திரைதகவல் பெட்டகம்-IV (பாடகி பிரசாந்தினி சிறப்பு)

இந்த பதிவை தொடங்கமுன் ஒரு மகிழ்ச்சியான அறிவித்தல். தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக இந்தபதிவின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான விடையை சொல்லும் அதிஷ்டசாலி உள்ளூர் வாசகர் (இலங்கை) ஒருவருக்கு இலவசமாக ஒருமாதத்திற்கான அவர்விரும்பும் RingIN Tone பரிசளிக்கப்படும். எதிர்வரும் காலங்களில் வித்தியாசமான பரிசுகளுடன் சந்திப்போம். வெற்றியாளர் அடுத்த பதிவில் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான் விடைகள் இருக்கும் பட்சத்தில் வெற்றியாளர் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படுவார்.
--------------------------------------------------------------------
அண்மைக்காலங்களில் வெளிவரும் படங்களில் இடம்பெறும் நல்ல பாடல்களை புதிய பாடகர்கள் பாடிவருகின்றமை தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியமான விடயம்தான். முன்னைய காலத்தை போல ஒரு சிலர் மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக இல்லாது பல புதுமுகங்கள் இந்தகாலத்தில் பாடகர்களாக அறிமுகமாகி சிறப்பாக பாடிவருவது வரவேற்க்கதக்கது. அப்படியான ஒரு பாடகியை பற்றிதான் நான் இப்போது குறிப்பிடபோகிறேன். மலேசியா வாசுதேவனின் மகளும், பாடகர் + நடிகர் + இசையமைப்பாளர் யுகேந்திரனின் இளைய சகோதரியுமாகிய இவரை பாடகியாக 2001ல் அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜையே சாரும். இவர்தான் அந்த பாடகி பிரசாந்தினி.

பிரசாந்தினி
12B படத்தில் இடம்பெற்ற ”ஒரு புன்னகை பூவே” என தொடங்கும் நல்ல ஒரு பாடலின் மூலம் இவர் அறிமுகமாகியிருந்தாலும், அந்த பாடலில் ஆண் குரலே முக்கியத்துவம் பெற்றிருந்ததால் இவரால் தனக்கான ஒரு தனிமுத்திரையை அந்த பாடல் மூலமாக பெற முடியவில்லை. அதன் பின் யுவன்சங்கர்ராஜா, வித்தியாசாகர், யுகேந்திரன் போன்ற இசையமைப்பாளர்கள் இவருக்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தனர். தனது முதல் பாடலுக்கு பிறகு பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தபோதிலும் அவை ஒன்றும் இவரை நல்ல பாடகி என்ற அந்தஸ்தை ரசிகர்கள் மத்தியில் சேர்க்கவில்லை. எனினும் 2006ல் ”வெயில்” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜீ.வி.பிரகாஸ்குமார், அந்த படத்தில் மிகவும் சிறிய பாடலான ”இறைவனே உணர்கிற தருணம்” என்றபாடலில் பிரசாந்தினிக்கு வாய்ப்பை வழங்கியிருந்தார்.

