முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரைப்பார்வை

முப்பொழுதும் உன் கற்பனைகள் - இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு இருந்த முக்கிய 3 காரணங்கள் 1.அமலாபால் 2.ஜீவி.பிரகாஸ்குமார் 3.விண்ணைத்தாண்டி வருவாயா, கோ படங்களை தயாரித்த கம்பனியின் படம். கணேஷ் விநாயக் என்ற இயக்குனரின் (இறுதியில் எல்ரெட் குமாரால் இயக்கி முடிக்கப்பட்டது ???)  முதல்படம் என்பதால் அவருடைய பெயர் செல்லாக்காசகவே promotionகளில் இருந்தது. அது வழமைபோல எல்லா புதுமுகங்களுக்கும் இருப்பது தவிர்க்கமுடியாதது. Why this Kolaveri போன்ற ஒரு சில exceptional casesதான் புதுமுகங்களிலும் பலத்த எதிர்பார்பை நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.


படத்தில் நாயகன் அதர்வாவுக்கு பொருந்திய stylishஆன modern கதாபாத்திரம். தனது முதல் படமான பானாகாத்தாடியிலேயே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் அவரது உடல்வாகுக்கு அந்த படத்தில் சேரிப்புற இளைஞனாக வந்திருந்தமை எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரது தமிழ் பேசும் பாணி கொஞ்சம் artificial போல ஒரு உணர்வை தருகிறது. அதர்வாவின் குரல் சாதாரணமானவர்களிலிருந்து வித்தியாசமானதுதான் ஆனால் பானா காத்தாடியில் அப்படி உணர்வு பெரிதாக ஏற்படவில்லை இதில் அது தெரிந்தது. வரும்படங்களில் இதைக்கவனத்தில் கொண்டால் நல்லா இருக்கும்.


அதர்வா இதுவரை நடித்த 2படங்களின் ஹீரோயின்களும் தமிழில் ஒரு கலக்கு கலக்குவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ள நடிகைகள். சமந்தா தெலுங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடியிலேயே அதர்வாவின் நடிப்பும் அவர் தன்னகத்தே கொண்டிருக்கும் attractiveஆன lookம் எனக்கு நல்லா பிடித்திருந்தது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு தேவைப்பட்ட இந்த இயல்புகளை சிறப்பாக அதர்வா வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ்சினிமாவில் இவருக்கும் அப்பா முரளியை போல நல்லவொரு இடம் கிடைக்கப்போகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. 

உண்மையாக இந்தப்படத்திற்கொரு பெரிய பலமென்றால் அது அமலா பால்தான். (பாலா போலா? என்ன இழவோ எழுத்தோட்டத்தில கூடி பால் எண்டுதான் போட்டாங்க சார்!) இந்தப்படம் பற்றிய பேச்சு இவா நடிக்கின்றா என்றதும்தான் பெரிதாக வர ஆரம்பித்திருந்தது. தற்காலத்தில் பல இளவட்டங்களின் கனவுக்கன்னியாக அமலா பால் ஆகிவிட்ட நிலையில் கைவசம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் + இளசுகளின் ஆதரவோடு இவர் காட்டில் இப்ப அடை மழைதான்.


கொஞ்சம் படங்களில் நடித்திருந்தாலும் அந்தக்கால அமலாவுக்கும் அப்போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோலதான் இப்போதைய அமலாவுக்கும். அமலா என்று பெயர் வைச்சிருந்தாலே இப்பிடிதானோ? (ஆனால் எனக்கு இன்னும் அப்பிடி என்னதான் மக்களுக்கு அமலாபாலில கிறுக்கு பிடிக்ககாரணம் என்று தெரியல. அமலா பால் முதலில் நடித்த விகடகவி, சிந்துசமவெளி படங்களை யாராவது பாத்திருந்தா இப்ப இப்பிடி இருப்பாங்களோ தெரியல). தெய்வதிருமகள், வேட்டை பிறகு அமலா நடித்த படம் வெளியாகியிருக்கிறது அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள். மற்றையது ”காதலில் சொதப்புவது எப்படி”

