலையில்லை. வரவர இவரின் நடிப்பு தேர்ச்சி கூடிக்கூடிக்கொண்டே போகுது. கிட்டத்தட்ட மயக்கம் என்னவில் வெளிப்படுத்திய திறமையை போன்ற ஒரு களமென்பதால் தனுஷ் புகுந்து விளையாடியிருக்கிறார். தனது 2011ல் கிடைத்த தேசிய விருதுக்கு தான் பொருத்தமானவன்தான் என்பதை நிருப்பித்துகொண்டே வருகிறார் இவர். அடுத்து சிவகார்த்திகேயனும் இதில் முக்கிய நண்பன் பாத்திரமாக வந்து தான் வசனம் பேசும் நேரமெல்லாம் தியேட்டர் ரசிகர்களின் கைதட்டல்களை வாங்குகிறார். இதிலும் இவருக்கான வாய்ப்பு நுனிப்புல் மேய்ந்த பாணியில்தான் வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் இயக்குனர் எழிலின் மனம் கொத்தி பறவையிலாவது இவரின் முழுத்திறமையும் வெளிக்கொணரப்படுகிறதா என. 


அடுத்த முக்கியமானவர் ”மயக்கம் என்ன”விலும் அப்பாவி நண்பனா வந்த சுந்தர். பாவப்பட்ட நண்பர் வேடங்கள் இவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. எதிர்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் இவரை பல படங்களில் இவரை பார்க்கலாம். எனக்கு இந்த படத்தின் முதலாவதும் கடைசியுமான (-)Negative aspect ஸ்ருதிஹாசன்தான் இரட்டை பின்னல் போட்ட பாடசாலைக்காட்சிகளில் ஆம்பிளைக்கு பெண் வேஷமிட்டது போல தெரிகிறார். அதோடு அதே 7ம் அறிவில் பாத்த சப்பென்ற நடிப்பு(?). பிடிக்கவில்லை எனக்கு நல்லா முன்னேறணும் கண்ணு. 

சவுண்ட் எபெக்ட்டிற்காக Why this kollaveriன் வெற்றியின்பின் ரசுல் பூக்குட்டியும் இந்த படத்தில் சேர்த்து பணியாற்றியிருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும் பல பாடல்கள் 3நிமிட பாடல்களாக இருந்ததால் அதன் சுவையை அனைவராலும் பூரணமாக சுவைக்க முடியாமல் போயிருந்தமை கவலையான விடயமே. எல்லா பாடல்களையும் குறைந்தளவு 4 1/2 நிமிடங்களாவது எடுத்திருக்கலாம். முதல் படத்திலேயே இவ்வளலு Maturity காட்டிய அனிருத் பாராட்டப்பட வேண்டியவர். Why This Kollaveri பாட்டை 2கோடி செலவில் எடுத்தோம் என்று படக்குழு பீத்தியிருந்தாலும் காட்சியை பாக்க போனால் வெறும் 50ஆயிரத்திலேயே முடித்திருப்பார்கள் போலதான் தெரிகிறது. எதிர்பாத்த உச்ச அளவுக்கு இந்த பாடலை படமாக்கவில்லை என்பது எனது கருத்து. 

மொத்தத்தில் ”3” மூணு முன்னுக்கே போயி தியட்டரில பாக்ககூடிய படம் Love + Thriller Movie. 

2 comments:

எப்பூடி.. சொன்னது…

ஓப்பினிங்தான் படத்தோட வசூலில் 75 % ஐ கொடுக்கும்; அப்புறமா 2 ஆவது வாரம் படம் பெரும்பாலும் படுத்திடும் என்று நினைக்கிறேன்; அதிக திரையரங்கில் ரிலீஸ் என்பதாலும் குறைந்த பட்ஜெட் என்பதாலும் ஓப்பினிங் வசூல் 75 % போட்ட பணத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் லாபம் வரப்போவதில்லை, சிறிது நஷ்டம் வரவும் சந்தர்ப்பம் உண்டு; சில லாஜிக் மீறல்கள், தொய்வான இரண்டாம் பாதி இருந்தார் கூட சிறந்த திரைப்படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை!!! பாடல்கள் படத்திற்கு பெரும்பலம்!!!

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

இதுவரை பார்த்ததில் பாஸிடிவ்வான ஒரு பார்வை உங்களிடமிருந்து தான் வந்திருக்கிறது. ஆனாலும் கதையைப் பார்க்கும்போது படம் ஊத்திக் கொள்ளும் போலத் தோணுது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்