வேலாயுதம் - திரைப்பார்வை (Not from Vijay's Fan)

டிஸ்கி1: மேலே தலைப்போட அடைப்புக்குறிக்கு ”Not from Vijay's Fan” எண்டு போட்டது, கடும் சினிமா விரும்பி எழுதுற பதிவா இதை எடுத்துக்கொள்ளவே  ஆனா நான் விஜய்க்கு ஒருபோதும் எதிரானவனோ விரும்பாதவனோ இல்லை. அப்பிடி டவுட் இருந்தா எனது காவலன்-அதிரடி வெற்றி நோக்கி திரைப்பார்வையை ஒருக்கா பாருங்கோ.

டிஸ்கி2: வேலாயுதம் trailerஐ பாத்து இது பழைய மசாலாதான் எண்டு  ஊகித்த போதும். VIP showகளை பாத்திட்டு வந்தாக்கள் Mass Entertainment Movie, Super Duper Hit எண்டு கொடுத்த ஓவர்பில்டப் சவுண்டுகளை கேட்டுட்டு கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்துதான் படம் பாக்க போனனான். So அவற்றின்ர தாக்கங்கள் எனது விமர்சனத்தில் இருக்க கூடும். 


அஜித்தின் ”மங்காத்தா”வுடன் போட்டியாக வெளிவரும் என கருதப்பட்டு, பிறகு நன்றாக திட்டமிடப்பட்டு வசூலை தீபாவளிக்காலத்தில் அள்ள Remake-King இயக்குனர் ராஜாவால் களமிறக்கப்பட்ட படம்தான் இந்த வேலாயுதம். இளைய தளபதி விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன், சாயாஜிசிண்டே + இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களுடன் வழமையான விஜயின் படங்களிற்குள்ள எதிர்பார்பை போல் (அதயும் விட கூட) எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் இந்தியாவிலும் தீபாவளிக்கு முதல் நாள் பின்னேரமளவிலேயே விசேட காட்சிகளாக வெளிவந்திருந்தது. வேலாயுதம் தீபாவளியன்று இலங்கையில் ஈரோஸ் திரையரங்கில் முதல் காட்சியில் வேலாயுதத்தை பாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

விஜயின் முந்தைய படம் காவலன் action இல்லாத, காதல் படமாக வந்து அனைவரையும் ஆகா ஓகோ எண்டு சொல்லவைத்து விஜயின் ரசிகர் இல்லாதோரையும் அவரை வியந்து பார்க்க செய்திருந்தது. ஆனால் இந்தப்படம் ஒரு typical vijayன் action மசாலா படமாக இருக்கும் என தெரிந்திருந்தபோதும் எதாவது வித்தியாசமாக இதில் செய்வார்கள்/ சொல்வார்கள் என என்னைபோல சாதாரண சினிமா ரசிகர்கள எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்ப்பை டபுள் மடங்கு திருப்தி செய்யும் விதமாக முதலாவது பாதி அட்டகாசமாக சிரிப்பு வெடிகளுடனும் அதிரடி பாடல்களுடனும் ஒரு தொய்யலோ அலுப்பே இல்லாமல்  சென்று எமது எதிர்பார்பையும் இன்னும் எகிறவைத்தது. விஜய், சந்தானம், MS.பாஸ்கர், சூரி, சிங்கமுத்து என்று அனைவரும் தங்கள் பங்கிற்கு படத்தின் ஓட்டத்தை(flow) குறைய விடமால் செய்து கலக்கியிருந்தனர். 

Comedian Soori
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம், நடிகர் சூரியை தற்போதைய அனேக படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் காணமுடிகிறது. ”வெண்ணிலா கபடிக்குழு”வில் நடித்த மற்றையவர்கள் அடைந்த பிரபலத்திலும்/ வாயப்புக்களையும் விட இவர் அதில் பறோட்டா சாப்பிட்டு உலகளாவிய ரீதியிலேயே பிரபலமாகிவிட்டார். இவரது மிகப்பெரிய பிளஸ் பாயிண்டு இவரது குரலிலுள்ள ஒரு யதார்த்தமான நழுவல்தன்மையான தொனிதான். இதிலும் அலட்டலில்லாமல் கலக்கி தனது எதிர்கால வாய்ப்புக்களை இன்னும் அதிகமாக்கிவிட்டார்.

