வேட்டைக்காரன் ஹிட் ஆகப்போவதற்கான வலிதான 5காரணங்கள்

வேட்டைக்காரன் படம் பற்றி பல கருத்துக்கணிப்புக்கள் ஏலவே வந்துவிட்டாலும் கூட இந்த படம் பற்றி எனது கணிப்பு யாதெனில் விஜயின் ஹட்ரிக் தோல்விக்கு பின் ஒரு வெற்றிப்படமாக இது இருக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள வேட்டைக்காரன் விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று. நான் விஜயின் ரசிகன் அல்ல. உண்மையில் விஜயை எனக்கு பிடிக்காது. இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.இதோ நான் கூறும் காரணங்கள் 5....

1.மற்றையை நடிகர்களின் படங்களை போலன்றி இந்த படத்தின் விமர்சனபதிவை போட்டு செம ஹிட்டுகளை எடுக்க பதிவர்களும், வேறு பத்திரிகைகாரர்களும், ஏன் விஜயை வைத்து காமடியை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்போரும், ஏனையோரும் முதல்நாள் காட்சியை அடிபட்டு பாக்கபோவது உறுதி. எனவே முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாகி நல்ல ஆரம்பத்தையும் போதிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்க போவது உறுதி. (பல பதிவர்கள் இப்போதே வேட்டைக்காரன் விமர்சனத்தை எழுதி Draftகளில் ஆயத்தமாக வைத்திருப்பதாக கேள்வி)
2.இப்படத்தின் பெயர் ஏலவே வந்த MGR படத்தின் பெயராகையால் விபரம் தெரியாத பெரிசுகள் பல, படத்தின் போஸ்டரையோ பெயரையோ வியம்பரங்களில் கேள்விப்பட்டு பழைய படத்தைதான் திரும்ப போடுறானுகள் எண்டு நினைத்து செல்ல சாத்தியங்கள் இருக்கின்றன.


3.ஏற்கனவே பாட்டுக்கள் விஜய் அன்ரனியின் அதிரடி இசையில் வெளிவந்து சந்து பொந்தெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இளசுகளுக்கு ஏற்ற செம Fast Beat ல் வந்திருப்பதால் படம் எப்பிடி சொதப்பலா இருந்தாலும் பறுவாயில்லை பாட்டை மட்டுமே தியட்டரில DTSஒலி நயத்துடன் கேட்டு ஆட்டம் போட்டா காணும் என்று இளசுகள் கூட்டம் கனக்க திரியுதுகள். (வேட்டைக்காரன் படம் எடுக்கும் தியட்டர்கள் இப்பவே ஆசனங்களை சரிசெய்ய காசை ரெடி பண்ணி வைச்சிருப்பது நல்லது பாடல் காட்சிகளுக்கு குத்தாட்டம் போட்டு பத்தையும் பலதையும் சேதப்படுத்த ஆயத்தமாக குஞ்சு குருமன்கள் தொடங்கி கிளடுகள் கட்டைகள் எல்லாம்.)4.படத்தில் நாயகியாக அருந்ததி புகழ் அனுஷ்கா. ஏற்கனவே இப்படத்திற்கான இவரின் சூடான ஸ்ரில்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஹிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு புதிய அழகுப்பதுமை அனுஷ்காவை
பார்க்கவென ஒரு கூட்டம் தியட்டரை நிறைக்க போவது உறுதி.


5.இயக்குனராக இப்படத்தில் அறிமுகமாகிறார் தரணியின் சிஷ்யன் பாபுசிவன். இது இவரின் முதல்படமென்பதால் படத்தை எப்படியாவது வெற்றியடையச்செய்து தனது தடத்தை திரைத்துறையில் ஸ்திரமாக பதியசெய்ய இயக்குனர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார். எனவே எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில் இப்படம் இருக்கும் என்பது பலரின் கருத்து.


11 comments:

Unknown சொன்னது…

காரணம் செல்லாது செல்லாது....
(நாட்டாமை பாணியில் வாசிக்கவும்...)

