கோ= அசராத கோன் - திரைப்பார்வை

சில படங்கள் வெளிவர முன்பே பெரிய எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டிருக்கும் சில படங்கள் எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக வெளிவரும். இவற்றில் நான் குறிப்பிட்ட முதல் வகை படங்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெறுவதற்கு அப்படம் தரமானதாக இருப்பது மட்டுமன்றி ரசிகர்களை வெகுவாக கவர கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை ஒரு சில தவறுகள் முற்றிலுமாக மாற்றி அதன் போக்கை தோல்விப்படமாக்கிவிடும் வாய்ப்பு கூட உண்டு. அதாவது ரசிகர்களின் அதிகரித்த எதிர்பார்ப்பை அவ்வாறான படங்களால் கொடுக்க முடியாது போன சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளது. அண்மைக்காலத்தில் இராவணன் படத்தை அதற்கு ஓர் உதாரணமாக கூறலாம். 


அந்தவகையில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, எதிர்பார்ப்புக்கும் மேலாக ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது ”கோ” திரைப்படம். ”கனாகண்டேன்” என்ற வித்தியாசமான படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் K.V.ஆனந்தின், அயனுக்கு அடுத்த மூன்றாவது படம்தான் கோ”. இயக்குனராக மூன்றாவது தடவையும் வென்றுவிட்டார் இவர். ஆரம்பகாலத்தில் புகைப்பட செய்தியாளராக தான் இருந்த அனுபவத்தின் விளைவாகவே, இந்த படத்தில் ஹீரோவின் பாத்திரம்  செதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் எழுத்தோட்டத்தை,  மற்றவர்களால் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை பயன்படுத்தி சிறிது வித்தியாசமாக  அமைத்திருந்தார். இதில் இடம்பெறும் புகைப்படங்களில் நம் இலங்கையர் ஒருவரினதும் இருக்கிறது. அவர் பெயர் பகீரதன். அவரும் ஒரு பதிவர்தான். ஏன் சம்பந்தமில்லாமல் எழுத்தோட்டத்தில் Photos வருகின்றது? என்பதற்கான விடை படம் தொடங்கிய 10நிமிடங்களிலேயே விளங்கிவிடும்.


இந்த படத்திற்கு ஹிரோவாக சிம்பு ஒப்பந்தமாகி சில பிரச்சனைகளால் அவராகவே விலகிகொண்டதால் ஜீவாவிற்கு கிடைத்த வாயப்புதான் இது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பட்டையை கிளப்பியுள்ளார் ஜீவா. பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதில்லை என்ற குறையை இப்படம் மூலம் தீர்த்துவிட்டார் ஜீவா. Never Mind Style (அலட்சிய பாணி)ஆன நகைச்சுவையாக நடிக்ககூடியவாரன இவர், இதில் கலகலப்பாகவும் அதிரடியாகவும் படம் முழுவதும் தோன்றி படத்திற்கு உயிரூட்டியுள்ளார். வழமைபோலவே ஜீவாவின் நடிப்பு ஜொலிப்பு! வித்தியாசமான வேடங்களில் பல படங்களில் ஜீவா கலக்கியிருந்தபோதிலும் பலரால் நல்ல ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்படாதிருந்த இவருக்கு இந்தபடம் நட்சத்திர அந்தஸ்தை வழங்ககூடும்.  

கார்த்திகா ஜீவா பியா
படத்தில் ஒன்றிற்கு இரண்டு ஹிரோயின்கள். பியா மற்றும் புதுமுகம் கார்த்திகா (பழைய நடிகை ராதாவின் மகள்). இவர்களில்  துடுக்கான வெகுளித்தனமான நடிப்பாலும் கவர்ச்சிகரமான உடையலங்காரம் முடியலங்காரத்திலும் கார்த்திகாவைவிட பலபடி முன்னே நின்று பிரகாசிப்பவர் பியாதான். பெரிதும் பேசப்படாத படங்களிலும் இருநடிகைளில் ஒருவராகவோ நடித்துவரும் பியாவிற்கு இப்படம் நல்ல வாய்ப்புக்களை பெற்று தரகூடும். 