இயக்குனர் கணேஷ் விநாயக்  தனது முதல் படத்தில் கஸ்டப்பட்டு நேர்த்தியா வேலை செய்திருப்பது தெரிகிறது. நல்லதொரு படத்தை தந்த திருப்தி இவருக்கும் நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி எங்களுக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் பெரும்பாலும் கிடைத்திருப்பது உறுதிதான். அதற்காக படம் பக்கா டாப் மார்க் படமென்று சொல்வதற்கில்லை. படத்தில் 6பாடல்கள்தான் என்றாலும் குனிந்தால் நிமிர்ந்தால் பாட்டு என்று அடிக்கடி அள்ளி இறைத்திருப்பதுபோல் ஒரு உணர்வை படத்தில் காணமுடிந்தது. ஜீவி.பிராகாஸ் தனது நண்பர்தான் என்பதால சரியான கவனமெடுத்து இசையமைத்ததாக கூறியுள்ள இயக்குனர் அதுக்காக பாடல்கள் பலவற்றை சும்மா தேவையில்லாமல் புகுத்தியுள்ளது அப்படியே கண்கூடாக தெரிகிறது.

GV.PrakashKumar
படத்தின் சில conceptகள் ஏற்கனவே பல தமிழ்படங்களில் வந்திருந்தாலும் அதில் புதினத்தை தனது பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளமையால், முதலே இதமாதிரி படங்களை பார்த்தோம் என்ற உணர்வை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். இப்படியான Action+Thriller படங்களில் Logic மீறல்கள் பார்ப்பது தேவையற்றதோடு அப்படியான தவறுகள் தவிர்க்கமுடியாதது என்றமையால் அவற்றை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவதே ரொம்ப நல்லது. Action சண்டைக்காட்சிகளை நல்ல தரமாக எடுத்திருந்தமை ரசிக்ககூடியதாக இருந்தது.

அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.  உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக   TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

Jayaprakash
படத்தில் பாட்டுகள் பல வீண்செருகல்கள்தான் இப்ப பாட்டுவரும் எண்டு சொன்னா நிச்சயம் கொஞ்ச நேரத்தில பாட்டு வந்திரும். ஜீவீ.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தாலும் தெய்வதிருமகள், மயக்கம்என்னவில் கொடுத்த classics இதில் miss ஆகினமாதிரிதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் குறை சொல்வதற்கே இல்லை. பெரிதும் எதிர்பார்த்த ”கண்கள் நீயே” பாட்டை நல்லா touchingகா எடுத்திருந்தமை இயக்குனரின் திறமைக்கு சான்று. இந்த பாடலில் வரும் அந்த சின்ன தம்பியும் அழகாக நடித்திருந்தமை இன்னும் சிறப்பு.பின்னணி இசையில் இன்னும் செய்திருக்கலாம்.

படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன.  பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.

ஒருசில குறைகள் பல பிளஸ் பாயிண்டுகள் என்று பார்ப்பவர்கள் நல்லவொரு படம்பார்த்தம் என்று சொல்லக்கூடிய படம்தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். அருமையான தமிழ் பெயரில் படத்தை பெயரிட்டமைக்கு உரியவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

காதலர் தினம் 2012

காதலர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! 
----------------------------------------------------------------------

வசந்தமாகுமே என் இலையுதிர்காலங்கள்
உன் வரவுப்பதிவுகளால் நி்ரம்பும் எனது நாழிகைகள்!
அர்த்தமாகுமே எனது கிறுக்கல்கள்
உந்தன் குரல் மீடிறனிலே அதுவும் ஒரு ஹைகூதான்!


