தெய்வத்திருமகள் - திரைப்பார்வை

வழமை போல இந்த திரைப்பார்வையிலும் படத்தின் கதை ஒரு துளியளவேனும் சொல்லப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் படக்தையை திருப்பி சொல்ல எனக்கு தெரியாது. அது விமர்சனமும் ஆகாது. படத்தின் கதை இதில் இல்லையே எனக்குறைபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை. படத்தின் நிறைகுறைகள் எனது பார்வை மட்டுமே எனது விமர்சனத்தில் வருகின்றது.

விக்ரம் Baby Sara
 தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் சில படங்களை பார்க்கும்போதும் அதற்கு விமர்சனம் எழுதும்போதும் அவை எங்களை பெருமைப்பட வைக்கும். அப்படியான ஒரு படம்தான் தெய்வத்திருமகள். இதற்கு விமர்சனம் எழுத கிடைத்ததே ஒரு பாக்கியம் ஒரு பெருமை.

ஆரம்பத்தில் வெளிவந்த ரெயிலர்கள், ஜீவி.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள், இயக்குனர் விஜய்  (மதராசப்பட்டினம் பாதிப்பின் பின்)+ விக்ரம் படம் என்ற காரணங்களால் இந்த படம் பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் படத்தின் வெளியீடு தள்ளிதள்ளி போயும்கூட ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. இயக்குனர் விஜயின் இதற்கு முந்தைய  3படங்களும் போதிய வரவேற்பை பெற்ற போதும் ஆகா ஓகோ என போற்றப்பட்டது மூன்றாவதாக வந்த மதராசப்பட்டினம்தான். எனவே நாலாவது படமான இதற்கு எதிர்பார்ப்பு பெரிதாக கிளம்பியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

சினிமாவில் முக்கியமாக உள்ள ஒவ்வொரு துறையிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆட்களை கொண்டே இந்தபடம் நேர்த்தியாக இயக்குனர் விஜயால் தொடங்கப்பட்டது. நடிப்புக்கு விக்ரம், காமடிக்கு சந்தானம், ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா, படத்தொகுப்புக்கு அன்ரனி, இசைக்கு ஜீவி.பிரகாஸ்குமார், பாடல்களுக்கு நா.முத்துக்குமார் என்று முன்னிலையில் இருப்பவர்களையும் மேலும் பல நடிகர்களையும் சிறப்பாக ஒருங்கிணைத்து தமிழ்சினிமாவில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  தெய்வதிருமகளை தந்துள்ளார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கு நிச்சயமாக, குறைந்த பட்சம் ஒரு தேசியவிருதாவது கிடைக்கப்போவது உறுதி.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்று நினைக்கிறேன் ஒரு பேட்டியி்ல் ”தமிழ்சினிமாவில் தற்போது இயக்குபவர்களில் உங்களுக்கு பிடித்த இயக்குனர்கள் யார்?” என்று கேட்டபோது இயக்குனர் விஜயின் பெயரையும் வேறு சிலரோடு சேர்த்து சொல்லியிருந்தார். மேலும் ”மதராசப்பட்டிணம்” போன்ற படத்தை என்னால் என்ன செய்தும் எடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். தெய்வதிருமகளை பார்த்தபின் பாலச்சந்தர் நிச்சயம் அப்படி சொன்னதுக்கு பெருமைப்பட்டு தனது கொலரை தூக்கிவிட்டுக்கொள்வார்.

இயக்குனர் விஜய் விக்ரம்
எழுத்தோட்டம் ஆரம்பிக்கும்முன் ”இந்தப்படத்தில் மிருகங்கள் துன்பப்படுத்தப்படவில்லை” என்றும் அறியதந்து படத்தை ஆரம்பிக்கின்றனர். சிலர் இந்தப்படத்திற்கு ஏன் இப்படி போட்டனர்? அப்படியான காட்சிகள் இல்லைதானே என்று யோசித்திருக்ககூடும்.  படத்தில் சின்னஞ்சிறு குருவிக்குஞ்சு நிலத்தில் விழுந்து அதை பூனை கடிக்க முயல்வது போலவும் பின் அது காப்பாற்றப்பட்டு கூட்டில் விடப்படுவது போலவும் ஒரு காட்சி வருகின்றதல்லவா அது Graphics துணை கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம். யாரவது வழக்கு கிழக்கு போட்டு தங்களை பிரச்சனையில் மாட்டிவிடக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாகவே இப்யடியான வாசகத்தை போட்டிருக்கலாம்.

