மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்

எப்பூடி வலைத்தளத்திருந்து நண்பர் ஜீவதர்ஷன் இந்த தொடர்பதிவுக்கு 2கிழமைக்கு முன் அழைந்திருந்தார். என்றாலும் அதன்பின்னரான நாட்கள் மிகவும் அலுப்பாக கழிந்தமையால் என்னால் உடனடியாக அவரது வேண்டுகோளை நிறைவு செய்யமுடியவில்லை. என்றாலும் ஒரு மாதிரியாக இப்போ நேரம் எடுத்து பதிவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னியுங்க சார்!

கடும் தமிழ் சினிமா ரசிகனான நானும் இற்றைவரை பார்த்த தமிழ்சினிமாக்கள் கணக்கிலடங்காதவை. ஆனாலும் பார்த்த ஏராளமான படங்களின் கதைக்கரு மட்டும் நினைவிலிருந்தாலும் காட்சிகளை சொற்ப காலத்திலேயே மறந்து விடுவேன். பார்த்த ஒரு சில படங்களை தவிர மற்றைய படங்களின் காட்சிகள் எல்லாம் மறந்து போய்விட்டேன். (நல்ல படங்களை கூட). எனக்கு நினைவிலிருக்கும்  படங்களை கொண்டு இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த மூன்று படங்களை பற்றி எழுதவே அதிக இடத்தை பிடித்துக்கொண்டமையால் இவற்றுடனேயே நிறுத்தி கொள்கிறேன்.

இத்தொடர்பதிவை எழுத விரும்பினால்  நிகழ்வுகள் கந்தசாமியையும், வானம் தாண்டிய சிறகுகள் ஜீ யையும் அழைக்கிறேன்.

அன்பே சிவம்

இதுவரை பார்த்த படங்களில் போற்றக்கூடிய என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் முதல் இடம் இந்தப்படத்திற்குதான் உண்டு. ஒருத்தன் வாழ்க்கை பற்றி நுண்ணறிவை பெறுவதற்கு கட்டாயம் பாக்க வேண்டிய படம். இந்தப்படத்தை படம் என்று சொல்வதிலும் ஒரு பாடம் (lesson) என்று சொன்னால் மிகப்பொருத்தமாகும் என நினைக்கிறேன்.  நான் A/L படிக்கும் காலத்தில் பார்த்து புல்லரித்த படம் இது. நான் வாழும் வாழ்க்கை சரிதானா என்று என்னையே கேள்வி கேட்க வைத்த படம். இந்த படம் பார்த்த பின்புதான் கொஞ்சமாவது மாறினேன் என்று பெருமை படுவதுண்டு. இந்த படத்தில் சுனாமி பற்றியும் கமலஹாசன் சொல்லியிருப்பார். இந்தப்படத்தின் கதை கமலஹாசனாலும் இயக்கம் சுந்தர்.Cயாலும் மேற்கொள்ளப்பட்டது. கமேர்ஷியல் இயக்குனரான சுந்தர்.C படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவியிருந்தார். வித்தியாசகர் இசையாக படத்தில் வாழ்ந்திருப்பார்.

துடிப்பான இளைஞரான மாதவனும் வாழ்க்கையில் பல அடிபட்ட  அனுபவசாலியான கமலஹாசனும் ஒரு விமான நிலையத்தில் சந்திப்பதோடு கதை ஆரம்பித்து உயிரோட்டமாக பயணிக்கிறது. ஆரம்பத்தில் கமலஹாசனின் பல தத்துவங்களையும் படிப்பினைகளையும் உதாசினம் செய்யும் மாதவன் பின்னர், கமலஹாசனின் பிளாஸ்பக் மற்றும் அவரின் உயரிய குணத்தை அறிந்து கொண்டு அவரின் அன்பிற்கு அடிமையாகிறார். தனது திருமணத்தில் கலந்து கொள்ளவும் அழைக்கிறார்.
அழைப்பையேற்று அங்கு சென்றபோதுதான் கமலஹாசனுக்கு மாதவன் திருமணம் முடிக்க இருக்கும் பெண் தான் தன்னை காதலித்த பெண் என்றும் அவளின் அப்பாவான வில்லன் நாசரால் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. எனினும் கமலஹாசன் அந்த திருமணத்தை குழப்பாது நாசரிடம் வெருட்டி தொழிலாளிகளுக்கு கிடைக்கவேண்டிய ஊதியத்தை பெற்றுக்காடுக்க வழிசெய்து விட்டு மாதவனுக்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு புறப்படுகிறார். என்றாலும் கோபம்கொண்ட  நாசார் கமலை கொல்ல சந்தான பாரதியை அனுப்புகிறார்.



