மயக்கம் என்ன (உணர்ச்சிப்பெருக்கு) - திரைப்பார்வை

டிஸ்கி: முதலில் நேரம் கிடைக்காததால் மயக்கம் என்ன-திரைப்பார்வை எழுதுவதி்ல்லையென்றே நினைத்திருந்தாலும், நல்ல படத்தை பற்றி கொஞ்சமாவது சொல்லோணும் என்கிறதால நல்லா பிந்தியும் எனது  பதிவையும் வரவு வைக்கிறேன்.

தனது முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவனில், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றசெல்வராகனின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் (முதலில் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது) காலம் தாழ்த்தி வந்த படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தூள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறைக்கு செல்வராகவன் காலடி எடு்த்து வைத்திருந்தாலும் ”காதல்  கொண்டேன்”  மூலம்தான் இயக்குனராக உலகறியப்பட்டார்.


பின்னர் 7G Rainbow Colony, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடராக வித்தியாசமான படங்களால் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்த இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்று இலகுவாக கூறிவிடலாம். இவரின் படைப்புகளில் எனக்கு பிடித்ததும் இதுவரை (என்னைப்பாறுத்தவரை) தமிழ்சினிமாவை வேறுகோணத்தில் உலகசினிமாக்களுக்கு ஒப்பாக காட்டிய, ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதகளப்படுத்திய ”ஆயிரத்தில் ஒருவன்”ஐதான் குறிப்பிடமுடியும்.

தீபாவளிக்கு வந்த இரண்டு திரைப்படமும் பொதுவான சினிமா ரசிகர்களிடைய பலத்த வரவேற்பை பெற்றிராத நிலையிலும், போதியளவு தியட்டர்களை பெறமுடியாத நிலையிலேயே தீபாவளிப்போட்டியிலிருந்து ”மயக்கம் என்ன” தானாக விலகிப்போயிருந்தது. பின்னர் தீபாவளிக்கு வெளியான படங்கள் தியட்டர்களிலிருந்து ஓரளவு தூக்கப்பட்ட நிலையில் November25அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. செல்வராகவன் இயக்கம் என்பதுதான் படத்தின் பெரிய்யயயயய பிளஸ் பொயின்ற் என்பது மறுபேச்சில்லாத உண்மை. (தனுஷ் படத்தில் இருந்தாலும் கூட)

அதற்கு மேலதிகமாக இந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து தரப்பையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ”ஓட ஓட தூரம் குறையல”, ”அடிடா அவள உதைடா அவள” பாடல்கள் இளைஞர்களையும்  + டப்பாங்குத்து பாடல் விரும்புவோரையும் ”நான் சொன்னதும் மழை வந்துச்சா”, "பிறைதேடும் இரவிலே உயிரே” பாடல்கள் பெண்கள் + மெலடி ரசிகர்களையும் கவர்ந்து மயக்கம் என்னவை ஆகா ஓகோ என எதிர்பார்க்க வைத்திருந்தன.

செல்வராகவன் கதையாசிரியராக இருந்த ”துள்ளுவதோ இளமை” முதல் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த படங்களில் புதுப்பேட்டை வரை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன்சங்கர்ராஜா ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் விலகியதால் (செல்வாவுடன் ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்று அப்போது கூறப்பட்டது. உண்மை தெரியவில்லை. தெரிந்தால் யாராவது உறுதிப்படுத்துங்கள்) அந்தப்பட வாய்ப்பு அப்போது ஜீவி.பிரகாஸ்குமாருக்கு வந்தது.

Rich, GV, Dhanush, Selva, Selva's Wife
 அதில் ஜீவி.பிரகாஸ்குமார் தனது பின்னணி இசையில் பின்னிப்பெடலெடுத்திருந்தார். அந்த Theme Music வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. பாடல்களும் நல்லா வந்திருந்தாலும் 3 பாடல்கள் மட்டுமே அந்த படத்தில் பயன்பட்டிருந்தது. அதன் பின் அப்படியே ”மயக்கம் என்ன”விலும் GV.PrakashKumarயையே அழைத்தார் செல்வா. அந்த நம்பிக்கையை பாடல் மூலம் 100க்கு 200% ஜீவீ.பிரகாஸ் திருப்திபடுத்தியிருக்கார் என்று சொல்லலாம். வழமையாக செல்வராகவன் படங்களில் பாடல்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிறப்பாக அந்தப்படத்திற்குரிய Theme Music இருக்கும். மயக்கம் என்னவிலேயும் அதற்கு ஒரு குறையுமில்லாமல் GV.Prakash நல்லவொரு இசைக்கலவையை வழங்கியிருக்கிறார்.

