மங்காத்தா (Tasty ”மங்கோ”) - திரைப்பார்வை

டிஸ்கி: வழமைபோல படத்தின் ஒரு துளி கதையும் இதில் சொல்லப்படவில்லை. நான் அஜித்தின் ரசிகனோ விஜயின் எதிர்ப்பாளரோ இல்லை. நான் ஒரு சூர்யா ரசிகன்.

இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் படம் தொடங்கிய காலத்திலேயே அதிகரித்திருந்தமைக்கு இருவர் மட்டுமே காரணமாக இருந்திருந்தனர். இவர்களில் முக்கியமானவர் ”தல” அஜித் மற்றையவர் இளவட்டங்களின் அபிமான இயக்குனர்களில் ஒருவராகியுள்ள வெங்கட்பிரபு. ஒரு மாஸ் ஹீரோ, பல ரசிகர்களின் அபிமான நடிகராகவுள்ள அஜீத் நடிக்கும் எந்தவொரு (யார் இயக்குனர் என்று பார்க்காமல் கூட) படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அபரிமிதமாக கிளம்புவது வழமை அது தவிர்க்கமுடியாததும் கூட. அதேபோல் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது கடந்த படங்கள் மூலம் பெற்ற  நன்மதிப்பு போன்ற 2முக்கிய காரணங்களால் ”மங்கத்தா” படம் ஆரம்பித்த காலத்திலிருந்து  இந்தப்படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் பலதரப்பட்ட இடங்களில் பேசப்பட்டு வந்திருந்தது. 


இவர்கள் இருவர்தான் படத்தின் தூண்களாக ரசிகர்களால் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டாலும் வெங்கட்பிரபுவுடன் வழமைபோல் இணையும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரம் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா படத்தின் எதிர்பார்ப்புக்களை படம் வருவதற்கு இரண்டு மாத்திற்கு முன்பிருந்து, இன்னும் பல மடங்காக அதிகரித்திருந்தார். பாடல்கள் வந்து ஒரு மாதம் கூட முழுதாக ஆகாத போதிலும் ஏலவே ஒரு பாடல் வெளிவந்தகாலத்திலிருந்தே பாடல்கள் மற்றும் படம் பற்றிய பேச்சுக்கள் பலமாக அனைத்து தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருந்தது. தரமான ஒலித்தெளிவு + ஒழுங்கமைப்பான இசை + பலராலும் ரசிக்கும் பாடல்கள் மூலம் "மங்காத்தா" பாடல்கள் பலரிடம் வரவேற்பை பெற்றது. மங்காத்தாவின் சில பாடல்கள் முந்திவந்த பாடல்களை நினைவுபடுத்தினாலும் ரசிக்கும் ரகத்தில் அனைத்து பாடல்களும் இருந்தது. 


வெங்கட்பிரபு இயக்கிய சென்னை600028, சரோஜா  வெற்றிப்படங்களிற்கு மத்தியில் ”கோவா” சற்று சறுக்கியிருந்தாலும்  அதுவும் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ”மங்கத்தா”வும் நிச்சயம் கேவலமாக இருக்காது என்ற மினிமம் கரன்ரியை வெங்கட்பிரபு இந்தப்படத்திற்கு,  படம்பார்க்க முதலேயே ஏற்படுத்தியிருந்தார். அஜித்குமாரின் அண்மைய படங்கள் ”ஏகன்”, ”அசல்” மெகா மொக்கைகளாக இருந்திருந்தாலும் தனது 50வது படமான ”மங்காத்தா” மூலம் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களுக்கும் இருந்தது. 
வைபவ், வெங்கட்பிரபு, அஜித்
இவை அனைத்தையும் இவர்கள் பூர்த்தி செய்தார்களா? என்று கேட்டால் ஆமாம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அஜித் மட்டுமல்லாது அர்ஜுன், பிரேம்ஜீ, வைபவ், அரவிந், ஜெயபிரகாஷ், லக்ஸ்மிராய், திரிஷா, அஞ்சலி, அண்ரியா என்று பல நன்றாக அறியப்பட்ட நடசத்திரங்களை கொண்டு கோர்க்கப்பட்டு வந்திருக்கின்றது ”மங்கத்தா”. வெங்கட்பிரபுவின் படங்களில் வழமையாக வரும் நடிகர்களே இதிலும் ஏராளம். மிகவும் சிறிய கதைக்கருவை கொண்டு படத்தை சுவாரஸ்யமாக ரசிக்கும்படியாக தேவையான மசாலா அம்சங்கள் அனைத்தையும் கலந்து அடித்து சிறப்பாக கொடுத்து தனது முத்திரைய மீண்டும் பதித்து விட்டார் இயக்குனர். ஆங்கில படங்களிலிருப்பது போலவே படத்தின் கதை செல்வதாலோ என்னவோ படத்தில் உள்ள பல லாஜீக் மீறல்கள் கூடுதலாக உறுத்தவில்லை. 