அப்போ கமலை வெட்ட வந்து மனசு மாறுகிறார் சந்தான பாரதி. அப்போது ”உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ தெரியாது எனக்கு நிறைய இருக்கு.” என்கிறார். அப்போ கமல் ”எனக்கும் இருக்கு” என்று சொல்லும் தருணத்தில் ”எந்த சாமி?” என்று சந்தான பாரதி கேட்கிறார். அப்ப அவரையே காட்டி சொல்லும் வசனங்கள் மறக்க முடியாதவை. இந்த படம் என்னை வாழ்நாள் முழுவதும் பாதித்ததில் முதல் இடத்தில் உள்ள படம்.

காதல்

2004ல் வெளிவந்த மிகச்சிறந்த யாதார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று. பல புதுமுகங்களை கொண்டு இயக்குனர் சங்கர் தான் இயக்காமல் தயாரித்த முதல் படம் இது. படம் நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் மிகவும் சம்பாதித்த படம். நடிகை சந்தியா, வில்லன் நடிகர் தண்டபாணி, இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் என புதுமுகங்கள் அறிமுகமான படமாக இது இருக்கின்றது. படத்தில் ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் எனினும் ”உனக்கென இருப்பேன்” என ஹரிசரன் பாடிய பாடல் மெகா ஹிட் ஆனது. இந்தபடமும் நான் A/L படிக்கின்ற காலத்தில் வந்திருந்தது. அதோடு பல சந்தர்ப்பங்களில் பாக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் நழுவி இறுதியாக பல்கலைக்கழகத்திற்கு வந்த பின்பே பார்க்க சந்தர்ப்பம் கைகூடி வந்திருந்தது.

படம் முழுக்கவே சோகமே இழையோடும் வகையில் செதுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சிகள் அனைவரின் கண்களிலும் ஈரத்தை வரவழைக்கின்றன. ஏழை பரத்தும் பணக்கார வீட்டு பிள்ளை சந்தியாவும் வீட்டுக்கு தெரியாம சென்னை ஓடி வந்து சரியா கஸ்டப்பட்டு கல்யாணம் முடித்து இருக்கும்போது ஒருவாறு பெண்வீட்டார் கண்டுபிடித்து இருவரையும் கோரமாக பிரித்து விடுகின்றனர். அதன்பின் சந்தியா வேறொரு கல்யாணம் செய்து கொள்கிறார். பரத்தும் எப்பிடியாவது பிழைத்து ஒழுங்கா இருப்பார் என்று நினைத்து கணவனுடன் வாழ்ந்து வருகையில், வீதயில் பரத்தை ஒரு விசரனாக காண்கிறார்.

காதல் படத்தின் தெலுங்கு பதிப்பின் Climax. தமிழ் youtubeல் கிடைக்கவில்லை.


அப்படியே மோட்டார் சைக்கிளிலிருந்து மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே ஒருவருக்கும் தெரியாமல் விசர் பரத்தை பார்க்க வீதிக்கு தேடி வருகிறார். பரத்தை கண்டதும் தனக்குதானே தலையிலடித்துக்கொள்கிறார். அப்போது சந்தியாவை தேடிவந்த கணவன் சந்தியாவை தலையில் தடவிக்கொடுத்து அனைத்தையும் உணர்ந்தவராக பரத்தையும் தங்களோடு சேர்த்து கூட்டி செல்கின்றர். இந்தப்படத்தை பொறுத்தவரை இறுதிகாட்சிகளாக முக்கியமாக மேலே குறிப்பிட்ட இரு காட்சிகளை சொல்லலாம். (பரத்தையும் சந்தியாவையும் பிரித்தது, சந்தியா பரத்தை விசரனாக கண்டு கொள்வது). இந்தக்காட்சிகளில் காணப்பட்ட யாதார்த்த தன்மைகளும் கவலை நிறைந்த காட்சிகளும் பலரது மனதில் சுமையை ஏற்படுத்தி விட்டு காதலினால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்த்தி நிற்கின்றது.

