பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
டிஸ்கி: இந்த தொடர் பதிவுமூலமாக ஒவ்வாரு பாடல்களும் கேக்கும்போது ஏற்படும் நினைவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும். பாடல்கள் மூலமாக கடந்து வந்த பாதைகளை அசைபோடுதல் பதிவின் நோக்கமாக இருக்கிறது.
இடம்பெயர்ந்து சாவச்சேரிக்கு வந்து வெறும் ஒரு மாதமும் ஆகியிருக்காது. 1995பிற்பகுதி அது. ஒரு விடிகாலை நேரம், அண்மையில்தான் றேடியோவுடன் setup செய்யப்பட்ட டைனமோவை சைக்கிளை குப்பிற கிடக்கவிட்டு கையால் பெடலை சுழற்ற தொடங்குகிறார் பெரியப்பா. ஒரு பெரிய்யவீட்டில் நாங்கள் 3குடும்பம் தங்கியிருக்கிறோம். நானும் அண்ணாவும் படுத்திருந்த ஹோலுக்கு அண்மையில் நிலையெடுத்திருந்த றேடியோ, இலங்கை சர்வதேச வானொலியின் அறிவிப்புடன் எனது நித்திரையை குழப்புகிறது. எனக்கும் வேறு சிந்தனை இன்றி படுத்திருந்தபடியே சுழலும் பின்பக்கசில்லின் வால்ரியுப்கட்டை பற்றி அலைவுகாலத்தை கண்இமைப்பொழுதை கொண்டு கணக்கிட முயற்சிக்கிறேன். ஒரே சீராக சில்லு சுற்றுகிறதா இல்லையா என்பதை அறியதான் முயல்கிறேன். என்னை அறியாமலே எனது கவனம் சிதறுகிறது.
அந்த மெட்டின் அடி அந்த இனிமை எனது வழுக்கொண்ட கணிப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கிறது. என்னால் சில்லு சுற்றுவதை இப்போது உணரக்கூட முடியவில்லை. மார்கழி மாதம் நெருங்கிவிட்ட அந்த மழைக்குளிருக்கு மேலாக அந்த பாடல் மேலும் குளிர்ச்சியை அள்ளி கொட்டுகிறது. வானத்தில் பறப்பது போல ஒரு உணர்ச்சி. அப்போது சினிமா தொடர்பில் அறிவுமட்டம் பூச்சியம். யார் பாடினது இசையமைச்சது ஒண்டும் தெரியாது. ஒண்ணு மட்டும் விளங்கியது பாட்டு மக்சிமம் எண்டு.
இந்தப்பாட்டை ஒவ்வொருமுறை கேக்கும்போதும் இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த நினைவுகளும் அந்த காலைப்பொழுதும்தான் ஞாபகத்தில்!!! ஒவ்வொரு பாடல்களும் தருகின்ற நினைவுகள் ஏராளம்.
-------------------------------------------------------------------------------
அப்போதுதான் எமக்கு A/L ஆரம்பித்திருந்தது. 2003ன் தொடக்கம். பாடகர் கார்த்திக் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலப்பகுதி. சனி ஞாயிறு விடிய 7.30க்கு ScienceHallல Class தொடங்கிடும். விடிய செந்தில்ராஜ் Sirன்ர CombinedMaths. அந்தாள் Time எண்டா Time. என்ன இடி இடிச்சாலும் சரியா 7.30க்கு வகுப்பு தொடங்கிடும். (சுனாமி அடிச்ச அடுத்த நாளே அதேநேரத்துக்கு தொடங்கின punctualityஆளு). Startல வேறகொட்டிலுல நடந்தாலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு Sience Collegedன்ர தொங்கல் கொட்டிலிலயே விடிய Class permanentஆயிடுச்சு. அந்த கொட்டிலுன்ர அமைப்புதான் எனக்கு எமன்; யாரும் வகுப்புக்கு உள்ளுக்கு போகோணுமெண்டா முன்னாலதான் போகோணும். Class தொடங்கினால் பிந்தி வாற ஆக்கள வடிவா படிப்பிக்கிறவருக்கு தெரியும்.
7.30தொடங்கி பின்னேரம் 3.30மட்டும் பாடங்கள் இருக்கிறதால வடிவா சாப்பிட்டு போகணும்.
