ஒஸ்தி-திரைப்பார்வை

ஒஸ்தி: இயக்குனர் தரணியின் இயக்கத்தில் குருவியின் சொதப்பலுக்கு பிறகு நீண்டகால இடைவெளிவிட்டு வரும் படம். மசாலா அக்சன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான தரணி இயக்கிய தில், தூள், கில்லி படங்கள் பெற்ற பாரிய வெற்றி அவரை முக்கிய இயக்குனராக நிலை நிறுத்தியிருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசியாக வந்த ”குருவி” அவரது பெயரை கெடுக்கும்விதமா செம மொக்கையாக வந்திருந்தது. விஜயுடன் கில்லி கொடுத்த மெஹா ஹிட்டுக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்திருந்தனர் இருவரும் குருவிக்காக. ஆனால் எதிர்பார்ப்புக்கு தலைகீழாகவந்து, விஜயின் தொடர்ச்சியான புளொப்படங்களில் ஒன்றாக இருந்து விட்டிருந்தது.

அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது.

எனினும் தனது ஆஸ்தான இசையமைப்பாளராகிய ”வித்யாசாகரை” இந்தப்படத்தில் முதன்முறையாக தரணி கழற்றிவிட்டு தமனை பயன்படுத்தியமை பலருக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் தற்காலத்தில் வேகமாக முன்னேறிவரும் இசையமைப்பாளர் தமன் பொறுப்பறிந்து போட்ட மெட்டுக்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைந்திருந்தது. ஒரு பாடலும் மெலடி என்றில்லாமல் அனைத்தும் fastbeat பாடல்களாக வந்திருந்தமை இந்த அலபத்தின் சிறப்பாக இருந்தது.

மேலும் ஹிந்திபடமான ”தபாங்”ன் றீமெக்கான இந்த ஒஸ்தி படத்திற்கு ஒறிஜினல் படத்தில் வந்து பிரபலமானதைபோல் ஒரு டப்பாங்கூத்து பாடல் தேவைப்பட்டதாம். அதற்காக நீண்டடடடடடடடட காலத்திற்கு பிறகு பழம்பெரும் பாடகி LR.ஈஸ்வரி, Solar சாய், TR.ராஜேந்தருடன் சேர்ந்து ”கலாசலா கலசலா” என்று தொடங்கும் ITEM SONGஐ பாடியிருந்தார். இந்தப்பாடல் காட்சியை மேலும் பிரபலபடுத்தும் நோக்குடன் ஹிந்தி கவர்ச்சி நடிகை ”மல்லிகா செரவாத்” இந்தப்பாடலிற்கு மட்டும் ஆட அழைக்கப்பட்டார். அதனால் இந்தப்பாடலில் ”மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிட்றா. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம்!” போன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாடலும் நல்ல ஹிட்டானது.

இந்தப்பாடல்கள் நன்றாக வந்திருந்ததை போல வரிகளும் அதிரடியாக அமர்க்களமாகவே அமைக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் வந்த ”கலாசலா”, ”தமிழ்நாட்டு Copதான்” யுகபாரதியின் வரிகளில் "நெடுவாலி” பாடல்களும் வரிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்ப்பை பாடல்கள் மேலும் அதிகரித்திருந்தன. அத்துடன் வித்தியாசாகரை விட்டுட்டு தனக்கு கொடுத்த நம்பிக்கையை தமன் பாடல்கள் மூலம் காப்பாற்றியிருந்தார்.

இப்படி நல்ல எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்திருக்கிறார் இயக்குனர் தரணி. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே படம் பயணிக்கபோகும் பாதையை நீங்கள் இலகுவில் ஊகித்துவிடக்கூடிய வழமையான பாணியிலான கதை இருப்பது ஒஸ்தியின் பலவீனமே. படம் றீமெக்காக இருப்பதால் (தபாங் நான் பாக்கல) கதையில் பெரிசா மாற்றத்தை எதிர்பாத்திருக்க முடியாதென்றாலும் எதாவது டுவிஸ்டுகளை வைச்சாவது நல்லவொரு வேகமான அக்சன் படமாக சிங்கம் மாதிரி கொடுத்திருக்கலாம். குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


Trailerல பாத்த மாதிரியே சிம்பு பஞ்சுகளை அள்ளி விசிறுகிறார். சிம்புவின் ஓவர்பில்டப்புகள் பிடிக்காதவர்களுக்கு சரியான சலிப்புகளை இக்காட்சிகள் ஏற்படுத்தகூடும். மற்றப்படி பொலீஸ் கெட்ப்பில் நல்ல ஸ்மாட்டாக தெரிகிறார் ஆரவாரமாக எடுப்பாக தனது அக்சன்களை போடுகிறார். பாடல்களில் வழமைபோல உடலைவருத்தி லாவகமாக நடனமாடுகிறார். ”குருவி” படத்தில் வருவது போல், சிம்பு கட்டிடத்துக்கு கட்டிடம் பாயும் காட்சிகளை இதிலும் புகுத்தி சலிப்பூட்ட வைக்கிறார் தரணி. சிக்ஸ்பக் வைத்த காட்சி இருக்கு என்று சொன்னபடியா இறுதிக்காட்சியில் 6பக்  என்று உணரமுடிகிறதே தவிர பெரிதாக சிம்புவிற்கு சிக்ஸ்பக் வந்ததாக காண முடியில்லை.