7G Rainbow Colony

நான் இங்கே தெரிவு செய்த இந்த படமும் மேலே குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்கு அண்மையில் வெளிவந்த படம்தான். 2004 ல் இந்தப்படம் வெளிவந்தது. காதல் கொண்டேன் பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனால் திரைக்கதை எழுதி இயக்கி வெளிவந்த படம். தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலையே இந்தப்படத்திலும் ஹீரோயினாக பயன்படுத்தியிருந்தார். பின்னர் இவரே செல்வராகனின் காதலியாகவும் மாறி திருமணம் வரை சென்று இப்போது விவாகரத்தும் பெற்றிருக்கார். இந்தப்படத்தில் தயாரிப்பாளர் A.M.ரத்னத்தின் மகன் ரவிக்கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து Filmfare விருதையும் பெற்றிருந்தார். இவரது கீச்சிடும் குரல்தான் இவரது முக்கிய சிறப்பம்சமாக எனக்கு படுகிறது.

இந்தப்படமும் காதல் படம்போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவுக்கும் பணக்கார ஹீரோயினிக்குமான காதல்கதைதான். ஆரம்பத்தில் கலகலப்பாக இளமை துடிப்புடன் செல்லும் இந்தப்படத்தில் இப்படியொரு serious ஆன சோக காதல் கதை வரும் என்று படம் தொடங்கிய சந்தர்ப்பத்தில் சொல்வது கடினமாக இருந்திருக்ககூடும். ரவிக்கிருஷ்ணாவுக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையில் ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்த சந்திப்புக்கள் பின் காதலாக மாறிவிடுகிறது. ஆனால் சோனியா ஏற்கனவே இன்னொருக்கு நிச்சயிக்கபட்டு இருந்திருந்தாள். இவர்களின் காதலை அறிந்து சம்மதிக்காத ஒரே colonyல் இருந்த பெண்வீட்டார் பின் வேறு இடத்திற்கு  மாறிவிடுகின்றனர்.

எனினும் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ரவிக்கிருஷ்ணாவை ஹோட்டல் அறையில் சந்திக்கிறார் சோனியா. இந்த ஒருநாள் ரவிக்கிருஷ்ணாவுடன் கழித்ததே போதும் வீட்டை எதிர்த்து சொல்லாமல் ஒடிசென்று திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார்  சோனியா. இவ்வாறு கதைவழிப்பட்டுக்கொண்டு சோனியா வீதியை கடக்கும்போது லாறியுடன் கோர விபத்துக்குள்ளாகிறார். அதை பார்த்த ரவியும் சம்ப இடத்திற்கு போக எத்தனிக்கையில் விபத்துக்குளாளகிறார்.



நினைவு திரும்பி எழும்பி நண்பர்களிடம் சோனியாவை பற்றி கேட்கிறார் ரவிக்கிருஷ்ணா. அவர்கள் நன்றாக இருக்கிறார் என்று பொய் சொன்னபோதும் அவள் இறந்ததை அறிந்து கொள்கிறார். சோனியாவின் தந்தைக்கும் உங்கள் மகளை தானே நண்பியின் கல்யாணம் என்று பொய் சொல்லி வரவழைத்ததாகவும் கூறுகிறார். பின் சோனியாவின் இழப்பை தாங்க முடியாமல் பலமுறை தற்கொலை முயற்சிசெய்தபோதும் அவை வெற்றி தரமால் சோனியாவே ஆவியாக வந்து இப்படியான முயற்சிகளை கைவிடகோருவதாக உணர்ந்து, அவளுடன் தொடர்ந்து சந்தித்து பேசுவதாக நினைத்தே வாழ்ந்து வருகிறார் ரவிகிருஷ்ணா.

இந்த படத்தை செல்வராகவன் எடுத்திருந்த விதமும் யுவன் சங்கர்ராஜவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை சோகத்தின் மறு உருவமாக இறுதி கட்டங்களில் மாற்றியிருந்தது.

21 comments:

ம.தி.சுதா சொன்னது…

ஐஐஐ சுடு சோறுப்பா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

ம.தி.சுதா சொன்னது…

அன்பே சிவத்திற்கு முதல் இடம் கொடுத்ததே தங்கள் ரசனையை புடம் போட்டுச் சொல்லுது கார்த்தி...