என்னதான் தலைகீழா நிண்டாலும் என்னால சரியான நேரத்துக்கு என்னால போகமுடியுறேல. அவ்வளவு ஆக்களுக்கு முன்னால ஒவ்வொருதரமும் பிந்திபோறது. சரியான அந்தரம். ஒவ்வொரு தரமும் போறணைக்குள் போற உணர்வுதான். என்னதான் பிந்திப்போட்டுதுன்னு தெரிஞ்சு குதிரை வேகத்தில் பெடலை மிதித்து வரும்போதும், ஸ்ரான்லி Road ஆரியகுளம் ஏறும் சந்தியில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் ShakthiFMலிருந்து ”அடிசுகமா சுகமா சுடிதாரே” என்ற பாட்டை கேட்கும்போது. எனது கால்கள் பெடல்களை நோக்கிய தள்ளுகையை பூரணமாக நிறுத்திவிடும். என்னதான் வகுப்புக்கு பிந்தினால் என்ன? அந்த கடையை கடக்கும் நேரத்தை குறைவாக்கினால் பாடல் என் காதில் ஒலிக்கும் நேரம் கூடுமில்லயா. என்ன மாயமோ மந்திரமோ பெரும்பாலும் 7.40/7.35 நேரப்பகுதியில் அந்த பாட்டு அந்த சந்தியில் ஒலிக்கும். நானும் அந்தநேரத்திலெல்லாம் AI Disableஆகின VBS2 Unit மாதிரிதான் தடுமாறுவேன். எனது கூட்டாளிகள் எல்லோரும் Backbenchers என்றபடியால் பிந்திபோனாலும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்.
இந்தப்பாட்டை எப்ப எங்க முதல்கேட்டன் என்று ஞாபகம் இல்லை. இப்போது கேக்கும்போதெல்லாம் ScienceHall, ஆரியகுளம்சந்தி, ALகாலப்பகுதிதான் ஞாபகத்தில். LoveTodayல் SPBன் குரலின் ”என்னஅழகு” பாடலை மெருகூட்டிய அதே இசையமைப்பாளர் சிவா.
SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
டிஸ்கி: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கேடயம் சஞ்சிகையில் எழுதின பதிவு இங்கே.
இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்பே 2011-2012ல் அவுஸ்திரேலியாவில் Big Bash Leagueம், 2012ல் Bangladesh Premier Leagueம் 2012ல் Sri Lanka Premier Leagueம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முதல் SLPL, 2011ல் July19-August4 வரை நடாத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட பல நாடுகளின் கிரிக்கெட்சபைகள் SLPLக்கு தங்களது நாட்டு வீரர்களை அனுப்புவதற்கு சம்மதித்தும் இருந்தார்கள். ஆனால் இந்தியா திடீரென முடிவை மாற்றி தங்கள் வீரர்களை SLPLல் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே சம்மதித்து விட்டு இந்திய கிரிக்கெட் சபை கடைசி நேரத்தில் காலை வாரியது பெரும் ஏமாற்றத்தையும் கவலையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு இந்திய கிரிக்கெட்சபை முதலில் கூறிய காரணம், SLPL போட்டிகளை வர்த்தகப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்பட்டு சிங்கப்பூரை தளமாக கொண்டு இயங்கும் Somerert Entertainment Ventures (SEV) நிறுவனத்திற்கு 5 வருடங்களிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களினுாடாகவே SLPLல் விளையாடும் வீரர்களின் ஒப்பந்தமும் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த வீரர்களின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட்சபையால் வழங்காது போட்டியை நடாத்தும் நிறுவனத்தால் வழங்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட்சபை கூறியிருந்தனர். மேலும் IPL போட்டிகளில் வீரர்களின் ஒப்பந்தங்கள் BCCIயாலே வழங்கப்பட்டது என்றும் இவ்வாறு போட்டியை நடாத்தும் SEV நிறுவனம் இதை கையாள்வதால் வீரர்களின் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முறைகேடுகள் நடைபெறலாம் எனவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லையென்றும் இந்திய கிரிக்கெட் சபை முகத்திலடித்தது போல கூறிவிட்டது.