வெல்வதற்குரிய காரணம் என்றுவிட்டு காரணத்தைச் சொல்லவே இல்ல?

யார் படமும் தோற்றாலென்ன வென்றாலென்ன....

எனக்குக் கவலை இல்லை.

நல்ல படமென்றால் பார்ப்பேன்...
இல்லையென்றால் விடடுவிடுவேன்....

எல்லாரும் என்னப் போல இருங்கப்பா...

பெயரில்லா சொன்னது…

ஆறாவதாக
சன் பிக்ஸர்ஸ் தனது சொத்தை படத்தை கூட அரை நொடிக்கொரு தரம் டீவியில் போட்டு மக்களை "ச்சீய் போய் பர்த்துட்டு தான் வந்துருவோம்" எனச்செய்யும் வெறித்தனம்
இப்படத்திற்கும் மிகவும் கை கூடும்.

கருணையூரான் சொன்னது…

கார்த்தி ..உங்கள் எதிர்வுகூறல்களை பொறுத்திருந்து பார்ப்போம்....அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்

கார்த்தி சொன்னது…

நன்றி கனககோபி கருத்துக்கு. எனக்கும் யார் படம் வென்றாலும் கவலையில்லை. ஆன எல்லாரும் வேட்டைக்காரனை போட்டு தாக்குறாங்க அதான் சும்மா..........

//வெல்வதற்குரிய காரணம் என்றுவிட்டு காரணத்தைச் சொல்லவே இல்ல?
மேல இருக்கிறது காரணமா படலையோ???

கார்த்தி சொன்னது…

to பெயரில்லா
மிகவும் நல்ல காரணம். நான் முதலில் எழுத இதையும் எழுத இருந்தேன் ஆன பதிவிடும் வேளையில் மறந்து விட்டேன்.

வருகைக்கு நன்றி கருணையூரான்!! :)

பெயரில்லா சொன்னது…

விஜயை பற்றி பதிவுகள் இட்டு தமது hits ஜ அதிரிக்க செய்பவர்கள் வரிசையில் நீங்களுமா????

@ பல பதிவர்கள் இப்போதே வேட்டைக்காரன் விமர்சனத்தை எழுதி Draftகளில் ஆயத்தமாக வைத்திருப்பதாக கேள்வி..

இது நேற்றே ஒரு இணையப்பதிவில் பார்த்தாசு...

இனி என்றாலும் பயனுள்ள பதிவுகளை இடுங்கள்..

பயனுள்ள பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்...

Keddavan சொன்னது…

நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..

http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

manian சொன்னது…

இது எதுவுமே ஒரு தரமான ரசிகனுக்கு உள்ள அடையாளம்
இல்லையே

கார்த்தி சொன்னது…

to பெயரில்லா
// விஜயை பற்றி பதிவுகள் இட்டு தமது hits ஜ அதிரிக்க செய்பவர்கள் வரிசையில் நீங்களுமா????

இருக்காதா என்ன? இந்த பதிவுக்கு மட்டும் எத்தனை வருகைகள்,,

// இது நேற்றே ஒரு இணையப்பதிவில் பார்த்தாசு...

அப்படியா அந்த இணைப்பை இங்கு இணைக்கமுடியுமா. நான் இந்த பதிவை ஆயத்தப்படுத்தி 2கிழமைகள் ஆகின்றது. நேரம் கிடைக்குமபோதுதான் பதிவிட்டேன். நான் ஒண்ணும் இதில காப்பி அடிக்கிற ஆள் இல்லை.

// இனி என்றாலும் பயனுள்ள பதிவுகளை இடுங்கள்..
I think you came first time to my blog.

கார்த்தி சொன்னது…

to rajeepan
I have read. அந்தமாதிரி இருக்கு பதிவு. Thanks fro ur comments.

to manian
நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனா என்ன செய்யிறது பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது இதைத்தானே

Unknown சொன்னது…

I accept 1st reason only.
:)

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்