ராஜபாட்டை(போடா சொட்டை :P) - திரைப்பார்வை

வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும்.


பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள்.


சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.)



யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு. 

Director Suseenthiran
மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது.

பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்)

திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)

Composer Vidyasakar
இசையமைப்பாளர் தமனின் வளர்ச்சி உண்மையில் class இசையமைப்பாளர் வித்தியாசகரின் வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கின்றது என்பது   (வித்தியாசாகரின் தீவிர ரசிகராக இருந்தும் கூட) ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இதற்கு சான்று பகர்வதுபோல் தனது ஆஸ்தான இசையமைப்பாளராக இவ்வளவு காலமும் உபயோகித்து வந்த வித்தியாசாகரை இயக்குனர் தரணி முதல்முறையாக ”ஒஸ்தி” படத்தில் கழற்றி இளம்இசையமைப்பாளர் தமனிற்கு வாய்ப்பளித்திருந்தார். அதேபோல் தனது முதலிரு படங்களான ”ஜெயம்கொண்டான்”, ”கண்டேன் காதலை” போன்றவற்றிற்கு வித்தியாசாகரை மெட்டுபோடவைத்த இயக்குனர் கண்ணன் "வந்தான் வென்றான்"இற்கு தமனுக்கு வாய்ப்பளித்திருந்தார். தமிழ்சினிமாவில் வித்தியாசகரின் மெட்டுக்கள் யாராலும் இலகுவில் மறந்துவிடமுடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, அவர் இறுதியில் இசையமைத்த ”தம்பிவெட்டோத்திசுந்தரம்” ”இளைஞன்” ”சிறுத்தை” ”காவலன்” போன்ற அல்பங்களில் தனதுதனி முத்திரையை வழமைபோல் பதிக்க தவறிவிட்டார் என்று கவலையுடன் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

Composer Thaman
மேலே குறிப்பிட்ட படங்களில் நல்ல பாடல்கள் இல்லை என்று நான்சொல்லவில்லை. ஆனால் வித்தியாசாகரின் பாணியிலான பாடல்கள் மிகவும் குறைவு. காவலன் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் வித்தியாசாகரின் தனித்துவ பாடல்கள் அதில் மிஸ்ஸிங்தான். எனினும் வெட்டோத்திசுந்தரத்தில் ”நேற்று இல்லை இல்லை இந்த ஆனந்தம்” பாடல் வித்தியாசகரின் பலமான மெலடியை மீண்டும் நினைவூட்டியிருந்தது. ஆனாலும் மற்றைய பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இறுதியாக தனது Formஐ நிரூபித்த அல்பமாக இருந்தது ”மந்திரப்புன்னகை”தான். மற்றைய மேலே குறிப்பிட்ட அல்பங்களில் அவரின் தனிமுத்திரை மிஸ்ஸிங்தான்.
------------------------------------------------------------------------------

இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
Singer Solar Sai
தனது முதல்வாய்ப்பின்பும் ஹாரிஸ்ஜெயராஜ் வாரணம் ஆயிரத்தில் ”யெத்தி யெத்தி யேத்தி” மற்றும் ”கோ”வில் ”அக நக” என்ற இரு பாடல்களிலும் தனிக்குரலாக இல்லாமல் மற்றைய பாடகர்களுடன் சேர்ந்து பாடவைத்தார். அண்மையில் ஒஸ்தியிலும் ”கலாசலா கலசலா” பாடலிலும் இவரது குரல் வந்திருந்தது. ஆனால் வெளியில் LR.ஈஸ்வரி,  TR.ராஜேந்தர் பாடிய பாடல்என்று பேசப்பட்டமையால் இவரது பெயர் இந்தபாடலிலும் வெளியே தெரிந்த பாடாக இல்லை. உண்மையில் இந்த பாடலில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வரும் ஆண்குரல் சோலர் சாய்க்குரியது. அதாவது படத்தில் சோனுசூட் பாடும் நேரத்தில் வரும் குரல்.
------------------------------------------------------------------------------

”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.

Composer Sathya
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.

முந்தைய பாகங்களுக்கு
I  II  III  IV  V  VI 

ஒஸ்தி-திரைப்பார்வை

ஒஸ்தி: இயக்குனர் தரணியின் இயக்கத்தில் குருவியின் சொதப்பலுக்கு பிறகு நீண்டகால இடைவெளிவிட்டு வரும் படம். மசாலா அக்சன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான தரணி இயக்கிய தில், தூள், கில்லி படங்கள் பெற்ற பாரிய வெற்றி அவரை முக்கிய இயக்குனராக நிலை நிறுத்தியிருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசியாக வந்த ”குருவி” அவரது பெயரை கெடுக்கும்விதமா செம மொக்கையாக வந்திருந்தது. விஜயுடன் கில்லி கொடுத்த மெஹா ஹிட்டுக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்திருந்தனர் இருவரும் குருவிக்காக. ஆனால் எதிர்பார்ப்புக்கு தலைகீழாகவந்து, விஜயின் தொடர்ச்சியான புளொப்படங்களில் ஒன்றாக இருந்து விட்டிருந்தது.

அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது.

எனினும் தனது ஆஸ்தான இசையமைப்பாளராகிய ”வித்யாசாகரை” இந்தப்படத்தில் முதன்முறையாக தரணி கழற்றிவிட்டு தமனை பயன்படுத்தியமை பலருக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் தற்காலத்தில் வேகமாக முன்னேறிவரும் இசையமைப்பாளர் தமன் பொறுப்பறிந்து போட்ட மெட்டுக்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைந்திருந்தது. ஒரு பாடலும் மெலடி என்றில்லாமல் அனைத்தும் fastbeat பாடல்களாக வந்திருந்தமை இந்த அலபத்தின் சிறப்பாக இருந்தது.

மேலும் ஹிந்திபடமான ”தபாங்”ன் றீமெக்கான இந்த ஒஸ்தி படத்திற்கு ஒறிஜினல் படத்தில் வந்து பிரபலமானதைபோல் ஒரு டப்பாங்கூத்து பாடல் தேவைப்பட்டதாம். அதற்காக நீண்டடடடடடடடட காலத்திற்கு பிறகு பழம்பெரும் பாடகி LR.ஈஸ்வரி, Solar சாய், TR.ராஜேந்தருடன் சேர்ந்து ”கலாசலா கலசலா” என்று தொடங்கும் ITEM SONGஐ பாடியிருந்தார். இந்தப்பாடல் காட்சியை மேலும் பிரபலபடுத்தும் நோக்குடன் ஹிந்தி கவர்ச்சி நடிகை ”மல்லிகா செரவாத்” இந்தப்பாடலிற்கு மட்டும் ஆட அழைக்கப்பட்டார். அதனால் இந்தப்பாடலில் ”மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிட்றா. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம்!” போன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாடலும் நல்ல ஹிட்டானது.

இந்தப்பாடல்கள் நன்றாக வந்திருந்ததை போல வரிகளும் அதிரடியாக அமர்க்களமாகவே அமைக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் வந்த ”கலாசலா”, ”தமிழ்நாட்டு Copதான்” யுகபாரதியின் வரிகளில் "நெடுவாலி” பாடல்களும் வரிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்ப்பை பாடல்கள் மேலும் அதிகரித்திருந்தன. அத்துடன் வித்தியாசாகரை விட்டுட்டு தனக்கு கொடுத்த நம்பிக்கையை தமன் பாடல்கள் மூலம் காப்பாற்றியிருந்தார்.

இப்படி நல்ல எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்திருக்கிறார் இயக்குனர் தரணி. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே படம் பயணிக்கபோகும் பாதையை நீங்கள் இலகுவில் ஊகித்துவிடக்கூடிய வழமையான பாணியிலான கதை இருப்பது ஒஸ்தியின் பலவீனமே. படம் றீமெக்காக இருப்பதால் (தபாங் நான் பாக்கல) கதையில் பெரிசா மாற்றத்தை எதிர்பாத்திருக்க முடியாதென்றாலும் எதாவது டுவிஸ்டுகளை வைச்சாவது நல்லவொரு வேகமான அக்சன் படமாக சிங்கம் மாதிரி கொடுத்திருக்கலாம். குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


Trailerல பாத்த மாதிரியே சிம்பு பஞ்சுகளை அள்ளி விசிறுகிறார். சிம்புவின் ஓவர்பில்டப்புகள் பிடிக்காதவர்களுக்கு சரியான சலிப்புகளை இக்காட்சிகள் ஏற்படுத்தகூடும். மற்றப்படி பொலீஸ் கெட்ப்பில் நல்ல ஸ்மாட்டாக தெரிகிறார் ஆரவாரமாக எடுப்பாக தனது அக்சன்களை போடுகிறார். பாடல்களில் வழமைபோல உடலைவருத்தி லாவகமாக நடனமாடுகிறார். ”குருவி” படத்தில் வருவது போல், சிம்பு கட்டிடத்துக்கு கட்டிடம் பாயும் காட்சிகளை இதிலும் புகுத்தி சலிப்பூட்ட வைக்கிறார் தரணி. சிக்ஸ்பக் வைத்த காட்சி இருக்கு என்று சொன்னபடியா இறுதிக்காட்சியில் 6பக்  என்று உணரமுடிகிறதே தவிர பெரிதாக சிம்புவிற்கு சிக்ஸ்பக் வந்ததாக காண முடியில்லை.


