எனது முதலாவது பதிவு


வணக்கம் இது எனது வலைப்பதிவின் முதலாவது பதிவு. என்னை பற்றி குறிப்பிட்டு சொல்ல ஒண்டும் இல்லை. தலைநகர வீதிகளில் மற்றவர்களுடன் கதையளந்து வெட்டியாக மற்றவர்களுக்கு இடைஞ்சலாக சுற்றிதிரியும் ஒருவன் நான். இம்முதல் பதிவில் எனது நோக்கத்தை தெளிவாக்க வேண்டுதல் அவசியம். பலரது நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்ட வலைப்பதிவை பார்த்த எனக்கும் வீணாக சோம்பேறித்தனமாக பொழுதை போக்காது எதாவது பிரயோசனமாக எழுதலாம் என்று தோன்றியது. மற்றவர்களின் ஸ்டைல்களை பின்பற்றாது எனக்குரிய தனித்துவத்தை பேணி எனது பதிவுகளை இட எண்ணியுள்ளேன். எனது மனதில் ஒளிந்து கொண்டு வெளிவர துடிக்கும் பலவற்றையும் பதிவிட நினைக்கிறேன்.

இவ்வாறான பொறுமையான வேலைகளில் பழக்கம் இல்லாமையால் தொடக்கமே பெரும் சொதப்பலாக அமைந்தது. இவ்வலைப்பதிவுக்கான Templateகளை தேர்வுசெய்வதிலும் பக்கங்களை ஒழுங்கமைப்பதிலும் நான் சொதப்பியிருப்பது எனக்கே தெரிகின்றபோதிலும் என்ன செய்வது என்னால் இவ்வளவுதான் முடிந்தது. எதிர்வரும் காலங்களில் நேர்த்தியுடன் சீராக பதிவுகளை தர முயல்கிறேன். எனவே எழுதியுள்ள விசயத்தை மட்டும் பார்த்துவிட்டு மற்றதை சேஸ்டை செய்யாது கம்முண்ணு போங்க. பலவாறான விசயங்கள் பற்றி எழுதுவதற்கு விரும்பினாலும் சிலவற்றை தடைகளை மீறி எழுதமுடியாது ஆயினும் உண்மைகளை சொல்ல எந்த கொம்பனுக்கும் நான் பயப்பட மாட்டேன். படித்து நல்லதென்று பட்டதையும் அதற்குரிய மூலத்துடன் பதிவேன். மாதத்திற்கு குறைந்தது 3 பதிவுகளையாவது இட நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

விடிவுக்காக எங்கிக்கொண்டு இருக்கும் எங்களுக்கு விடிவெள்ளி உதித்திடும் என்ற நம்பிக்கையுடன.; மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.8 comments:

பெயரில்லா சொன்னது…

Go Ahead!!!!

ஆதிரை சொன்னது…

சகோதரனே... வாழ்த்துக்கள்.
ஆனாலும், உங்கள் பதிவை நோக்குபவர்கள் எல்லோரும் உங்கள் நண்பர்களாகவோ, ஒத்த கருத்துடையவர்களாகவோ, ஜனநாயக பற்றுள்ளவர்களாகவோ இருப்பார்கள் என நீங்கள் தப்பபிப்பிராயம் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். எனவே, சில இடத்தில் உங்கள் உண்மைக்கும் சோதனை வரும். கடந்து வெற்றிபெற வேண்டும் சகோதரனே...:)

பெயரில்லா சொன்னது…

நண்பா வாழ்த்துக்கள்...

பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்...

சுபானு சொன்னது…

வாழ்த்துக்கள்...
வலைப்பதிவுலகில் உங்களை வரவேற்கின்றோம்...

தொடர்ந்து எழுதுங்கள் .. :)

கார்த்தி சொன்னது…

வந்தோருக்கும் கருத்துரை இட்டவர்களுக்கும் நன்றி விரைவில் காத்திரமான ஆக்கங்களை எதிர்பாருங்கள்.

Nantharupan சொன்னது…

வரவேற்க்கிறோம்

Hisham Mohamed - هشام சொன்னது…

பதிவுலகிற்கு வரவேற்கிறேன் நண்பரே...

கார்த்தி சொன்னது…

சுதந்தரி, ஹிசாம் அண்ணா இருவருக்கும் மிக்க நன்றி.
தொடர்ச்சியாக பாருங்கள்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்