ஆனால் ரிச்சா இந்தப்படத்தில் சும்மா ஹீரோயின் இருக்கோணும் என்பதற்காக சேர்க்கப்பட்டவர் போலவே வந்து போகிறார். முக்கியமி்லாத நடிப்பு திறமையை காட்ட முடியாத காட்சிகள். ஒஸ்தி, மயக்கம்என்ன விற்கு முதல் வந்திருந்தால் ரிச்சாவிற்கு நடிக்கவே தெரியாது என்று கருத்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்ககூடும். இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?).

பெரிசா ஹீரோயினுக்குரிய அழகுமில்லை. ஏன் மினக்கெட்டு தெலுங்கில நடிச்சவவ  இங்க கொண்டுவந்தாங்களோ? தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா? புதுஆக்கள்தான் வேணுமெண்டா யாரையும் ஒண்ட தூக்கி போடலாம்தானே? ஒரு மசாலா அக்சன் படத்தில நல்ல கலர்புள்ளான ஹீரோயின எதிர்பார்த்தம் தரணி சார்.


சந்தானம் மயில்சாமி வையாபுரி தம்பிராமையா போன்றோர்தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் முக்கியபங்கு. வழமைபோலவே சந்தானம் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாய்க்கிறார். டுமிலுதான் டுமிலுதான் பாடலில் சிம்பு ஆடினதுபோலவே ஆடுவதற்கு நாலு பேரை தனது கை காலை தூக்கச்சொல்லி ஆட வெளிக்கிட்டது காமெடியின் உச்சமாக இருந்தது. சிம்புவின் இறுதி 3படங்களிலும் கணேஷ்(இங்க என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?) இருக்கிறமை குறிப்பிடவேண்டிய விடயம்.

மல்லிகா, சோனுசூட்

வில்லானாக வரும் சோனு சூட்டை நீங்கள் பல தமிழ்படத்தில் பாத்திருக்கலாம். ஹிந்தி ஒறிஜினல் தபாங்கிலயும் இவர்தான் வில்லனாம். நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு போன்ற தமிழ் படங்களில் தீவிரவாதியாக வந்தவர். இந்தபடத்திலும் நல்ல திடகாத்திரமாக வருகிறார். சிக்ஸ்பக் சிம்புவைவிட இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டு நல்ல ஒரு ஹீரோக்குரிய லுக்கை தருவதுடன் 6பக்கையும் இலகுவாக காட்டிவிடுகிறது.

மேலும் ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், நாசர், ரேவதி, நிழல்கள் ரவி என முக்கிய நடிக நடிகைகளும் இதில் தரணியால் உபயோகப்பட்டிருக்கின்றனர். ஹீரோவாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களையே கொடுத்த ரமேஷ் தனது தனிஹீரோ பாதையிலிருந்து விலத்தி குணச்சித்திர வேடங்களையும் இந்த படத்தின் பின் தாராளமாக எடுப்பார் போலதான் தெரிகிறது. 

படத்தில் பாடல்கள் நன்றாக வந்ததைபோல அதை அழகாக, நல்ல அதிரடியாக, ஆட்டம், செட் மூலம்  படமாக்கியிருக்கிறார் தரணி. இதற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கும் முக்கியமானது. ”தமிழ் நாட்டு copதான்” எடுக்கப்பட்ட காட்சியமைப்பும்   ”நெடுவாலி” பாடலுக்கான சிம்புவின் ஆட்டமும். ”கலாசலா”வில் மல்லிகாசெரவாத்தின் குத்தாட்டமும் படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டும் பிளஸ் பாயிண்டுகள். ”வாடி வாடி Cute பெண்டாட்டி” பாடலுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள்.

தரணி குருவியில் விட்ட பெயரை நிலைநாட்ட இதில் சரியாக கஸ்டப்பட்டிருப்பது தெரிந்தாலும், படத்தை ஓரளவு நல்லாக தனது இயக்கும் திறனால் கொண்டு சென்றிருந்தாலும், நல்ல வித்தியாசமான கதை இல்லாத குறையினால் இது பலரிடையே தாக்கத்தையோ சூப்பர் படமென்ற ஒரு பிரமையையோ ”ஒஸ்தி” ஏற்படுத்தமாட்டாது.
மொத்தத்தில் ஒஸ்தி ”பரவாயில்லை & பாக்கலாம்” ரகமே.
ஒஸ்தி - அஸ்திவாரம் சரியில்லைங்கோ!

4 comments:

கேரளாக்காரன் சொன்னது…

Boss sonu sood pathi sollum podhu arunthathi miss pannittingale boss... Good post

Unknown சொன்னது…

ஆம் தாங்கள் சொன்னது போலவே இருந்தது அதுவும் ஏலவே தபாங்க் பார்ததால் பெருசா கவரவில்லை எல்லா காட்சிகளையும் அப்பிடியே சுட்டு இருந்தார்கள் ரேவதி சாவது முதல் வில்லன் சாவது வரை.
// இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?).//

ஏன் இந்த கொலைவெறி?

Suresh Subramanian சொன்னது…

good post.. please read my tamil kavithaigal in www.rishvan.com

ARV Loshan சொன்னது…

ஒஸ்தி :)
கொஞ்சம் விரிவாகவே இம்முறை எழுதியுள்ளீர்கள்.
நம்ம இருவரதும் ரசனைகள் இப்படியான சில படங்களில் ஒத்துப் போகிறது :)

//குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.//
:p

தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா?//
அட நான் கேட்ட அதே கேள்வி :) சேம் பின்ச் சகோ

பி.கு- அன்றே பதிவை வாசித்திருந்தும் பின்னூட்டம் தாமதமாக :)

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்