காமெடிகளில் Rhyming கலந்த காமெடிகளும் இந்த படத்தில் கூடுதலாக காணப்பட்டிருந்தது. படத்தில் ஹன்சிகாவை ஏன் போட்டார்கள்? வேறு ஆக்களா இல்லை?. குண்டுப்பிசாசு போல வரும் இதை கட்டாயம் ஜிம்முக்கு போய் at least வயிறயாவது குறைக்கச்செய்யவேண்டும். அஜித்துக்கு வண்டி இருந்தா சகிக்கலாம் ஏனெண்டா அவர் Hero, ஹீரோயினுக்கு இருந்தா என்ன செய்யுறது? கொஞ்சம் வடிவான முகவெட்டு இருக்கிறதுபோல இருந்தாலும் அதிக எடையால் பல இடங்களில் அசிங்கமாக இருக்கிறார். ஏன் ராஜாவுக்கு வேற ஆக்கள் கிடைக்கலையா? வழமைபோல் ஜெனிலியா அழகாக அடக்கமாக ஜொலிக்கிறார். இந்த படத்திலயே எனக்கு பிடிச்ச ”முளைச்சு மூணு இலையே விடல” பாடலுக்கு trailerஐ பாத்து தனிய ஜெனிலியா தான் வருவா எண்டு பாத்தா அதில ஹன்சிகாவையும் போட்டு பாட்டையே கேவலப்படுத்திவிட்டார்கள். என்னுடன் படம் பார்த்த என் நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அவர்களுக்கு ஹன்சிகாவை கண்ணிலயும் காட்டேலாது.

முதல்பாதி படத்தின் கதைக்கு தேவையான ஆரம்ப கட்டவேலைகள் தான் போய்க்கொண்டிருந்தமையால் கதை ஓட்டத்துடன் யதார்த்தமாக நகைச்சுவைகளை அள்ளிக் கொட்ட முடிந்திருந்தது. ஆனால் 2ம் பாதியில்தான் கதைக்கு உரிய முக்கியமான அதிரடி அக்சன் வேலைகள் களை கட்டியமையால் முதல் பாதி போல் நகைச்சுவைகள் அதிகமாக இல்லாது  சொல்லவந்த கதையை சொல்லி முடிக்கும் வேலையை மறக்காம செய்திடோணும் என்ற போக்கில் இயக்குனர் ராஜா அப்பட்டமாக சொதப்பியிருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் கதை தெரிவில் விட்ட பிழைதான் இது.
உண்மையில் படம் தொடங்கியபோது இயக்குனர் ராஜா சொந்தக்கதையில் (றீமெக் இல்லாது) எடுக்கும் முதல்படம் என்று பேச்சடிபட்டிருந்தது எனினும் இடையிலேயே இது தெலுங்கு படமான ”ஆசாட்”இன் தழுவல் என்று தெரியவந்தது. இயக்குனர் ராஜா கதையில் மாற்றங்களுடன்தான் வேலாயுதம் தயாராகிறது என அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் தேவையான conceptஅவ்வளவும் அப்பிடியே உருவப்பட்டிருப்பதாகவே எனது நண்பர்கள் சொன்னார்கள். என்னனென்ன மாற்றங்களுடன் படம்வந்திருக்கிறதென்பது ஆசாத் பாத்தவர்களுக்கே வெளிச்சம். ஆக மொத்தத்தில் இயக்குனர் ராஜா Remake படத்தை விட்டிட்டு சொந்தமா யோசிச்சு படம் எடுக்கிறது சூரியன் மேற்கில உதிச்சாலும்  வராது போலதான் கிடக்கு. 


