கசப்பான அந்த நாள்-I
இந்தப்பதிவு நாங்கள் (மொறட்டுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள்) அனுபவித்த சில பல கஷ்டங்களையும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக மட்டுமே பதியப்படுகிறது. வேறு எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல.
இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1 2 3 4
இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1 2 3 4
சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் இன்று. 2008 ஜுன் 06 ம் திகதி இதே நாளில்; கம்பஸில் 8மணி Lectureற்கு போவதற்காக 7.40 அளவில் குளித்துக்கொண்டிருந்தேன். திடீரென "தொம்" என்று பலத்த அதிர்வுச்சத்தம அண்மையில் கேட்டது. சத்தத்தை கேட்டதும் விசயம் விபரீதம் என உணர்ந்து கொண்டேன். (அந்தக்காலத்தில் இத்தகைய சத்தங்களின் காரணம் என்னவாக இருக்குமென ஊகிப்பது நாளைக்கு சூரியன் உதிக்குமா என்று சொல்வதை போன்றது!). நானும் உடனே குளித்த பாதி குளியாத பாதியாக வெளியே வந்து என்ன நடக்கிறது அறிய முற்பட்டேன். சில கணநேரத்தில் வீதியால் மக்கள் குழப்பத்துடன் ஓடுப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
மொறட்டுவ பல்கலைகழகத்திற்கு முன்பாக ஏறத்தாழ 300மீட்டர் தொலைவில்தான் அமைந்திருந்தது நானும் எனது நண்பர்களும் தங்கியிருந்த அறைதொகுதி. மொத்தம் 5 அறைகளில் 11 பேர்வரை தங்கிஇருந்திருந்தோம். கொட்டம் அடித்திருந்தோம் முழுவதும் தமிழர்கள்.
குண்டு வெடிப்பொன்று மிக அருகில் நடந்தவிட்டதை எங்களால் உறுதிப்படுத்த ஒரு சிலகணங்களே பிடித்தது. அயலில் உள்ள பொது மக்களும் அதையே சொன்னார்கள். ஓடிச்சென்று வானொலிபெட்டியை முறுக்கிவிட்டு Breaking News ற்காக காத்திருந்தோம். ”கொட்டாவவிலிருந்து கல்கிஸை நோக்கி சென்று கொண்டிருந்த 255 busல் , கட்டுப்பெத்த சந்திக்கு அருகாமையில், குண்டு வெடித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தி கூறியது. செய்தியை கேட்டு முடித்தவுடன் கையில் அகப்பட்ட கொப்பி ஒன்றுடன் கம்பஸிற்கு நடக்க ஆரம்பித்தேன். வீதியின் இருமருங்கிலும் மக்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். அங்கு சென்று ”கொட Canteen”ல் TV Newsஐ பார்த்து பல (28) அப்பாவி சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டேன்.
குண்டுதாக்குதலுக்குள்ளான பஸ்வண்டி |
சம்பவம் இடம் பெற்ற இடம் மொறட்டுவ பல்கலைகழகத்திலிருந்து 2 Bus halt தூரத்திலேயே இருந்தது. ஏறத்தாழ 500 மீட்டர் தூரம்.
இச்சம்பவம் ஒரு கலவரமாக மாற கூடிய நிலமை காணப்பட்டதால் கம்பஸிற்கு வராமல் அறைகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை நாங்கள் (அந்தவேளையில் கம்பஸில் இருந்தோர்) கம்பஸிற்கு அழைத்தோம். Hostleல் இருந்த Seniorமாணவர்கள் பாதுகாப்பு கருதி அங்கேயே இருந்தனர்.
கம்பஸ் வளாகத்தில் ஒன்று சேர்ந்த நாங்கள் வீண்சிக்கலை தவிர்க்கும் பொருட்டு தமிழில் கதைப்பதை தவிர்த்து கொண்டோம். எனினும் வழமைபோல ஒன்றாகவே சேர்ந்து நின்றுகொண்டிருந்தோம். கம்பஸிற்கு வெளியே மிகவும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக அறி்யகிடைத்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னர் தேடுதலுக்கு நியமிக்கப்பட்ட பொலீஸார் அந்த Area முழுவதையும் சோதனை செய்தபடி பல்கலைகழக வளாகத்திற்கும் வந்தனர். நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு Classல் போய் சத்தம் போடாது இருந்து கொண்டோம். அவர்கள் ஒவ்வொருவராக NIC, Campus IC கேட்டு சோதனை இட்டவாறே எங்களிடமும் வந்து விசாரித்துவிட்டு சென்றனர். எனினும் அந்ததருணத்தில் கம்பஸைவிட்டு மாணவர்கள் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுருந்தது.
இவ்வளவுதான் பிரச்சனை இல்லை எல்லாம் அமைதியாக முடிந்துவிடும் என நினைத்தபடி இருந்தோம். நேரமும் மதியத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. நானும் இன்னும் சிலரும் மதிய சாப்பாட்டை L-Canteenல் சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது தமிழ் மாணவர்கள் சிலர் பொலீஸாரால் பிடிக்கப்பட்டு விசாரிப்பதற்காக மொறட்டுவ காவல்நிலயத்திற்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்தோம். அதேபோல் சிறுசிறு குழுக்களாக கம்பஸ் வளாகத்தில் திக்கு திக்காக நின்ற ,பொலீஸாரின் கண்களில் பட்ட தமிழ்மாணவர்கள் ஒவ்வொருவராக காரணம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு பொலிஸ்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
எனவே நாங்கள் அனைவரும் வெளியே நடமாட முடியாதபடி அதே Classற்குள் முடக்கப்பட்டோம். இந்த நேரத்தில் கம்பஸ் வழாகத்தில் என்ன நடக்குது என பாக்க சென்றோரும் , அவசரத்திற்கு(1) சென்றோருமென பலர் பிடிபட்டு, எங்களோடு கூட அந்த வகுப்பறையில் இருந்த தமிழ் நண்பர்களின் தொகை அப்போது பாதியாக குறைந்திருந்தது.
மிகுதி அடுத்ததில் வரும்.......... இங்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
6 comments:
carthi U shud tel about Kasun and other sinhala guys who were be with us till we left uni. U shud thank them. At the same til u shud tell about Dhilee who asked about this incident at night after he had his delicious dinner. At wellawatte Thiru, Senthil and Thananje anna also helped us. Don't forget to write about them also.
Carthi annah,
Lukin 4ward 2 read more. update it asap when u hav tym.
மறக்க முடியுமா? அந்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து கழிந்த பரபரப்பான ஒரு வாரமும் ....
என்னத்த சொல்ல...
@ நிறாதன் I didn't forget anything. I'll write about these in my next post. But i can't mention any name here.
Thx Akshy for ur comment.
@ Subankan சொல்ல முடியாத சோகங்கள் பல பல
//எங்களோடு இருந்த தமிழ் நண்பர்களின் தொகை பாதியாக குறைந்தது.
சோகங்களையெல்லாம் ஏன் திருப்பி ஞாபகப்படுத்துகின்றீங்க... ?
@ சுபானு
//சோகங்களையெல்லாம் ஏன் திருப்பி ஞாபகப்படுத்துகின்றீங்க... ?
இந்த சம்பவத்தின்பின் நடைபெற்ற கனக்க விசயம் பலருக்கு தெரியாது. ஏன் எங்களோடு படிச்சவங்களுக்கே தெரியாது. அதுதான் இயலுமானவரை சொல்ல கூடியதை சொல்கிறேன்
கருத்துரையிடுக