கசப்பான அந்த நாள்-II
ஜ&#
15
இதற்கு முந்தைய பதிவை தவறவிட்டோர் இணைப்பை கிளிக் செய்யவும். அதன் தொடர்ச்சி கீழே பதியப்பட்டுள்ளது.
Link (click here)
இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1 2 3 4
நேரமும் மதியம் கடந்து 3மணியை தாண்டி கொண்டிருந்தது. எனினும் இத்தனைக்கும் எங்களுக்கு உதவியாக சில பெரும்பான்மை இன நண்பர்கள் கூடவே இருந்தனர். நிலமையை அவதானித்தபோது அன்று எமது பழைய இருப்பிடங்களில் தங்குவது உசிதமாகாது என்று தெட்டதெளிவாக விளங்கியது. ஏனெனில் பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே, தமிழ் மாணவர்களை தேடி, எங்கள் இருப்பிடங்களிலும் வீதிகளிலும் காடையர் குழுக்கள் ஓடுப்பட்டு திரிவதாக தகவல்கள் கிடைத்திருந்தன.
Link (click here)
இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1 2 3 4
நேரமும் மதியம் கடந்து 3மணியை தாண்டி கொண்டிருந்தது. எனினும் இத்தனைக்கும் எங்களுக்கு உதவியாக சில பெரும்பான்மை இன நண்பர்கள் கூடவே இருந்தனர். நிலமையை அவதானித்தபோது அன்று எமது பழைய இருப்பிடங்களில் தங்குவது உசிதமாகாது என்று தெட்டதெளிவாக விளங்கியது. ஏனெனில் பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே, தமிழ் மாணவர்களை தேடி, எங்கள் இருப்பிடங்களிலும் வீதிகளிலும் காடையர் குழுக்கள் ஓடுப்பட்டு திரிவதாக தகவல்கள் கிடைத்திருந்தன.
கொழும்பிலுள்ள எங்களது உறவினர்களின் வீடுகளிலேயே தங்கவேண்டிய நிலை அதற்கு ஒருத்தரிடமும் பொலிஸ் பதிவு இல்லை(Police Report). சிலருக்கு இருப்பதற்கு உறவினர்கள் கொழும்பில் இல்லை. அவ்வாறான நிலையில் நண்பர் ஒருவர் ”பேசாம இண்டைக்கு இரவு கம்பஸிலேயே எங்கயாவது ஒளிச்சிருந்துட்டு பிறகு பாப்பம்” என்றான் பரிதாபமாக. வேறு இடங்களில் தங்க தற்காலிக பொலிஸ் அனுமதியை பெற்றுதர எங்களுடன் நின்ற சிங்கள நண்பர்களின் உதவியால் ஒரு Lecturer உடன் கதைத்து பெயர்கள் பெறப்பட்டபோதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனிடையே முக்கிய ஆவணங்களை தங்குமிடங்களில் விட்டுவந்த சிலர் அவற்றை எடுக்க RISK எடுத்து (அந்த தருணத்தில் கம்பஸை விட்டு வெளியே செல்வது உயிருக்கு உலை வைப்பதற்கு ஒப்பானது). வெளியே செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். எங்கள் அறைத்தொகுதியில் இருந்த இருவர் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
எத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்த நாங்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்விற்கு தயாராகின்றோம் என உணர்ந்து கொண்டோம். இடம்தான் வித்தியாசம் இப்போது மொறட்டுவ கட்டுபெத்தயில்.
சுற்றுபுறசூழலில் காணப்பட்ட நிலமையை கருத்தில் கொண்டு தமிழ் மாணவர்கள் பத்திரமாக Campusஐ விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்ல Campus நிர்வாகம் பஸ் வசதியை ஒழுங்கு செய்வதாக அறிந்து கொண்டோம். அதற்காக பெயர்களை பதிவதற்காக Officeற்கு செல்லவேண்டும். கம்பஸிலிருந்த பொலீஸின் கண்ணில் படாமல் செல்லவேண்டும். அம்பிட்டால் கைதுதான் மறுபேச்சில்லை.
நாங்கள் இருந்த வகுப்பிலிருந்து Officeற்கான தூரம் சற்று அதிகம். தமிழர்கள் எண்டு தெரிந்தால் கைது நிச்சயம். ஏனினும் நாங்கள் பொலீஸின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தயங்கி தயங்கி சேரவேண்டிய இடத்திற்கு வந்திருந்தோம். எல்லோரும் பேயடிச்சதுபோல நன்றாக குழம்பியிருந்தனர்.
இதற்கிடையில் Hostelலிலிருந்த இருந்த பெரும்பாலான சிரேஷ்ட மாணவர்கள் ஏற்கனவே கொஞ்ச கொஞ்சமாக பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருந்தனர். எனது சகோதரரும் Hostelலேயே இருந்தார். அவரும் தகவல் அறிந்து Campusனுள் வருவதற்காக தேவையான சில பொருட்களை எடுத்து கொண்டு வரமுயன்றபோது பின்வாசல் வழியாகவும் முன்வாசல் வழியாகவும் உள்ளே வருதல் தடை செய்யப்பட்டிருந்தது.
நான் உள்ளே, அண்ணா உயிருக்கு உத்தரவாதம் இல்லாது வெளியே. உள்ளே வர கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தபோது, வெளியே இருந்து வந்த பல வதந்திகள் மிகவும் குழம்பியிருந்த எனக்கு மேலும் பயத்தை கொடுத்தது. அழுகை அழுகையாக வந்தது. படிக்க என்று வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என நினைத்துக்கொண்டேன். கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு போனில் அண்ணாவுக்கு தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். வெளியே உள்ள பதட்ட சூழ்நிலை காரணமாக அவரால் அழைப்பை ஏற்க முடியவில்லை. எனக்கே இதயதுடிப்பு எகிறி கொண்டிருந்தது.
இந்த பஸ்ஸை தவறவிட்டால் அதேகதிதான். வேறு வகையால் செல்வது அந்த நேரத்தில் சாத்தியம் இல்லை.
இன்னும் கொஞ்சம் இருக்கு அது பின்பு வரும்........ இங்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
0 comments:
கருத்துரையிடுக