Unknown சொன்னது…

உங்கள் ரசனையும் நல்லது தான் பாஸ்..எல்லாரும் இப்பிடியே போனால்..நான் என்னத்தை போடுவது??மூணு மொக்கை க்ளைமாக்ஸ் போடவா??
எப்பூடி கோபிச்சுகுவாரோ ஹிஹி

Mathuran சொன்னது…

மூன்று படங்களுமே அருமையான படங்கள்...
பகிர்வுக்கு நன்றி

நிகழ்வுகள் சொன்னது…

வணக்கம் பாஸ் , மூன்றும் சிறப்பான தெரிவு. எனக்கென்னமோ இதில் காதல் பட கிளைமாக்ஸ் தான் பார்த்ததில் அதிகம் பாதித்து கொண்டது..

நிகழ்வுகள் சொன்னது…

///இத்தொடர்பதிவை எழுத விரும்பினால் நிகழ்வுகள் கந்தசாமியையும், வானம் தாண்டிய சிறகுகள் ஜீ யையும் அழைக்கிறேன். /// என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி பாஸ், சினிமா என்றாரே கொஞ்சம் பின்னுக்கு தான் நான். எதோ என்னால் முடிந்ததை முயற்சிக்கிறேன்..

சுதர்ஷன் சொன்னது…

மற்ற இரண்டு படங்களையும் விட அன்பே சிவம் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக வித்தியாசமானது . நல்ல தெரிவுகள் .
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்.அனைவரிடமும் சேருங்கள்

kobiraj சொன்னது…

மூன்றுமே மிக சிறந்த படங்கள் . சங்கா வுக்கு வாக்கு அளியுங்கள். http://kobirajkobi.blogspot.com/2011/07/vip.html

maruthamooran சொன்னது…

அன்பே சிவம் எனக்கு மிகப்பிடித்த இறுதிக்காட்சிகளைக் கொண்டது.

காதலும் நல்லதுதான்.

அண்மையில், தெய்வத்திருமகள் பிடித்திருந்தது.


நல்லயிருக்கு பாஸ்.

பெயரில்லா சொன்னது…

மிக அழகான அலசல்..

Unknown சொன்னது…

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் கார்த்தி! அன்பேசிவம் எப்போதும் எனது அதிவிருப்பத்துக்குரிய படம்!
என்னை வேற நம்பி எழுத சொல்லியிருக்கீங்க! முயற்சி செய்கிறேன் பாஸ்!

நிரூபன் சொன்னது…

உங்களின் மன உணர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் கருத்தாளம் + வித்தியாசமான கருக் கொண்ட படங்களின் கிளைமாக்ஸினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
எனக்கும் 7ஜீ ரெயின்போ, அன்பேசிவம் பிடிக்கும்.

john சொன்னது…

anbe sivam is a very good flim boss

M.R சொன்னது…

அருமையான படங்கள்

மாலதி சொன்னது…

மூன்று படங்களுமே அருமையான படங்கள்...

Rizi சொன்னது…

நல்லாயிருக்கு..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அன்பே சிவம் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக வித்தியாசமானது . பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கார்த்தி சொன்னது…

நன்றி ம.தி.சுதா அண்ணா. அன்பே சிவத்தை முதன்மை படுத்தாமல் வேறெதை முதன்மை படுத்தலாம் அண்ணா?

அதையாவது போடய்யா மைந்தன் சிவா! எப்பூடி கடும் கடுப்பில இருக்காராம்.

நன்றிகள் மதுரன் நிகழ்வுகள் S.Sudharshan kobiraj

மருதமூரான் அண்ணா தெய்வதிருமகளும் இதனுடன் சேர்க்கவேண்டியதுதான் ஆனால் அது அண்மையில் வந்தமையாலும் அதன் கதையை இங்கே எடுத்துக்காட்டி பாக்காதவர்களுக்கு கதையை சொல்ல நான் விரும்பவில்லை!!

கார்த்தி சொன்னது…

நன்றிகள் ஷீ-நிசி, john, M.R, மாலதி, யோ வொய்ஸ் (யோகா), Razzi, இராஜராஜேஸ்வரி, நிரூபன்!

விரைவில் எழுதுங்கள் ஜீ உங்கள் ரசனையையும் பார்க்க வேண்டும்!

