ஈரம்=தரம் (பிந்திய திரைப்பார்வை)

நடிகர்கள்: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யாமோகன் etc...
இயக்கம்: அறிவழகன்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
இசை: தமன்
தயாரிப்பு: இயக்குனர் சங்கர்


காதல், மர்மம் இரண்டையும் கலந்து விறுவிறுப்பாக வேகமாக ஒரு திரைக்கதையை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அறிவழகன். ஊகிக்க முடியாத மர்மங்கள், அந்தாதி பாணியிலான பிளாஷ்பக் சொல்லும் பாங்கு (எந்த வசனத்தில் காட்சி முடிந்ததோ அந்த வசனத்தோடு தொடர்புபட்டதிலிருந்து பிளாஷ்பாக் தொடங்கி செல்லுதல்), நீரையும் சிவப்பையும் மரணத்தையும் தொடர்புபடுத்தல், அலட்டலில்லாத அளவான நச்சென்ற வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, ரசிக்கும் வகையிலான பாடல்கள், திகில்படத்திற்கேற்ற பிரமாண்டமான பின்னணி இசை என்பன ஈரத்திலுள்ள பிளஸ் பாயிண்டுகள்.
பின்னணி இசை இடையிடையே ஹாரிஷ் ஜெயராஜை ஞாபகப்படுத்தினாலும் படத்தின் வேகத்திற்கு தமனின் இசையும் பக்கபலம். தமிழில் "சிந்தனை செய்" இற்கு பின்னர் இவரின் 2வது படம் இது. இவரை உங்களுக்கு முதலே தெரிந்திருக்கும். Boys பாய்ஸ் படத்தில் வந்த ஐவரில் இவரும் ஒருவர் ”கிருஷ்ணா”.

மொத்தத்தில் ஈரம் ஹொலிவுட் பாணியிலான, திரில்லான ஒரு தமிழ் திரைப்படம். எனினும் படத்தின் கரு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம். படத்திலுள்ள காட்சியமைப்புக்களை ஆங்கிலப்படத்திற்கு இணையாக செதுக்கியுள்ளார் இயக்குனர். (ஹொலிவுட் தரத்திலான படம் என்று சொல்லிக்கொண்டு டுபாக்கூர் படங்களை தந்த இயக்குனர்கள் இப்படத்தை பார்த்து தங்களை திருத்தி கொள்ள வேண்டும் உதாரணம் சரத்குமாரின் 1977)

சுருங்ககூறின் ஈரம்===தரம்
பி.கு: யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்ட பதிவு
கஞ்சியும் Beerம்-சுட்டது
தறுதலை எச்சங்களாய் வெட்டிப்ந்தாவுடன் வீதியில் நாம்
‘War’களில் கால் இயங்காது பரிதாபாமான உயிர்களாய்
‘Bar’களில் கண் மயங்கி கேவலமான நாய்களாய்
சாப்பிட எதுவுமின்றி கொள்ளைப்பசியுடன் பரிதவிப்பு
Submarine தான் வேணுமென்று கொள்ளுப்பிட்டிக்கு படையெடுப்பு
Handle பிடித்து Montessoryக்கு சைக்கிளில் பிள்ளைகளின் Duty
Handbagல் Mobile Beauty Parlour சகிதம் போலியான Beauty
கரிப்பூச்சு முகத்தை மறைத்து கண் பனித்தபடி
Urineஐதான் waterஎன குடிக்கிறான் அவன்
Mineral waterதான் வேணுமென கேட்கிறான் நம்மாள்
மணம் வீசும் ஆடை நாற்றமடித்தபடி பல நாட்களாய்
Denium Jeans புத்தம் புதுசாய் சில நாட்கள் மட்டும்
வெயில் மழைகளில் காய்ந்தும் உணர்ச்சி சிறிதும் குறையாது வெளிநாட்டுப்பணத்தில் குளிர்காய்கிறான் உணர்ச்சி சிறிதும் இல்லாது
சாதல் சாதல் என சாவின் முன்னால் பலிக்கடாவாய்
காதல் காதல் என பாவையின் பின்னால் வீணர்களாய்
கிராமங்கள் தோறும் சகாக்களாய் பொறுப்புடன் Boys&Girls
கிராமப்புற சகாக்களை வெறுக்கிறார்கள் City(?) Boys&Girls
காலனவன் படலை தட்ட சீவன் பதறுகிறாள் அவள்
காதலுனுடன் கடலை போட KFC தேடுகிறாள் இவள்
பள்ளியின் தேவையை உள்ளத்தில் உணர்கிறான்
கள்ளின் சுவையை நாவில் உணர்ந்து அலைகிறான்
சாக்குகள் கட்டில்களாய் சில நிமிடங்கள் ஓய்வு
சொகுசுக்கட்டிலகளில் நாள் முழுதும் புரளல்
கலப்பை பிடித்து வயிறு நிரப்ப அங்கே ஓட்டம்
கண்ணடித்து __________ பிடிக்க இங்கே போட்டி
காடுகளில் பாம்புகளுடன் தலைசரித்து கண்ணயர்வு
கடற்கரைகளில் பாலியல் சல்லாபம் தலையெடுப்பு
மண் சிறப்பு குறைபோகாது பெயராய் கல்விமான்கள்
பெண்கற்பு சூறையாட தயாராய் காமுகர்கள்
கனவிலும் நினைவிலும் அடுத்த வேளை உணவு
கனவும் நினைவும் Makeupதான் இந்த பெண்டிர்க்கு
குருதி உறைந்த 'Route'களில் மனிதத்துவம்
சுருதி குறையாத 'Duet'களுடன் மன்மதங்களாய்
பொய் வார்த்தை மறுத்து பெரு உயிர்களாய்
தாயின் சொல் மறந்துதெரு நாய்களாக
துயில் விலக்கி கடமை எண்ணத்துடன் குயில் கூவல்
தாயை விரட்டி விடியல்காலையில் மயில்தாள்கள்
தேட்டத்துடன் பிழைத்து அமரர்களான _________ பூஜிக்கும் தெய்வங்கள் பகட்டாய் வாழ்ந்து பாவியரான சபிக்கும் காயங்கள்
பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2008ல் வெளியான ஆக்கம் இது.
ஹாரிஷ் ஜெயராஜ்+வேறு இசையமைப்பாளர்கள்