யுகேந்திரன் & மலேசியா வாசுதேவன்
பிரசாந்தினியின் அறிமுகத்திலிருந்த 8வருடத்தின்பின்னர் அதாவது 2009ல் வாரணம் ஆயிரத்தில் தனது இசையில் பாட ஹாரிஸ் ஜெயராஜ் இவரை மீள அழைத்திருந்தார். ”முன் தினம் பார்த்தேனே” என்று ஆரம்பிக்கும் அந்த சூப்பர் ஹிட் பாடல் இவரை சிறந்த பாடகியாக இனங்காட்டியிருந்தது.
GV.PrakashKumar
எது எப்பிடியிருப்பினும் இந்தபாடல் அடைந்த பிரபல்யத்தோடு ஒப்பிடும்போது இந்த பாடலை சிறப்பாக பாடியவரில் ஒருவரான பிரசாந்தினியால் அந்தளவுக்கு பிரபல்யமாக முடியவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு நல்ல வாயப்புகளும் கிடைக்கவில்லை. மீண்டும் ஜீ.வி.பிரகாஸ் 2008ல் சேவல்படத்தில் ”நம்ம ஊரு நல்லா இருக்கு” என்ற பலபாடகர்கள் பாடிய பாடலில் இவருக்கும் வாயப்பளித்திருந்தார். பின்னர் தீனா, பரத்வாஜ், சபேஸ்முரளி போன்றோரின் இசையில் பிரபலமேயில்லாத பாடல்கள் ஓரிரெண்டை பாடியிருந்தார்.
பிரசாந்தினி
என்னைபொறுத்தவரை இவரது நல்ல காலம் இந்தவருடத்திலிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது என சொல்ல முடியும். அண்மையில் ஆடுகளம் படத்தில் மீண்டும் ஜீ.வி.பிரகாஸின் இசையில் நல்ல ஹிட்பாடல் ”ஐயையோ நெஞ்சு அலையுதடி” இல் பாட வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. அத்துடன் அதே காலத்தில் வெளியான ஹாரிஸ் ஜெயராஜின் மெகாஹிட் அல்பமான ”எங்கேயும் காதல்”இல் ”லோலிட்டா” பாடலில் இவரது குரலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு சில மாதங்களின் பின் வெளியான ”கோ” பாடல்களில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ”என்னமோ ஏதொ” பாடலில் முக்கிய ஹம்மிங் இவரது குரலுக்குரியது.எங்கேயும் காதலில் இடம்பெற்ற ”லோலீட்டா” பாடல்

அதைவிட மிக அண்மையில் ஜீ.வி.பிரகாஸின் இசையில் ”நர்த்தகி”யில் ”சின்னஞ்சிறு இதயத்திலே” என்ற பாடலை விஜய்பிரகாசுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்தபாடல் இன்னும் பிரபலமாகவில்லை. இந்தபாடல் இருக்கின்றது பலருக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியாது. மிகவும் இனிமையான மென்மையான மெலடி பாடல். முடிந்தால் கேட்டுப்பாருங்கள்.  கீழே அதன் ஒலி வடிவத்தை .ணைத்துள்ளேன். இப்படியான நல்ல பாடல்களுக்கான வாய்ப்புக்கள் இந்தவருடத்தில்தான் இவருக்கு தொடர்ந்து கிடைக்கின்றது.

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Narthagi.html?e">Listen to Narthagi Audio Songs at MusicMazaa.com</a></p>

இறுக்கமான குரல்வளமுள்ள மலேசியா வாசுதேவனோடும் கரடுமுரடான குரல் வளமுள்ள யுகேந்திரனோடும் ஒப்பிடும்போது அந்த குடும்பத்திலிருந்துதான் இவர் வந்தவர் என்று சொல்லவே முடியாது. அந்தளவு இனிமையான சிறந்த குரல்வளம் பிரசாந்தினிக்கு இருக்கிறது. இவர் மேலும் இனிமையான பல பாடல்களை பாடி தமிழ் இசை ரசிகர்களை பரவசப்படுத்துவார் என நம்புகிறேன்.  

பரிசுக்கான கேள்வி

1. இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகளை பாடகிகளாக பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு அவர் பயன்படுத்திய 3நடிகைளின் பெயரையும் அவர்கள் யுவனின் இசையில் பாடிய ஒவ்வொரு பாடலையும் சொல்லுங்கள் பார்ப்போம்.

முதல்கேள்விக்கான  விடை யாரும் சொல்லாவிடின்

2. இந்த ஆண்டிற்கான IPLபோட்டியில் 68வது போட்டிவரை கூடுதலான அகலப்பந்துகளை மொத்தமாக வீசியவர் பெயர் என்ன? (ஒரு போட்டியில் மட்டுமல்ல இந்தவருடம் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் மொத்தமாக பார்க்கவேண்டும்)

இரண்டாவது கேள்விக்கான  விடை யாரும் சொல்லாவிடின்

3. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஸ்குமாரின் இசையில், அவரின் வருங்கால மனைவி  பாடிய முதல் தமிழ்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் இயக்குனர் பெயர் என்ன?

