ExpoAirல் போக இருப்பவர்களுக்கு சுதந்திரியின் Tips

நான் எனது பதிவினை பற்றி Facebook இலே குறிப்பிட்டு 2மணி நேரமும் ஆகியிருக்காது எனது Facebook நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு, (இவர் என்னுடன் யாழ்ப்பாணத்திலே ScienceHallல் ஒன்றாக படித்தவர் அவரை பற்றி எனக்கு தெரிந்ததைவிட என்னை பற்றி நன்றாக அவருக்கு தெரியும். எனது வளர்ச்சியில் அக்கறை உள்ள இனிய நண்பர்களில் அவரும் ஒருவர்) எனது பதிவுகளை தனது மின்னஞ்சலில் பெற என்ன செய்வேண்டும் என்று கேட்டார். அப்போதுதான் எனது இரவு நேர Training என்று சொல்லப்பபடும் ஒன்றை முடித்து விட்டு சற்று கண்ணயர்ந்திருந்தேன். அவருக்கு உரிய பதிலை கூறிவிட்டு மீண்டும் நித்திரைக்கு தாவினேன். (நித்திரை கொள்ளும்போது போனை Silent Modeல வைக்கசொல்லி அம்மா உட்பட பலரும் சொல்லியிருந்தம் கூட நான் அவ்வாறு விடுவதில்லை. யாராவது அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தால் என்ன செய்வது? இதனால் ஒழுங்காக பகலில் நித்திரை கொள்ள முடிவதில்லை. ஒரு மணி நேர இடைவெளிகளில் எப்போதும் அழைப்புக்கள் வந்தபடியே இருக்கும். அனைத்தும் த‌ேவையற்ற அழைப்புக்கள்.) நான் கிறுக்குவதையும் ஒரு சிலர் பாக்கிறார்கள் என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதைவிடுத்து Facebook நண்பர் இருவர் எனது முந்தைய வலைப்பதிவை தங்களது சுவர்களில் Post செய்திருந்தனர். ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

எனது முந்தைய பதிவுக்கு போதிய வரவேற்பு கிடைத்ததிலிருந்து என்னை போலவே பலரும் இவர்களது (ExpoAir) விமானசேவையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாகிறது.

எனவே பாதிக்கப்படுவோருக்கு என்ன Advice கொடுக்கலாம் என யோசித்து கொண்டிருந்தபோது எனது நண்பர் ஒருவர் அந்தவேலையை எனக்கு வைக்காமல் தானே அதை பொறுப்பெடுத்து எனக்காக எழுதி தன்னுடைய வலைத்தளத்தில் கூட போடாது எனக்கு மின்னஞ்சல் செய்து வைத்தார். அவர் வேறு யாருமில்லை "சுதந்திரி" என்ற புனைபெயரில் உலாவரும் கெட்டவங்கள் கூட்டத்தின் தலைவர்தான். பெயரையும் ஆளையும் நீங்களே கண்டுபிடியுங்கள். எனவே இந்த பதிவின் எல்லாப்புகழும் சுதந்திரியையே சாரும்.



ExpoAir இல் யாழ்ப்பாணம் போக நினைப்பவர்களுக்கான சுதந்திரியின் முத்துமுத்தான Tips

1.தேவையான தினத்துக்கு 2 கிழமைக்கு முன்னாடி book பண்ணுங்க.

2.விசேஷங்களுக்கு போபவர்கள் போதுமான கால அவகாசத்துடன் நாளை book பண்ணுங்க.( முன்று நால் பிந்தகூடிய சந்தர்பங்களும் உண்டு).

3.ரிக்கெட் book செய்ய போகும்போது 1-2 pm இடையில் போனீர்களானால் நேரவிரையத்தை குறைக்கலாம்.

4.book செய்ய போகுமுன் உங்கள் தன்மானத்தை,பதவி, படிப்பு, போன்றவற்றை நல்ல ஒரு அடகுகடையில் அடகு வைத்துவிட்டு செல்லுங்கள். திரும்பி வரேக்க தேவையென்றால் எடுத்துகொள்ளலாம்.

5.காலையில் போபவர்கள் பழைய ExpoAir ரிக்கெட் ஒன்றை எடுத்துசெல்லுங்கள், Neat ஆக உடுத்தி Jel, Cream, Body Spray வைத்து Shoe போட்டு செல்லுங்கள், எப்படியும் 30 பேர்வரை உங்களுக்கு முன்வந்து wait பண்ணுவார்கள், Security Guard கிட்ட போனதும் Phone ஐ எடுத்து காதில்வைத்து busy ஆக பந்தாவாக கதைத்தபடி ஒருவரையும் கவனியாமல் செல்லுங்கள், Security Guard மறிப்பார், "Ticket Confirm" பண்ணவேணும் என சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்லுங்கள்.

6.உள்ளே 15 வரை இருப்பார்கள், அங்கேயும் யாரையும் கவனியாமல் phone கதைத்து கொண்டு இருங்கள், counter இக்கு முன்னால் இருப்பவர் எழும்ப உடனே சென்று அமர்ந்துவிடுங்கள்.

7.வேறு நபர்களுக்களுக்கு ticke book பண்ண செல்பவர்கள் இருவரதும் NIC photocopy ,ஒரு கடிதம் எடுத்துசெல்லுங்கள்.

8.வெளி நாட்டு Passport உடையவர்கள் MOD எடுத்துசெல்லுங்கள். உங்களிடம் Srilankan IC இருந்தால் நீங்கள் வெளி நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டாம்.

