திரை தகவல் பெட்டகம்-II

இதன் முதலாவது பாகத்திற்கு இங்கே கிளிக்குக.
திரை தகவல் பெட்டகம்-I
அனைவருக்கும் பொட்டலத்தின் முற்கூட்டிய பொங்கல் வாழ்த்துக்கள்! இந்தபாகத்தில் முதல் பந்திதவிர்த்து கீழ்வரும் பந்திகளில் ஒருவரைபற்றிய விபரங்கள் சொல்லப்பட்டு அவரை ஊகிக்க உங்களை தூண்டியிருக்கிறேன். கண்டுபிடித்தவரை  சரிபார்க்க பந்தியில் உள்ள பெயர் சொல்லவரும் இடைவெளிப்பகுதியை Mouse pointerஆல் select செய்யவும். அப்போது அந்த நபரின் பெயர் தெளிவாக தெரி்யும்.அன்வேஸா
அண்மைக்காலத்தில் வெளிவந்த பாடல்களில் நான் வியந்து விரும்பிக்கேட்ட பாடல் மேலே பதிவேற்றப்பட்ட மந்திரப்புன்னகை படத்தில் இடம்பெற்ற ”மேகம் வந்து போகும்” பாடலாகும். (மந்திரப்புன்னகையா அப்பிடி ஒரு படமா? அதில பாட்டா? என்று திருப்பி கேட்கிறது விளங்குது. இதுகூட தெரியாம இசை ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னபயன் சார்! முதலில அந்த படப்பாட்டுக்கள கேட்டுட்டு வாங்க). அற்புதமான இனிமையான இசையில் அமைந்த காதல் பாட்டு. அந்தபாடலின் குரல்களுக்கு சொந்தக்காரர்களை கேட்டவுடனே  மதுபாலக்கிருஸ்ணன், ஸ்ரேயா கௌசால்தான் என்று நினைத்துவிட்டு அப்பிடியே இருந்துவிட்டேன். ஆனா தற்செயலாக பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த பெண் குரலுக்கு சொந்தக்காரி பெயர் ”அன்வேஸா”. வயது வெறும் 17தான். STAR PLUS தொலைக்காட்சி நடாத்திய Amul STAR Voice of India போட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலாமான இவர் தமிழிற்கு வித்தியாசாகரால் மந்திரப்புன்னகைக்காக அழைக்கப்பட்டார். அப்படியே ஸ்ரேயா கௌசால் போன்ற குரல்வளம். அடித்துக்கூறுவேன் சிறப்பான எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------


பென்னி டயால்
இந்தப்பாடகரின் சிறப்பான வருகை நிச்சயமாக பென்னி டயலின் (Benny Dayal) எதிர்கால வாய்ப்புகளுக்கு ஒரு சிறு அடியாக இருக்கலாம். ஏனென்றால் இருவரும் கிட்டதட்ட ஒரே ஸ்டைலில் பாடுபவர்கள் (குரல் ஒரேமாதிரி என்று சொல்லமுடியாதெனினும் ஒற்றுமை நிறைய உண்டு), Fastbeat பாடல்கள் Melody பாடல்கள் என்று ஒரு வகைக்குள் மட்டும் அடங்காது கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி பாடல்களை தங்கள் குரலால் மேலும் மெருகூட்டுபவர்கள். பென்னிடயலை திரைக்கு இசைப்புயலே கொண்டுவந்திருந்தாலும் கூட பிற்காலத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் யுவன்சங்கர்ராஜா வித்தியாசாகர் ஜேம்ஸ் வசந்தன் போன்றோர் பென்னிடயலை அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது பென்னியின் குரலில் பாடல்கள் வருவது முந்தய வருடங்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவாகவே வருகிறது. இதற்கு இப்புதிய பாடகரின் வாய்ப்புக்களும் ஒரு சிறு காரணம்.  AR.Rahmanம் புதிய பலவாய்ப்புக்களை  அவருக்கு வழங்க தொடங்கியுள்ளார். இப்பாடகரை திரையிசைக்கு கூட்டிவந்தது வித்தியாசாகர் என்று சொல்வோர்தான் எராளம் ஆனால் உண்மையில் முதலில் அவரை அறிமுகப்படுத்தியது கார்த்திக்ராஜாதான். 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம். அதற்கு அடுத்த பாடல்தான் அன்பே சிவம் படத்திலிருந்து. அவர்வேறு யாருமல்ல பாடகர் விஜய் பிரகாஷ் . இப்போது இவரை வித்தியாசாகர் ரகுமான்  தவிர்த்து யுவன், விஜய் அன்ரனி போன்றோர் பயன்படுத்த  தொடங்கியிருக்கின்றனர்.

  -----------------------------------------------------------------------------------------------------
கீழேயுள்ள இந்த பாடல் அந்நியன் திரையில் வரும் சூப்பர்ஹிட் ”கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலாகும். இந்தபாடலை பாடகி வசுந்தராதாஸூடன் சேர்ந்து பாடுபவர் ஒரு இசையமைப்பாளர். அண்மையில் தமிழில் இயக்குனர் சரணின் ஒரு படத்திற்கும் ஆர்யா நடித்து வெளிவந்த இறுதிப்படத்திற்கும் கரிகரனுடன் ஒன்று சேர்ந்து இசையமைத்தார். அவர் யார் தெரியுமா?