இசையமைப்பாளர்களில் மெலடிகிங் ஹாரிஷ் ஜெயராஜிற்கு மற்றைய இசையமைப்பாளர்களை விட தனியான சிறப்பொன்று உண்டு. இவரது இசையில்
வரும் பாடல்களில் பெரும்பாலானவற்றில், ஒரு புரியாத கவர்ச்சியான உற்சாகமான வார்த்தைப்பிரயோகம் வந்து அப்பாடலை அது சூப்பர் ஹிட்டாக்கும். அந்த சிறப்பையும் விடுத்து வேறு பல சக இசையமைப்பாளர்களுக்கு தனது படங்களில் பாடவாய்ப்பு கொடுக்கும் பெருந்தன்மையே அதுவாகும். இவ்வாறு மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற போதிலும் இருந்தபோதிலும், தனது சொந்தகுரலில் இவர் ஒரு பாடலையும் இன்னும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பேட்டியில் இதை (மற்ற இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் அவர்களது சொந்த இசையில் பாடுகின்றனரே நீங்கள் பாடவிரும்பவில்லையா?) கேட்டபோது "என்னைவிட திறமையாக பாட கூடியவர்கள் நிறையபேர் வெளியே இருக்கின்றனர். நான் வீண் பரிசோதனையில் இறங்க விரும்பவில்லை" என்றார்.A.R.RAHMANனுக்கு அடுத்தபடியாக தமிழில் கூடுதலாக ஒரு படத்திற்கு ஊதியம் பெறும் இசையமைப்பாளராக இருக்கும் ஹாரிஷ், திறமை உடையவர்கள் தன்னுடைய போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நல்ல குணம் கொண்டவராக இருக்கிறார்.
- ரமேஸ் விநாயகம்- ”யாரிடமும் தோன்றவில்லை” (தொட்டிஜெயா)
- ஜாஸி ஹிப்வ்ட்- ”அண்டங்காக்க்கா” (அந்நியன்)
- பிரேம்ஜி அமரன்-”Hey Girls” (12B), ”அடகடகட அடபம்பம்” (சத்தியம்)
- G.V.பிரகாஸ்குமார்- ”காதல் யானை” (அந்நியன்), ”Xமச்சி” (கஜினி) ”Hello Miss இம்சையே” (உன்னாலே உன்னாலே”)
- யுகேந்திரன்- ”முதன் முதலாய்” (லேசா லேசா), ”கல்யாணம்தான் கட்டிகிட்டு”(சாமி)
- கைலாஷ்கர்- ”ரங்கு ரங்கம்மா”(பீமா), "உய்யலால உய்யலால நீதான்"(தாம் தூம்)
- லெஸ்லி லூயிஸ்- ”கண்ணும் கண்ணும் நோக்கியா”(அந்நியன்)
- சங்கர் மகாதேவன்- ”குமாரி”(அந்நியன்) ”ரங்கோலா கோலா”(கஜினி)
- கரிகரன்- ”நெஞ்சுக்குள் பெய்திடும்”(வாரணம் ஆயிரம்) ”கொல்முக மலரே”(மஜ்னு)
- சுருதி ஹாசன்- ”அடியே கொல்லுதே”( வாரணம் ஆயிரம்)
- ரமேஸ் விநாயகம் – அழகிய தீயே, நளதமயந்தி, ஜெர்ரி
- பிரேம்ஜி அமரன் – நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, அதேநேரம்அதேஇடம்
- ஜாஸி ஹிப்வ்ட் – 4Students, தீநகர், பட்டாளம்
- யுகேந்திரன் - வீரமும் ஈரமும், பலம்
- கைலாஷ்கர் - Dasvidaniya, Pranali, The Traffic Signal அனைத்தும் ஹிந்தி படங்கள்
- லெஸ்லி லூயிஸ் &கரிகரன் - மோதிவிளையாடு, Colonial Cousins(Fusion Album)
- சங்கர் மகாதேவன் - ஆளவந்தான், யாவரும்நலம், Dil Chahta Hai, Bunty aur Babli (Hindi Films). சங்கர் மகாதேவன் இசையமைக்கும் போது Ehsaan-Loy இருவருடன் சேர்ந்தே இசையமைக்கின்றார். 3பேர் கொண்ட கூட்டணி.
- சுருதி ஹாசன் - உன்னைப்போல் ஒருவன், வேறு ஆல்பங்கள்
இதிலே எனக்கு பிடித்த "கண்ணும் கண்ணும் நோக்கியா'' பாடலின் வீடியோ காட்சி கீழே. பார்த்து ரசியுங்கள்.
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)