”டாக்டர்” சியான் விக்ரம் என வரும் எழுத்தோட்டத்தை இந்த படத்தில்தான் முதன்முதலில் பாக்கிறேன். (இரவணன் படத்தில் இவ்வாறு போடப்பட்டதா? எனக்கு தெரிந்தவரை இல்லை)

இந்தப்படத்தின் முதல்பாதி மிகவும் அருமையாக நெஞ்சை தொடும் வகையில் sentimental காட்சிகளாக நிறைந்து ஆனால் அலுப்படிக்காது மெதுவாக நகருகின்றது. அடுத்தபாதி சற்று வேகமாக சுவாரஸ்யமாக சென்று மீண்டும் sentimental காட்சிகளுடன் சங்கமிக்கிறது. படத்தில் சில இடங்களில் பெரிய Logic மீறல்கள் இருக்கின்றபோதிலும் யாரும் அதை பெரிது படுத்த முயல்வார்களாயின் சினிமாதான் இது என்று புரியாதவர்கள் முட்டையில் மயிர் புடுங்குபவர்கள் என்றுதான் அர்த்தம்!

ஆங்கில உபதலைப்புக்களுடன் (English Subtitles) படம் வெளிவந்தமையால் இயக்குனர் விஜய் இப்படத்தை வேறு நாட்டு திரைப்பட விழாக்களுக்கும் Oscar Awards Nomination போன்றவற்றிக்கும்  அனுப்புவார் என்ற ஊகத்தை கிளப்புகிறது. (Oscar போட்டிக்கு தகுதிபெற அந்தப்படம் English Subtitlesடன் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிடில் போட்டியில் கலந்து கொள்ள முடியாது). எனினும் இந்தப்படம் வேறு ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்பதால் எவ்வாறாக பாக்கப்படும் என்பது தெரியவில்லை.

நடிப்பில் இருவர் அனைவரின் நெஞ்சத்தையும் தொட்டு நிற்கின்றனர். விக்ரமும் சிறுபிள்ளையாக வரும் Baby சாராவும்தான் அவர்கள். பின்னி பிடலெடுத்து பட்டையை கிளப்பிவிட்டனர். இருவருக்கும் தேசியவிருது கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. விக்ரம் மீண்டும் தான் சிறந்த நடிகர் என்பதை உறுதிப்படுத்த, சிறுமி சாரா முகபாவத்தில் காட்டும் சுக துக்கங்கள் வியக்கவைக்கிறது. இந்தளவு சிறு வயதில் இவ்வளவு திறமையா? அழகிய செந்தழிப்பான பால்வடியும் இந்தக்குழந்தையின் முகத்தைபார்த்தாலே துன்பங்கள் பறந்தோடிவிடும் போல தெரிகிறது.

அனுஷ்கா விக்ரம்

படத்தில் இரு நாயகிகள் எனினும் அனுஸ்காவின் வேடம் மட்டுமே கனதியானது. வந்தவேலையை செவ்வனே முடித்து செல்கிறார். அமலாபாலுக்கு முக்கியமற்ற பாத்திரம் என்பதால் சும்மா இடைக்கிடை காட்சிகளில் வந்து போகிறார். இவரின் பாத்திரப்படைப்பு பெரிதாக எடுபடவில்லை.  வழமைபோலவே மாப்பிள்ளை வேடத்தில் கார்த்திக்குமார். (ஆனா இந்தமுறை வெளிநாட்டு மாப்பிள்ளை இல்லை). நல்ல நடிகாரான இவருக்கு இப்படி மிகச்சிறிய வேடங்கள் கொடுப்பது எனக்கு சரியாக படவில்லை . (விஜயின் 2வது படமான பொய்சொல்லப்போகிறோமில் இவருக்கு முக்கிய ஹீரோ வேடம் கொடுத்தமையாலோ என்னவோ இதில் இவரை கௌரவ வேடம் போல் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் விஜய்).