Kannum Kannum Nokia - Click here for this week’s top video clips

அவர்தான் லெஸ்லி லூயிஸ். இவரும்  கரிகரனும் இணைந்து சரணின் இயக்கத்தில் வெளிவந்த "ஓடி விளையாடு" படத்திற்கும் ஆர்யாவின் நடிப்பில் வெளியான ”சிக்கு புக்கு”விற்குவுக்கும் இசையமைத்துள்ளனர். இதைவிட சில Albumகளையும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------

Binny Krishnakumar
இந்த பாடகரை தனது படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் இசையமைப்பாளர் வித்தியாசாகர்தான். இவரது பெரும்பாலான படங்களில்  இந்த பாடகரின் குரல் இருக்கும். இவர் ”ராரா”புகழ் பின்னனி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரினதும் , துடிப்பான ஆக்ரோச இந்திய பந்துவீச்சாளர் சிறிசாந்தினதும் உறவினர் ஆவார். K.J.ஜேசுதாஸை ஒத்த குரலை கொண்டிருத்தல் இந்த பாடகரின் ஒரு சிறப்பான அம்சமாகும். கண்டுபிடித்துவிட்டீர்களா யார் அவரென்று? அவர்தான் பாடகர் மதுபாலகிருஷ்ணன். இவரது குரலில் வரும் பாடல்கள் அனைத்தும் இனிமையான மெலடி இசையை சார்ந்தன. பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ரகமென்பது கண்கூடு.
---------------------------------------------------------------------------------------------------------

2008ல் தான் தமிழ்திரையுலகில் அறிமுகமான இவர் தனது முதலாவது படத்தின் மூலமாகவே இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அவதாரம் எடுத்து அதில் அமோக வெற்றி பெற்றார்(என்றாலும் இயக்குனர் என்ற முத்திரையே முதல் படத்தின் மூலமாக அழுத்தமாக பதிந்தது). பின்பு தயாரிப்பாளராக நடிகராக இரு வெவ்வேறு படங்களில் வெற்றிகொடி நாட்டினார் இவர். சுருங்ககூறின் இவர் சம்பந்தப்பட்ட படங்கள் HATRICK வெற்றியை அடித்தது. ஆனாலும் அண்மையில் இவரின் இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வந்த படம் ரசிகர்களை பூரணமாக திருப்திப்படுத்தவில்லை எனலாம். இந்த பெருமைக்கு சொந்தகாரன் யார் என்று தெரியுமா அவர்தான் சசிகுமார். அந்தப்படங்கள் முறையே சுப்பிரமணியபுரம் பசங்க நடோடிகள் ஈசன்.

முக்கியகுறிப்பு: பதிவெழுதவந்து இரண்டுவருசம் ஆக கொஞ்சநாளே இருக்கு. யாராவது என்ன வாழ்த்துங்கப்பா!! இப்ப வாழ்த்துக்கள கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு... என்ன கொடுமையப்பா இது (என்னை போக்கன் என்று உறுதிப்படுத்துறன் ).... 

9 comments:

Subankan சொன்னது…

பொட்டலத்திற்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துகள் :)

ஷஹன்ஷா சொன்னது…

அருமை..வாழ்த்துகள்....பிறந்த நாளுக்கும்............

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி..

பிறந்த நாளும் வருது போல...

எம் அப்துல் காதர் சொன்னது…

பாஸ் தகவல்கள் அருமையா இருக்கு தொடருங்க!! வாழ்த்துகள்!! இன்னும் நிறைய எழுதிக்கிட்டே இருங்க வந்து வாழ்த்திகிட்டே இருப்போம். போதுமா வாழ்த்தினது!!

Jana சொன்னது…

நல்லாயிருக்கு... பகுதி மூன்றையும் சீக்கிரம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

கார்த்தி சொன்னது…

Subankan, ஜனகன், யோகா அண்ணா, எம் அப்துல் காதர், Janna அண்ணா எல்லோருக்கும் நன்றிகள்!

எப்பூடி.. சொன்னது…

//சிறிசாந்தினதும் உறவினர் ஆவார். K.J.ஜேசுதாஸை ஒத்த குரலை கொண்டிருத்தல் இந்த பாடகரின் ஒரு சிறப்பான அம்சமாகும். கண்டுபிடித்துவிட்டீர்களா யார் அவரென்று? அவர்தான் பாடகர் மதுபாலகிருஷ்ணன். //

மது ஸ்ரீசாந்தின் அக்காவின் கணவர் என்று நினைக்கிறேன், உன்னிமேனன், விஜய் ஜேசுதாஸ் குரல்களும் ஜேசுதாசை ஒத்திருந்தாலும் மதுவின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஜேசுதாசின் பரம விசிறிகளுக்கு அவரை இமிடேட் செய்வதால் மதுவை பிடிக்காதுள்ளது. வித்யா சாகரின் இசையில் மதுபாலகிருஷ்ணன் பாடிய அத்தனை மேலடிகளும் அருமை. அதிலும் சதுரங்கம் திரைப்படத்திற்க்காக 'விழியும் விழியும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

கார்த்தி சொன்னது…

நன்றிகள் எப்பூடி உங்கள் தகவல்களுக்கு!

தர்ஷன் சொன்னது…

வாழ்த்துக்கள்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்