எப்பூடி.. சொன்னது…

மைந்தன் சிவா போல டோஸ் குடுக்காமல் தொடர்பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி :-) மிகவும் லேட்டான பின்னூட்டம்தான், அனால் தங்கள் கருத்துக்கு சற்று எதிரான பின்னூட்டம்தான் :-)


அடிப்படையில் நானொரு ரஜினி ரசிகர், ஆனால் கமலை தாழ்த்தி எழுதுவதில்லை எனபது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், எப்போதும் நான் கமலின் திறமையை குறைத்து மதிப்பிடுவதில்லை, இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் அன்பே சிவம் திரைப்படத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்பதை கூறத்தான். அன்பே சிவம் பல வாழ்க்கை தத்துவங்களை சொல்கின்றது, மறுக்கவில்லை. ஆனால் அதிலே கமல் வழமைபோல இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தியிருப்பார், அன்பே சிவம் - அருமையான விடயம், ஆனால் சிவம் மோசமானது என்கின்ற கமலின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை!!!!

கடவுளை இந்துக்கள் மட்டும்தானா வழிபடுகிறார்கள்? கமல் ஏனைய மதங்களை தாக்காது தொடர்ந்து இந்து மதத்தை தாக்குவதன் நோக்கம் அவரது பிறப்பின் பாலிருக்கும் வர்க்கத்தில் தான் உடன்பாடில்லாதவர் என்பதை காட்டவே என்பதுபோல் தொன்று கிறது!!!!


அதற்காக ஏனைய மதங்களை கமலை கிண்டல் செய்ய சொல்லவில்லை, கடவுள் இல்லை என்கிற கமலுக்கு இந்துமதம் மட்டும்தான் ஏன் கையில் கிடைக்கிறது ? என்கின்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ளதுதான் !!!!!! அருமையான திரைக்கதையில், ஆதர் A விசனின் அருமையான ஒளிப்பதிவில், வித்யாசாகரின் நேர்த்தியான இசையில் அழகான வசனங்கள் மற்றும் திறமையான நடிப்பு திறனில் வெளிவந்த அன்பே சிவத்தின் மூலக்கதையில் சொருகப்பட்ட குறிப்பிட்ட விடயம் எனக்கு மொத்த படத்தையுமே மனதோடு ஒன்றிக்க வைக்கவில்லை.


காதல் கிளைமாக்ஸ் என்னை தங்களளவிற்கு உருக்கவில்லை எனினும், 7G செல்வாவின் ஸ்பெஷல் கிளைமாக்ஸ்.....

கார்த்தி சொன்னது…

எப்பூடி நானும் ஒரு கமல் ரசிகனல்ல! ஆனால் கடும் சினிமா ரசிகன். யார் நடித்து படம் நல்லா இருந்தாலும் ரசிப்பேன். அதே போல்தான் கமலின் படங்களும். கமலின் அண்மைய மன்மதன் அம்பு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. அதோடு கமலின் பல கொள்கைகளில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. (நீங்கள் சொன்னபடி நாஸ்திக போக்காக தான் இருப்பது மட்டுமல்லாது மற்றவர்களை சீண்டுவது போன்றது உட்பட).

ஆனால் அன்பே சிவத்தில் கூற வந்தது சைவ சமயத்திற்கு எதிரானது போல பட்டாலும். நான் அதில் கூறவந்த உட்கருத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அன்புதான் கடவுள் என்ற கொள்கை மட்டுமே எனக்கு அந்த படத்தில் தெரிந்தது. எனக்கு அது பிடித்திருந்தது. ஆனால் ரசனைகள் ரசிக்கும் திறன்கள் வேறு படலாம். (எனது இன்னோர் நண்பனுக்கும் கமலால் இந்தப்படம் பிடிக்காமல் போய் விட்டதாக கூறியிருந்தான்)

உண்மையில் காதல் படத்தை விட மனத்தை நெகிழ வைத்த கிளைமாக்ஸ் உள்ள படங்களை பார்த்திருப்பினும் சடுதியாக எழுதும்போது வேறெதுவும் ஞாபகம் வரவில்லை. இப்ப சுப்பிரமணியபுரம் போன்ற சில படங்கள் ஞாபகம் வருது. எனக்கு ஞாபகம் ஒழுங்காக இருக்கிறதில்லை சார்!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்