அமலா பால்

முதல்பாதியில் சந்தானம் வந்த காட்சி மிகச்சிறிய அளவே என்பதால் தனது வழமையான மொக்கைகளை முதலில் ஒழுங்காக போடமுடியாது போயிருந்தாலும் பிற்பாதியில் சரியான Seriousஆன நேரங்களிலும் பலரையும் கலாய்த்து படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல பெரிதும் உதவியிருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சக்காட்சியில் வந்தாலும் சிரிப்புக்களை வரவைக்கிறார் பிளாக் பாண்டி. MS.பாஸ்கர் மற்ற படங்களில் வருவதைப்போலல்லாது கொஞ்சம் serious ஆக வருகிறார். YG.மகேந்திரனின் பாத்திரத்தில் ஆரம்பத்தில் வசனங்கள் இல்லையே என்று சொல்லுமளவிற்கு இருந்தாலும் முகபாவத்தால் பாத்திரத்தின் குணவியல்பை வெளிப்படுத்துகிறார். இறுதிக்கட்டங்களில் மட்டும் கொஞ்சம் பேசுகிறார். நாசர் வழமைபோல நடிப்பில். அனுஸ்காவின் நண்பியாக வருபவர் பச்சையாக சொன்னால் ”ஒரு நல்ல பிகர்”.

MS.பாஸ்கர் விக்ரம் பாண்டி

பாடல்கள் ஏலவே வெளிவந்து அனைத்தும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்து. விக்ரத்தை 2பாடல்கள் பாடச்செய்தது மட்டுமல்லாது அந்த பாடல்களை சூப்பர்ஹிட் ஆக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவிசிறி பிரசாத்தை (கந்தசாமி படத்தில் DSPன் இசையில் விக்ரம் பாடியது நினைவிருக்கலாம்) போல் GV.பிரகாஸ்குமாரை சாருகின்றது. இந்தப்பாடல்களில் GV.பிரகாஸ் பாடிய ”வெண்ணிலவே” பாடலே எனக்கு மிகவும் பிடித்திருந்து. ”யாத்தே யாத்தே” பாடலுக்கு பின் GV உருகி உருகி பாடிய பாடல்இது. SP. பாலசுப்பிரமணியத்தின் குரலில் ”ஜகிடதோம்” பாடல் பலருக்கு உத்வேகத்தை புதுசக்தியை அளிக்ககூடிய பாடலாக இருக்கிறது. முத்துக்குமாரின் வரிகள் பாடலுக்கு இன்னும் வலுச்சேர்க்கின்றது. பெரும்பாலான இடங்களில் படத்தின் Theme Music, Background scoreஆக வந்து செவிகளை இனிமையாக்குகின்றது.

இந்தப்படதத்தின் காட்சிகள் முழுவதும் உள்நாட்டிலேயே எடுக்கப்பட்டதாலும் பெரிய தொழில்நுட்பரீதியாக காட்சிகள் தேவைப்படாததன் காரணமாகவும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா தனது தனிமுத்திரையை இந்தப்படத்தில் பதிக்கமுடியாமல் போய்விட்டது. Editor அன்ரனி படத்தை சலிப்படையாமல் தொகுத்ததிற்கும் ”ஒரே ஒரு ஊரில” பாடலில் வரும் கிரபிக்ஸ் காட்சிகளிற்கும் ”விழிகளில் ஒரு” பாடலில் வரும் எடிட்டிங்கிலும் பயன்பட்டிருக்கிறார்.

சுருங்ககூறின் தெய்வத்திருமகள் = ONE OF THE ASSETS IN TAMIL CINEMA

24 comments:

Mathuran சொன்னது…

உண்மையிலேயே அருமையான விமர்சனம்.. பெரும்பாலானவர்கள் விமர்சனம் என்ற பெயரில் படத்தின் மொத்த கதையையே கூறிவிடும்போது, தாங்கள் வித்தியாசமான முறையில் படத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் விமர்சித்துள்ளீர்கள். நன்றாக உள்ளது

நவீன கணனியின் தந்தைக்கு நேர்ந்த அவல முடிவு

Unknown சொன்னது…

விமர்சனம் கலக்கல் பாஸ்...எல்லாரும் நல்லதுன்னே எழுதுறீங்களே..அம்புட்டு நல்லதா??ஹிஹி

Yaathoramani.blogspot.com சொன்னது…

படத்தின் தரம் குறித்துஒரு தரமான வித்தியாசமான
விமர்சனம் கொடுத்துளீர்கள்
படம் பார்க்கச் செல்பவர்களுக்கு தன்னுடைய அபிப்ராயத்தை
முன்னரே நிலை நிறுத்தி அவர்களைக் குழப்பக்கூடாது என்ற
தங்களது விசாலமான எண்ணத்தை புரிந்து கொள்ள முடிகிறது
இனி படம் பார்க்கச் செல்லும் முன்பு உங்கள்
விமர்சனத்தை பார்த்துச் செல்லலாம் என எண்ணி உள்ளேன்
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
தரமான விமர்சனப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

:)

Unknown சொன்னது…

நல்லா இருக்கு உங்க விமர்சனம்! பார்க்க வேண்டும்!