எனது நண்பன் ஒருவன் கூறியது போல வழமையான வெங்கட்பிரபுவின் படத்தை போலவே பல நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் காட்சி நேரங்கள் பாத்திர முக்கியத்துவம் பெரும்பாலும்  சமமாகவே உள்ளது. ஏன் அஜீத்துக்கு கூட மற்றவர்களையும்விட கூடுதலான காட்சிகள் என்று இல்லை. அதேபோல் முத்துக்கு முத்தாக 4ஹீரோயின்கள் இருந்தும் வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களை போல தேவையான குறைவான காட்சிகளுடன் வெறும் டம்மி பீசுகளாக வந்து போகின்றனர். அவர்களுக்கு கதைப்படி முக்கியமான பாத்திரங்கள் எதுவுமில்லை.

பல இடங்களில் அஜித்தின் நடிப்பு நன்றாக இருக்கின்றது. நரைமுடியுடன் அழகாக தெரிகிறார். வழமைபோல கையை மட்டும் வைத்து நடனமாட முயற்சிக்கிறார். படத்தின் முதலில் வரும் சண்டைக்காட்சியில் பெரிய வயிற்றுடன் கஸ்டப்பட்டு தடுமாறி சண்டையிடுவது திரையில் தெளிவாக தெரிகிறது.இந்தப்படத்தில் வரும் தியேட்டர் காட்சி ஒன்றில் ”விஜய்” நடித்த காட்சி ஒன்று காட்டப்படுகின்றது. அதன்மூலம் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அஜித் மறைமுகமாக சொல்ல முயல்வது போல தெரிகிறது. ஆனால் எங்களில சிலதுகள் இன்னும் தல தளபதி எண்டு சண்டை போட்டுக்கொண்டு இருக்குதுகள். ஓய்நதபாடைக்காணவில்லை.

”விண்ணைத்தாண்டி வருவாயா”வில் உள்ள காட்சிகளினதும் கதையினதும் முக்கியத்துவத்தோடு ஒப்பிடும்போது இதில் திரிஷாவே நடிக்கவில்லை எனலாம். சும்மா எழுத்தோட்டத்தில போட்டு ஏமாத்திட்டாங்க சார். த்ரிஷாவைவிட லக்ஸ்மிராயிற்கு காட்சிகள் அதிகம்.(ஒப்பிடும்போது அண்மையில் வெற்றி பெற்ற காஞ்சனா முனி2 ல் கூட லக்ஸ்மி ராயிற்கு குறைவான காட்சிகள் போல்தான் தெரிகின்றது). 

அஜித் திரிஷா லக்ஸ்மிராய்
அஞ்சலி, அண்ரியா படத்தில் இருக்கின்றனர் அவ்வளவுதான். அஞ்சலி ஒரு பாடலிலும் வருகின்றார். பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின், அர்ஜுன், ஜெயப்பிராகாஸ் போன்றோர் படத்தில் முக்கியமானவர்கள் என்பதால் கூடுதலாக படத்தில் பரவிக்கிடக்கின்றனர். பிரேம்ஜியின் நகைச்சுவைகள் பல சீரியஸான காட்சிகளிலும் வந்து சிரிப்பை வரவழைக்கின்றது. கூடுதலான சண்டைக்காட்சிகள் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். 

