காவலன்-அதிரடி வெற்றி நோக்கி!!!

மற்றைய பதிவர்கள் போல் திரைப்படம் ஒண்டு புதுசா வந்தவுடன் அப்படத்திற்கான விமர்சனத்தை நானும் எழுதவேண்டும் என நான் விரும்புகின்றபோதிலும்; எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு எழுதுவதால் ஒரு படத்திற்கே எக்கச்சக்கம் விமர்சனங்கள் வந்து பதிவுலகை நிறைத்துவிடும். அதில் நான் எழுதுவதை படிப்பவரை பொறுக்கித்தான் பிடிக்க வேண்டும். எனவே படம்பற்றி எழுதுவதிலிருந்து நானாகவே ஒதுங்கிவிடுவதுண்டு.

எனது பதிவுகளில் இதுவரை ஒரேயொரு படத்திற்க்குதான் விமர்சனம் எழுதினேன் (ஈரம்). அந்தப்படத்தை பார்த்து விமர்சனம் எழுதியோர் குறைவென்பதால் படம் வந்து இரண்டுமாதத்திற்கு பிறகும் ஜாலியாக அதை எழுதி போதிய வரவேற்பை பெற்றேன். ஆனாலும் ஒருமாறுதலுக்காக நான் ரசித்துப்பார்த்த காவலன் பற்றி எனது பார்வையை இதில்தர முயலகிறேன். முதலிலேயே சொல்கிறேன் நான் சூர்யாவின்ரசிகன்.


விஜயின் தொடர் சறுக்கல்களின்பின் பாரிய எதிர்பார்ப்பில்லாமல் வந்தபடம்தான் காவலன்.  ஆனாலும் BodyGuard என்ற மலையாளப்படத்தின் றீமேக் என்பதாலும், Guaranty இயக்குனர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள சித்திக்கின் இயக்கம் (தமிழில் Friends, எங்கள் அண்ணா, சாதுமிரண்டால்) என்பதாலும், அசினின் நீண்டகாலத்திற்கு பின்னரான தமிழ்மீள்வருகை  இப்படத்தில் என்பதாலும் காவலனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் இருக்கவில்லை. எதுஎப்படியிருப்பினும் திரையிடுவதற்கு ஆரம்பம் முதலே காணப்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் முறியடித்து, கடைசிகட்ட இழுத்தடிப்பு வேலைகளையெல்லாம் பொறுத்து கொண்டு  காவலன் திரையரங்குகளில் ஒருவாறு திரையிடப்பட்டது.


முக்கியமான நடிக நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தாலும்,  கூடுதலான காட்சிகள் விஜய் அசின் வடிவேல் மித்ரா போன்றோரை சுற்றி சுற்றியே செல்கிறது.  கனக்க காலத்திற்கு பிறகு திரையில் முகம்காட்டும் ரோஜவும் கூட சிறிய நேரத்திற்கே வந்து செல்கிறார். ஆனாலும் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து நடித்திருப்பது சிறப்பு. அண்மைக்கால வழமையான வடிவேலுவின் காமடிக்காட்சிகள் போலல்லாது சித்தீக்கின் முத்திரை குத்தப்பட்ட காமடிக்கட்சிகளால் வடிவேல் ஜொலிக்கிறார். வடிவேலுவின் அண்மைக்கால படங்களில் உள்ளதுபோல் காமடி என்ற பெயரில் அரைச்சமாவையே அரைக்காது கொஞ்சம் வித்தியாசமாக தனது பாணியில் காட்சிகளை அமைத்து படத்திற்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளார் இயக்குனர் சித்திக். சுருங்ககூறின் வடிவேல் படத்தின் சவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய பலம்.



நீண்டகாலத்தின் பின் வந்த கனவுக்கன்னி அசின் நடிப்பால் கவருகிறார். முதற்பாதியில் கலகலப்பாக வருவதோடு மட்டுமல்லாது பிற்பாதியில்  கண்ணில் இளையோடும் சோகத்தோடும் வருகிறார். ஆனாலும் பழைய அசின் அழகை காவலனில் காணமுடியவில்லை. என்னவோ குறை தெரிகிறது. விஜய் தனது பங்கை செவ்வனே செய்துள்ளார். ஒரு கெட்டப் (உருவ) சேஞ்சும் இல்லை. ஆனால் கலக்குகிறார் நடிப்பில். மிக நீண்டகாலத்திற்கு பிறகு விஜயின் சிறப்பான நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம். ஒரு பாடல் காட்சிக்கு மாத்திரம் டோப் ஒன்றை போட்டுவந்து  பயப்பிடுத்துகிறார். ஏன்  ஒழுங்காகதானே படம் முழுவதும் இருந்தார். மாற்றம் என்ற பெயரில் ஏனோ இந்த வீண்முயற்சி. ???