எனினும் SLC அவர்களை சமாதானப்படுத்தி இந்திய வீரர்களை உள்ளே எடுப்பதில் கடும்பிரயத்தனம் செய்திருந்தது. வீரர்களுக்கான ஒப்பந்தங்களில் குளறுபடி நடக்காது எனவும் SLC அதற்கு தாங்கள் பொறுப்பென்று உறுதிமொழி கொடுத்தும் கூட BCCI தங்கள் முடிவில் மாறாது இருந்தது. இந்திய கிரிக்கெட்சபை வீரர்களின் சம்பள விடயத்தில் பயந்தமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. இந்தியாவில் இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கு அப்போது SLC ஒரு TV Channelஇடமும் உரிமையை விற்றிருக்கவில்லை. இலாபம் கொழிக்கும் இந்திய சந்தையில் இவர்களால் SLPLஐ வியாபாரப்படுத்த முடியாவிட்டால் SLCயால் இந்த போட்டி தொடரால் இலாபத்தை பெற்று வீரர்களுக்கு வழங்க முடியாமல் போகுமென்று இந்தியா கிரிக்கெட்சபை பயந்தது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் இந்தியா வீரர்களை அனுப்பாமைக்கான இன்னொரு காரணமும இருந்ததது. SLPLஐ பின் நின்று நடத்துபவர் பழைய IPLன் பொறுப்பாளரும் பின்னர் BCCIயுடன் முரண்பட்டு குற்றம் சாட்டப்பட்டவருமான லலித் மோடிதான் என இந்தியா சந்தேகித்தது. லலித் மோடிக்கும் போட்டித்தொடரை நடாத்தும் Somerert Entertainment Ventures(SEV)க்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக BCCI குற்றம் சாட்டியது. அதற்கு SLCயும் SEVம் உடனேயே மறுப்புத்தெரிவித்திருந்தது. மேலும் SEV, லலித்மோடி பங்குதாரராகவோ இணைப்பாளராகவோ தற்போதோ கடந்த காலத்திலேயோ தங்கள் நிறுவனத்துடன் இருக்கவில்லை என்று கூறியிருந்தது. அதோடு SLCயுடன் தங்கள் நிறுவனம் சேர்ந்து நடாத்தும் எந்த போட்டிகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ லலித்மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனாலும் அதன்பின்பும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இருக்கவில்லை.
இப்படியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட SLC முதலாவது SLPLஐ 2011 Julyல் நடாத்தும் முடிவை கைவிட்டு 2012 Augustல் நடாத்துவதாக முடிவெடுத்தது. ஒளிபரப்பும் உரிமையை ESPN STAR Sports 2012 July அளவில் பெற்றுக்கொண்டது. Bangladesh, Bhutan, Cambodia, Hong Kong, Indonesia, Korea, Nepal, Macau, Malaysia, Maldives, Pakistan, Papua New Guinea, Philippines, Singapore, Sri Lanka மற்றும் Thailand போன்ற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய்ய விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனத்திடம் SLPLன் உரிமை சென்றது பணவிடயத்திலும் SLPLன் பிரபலப்படுத்தலிலும் ஆரோக்கியமான விடயம் என்றே சொல்லலாம். பல குத்தல்கள் குடையல்களுடன் தொடங்கப்பட்டாலும் ஒரு மாதிரி 2012ல் இலங்கை கிரிக்கெற் இந்த போட்டி தொடரை நடாத்தி முடித்துவிட்டது.
நடந்து முடிந்த முதலாவது SLPLல் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே நடைபெற்று முடிந்தது. தொடங்கும்போது பல தரப்பிலும் காணப்பட்ட குறைந்தமட்டத்திலான எதிர்பார்ப்பு இந்த முதலாவது SLPLஐ ஒருவாறு கரையேற்றிவிட்டது. வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்சபைக்கும் வருவாயை ஈட்டுக்கொடுத்தாலும் அணிகளின் உரிமையாளர்களுக்கு நட்டத்தையே விட்டுச்சென்றிருக்கிறது. போட்டியை நேரே சென்று பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த போட்டிக்கான எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கண்டியில் நடைபெற்ற போட்டிகளையும் கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் ஒன்ரிரண்டையும் தவிர மிகுதி அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு வெகு சொற்பமான அளவு ரசிகர்களே வந்திருந்தனர். பல போட்டிகளுக்கு இலவச ரிக்கெட்கள் வழங்கப்பட்டபோதும் ரசிகர்களை சராசரி அளவில் கூட மைதானத்திற்கு கொண்டுவர இந்தப்போட்டிகளால் முடியவில்லை. இலங்கையில் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தோர்கூட வெகு சொற்பமே.