என்னதான் remakeஆ இருந்தாலும் இதே மாதிரி கதைகள் ஏற்கனவே பல வந்துவிட்டதால் 2ம்பாதி பெரும்பாலும் சலிப்பாகவே விஜய் ரசிகராக இல்லாதவர்களுக்கு இருந்துவிட்டது. சில serious காட்சிகளையும் பகிடியாக்கி அசத்தியிருந்தாலும் (”நான் எங்க குதிரையில வந்தன். குதிரைதான் என்ன தூக்கிட்டு வந்தது” என்று விஜய் சொல்லும் காட்சி இதற்கோர் உதாரணம். இதை பாக்கும்போது விஜய் தனது பழைய Over buildஐ குறைத்து விட்டார் என்றே சொல்ல தோணுகிறது.)  இயக்குனர் ராஜா அரைச்சமாவான பழைய கதையை  மீண்டும் தூக்கி படத்தை கெடுத்துவிட்டார். 

அப்பிடியே முதல்பாதியை போலவே பகிடியாக கொண்டு சென்றோ (அது நிச்சயமாக விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தாது என்பதால் சாத்தியமே இல்லை என்று நீங்கள் சொல்வது புரிகிறது) அல்லது நல்ல ஒரு அக்சன் thriller storyயையாவது புகுத்தி படத்தை நகர்த்தியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் ”படம் மக்ஸா  சான்ஸே இல்லை” என்று அனைவரும் சொல்வதை யாராலும் தவிர்க்க முடியாது போயிருக்கும். 

Director Raja, Hanshika, Saranya & Vijay
படத்தில் பாடல்கள் பலரை முதலே கவர்ந்திருந்திருந்தது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். (ஆனால் வேட்டைக்காரனுக்கு விஜய் அன்ரனி கொடுத்த அதிரடி பாடல்களுடன் ஒப்பிடும்போது ஒரு40% கூட வேலாயுதம் பாடல்களில் இல்லை என்பது எனது கருத்து). ஆனால் வழமையான விஜய் படபாடல்கள் போல அனைத்து பாடல்களும்  எவ்வாறோ ஹிட் அகிவிட்டிருந்தது. உண்மையில் எனக்கு பிடிக்காமல் இருந்த பாடல்கள் கூட dTs ஒலிநயத்துடன் சத்தமாக கேக்கும்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். 

ஒரு பாடலும் வெளிநாடு சென்று படமாக்கப்படவில்லை போலதான் தெரிகிறது. ”மாயம் செய்தாயோ” பாடல் எடுக்கப்பட்ட விதமும் செட்டும் எடிட்டிங்கும் விஜயின் costumes and style அற்புதமாக இருந்தது. Editor VT.விஜயன் நன்றாகவே பாடுபட்டிருந்தமை அதில் தெரிகிறது. Chillaxபாடல் என்று நினைக்கிறேன் அதில் விஜயின் ஆட்டம் வழமைபோல் Super.

மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம்.  விஜய் ரசிகர்களுக்கு  நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.

4 comments:

Unknown சொன்னது…

பயபுள்ள...தப்பிச்சே!!
விஜய் பட விமர்சனத்தில எதுக்கு தல வயிறை பற்றி நக்கல் ஆஹ?
மவனே ரெண்டு பக்கத்தாலையும் அடி வாங்க ஆசையோ???
ஹிஹி
விமர்சனம் அழகு!
விஜய் ரசிகர்களுக்கு இது good அல்ல...சூப்பர்!!
கலெக்சன் நிச்சயமாக பிச்சிக்கும்+வெற்றிப்படம்!!
அவரேஜ் வெற்றி அல்ல அதனை விட மேல!!

RAJA (செ. இராசமாணிக்கம்) சொன்னது…

super
super
super vimarsanam

Unknown சொன்னது…

நல்ல, நடுநிலையான விமர்சனம் பாஸ்!

எப்பூடி.. சொன்னது…

வேலாயுதம் முற்பாதி எப்படி இருக்கும், பிற்பாதி எப்படி இருக்குமென்று எப்படி இருக்கும் என்று நான் முன்னரே எதிர்வு கூறியது பொய்யாகவில்லை என்பதை உங்கள் விமர்சனம் உணர்த்தியுள்ளது. விஜய், ராஜா இருவருமே ரீமேக்காலேயே வாழ்பவர்கள், அவர்கள் இருவரும் ஒன்று சேரும்போது சொந்தப்படம் எடுப்பார்கள் என நம்பியது எம் குற்றம்தான் :-)

அப்புறம் மைந்தன் சிவா ROCKS :-)

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்