ஆனால் ரிச்சா இந்தப்படத்தில் சும்மா ஹீரோயின் இருக்கோணும் என்பதற்காக சேர்க்கப்பட்டவர் போலவே வந்து போகிறார். முக்கியமி்லாத நடிப்பு திறமையை காட்ட முடியாத காட்சிகள். ஒஸ்தி, மயக்கம்என்ன விற்கு முதல் வந்திருந்தால் ரிச்சாவிற்கு நடிக்கவே தெரியாது என்று கருத்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்ககூடும். இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?).

பெரிசா ஹீரோயினுக்குரிய அழகுமில்லை. ஏன் மினக்கெட்டு தெலுங்கில நடிச்சவவ  இங்க கொண்டுவந்தாங்களோ? தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா? புதுஆக்கள்தான் வேணுமெண்டா யாரையும் ஒண்ட தூக்கி போடலாம்தானே? ஒரு மசாலா அக்சன் படத்தில நல்ல கலர்புள்ளான ஹீரோயின எதிர்பார்த்தம் தரணி சார்.


சந்தானம் மயில்சாமி வையாபுரி தம்பிராமையா போன்றோர்தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் முக்கியபங்கு. வழமைபோலவே சந்தானம் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாய்க்கிறார். டுமிலுதான் டுமிலுதான் பாடலில் சிம்பு ஆடினதுபோலவே ஆடுவதற்கு நாலு பேரை தனது கை காலை தூக்கச்சொல்லி ஆட வெளிக்கிட்டது காமெடியின் உச்சமாக இருந்தது. சிம்புவின் இறுதி 3படங்களிலும் கணேஷ்(இங்க என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?) இருக்கிறமை குறிப்பிடவேண்டிய விடயம்.

மல்லிகா, சோனுசூட்

வில்லானாக வரும் சோனு சூட்டை நீங்கள் பல தமிழ்படத்தில் பாத்திருக்கலாம். ஹிந்தி ஒறிஜினல் தபாங்கிலயும் இவர்தான் வில்லனாம். நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு போன்ற தமிழ் படங்களில் தீவிரவாதியாக வந்தவர். இந்தபடத்திலும் நல்ல திடகாத்திரமாக வருகிறார். சிக்ஸ்பக் சிம்புவைவிட இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டு நல்ல ஒரு ஹீரோக்குரிய லுக்கை தருவதுடன் 6பக்கையும் இலகுவாக காட்டிவிடுகிறது.

மேலும் ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், நாசர், ரேவதி, நிழல்கள் ரவி என முக்கிய நடிக நடிகைகளும் இதில் தரணியால் உபயோகப்பட்டிருக்கின்றனர். ஹீரோவாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களையே கொடுத்த ரமேஷ் தனது தனிஹீரோ பாதையிலிருந்து விலத்தி குணச்சித்திர வேடங்களையும் இந்த படத்தின் பின் தாராளமாக எடுப்பார் போலதான் தெரிகிறது. 

படத்தில் பாடல்கள் நன்றாக வந்ததைபோல அதை அழகாக, நல்ல அதிரடியாக, ஆட்டம், செட் மூலம்  படமாக்கியிருக்கிறார் தரணி. இதற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கும் முக்கியமானது. ”தமிழ் நாட்டு copதான்” எடுக்கப்பட்ட காட்சியமைப்பும்   ”நெடுவாலி” பாடலுக்கான சிம்புவின் ஆட்டமும். ”கலாசலா”வில் மல்லிகாசெரவாத்தின் குத்தாட்டமும் படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டும் பிளஸ் பாயிண்டுகள். ”வாடி வாடி Cute பெண்டாட்டி” பாடலுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள்.

தரணி குருவியில் விட்ட பெயரை நிலைநாட்ட இதில் சரியாக கஸ்டப்பட்டிருப்பது தெரிந்தாலும், படத்தை ஓரளவு நல்லாக தனது இயக்கும் திறனால் கொண்டு சென்றிருந்தாலும், நல்ல வித்தியாசமான கதை இல்லாத குறையினால் இது பலரிடையே தாக்கத்தையோ சூப்பர் படமென்ற ஒரு பிரமையையோ ”ஒஸ்தி” ஏற்படுத்தமாட்டாது.
மொத்தத்தில் ஒஸ்தி ”பரவாயில்லை & பாக்கலாம்” ரகமே.
ஒஸ்தி - அஸ்திவாரம் சரியில்லைங்கோ!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்