முதலாவது போலீஸ் நிலைய அனுபவம்-II

இனி பிரச்சனை இல்லை எண்டு நினைத்த படியே முன்னே நகர்கிறேன். முன்னே சென்ற 5 பேரை பாக்கிறேன். ஓ கடவுளே! அவர்கள் முன்னேற்றத்தில் தடை. இன்னுமோர் இராணுவ வீரரால் வழிமறிக்கப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தனர். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 100மீட்டர் இடைவெளிதான் இருந்திருக்கும். நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது அவர்களை விடுவதாக காணோம். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து எனது நடையை தளர்த்துகிறேன். தூரம் குறைகிறது, வேறு paathai இல்லை நேரே முன்னேதான் போகவேண்டும். அவர்களுக்கு அருகில் நானும் வந்துவிட்டேன். ICகேட்டான் கம்பஸ் IC எடுத்து நீட்டினேன். வடிவா பாத்துவிட்டு தமிழ் என்று புரிந்துகொண்டு NIC கேட்டான் கொடுத்தாலும் வேலை இல்லை யாழ்ப்பாண IC அல்லவா அது. அடுத்ததாக பொலிஸ் ரிப்போட்டு கேக்கிறான். என்ன செய்யிறது? இவ்வளவும் முதலேயே மறிபட்டு நிண்ட 5 பேரிட்டேயும் கேள்பட்டு இருந்தது.


அவர்களும் என்ன செய்யிறது என்று தெரியாம நல்லா முழிச்சு கொண்டு நிண்டார்கள். நாங்கள் கம்பஸ், பொலிஸ் ரிப்போட் தேவையில்லை கம்பஸ் IC மட்டும் காணும் எண்டு மொறட்டுவ பொலிஸ் சொன்னதாக ஒரு பிட்டையும் போட்டு பாத்தோம். பயனில்லை. "நீங்க எங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இந்த பக்கத்தால தப்பி ஓடதானே இதால வந்தனிங்க?" எண்டு கேட்டான். "கிளாஸ் நேரம் போட்டுது அதுதான்" என்று உண்மையை கூட சொல்லி கெஞ்சி பார்த்தோம். அவன் விடுவதாக இல்லை.

தான் Promotion வாங்குவதுக்காக எங்களை தனது மேலதிகாரியிடம் கொண்டு சென்றான். "தப்பி போக பிளான் பண்ணினவை" தான் பிடிச்சிட்டதாக பெருமையாக தனது புகழ் பாடினான் அவன். தெரிஞ்ச சிங்களம் ஆங்கிலம் எண்டு எல்லாத்தயும் போட்டு கதைத்து பாத்தோம். என்னுடன் பிடிபட்ட கனிஸ்ட மாணவர்கள் கம்பஸ் விடுதிகளில்தான் இருப்பதாக கூறியும் பயனில்லை. அவர்களுக்கு அடுத்தநாள் இறுதி ஆண்டு பரீட்சை இருந்தது. செண்டிமண்ட் Touchகளுக்காக அதையும் கூறிப்பார்த்தும் எள்ளளவுக்கும் பிரயோசனம் இல்லை. 10 நிமிடத்திற்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் துளியும் முன்னேற்றம் இல்லை. போலிஸ் ரிப்போட் கட்டாயம் வேணும் இல்லாட்டி கல்கிஸை பொலிஸ் ஸ்டேசனுக்கு தான் போக வேண்டும் என்று கூறினார் அந்தஅதிகாரி. அதால போய் வருற ஆக்களெல்லாம் எங்களை ஒரு பயங்கரவாதிகளை பாப்பதுபோல் பார்த்தனர். நிலமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதை உணர்ந்தோம். ‌

அடுத்த கணம் உயரதிகாரியின் பணிப்பின் பேரில் ‌ஹையஸ் வானில் கல்கிஸை பொலிஸ் நிலையத்திற்கு பக் செய்யப்பட்டோம். கொழும்புக்கு வந்ததிற்கு முதன்முதலில் ஹையஸ் வான் பயணம் அது! பாதுகாப்பிற்கு மத்தியில். வழமையாக பஸ்ஸிலேயே பயணம் செய்து அலுத்துப்போன எனக்கு அந்த பயணம் ஒரு வித்தியாசமாக இருந்தது. பிடிபட்டிட்டம் எப்பிடியும் வெளியே வர ஒரு நாளாவது எடுக்கும் என அனுபவசாலிகளிடமிருந்து அறிந்து கொண்டிருந்தேன். அன்று அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வர முதலிலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது. எப்பிடியும் அவை வந்து எடுத்து விடுவினம் எண்ட நம்பிக்கை இருந்தது. வானில் எங்களோட வந்த பொலிஸ் சற்று நல்லவர். அவரிடம் எமது பிரச்சினைகளை சொல்லி எங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். கனிஷ்ட மாணவர்கள் தங்களது விடுதி வோடனிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எங்களை வந்து விடுவித்துவிடுமாறு கூறினார்கள்.