யுவனின் இசையாலும் ஒளிப்பதிவாளரின் குளுகுளு காட்சிகளாலும் பாடல்கள் கண்ணிற்கும் செவிக்கும் இனிமையாக இருக்கின்றன. முக்கியமாக இதில் உள்ள அருமையான Theme Music பல இடங்களில் Background scoreஆக பயன்பட்டு ஒரு பிரமாண்ட படம் என்ற தோற்றப்பாட்டை பிரமையை ரசிகர்ளிடத்தே ஏற்படுத்துகிறது. ”வாடா பின்லேடா” பாடல் காட்சியில் எடிட்டரின் பங்கு நன்றாக தெரிகிறது. அந்தப்பாடல் முழுவதும் வெவ்வேறு ஆடம்பர வீடுகளின் உள்ளே எடுத்தது போல் செயற்கையான காட்சிகளாக அமைந்துள்ளன. ஆரம்பத்தில் அந்தக்காட்சிகள் கண்ணிற்கு இனிமையாக அமைந்தாலும் தொடர்ந்து பார்க்கும்போது ஒருவித எரிச்சலை உண்டு பண்ணுவதுபோல தோன்றுகின்றது. ஆனால் ஒருவித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்.

மொத்தத்தி்ல ”மங்காத்தா” ஒரு சுவையான ”மங்கோ” சாப்பிட்ட திருப்தியை தருகின்றது.  

எனக்கு இந்த பாடலில் பிடித்த வரியையும் பதிந்து விடுகிறேன். 
ஆடாம ஜெயிச்சோமடா! நம்மேனி வாடாம ஜெயிச்சோமடா! ஓடாம ரன் எடுத்தோம்! சும்மாவே உக்கார்ந்து வின் எடுத்தோம்!

பிற்குறிப்பு: மேலே நான் கூறிய கருத்துக்கள் எல்லாம் இது எந்தவொரு மொழி படத்தையும் அப்பிடியே கொப்பி செய்து உருவாக்கவில்லை என்ற கணிப்புடனேயே சொல்லப்படுகிறது. அப்பிடி எதாவது நடந்து இருந்தால் மேலே சொன்னவற்றுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

9 comments:

test சொன்னது…

நல்லா இருக்கு உங்க திரைப்பார்வை! படம் பார்க்க வேண்டும்!

Unknown சொன்னது…

பார்வை திருப்தி!!
ஹிஹி ஆனாலும் நீங்க ஒரு அஜித் ரசிகரோ என்று ஒரு சின்ன சந்தேகம்..வெகு சீக்கிரத்தில் கண்டு பிடிக்கிறேன்!

Mathuran சொன்னது…

படத்த விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு பாஸ்..

நிரூபன் சொன்னது…

வித்தியாசமான விமர்சனப் பகிர்வு நண்பா.

நிரூபன் சொன்னது…

படத்தின் கருவிற்கு முக்கியத்துவம் கொடுக்காது,
பாடல், இசை, இயக்குனரின் பங்களிப்பு எனப் படத்தின் ஏனைய அம்சங்களை நீங்கள் அலசியுள்ள விதமானது படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலை மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

maruthamooran சொன்னது…

கார்த்தி....!

நல்லாயிருக்கு உங்கட பார்வை. எல்லா ஹீரோக்களின் படங்களும் ஹிட்டடித்தால்தான் ரசிகர்களுக்கும் நல்லது. ஏனேில், படம் ஹிட்டாக வேண்டுமென்றால் குறைந்த பட்சமாவது படம் நன்றாக இருக்கவேண்டும்.

N.H. Narasimma Prasad சொன்னது…

மங்காத்தா விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

vivek kayamozhi சொன்னது…

thanks for ur positive comment....

thala won the game...!!!!

நிகழ்வுகள் சொன்னது…

விமர்சனம் அழகு... ஆரம்பத்திலேயே டிஸ்கியில் வெள்ளைபுறா பறக்க விட்டிருக்கீங்க போல ))

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்