அத்தி பூத்த மழைதனிலே
பாலைவன வானவில் ஓவியம் நீ!
குபேரன் கொடுத்த லஞ்சத்திலே
பிரம்மன் படைத்துவிட்ட அதிசயம் நீ!


வழிந்தோடும் நதியின் தெளிவு
உன் முகத்தில் பார்க்கின்றேன்!
கண்மணி நீ சென்ற இடமெல்லாம்
படுத்துப்போகும் குங்கிலிய விற்பனைகள்!


நீவரும் சாலையோரம் எங்கினும்
உன் கொலுசொலி எதிர்பார்த்து நான்!
நீ Hello சொல்லாத நாட்கள் எல்லாம் 
HELL தானடி எனக்கு!


அமாவாசை நடுநிசியில்
முழுநிலவை தொட்டுவிட துடிக்கிறேன்!
தோழர்களின் நிந்தனைகள்
செவியில் உறைக்கா போதனைகள்!

நண்பன் (சூப்பர் பண்) - திரைப்பார்வை

டிஸ்கி: 3 Idiots படம் வந்தஉடன பாத்தபடியா Original DVDல் பாக்கல. அதன் கதை scenes ஞாபகம் இருந்தாலும், frame by frame என்ன நடக்குது எண்டு ஞாபகம் இல்லை. So இந்தப்பார்வை Hindi படத்தோட ஒப்பிட்டு எழுதப்படேல. (பக்கா clear கொப்பி பிறகு கிடைச்சிருந்தாலும்  நண்பனின் சுவாரஸ்யம் குறைஞ்சிடும் எண்டதால பாக்கல)

சங்கரின் இயக்கம், ஹாரிஸின் இசை, விஜய்+ஜீவா+ஸ்ரீகாந் நடிப்பு, ஹிந்திப்பதிப்பான 3IDIOTSன் மீள்பதிப்பு. சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்ய இவற்றைவிட வேறென்ன தேவை? சங்கர் தனது பழைய படங்களையே கொஞ்சம் மாத்தி பல படங்களில் றீமேக் செஞ்சிருந்தாலும் வேறுமொழியில் வந்த வேறொருவரின் படத்தை றீமேக்குவது இதுவே முதல்முறை. (சங்கரின் பழைய  ஜென்டில்மென், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற எல்லாம் ஒரே கதைக்கரு என்பதையே அப்பிடி சொன்னேன்). அதோடு இதுவரை காலத்திலேயும், விரைவில் சங்கரால் முடிக்கப்பட்ட படமும் இதுவாகதான் இருக்கும்.

அந்நியனுக்கு பிறகு சங்கருடன் 2வது தடவை சேரும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது முதல் அல்பமான ”7ம் அறிவில்” விட்ட குறையை இதில் முழுவதுமாக பூர்த்தி செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜை பிடிக்காத பலருக்கே நண்பன் பாடல்கள் நன்றாக கவர்ந்திருந்தது. “அஸ்க்கு லஸ்கா” பாடல் NO1 பாடலாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருந்தது. அதோடு மற்ற பாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று குறைந்ததில்லாமல் அற்புதமாக வந்திருந்தது. உண்மையில் 3இடியட்ஸ் படத்தில் வந்ததை(2?) விட இதில் கூடுதலான பாடல்கள் இருந்தாலும் படத்தில் எந்தவிததொய்வும் ஏற்படாத விதத்திலும் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரியும் பயன்பட்டிருந்தமை படத்தின் அடிஷனல் பிளஸ் பாயின்டுகளாக இருந்து. ஏற்கனவே ஹாரிஸ் சொன்னபடி ”என் friendஐ போல யாரு மச்சான்” பாட்டு title song காக வந்தது.