விஜயின் நிறைய படங்களுக்கு (நிலவேவா, கில்லி, திருமலை, மதுர, ஆதி ) சூப்பர் ஹிட்பாடல்களை கொடுத்த வித்தியாசாகர்தான் குருவியிற்கு பிறகு இப்படத்திலும் இசை. பாடல்கள் அனைத்தும் நல்ல ரகம்தான். என்றாலும் வழமையான வித்தியாசாகரின் இசையுடன் ஒப்பிடும்போது இவை சிறிது தொய்வு என்றே கூறவேண்டியுள்ளது.

கலகல காமடியுடன் சுவாரஸ்யமாக செல்கிறது முதற்பாதி. அடுத்தபாதி காதல், உருக்கம், காமடி கலந்து முதற்பாதியின் சுவாரஸ்யத்தை குறைக்காது அற்புதமாக பயணிக்கிறது. இந்தப்படத்தின் ஆணிவேர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்தான். யாரும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமாக திருப்பங்களுடன் கதைக்களத்தை கொண்டு சென்று சிறப்பாக முடிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் சொதப்பியிருந்தால் படத்தின் இறுதியில் படம்பற்றிய மக்களின் நிலைவேறாக இருந்திருக்க கூடும். சிலவேளைகளில் இதமாதிரி முந்திவந்துட்டுதே என்று ரசிகர்கள் கூறி நிராகரித்திருக்கலாம். ஆனால் அந்த பேச்சுக்கே இங்கு இடம் இல்லை.

சித்திக்
படத்தில் காமடி அக்ஸன் காதல் செண்டிமெண்ட என்று அனைத்தையும் அளவாக கலந்து சுவாரஸ்யமாக படத்தை தந்த இயக்குனர் சித்திக்குக்கு ஒரு பாராட்டு கொடுக்கலாம். படத்தில் தொய்வேற்படமால் பார்த்ததில் எடிட்டர் கௌரி சங்கருக்கும் முக்கிய பங்குண்டு. பொங்கலுக்கு வெளிவந்த மற்ற படங்களான ஆடுகளம் சிறுத்தை போன்றனவற்றுடன் ஒப்பிடும்போது எந்தவித தொலைக்காட்சி  விளம்பரங்களோ ஆர்ப்பாட்டஙகளோ இன்றி வெளிவரும்போதே தோன்றியிருக்க வேண்டும் இது ஒரு ஹிட் படம்தான் என்று. படத்தில் பாடுபட்டோருக்கு அது தெளிவாக விளங்கியிருக்கிறது. அதுதான் துணிவுடன் களமிறக்கியிருக்கிறார்கள் காவலனை. 


 மேலும் ஆடுகளம்: Seriousness கூடிய  படமென்பதாலும், சிறுத்தை மசாலா முத்திரை குத்தப்பட்டிருப்பதாலும், குடும்பத்துடன் செல்வோர் விரும்பும் படமாக மாற சாத்தியம் கூடுதலாக இருப்பதாலும் இந்தமுறை RACEல் ஜெயிக்கும வாய்ப்பு காவலனுக்கு ஏராளம்.

காவலன் = உண்மைக்காத(வ)லன்.

பி.கு: விமர்சனம் என்ற பெயரில் படக்தையை திருப்பி சொல்ல எனக்கு தெரியாது. படத்தின் கதை இதில இல்லையே எனக்குறைபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை. நிறைகுறைகள் எனது கருத்து மட்டுமே எனது விமர்சனத்தில் வரும்.