10.ஒரே தடவையாக ticket எடுப்பவர்கள் return ஐயும் எடுப்பது நல்லது.

11.அவசரமாக போகவேண்டியிருப்பின் ஒரு letter எழுதி Manager ஐ சந்தியுங்கள். அவரை சந்திக்கும் போது பொறுமை அவசியம், அவர் என்ன சொன்னாலும் ஆமாப்போடுங்கோ.

12.மிக அவசரம் என்றால் ஒவ்வொரு நாளும் மதியம் போனீர்கள் என்றால் 4 நாளில் போகலாம்.

13.Funeral போன்ற விடயம் என்றால் Death Certificate எடுத்து செல்லுங்கள்.

14.அவசரம் ஆனால் காரணம் இல்லாவிட்டால் என்ன ஒரு பொய் கடிதம் அனுதாபம் வரகூடியவாறு எழுதுங்கள்.

15.Risk எடுப்பவர்கள் அதிகாலை சென்றால் canceled ஆன ticket இலை போகலாம், ஆனால் sure இல்லை.

16.பயண திகதியில் அவர்கள் சொல்லும் நேரத்துக்கு 1/2 மணி நேரம் late ஆகா சென்றால் போதுமானது.

17.அங்கே போய் Q இல் நிற்க தேவையில்லை! கடைசியில் உங்களை கூப்பிடுவார்கள்.

18.கடைசியில் பதிந்து கடைசியில் bag ஏற்றினால் இரத்மலானையில் மூட்டை அடிக்கும் வேலையை தவிர்க்கலாம்.


19.உங்கள் பயணப்பொதி Weight Limit ஐ தாண்டினால், Expo office இல் போனவுடன் வயதுவந்த அம்மாமாரை தேடி வாளி வையுங்கள். அவர்களது மீதியாக உள்ள Weightக்கு உங்களுடைய பொதிகளை பதியலாம்.

20.இளம் பெண்கள், Expo office சென்றவுடன் என்னைமாதிரி கொஞ்சம் கலர்களை பார்க்க வரும் வெட்டிப்பயல்களை பார்த்து ஒரு சிரிப்பு ஒன்று சிரித்தால் போதும், Bag காவுகின்ற வேலை வராது. போகும்போது பேச்சு துணையுமாகிறது காவலுமாகிறது.

20.Apple, Chocolate போன்றவற்றை Ratmanalanaலேயோ அல்லது Palaliலேயோ வாங்கினால் Over Weight பிரச்சனையை குறைக்கலாம்.

21.IC photo copy ஐ கொண்டு செல்ல மறக்க வேண்டாம்.

22.விமானத்தில் பயணிக்கும் போது தரும் சிற்றுண்டிகளை கூச்சப்படாது நன்றாக சாப்பிடவும். வேறுயாரும் சாப்பிடாமல் விட்டால் அவர்களினதை ஒவ்வொருவரினது இருக்கையில் உள்ள வெற்றுபையில் இட்டு வீட்டில் கொண்டு வந்து சாப்பிடவும். வீணாக விட்டிட்டு வரவேண்டாம்.

உங்கள் பயணம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய சுதந்திரியினதும் கெட்டவங்களினதும் வாழ்த்துக்கள்.

மீண்டும் சுதந்திரிக்கு நன்றிகள். அடுத்த பதிவில் சந்திப்போம்.


9 comments:

Ranjan சொன்னது…

உங்க டிப் ரொம்ப நல்லா இருக்கு...
அது சரி யார் அப்படி CALL எடுக்குறாங்க???

பெயரில்லா சொன்னது…

நல்ல அனுபவம் இருக்கு போல

பெயரில்லா சொன்னது…

சுந்தரி ExpoAir ஆல் பட்ட அனுபவங்கள் நான் அறிவேன்...
ஆனுபவத்தை அறிவுரையாக தந்ததுக்கு நன்றி..


தங்கள் பதிவுகள் தொடரட்டும் கார்த்தி..
வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

சகலை அதுயாரு சுத்ந்திரி!!!
நல்லாதான் சொல்லிகிரான் டீடேயிலு

பெயரில்லா சொன்னது…

சுதந்திரி போன்ற தில்லு முல்லுக்காரர்களும், சனம் ஒழுங்காக டிக்கட் எடுக்க இயலாமல் உள்ளதற்க்கு ஓர் காரணம்...
சுதந்திரி,
If you thinking that your passion is increased by this tips, you have no value to live in the society.

பெயரில்லா சொன்னது…

பதிவு சூப்பரு.....
நீங்களும் ஓ நீங்களும் scince hall பார்டியா????

Nantharupan சொன்னது…

ஹிஹி
நான் உங்க‌ளுடைய‌ ந‌ன்மைக்கான‌ சொன்னேன்,
நீங்க‌ள் நேர்மையான‌வ‌னாக‌ இருப்பீர்க‌ளானால் ச‌முதாய‌ம் உங்க‌ளை வ‌ர‌வேற்க்கும்.
ஆனால் நீங்க‌ள் யாழ்ப்பான‌ம் ம‌ற்க்க‌வேண்டிய‌துதான்.

பெயரில்லா சொன்னது…

இதனை உங்களுக்கு தந்தவர் எனக்கு தெரியும் அவர் தான் நந்தரூபன்....... அவருடைய அனுபவம் தான் இது...

பெயரில்லா சொன்னது…

ean boys i pathi ondum sollala

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்