ஹிந்தியில் மெகாஹிட்டான ஒரு படத்தை பிரபல இயக்குனர் மீள் பதிக்கும்போது ஏற்படும் ரசிகர்களின் பெரிய்ய  எதிர்பார்ப்பு + பழைய ஒறிஜினலை மாதிரி ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற இயக்குனருக்கு ஏற்படும் டென்ஷன் இவ்விரண்டையும் சங்கர் தனது திறமையாலும் மற்ற பலரின் உழைப்பாலும் 100க்கு 100% திருப்திப்படுத்தியுள்ளார், வெற்றிபெற்றுள்ளார். அண்மையில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல படங்கள் ஊத்திக்கிட்ட நிலையில் மங்காத்தவுக்கு பிறகுவந்த படங்களில் அடுத்தபடியாக எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி ரசிகர்களுக்கு நல்லதொரு பொங்கல் விருந்தை படைத்துள்ளார் சங்கர்.

சங்கர் நண்பன் பட ஓடியோ வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல  விஜய் தனது வழமையான பாணியில் இல்லாமல் நடிச்சிருக்கார். அதோட விஜய்ய பிடிக்கிறவங்களுக்கு கூட பிடிக்கும் விஜய பிடிக்காதவங்களுக்கும் இனி பிடிக்கும்எண்டு சொன்னதை விஜய் தனது சிறப்பான அளவான ஓவர்பில்டப்பில்லாத நடிப்பால் நிருபித்துக்காட்டியுள்ளார். அண்மையில் வந்த எந்தவொரு வழமையான விஜய் படத்திலும் காணப்படும் எந்தக்காட்சிகளும் இதில் இல்லை. சங்கர் எதிர்பார்த்ததை அப்பிடியே விஜயிடமிருந்து வாங்கியிருக்கிறார். மற்ற இரு ஹீரோக்களான ஜீவா, ஸ்ரீகாந்தைவிட விஜயின் நடிப்பு பளிச்சென தெரிகிறது.


ஜீவா வழமைபோல தனது அலட்டலில்லாத நடிப்பால் கலகலப்பான காட்சிகளிலும் உணர்ச்சிபூா்வமான காட்சிகளிலும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். Induction Motor எப்பிடி start பண்ணுது? என்று சத்தியராஜ் கேட்ட கேள்விக்கு வாயால் மோட்டர் எப்பிடி சத்தம்போடுதொ அப்பிடியே சத்தம் போட்டு காட்டிய காட்சி அற்புதமாக இருந்தது. எனக்கு இவர்களில் ஸ்ரீகாந்தின் நடிப்பில்தான் திருப்தி இல்லை. தனியா தோன்றும் காட்சிகளில் ஜொலித்திருந்தாலும் மூவரும் தோன்றும் காட்சிகளில் அவரது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியதை காணமுடியவில்லை.

படவெளியீட்டிற்கு முன்பே பலர் கூறியதுபோல நகைச்சுவை நடிகர் சத்தியனின் முழுத்திறமையும் இந்தபடத்தில்தான் வெளியாகியுள்ளது. அற்புதமான வாய்ப்புள்ள பாத்திரத்தில் ஆள் புகுந்துவிளையாடியுள்ளார். ஆங்கிலத்தில் காமெடியாக பேசும் பாணியிலென்ன, தனது body languageலென்ன தன்னால் முடிந்த உச்சக்கட்ட திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கார். பிழையாக தமிழில் மாற்றி எழுதப்பட்ட உரையை இவர் மேடையில் மனப்பாடம் செய்து பேசும் காட்சிதான் ஆனேகம்பேரின் கைதட்டல்களுக்கும் பாராட்டிற்கும் உரித்தானது.


நீண்டகாலத்துக்கு பிறகு வித்தியாசமான சத்தியாராஜை இந்தப்படம் ஊடாக பார்க்ககிடைத்தது. நக்கல் நையாண்டிகள் இல்லாத ஒரு serious ஆசாமியாக கலக்கியிருக்கிறார் இவர். நீண்டகாலமாக பலதரப்பட்ட வேடங்களில் சத்தியராஜ் சிறப்பாக நடித்துக்கொண்டு வந்திருந்தாலும் நிச்சயமாக இந்தப்படமும் அவரது சிறந்த மைல்கற்களில் ஒன்றாக அமையும். 