மொத்தமாக 7அணிகள் கலந்து கொண்டு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. இதில் வட மாகாணத்தை UTHURA RUDRASம் கிழக்கு மாகாணத்தை NAGENNAHIRA NAGASம் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. தமிழ் வீரர்களுக்கு இலங்கை அணயில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஆங்காங்கே கூறிவரும் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள் இந்த SLPL போட்டிகளில் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு உள்ளுர் தமிழ் வீரரையும் சேர்க்கவில்லை. இந்த போட்டிகளில் விளையாடிய பல வீரர்கள் ஒழுங்காக பிடிகளை கூட எடுக்காமல் சொதப்பியதோடு ஒப்பிடும்போது என்ன அடிப்படையில் ஒரு வடக்கு கிழக்கு வீரர் கூட இவர்களின் கண்களுக்கு படவில்லை. வடக்கு கிழக்கில் பல கிரிக்கெட் கழகங்கள் இப்படியான T20 போட்டிகளில் உள்ளுரில் விளையாடிவரும் நிலையில் பல திறமையான வீரர்கள் இருக்கின்ற நிலையில் இவர்களுக்கான வாய்ப்பு இப்படியான ஒரு முதல் தர கிரிக்கெற் போட்டிகளிலேயே வழங்கப்படாது விட்டது, இலங்கை அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் எதிர்காலத்தில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் கேள்விக்குரியதாக்கியுள்ளது.
எனினும் இந்த போட்டி தொடரினூடாக எதிர்கால இலங்கை அணிக்கு வரக்கூடிய பல திறமைகள் கண்டறியப்பட்டுள்ளமை இந்தப்போட்டித்தொடரின் வெற்றியும் வீரர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் ஆகும். முதற்கட்டமாகவே இந்த SLPLலிலிருந்து இரு வீரர்கள் உலககிண்ண T20 இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். துடுப்பாட்ட வீரர் டில்சான் முனவீரவும் பந்துவீச்சாளர் அகில தனன்சயவுமே அவர்கள்.
டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
டிஸ்கி: ஒரு சஞ்சிகைக்காக SLPL + இந்த திறமையான வீரர்களை சேர்த்து எழுதியிருந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இந்த வீரர்களின் பகுதியை வெட்டி இங்கே பதிகிறேன். SLPL தொடர்பான அந்த பதிவு பொட்டலத்தில் பிறகு பதிவேற்றப்படும்
Dilshan Munaweera
Dilshan Munaweera
23வயதே ஆகும் இந்த வீரர் நடந்து முடிந்த SLPL தொடரில் கூடிய மொத்த ஓட்டங்களை குவித்தவீரராக இருக்கிறார். மத்தியுஸை விட ஒரு ஓட்டம் கூட எடுத்து 212ஓட்டங்களை இந்த போட்டி தொடரில் பெற்றிருக்கிறார். வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இலங்கை 19, 21 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியிருக்கிறார். SLPL முழுவதும் திறமையாக விளையாடிய இவர் இறுதிப்போட்டியில் மத்தியுஸின் NAGENNAHIRA NAGASவுடன் ஆட்டமிழக்காமல் வெறும் 23 பந்துகளில் பெற்ற 44ஓட்டங்கள் வெற்றியை டக்வத் லூயிஸ் முறை மூலமாக இவரது Uva Next அணிக்கு வழங்கியிருந்தது.
ஹெல்மெற்றுடன் இவர் துடுப்பை அந்தரத்தில் வைத்து பிடித்தபடியே துடுப்பெடுத்தாடும் அழகும் இவரது முகவெட்டும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ராம்நரேஷ் சர்வேனை பார்ப்பது போல ஓர் உணர்வை தருகிறது. அதிரடி வீரராக இருந்த போதிலும் Stylish ஆக அடித்து பந்துகளை Gapகளினூடாக placeசெய்யும் திறமை இவரை எதிர்காலத்திற்கான இலங்கை அணியில் நிரந்தர இடத்தை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. 7போட்டிகளில் 212ஓட்டங்களை 35என்ற சராசரியுடனும் 144ஓட்டவிகிதத்தில் இவர் SLPLல் பெற்றிருந்தார். T20 போட்டிகளில் இலங்கை சார்பாக டில்ஷானுடன் களமிறங்குவதற்கு பொருத்தமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் மஹேல ஜெயவர்ததனவே பெரும்பாலும் அந்தப்பணியியை செய்து வந்திருந்தாலும் இந்த உலககிண்ண போட்டிகளில் டில்ஷான் முனவீர அந்தப்பணியை செவ்வனே செய்வார் என இலங்கை கிரிக்கெற் சபை எதிர்பாக்கின்றது. நான் எழுதும்வரை (Sep15) இலங்கை விளையாடிய மேற்கிந்தியதீவுகள் இந்திய அணிகளிற்கிடையான Warm-up போட்டியில் இவர் முறையே 24, 03 ஒட்டங்களை பெற்றிருந்தார்.