விடைகளை ஒருகிழமைக்குள் கீழ்வரும் முகவரிக்கு மின்அஞ்சலாகவோ அல்லது உங்கள் மின்அஞ்சல் முகவரியுடன் பின்னனூட்டமாகவோ இடலாம். உங்களது பின்னூட்ட விடைகளை ஒரு கிழமைவரை வலைத்தளத்தில் காணமுடியாது. வெற்றியாளர் தெரிவுசெய்யப்பட்டபின் அவை approve செய்யப்படும். உங்களது வெற்றியை உறுதிசெய்ய 3வினாக்களுக்கான விடைகளையும் அனுப்புதல் சிறந்தது. ஆனால் முதல் கேள்விக்கான விடை சரியாக யாரேனும் சொன்னால் அடுத்த கேள்விகள் கருத்திலெடுக்கப்படாது!

அனுப்பவேண்டிய முகவரி: carthi_uom@yahoo.com

25 comments:

தனிமரம் சொன்னது…

ஜி.வீ.பிரகாஸ்சின் காதலி சைந்தவி பாடியபாடல் " முதல்முதலாய்  ""பாடல் படம் லேசாய்லேசா!

தனிமரம் சொன்னது…

பிரியாமனி-பரித்தீவீரன்

தனிமரம் சொன்னது…

இயக்குனர் மலையாலத்தில் பிரபல்யமான பிரியதர்சன் இவர் தமிழ்,ஹிந்தி எனபல படங்களை இயக்கியவர்!

Unknown சொன்னது…

அடப்பாவிகளா மூணு கேள்வியா....பார்ப்போம்ம்

கார்த்தி சொன்னது…

விடையுடன் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் ஒரு கிழமை வரை மறைக்கப்படுகின்றன!!

கன்கொன் || Kangon சொன்னது…

முதலாவதுக்கு அன்ட்ரியா தவிர வேறு யாரும் நினைவுக்கு வரேல.

இரண்டாவது பொலார்ட் தானே?

மூன்றாவதும் தெரியாது. மதராசப்பட்டினத்தில எண்டா விஜய். :P

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஓக்கே ட்ரை பண்ணலாம்

வந்தியத்தேவன் சொன்னது…

ஆஹா கார்த்தி கலக்கிறியள், ஆனால் கேள்விகள் கொஞ்சம் கஸ்டமாக இருக்கு அதனாலை போட்டியில் இருந்து விலகுகின்றேன். பிரசாந்தினியின் குரலில் பாடல்கள் கலக்கல்.

Jana சொன்னது…

பிரசாந்தினி பற்றிய முக்கியமான ஒரு தகவல் மிஸ்ஸிங்... யோசித்து அது என்னவென்று பின்னூட்டம் இடுங்கள்.
அப்புறம் முதலாவது மற்றும் மூன்றாவது கேள்விகள் ரொம்ப ஈஸி (என்னைப்பொறுத்த வரையில்) இந்த இடத்தில் இந்த ஐ.பி.எல். அலப்பறை தேவையா? வேற ஏதாவது பிரயோசனமான கேள்வியை கேட்டிருக்கலாம் என்று தோணுது :)

sinmajan சொன்னது…

நம்மளை மாதிரி பாமர மக்களையும் கருத்தில கொண்டு கேள்வி கேட்கணும் கார்த்தி.. ;-)

பெயரில்லா சொன்னது…

தாசன் சற்குணசிங்கம்
1. தெரியாது
2. டானியல் கிறிஸ்டியன்

thaasan@gmail.com

கார்த்தி சொன்னது…

எனது நண்பர் ஒருவர் அளித்த பதில் ஒன்று தவறுதலாக எனது கருத்து போல் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. அவரிடம் கணக்கு இல்லாததால் தனது பெயருடன் அனானியாக தனது விடையை பிரசுரிக்க கோரியிருந்தார். தவறுதலாக அது எனது கணக்கினூடாக பிரசுரிக்கப்பட்டு விட்டது. உடனடியாக அதை நீக்கி சரிசெய்துவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்!!

கார்த்தி சொன்னது…

வருகைக்கு நன்றிகள் மைந்தன் சிவா, சி.பி.செந்தில்குமார்.
வந்தியத்தேவன் அண்ணா உங்களுக்கு தெரியவில்லையா. ஹாஹா வெற்றி வெற்றி எனக்கு!