கேடியில் ஏற்கனவே தமிழில் இலியானா அறிமுகமாகியிருந்தாலும் அந்தபடத்தின் தோல்விக்கு பிறகு தமிழில் தலைகாட்டாது (தமிழ் வாய்ப்புக்கள் பலவந்தும்) தெலுங்கில் பிரபலமாகியிருந்தார். ஆனால் இந்தப்படத்திற்காக சங்கரால் மீண்டும் தமிழிற்கு அழைத்துவரப்ட்டிருக்கார். ஆனால் இலியானவுக்கு கொடுத்த பில்டப்புக்கு ஏற்ற மாதிரி பெரிசாக அழகுதேவதையாக இதில் தெரியவில்லை. சுமார்தான். ஆனால் அளவான நடிப்பு. இலியானவின் புகழ்பெற்ற இடுப்பை வைத்து பா.விஜய் எழுதிய பாடல் ”இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா” பாட்டுதான் இதில் இலியானவுக்குரிய தனிமகுடம்.


"Heartல பற்றறி சார்ஜுதான் All is well" பாடல் படமாக்கப்பட்ட விதம் காமெடியாக படமாக்கப்பட்டு கலகலப்பாக இருந்தது.  பெரும் எதிர்பார்பிற்குரிய ”அஸ்க்கு லஸ்க்கு ஏமோ” பாட்டில் வித்தியாச வித்தியாசமான கால, இடங்களில் படமாக்கப்ட்டு ஒவ்வொரு வித்தியாமான சூழலிலும் அந்தக்காட்சி புதுசாக தொடங்கும்போது அப்பிடியே படப்பிடிக்குழுவும் உள்ளடங்கலாக வரக்கூடியவாறு ”Foreign Song shoot", "Modern getup" "ராஜா காலம்” என்று எழுதிப்பிடித்த take action board உடன் படமாக்கப்பட்டு கொஞ்சம் வித்தியாசமாக காட்சியமைப்பாக இருந்தது. Painting செய்த train, கண்ணாடியில் செய்த மாளிகை போன்றன இந்தப்பாடலில் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.

 
”இலியான” பாடல் கூடுதலாக கலர்புள்ளாக பிரேத்தியேகமாக அமைக்கபட்ட மாளிகைபோன்ற செட்டில் பல வெளிநாட்டு நடன மங்கைகளுடன் இலியானவின் சிறப்பு இடுப்பாட்டத்துடன் படமாக்கப்பட்டிருந்தது.

 மூன்று மணிநேரத்துக்கு அதிகமாக நீளும் இந்தப்படம் எந்தவொரு நேரத்திலும் ஒரு தொய்வை காண்பிக்கவே இல்லை. கதையோடும் ஒட்டிச்செல்லும் நண்பர்கள் மூவரின் குறும்புத்தனங்கள், சத்யனின் காமெடி, சத்யராஜின் கடுமையான அதிகாரம், இலியானாவின் காதல் இவற்றிற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

பாடல் வெளியீட்டில் இந்தப்படம் பிடித்திருந்தால் அந்தப்பெருமை 3 IDIOTSன் director ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று பணிவுடன் சொன்ன சங்கர் மீண்டும் ஒருமுறை நல்லதொரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டார் என்று உறுதியாக சொல்லிவிடலாம். பக்கா விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மசலா அம்சங்கள் எதுவுமே இதில் இல்லையென்றாலும் நல்ல படம்பார்க்க விரும்பும் சாதாரண ரசிகர்களின் துணையோடு நண்பன் வெற்றியை இலகுவாக தொடும்.

மொத்தத்தில் நண்பன் = பன்னீரில் குளித்த உணர்வு!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்