அண்ணே நீங்கதான் கு.ரங்காவோ?
-இந்தப்பதிவில் வரும் நபர்கள் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் கற்பனையே நடைமுறை வாழ்க்கையுடனோ பழைய சம்பவங்களுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானதே!!! Strong-Shakthi, யன்னல்-மின்னல், உயரமானஇடம்-மலையகம், குதிரை-யானை, சண்டிஇலை-வெற்றிலை, வாத்து-Duck போன்றமுதல் சொற்களுக்கு பதில் இரண்டாவதைப்போட்டு யோசிப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை-
காலம் காலமாக அரசியல்வாதிகளை நம்பி நாங்கள் ஏமாந்து கொண்டிருக்கும் படலம் தொடர்கிறது. இது எங்களமாதிரி சூடு சுறணை அற்ற எருமைமாடுகளுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், இப்படியான நம்பிக்கை துரோகங்களை தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள எங்களால் முடிவதில்லை. கொஞ்ச நாட்கள் இப்படி கத்திப்போட்டு அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் நாம். அப்படியான ஒரு சொக்கதங்கத்தைப் பற்றித்தான் இப்ப கதை.
இதுவரை காலமும் ”யன்னல்” நிகழ்ச்சியை ”Strong TV”யில் தொகுத்தளித்து முழு தமிழ் மக்களையும் முட்டாளாக்கியவர் மன்னிக்கவும் முழு மக்களுக்கும் அரசியல் அறிவை வளர்த்தவர் இவர். அந்தக்காலத்தில் பல கோமாளி அரசியல்வாதிகளையும், சந்தர்ப்பவாத நரிகளையும் TVயில் மக்கள்முன் கூட்டிவந்து நாறடிச்சவர் இவர். மக்கள் பிரச்சனைகள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மக்களின் தலைவன் இவர். முன்மாதிரியான , எடுத்துக்காட்டான சிறந்த செய்தியாளர் இவர்.
இப்படி வருசக்கணக்கா பிளான் பண்ணி எங்களை மாதிரி ஏமாளிகளை எல்லாம் ஏமாற்றி; நல்லவர், வல்லவர், எல்லாம் தெரிஞ்சவர் என்று அனைவரையும் நம்பவைத்து அரசியலுக்கு நுழைஞ்சார். நாங்களும் எங்களைப்போல சாதாரண, பொதுமக்களின் மனங்கள், துன்பங்கள், துயரங்களை அறிந்த ஒருவர் அரசியலிற்கு வருகின்றார் எல்லோருக்கும் நன்மைதான் என்று எண்ணினோம்.
இவர் அரசியலுக்கு நுழைந்து தேர்தலில் போட்டியிட்ட முறையும் மற்றவர்களைப்போல "பழைய குருடி கதவைத் திறடி” என்ற பாணியில்தான் இருந்தது". அப்போதே யோசித்திருக்க வேண்டும் நாங்கள். கையிலிருந்த ஊடகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி செய்தி அறிக்கைகளின்போது தன்னைப்பற்றிய புகழுரைகளை, தொண்டுகளை மக்கள் மூலமாக சொல்லச்செய்து தன்னுடைய வாக்கு வங்கிகளைப் பலப்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மக்களுக்கு சேவை செய்யத்தான் இவ்வாறு கஸ்டப்படுகிறார் என்று நம்பிய பல முட்டாள்களில் நானும் ஒருவன்.
எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவன் (அந்தக்கால பழைய வரலாறுகள் தொடங்கி இந்தக்கால புதிய அரசியல் கோணங்கி கூத்துக்கள் வரை நன்கு அறிந்த, பாண்டித்தியம் பெற்ற ஒருவன் ) தேர்தல் காலத்திலேயே "டேய் இவன் அவன்ர ஆளாடா! இவனை நம்பாயுங்கோ, கொஞ்ச நாளிலேயே அங்கால மாறாட்டி பாருங்கோ" என்று கட்டியம் கூறினான். இவரைப்பற்றி அப்போதே அரசல் புரசலாக செய்திகள் பரப்பப்பட்டாலும் "யன்னல்" நிகழ்ச்சி மூலம் நன்றாக ஏமாற்றப்பட்ட நான் அதை அப்போது நம்ப தயாராக இருக்கவில்லை.
தலைப்பை பார்த்தே ஊகித்திருப்பீர்கள் யார் அந்த கனவான் என்று? So அவரது பெயர் இங்கே தேவையில்லை. உயரமான இடத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு "குதிரை"யில் மக்களின் ஆமோக ஆதரவில் அனுப்பப்பட்ட இவர் பதவியேற்று கொஞ்சகாலத்திலேயே தனது வேலையை காட்டினார். குதிரை சவாரி அலுத்ததோ, இல்லை குதிரைப்பாகன் கொடுத்தது காணாதோ தெரியவில்லை முறையான நேரத்தில் 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்த , மக்கள் சமைக்க போட "சண்டிஇலை"தான் கேட்கிறாங்கள் என்று அப்பாவி மக்கள் தலையில் பழியப்போட்டு அங்காலப்பக்கம் நைசாக நழுவினார் நம்ம கதாநாயகன்! மக்கள் சேவையே மகேசன் சேவையாச்சே.
இவர் அங்க இருந்தார், இங்க தாவீனார் என்பதெல்ல பிரச்சனை. தான் அரசியலுக்கு வர முன்னர் எத்தனை அரசியல்வாதிகளை இவ்வாறு ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு போவதிற்கும், அரசாங்க பக்கம் திடீரென சாய்வதற்கும் தாறுமாறாக கேள்விகளை கேட்டு அவர்களை சந்தி சிரிக்க செய்திருப்பார்! இப்ப தான் செய்யும்போது மட்டும் மக்களின் வேண்டுகோளா? யாரை பேப்பட்டம் கட்டுகிறார்கள் இவர்கள். அரசனுக்கு ஒரு நியாயம் ஆண்டிக்கு ஒரு நியாயமோ.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! முட்டையில மயிர் பிடுங்ககூடாது, என்று விட்டுவிடக்கூடிய விடயம் இல்லை இது. உண்மையில் அரசியல்வாதியின் categoryக்குள் இவரை நாங்கள் அடக்கிவிட முடியாது. எங்களோடு இவ்வளவு காலம் இருந்து நல்ல பிள்ளைக்கு நாடகமாடிவிட்டு இப்போது மட்டும் இப்படியான களவாணி வேலைகளை செய்பவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க என்னால் முடியாது. என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இவர்களைப்போன்றோரைவிட தேர்தலுக்கு முன்பே தங்களது கொள்கைகளை அறிவித்துவிட்டு ஒரே பக்கமாக இருக்கும் ‘வாத்து மாமா‘ எவ்வளவோ மேல்.
யோசியுங்கள் மோட்டு மக்களே! ஒருதரையும் நம்பாயுங்கோ.சுயநலமா இருங்கோ. உங்களைப்பற்றி கவனிக்க நீங்கள் ஒருவர் மட்டுமே!
எனக்கு தெரிஞ்சவரை குரங்குதான் இப்பிடி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அப்பிடி இப்பிடி எல்லாம் பாயும் அப்ப நீங்க கு.ரங்கேதான்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!