எப்பூடி.. சொன்னது…

//”டாக்டர்” சியான் விக்ரம் என வரும் எழுத்தோட்டத்தை இந்த படத்தில்தான் முதன்முதலில் பாக்கிறேன். (இரவணன் படத்தில் இவ்வாறு போடப்பட்டதா? எனக்கு தெரிந்தவரை இல்லை)//


இல்லை, டாக்டர் பட்டம் ராவணா ரிலீசிர்க்கு பின்னர்தான் கிடைத்தது, இத்தாலி பல்கலைக் கலக்கம் ஒன்று வழங்கியது, ஐரோப்பாவின் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிய முதல் நடிகர் விக்ரம்தான். ஆனாலென்ன அவருக்கு டாக்டர் பட்டம் 'பெறப்பட்டபோது' ஏற்ப்படுத்திய பப்ளிக்குட்டி :-) இவருக்கு இல்லை.


உங்கள் விமர்சனமும் கதை சொல்லாத நிலைப்பாடும் சிறப்பு, எனக்கும் கதை விடயத்தில் இதே நிலைப்பாடுதான், ஆனாலென்ன பின்னூட்டத்தில் சிலதுகள் கதையை சொல்லவில்லை என்று நக்கல் பண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு :-(( உண்மையில் கதை சொல்லாமல் விமர்சனம் சொல்வது எவளவு கடினம் எண்டு கதை சொல்லி விமர்சனம் எழுதுபவர்கள் எழுதிப்பார்த்தால் புரியும்!!!!!!!!!!!!

எப்பூடி.. சொன்னது…

எம் எஸ், பாஸ்கரை ஹோட்டலில் தேடும் காட்சி, 'விழிகளில்' பாடல் தேவையற்றது, படத்திற்கு தொய்வு கொடுக்கிறது. சந்தானம் vs ரவுடி டீ, காப்பி காமடி செம..................

பெயரில்லா சொன்னது…

///யாரவது வழக்கு கிழக்கு போட்டு தங்களை பிரச்சனையில் மாட்டிவிடக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாகவே இப்யடியான வாசகத்தை போட்டிருக்கலாம்.

/// நல்ல விஷயம்,என்ன தான் இருந்தாலும் மனுசனை விட இதுகள் அதிகமாய் சுதந்திரம் பெர்ருட்டுதுகள் போல ))

பெயரில்லா சொன்னது…

நல்ல விமர்சனம், படம் பார்க்கணும் போல இருக்கு ...

sinmajan சொன்னது…

வழமை போல் உங்கள் திரைப்பார்வை கலக்கல் கார்த்தி

rajamelaiyur சொன்னது…

அப்ப படம் பாக்கலாம்

நிரூபன் சொன்னது…

தெய்வத் திருமகளைப் பார்க்க வேண்டும் எனும் வகையில், என் ஆவலைத் தூண்டும் வண்ணம் விமர்சனம் அமைந்துள்ளது. வழமையான விமர்சனங்களிலிருந்து சற்று மாறுபட்ட பார்வையினை உங்கள் விமர்சனம் தந்திருக்கிறது.

kobiraj சொன்னது…

நல்ல விமர்சனம் படத்தின் கதையை சொல்லமைக்கு நன்றி.

Azhagan சொன்னது…

"Oscar Awards", "தேசியவிருது கிடைக்கும்".... Good joke. May be the performances of artists are good, but the film is a shameless copy of the English film, "I AM SAM".
I doubt if this film will qualify in any of the award selections. IF it does, then it will be an act of appreciating the theft.

கார்த்தி சொன்னது…

நன்றி மதுரன். ஓம் சுப்பர் படம் மைந்தன் சிவா!

நன்றி Ramani சிலர் விமர்சனம் சொல்லுறோம் என்று கூறிக்காண்டு படத்தின் கதையை முழுவதுமாகவோ கொஞ்சமே தொட்டு காட்டி படத்தின் உண்மையான பல சஸ்பென்ஸ்களை உடைத்து விடுகின்றனர். அது எனக்கு துளியளவும் பிடிப்பதில்லை.

நன்றி யோகா அண்ணா. ஜீ நீங்கள் சொன்னபடி I am Samஐ முழுவதுமாக கொப்பி பண்ணி எடுத்திருந்தாலும் மிகவும் அழகாக எடுத்திருக்கின்றனர்இ அதுக்காக பாக்கவேண்டும்.