மயக்கம் என்ன எதிர்பார்ப்பை திருப்தி செய்ததா இல்லையா? என்ற கேள்விக்குமுன் வழமைபோல் அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்கள் போலல்லாது வித்தியசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை தந்ததில் இந்தமுறையும் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். தனது 5வது படத்தில் 3வது முறையாக இணையும் செல்வராகவன் பலரை ”மயக்கம் என்ன” மூலம் திருப்திப்படுத்தியிருந்தாலும் கூட மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையால்; கலர்புள், வேகமாக நகரும் அக்சன் படவிரும்பிகளை இப்படம் திருப்திப்படுத்தவில்லை.அதற்காக ”மயக்கம் என்ன” சரியில்லாத படமி்லை. அவர்களின் ரசனைக்கு ஏற்ற படம் இது இல்லை. அவ்வளவும்தான்.

கதையின் கருவின் மூலம் படத்தை இதைவிட வேகமாக நகர்த்த முடியாதென்பது கண்கூடு. அத்துடன் படத்தை உயிரோட்டமாக தருவதில் படத்தின் காணப்பட்ட தொய்வுநிலை தவிர்க்க முடியாததொன்றாகியிருக்கலாம். அத்துடன் முதல்பாதியில் பல காட்சிகளில் Background score தவிர்க்கப்ட்டிருந்தது. படத்தில் ஒரு Natural flowஏற்படுத்த இது கையாளப்பட்டிருந்தாலும் பலருக்கு இது படம் சரியான இழுவை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்ககூடும்.

இந்தப்படத்தில் தனுஷ், குணச்சித்திர நடிகர் ரவிப்பிரகாஸ் தவிர மிச்ச அனைவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள்தான். தனுஷ் நடிப்பில் அசத்தல்+கலக்கல். படத்தில் பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருந்தார். முதல் தமிழ்படத்திலேயே நடிகை ரிச்சாவிடம் நல்ல முதிர்ச்சி. படத்தில் துணிச்சலான பெண்ணாக வருவதால் எப்பவும் சற்று முறைச்சபடியே நன்றாக நடித்திருந்தார். படத்தின் 2வது பாதியில்தான் ரிச்சாவின் நடிப்பு பளிச்சிடுகிறது. ரவிப்பிரகாஸ்வழமைபோல இந்தப்படத்திலும் HiFiயாக  வந்து பலரது எரிச்சலை தனது பாத்திரம்மூலமாக பெற்றுவிடுகிறார்.


இந்தப்படத்தில் ஆரம்பத்தில் இடம்பெறும் ஹீரோயினின் காதல் தொடர்பான முடிவுகள் பலருக்கு (காதல் செய்யும் பெரும்பாலானோருக்கு) பிடிக்காமலும், ”எமது கலாச்சாரத்தில இப்பிடியா காட்டுவது கேவலம்” என்று சொல்வோரும் தற்காலத்தில் இப்படி இடம்பெற்ற எத்தனை நிகழ்வுகளை பார்க்கவில்லையோ? அல்லது உண்மையை படமா எடுத்தா ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. என்னதான் முதலில் உண்மைகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வந்தாலும் பின்னர் அதேபோல் கணவன்-மனைவி உறவின் சிறப்பை வெளிச்சம்போட்டு காட்டி பலரின் கைதட்டல்களை பெற்றுள்ளார் செல்வா.

”என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி” பிறைதேடும் இரவிலே பாடலில் வரும் இந்த வரிகள் இதற்கு சான்று பகர்கின்றது.

படத்தில் வரும் ”காதல் என் காதல் அது கண்ணீரில” பாடல் படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாமல் வேண்டுமென்று புகுத்தப்பட்ட இடைச்செருகலாக வருகிறது. இந்தப்பாடல் "Why This Kolaveri" பாடல் பாணியில் முதலே வந்த fast beat காதல்தோல்வி பாடலாகும். "Why This Kolaveri"யைவிட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் ஹாரிஸ்ராகவேந்திரா பாடிய ”என்னென்ன செய்தும் இனி” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.படம் மிகவும் மெதுவாக நகருவது போல தோன்றுவது படத்தின் பலவீனம்தான் என்றாலும் அனைவரும் பாக்கவேண்டிய உணர்ச்சி ததும்பும் நல்ல படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தொடர்ந்தும் வித்தியசமான படங்களை தரும் செல்வராகவனுக்கு பாராட்டுக்களும் பொட்டலத்தின் கைதட்டல்களும். மயக்கம் என்ன - உணர்ச்சிப்பெருக்கு

5 comments:

தர்ஷன் சொன்னது…

அருமை, நீங்கள் சொல்வது போல படம் ஒரு உணர்ச்சி பெருக்குத்தான்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

December 25 என்பதை November 25 என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்

Unknown சொன்னது…

Nice review!

sinmajan சொன்னது…

நான் செல்வராகவனின் தீவிர விசிறியில்லை ஆனால் படம் பிடித்திருந்தது :-)

Unknown சொன்னது…

அருமையான விமர்சனம், செல்வா,யுவன் பிரச்சினை எல்லாம் மணி மணி

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்