Akila Dananjaya
வெறும் 18வயதுடைய SLPLஐ தவிர வேற முதல்தரப்போட்டிகளிலேயே கலந்து கொள்ளாத இவர் தற்போது T20 உலககிண்ண இலங்கை அணியில். இவர் திடீரென வயம்ப அணிக்காக SLPLல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது பல சலசலப்புகள் எழுந்திருந்தன. இரண்டு கேள்விகள் பொதுவாக இவர் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒன்று, முதல்தரப்போட்டிகளிலேயே விளையாடாத இவர் எவ்வாறு இந்தப்பெரிய்ய போட்டிக்கான அணியில் வந்தார். இரண்டாவது திறமையானவர் எனின் ஏன் அப்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லவில்லை. இந்தக்குழப்பங்கள் ஆரம்ப்பத்தில் பலருக்கும் இருந்தாலும் பின்னர் அனைத்தும் தெளிவாக்கப்ட்டது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் Juneல் மேற்கொண்ட சுற்றுலாவில் இலங்கைக்கு மரண பயத்தை கொடுக்க கூடியவர் என பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் சயிட்அஜ்மால் இனங்காணப்பட்டிருந்தார். அஜ்மாலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அவர் மாதிரி பந்துவீசக்கூடியவர்களை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அழைத்து இலங்கை அணியின் பயிற்சிகளின் போது பந்துவீச சொல்லியிருந்தார்கள் அங்கே இவரது பற்துவீச்சு இலங்கை அணி தலைவர் மஹேலஜெயவர்த்தனவிற்கும் சங்கக்காரவிற்கும் எதிர்கொள்ள சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. பயிற்சிகளின்போது இவரது சிறப்பான பெறுபேற்றை பார்த்து இவர் மஹேலவினால் வயம்ப அணிக்கு அழைத்துவரப்பட்டார். இலங்கைக்காக 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவுஸ்திரேலியா செல்வதிலும் இங்கே தனது அணியில் SLPLல் விளையாடுவதில் மஹேல விரும்பியதனாலேயே அகில தனன்சய வயம்ப அணிக்காக விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.
பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் உள்ளே நுழைந்தார் என்று சிலரால் சந்தேகிக்கப்ட இவர் SLPLல் விளையாடிய போட்டிகளில் காட்டிய திறமையின் பின்னர் தன்னை சந்தேகித்தோரை வாயடைக்கச் செய்தார். பல விதமான பந்துவீச்சு வகைகளை வீசக்கூடியவரான இந்த வலது கை சுழல் பந்துவீச்சாளர் போட்டியின் நிலைகளை கருத்தில் கொண்டு தந்திரமாகவும் பந்துவீசக்கூடியவராக இருப்பது இவரின் மிகப்பலமாக கருதப்படுகிறது. SLPL தொடர் முழுவதும் சிறப்பாக பிரகாசித்த இவர் றுகுண றோயல்ஸ் அணியுடனா போட்டி தவர்த்து (இதில் 3ஓவர்களில் 37ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்) அனைத்து போட்டிகளில் சொற்ப ஓட்டங்களையே விட்டுக்கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தியுமிருந்தார். 6 போட்டிகளில் 9 விக்கெட்களை சரித்த இவர் வெறும் 6.36 என்ற ஓட்டவீதத்திலேயே ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
இலங்கையின் Mystery பந்துவீச்சாளரென முன்பு அறியப்பட்ட அஜந்த மெண்டிஸ் போலவே இவரையும் பலர் கருதுகின்றபோதிலும் மிகச்சிறிய வயதில் சர்வதேச போட்டியில் அதுவும் உலக T20 போட்டிகளில் இவரால் சாதிக்கமுடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறபோதிலும் சர்வதேச போட்டி அனுபவம் ஒன்று கூட இல்லாமல் முக்கிய போட்டியில் கழமிறங்குவது கொஞ்சம் கடினமான விடயம்தான். அத்தோடு இவர் இந்த முக்கிய போட்டியில் சொதப்புமிடத்து இவரது எதிர்காலத்துக்கு அது ஒரு பிழையான அடித்தளமாக கூட அமைந்துவிடலாம். மிகச்சிறிய வயதில் இவரை சர்வதேச போட்டிகளின் அனுபவம் வழங்காது இவரை பாழாக்கிவிடப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை மேற்கிந்தியதீவுகளிடையேயான முதலாவது Warm-up போட்டியில் 3ஓவர்களில் 17ஓட்டங்களை கொடுத்திருந்தார் இவர். இந்தியாவுடனான 2வது போட்டியில் இவர் விளையாடவில்லை. ஒரு காலப்பகுதியில் தனது மாயப்பந்து வீச்சுக்களால் பலரையும் வீழ்த்திய அஜந்த மெண்டிஸிற்க்கு பிற் காலத்தில் நடந்தது போல இவருக்கும் நடக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)