18 comments:

Subankan சொன்னது…

காவலன் எனக்கும் பிடித்திருந்தது. என்ன விஜய்க்கான முதல் 20 நிமிடத்தையும், அசினுக்கான கடைசி 10 நிமிட இழுவையையும் தவிர்த்திருக்கலாம் ;-)

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

///முதலிலேயே சொல்கிறேன் நான் சூர்யாவின்ரசிகன்.////

நல்ல வேளை விஜய் ரசிகன் என்று கூறியிருந்தால் பதிவுலகத்தில் உங்களை காமெடி பீஸாகியிருப்பார்கள், நானும் விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன், காரணம் எங்கள் வீட்டார்கள் அனைவரும் விஜய் ரசிகன்.

காவலன், நாளை தான் பார்க்க வேண்டும்

ம.தி.சுதா சொன்னது…

நீண்ட நாளுக்குப் பின் விஜயின் ஹீரோயிசம் இல்லாத அருமையான படம் ஒன்றை பார்த்தேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

தர்ஷன் சொன்னது…

எனக்கென்றால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை
ஆனால் அண்மைக்கால விஜய் படங்களுடன் மட்டும் ஒப்பிடுகையில் ஓகே ரகம். ஆடுகளம் பார்த்தீங்களா பாஸ் கலக்கல்

Unknown சொன்னது…

நீங்கள் ஒருமுறை முடிந்தால் body gaurd மலையாளப்படம் பாருங்கள். விஜயின் தற்போதைய சூழலில் இது ஒரு மாற்று முயற்சி என்று வேண்டுமானால் சரி, ஆனால் விஜய் போகிற போக்கில் சாதாரணமாக நடித்துவிட்டு போயிருக்கிறார், திலிப் செய்ததில் 50 சதம் கூட செய்யவில்லை. தனது முதலாளி பெண்ணை போனில் பேசும் பெண் குறை சொல்லும் காட்சியிலும் பின்னர் அந்த பெண்ணை உயர்த்திசொல்லும் காட்சியிலும் நம்மை மறந்து கண்கள் கலங்கிவிடும் திலிபின் நடிப்பில் விஜய் அதை சும்மா செய்திருக்கிறார்.

தறுதலை சொன்னது…

அரசியல் வியாதிகளுக்கு சோனியா காலை நக்க வேண்டிய சுய நலம் இருந்தது.

அனால் இவனுக்கு என்ன அப்படி ஒரு தேவை? எதற்காக அந்த உளறுவாயனைப் போய் சந்தித்து வாழ்த்து சொன்னான்? ராஜபக்ஷே மனைவியுடன் விருந்து சாப்பிட்ட அசினைத்தான் சதை நாயகியாகப் போடவேண்டும் என்று அடம் பிடித்தான்?

இவனுடைய படம் நல்ல படமோ, மொக்கை படமோ - வெளிவந்து இணையத்தில்கூட எவ்வித புறக்கணிப்பும் இன்றி ஓடுவது நம்முடைய சொரணையற்ற நிலையையே காட்டுகிறது.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

kajee சொன்னது…

நல்ல விமர்சனம் கார்த்தி.....

yeskha சொன்னது…

என்ன இருந்தாலும் தியேட்டர்கள் குறைந்த கதையால் காவலனை விட ரேஸில் முந்துவது ஆடுகளம்... கூடவே சிறுத்தையும்...

ஷஹன்ஷா சொன்னது…

நல்ல விமர்சனம்..படத்தின் கதையை தவிர்த்தது அருமை...

காவலன் என்னை கவர்ந்த மற்றொரு தளபதியின் படம்....!

test சொன்னது…

நன்றாக எழுதியுள்ளீர்கள்! நான் இன்னும் படம் பார்க்கவில்லை!

கார்த்தி சொன்னது…

சுபாங்கன், என் நண்பர்கள் சிலரும் முதல் 30நிமிடங்கள் சற்றுஇழுவை என்று சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு தொய்வையும் படம் முழுவதிலும் உணரவில்லை.

யோ அண்ணா அது உண்மைதான். நான் உண்மையில் சிறுத்தை படம்தான் வெற்றிபெறுவதைதான் விரும்பினேன். ஆனால் என்ன இரு்தாலும் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். உங்களது விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன். குடும்பத்துடன் பாக்க நல்லபடம்.

உண்மைதான் மதிசுதா அண்ணா!