பியா
 கார்த்திகாவை பொறுத்தவரை அவரது பிளஸ்பொயின்ட் அவரது அழகான பெரிய கண்கள்தான். அதைவிடுத்து பெரிதாக சொல்லும்படியாக சிறப்பு எதுவுமில்லை. அவரில் ஏதோ ஒன்று இல்லாதது போல ஒரு குறை. பெரிதாக அவரின் அழகு ரசிகர்களை கவரவில்லை எனலாம். சிம்ரனையும் அசினையும் சேர்த்து Photoshopல் ஒழுங்கற்று எடிட் பண்ணி ஒருவரை கொண்டுவந்தால் எப்பிடியிருக்குமோ அப்படிதான் திரையில் தெரிகிறார். அம்மா ராதாவோ இவரின் அழகுடன் ஒப்பிடும்போது உச்சத்தில் இருக்கிறார். 

கார்த்திகா
அஜ்மல் துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். படத்தில் இரண்டாவது பெரிய காத்திரமான பாத்திரம் இவருக்கு. அலட்டலில்லாத அளவான சிறப்பான நடிப்பால், அஞ்சாதே படத்திற்கு பின்னர் பலரும் தன்னை திரும்பிபார்க்க வைத்துள்ளார். Vijay TV புகழ் ஜெகனிற்கு அயனில் போலல்லாது இதில் சிறிய பாத்திரம்தான். முதலமைச்சராக சிறு கட்டங்களிலேயே வரும் பிரகாஸ்ராஜ் நடிப்பில் தான் ராஜாதான் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். காரில் பேட்டிகொடுக்கும் சந்தர்ப்பத்தில் அவரது நடிப்பிற்கு அவர்தான் ஈடாக முடியும். Body Language மற்றும் Dialog delivery அசத்துகிறது. 

அஜ்மால்
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பங்கும் முக்கியமானது. பாடல்கள் ஏலவே வந்து பலரையும் கொள்ளை கொண்டிருந்தது. குறிப்பாக ”என்னமோ ஏதோ” பாடல் பலராலும் தற்போது முணுமுணுக்கப்படுகிறது. பெரும்பாலான பாடல்கள் காட்சியமைப்பில் coloutful ஆக இருந்தாலும் ”அமளி துமளி” பாடல் அதில் முதலிடத்தில் இருக்கிறது. அந்தப்பாடலில் வரும் Scenariesம் மலைவிளிம்புகளில் பாடல் படமாக்கப்பட்டவிதமும் ரசிக்க கூடியவாறு இருக்கிறது. ஆயினும் ”அக நக” பாடலில் தேவையில்லாது நிறைய நடிகர்களை புகுத்தி அந்த பாடலின் காட்சியிமைப்பை வீணாக குழப்பிவிட்டார் K.V.Anand. ஹாரிஸின் பின்னணி இசையும் வழமைபோல். 

மலைவிளிம்பில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று
K.V.Anand ஒரு ஒளிப்பதிவாளராக இருந்தமையாலோ என்னவோ படத்தின் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் றிச்சாட்டின் பங்கும் சிறப்பாக வித்தியாசமாக ஆங்கிலபடத்திற்கு ஒப்பாக சில இடங்களில் தெரிகிறது. கிளைமாக்ஸ் துப்பாக்கி சண்டையின்போது எடுக்கபட்ட Ultra Slow Motion Video காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. அத்துடன் வெடிகுண்டு விபத்தின்போது காட்டப்பட்ட நிஜகாட்சிகள் போன்றமைந்த காட்சிகளில் Editor அன்ரனியின் உழைப்பும் தெளிவாக தெரிகிறது. அத்துடன் படத்தில் சிறு காட்சியில் Editor அன்ரனி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது! 

சுருங்க கூறின் கோ = அசராத கோன்(சக்கரவர்த்தி)!

பி.கு: தயவுசெய்து படம்பார்த்தோர் கதையின் முக்கிய கருவை பார்க்காதோருக்கு சொல்லிவிட வேண்டாம். இந்தபடத்தின் சுவாராஸ்யமே அதன்பின் கெட்டுவிடும். 

விமர்சனம் என்ற பெயரில் படக்தையை திருப்பி சொல்ல எனக்கு தெரியாது. படத்தின் கதை இதில் இல்லையே எனக்குறைபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்