Jana அண்ணா கடுமையா யோசித்தன். என்ன தகவலை மி்ஸ் பண்ணினேன்? பிடிக்கமுடியவில்லையே...
நீங்கள் சகலாகலாவல்லவர் உங்களுக்கு அனைத்து விடயங்களும் அத்துப்படி. அதுதான் மிகவும் சுலபமாக இருந்திருக்கிறது 1ம் 3ம் கேள்விகள்! 2ம்கேள்வி எல்லாம் சினிமாவுடன் இருக்க கூடாது என்பதற்காக போடப்பட்டது.

sinmajan நீங்க பெயில் பாஸ். Jana அண்ணா சொல்லுறார் easyஆனா கேள்வியெண்டு நீங்கள் என்ன இப்படி சொல்கிறீர்கள்?? அதுசரி எப்ப மீண்டும் பதிவெழுதுறதா யோசனை???

Unknown சொன்னது…

நல்லாத்தான் கேட்குறீங்க கேள்வி! ஆனா எனக்குத் தெரியல பாஸ்! :-)

எப்பூடி.. சொன்னது…

மூன்றுக்கும் சத்தியமா விடை தெரியாது, இரண்டாவது கேள்விக்கு பால்குடி மாறாத இந்திய உலககிண்ண அணியில் விளையாடிய பிரீத்தியின் பந்து வீச்சாளராக இருக்கலாமென்கிற சந்தேகம். முதலாவது கேள்விக்கு ஒரு நடிகை யுவனின் பல படங்களில் பாடியது மட்டும்தான் நினைவில் உள்ளது, ஆயிரத்தில் ஒருத்தி :-)

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, சேமம் எப்படி?

சின்ன மீனைப் போட்டு, பெரிய மீன் பிடிக்கும் வித்தை போல, பாடகி பற்றிய அறிமுகங்களைத் தந்து விட்டு, கொஞ்சம் கடினமான கேள்விகளைக் கேட்டிருக்கிறீங்கள்.

நிரூபன் சொன்னது…

கேள்விகளுக்கான விடை தெரியலை சகோ.

சு.கி.ஞானம் சொன்னது…

Answers
"Naan Vachen Lesa" Srinivas, Vasundhara Das Pop Carn
"Idhu Varai" Ajeesh & Andrea Goa
"Idai Vazhi" Benny Dayal & Mamta Mohandas Goa
sambanths@gmail.com

நிராதன் சொன்னது…

Answer for 2nd question: Daniel Christian

Nirathan S.

ARV Loshan சொன்னது…

//எதிர்வரும் காலங்களில் வித்தியாசமான பரிசுகளுடன் சந்திப்போம்.//
அட நல்லா இருக்கே இந்த ஐடியா..

நிறைய நல்ல பாடல்கள் பாடியும் முன்னணிப் பாடகி ஆக முடியாத துரதிர்ஷ்ட சாலி இவர்..
அண்மையில் வந்த ஐய்யையோ தான் எனக்கு இவரது குரலின் வீச்சை அழகாகக் காட்டியுள்ளது என நான் நினைக்கிறன்

பெயரில்லா சொன்னது…

தெரியலையே .........

பெயரில்லா சொன்னது…

மூன்றாவது கேள்விக்கு விடை
"அந்நியன்" :P

Nantharupan சொன்னது…

Zaheer khan is the answer for the cricket question

கார்த்தி சொன்னது…

ஜீ நனடறிகள்
எப்பூடி 3 விடையும் தெரியாட்டி பெயிலுதான்!
பறாவாயில்லை நிரூபன் வருகைக்கு நன்றி நான் இருக்கன் நலமா!
LOSHANஅண்ணா கருத்துக்களுக்கு நன்றிகள். எனது செலவிலேயே கொடுப்பதால் கொஞ்சம் கனதியாக கொடுக்க முடியாது. தனக்குபின்தானே தானம்!
பருவாயில்லை கந்தசாமி வருகைக்கு நன்றிகள்!

natarajan சொன்னது…

பல தகவல்களை திரட்டி இங்கே அளித்திருக்கிறீர்கள்.. உண்மைலேயே நீங்க பெரிய ஆளுதான் பாஸ்..
vaithee.co.cc

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்