நன்றி எப்பூடி தகவலுக்கு! எனக்கு இப்பதான் தெரியும்! என்னை பொறுத்தவரை விமர்சனத்தில் கதை எதிர்பாப்பவர்கள் முட்டாள்கள் அதை சொல்லுபவர்கள் முழுமுட்டாள்கள்.
/* எம் எஸ், பாஸ்கரை ஹோட்டலில் தேடும் காட்சி, 'விழிகளில்' பாடல் தேவையற்றது, படத்திற்கு தொய்வு கொடுக்கிறது. சந்தானம் vs ரவுடி டீ, காப்பி காமடி செம */
ஆமோதிக்கிறேன் அப்படியே!!

கார்த்தி சொன்னது…

ஆமாம் கந்தசாமி மனிசருக்கு கூட இப்பிடி சுதந்திரம் இப்ப இல்லை! ஓம் நிச்சயமாக பாக்கவேண்டிய படம்!

நன்றி Sinmajan, நிருபன், Kobiraj.
ஆம் நல்ல படம் "என் ராஜபாட்டை"- ராஜா.

Thanks a lot Azhagan for your valuable comment. Even tough i knew this is a copied version of "I AM SAM", i couldn't stop praising this tamil version. Since I have been attracted well by this movie & specially in acting. But this simply tells the immature of my mind.
As you said This movie is not capable of collecting awards for direction & story. But I am pretty sure that Vikram or Baby Sara or both are the correct candidates to capture the Awards. Isn't it?

மாலதி சொன்னது…

தரமான விமர்சனப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

///// யாரவது வழக்கு கிழக்கு போட்டு தங்களை பிரச்சனையில் மாட்டிவிடக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாகவே இப்யடியான வாசகத்தை போட்டிருக்கலாம்./////

ஹ...ஹ... அப்படீன்னா கதைக்கு போடமாட்டாங்களா..?

ம.தி.சுதா சொன்னது…

உண்மையில் இது பட விமர்சனமல்ல அருமையான பாத்திரங்களின் விமர்சனம்பா...

வடலியூரான் சொன்னது…

//வழமை போல இந்த திரைப்பார்வையிலும் படத்தின் கதை ஒரு துளியளவேனும் சொல்லப்படவில்லை

தலை அப்பிடியே என்ரை frequency இலேயே நிக்கிறியள்

//”டாக்டர்” சியான் விக்ரம் என வரும் எழுத்தோட்டத்தை இந்த படத்தில்தான் முதன்முதலில் பாக்கிறேன்.

//ஆங்கில உபதலைப்புக்களுடன் (English Subtitles) படம் வெளிவந்தமையால் இயக்குனர் விஜய் இப்படத்தை வேறு நாட்டு திரைப்பட விழாக்களுக்கும் Oscar Awards Nomination போன்றவற்றிக்கும் அனுப்புவார் என்ற ஊகத்தை கிளப்புகிறது. (Oscar போட்டிக்கு தகுதிபெற அந்தப்படம் English Subtitlesடன் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிடில் போட்டியில் கலந்து கொள்ள முடியாது).

பல சின்னஞ் சிறு விசயங்களையெல்லாம் மிக நுணுக்கமாக அவதானித்து, மிக ரசிக்கும் படியான விமர்சனம் தந்துள்ளிர்ர்கள். திரை விமர்சஙகளைப் பற்றி நான் மிக விரைவில் பதிவிடுவதாக உத்தேசம். பாப்பம் நேரம் வருகுதோ என்று. வர வர உங்கள் எழுத்தில், இன்னும் நேர்த்தி,முதிர்ச்சி,மொழியாளுமை மெருகேறிக் கொண்டு போகின்றது.வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுருங்ககூறின் தெய்வத்திருமகள் = ONE OF THE ASSETS IN TAMIL CINEMA//

முத்தாய்ப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

HiFriends Entertainment சொன்னது…

This movie rocking in box office

அம்பாளடியாள் சொன்னது…

நல்ல இருக்கு விமர்சனம். படம் பார்க்கணும் போல இருக்கு ...

பெயரில்லா சொன்னது…

d oni movie i cried after i watched..nt even cried wen watched I Am Sam...nice movie..family movie...=)tamil version much better ten English..i always support original moovies but nt 4 tis..copy version much more better..waiting 4 Rajapaatai n karikalan..

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்