கார்த்தி சொன்னது…

தர்ஷன் ரசிப்புத்தன்மை வேறுபடுவது தவிர்க்க முடியாது! எனக்கென்னவோ காவலன் நன்றாக பிடித்திருந்தது. ஆடுகளம் முதலேயே பார்த்துவிட்டேன். உங்கள் பதிவில் கூட காமண்ட் போட்டேனே.
ஆனால் வந்தவற்றில் ஆடுகளம்தான் மிகச்சிறந்த கதையம்சமுள்ள யதார்த்த சினிமா. ஆனால் தியேட்டர் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க விரும்புவோரை ஆடுகளம் திருப்திப்படுத்த முடியாது போகலாம்.

சி.தவநெறிச்செல்வன் நான் BodyGuard படம் இன்னும் பாக்கல. விரைவில் பாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் கூறுவதுபோல் திலீப்பின் நடிப்பு விஜயைவிட சிறப்பாக இருக்கலாம். காவலன் மாற்றுமுயற்சி என்று சொல்வதைவிட நல்லபடம் எனலாமே!

தறுதலைசார் நான்வரல நான்வரல. அரசியல் வேண்டாம்

நன்றி கஜீ ஜனகன் மற்றும் ஜீ.

கார்த்தி சொன்னது…

Yeshka பொறுத்திருந்து பார்ப்போம். சிறுத்தையும் நல்ல காமடி படம்தான். ஆனால் கூடிய சண்டைக்காட்சிகளால் இடையிடையே வெறுக்க வைக்கிறார்கள். ஆடுகளம்தான் மிகச்சிறந்த கதையம்சமுள்ள யதார்த்த சினிமா.
சுருங்ககூறின் மூன்றும் நல்லபடங்கள்தான். ஒன்றும் கடைசிவரை தோற்காது!

Jana சொன்னது…

நாளைதான் பார்ப்பதற்கு நேரம் கிடைத்துள்ளது. வெற்றி சந்தோசம்.

Unknown சொன்னது…

Thanks for your unbiased review karthi..:-)
Yeah Vidyasakar would have done better than this and last song hairstyle irritated me as well...
I did feel first half an hour bored,.......
Keep writing reviews as well...
Unable to see kavalan review among our bloggers,i do not know the reason..............:-)

கரன் சொன்னது…

சி.தவநெறிச்செல்வன் சொன்னது…
//தனது முதலாளி பெண்ணை போனில் பேசும் பெண் குறை சொல்லும் காட்சியிலும் பின்னர் அந்த பெண்ணை உயர்த்திசொல்லும் காட்சியிலும் நம்மை மறந்து கண்கள் கலங்கிவிடும் திலிபின் நடிப்பில் விஜய் அதை சும்மா செய்திருக்கிறார்.//


நீங்கள் சொல்லும் காட்சிகள் Bodyguard இல் நீண்டு வந்திருக்கும். அந்தக் காட்சியில் சில விசயங்கள் அதிகமாகச் செய்ய/கதைக்க திலீப்புக்கு scope இருந்தது.

இதைவிட விஜய்க்கு scope இருக்கும் பல காட்சிகளில் (குறிப்பாக படத்தின் பிற்பாதியில் வரும் காதற் காட்சிகளில்) திலீப்பை overtake செய்திருப்பார்.
அந்தக் காட்சிகளில் விஜயின் கண்களையும், அவரது expressions களையும் அவரது உடல்மொழியையும், அவரது குரலின் ஏக்கத்தையும் ஒருமுறை நீங்களும் பாருங்கள்.(இதில் சில காட்சிகளில் திலீப்புக்கு நடிக்க scope குறைவு. உ-ம்: Park scene...)

திலீப் சிறந்த நடிகரென்பது எனக்கும் தெரியும்.
ஆனால், உங்கள் கருத்தில் நீங்கள் விஜய் கொஞ்சம் கூட நடிக்கவேயில்லை என்பது போல் எழுதியுள்ளீர்கள்.

உண்மையைச் சொன்னால், சில காட்சிகள் Bodyguard இல் நன்றாக இருந்தன. சில காட்சிகள் காவலனில் நன்றாக இருந்தன.

பெயரில்லா சொன்னது…

இருந்தாலும் ஒரு கட்டி பிடியில.... உயிர் தோழிக்கே துரோகம் செய்வதாக காட்டுவது ரொம்ப ஓவர்..

பெயரில்லா சொன்னது…

யாரது.. பாடல் நன்றாக உள்ளது.அத்தோடு இசையும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்