‌‌அதற்கிடையில் கிடைத்த நேரத்தில் போனை போட்டு பிடிபட்ட விசயத்தை நண்பர்களுக்கும் அண்ணனுக்கும் அறிவித்து விட்டேன். வகுப்புக்கு போய்க்கொண்டிருந்த அண்ணனும் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.
பொலிஸ் நிலையத்திற்கு உள்ளே எங்களை அழைத்து சென்று தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர். தொலைபேசி ‌இலக்கங்களையும் தங்குமிட மற்றும் இதர விபரங்களையும் குறித்துக்கொண்டனர். அன்று பல இடங்களிலிருந்தம் எங்களைபோல பிடிபட்டவர்களால் கல்கிஸை பொலிஸ் நிலையம் நிரம்பியிருந்தது. தொடர்ச்சியாக நாளை இறுதியாண்டு பரீட்சை என மற்றவர்கள் வற்புறுத்தியமையினாலோ என்னவோ சற்றும் எதிர்பாராத வகையில் 30 நிமிடத்தின் பின் அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுவித்தனர். என்ன அதிசயம்! அப்பத்தான் பிடிபட்டதிலிருந்து இருந்த நடுக்கம் நின்றது.

தமிழனாக கொழும்பில இருக்கிறதுக்கு பெற வேண்டிய தகுதியை (ஒரு தரமாவது பிடிபட வேண்டும்) பெற்ற சந்தோசத்தில் பெருமிதத்துடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

12 comments:

பெயரில்லா சொன்னது…

\\ஒரு தரமாவது பிடிபட வேண்டும்\\
அஹா இப்ப நாங்க ஒத்துகிறன் நீங்க ஒரு பக்கா டமிழன் தான்

பெயரில்லா சொன்னது…

அந்த் போலீஸ் காரனை நினைசாதான்.... அப்பாவியா இருபான் போல உங்க் குழந்தை முவத்தை பாத்ததுகப்புறமுமா பிடிச்சிட்டு போனான்...

கார்த்தி சொன்னது…

@கவின்
//நீங்க ஒரு பக்கா டமிழன் தான்

நான் எப்பவும் பக்கா டமிழன்தான் மன்னிக்கவும் பக்கா தமிழன்தான்

கார்த்தி சொன்னது…

@கவின்
// உங்க் குழந்தை முவத்தை பாத்ததுகப்புறமுமா பிடிச்சிட்டு போனான்...

என்ர Original முகத்தை பாக்கேல போல விரைவில போடுறன் அப்ப தெரியும் நீங்க பிழைவிட்டது

புல்லட் சொன்னது…

நல்லா எழுதியிருக்கிறாயப்பன்..
அடிக்கடி எழுதங்கோ...
படிப்பைக்குழப்பாமல்... :)

பெயரில்லா சொன்னது…

கார்த்திகன்ர பால் வடியிற மூஞ்சில ஒரு காப்பி போட்டு குடிக்கலாம் எண்டு கொண்டு போயிருப்பான்.

கார்த்தி சொன்னது…

@ புல்லட் பாண்டி
//அடிக்கடி எழுதங்கோ...
படிப்பைக்குழப்பாமல்... :)

கடுமையான வேலைக்கு மத்தியிலும் வந்ததுக்கும் கருத்து போட்டதுக்கும் ரொம்ப நன்றி.
அண்ணோய் முதலாவது வருடத்தோட படிப்பைவிட்டாச்சு!
படிப்பும் கண்டறியாததும்.

கார்த்தி சொன்னது…

@பெயரில்லாதது
யாரடாப்பா ? தயவுசெய்து பெயரைபோட்டு கருத்திடவும்.
படத்தில இருக்கிற நாய் மாதிரி நான் இருக்கமாட்டன்.ரொம்பவும் பயங்கரமா இருப்பன்.
அடுத்த பதிவுக்கு முன்னால என்ர Original படம் போடுறன். அப்ப பாத்து தெரிஞ்சுக்குங்க.

Nantharupan சொன்னது…

/////தமிழனாக கொழும்பில இருக்கிறதுக்கு பெற வேண்டிய தகுதியை (ஒரு தரமாவது பிடிபட வேண்டும்) பெற்ற சந்தோசத்தில் பெருமிதத்துடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினேன்./////

நான் இன்னமும் போகவில்லை!!
எனக்கு தெரிந்த பல்கலை இறுதிவருட அண்ணா ஒருவர் கொழும்பு வந்து நான்கு வருடம் இன்னமும் இலங்கை காவல்துறையில் பதியவுமில்லை, பிடிபடவுமில்லை....விடுதியில் இருந்தது சில மாதங்களே!!
என்னண்டுதான் முடியுதோ????
அவர் மீதமிருக்கும் சில மாதங்களையும் ......................................... வாழ்த்துக்கள்.

Subankan சொன்னது…

அண்ணா, இனி நீங்கள் "போலீஸ் புகழ்" எண்டு பெயருக்கு முன்னாடி போட்டுக்கலாம்

கார்த்தி சொன்னது…

@சுதந்திரி
// நான் இன்னமும் போகவில்லை!!

அப்ப நீங்கள் கண்டிப்பா அவையின்ர ஆளாத்தான் இருக்க வேணும். இல்லாட்டி இப்படியிருக்க சாத்தியம் குறைவு

கார்த்தி சொன்னது…

@ சுபாங்கன்
இப்படி ஒரு பட்டம் தந்ததுக்கு ரொம்ப நன்றி உங்களின் வலைப்பதிவையும் பார்த்தேன் மிகவும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்